<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,125,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 15:01:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01012025-CBE-03" position.sequence="03" ex-ref="01012025-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="111">படிப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">தூத்துக்குடியில்   ‘‘புதுமைப் பெண்’’   திட்டம்   விரிவாக்க   விழாவில்   முதல்வர்   மு.க.ஸ்டாலின்   உறுதி   !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMPhoto5_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி, ஜன.01–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­கு­டி­யில் நேற்று ‘‘புது­மைப் பெண்’’ திட்­டம் விரி­வாக்க விழா­வில் முதல்­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றும் போது ‘‘படி­யுங்­கள், படி­யுங்­கள் படிப்­பில் மட்­டுமே கவ­னம்செலுத்­துங்­கள்,படிப்­புக்­குத் தேவை­யான அனைத்துஉத­வி­க­ளை­யும் அரசு செய்­யும்’’ என்று உறு­தி­படக் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (30.12.2024) தூத்­துக்­குடி, காம­ராஜ் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற அரசு விழா­வில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு உதவி பெறும் பள்­ளி­க­ளில் தமிழ் வழி­யில் பயின்று உயர்­கல்வி பயி­லும் மாண­வி­க­ளுக்­கும் மாதந்­தோ­றும் ரூ.1000/- உத­வித் தொகை வழங்­கும் “புது­மைப் பெண்’’ திட்­டம்விரி­வாக்க விழா­வில் ஆற்­றிய உரை வரு­மாறு :–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனை­வ­ரும் நல­மாக உள்­ளீர்­களா! மகிழ்ச்சி......</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தூத்­துக்­குடி – முத்து நக­ரம் மட்­டு­மல்ல, வீர­பாண்­டிய  கட்­ட­பொம்­ம­னின் வீரத்­திற்­கும் - மகா­கவி பார­தி­யின்  கவி­தைத் தமி­ழுக்­கும் -கப்­ப­லோட்­டிய தமி­ழன் வ.உ.சி.யின் தியா­கத்­திற்­கும்சொந்­த­மான ஊர் இந்த ஊர். இப்­படி பெரும் தலை­வர்­க­ளுக்­கும், பல பெரு­மை­க­ளுக்­கும் சொந்­த­மான இந்த தூத்­துக்­குடி மண்­ணில், ”புது­மைப் பெண்  விரி­வாக்­கத்திட்­டம்”  எனும் மகத்­தான திட்­டத்­தைத் தொடங்கிவைக்­கும் விழா­வில் பங்­கேற்­றுள்ள அனைவருக்கும் காலை வணக்கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அரங்­கி­லும், காணொலி காட்­சி­யி­லும் 657 கல்­லூ­ரி­க­ளைச் சார்ந்த இத்­தனை ஆயி­ரம் மாண­வி­க­ளைப் பார்க்­கும்­போது, ஒரு Dravidian Stock-ஆக நான் பெரு­மைப்­ப­டு­கிறேன்! இதற்கு நேரெ­தி­ராக இன்­னொரு Stock இருக்­கி­றது. நம்மை சாதி, மதம்-­­­என்று சொல்லி, பிரிக்க நினைக்­கும் Stock! வளர்ச்­சி­யைப் பற்றி யோசிக்­கா­மல், வன்­முறை எண்­ணத்தை தூண்டி விடும் வன்­மம் பிடித்தStock! பெண்­கள் என்­றால் வீட்­டில்­தான் இருக்கவேண்­டும், கடை­சி­வரை ஒரு­வரை சார்ந்து இருக்க வேண்­டும் என்று மனு­வாத சிந்­த­னையை இந்­தக் காலத்­தி­லும் பேசிக்­கொண்டுதிரி­யும் Expiry-ஆன Stock இது! அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளி­டம் இருந்து தப்­பித்து, இன்­றைக்கு தமிழ்­நாட்டு பெண்­கள். இந்­தி­யா­வி­லேயே Top-ஆக