<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,956,921" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 14:56:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="01012025-TRY-10" position.sequence="10" ex-ref="01012025-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று இருந்­தது. ஏன் என்­றால், இப்­போது இருக்­கும்  முத­ல­மைச்­சர் எதிர்­பார்ப்­பார். நான் இரண்டு பேரி­ட­மும் பணி­யாற்றி இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இந்த சிறப்­புக்­கெல்­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சொந்­தக்­கா­ரர் முதல்­வர்­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு பேரி­டம் பணி­யாற்றி இருக்­கி­றேன் என்­ப­தை­விட, ஒரு தொண்­டு­ணர்­வோடு பணி­யாற்றி இருக்­கி­றேன். தொடர் நட­வ­டிக்கை என்று சொல்­வார்­கள் பாருங்­கள். அது கலை­ஞ­ரை­விட, இவ­ரி­டம் வேலை பார்ப்­பது மிக­வும் கடி­னம். அந்த தொடர் நட­வ­டிக்­கை­யில் அவர் உறு­தி­யாக இருப்­பார். ஒரு பணியை சொல்­லி­விட்­டார் என்­றால், அந்த பணி முடி­யும் வரை ஃபாலோ செய்து கொண்டே இருப்­பார். அதை ஒரு இலக்­காக வைத்­தி­ருக்­கி­றார்  என்­று­கூட சொல்­ல­லாம். அத­னால், அந்த உணர்வு எனக்கு இருப்­ப­த­னால் அது சிறப்­பாக அமைந்­தது என்று சொல்­ல­லாம். இந்த சிறப்­புக்­கெல்­லாம்அவர்­தான் அதி­க­மான சொந்­தக்­கா­ரர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் இன்று சென்­னை­யில் இருக்­க­லா­மே­யொ­ழிய, அங்கு எல்­லாமே அவர்­தான். சாதா­ர­ண­மாக நடந்து செல்­லும் டைல்­சி­லி­ருந்து அனைத்­தும் அவ­ரு­டைய செலக்­ச­னா­கத்­தான் இருக்­கும். நான் எப்­போ­துமே அப்­படி வைத்­துக் கொள்­வேன். எப்­போ­துமே ஒரு ஒப்­பு­தல் வாங்­கிக் கொள்­வேன். சாதா­ரண விஷ­ய­மாக  நான் விட­மாட்­டேன். சின்ன சின்ன விஷ­ய­மாக இருந்­தா­லும் அவ­ரி­டம் ஒப்­பு­தல் பெறு­வேன். அவ­ரு­டைய ஒப்­பு­தல் இல்­லா­மல் எது­வும் செய்ய மாட்­டேன். அது தேவை இல்லை என்று நினைப்­பேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிரா­மத்­தில் சாதா­ர­ண­மா­கச் சொல்­வார்­கள். மரம் நன்­றாக இருந்­தால், அந்த நிழ­லில் நாம் நின்று கொள்­ள­லாம் என்று சொல்­வார்­கள். அது­போன்று,அவர் புக­ழு­டன் நன்­றாக இருக்­கி­றார் என்­றால், அந்த நிழ­லில் நாம் நின்று கொள்­ள­லாம். அப்­ப­டித்­தான் என்­னு­டைய சிந்­த­னை­கள் எப்­போ­தும் இருக்­கும். அந்த சிந்­த­னை­தான் எனது வெற்­றி­யாக அமை­கி­றது என்­று­கூட சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­ச­ரின்யோச­னை­யோடு
