<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,404,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jan 01 2025 03:38:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012025-MDU-03" position.sequence="03" ex-ref="01012025-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">உலக அடையாளமும் பண்பாட்டு அடையாளமும்   !</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="39">முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="39"> முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="1_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CMHalfsize_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வர் சிலை அமைத்து 25 ஆண்­டு­ கள் ஆகி­விட்­டது என்று சொன்­ன­வு­டன், அதற்கு பெரிய விழா நடத்­த­வேண்­டும் என்று நான் சொன்­னேன்… உடனே சில அதி­மே­தா­வி­கள், ஒரு சிலை அமைப்­ப­தற்கு எதற்கு விழா நடத்­த­வேண்­டும் என்று கேட்க தொடங்­கி­னார்­கள். அவர்­கள் கேள்­வி­யில் அர்த்­தம் கிடை­யாது; ஆனால் உள்­ளர்த்­தம் உண்டு!  அவர்­க­ளுக்கு ‘பதி­லுக்­குப் பதில்’ சொல்லத் தேவை­யில்லை! ஆனால், உங்­க­ளுக்கு நான் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­வது, திரு­வள்­ளு­வர், தமி­ழர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய உலக அடை­யா­ளம்! திருக்­கு­றள் தமி­ழர்­க­ளின் பண்­பாட்டு அடை­யா­ளம்! அத­னால் கொண்­டா­டு­கி­றோம்! கொண்­டா­டு­வோம்! கொண்­டா­டிக் கொண்டே இருப்­போம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று நடை­பெ­று­வது, ஐம்­பெ­ரும் விழா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை­யை­யும், விவே­கா­னந்­தர் பாறை­யை­யும் இணைக்­கின்ற கண்­ணாடி இழைப் பாலம் திறப்பு விழா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•வெள்ளி விழா மலர் வெளி­யீடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•திருக்­கு­றள் கண்­காட்சி தொடக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•அய்­யன் திரு­வள்­ளு­வர் தோர­ண­வா­யில் அடிக்­கல் நாட்­டு­தல் என்று இந்த விழா சிறப்­பாக நடந்து கொண்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை­யை­யும், விவே­கா­னந்­தர் பாறை­யை­யும் இணைக்­கக்­கூ­டிய 37 கோடி ரூபாய் மதிப்­பி­லான கண்­ணாடி இழை பாலத்­தைத் திறந்து வைத்­தேன். இந்த விழாவை சிறப்­பாக ஏற்­பாடு செய்த எதி­லும் வல்­ல­வர்  பொதுப்­ப­ணித்­துறை அமைச்­சர்  எ.வ.வேலு அவர்­க­ளுக்கு, என்­னு­டைய மன­மார்ந்த நன்­றியை நான் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அமைச்சர்களுக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அதிகாரிகளுக்கும் பாராட்டுகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல், நானூறு பக்­கங்­க­ளில் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா மலரினை இலக்­கிய வர­லாற்று கரு­வூ­ல­மாக உரு­வாக்­கித் தந்­தி­ருக்க  செய்­தித் துறை அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய பாராட்­டுக்­கள்! வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுற்­று­லாப் பய­ணி­களை கவ­ரும் வகை­யில், 12 கோடி ரூபாய்  செல­வில்  அய்­யன் திரு­வள்­ளு­ வ­ரின் வாழ்க்கை வர­லாறு மற்­றும் உல­கப் பொது­ம­றை­யான திருக்­கு­றளை பறை­சாற்­றும் வகை­யில், 3டி சீரொ­ளிக்­காட்சி அமைத்­தி­ருக்­கும் சுற்­றுலா துறை அமைச்­சர்  ராஜேந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய பாராட்­டுக்­கள்! வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தின் பொறுப்பு அமைச்­சர் என்ற முறை­யில்,  இந்த விழாவை சிறப்­பாக ஒருங்­கி­ணைத்து, அதில் வெற்றி கண்­டி­ருக்­கக்­கூ­டிய  நிதி அமைச்­சர்  தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த பாராட்­டுக்­கள்! வாழ்த்­து­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நிகழ்ச்சி நடை­பெற உழைத்த தலை­மைச் செய­லா­ளர், பல்­வேறு துறை­களை ஒருங்­கி­ணைத்து, சிறப்­பாக செய்து காட்­டி­யி­ருக்­கக்­கூ­டிய முதன்­மைச் செய­லா­ளர் கார்த்­தி­கே­யன் மாவட்ட ஆட்­சி­யர் உள்­ளிட்ட அனைத்துஅலு­வ­லர்­க­ளுக்­கும் எனது பாராட்­டுக்­கள்! வாழ்த்­து­கள்! நன்­றி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கலைஞர் – திருக்குறள் தலைவராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வாழ்ந்தார், வலம்வந்தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நெ­றி­யின் அடை­யா­ள­மாக, சுனா­மி­யை­யும் எதிர்த்து உயர்ந்து நிற்­கின்ற இந்த 
வள்­ளு­வர் சிலை­தான், நம்­மு­டைய அடை­யா­ளத்­தின் பண்­பாட்­டுக் குறி­யீடு!  திருக்­கு­ற­ளை­யும், திரு­வள்­ளு­வ­ரை­யும் சொல்­லி­லும், செய­லி­லும், நெஞ்­சி­லும் தூக்­கிச் சுமந்த இயக்­கம் திரா­விட இயக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமத்­து­வத்தை சொல்­வ­தால் தான், தந்தை பெரி­யார் சொன்­னார்… “நம் மதம், குறள் மதம்!  நம் நெறி, குறள்நெறி!” என்று சொன்­னார்.  குறள் மாநாடு நடத்தி திருக்­கு­றள் புத்­த­கத்தை குறைந்த விலைக்கு அச்­சிட்டு வழங்­கி­னார்­கள். பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள், “குறள் என்­பது வகுப்­ப­றை­யில் மட்­டு­மல்­லா­மல், உங்­கள் இல்­லங்­க­ளில், உள்­ளங்­க­ளில் பரவ வேண்­டும்” என்று சொன்­னார். நம்­மு­டைய தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், திருக்­கு­றள் தலை­வ­ரா­கவே வாழ்ந்­தார்! வலம் வந்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­கள் பள்­ளிச் சிறு­வ­னாக இருந்­த­போது, முதன்­மு­றை­யாக பேச்­சுப்­போட்­டி­யில் கலந்­து­கொண்டு, ‘நட்பு’ என்ற தலைப்­பில் பேசி­ய­போது,  திருக்­கு­ற­ளைத்­தான் மேற்­கோள்­காட்டி பேசி­யி­ருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போ­தி­ருந்து குற­ளா­சான் வள்­ளு­வ­ருக்­கும், தமிழ்க் குர­லோன் தலை­வர் கலை­ஞ­ருக்­கும் வாழ்­நாள் முழுக்க நட்பு இருந்­தது! வள்­ளு­வத்­தைப் போற்­று­கின்ற தொண்டு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தி.மு.க. ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பே, சட்­ட­மன்­றத்­தில் வாதாடி வள்­ளு­வர் படம் திறக்க வைத்­த­வர் நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர்!  போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ரா­ன­தும், அனைத்து பேருந்­து­களிலும் திருக்­கு­றளை எழு­தி­னார்!  பொதுப்­ப­ணித் துறை அமைச்­ச­ராக இருந்­த­போது, அனைத்து அரசு விடு­தி­க­ளி­லும், திரு­வள்­ளு­வர் பட­மும், திருக்­கு­ற­ளும் இடம்­பெற வைத்­தார்! காவ­லர் பதக்­கத்­தில் வள்­ளு­வ­ரைப் பொறித்­தார்.  தமி­ழ­றி­ஞர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட திரு­வள்­ளு­வர் ஆண்டை அர­சின் சார்­பில் ஏற்­றுக்­கொண்டு அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">திருக்­கு­ற­ளுக்­கா­கவே வாழ்ந்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மயி­லாப்­பூ­ரில், திரு­வள்­ளு­வர் நினை­வா­ல­ யம் அமைத்­தார்.  சென்­னை­யில் வள்­ளு­வ­ருக்கு கோட்­டம் அமைத்­தார்.  குற­ளோ­வி­யம் தீட்­டி­னார்.  திருக்­கு­ற­ளுக்கு உரை எழு­தி­னார்.  இப்­படி திருக்­கு­ற­ளுக்­கா­கவே வாழ்ந்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தச் சிலை­யும் சாதா­ர­ண­மாக அமைக்­கப்­ப­ட­வில்லை. இதற்­கென்று ஒரு வர­லாறு இருக்­கி­றது…  வான்­பு­கழ் வள்­ளு­வ­ருக்கு வானு­ய­ரச் சிலை அமைக்­க­வேண்­டும் என்று 31.12.1975 அன்று அமைச்­ச­ர­வை­யில் முதன்­மு­த­லாக 
தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1990-ஆம் ஆண்டு சிலைக்­கான பணி­களை தொடங்­கப்­பட்­டது. ஆனால் தொடர்ந்து தடை­கள் ஏற்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1997-ஆம் ஆண்­டு­தான் துரி­த­மாக பணி­கள் நடை­பெ­றத் தொடங்கி இந்­தச் சிலை அமைக்­கப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரு­டைய கன­வுக்கு உரு கொடுத்த மாம­னி­தர்­தான், கண­பதி ஸ்தபதி அவர்­கள்! அவர்­தான் வள்­ளு­வர் கோட்­டத்­தை­யும், பூம்­பு­கார் கோட்­டத்­தை­யும், பாஞ்­சா­லங்­கு­றிச்சி கோட்­டை­யை­யும் அமைத்­தார். அவ­ரு­டைய அப்­பா­தான், சென்­னை­யில் இருக்­கின்ற காந்தி மண்­ட­பத்தை அமைத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கம்­பீர வள்­ளு­வர் சிலைக்கு கலை­ஞர் கார­ண­கர்த்தா என்­றால்,  சிற்­பக் கலை­ஞர் கண­பதி ஸ்தபதி அவர்­கள்­தான் கலைக்­கர்த்தா!  இந்­தச் சிலையை பற்றி சொல்­ல­வேண்­டும் என்­றால், திருக்­கு­ற­ளின் அதி­கா­ரங்­களை குறிக்­கின்ற வகை­யில், 133 அடி உய­ரம்! அதில், அறத்­துப்­பால் அதி­கா­ரங்­களை குறிக்­கின்ற வகை­யில், பீடம் 38 அடி.  அறம் என்ற பீடத்­தில் பொரு­ளும்-­இன்­ப­மு­மாக 95 அதி­கா­ரங்­கள் சிலை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­மீது தூக்கி முடிந்­திட்ட கொண்­டை­யையே மகு­ட­மாக கொண்டு -  இடுப்­பில் பட்­டா­டை­யை­யும் - மார்­பில் மேல் துண்­டும் - வலது கையா­னது அறம், பொருள், இன்­பம் என்­ப­தைக் காட்­டும் மூன்று விரல்­க­ளா­க­வும் -  இடது கையில் குறள் ஓலைச் சுவ­டி­க­ளும் இருப்­பது போல அமைத்­தி­ருக்­கி­றார் கண­பதி ஸ்தபதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">7000 