இருக்­கி­றீர்­கள். மதிப்­பெண் பெறு­வ­தில் தமிழ்­நாட்­டுப் பெண்­கள் டாப்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்­டுப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">பெண்­கள்­தான் ‘டாப்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாட்­டி­லேயே உயர்­கல்­வி­யில் அதி­க­மாக சேரு­வ­தி­லும், நீங்­கள்­தான் டாப்! அப்­படி  உயர்­கல்­வியை முடித்து வேலை­க­ளுக்­குச் செல்­வ­தி­லும் இந்­தி­யா­வி­லேயே நம்­மு­டைய தமிழ்­நாட்­டுப் பெண்­கள்­தான் டாப்! இந்­தக் காட்­சி­தான், பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­கள் காண நினைத்த காட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒவ்­வொரு குடும்­பத்­தில்  இருக்­கும் பெண்­களும் கல்­லூ­ரி­யில் படித்து - நல்ல வேலை­யில் சேர்ந்து -யாரை­யும் எதிர்­பார்க்­கா­மல் – தங்­க­ளின் சொந்த பொரு­ளா­தார வளத்­தோடு இருக்க வேண்­டும் என்று கரு­தி­ய­வர், தந்தை பெரி­யார். அது அவ­ரின் கனவு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மூடப்­பட்­டி­ருந்த கல்­விக் கத­வு­கள் திறக்­கப்­பட்டு,நாம் எல்­லாம் கல்­விச் சாலை­க­ளுக்கு வரத் தொடங்­கி­ய­போது, தந்தை பெரி­யார் என்ன சொன்­னார் தெரி­யுமா? “பெருந்­த­லை­வர் காம­ரா­சர் - கல்­விக் கண்­ணைத் திறந்­தார். கலை­ஞர் அவர்­க­ளது ஆட்சி, எழுந்து நடக்க வைக்க வேண்­டும்”-­­­என்று  சொன்­னார்! இன்­றைக்கு, இந்த நிகழ்ச்சி, கல்­விக் கண் திறந்த பெருந்­த­லை­வர் காம­ரா­சர் அவர்­கள் பெய­ரால் அமைந்த இந்த கல்­லூ­ரி­யில் நடப்­பது மிகமிக பெரு­மைக்­கு­ரி­யது, மகிழ்ச்­சிக்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு கல்­வி­யைப் பொறுத்­த­வரை பெண்­கள்­தான் முன்­னி­லை­யில் இருக்­கி­றார்­கள். ஆனால், 50 ஆண்­டு­க­ளுக்கு முன்பு –  ஏன், 100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இந்த நிலை­மையா இருந்­தது? சமூ­க­ரீ­தி­யாக, பாலி­ன­ரீ­தி ­யாக படிப்­புக்கு தடைக்­கற்­கள் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1911-ஆம் ஆண்டு எழுத்­த­றிவு பெறா­த­வர்­களின் எண்­ணிக்கை எவ்­வ­ளவு தெரி­யுமா? 94 விழுக்­காடு! 1921-இல் 92 விழுக்­காடு! இந்­தி­யப் பெண்­க­ளில் நூறு பேரில் இரண்டு பேருக்கு மட்­டும்­தான் அன்­றைய காலத்­தில் எழுத, படிக்­கத் தெரி­யும். பள்­ளி­க­ளும்,  கல்­லூ­ரி­க­ளும் இந்­த­ள­வுக்கு இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கல்­விக்­க­னவை திறந்­தது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">நீதிக்­கட்சி ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெண்­க­ளைப் படிக்க வைத்­தால்  பண்­பாட்டை இழந்து விடு­வார்­கள் என்ற மூடத்­த­ன­மும் பிற்­போக்­குத்­த­னங்­க­ளும்  கோலோச்­சிய காலம் அது. அதை மாற்றி, படித்­தால் அறிவு வரும், தன்­னம்­பிக்கை வரும் என்று புரிய வைத்து, கல்­விக்­க­னவை எல்­லோ­ருக்­கும் திறந்­து­விட்ட ஆட்சி நீதிக்­கட்சி ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">9.3.1923 அன்று ஒரு அர­சா­ணையை வெளி­யிட்டு, அதன்­படி, அனைத்து மக்­க­ளுக்­கும் கட்­டா­யக் கல்­வியை  வழங்க வேண்­டும் என்று சட்­டம் ஆக்­கி­யது நீதிக்­கட்சி