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">செய்­யப்­பட்­டதுதான்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிக­வும் அழ­காக சொன்­னீர்­கள். பொறுப்­பு­ணர்­வோடு இருந்­து­தான் அது அமைக்­கப்­பட்­டது. சின்ன வய­தி­லி­ருந்தே பெரி­யா­ரின் பேச்­சைக் கேட்டு இருக்­கி­றேன். அதன் பிறகு, கலை­ஞ­ரோடு இருந்­தேன். கலை­ஞர் பேசிக்­கொண்டே இருந்­தார். இத­னு­டைய அனைத்து தாக்­க­மும்­தான் பெரி­யாரை அங்கு அவ்­வாறு நிலை­நி­றுத்­தி­யது என்று. அந்த நினை­வ­கத்தை நாங்­கள் தொடர்ந்து பார்க்­கும்­போது நிறைய இடங்­க­ளில் கல்­வெட்­டு­கள் பதித்து வைத்­தி­ருந்­தீர்­கள். அவ­ரு­டைய பொன்­மொ­ழி­கள் அதி­கம் இருந்­தது. ஒரு திறந்­த­வெளி அரங்­கம் இருந்­தது. அதை­யெல்­லாம் ஏன்  செய்­தி­ருக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் பழ­மை­யும் விரும்­பு­வார். சம­கா­லத்து விரும்­பி­யா­க­வும் இருப்­பார். இந்த இளை­ஞர்­க­ளின் எண்­ணங்­கள் என்ன என்­ப­தை­யும் பார்ப்­பார். வருங்­கா­லம் என்ன என்­ப­தை­யும் சிந்­திக்க வேண்­டும் என்று நினைப்­பார். அவரை நீங்­கள் எங்கு வேண்­டு­மா­னா­லும்  பொருத்தி பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரு­டன் ஒரு கலந்­து­ரை­யா­டல் வரும்­போது என்ன சொன்­னார் என்­றால், 70 சென்ட் வைத்­தி­ருக்­கி­றீர்­கள். இரண்டு பக்­க­மும் வைத்­தி­ருக்­கி­றீர்­கள். இடைப்­பட்ட இடம் எல்­லாம் இருக்­கி­றது. அது நக­ரின் மையப் பகு­தி­யாக இருக்­கி­றது. அத­னால் சிறு­வர்­கள் எல்­லாம் வர வேண்­டும் என்­றால், சிறு­வர்­கள் விளை­யாட்­டுப் பூங்கா ஒன்று அமைக்­க­லாம் என்று சொன்­னார். இரண்­டா­வது, ஒரு திறந்­த­வெளி அரங்­கம் அமை­யுங்­கள். அங்கு நக­ராட்­சி­யாக இருப்­ப­த­னால், மாலை நேரங்­க­ளில் அங்­கி­ருப்­ப­வர்­கள் ஒரு நிகழ்ச்சி நடத்­து­வ­தற்­கு­கூட ஏது­வாக இருக்­கும் என்று ஒரு திறந்­த­வெளி அரங்­கம் அமை­யுங்­கள் என்று சொன்­னார். அத­னால்­தான், ஒரு பக்­கம் விளை­யாட்­டுப் பூங்கா இருக்­கும். இன்­னொரு பகு­தி­யில், இன்­றைக்கு இருக்­கும் நீர் டெக்­னா­ல­ஜியை பயன்­ப­டுத்தி ரவுண்டு ஷேப்­பில் சென்­ட­ரில் ஒரு குடை­போன்று போடப்­பட்­டி­ருக்­கும். அந்த குடை போன்ற பகு­தி­யில் ஒரு நிகழ்ச்சி நடத்­து­கி­றார்­கள் என்று சொன்­னால், சுற்­றி­லும் உட்­கார்ந்து பார்ப்­ப­தற்­கா­கத்­தான் அந்த அரங்­கம் அமைத்­தி­ருக்­கி­ றோம். இது­வும் முத­ல­மைச்­ச­ரின் யோச­னை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கேரள முதல்­வ­ரின் எளிமை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறை­யப் பணி­கள் நிமித்­த­மாக நீங்­கள் கேரள முத­ல­மைச்­சரை அடிக்­கடி சந்­திக்­கி­றீர்­கள். வய­நாடு