<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="504,69,956,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 16:58:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012025-MDU-10" position.sequence="10" ex-ref="01012025-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">நின்ற சிலையும்! வென்ற கலையும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup310801_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CMHalfsize_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="ThiruVallu_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">ஈ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ர­டிக் குறட்­பாக்­க­ளில் உல­கத் தத்­து­வங்­கள் அனைத்­தை­யும் அடக்கி, அவற்றை 133 அத்­தி­யா­யங்­க­ளாக வகுத்து திருக்­கு­றள் என்­னும் அரும்­­பெரும் நூலாக ஆக்­கி­ய­ளித்து, உலக அரங்­கில் தமிழ்­மொ­ழிக்­கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலை­பெ­றச் செய்­த­வர் அய்­யன் திரு­வள்­ளு­வப் பேரா­சா­னா­வார். வாழ்­வி­ய­லின் அனைத்­துக் கூறு­க­ளை­ யும், இனம், மொழி, பாலி­னப் பாகு­பா­டின்றி காலங்­க­டந்­தும் அனை­வ­ருக்­கும் பொருந்­து­மாறு உரைத்­தி­ருப்­ப­தால் திருக்­கு­றளை ‘உல­கப் பொது மறை’  என சான்­றோர் விளிப்­பது சாலப் பொருத்­தமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உல­கமே வியக்­கும் கலைத்­தி­றம் கொண்ட தமி­ழர்­கள், கல்­லி­லும், மண்­ணி­லும், மரத்­தி­லும், சுதை­யி­லும், சுவ­ரி­லும், பொன்­னி­லும் செய்த அருங்­க­லை­கள் எல்­லாம் படிப்­ப­டி­யாக வளர்ந்து உன்­னத நிலை­யைத் தொட்டு வெற்றி பெற்­ற­தோடு, பிற நாட்­டுச் சிற்­பி­க­ளின் கலைத்­தி­றத்­தை­யும் அந்­நா­ளி­லேயே அறிந்து அவற்­றிற்­கும் ஊக்­க­ம­ளித்­த­னர். மக­தம், அவந்தி, மராட்­டி­யம் ஆகிய பல நாட்­டுக் கலை­ஞர்­க­ளின் கைத்­தி­றம் தமி­ழ­கத்­தி­லும் மிளிர்ந்­ததே இதற்­குச் சான்று பகர்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிற்­பங்­க­ளில் சிந்­தை­யைப் பறி­கொ­டுத்து மகி­ழும் செந்­த­மிழ்ப் பெரு­மி­தம் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞ­ரி­டம் எப்­போ­தும் ஒளிர்ந்­தது. பார் போற்­றும் சிற்­பக் கலை­ஞ­ரான கண­பதி ஸ்தபதி, கலை­ஞ­ரின் வெவ்­வேறு தமிழ் உணர்வு சார்ந்த அடை­யா­ளங்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பூம்­பு­கார் மன்­றங்­கள் - மாடங்­கள் - மண்­ட­பங்­கள் வாயி­லா­கக் கண்­ணகி கோட்­டம், சென்­னை­யில் உள்ள வள்­ளு­வர் கோட்­டம், குமரி முனை­யில் கடல் அலை­க­ளுக்கு இடையே நிற்­கிற ஒற்றை விர­லைப் போல நிமிர்ந்து இருக்­கும் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலைக்கு வடி­வம் அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருக்­கு­ற­ளில் உள்ள 133 அதி­கா­ரங்­க­ளைக் குறிக்­கும் வகை­யில் 133 அடி உய­ரத்­தில் கும­ரி­மு­னை­யில் சிலை அமைப்­ப­தாக முடி­வெ­டுக்­கப்­பட்டு, அறத்­துப்­பா­லில் உள்ள 38 அதி­கா­ரங்­கள் மனத்­தில் கொண்டு 38 அடி உய­ரத்­தில் சிலை­யின் பீடம் அமைக்­கப்­பட்டு, அது அறப்­பீ­டம் என்று அழைக்­கப்­பட்­டது, மீதி 95 அடி சிலை­யின் உய­ரம். சிலை­யின் முகம் மட்­டும் 