அரசு. இந்­தி­யத் துணைக் கண்­டத்­தில் நீதிக்­கட்சி ஆட்­சி­தான்  முதன்­மு­த­லாக அனை­வ­ருக்­கும் கல்வி என்­பதை சட்­ட­மாக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பட்­டி­ய­லின மாண­வர்­க­ளைக் கட்­டா­ய­மாக எல்­லாப் பள்­ளி­க­ளி­லும் சேர்க்க வேண்­டும், மறுக்­கும் பள்­ளி­க­ளுக்கு  அரசு வழங்­கும் நிதி வழங்­கப்­ப­டாது என்று சட்­டம் இயற்­றி­னார்­கள். இதை­யெல்­லாம் நான் ஏன் சொல்­கி­றேன் என்­றால், வந்த பாதையை மறக்­கா­மல் இருந்­தால்­தான் வழி­த­வ­றி­வி­டா­மல் முன்­னே­றிப் போக முடி­யும்! இதெல்­லாம் தெரி­யா­மல் இருப்­ப­தால்­தான், என்ன செய்­தது திரா­வி­டம் என்று சிலர் அறி­யா­மை­யில் கேட்­கி­றார்­கள்! அவர்­க­ளுக்­காகத்­தான் இதை சொல்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கல்­விக்­காக ஏரா­ள­மான முன்­னெ­டுப்­பு­கள் நீதிக்­கட்சி ஆட்­சி­யில்­தான் எடுக்­கப்­பட்­டது. பெண்­க­ளுக்கு எட்­டாம் வகுப்­பு­வரை இல­வ­சக்­கல்வி!  பெண்­க­ளுக்கு மேல்­நி­லைப் பள்ளி மற்­றும் ஆசி­ரி­யர் பயிற்­சிப் பள்ளி தொடங்­கப்­பட்டு, அவர்­க­ளுக்கு உத­வித்­தொகை என்று அந்­தப் பட்­டி­யல் நீள­மா­னது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை­யெல்­லாம், அன்­றைய  சென்னைமாகா­ண­மான  தமிழ்­நாட்­டில், கல்­விப்புரட்­சிக்கு  அடித்­த­ளம் அமைத்­தது.  பெருந்த­லை­வர் காம­ரா­சர்  ஆட்­சி­யில்  அதி­கப்­ப­டி­யான பள்­ளி­கள்  திறக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கல்­லூ­ரிக் கல்­வி­யில் – முதல்­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11.5">கலை­ஞ­ரின் அதி­கக் கவ­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து, 1967-ஆம் ஆண்டு தமிழ்­நாட்­டில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் நடத்­திய அந்த அர­சி­யல் புரட்சி, அடுத்து வந்த எல்­லா­வி­த­மான மாற்­றங்­க­ளுக்­கும் அடித்­த­ள­மாக அமைந்­தது! பேர­றி­ஞர் அண்ணாஅவர்­கள் மறைந்த பிறகு, முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் கல்­லூ­ரிக் கல்­வி­யில்  அதி­கப்­ப­டி­யான கவ­னத்தை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விடு­தலை பெற்ற 1947 முதல் 1967 வரை­யி­லான 20 ஆண்­டு­க­ளில்  திறக்­கப்­பட்ட மொத்த கல்­லூ­ரி­கள் எத்­தனை தெரி­யுமா? 68! ஆனால், தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்த 1969 முதல் 1975 காலக்­கட்­டத்­தில் மட்­டும் 
97 அர­சுக் கல்­லூ­ரி­களை  திறந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புகு­மு­கக் கல்­லூரி வகுப்பு வரை இல­வ­சக் கல்வி- என்றுகலை­ஞர் அறி­வித்த பிற­கு­தான்பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர்  பள்­ளி­களை நோக்கிவந்­தார்­கள்.  தலை­வர் கலை­ஞர்­தான், மருத்­து­வம்,  சட்­டம்,  தமிழ் இணை­யம்,  கால்­நடை  ஆகி­ய­வற்­றிற்கு தனித்­தனி  பல்­க­லைக் கழ­கங்­களை  உரு­வாக்­கி­னார்.  