டன் எடையுடைய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">வள்ளுவர் சிலைக்கானப் பெருமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">7000 டன் எடை கொண்ட இந்­தச் சிலை­யில், 3,681 கற்­கள் இருக்­கி­றது. இத்­த­னைக் கற்­க­ளைக் கொண்டு ஒரு சிலையை உரு­வாக்­க­லாம். ஆனால், அதை ஒரு பாறை­யில் தூக்கி நிறுத்தி வைத்­தி­ருப்­பது தான் இந்­தச் சிலை­யின் பெருமை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">133 அடிக்கு சிலை வைக்க, 180 அடிக்கு சாரம் கட்டி இதை அமைத்­தார்­கள்.  500 சிற்­பி­கள் இந்­தப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டார்­கள்.  கண­பதி ஸ்தபதி அவர்­கள் சொன்­னார்… தஞ்­சைப் பேர­ர­சன் ராஜ­ராஜ சோழ­னி­டம் அன்று கண்ட சிற்­பக் கலை மரபை இன்று, ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­க­ளி­டத்­தில் காண்­கி­றேன் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தஞ்சை பெரிய கோயில் வடி­வ­மைத்த குஞ்­ச­ர­மல்­ல­னின் வம்­சத்­தைச் சேர்ந்­த­வர்­தான் கண­பதி ஸ்தபதிஅவர்­கள்.  சொற்­சிற்­பி­யாம் கலை­ஞ­ரும் - கல்­சிற்­பி­யாம் கண­பதி ஸ்தப­தி­யும் சேர்ந்து உலக வாழ்க்­கைச் சிற்­பி­யாம் வள்­ளு­வ­ருக்­காக உரு­வாக்­கிய சிலைக்கு, நாம் வெள்­ளி­விழா கொண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">முக்கிய அறிவிப்புகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> இந்த திருக்­கு­றள் விழாவை முன்­னிட்டு,சில அறி­விப்­பு­க­ளை­யும் நான் வெளி­யிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•முக்­க­டல் சூழும் கும­ரி­மு­னை­யில் இங்­கி­ருந்து சுற்­று­லாப் பய­ணி­கள் அனை­வ­ரும் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை சென்­ற­டைய பய­ன­டை­வ­தற்­காக படகு சவாரி வச­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக3 புதிய பய­ணி­கள்பட­கு­கள் வாங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•முதல் பட­கிற்கு தியா­கத்­தின் உரு­வாகி, தொண்­டின் கரு­வாகி, தமிழ்­நாட்­டில் அடித்­த­ள­மிட்ட  பெருந்­த­லை­வர் காம­ரா­சர் பெய­ரும், இரண்­டாம் பட­கிற்கு தென்­கு­ம­ரியை தமிழ்­நாட்­டு­டன் இணைக்க வலி­யு­றுத்தி போராடி சாதனைப் படைத்தசாத­னை­யா­ளர் மார்­சல் நேச­மணி பெய­ரும், மூன்­றாம் பட­கிற்கு கன­டா­வில் பிறந்­தா­லும், கன்­னித்­த­மிழ் வளர்த்­த­வ­ரும், திருக்­கு­றளை மொழிப் பெயர்த்­தும், தமிழ் இலக்­கண நூலை எழு­தி­யும், அழி­யாப் படைப்­பு­களை அளித்த ஜி.யு.போப் பெய­ரும், என மூன்று பெயர்­க­ளும் அந்­தப் பட­கு­க­ளுக்கு 
சூட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்­டா­வது அறி­விப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•ஒவ்­வொரு மாவட்­டத்­துக்­கும் திருக்­கு­ற­ளில் ஆர்­வ­மும், புல­மை­யும் மிக்க ஆசி­ரி­யர்­கள், பயிற்­று­நர்­கள் தேர்வு செய்­யப்­பட்டு, அவர்­க­ளுக்­குப் பயிற்சி வழங்கி மாவட்­டம்­தோ­றும் தொடர் பயி­ல­ரங்­கு­கள், பயிற்சி  வகுப்­பு­கள் நடத்­தப்­ப­டும். ‘திருக்­கு­றள் திருப்­ப­ணி­கள்’ தொடர்ந்து நடை­பெற திட்­டம் வகுக்­கப்­ப­டும்.  இதற்­காக, ஆண்­டிற்கு மாவட்­டம் ஒன்­றிற்கு மூன்று 