20 அடி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு மாடிக் கட்­டட உய­ர­மும் 150 டன் எடை­யும் கொண்­டது இச்­சி­லை­யின் தலைப்­ப­கு­தி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிலை­யின் கட்­டு­மா­னத்­திற்கு மொத்­தம் 3,681 துண்­டுக் கற்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அவை­க­ளின் மொத்த எடை 7 ஆயி­ரம் டன் ஆகும். ஒவ்­வொன்­றும் 3 முதல் 8 டன் எடை கொண்ட கற்­க­ளைக் கடல் வழி­யா­கப் பட­கின் மூலம் சிலை அமை­ய­வி­ருக்­கும் பாறைக்கு எடுத்­துச் சென்று, இரவு பகல் பாராது 500 சிற்­பி­க­ளைக் கொண்­டு­இ­டை­வி­டாது 372 நாள்­க­ளில் ­ஒன்­ப­து ­கோ­டி ­செ­ல­வில்­ கண­ப­திஸ்­த­பதி அவர்­கள் இந்த கற்­காப்­பிய சிற்­பத்­தைக் கட்டி முடித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சிலையை வடி­வ­மைக்­கும் பணி நடை­பெ­றும்­போது, “சிலை நிற்­குமோ நிற்­காதோ” என்று சந்­தே­க­மா­கக் கேட்­ப­வ­ரி­டம் எல்­லாம் கண­ப­திஸ்­த­பதி அவர்­கள், “அலை­யும் மலை­யும் இருக்­கும் வரை சிலை அசை­யாது இருக்­கும், கவ­லைப்­ப­டா­தீர்­கள்” என்று கூறு­வ­துண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தஞ்­சை­யில் பெரு­வு­டை­யார் கோயி­லின் 216 அடி உய­ரம் கொண்ட விமா­னக் கட்­டு­மா­னப் பணி­யின் போது, அத­னைப் பார்­வை­யிட்ட பலர், ‘விமா­னம் விழுந்து விடுமோ?’ என்று அச்­சப்­பட்­ட­தா­கக் கூறு­வ­துண்டு. அப்­போது அதை நிர்­மா­ ணித்த குஞ்­ச­ர­மல்­லன் மாமன்­னன் இரா­ஜ­ரா­ஜப் பெருந்­தச்­சன் பெரு­மை­யாக, “விமா­னத்­தின் நிழல் கூட விழாது” என்று கூறி­னா­ராம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அத்­த­கைய பெருமை வாய்ந்த குஞ்­ச­ர­மல்­லன் இரா­ஜ­ரா­ஜப் பெருந்­தச்­சன் பரம்­ப­ரை­யில் வந்த திரு.கண­பதி ஸ்தப­தி­யும் அவ்­வாறு கூறி­ய­தில் வியப்­பே­தும் இல்­லையே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழ­கத்­தையே உலுக்­கிய ‘சுனாமி’ என்று அழைக்­கப்­ப­டும் ஆழிப்­பே­ர­லை­யின் போதும் எவ்­வி­தப் பாதிப்­பு­மின்றி, கம்­பீ­ர­மாக நிற்­கி­றார் திரு­வள்­ளு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“பூம்­பு­கார் எழில் மாடத்தை என் கருத்­திற்­கேற்ப அமைத்­துத் தந்­த­வ­ரும், பாஞ்­சா­லங்­கு­றிச்­சி­யில் இடிந்த கோட்­டையை எழுப்­பித் தரு­வ­தற்கு உட­னி­ருந்து உத­வி­ய­வ­ரும், வள்­ளு­வர் கோட்­டம் வைய­கம் புகழ்ந்­திட, உரு­வா­கிட, சிற்பி ஆச்­சார் அவர்­க­ளு­டன் இணைந்து, கையில் உளி எடுத்­த­வ­ரும், அண்ணா அறி­வா­ல­யம் முகப்­பி­னை­யும் அழ­குற அமைத்­துத் தந்­த­வ­ரும், சிற்­பச் சித்­த­ரு­மான கண­பதி ஸ்தப­தி­யார் அவர்­கள் அல்­லும் பக­லும் அய­ராது பாடு­பட்டு, நமது அய்­யன் வள்­ளு­வ­னுக்­குக் காலத்­தால் அழி­யாத நினை­வுச் சின்­னத்தை என் இத­யம் இறக்­கை­கள் பெற்­றுப் பறந்து மகிழ்­கிற அள­வுக்கு, என் இரத்த நாளங்­க­ளில் இன்ப அருவி பாய்ந்து பர­வு­கின்ற அள­வுக்கு, என் சுவா­சக் கோசம் ஆனந்­தப் பெரு­மூச்­சால் நிரம்­பிப் பிதுங்­கு­கின்ற அள­வுக்கு, வடித்­தெ­டுத்து நிலை­நாட்டி விட்­டார். வங்­க­மும், இந்­து­வும், அர­பி­யும் என முக்­கூ­டல் சங்­க­மிக்­கும் குமரி முனைப் பாறை