துய­ரம் என்­றா­லும் அங்­கு­தான் செல்­கி­றீர்­கள். வைக்­கத்­திற்­கா­க­வும் நீங்­கள் அங்கு சென்­றீர்­கள். அவ­ரு­டைய மன உணர்­வு­கள் தலை­வர் மீது எப்­படி இருக்­கி­றது? அவ­ரு­டைய தனிப்­பட்ட உணர்­வு­கள் எல்­லாம் எப்­படி இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கேரளா முத­ல­மைச்­சர் பொது­வு­ட­மைச் சித்­தாந்த அடிப்­ப­டை­யில் அர­சி­யல் வாழ்க்­கையை பய­ணித்­துக் கொண்­டி­ருப்­ப­வர். எளி­மையை சொல்ல வேண்­டிய அவ­சி­யமே இல்லை. பொது­வு­ட­மைச் சித்­தாந்­தம் உள்­ள­வர்­கள் எப்­போ­துமே எளி­மை­யாக இருப்­பார்­கள். அந்த எளி­மையை நான் அவ­ரி­டம் எப்­போ­தும் பார்ப்­பேன். எப்­போ­தும் எளி­மை­யா­க­தான் பேசு­வார். அவரை நான் இது­வரை மூன்று முறை சந்­தித்­தி­ருக்­கி­றேன். அவ்­வாறு செல்­லும்­போ­தேல்­லாம், முத­லில் முத­ல­மைச்­சர் எவ்­வாறு இருக்­கி­றார் என்­று­தான் கேட்­பார். உடன் பிறந்த சகோ­த­ரர் என்ற வாஞ்­சை­யோடு எப்­போ­தும் பேசு­வார். அதன் பிறகு, தமிழ்­நாடு அர­சாங்­கத்­தில் ஏதா­வது புதிய திட்­டங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம் என்­றால், அது பற்றி சொல்­வார். எப்­படி இந்­தத் திட்­டம் வெற்­றி­ய­டை­கி­றது என்று கேட்­பார். அவ்­வா­று­தான், நான் ஒவ்­வொரு முறை­யும் அவரை சந்­திக்­கும்­போது பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அழைப்­பி­தழ் வழங்­கும்­போ­து­கூட அந்த அழைப்­பி­தழை திருப்­பித் திருப்பி பார்த்­தார். ‘ஓ’ அப்­படி என்­றார். அந்த அழைப்­பி­தழை தேர்வு 
செய்­த­து­கூட நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ளவு பணி­கள் இருக்­கும்­போ­தும், அதில் அவர் தனிக் கவ­னம் செலுத்தி தேர்வு செய்­கி­றார் அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் யாருங்க... அவர் கலை­ஞர் வீட்டு பிள்­ளைங்க... கலை என்­றால் என்ன?   உணர்­வால் இருப்­ப­து­தான் கலை. கலை என்­பதே உணர்­வால் வரு­வ­து­தானே. அவர் உணர்­வால் இருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிறை­வாக ஒரு கேள்வி.   இந்த நினை­வ­கத்­தின் செய்­தி­க­ளி­லேயே நாங்­கள் இருக்­கி­றோம். அடுத்த நாள் ஒரு செய்தி, கன்­னி­யா­கு­ம­ரி­யில் இருக்­கி­றீர்­கள். கண்­ணா­டிப் பாலத்தை பார்­வை­யிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்று. எப்­போது நாங்­கள்முழு­மை­யான கண்­ணா­டிப் பாலத்தைபார்க்­க­லாம். எப்­படி இருக்­கி­றது  ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது முத­ல­மைச்­ச­ரின் திட்­ட­மி­டல் என்ன என்­றால், அய்­யன் வள்­ளு­வர் பொது­ம­றையை நமக்கு தந்­த­வர்.மதத்­திற்­கெல்­லாம் அப்­பாற்­பட்­ட­வர். 
