<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,492,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 16:59:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012025-MDU-11" position.sequence="11" ex-ref="01012025-MDU-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="30">சாத்­தி­ய­மற்ற ‘ஒரே நாடு – ஒரே தேர்­தல்!’</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தள­ப­தி­யின் கருத்­திற்கு வலிமை சேர்ப்­போம்! பா.ஜ.க.வின் பித்­த­லாட்­டத்தை முறி­ய­டிப்­போம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="1CM_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ragupathiminis_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒ ரே நாடு ஒரே தேர்­தல் திட்ட வடி­விற்கு ஒன்றிய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் வழங்கி பாரா­ளு­மன்­றத்­தில் ஒரே நாடு ஒரே தேர்­தல் மசோதா குளிர்­கால கூட்­டத் தொட­ரில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அறி­முக நிலை­யி­லேயே மசோ­தா­வுக்கு எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தன.இதை அடுத்து மசோ­தாவை தாக்­கல் செய்ய பெரும்­பான்மை ஆத­ரவு இருக்­கி­றதா என்­பதை உறுதி செய்ய ஓட்­டெ­டுப்பு நடத்­தப்­பட்­டது. அதன் பிறகு விரி­வான விவா­தத்­திற்­காக பார்­லி­மென்ட் கூட்­டுக்­குழு பரி­சீ­ல­னைக்கு தற்­ச­ம­யம் அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. நாடு முழு­வ­தும் ஒரே நேரத்­தில் நாடா­ளு­மன்­றம், சட்­ட­மன்­றம், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு தேர்­தலை நடத்­து­வதே ஒரே நாடு ஒரே தேர்­தல் திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒன்­றிய அரசு கடந்த ஆண்டு முன்­னாள் ஜனா­தி­பதி ராம்­நாத் கோவிந்த் தலை­மை­யில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்­தது அந்­தக் குழு பரிந்­து­ரைப்­ப­டி­தான் நாடா­ளு­மன்­றத்­தில் ஒரே நாடு ஒரே தேர்­தல் மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டது. இந்த திட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் நிர்­வாக ரீதி­யா­க­வும் பலன் கிடைக்­கும் என பாஜக கூறு­கி­றது ஆனால் அதை அவர்­கள் விளக்­க­மாக சொல்ல முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மசோ­தா­வே­பல குழப்­பங்­க­ளுக்கு வழி­வ­குக்­கும் ஜன­நா­ய­கத்­திற்கு ஆபத்து திமுக தலை­வ­ரும் தமி­ழக முதல்­வ­ரு­மான தள­பதி ஸ்டாலின் உட்­பட ஒட்­டு­மொத்த எதிர்க்­கட்­சி­க­ளும் இந்த மசோ­தாவை எதிர்க்­கின்­றன. இந்த மசோ­தாவை தாக்­கல் செய்­வ­தற்­காக நம்ப முடி­யாத கட்­டுக்­க­தை­கள் எல்­லாம் பாஜக அவிழ்த்து விடு­கி­றது. அதில் ஒரு கதை ஒரே சம­யத்­தில் மாநி­லங்­க­ளுக்­கும் ஒன்­றிய அர­சுக்­கும் தேர்­தல் நடத்­தி­னால் செல­வு­கள் குறை­யும். என்­பது உதா­ர­ண­மாக 2014 இல் ஒன்­றிய தேர்­த­லுக்கு ஒன்­றிய அரசு செலவு செய்த தொகை 4000 கோடி மட்­டுமே. இப்­போது அந்த செலவு பத்­தா­யி­ரம் கோடி­யாக