முற்­றத்­தில் அவ­ருக்­கும், அவ­ரு­டன் சேர்ந்து, அற்­பு­தச் சிலை­யைப் பொறுப்­பு­டன் உரு­வாக்­கி­யுள்ள சிற்­பி­கள் ,அலு­வ­லர்­கள், பணி­யா­ளர்­கள், பொறி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் தமி­ழ­கத்­தின் பாராட்­டுக்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“இத­னால் இவன் முடிக்­கும் என்­றாய்ந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அதனை அவன்­கண் விடல்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">என்­னும் திருக்­கு­றளை நினை­வூட்டி, அதன்­படி என் ஆய்­வுக்­கேற்ப முடித்­த­மைக்­காக ஆயி­ரம், பதி­னா­யி­ரம், லட்­சோ­ப­லட்­சம் நன்றி மலர்­க­ளைத் தூவு­கின்­றேன்” என்று வைர வரி­க­ளால் முத்­த­மி­ழ­றி­ஞர் ­கலை­ஞர் ­அவர்­கள்­ எழு­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">133 அடி உய­ரங் கொண்ட திரு­வள்­ளு­வர் சிலை­போல கருத்­தா­ழ­முள்ள – முற்­றி­லும் கல்­லால் ஆன கட்­டு­மான நுட்­பங்­கள்செறிந்த சிலை­யாக – எங்­க­ணும் எவ­ரும் கண்­ட­தில்லை, கேட்­ட­து­மில்லை, நினைத்­துப் பார்த்­த­து­மில்லை.  வெற்றி கண்ட இப்­பணி, சிற்­பக் கலை மர­புக்கு மேலு­மொரு அணி­யா­கத் திக­ழும் என்­ப­தில் ஐய­மில்லை. செவ்­வனே முடி­வுற்ற திரு­வள்­ளு­வர் சிலைப் பணி 01.01.2000 ஆம் ஆண்டு கலை­ஞர் அவர்­க­ளால் நாட்­டுக்­கும் - தமி­ழி­னத்­துக்­கும் வழங்­கப்­பட்­டது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் குமரி முனை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை நிறு­வப்­பட்டு, 25 ஆண்­டு­கள் நிறைவு பெற்­றுள்­ள­தைத் தொடர்ந்து 30.12.2024 முதல் 1.1.2025 வரை மூன்று நாள்­கள் தமிழ்­நாடு அர­சின் சார்­பில் வெள்ளி விழா நிகழ்ச்­சியை வெகு சிறப்­பாக நடத்­து­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாபெ­ரும் வர­லாற்­றுப் பொன்­னேடு மலர்ந்த புனித நன்­னாள் 25 ஆண்­டு­க­ளுக்­குப்­பின்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் இன்று மீண்­டும் எழுச்­சிக் கோலம் கொண்டு வெள்ளி விழா என்­னும் முத்­தி­ரை­யோடு கன்­னி­யா­கு­மரி மட்­டும் அல்ல: தமிழ்­நாடு முழு­வ­துமே விழா­வின் வீச்­சி­னைப் பரப்பி நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பள்ளி மாண­வர்­க­ளுக்­குக் கட்­டு­ரைப் போட்­டி­கள். கல்­லூரி மாண­வர்­க­ளி­டையே சோஷி­யல் மீடி­யா­வில் ஷார்ட்ஸ் – ரீல்ஸ் – ஏ.ஐ மற்­றும் டிஜிட்­டல் தொழில் நுட்­பங்­கள் வாயி­லாக திருக்­கு­ற­ளின் சிறப்பை உணர்த்­தும் ஓவி­யப் போட்­டி­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. அய்­யன் திரு­வள்­ளு­வ­ரின் திரு­வு­ரு­வச்­சிலை அருகே சீரொ­ளிக் காட்சி (3D Laser) ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்­டில் இருக்­கின்ற தமிழ் இணை­யக் கழக மையங்­கள், தமிழ்ச் சங்­கங்­கள், பிற மாநி­லங்­க­ளில் இருக்­கும் தமிழ்ச் சங்­கங்­கள், புது தில்­லி­யில் இருக்­கும் தமிழ்­நாடு இல்­லம் ஆகி­ய­வற்­றில் யூடி­யூப் மூலம் இந்த நிகழ்ச்­சி­கள் அனைத்­தும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றது. வெளி­நாடு வாழ் தமி­ழர்­க­ளுக்கு தமிழ் இணை­யக் கழக மையங்­கள் மூல­மா­கத் திருக்­கு­ற­ளின் பெரு­மை­கள் குறித்த