நெல்லை  மனோன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார், சேலம் பெரி­யார்  பல்­கலைக் கழ­கங்­களைஉரு­வாக்­கி­னார். ஏரா­ள­ மான  மருத்­து­வக் கல்­லூ­ரி­களை  உரு­வாக்கி, தலை­சி­றந்த மருத்­து­வக் கட்­ட­மைப்­புக்கு வித்­திட்­டார். அத­னால்­தான் இந்­தி­யா­வி­லேயே மருத்­து­வர்­கள் விகி­தத்­தில் தமிழ்­நாடு நம்­பர் ஒன்­றாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த வரி­சை­யில், கல்­லூ­ரிக் கல்­விக்­கும்,  உயர்­கல்­விக்­கும், ஆராய்ச்­சிக் கல்­விக்­கும் நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பெண்­க­ளுக்கு நேர­டி­யாக பணத்தைக் கொண்டு சேர்த்து, அவர்­க­ளுக்­கான பொரு­ளா­தார விடு­த­லை­யை­யும் சமூக விடு­த­லை­யை­ யும் உறுதி செய்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தில்” மாதந்­தோ­றும் குடும்ப தலை­வி­க­ளுக்கு ஆயி­ரம் ரூபாய் கொடுக்­கி­றோம். அதை அவர்­கள் குழந்­தை­க­ளுக்­கான செலவு, சிறு சேமிப்­பு­கள், முத­லீடு செய்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">படிப்­புக்­கா­க­வும் வேலைக்­கா­க­வும் வெளி­யூ­ருக்­குப் செல்­லும் பெண்­கள், தின­சரி பய­ணத்­திற்கு என்று ஒரு குறிப்­பிட்ட தொகையை மாதந் தோ­றும் செல­விட வேண்­டிய அவ­சி­யம் இருக்­கும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மக­ளிர்க்­கான எண்­ணற்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நலத்­திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்­தச் சுமை­யை­யும் குறைத்து, கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணம் திட்­டத்­தி­னால் இது­வரை 527 கோடி பய­ணங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. வேலைக்குச் செல்­லும் பெண்­கள் வெளி­யூ­ரில் பாது­காப்­பாக எல்லா வச­தி­க­ளு­டன் தங்­கு­வ­தற்கு தோழி விடு­தி­கள்! மக­ளிர்  சுய உத­விக்­கு­ழுக்­க­ளுக்கு கட­னு­தவி என்று  எண்­ணற்ற மக­ளிர் நலத் திட்­டங்­களை இன்­றைக்கு  நிறை­வேற்­றிக்­கொண்டு வரு­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த வரி­சை­யில்­தான் புது­மைப் பெண் திட்­டத்­தை­யும்  உரு­வாக்­கி­னேன். இது 2021 தேர்­தல் வாக்­கு­று­தி­யில் சொல்­லப்­ப­டாத திட்­டம்! பெரும் அள­வில் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்­டிய, தேவை­யுள்ள திட்­டம்! ஆனா­லும் இதைத் தொடங்­கி­யாக வேண்­டும் என்று உறு­தி­யாக இருந்­தேன்.ஏன் தெரி­யுமா? தமிழ்­நாட்­டில்  அர­சுப் பள்­ளி­க­ளில் படிக்­கும் மாண­வி­க­ளின் உயர்க்­கல்வி  சேர்க்கை  குறை­வாக இருப்­ப­தாக புள்ளி விவ­ரங்­க­ளைப் பார்த்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேல்­ப­டிப்பு படிக்க திற­மை­யும், மன­சும் இருந்­தா­லும் பணம் இல்­லா­த­தால் படிப்பை கைவி­டு­கி­றார்­கள் என்று தெரிந்­துகொண்டு வருத்­த­ம­டைந்­தேன். அப்­போ­து­தான், மூவ­லூர் இரா­மா­மிர்­தம் அம்­மை­யார் உயர்­கல்வி உறு­தித் திட்­டம் எனும் புது­மைப்­பெண் திட்­டத்தை நான்  உரு­வாக்­கி­னேன்.   இத­னால், அர­சுப் பள்­ளி­க­ளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, மேற்­ப­டிப்­பில் சேரும் அனைத்து மாண­வி­க­ளுக்­கும்  மாதம் ஆயி­ரம் ரூபாய்  அவர்­கள்  வங்கி கணக்­கில் நேர­டி­யாகச் செலுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முதற்­கட்­ட­மாக, 5.9.2022-இல் வட­சென்னைபாரதி மக­ளிர் கல்­லூ­ரி­யி­லும்,இரண்­டாம் கட்­ட­மாக 8.2.2023-இல்   திரு­வள்­ளூர் பட்­டா­பி­ரா­மில்  இருக்­கும்  இந்து கல்­லூ­ரி­யி­லும் துவக்கி