உயர்ந்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இந்­திய  அர­சின் வரவு செலவு என்­பது ரூபாய் 45 லட்­சம் கோடி இதில் 5 ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை நடக்­கும் தேர்­த­லுக்கு ரூபாய் 10000 கோடி என்று கணக்­கிட்­டுப் பார்த்­தால் கூட செலவு சத­வீ­தம் 0.04% மட்­டுமே. இவர்­கள் அடுத்து சொல்­லும் கட்­டுக்­கதை வரு­டம் முழு­வ­தும் தேர்­தல் நடந்து கொண்டே இருந்­தால் தேர்­தல் பரப்­பு­ரை­யில் தொடர்ந்து ஈடு­பட்­டுக் கொண்­டி­ருப்­பார்­கள் இத­னால் ஆட்­சி­யில் கவ­னம் செலுத்த முடி­யாது என்­பது. இது அர­சி­யல் கட்­சி­க­ளின் தனிப்­பட்ட பிரச்­சனை எந்த அர­சி­யல் கட்­சி­க­ளும் ஒன்­றிய அர­சி­டம் இப்­படி ஒரு புகாரே சொல்­ல­வில்லை இவர்­களே இவர்­கள் வச­திக்கு இன்­னொரு பித்­த­லாட்ட கதை அவிழ்த்து விடு­கி­றார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாஜக எப்­போ­துமே அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்தை படித்­துப் பார்த்­ததே கிடை­யாது என்­ப­தற்கு இந்த மசோ­தாவே ஒரு சாட்சி .நமது தேர்­தல் முறையை வடி­வ­மைக்­கும் போதே நாட்­டின் நிர்­வா­கத்தை ஆட்சி செய்­யும் நேர­டி­யாக தேர்ந்­தெ­டுக்­கும் அமெ­ரிக்க முறையை பின்­பற்­றா­மல் மக்­கள் பிர­தி­நி­தி­கள் சேர்ந்து ஆங்­கி­லேய முறையை நமது சட்ட வடி­வ­மைப்­பா­ளர்­கள் தேர்ந்­தெ­டுத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மூன்று அமைப்­பு­க­ளும் தத்­த­மது எல்­லைக்­குள் சட்­டங்­களை விதி­மு­றை­களை உரு­வாக்­கிக் கொள்­ளும் இறை­யாண்மை பெற்­றவை இதை நான் சொல்­ல­வில்லை. அர­சி­யல் சட்­டம் சொல்­கி­றது சம்­பந்­த­மான பல வழக்­கு­க­ளில் உச்ச நீதி­மன்­றம் பல தீர்ப்­பு­கள் மூலம் இதை உறுதி செய்­தி­ருக்­கின்­றன. ஒவ்­வொரு அமைப்­பும் தங்­கள் ஆயுள் முடி­யும் போது அதற்­கான அர­சி­யல் சட்ட அமைப்­பான ஒன்­றிய மாநில தேர்­தல் ஆணை­யம் மூலம் எப்­போது தேவையோ அப்­போது தேர்­த­லில் நடத்­திக் கொள்ள வேண்­டி­ய­து­தானே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தானே கடந்த 60, 70 ஆண்­டு­க­ளாக நடந்து வரு­கி­றது. நாட்­டின் வளர்ச்சி செயல்­தி­றன் விரை­வாக நடக்க வேண்­டும் என்­ப­தில் நமக்கு மாற்­றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த வளர்ச்சி ஜன­நா­யக வழி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள் மூலம் இருக்க வேண்­டும் என்­ப­தைத்­தான் திமுக தலை­வர் வலி­யு­றுத்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரே நாடு ஒரே தேர்­தலை எதிர்ப்­ப­தற்­கான அவ­ரது ஆணித்­த­ர­மான வாதம் கூட இது­தான். இந்­தியா நிர்­வா­கம் என்­பது அதி­கார பர­வ­லாக்­கப்­பட வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் தேசம், மாநி­லம், உள்­ளாட்சி அமைப்­பு­கள் என மூன்று அடுக்­கு­க­ளாக பிரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 1993 ஆம் ஆண்டு ஏப்­ரல் 24ஆம்­தேதி,73 வது அர­சி­யல் சட்­டம் மாற்­றம் மூலம் உள்­ளாட்சி அமைப்பு அர­ச­மைப்பு சட்­டத்­தில் இணைக்­கப்­பட்டு