போட்­டி­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. தமிழ்­நாட்­டில் அனைத்து மாவட்ட நூல­கங்­க­ளி­ லும், இன்­றைய விழா நாளில் திரு­வள்­ளு­வர் புகைப்­ப­டம் வைக்­கப்­பட்டு திருக் ­கு­ற­ளின் பெரு­மை­களை உணர்த்­து­கின்ற நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­பட்­டுத் திரு­வள்­ளு­வர் சிலைக்கு மாலை அணி­விக்­கப்­ப­டு­கி­றது. திருக்­கு­றள் விளக்க உரை­கள் மற்­றும் திருக்­கு­றள் தொடர்­பான புகைப்­ப­டங்­கள் பொது­மக்­கள் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன. டிசம்­பர் 25 முதல் 30 வரை மாவட்ட அள­வில் திருக்­கு­றள் தொடர்­பான கருத்­த­ரங்­கம், பேச்­ச­ரங்­கம் முத­லி­யவை நடத்­தப்­பட்டு பரி­சு­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">37 கோடி ரூபாய் செல­வில் அய்­யன் திரு­வள்­ளு ­வர் சிலை­யை­யும் விவே­கா­னந்­தர் பாறை­யை­யும் இணைக்­கும் கண்­ணாடி இழை பாலம் கட்­டப்­பட்டு அதனை   முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் திறந்து வைத்தார்.  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் திருக்­கு­றள் நெறி­ப­ரப்­பும் 25 தகை­மை­யா­ளர்­க­ளுக்­குப் பரி­சு­கள் வழங்­கு­வ­தும் கலை­மா­மணி சொல்­வேந்­தர்  சுகி.சிவம் அவர்­கள் தலை­மை­யில் “திருக்­கு­ற­ளால் அதிக நன்மை தனி­ம­னி­த­ருக்கே சமு­தா­யத்­திற்கே” எனும் தலைப்­பில் சிறப்­புப் பட்­டி­மன்­ற­மும்,   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள் அய்­யன் திரு­வள்­ளு­வர் தோர­ண­வா­யி­லுக்கு அடிக்­கல் நாட்டி; திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி விழாச் சிறப்பு மலர் வெளி­யி­டு­வ­தோடு திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்­றி­பெற்ற மாணவ-, மாண­வி­யர்க்­குப் பரி­சு­கள் வழங்கினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சம­கா­லத்­தில் வள்­ளு­வர், திருக்­கு­ற­ளும் சங்க இலக்­கி­ய­மும், வள்­ளு­வம் போற்­றும் சமய நல்­லி­ணக்­கம், திருக்­கு­றள் போற்­றும் மக­ளிர் மாண்பு, வள்­ளு­வம் காட்­டும் அறம், திருக்­கு­ற­ளில் இசை நுணுக்­கம் என்­கிற தலைப்­பு­க­ளில் கருத்­த­ரங்­கும் நடை­பெ­ற­வள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திருக்­கு­றள் தொடர்­பான மிகப்­பெ­ரிய நூல் கண்­காட்சி, உல­கெங்­கும் உள்ள திரு­வள்­ளு­வர் சிலை­கள் தொடர்­பான  துலங்­கல் குறி­யு­டன் வரை­ப­டக் காட்சி, நூற்­றாண்­டு­கள் பல கடந்த திருக்­கு­றள் தொடர்­பான ஓலைச்­சு­வ­டி­கள் தனி அரங்­கி­னில் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வது வெள்ளி விழா­விற்கு மாட்­சி­யாக திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அமெ­ரிக்­கா­வின் சுதந்­தி­ர­தேவி சிலை­யைக் கண்டு வியந்த காலம் போய், கன்­னி­யா­கு­ம­ரி­யில் வெள்­ளி­
வி­ழாக் காணும் 133 அடி உயர செந்­நாப்­போ­த­ரின் சிலை­யைக் கண்டு அனை­வ­ரும் இறும்­பூ­த­டை­யும் 
தரு­ண­மிது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழ­கத்­துக்கு நிலை­யான நெடும் புகழ் காட்­டும் வர­லாறு நின்ற சிலை­யா­க­வும்வென்ற கலை­யா­க­வும் என்­றும் விளங்கி வரு­வது தமி­ழி­னத்­தின் நற்­பே­றா­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>