அண்­ணன் கலை­ஞ­ருக்கு அவர் மீது மிகுந்த ஈடு­பாடு.  ஒரு­முறை திரு­வண்­ணா­ம­லைக்கு வந்­தி­ருந்­தார் கலை­ஞர். நிகழ்ச்சி முடிக்­கப் போவ­தற்கு முன்­னால் நான் கேட்­கி­றேன். என் கேம்­ப­சில் பள்ளி ஒன்று கட்­டி­யி­ருக்­கி­றேன். செல்­லும்­போது காரில் இருந்தே ஒரு ரிமோட்­டில் ஒரு பட்­டனை அழுத்­தி­னீர்­கள் என்­றால், அந்த கல்­லில் உங்­கள் பெய­ரைப் போட்டு திறந்து கொள்­வேன் என்று சொன்­னேன். உடனே அவ­ச­ர­மாக என்ன செய்­தேன் என்­றால், மறு­நாள் காலை­யில் ஒரு அரை பக்க விளம்­ப­ரம். நான் ஒரு வரி சேர்த்­தேன். 21-ஆம் நூற்­றாண்­டில் எங்­கள் அய்­யன் கலை­ஞர் அவர்­கள் திறந்து வைப்­பார் என்று விளம்­ப­ரம் போட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த விளம்­ப­ரத்­தைப் பார்த்­தார். “என்ன இது?” என்று கேட்­டார். இல்லை அண்ணா... அழைப்­பி­தழ் அடிக்க முடி­ய­வில்லை. நீங்­கள் இர­வில்­தான் ஒப்­பு­தல் கொடுத்­தீர்­கள். அத­னால் வேறு வழி தெரி­ய­வில்லை. அத­னால்­தான் பத்­தி­ரி­கை­யில் விளம்­ப­ரம் போட்­டேன். “அது போட்­டது இருக்­கட்­டும். ஏதோ 21-ஆம் நூற்­றாண்­டில் எங்­கள் அய்­யன் என்று போட்­டி­ருக்­கி­றீரே... உனக்கு அது மிகை­யாக தெரி­ய­வில்­லையா” என்று கேட்­டார். நான் சொன்­னேன், எனக்கு எது­வும்மிகை­யாக தெரி­ய­வில்லை “அண்ணா. நான் என்ன வள்­ளு­வ­ரையா பார்த்­தேன்.?” இப்­ப­டித்­தான் சொன்­னேன். அவர் ஒரு தந்­தைக்­கு­ரிய ஸ்தானத்­தில் இருப்­ப­வர். எப்­போ­துமே அவரை நான் அப்­ப­டி­தான் பார்ப்­பேன். கூடு­மா­ன­வரை நாங்­கள் அவ­ரோடு சுற்றிஇருக்­கி­றோமே தவிர, எங்­க­ளு­டைய உணர்­வெல்­லாம் அப்­ப­டித்­தான் இருக்­கும். அப்­ப­டித்­தான் எப்­போ­துமே அவ­ரு­டைய பாசத்­தைக் கொட்­டு­வார். எங்­க­ளுக்கு வள்­ளு­வ­ரைத் தெரி­யாது. எங்­க­ளுக்கு தெரிந்த 21-ஆம் நூற்­றாண்டு அய்­யன் நீங்­கள்­தான். இன்­றைக்கு வள்­ளு­வர் என்று ஒரு­வர் இருக்­கி­றார் என்று நாட்­டுக்கு தெரி­கி­றார் என்­றால், பெரும் பங்கு உங்­க­ளு­டைய பங்­கு­தான். நீங்­கள் வள்­ளு­வ­ருக்­காக என்ன குறை வைத்­தி­ருக்­கிறீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­ச­பை­யில் வள்­ளு­வர் படம் இருக்­கி­றது என்­றால், அதற்கு கார­ண­மா­க­வும் நீங்­கள்­தான் இருந்­தி­ருக்­கி­றீர்­கள். போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­ச­ராகஇருக்­கும்­போது, பேருந்­தில் வள்­ளு­வர் படம் வைக்க வேண்­டும். குறளை எழுத வேண்­டும் என்று சொன்­ன­வ­ரும் நீங்­கள்­தான். அதற்­குப் பிறகு, குற­ளுக்கு குற­ளோ­வி­யம் தீட்­டி­ய­வ­ரும் நீங்­கள்­தான். அதை­யும் விட்டு வைக்­க­வில்லை. எனக்­குத் தெரிந்து நூற்­றுக்கு மேற்­பட்­ட­வர்­கள் குற­ளுக்கு உரை எழுதி இருக்­கி­றார்­கள். நீங்­க­ளும் எழு­தி­னீர்­கள். நான் பல­வற்றை