இந்­தியா ஒரு மூன்று அடுக்கு நிர்­வாக அமைப்­பாக மாறி­யது. இந்த விவ­ரம் எல்­லாம் தெரி­யா­மல் ஆட்சி அதி­கா­ரம் என்ற ஒரே நோக்­கில் கொண்­டு­வ­ரப்­பட்­டது தான் ஒரே நாடு ஒரே தேர்­தல் சட்­டம் மசோதா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரே நாடு ஒரே தேர்­தல் என்ற ஒன்­றிய அர­சின் முன்­மொ­ழிவு நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மற்­ற­தும் கூட்­டாட்­சி­யி­ ய­லைச்­சி­தைப்­ப­து­மா­கும் எதார்த்­தத்­துக்கு முர­ணா­னது. அந்­தந்த மாநி­லத்­திற்­கு­ரிய பிரச்­ச­னை­கள் ஆட்சி முன்­னு­ரி­மை­கள் போன்ற பல கார­ணங்­க­ளால் ஒரே நாடு ஒரே தேர்­தல் நடை­மு­றைக்கு சரி படாது. இது­போன்ற திசை திருப்­பும் நாட­கங்­களை கைவிட்டு விட்டு வேலை­யில்லா திண்­டாட்­டம்  விலை­வாசி உயர்வு, மாநி­லங்­க­ளுக்கு வளங்­களை சம­மாக பகிர்ந்து அளித்­தல் போன்ற ஆக்­கப்­பூர்­வ­மான விஷ­யங்­க­ளில் ஒன்­றிய அரசு கவ­னம் செலுத்த வேண்­டும் என்று அறி­வுரை வழங்கி இருக்­கி­றார் நமது முத­ல­மைச்­சர் அவர்­கள். ஒரே நாடு ஒரே தேர்­தல் பற்றி ஒன்­றிய தேர்­தல் ஆணை­யத்­தின் முன்­னாள் தலை­வர் எஸ் ஒய் குரேஷி சொன்ன கருத்து கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2014 ஆம் ஆண்டு மோடி பேசும்­போது இந்த திட்­டத்­திற்கு ஒரு­மித்த ஆத­ரவு கிடைக்­கும் என்­றார். ஆனால் இன்று மிகப்­பெ­ரிய விவா­தத்தை இந்த மசோதா கிளப்பி ஒட்­டு­மொத்த எதிர்க்­கட்­சி­கள் எதிர்ப்­ப­தால் தார்­மிக ரீதி­யாக இதனை கைவிட வேண்­டும். ஒரே தேர்­தல் என்று கூறி­விட்டு பஞ்­சா­யத்து தேர்­தல்­களை 100 நாள் கழித்து நடத்­து­வ­தும் ஆட்­சி­கள் கவிழ்ந்­தால்­இ­டை­யில் தேர்­தல் நடத்­தப்­ப­டும் சூழல் இருப்­ப­தால் இது எப்­படி நடை­முறை சாத்­தி­ய­மா­கும் என்று கேட்­கி­றார் பல்­வேறு மதங்­கள் இனங்­கள் மொழி­கள் கலாச்­சா­ரங்­க­ளால் சூழப்­பட்ட இந்­தி­யாவை ஒரே நாடு ஒரே தேர்­தல் மூலம் நாட்­டின் ஜன­நா­ய­கத்தை குழி தோண்டி புதைக்க ஒன்­றிய பாஜக அரசு முயற்சி செய்­கி­றது இதை ஒரு­போ­தும் மக்­கள் அனு­ம­திக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வருங்­கா­லங்­க­ளில் பார­திய ஜனதா நிறைய தோல்­வி­களை சந்­திக்­கும் அதற்­காக மக்­க­ளின் கவ­னத்தை திசை திருப்­பவே ஒரே நாடு ஒரே தேர்­தல் முறையை செயல்­ப­டுத்த முயற்­சிக்­கி­றது. இது பாஜ­க­வின் கூட்­டணி கட்­சி­களே ஆத­ரிக்­குமா என்­பது சந்­தே­கம் தான். இதற்கு அர­சி­யல் சட்­டத்­தில் திருத்­தம் கொண்டு வர வேண்­டும் அப்­படி திருத்­தம் கொண்டு வந்­தால் மக்­க­ள­வை­யில் அதற்கு ஒப்­பு­தல் கிடைக்­குமா என்­பது சந்­தே­கம் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே மீறி­னா­லும் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொட­ரும் பட்­சத்­தில் ஒரே நாடு ஒரே தேர்­தல் மசோ­தாவை உச்­ச­நீ­தி­மன்ற நிச்­ச­யம் நிரா­க­ரிக்­கும். இப்­படி எந்த சூழ்­நி­லை­யி­லும் இதை நிறை­வேற்ற முடி­யாது என தெரிந்து கொண்டு பார­திய ஜனதா இந்த மசோ­தாவை மக்­க­ள­வை­யில் கொண்டு வந்­தது