<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,458,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 16:57:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012025-MDU-05" position.sequence="05" ex-ref="01012025-MDU-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="135">கடலுக்குமேல் கண்ணாடி இழைப் பாலம்   !</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="31">முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup312310_05_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஜன. 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முக்­க­டல் சூழும் குமரி முனை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி ரூ.37 கோடி செல­வில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள சீரொ­ளிக் (லேசர்) காட்­சி­யி­னைத் தொடங்கி வைத்து,  திருக்­கு­றள் நெறி பரப்­பும் 22 தகை­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறப்­புப் பரி­சுத் தொகை மற்­றும் பாராட்­டுச்சான்­றி­தழ்­களை முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின்அவர்­கள் வழங்கி சிறப்­பித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன் விவ­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்­தி­னம் (30–12–2024) கன்­னியா கும­ரி­யில், முக்­க­டல் சூழும் குமரி முனை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வில், 37 கோடி ரூபாய் செல­வில் அமைக்­கப்­பட்­டுள்ள அய்­யன் திரு­வள்­ளு­ வர் சிலையை விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், திருக்­கு­றள் நெறி பரப்­பும் 22 தகை­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறப்­புப் பரி­சுத் தொகை­யாக தலா 25 ஆயி­ரம்  ரூபாய்க்­கான காசோலை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­களை வழங்கி சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அறி­வுத் திரு­வி­ளக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘திருக்­கு­றள்’ எனும் அறி­வுத் திரு­வி­ளக்கை, திக்­கெட்­டும் பரப்­பு­கின்ற பணியை தன்­னு­டைய ஒப்­பற்ற கட­மை­யா­கக் கரு­திச் செயல்­பட்ட முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், ‘குற­ளோ­வி­யம்’ தீட்­டி­னார். குற­ளுக்கு விளக்­க­வுரை தந்­தார், சென்­னை­யில் வள்­ளு­வர் கோட்­டம் அமைத்­தார், அரசு அலு­வ­ல­கங்­க­ளி­லும், பேருந்­து­க­ளி­லும் குறளை எழு­த­வைத்து, குறளை எளிய மக்­க­ளுக்கு கொண்டு சேர்த்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடல் அலை­கள் தாலாட்­டும் கும­ரிக்­ கடல் நடுவே அய்­யன் திரு­வள்­ளு­வ­ருக்கு 2000-ஆம் ஆண்டு ஜன­வரி 1-ஆம் நாள் 133 அடி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் சிலை அமைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் கன்­னி­யா­கு­ம­ரி­யில் நிறு­வப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா காண்­பதை­யொட்டி வரும் டிசம்­பர் 30-ஆம் தேதி முதல் ஜன­வரி 1-ஆம் தேதி வரை தமிழ்­நாடு அர­சின் சார்­பில் பெரு­விழா கொண்­டா­டப்­படும் என்று முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 12.11.2024 அன்று அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த அறி­விப்­பிற்­கி­ணங்க, தமிழ்­நாடு அர­சின் சார்­பில் முக்­க­டல் சூழும் குமரி முனை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாட்­கள் நடை­ பெறு­கி­றது. இவ்­வி­ழா­வில், நேற்று முன்­தி­னம் (30.12.2024) 
அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை விவே­கானந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலம் திறப்பு விழா, திருக்­கு­றள் நெறி பரப்­பும் 22 தகை­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறப்­புப் பரி­சுத் தொகை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­கள் வழங்­கு­தல், சொல்­வேந்­தர் சுகி.