ஒப்­பிட்­டுப் பார்த்­தேன். உங்­க­ளு­டைய உரை என்­பது பாம­ரர்­க­ளுக்கு புரி­யும்­படி எளி­மை­யான ஒரு உரை. எதை­யும் இழுத்து வைத்து திணிக்­கும் பழக்­கம் இல்லை. இதை எல்­லாம் இல்­லா­மல் அடை­யா­ளப் படுத்த வேண்­டும் என்­ப­தற்­காக, சென்­னை­யில் நீங்­கள் பெரிய கோட்­டத்தை கண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">குறள் மீது பெரிய ஈடு­பாடு உண்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதோடு விட்­டீர்­களா, உல­கமே வியக்­கும் அள­விற்கு, இந்­தி­யா­விற்கே அடை­யா­ளம் என்று சொல்­ல­லாம். அய்­யன் வள்­ளு­வ­ருக்கு கன்­னி­யா­கு­ம­ரி­யில் சிலை எழுப்பி இருக்­கி­றீர்­கள் என்று நான் அவ­ரி­டமே நேர­டி­யாக பேசி­னேன். அந்த அய்­யன் கண்ட 133 அடி கொண்ட வள்­ளு­வர் சிலை 25 வரு­டம் ஆகி­விட்­டது. அந்த 25 வரு­டம் ஆகி­விட்­டது என்­றால், வள்­ளு­வர் மேல் எனக்கே ஒரு பாசம் உண்டு. எப்­போது சட்­ட­மன்­றத்தை எடுத்து பார்த்­தீர்­கள் என்­றா­லும், நான் சட்­ட­மன்­றத்­தில் பேசு­கி­றேன் என்­றால், குறள் சொல்­லா­மல் நான் சட்­ட­மன்­றத்­தில் பேசி­யி­ருக்க மாட்­டேன். எதிர்க் 
கட்­சி­யாக இருக்­கும்­போ­தும் குறள் சொல்­லு­வேன். ஆளுங்­கட்­சி­யாக இருக்­கும்­போ­தும் குறள் சொல்­வேன். அமைச்­ச­ராக இருந்­தா­லும், குறள் சொல்­வேன். எனக்கு குறள் மேல் ஒரு பெரிய ஈடு­பாடு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் என்ன செய்­தேன்? வள்­ளு­வ­ரின் குறள். அந்­தக் குற­ளின் கலை­ஞ­ரின் உரை. அந்த உரை போன்று தான் வாழ்ந்­தார். அந்த மூன்­றை­யும் ஒப்­பிட்டு, அதற்­கு­ரிய தர­வு­களை கண்­டு­பி­டித்து, கிட்­டத்­தட்ட 11 வரு­ட­மாக ஒருபுத்­த­கம் எழு­தி­னேன். அந்­தப் புத்­த­கத்­திற்கு ‘கலை­ஞர் எனும் தாய்’ என்றுபுத்­த­கம் வெளி­யிட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், நான் பொதுப் பணித் துறை அமைச்­ச­ராக இருக்­கி­றேன். எனக்கு அந்த நினை­வில்லை. ஒரு­நாள்  முத­ல­மைச்­சர் திடீ­ரென்று அழைத்து,அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை தலை­வர் வைத்து 25 ஆண்­டு­கள் ஆகி­விட்­டது. இது வெள்­ளி­விழா ஆண்டு. இந்த விழாவை சிறப்­பாக நாம் செய்ய வேண்­டும். இதற்­குப் பின்­னால், விவே­கா­னந்­தர் பாறை­யும் - வள்­ளு­வர் சிலை இருக்­கும் இரண்டு பாறை­க­ளும்இணைப்­ப­தற்கு ஒரு பாலம் அமைக்­க­லாம் என்­பது ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஒன்று. ஆனால், திட்­ட­மிட்­டார்­க­ளே­யொ­ழிய அந்­தப் பாலம் அறி­விப்­போடு நின்­று­விட்­டது. பிறகு, ஆட்சி வந்­த­வு­டன் இப்­படி ஒன்று இருக்­கி­றதே என்று, அந்த கோப்பு எடுத்து வர சொல்லி பார்த்­தால், அறி­வித்­த­தோடு அதை எப்­படி கட்­டு­வது என்று ஒரு யோசனை இல்­லா­ம­லேயே அவர்­கள் இருந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குப் பிறகு, ஏன் நாம் அதை கட்­டி­னால் என்ன? என்று ஒரு முடிவு செய்து, அதற்­கு­ரிய ஆர்­கி­டெக்­சர் எல்­லாம் வர வைத்து, ஒரு முறைக்கு பல­முறை டிஸ்­க­சன் சென்று, அதற்­குப் பிறகு, ஐ.