ஒரு ஏமாற்று வேலை பித்­த­லாட்­டம் என்­பது தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான் திமுக உள்­பட அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும் இதை கடு­மை­யாக எதிர்க்­கின்­றன ஒரு வாதத்­திற்கு இதை பார­திய ஜனதா சரி என்று சொன்­னா­லும் ஒரே நேரத்­தில் இந்­தியா முழு­வ­தும் 28 மாநி­லங்­கள் 8 யூனி­யன் பிர­தே­சங்­கள் இவற்­றிற்கு தேர்­தல் நடந்­தால் பார­திய ஜனதா என்ன மாதிரி வாக்­கு­று­தி­களை தரும் அதற்­குத் தெரிந்­த­தெல்­லாம் ஜெய் ஸ்ரீ ராம் அல்­லது ஜெய் ஜெகன்­நாத் அவ்­வ­ள­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் தி.மு.க. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்கான தேர்­தல் அறிக்­கை­யில் இந்­தி­யா­வின் இறை­யாண்­மைக்கு உத்­த­ர­வா­தம், மாநில உரிமை, மொழி சுதந்­தி­ரம் என்று மக்­கள் பிரச்­சி­னை­களை குறிப்­பி­டும் ‘‘மக்­கள் பிரச்­சனையை பேசும்’’ சட்­ட­மன்­றத் தேர்­த­லின் போது மாநி­லத்­துக்­கான என்­னென்ன திட்­டங்­கள் மக்­களை அது சென்­ற­டை­வ­தற்­கான வழி இவற்றை திட்­ட­மிட்டு தேர்­தல் அறிக்­கை­யா­க­ வெ­ளி­யி­டும்  பிரச்­சா­ர­மும் செய்­யும் ஏனென்­றால் தி.மு.க. மக்­க­ளுக்கு என்ன செய்­ய­லாம் என்று சிந்­திக்க கூடிய சமூக நீதி அடிப்­ப­டை­யான ஒரு கட்சி. பா,ஜ,­க,­வுக்கு இதில் எல்­லாம் எந்த அக்­க­றையோ கரி­ச­னமோ இல்லை. அதற்­கா­கத்­தான் எடுத்­தேன் கவிழ்த்­தேன் என்று ஆட்சி செய்­வ­தற்­காக கொண்டு வரப்­பட்­டது தான் ஒரே நாடு ஒரே தேர்­தல் மசோதா நாடா­ளு­மன்­றத்­திற்­கும் சட்­ட­ச­பைக்­கும் உள்­ளாட்­சிக்­கும் தனித்­த­னி­யாக தேர்­தல் நடக்­கும்­போது தான் மக்­க­ளுக்­கும் ஒரு புரி­தல் இருக்­கும். அர­சி­யல் கட்­சி­க­ளும் தங்­கள் செய்ய இருப்­ப­தை­ பட்­டி­யல் போட்டு பிரச்­சா­ரம் செய்­யும். இது­வரை இப்­ப­டித்­தான் நடந்து வரு­கின்­றது. தேர்­தல் செலவு தேர்­த­லுக்­கான நேரம் விரை­யம் என்ற பார்­வையே பா.ஜ.­க.­வின் பித்­த­லாட்­டத்­திற்­கான திட்­டம் என்­பதை சொல்­லா­மல் சொல்­கி­றது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1952–ல் இந்­திய குடி­ய­ர­சாக அறி­விக்­கப்­பட்ட போது முத­லா­வது மக்­க­ளவை மற்­றும் சட்டமன்றத் தேர்­த­லுக்­கான தேர்­தல் நாடு முழு­வ­தும் ஒரே நேரத்­தில் நடந்­தது.  இது தான் ஒரே நாடு ஒரே தேர்­தல். ஆனால் அடுத்த பத்­தாண்­டு­க­ளுக்­குள்­ளேயே பல்­வேறு மாநி­லங்­க­ளுக்­கும் ஒன்­றி­யத்­திற்­கும் வெவ்­வெறு ஆண்­டு­கள் தேர்­தல் நடத்­தும் சூழல் வந்து விட்­ட­தால் ஒரே நாடு ஒரே தேர்­தல் முறை பல­னிக்­கா­மல் போய்­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே சூழல் தான் தற்­போ­தும் ஏற்­ப­டும்.  எனவே, எந்த மாநி­ல­மும் மத்தியில் ஒன்­றி­ய­மும் தங்­கள் ஆட்­சி­யின் ஆயுள் காலத்தை குறைத்­துக்­கொள்ள சம்­ம­திக்க மாட்­டார்­கள்.   எனவே, ஒரே நாடு ஒரே தேர்­தல் என்­பது இந்­திய திரு­நாட்டை பொறுத்­த­வ­ரைக்­கும் சாத்­தி­ய­மில்­லாத 
ஒன்­றா­கும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>