சிவம் அவர்­கள் தலை­மை­யில் “திருக்­கு­ற­ளால் அதிக நன்மை தனி­ம­னி­த­ருக்கே – சமு­தா­யத்­திற்கே’’ எனும் தலைப்­பில்சிறப்­புப் பட்­டி­மன்­றம் ஆகி­யவை நடை­பெற்­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று (31.12.2024) அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி­ விழாச் சிறப்பு மலர் வெளி­யீடு, திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்­றி­பெற்ற மாணவ, மாண­வி­யர்க்­குப் பரி­சு­கள் வழங்­கு­தல், பியானோ இசைக் கலை­ஞர்  செல்­வன் லிடி­யன் நாதஸ்­வ­ரம் அவர்­க­ளின் திருக்­கு­றள் இசை நிகழ்ச்சி, அய்­யன் திரு­வள்­ளு­வ­ரின் பெரு­மை­களை எடுத்­து­ரைக்­கும் தமி­ழ­றி­ஞர்­க­ளின் கருத்­த­ரங்­கம் ஆகிய நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன, இன்று (1.1.2025) திருக்­கு­றள் ஓவி­யக் கண்­காட்சி திறப்பு உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்ச்­சி­கள் நடை­பெ­ற­வுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வெள்­ளி­விழா நிகழ்ச்­சி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­படி, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்­ளி­வி­ழா­வை­யொட்டி,   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்று முன்­தி­னம் படகு மூலம் அய்­யன் திரு­வள்­ளு­ வர் சிலை அமைந்­துள்ள இடத்­திற்கு சென்று, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள “பேர­றி­வுச் சிலை” (Statue of Wisdom) அலங்­கார வளை­வினை திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து, அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, 
திரு­வள்­ளு­வர் சிலை­யி­லி­ருந்து விவே­ கானந்­தர் பாறைக்கு இப்­பா­லத்­தின் வழி­யாக நடந்து சென்று பார்வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பின்­னர், அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யின் கீழ் அலங்­க­ரித்து வைக்­கப்­பட்­டுள்ள திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வப் படத்­திற்­கும்,   அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யின் பாதங்­க­ளுக்­கும், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் மலர்­தூவி மரி­யாதை செலுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை 
விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­ம­ரி­யில் அமைந்­துள்ள அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை மற்­றும் விவே­கா­னந்­தர் பாறையை இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலத்தை அமைப்­ப­தற்கு நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு துறை­மு­கங்­கள் துறை  சார்­பாக 37 கோடி ரூபாய் நிர்­வாக அனு­மதி பெறப்­பட்டு தமிழ்­நாடு கடல்­சார்  வாரி­யத்­தின் வைப்பு நிதிப் பணி­யாக தமிழ்­நாடு அர­சால் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­பா­லக் கட்­டு­மான வடி­வ­மைப்பு சென்­னை-­­­இந்­திய தொழில்­நுட்­பக் கழ­கத்­தின் கடல்­சார் பொறி­யி­யல் பிரி­வின் ஒப்­பு­த­லை­யும், கட­லோர ஒழுங்­கு­முறை மண்­டல ஆணை­யத்­தின் அனு­ம­தி­யை­யும் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­பா­ல­மா­னது 77 மீட்­டர் நீளம் மற்­றும் 10 மீட்­டர் அக­லம் கொண்ட Bowstring Arch பால­மா­கும். இது நவீன தொழில் நுட்­பத்­தில் கடல் அரிப்பு, கடல் காற்­றின் வேகம் போன்ற கார­ணி­க­ளைக் கருத்­தில் கொண்டு  வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. முழு­மை­யாக பொருத்­தப்­பட்ட எக்கு அல­கு­கள் தனித்­த­னி­யாக பிரிக்­கப்­பட்டு வர்­ணம் பூசப்­பட்டு, நெட்­வொர்க் ஆர்ச் முழு­மை­யாக பாலத்­தில் பொருத்­தப்­பட்­டுள்­ளது. இப்­பா­லத்­தில் 2.5 மீட்­டர்  அக­ல­முடைய கண்­ணாடி அடித்­த­ளம் கொண்ட நடை­பாதை  அமைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், நடை­பாதை மேல்­தள காங்­கி­ரீட், 
கிரா­னைட் கற்­கள் மற்­றும் ஒளி­ரூட்­டும் விளக்­கு­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருக்­கு­றள் நெறி பரப்­பும் தகை­மை­யா­ளர்­க­ளுக்கு    முத­ல­மைச்­சர்  சிறப்பு செய்­தல்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருக்­கு­றள் நெறி பரப்­பும் தகை­மை­யா­ளர்­கள் முனை­வர் ம.சக்­க­ர­வர்த்தி,  தென்­மொழி நற்­றே­வன், புல­வர் அய்யா மோகன், திருக்­கு­றள்  சுப்­ப­ரா­யன்,  தமி­ழ­ரிமா தா.சம்­பத், 