ஐ.டி. ஃப்ரொஃப­சர் எல்­லாம் வரச் சொல்லி, பிறகு அந்­தத் திட்­ட ­மி­டலை முத­ல­மைச்­சர் இடம் கொண்டு காண்­பித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வள்ளுவர் சிலை – வெள்ளி 
விழா­வில் கண்­ணாடி பாலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது முத­ல­மைச்­சர் என்ன சொன்­னார் என்­றால், நன்­றா­கத்­தான் இருக்­கி­றது. நீங்­கள் கடல் மேல் நடந்து செல்­லப் போகி­றீர்­கள். ஏன், கடல் மேல் நடந்து செல்­லும் போது, மையப் பகு­தி­யில் நல்ல கடி­ன­மான உடை­யாத கண்­ணா­டி­களை போட்­டீர்­கள் என்­றால், கீழே நடந்து போகும்­போது அந்­தப் பாலத்­தில் அலை நன்­றா­கத் தெரி­யுமே என்று ஒரு யோசனை சொன்­னார். அதைத்­தான் இப்­போது நீங்­கள் கண்­ணாடி பாலம்... கண்­ணாடி பாலம் என்று சொல்­கி­றீர்­கள். அதை­யும் அவர்­தான் சொன்­னார். அந்த பாலத்­தை­யும் இப்­போது கட்­டும் பணி­க­ளில் நாங்­கள் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது வெள்­ளி­விழா ஆண்டை முன்­னிட்டு, அந்­தப் பாலம் திறந்­தால் அந்­தப் பாலத்­திற்கு ஒரு சிறப்பு சேருமே. இடை­யில் இடை­யில் மழை. மழை மட்­டும் என்று சொல்ல முடி­யாது. காற்­றின் வேக­மும் கட­லில்­தான் அதி­க­மாக இருக்­கும். காற்­றின் வேகம் அதி­க­மாக இருக்­கும்­போது அங்கு பணி­களை செய்­யவே முடி­யாது. அவ்­வப்­போது தொய்வு ஏற்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு வெள்ளி விழா ஆண்­டில் நினை­வ­கத்­திற்கு வரும்­போது, அந்­தப் பாலத்­தை­யும் திறந்து விட்­டால் என்ன... அந்த எண்­ணத்­தில்­தான் மறு­நாளே அங்கு சென்று, எந்த அள­விற்­குப் பாலம் இருக்­கி­றது என்று பார்த்து, அங்­கி­ருப்­ப­வர்­களை கொஞ்­சம் முடுக்கி விட்டு வந்­தி­ருக்­கி­றேன். இன்­னும்இடைப்­பட்ட நாட்­க­ளில் அந்­தப் பணி­களை முடித்­து­விட்டு,  முத­ல­மைச்­சர் திருக் க­ரத்­தால் திறந்­து­ வி­ட­லாம் என்று ஒரு நம்­பிக்­கை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு அமைச்­சர் எ.வ.வேலு குறிப்­பிட்­டார்.
</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="0" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="49">அமைச்­சர் எ.வ.வேலு ‘கலை­ஞர் செய்திகள்’ தொலைக்­காட்­சிக்கு அளித்த நேர்­கா­ண­ல்...</lang>
	</hl2>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">9ஆம் பக்கத் தொடர்ச்சி</lang>
</p>
</block>
    </body.content>
  </body>
</nitf>