வைத்­தேன். புது­மைப் பெண் திட்­டம் தொடங்­கிய காலத்­தி­லி­ருந்து, தற்­போது  வரை கலை, அறி­வி­யல்,  பொறி­யி­யல்,  தொழிற்­ப­டிப்பு,  மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில்  படிக்­கும் மாண­வி­கள்  உட்­பட  சுமார் 4 இலட்­சத்து 25  ஆயி­ரம்  மாண­வி­கள்  பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது முதல்,  மாண­வி­க­ளுக்கு  ஊக்­கத்­தொ­கை­யாக 590 கோடியே 66 இலட்­சம் ரூபாய் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பெண்­க­ளின் கல்­விக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மூல­த­னமா­கப் பார்க்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை அர­சுக்கு செல­வி­ன­மாக கரு­தா­மல், ஒரு தந்­தைக்­கு­ரிய கட­மை­யாக, பெண் குழந்­தை­க­ளு­டைய கல்­விக்­கான மூல­த­ன­மாக தான் நான் பார்க்­கி­றேன்.  சில நாட்­க­ளுக்கு முன்பு, இங்கே தலை­மைச் செய­லா­ளர் அவர்­கள் வர­வேற்­புரை ஆற்­று­கின்­ற­போது குறிப்­பிட்­டுச் சொன்­னார். மாநில திட்­டக்­குழு துணைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் ஜெய­ரஞ்­சன் அவர்­கள் ஒரு அறிக்­கையை கொண்டு வந்து என்­னி­டம்வழங்­கி­னார். அதில், தமிழ்­நாடு அர­சின்திட்­டங்­கள் எந்­த­ள­வுக்கு பய­னுள்­ள­தாக அமைந்­தி­ருக்­கி­றது என்று ஆய்வுமுடி­வு­களை எல்­லாம் அதில் சொல்லி இருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புது­மைப் பெண் திட்­டத்­தைப் பற்றி என்ன சொல்­லி­யி­ருக்­கி­றது என்று நான்ஆர்­வ­மாக எடுத்­துப் பார்த்­தேன்.  அதைப்படித்­த­போது, எனக்கு மன­நி­றை­வாக இருந்­தது.  மாதம்­தோ­றும் நாம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கு­வ­தால் ஆண்­டுக்கு ஆண்டு கல்­லூ­ரி­க­ளில் மாண­வி­கள் கூடு­த­லாக சேரத் தொடங்கிஇருக்­கி­றார்­கள் என்­கின்ற விப­ரம் அந்த அறிக்­கை­யில் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாங்­கள் இந்­தத் திட்­டத்தை உரு­வாக்­கி­ய­தன் நோக்­கம் நிறை­வேற்­றப் பட்­டது என்று நான்பெரு­மைப்­பட்­டேன்.  பண­மில்­லா­மல் படிப்பை நிறுத்­தி­னால், பல்­லா­யி­ரம் மாண­வி­யர், கல்­லூ­ரி­களை நோக்கி வரத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளு­டைய படிப்­புக்­குப் பணம் மட்­டு­மல்ல, எந்­தத் தடை வந்­தா­லும் அதை நான்உடைப்­பேன்!   மாண­வி­க­ளுக்கு மட்­டும்­தானா?மாண­வர்­க­ளுக்கு இல்­லையா? என்று மாண­வர்­கள் கேட்­டார்­கள்.  முந்­தைய ஆட்­சி­யா­ளர்­களின் நிர்­வா­கத் திற­மை­யின்­மை­யால் ஏற்­பட்ட நிதி நெருக்­கடி ஒரு பக்­கம்; ஒத்­து­ழைப்பு தராத ஒன்­றிய அரசு என்று ஏற்­ப­டுத்­து­கின்ற சிக்­கல்­கள் அது ஒரு பக்­கம்; ஆனால், அதைப்­பற்றி கவ­லைப்­ப­டா­மல், மாண­வர்­க­ளுக்­காக, தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்தை நாங்­கள் தொடங்­கி­னோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்த அப்­பா­வும், தன்­னு­டைய பிள்­ளை­ க­ளின் படிப்­புச் செல­வுக்கு கணக்கு பார்க்க மாட்­டார்­கள்! அப்­ப­டித்­தான் உயர் கல்­விக்­கான, திட்­டங்­கள் என்­றால், எந்த நெருக்­கடி இருந்­தா­லும் அதை நிறை­வேற்­றியே தீரு­வேன்.  