இலட்­சம் ரூபாய் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூன்­றா­வது அறி­விப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•ஆண்­டுக்கு 133 உயர்­கல்வி நிறு­வ­னங் க­ளில், திருக்­கு­றள் தொடர்­பான கலை இலக்­கிய அறி­வு­சார் போட்­டி­கள் மற்­றும் கருத்­த­ரங்­கு­கள் நடத்த திட்­ட­மி­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான்­கா­வது அறி­விப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•ஒவ்­வொரு ஆண்­டும் டிசம்­பர் கடைசி வாரம் ‘குறள் வாரம்’ கொண்­டா­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஐந்­தா­வது அறி­விப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•தமிழ்த் திற­னறி தேர்­வில் வெற்றி பெற்ற மாண­வர்­க­ளுக்­கான திருக்­கு­றள் மாண­வர் மாநாடு ஆண்­டு­தோ­றும் நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆறா­வது அறி­விப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•திருக்­கு­ற­ளும், உரை­யும் அரசு அலு­வ­ல­கங்­க­ளில் எழு­தப்­ப­டு­கி­றது போல, தனி­யார் நிறு­வ­னங்­க­ளி­லும் எழு­து­வ­தற்கு, ஊக்­கு­விக்க உரியமுயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">கன்னியாகுமரி பேரூராட்சி – நகராட்சியாக
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தரம் உயர்த்தப்படும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இத்­து­டன் சேர்த்து, கும­ரிக்கு வந்து இந்த பகு­திக்­கான அறி­விப்பு செய்­யா­மல் இருக்க 
முடி­யாது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் தென்­கோ­டி­யில் அமைந்­தி­ருப்­பது மட்­டு­மில்­லா­மல்  வள்­ளு­வர் சிலை­யால் சிறப்பு பெற்­றி­ருக்­கின்ற,  சுற்­று­லாப் பய­ணி­களை ஈர்க்­கின்ற வகை­யில், கன்­னி­யா­கு­மரி பேரூ­ராட்சி, நக­ராட்­சி­யாகதரம் உயர்த்­தப்­படும். பேர­றி­ஞர் சிலை­யாக இருக்­கக்­கூ­டிய வள்­ளு­வர் சிலை­யினை இந்த வெள்ளி விழா­வில் நான் மறு­ப­டி­யும் சொல்­கி­றேன். திரு­வள்­ளு ­வர் வெறும் சிலை­யல்ல; திருக்­கு­றள் வெறும் நூல் அல்ல;  நம்­மு­டைய வாழ்க்­கைக்­கான வாளும், கேட­ய­மும்!  அது நம்­மைக் காக்­கும், நம்மை அழிக்க வரும் தீமை­களை தடுக்­கும். நம்மை மட்­டு­மல்ல, காவி சாயம் பூச நினைக்­கிற தீய எண்­ணங்­க­ளை­யும் விரட்­டி­ய­டிக்­கும். தனி மனி­தர் முதல் அரசு வரைக்­கும் நீதி­நெறி சொன்­ன­வர் நம்­மு­டைய வள்­ளு­வர் அவர்­கள். நாம் செய்ய வேண்­டி­யது,  பள்­ளி­களில், கல்­லூ­ரி­க­ளில், அரசு அலு­வ­ல­கங்­க­ளில் திருக்­கு­றளை இன்­னும் இன்­னும் அதி­க­மாக இடம்­பெ­றச் செய்­ய­வேண்­டும். இது அர­சுக்­கான உத்­த­ரவு மட்­டு­மல்ல, தனி­யார் நிறு­வ­னங்­க­ளும் இதைப் பின்­பற்­ற­வேண்­டும் என்று அன்­போடு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வள்­ளு­வம் வாழ்­வி­யல் நெறி­யாக மாறட்­டும்! சமு­தா­யம் குறள் சமு­தா­ய­மாக மல­ரட்­டும்!  வாழ்க கலை­ஞ­ரின் புகழ்! வாழ்க குற­ளின் புகழ்!  அனை­வ­ருக்­கும் ஆங்­கில புத்­தாண்டு மற்­றும் தமி­ழர் பொங்­கல் திரு­நாள் வாழ்த்­தைச் சொல்லி நான் விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>