பாவ­லர் மேத்­தா­வா­ணன்,   சி.பன்­னீர்­செல்­வம், முனை­வர் க.வள­ன­ரசு. முனை­வர் பேரா. கஸ்­தூரி ராஜா, திருக்­கு­றள் தூயர்  அ.கோபி­சிங்,   கைலா­சம், திருக்­கு­றள் செல்­வன், புல­வர் செந்­தலை ந.கவு­த­மன், பெரும்­பு­ல­வர் மு.படிக்­க­ராமு, முனை­வர் கலை. செழி­யன்,  மு.கவி­ன­ரசு, முனை­வர் மா.பூங்­குன்­றன், திருக்­கு­றள் க.கோ.பழனி, கோ.பிச்சை வள்­ளி­நா­ய­கம், திருக்­கு­றள் புல­வர் நாவை. சிவம்,  சி. சொல்­ல­ரசு,  இரா. கழ­ராம்­பன் ஆகிய 22 தகை­மை­யா­ளர்­களுக்கு   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலா 25 ஆயி­ரம் ரூபாய்க்­கான காசோலை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­களை வழங்­கிச் சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூம்­பு­கார் விற்­ப­னை­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­மரி, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யின் கீழ் அமைக்­கப் பட்­டுள்ள பூம்­பு­கார் விற்­ப­னை­ய­கத்தை   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்று முன்­தி­னம் திறந்து வைத்து, பார்­வை­யிட்­டார். அவ்­விற்­ப­னை­ய­கத்­தில், பித்­தளை, வெண்­க­லம், பைபர், தஞ்­சா­வூர் ஒவி­யம், தஞ்­சா­வூர் கலை தட்­டு­கள், கண்­ணாடி ஒவி­யம் ஆகி­ய­வற்­றால் தயா­ரிக்­கப்­பட்ட சிறிய வடி­வி­லான (Miniacture) அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை­கள், ஆங்­கி­லம் மற்­றும் தமிழ் மொழி­க­ளில் திருக்­கு­றள் புத்­த­கங்­கள் போன்­றவை விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து, கன்­னி­யா­கு­மரி கடற்­க­ரை­யில் மணல் சிற்ப கலை­ஞர்  சுதர்­சன் பட்­நா­யக் அவர்­க­ளால் வடி­வ­மைக்­கப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர் மணல் சிற்­பத்தை   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பின்­னர்,  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள், படகு குழா­மி­லி­ருந்து அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள சீரொ­ளிக் (லேசர்) காட்­சி­யினை தொடங்கி வைத்து பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ந்து, சொல்­வேந்­தர் சுகி.சிவம் அவர்­கள் தலை­மை­யில் “திருக்­கு­ற­ளால் அதிக நன்மை தனி­//மனி­த­ருக்கே – சமு­தா­யத்­திற்கே’’ எனும் தலைப்­பில் நடை­பெற்ற 
சிறப்­புப் பட்­டி­மன்­றத்தை   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வி­ழா­வில்,   சட்­டப்­பே­ர­வைத் தலை­வர்  மு.அப்­பாவு,   நீர்­வ­ளத் துறை அமைச்­சர்  துரை­மு­ரு­கன்,   திரு­மதி துர்கா ஸ்டாலின், துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின்,   நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் கே.என்.நேரு,  ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர்  இ. பெரி­ய­சாமி,   வனத்­துறை அமைச்­சர் முனை­வர் க.பொன்­முடி,   பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர்  எ.வ.வேலு,   நிதி, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் கால­நிலை மாற்­றத் துறை அமைச்­சர்  தங்­கம் தென்­ன­ரசு,   தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித் துறை அமைச்­சர்  
மு.பெ. சாமி­நா­தன் உள்­ளிட்ட   அமைச்­சர் பெரு­மக்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டி.ஆர்.பாலு,  கனி­மொழி கரு­ணா­நிதி,  ஆ.ராசா உள்­ளிட்ட நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­மைச் செய­லா­ளர்  நா. முரு­கா­னந்­தம்,  பொதுப்­ப­ணித் துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர்  மங்­கத் ராம் சர்மா,  நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் தா.கார்த்­தி­கே­யன்,  தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித் துறை செய­லா­ளர்  வே.ராஜா­ரா­மன்,  கன்­னி­யா­கு­மரி மாவட்ட ஆட்­சித் தலை­வர் திரு­மதி ஆர். அழ­கு­மீனா,  உள்­ளாட்சி அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (30.12.2024) கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், 37 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்து, விவேகானந்தர் பாறைக்கு இப்பாலத்தின் வழியாக நடந்து சென்று பார்வையிட்டார். இவ்விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திருமதி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆர்.அழகுமீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>