கடந்த 9.8.2024 அன்று கோயம்­புத்­தூர் மாவட்­டத்­தில், அரசு கலைக் கல்­லூ­ரி­யில் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்தை நாங்­கள் தொடங்­கி­னோம். அதைத் தொடங்­கி­ய­தில் இருந்து சுமார் 3 லட்­சத்து 52 ஆயி­ரம் மாண­வர்­கள் பய­ன­டைந்து வரு­கி­றார்­கள். இன்று வரை மாண­வர்­க­ளுக்கு உத­வித்­தொ­கை­யாக 143 கோடியே 41 இலட்­சம் ரூபாய் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">360 கோடி ரூபாயை இந்­தத் திட்­டத்­துக்­காக ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றோம். அடுத்து, அர­சுப் பள்ளி மாணவ, மாண­வி­ய­ருக்கு மட்­டும்­தானா?  அரசு உதவி பெறும் பள்­ளி­யில் படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு கிடை­யாதா? என்று ஒரு கோரிக்கை வைத்­தார்­கள்.  அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­யில் படித்து,  உயர்­கல்­வி­யில் சேரும் மாண­வி­ய­ருக்­கும் மாதம்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் வழங்­கு­கின்ற வகை­யில் இன்­றைக்கு புது­மைப் பெண் திட்­டத்தை விரி­வு­ ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். இந்­தத் திட்­டத்­தின்­கீழ், தமிழ்­நாடு முழு­வ­தும் சுமார் 75 ஆயி­ரம் மாண­வி­க­ளுக்கு உத­வித் தொகை வழங்­கப் போகின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“பட்­டங்­கள் ஆள்­வ­தும் சட்­டங்­கள் செய்­வ­தும் பாரி­னில் பெண்­கள் நடத்த வந்­தோம்; எட்­டும் அறி­வி­னில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்­பில்லை காண் என்று கும்­மி­யடி” எனப்புது­மைப் பெண்­கள் குறித்து பாரதி கண்ட கனவைபுது­மைப் பெண் திட்­டம் மூல­மாக நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு நன­வாக்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் நோக்­கம், பள்­ளி­யின் படிப்பை நிறுத்த வேண்­டிய சூழ­லில் இருக்­கின்ற மாண­வி­க­ளுக்கு  நம்­மு­டைய ஆட்­சி­யில் மாதந்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் கிடைப்­ப­தால், அவர்­கள் கல்­லூ­ரிக்­குள் நுழை­கி­றார்­கள்.  ஒரு ஆண் கல்­லூ­ரிக்­குள் நுழைந்­தால், அது கல்வி வளர்ச்சி!  அதுவே ஒரு பெண் கல்­லூ­ரிக்­குள் நுழைந்­தால், அது சமூ­கப் புரட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த வகை­யில், புது­மைப் பெண் திட்­டத்­தால்,தமிழ்­நாட்­டில் உயர்­கல்­வியை முடிக்­கின்றபெண்­க­ளின் எண்­ணிக்கை இன்­னும் இன்­னும்அதி­க­மா­கும்.   அறி­வுத்­தி­றன் கூடும். திற­மை­சா­லி­கள் அதி­க­மாக உரு­வா­கு­வார்­கள்.  அதன் கார­ண­மாக நம்­மு­டைய தமிழ்­நாட்டை தேடி,  உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­கள் தொழில் தொடங்க வரு­வார்­கள்.  ரொம்ப முக்­கி­ய­மாக, பாலின சமத்­து­வம் ஏற்­ப­டும். குழந்தை திரு­ம­ணங்­கள் குறை­யும்.  பெண்­கள் அதி­கா­ரம்பெறு­வார்­கள்.  பெண்­க­ளின் படிப்­பால், அவர்­க­ளின்தலை­மு­றையே காக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த ஒரு திட்­டத்­தால் இத்­தனை பயன்­கள் கிடைக்­கி­றது.  “கல்வி இல்­லாத பெண்­கள் களர்­நி­லம்” என்­றார் புரட்­சிக்­க­வி­ஞர் பார­தி­தா­சன்.  உயர்­கல்வி பெறாத பெண்­களே தமிழ்­நாட்­டில் இல்லை என்ற நிலையை உரு­வாக்­கா­மல் நான் ஓய­மாட்­டேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">இந்­தி­யா­விற்கே முன்­மா­திரி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் என்­றால் தனிப்­பட்ட நான் கிடை­யாது! என்னை இயக்­கும் தலை­வர்­க­ளும்,  அவர்­கள் என்­னுள் விதைத்­தி­ருக்­கின்ற கொள்­கை­க­ளும்­தான் கார­ணம்! நம்­மு­டைய திரா­விட மாடல்அர­சின் ஒவ்­வொரு திட்­ட­மும் ஒவ்­வொரு வகை­யில்இந்­தி­யா­விற்கே முன்­மா­தி­ரி­யாக அமை­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­ப­டி­யான திட்­டம் தான்,  ‘முத­ல­மைச்­ச­ரின் காலை உணவுத் திட்­டம்’.  சுமார் 20 இலட்­சம் பள்ளி குழந்­தை­கள் பசி­யின்றி சுவை­யான காலை உணவை சாப்­பி­டு­கி­றார்­கள்! அது­மட்­டு­மல்ல, கடந்த மாதம் நம்­மு­டைய பிர­த­மர் அவர்­கள் தலை­மை­யில் நடந்த தலை­மைச் செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில், என்­னு­டைய கனவு திட்­ட­ மான “நான் முதல்­வன்” திட்­டத்தை அனை­வ­ரும் பாராட்­டிப் பேசி­யி­ருக்­கி­றார்­கள். பெரிய பாராட்­டை­யும் பெற்­றி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாட்டு இளை­ஞர்­களை திறன்­மிக்­க­ வர்­க­ளாக உயர்த்­து­கின்ற “நான் முதல்­வன்” திட்­டத்தை நீங்­க­ளும் பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள்!இப்­படி பல்­வேறு திட்­டங்­களை உங்­கள் எதிர்­கா­லத்­திற்­காக செயல்­ப­டுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புதுமை பெண்­களே! உங்­க­ளி­டம் நான் கேட்­டுக் கொள்ள விரும்­பு­வது, படி­யுங்­கள், படி­யுங்­கள், படி­யுங்­கள்!  படிப்­பில் மட்­டும் கவ­னத்­தைச் செலுத்­துங்­கள். உங்­க­ளுக்­குத் தேவை­யான, எல்­லா­வற்­றை­யும் செய்து தர நான் இருக்­கி­றேன்! நம்­மு­டைய அரசு இருக்­கி­றது! ஒரு பட்­டத்­தோடு நிறுத்­திக் கொள்­ளா­தீர்­கள்!  மேலும், மேலும் உயர்­கல்வி, ஆராய்ச்­சிக் கல்வி வரை படி­யுங்­கள்!  உங்­கள் தகு­திக்­கேற்ற வேலை­கள் உறு­தி­யாக உங்­க­ளுக்கு கிடைக்­கும்.  இது போட்­டி­கள் நிறைந்த உல­கம். அத­னால,பட்­டங்­க­ளைக் கடந்த தனித்­தி­ற­மை­கள் அவ­சி­யம். திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும், வீட்­டில் முடங்­கி­டா­மல் வேலை­க­ளுக்­குச் சென்று பணி­யாற்­றுங்­கள்.  உங்­கள் கல்வி, உங்­க­ளுக்­கும் உங்­கள் குடும்­பத்­துக்­கும் மட்­டும் பயன்­த­ரக்­கூடி­ய­தாக இருக்­கக் கூடாது. சமூ­கம் உங்­களால் பய­ன­டை­கின்ற அள­வுக்கு நீங்­கள் 
உய­ரங்­களை அடை­ய­வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு ஆயி­ரம் ரூபாய் பெறக்­கூ­டிய நீங்­கள், நாளை உங்­க­ளைப் போல பல­ருக்கு உத­வ­வேண்­டும்; வழி­காட்­ட­வேண்­டும்!  என்­றா­வது ஒரு­நாள் என்­னைச் சந்­தித்து, “புது­மைப் பெண் திட்­டத்­தால் பயன் பெற்ற நான் இப்­போது இந்த நிலை­யில் இருக்­கி­றேன்”­­­என்று சொன்­னால், அது­தான் எனக்கு பெரு­ம­கிழ்ச்சி! எனக்­குப் பெரிய பெருமை!  என்­னு­டைய காலத்­துக்­குப் பிற­கும், என் பேர் சொல்­லும் பிள்­ளை­க­ளாக நீங்­கள் எல்­லாம் இருக்­க­வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">புது­மைப் பெண்­க­ளாம் என் மகள்­கள் அனை­வ­ருக்­கும் ஆங்­கில புத்­தாண்டு மற்­றும் தமி­ழர் திரு­நாள் பொங்­கல் வாழ்த்­து­களை தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>