<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,374,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 10:19:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-02" position.sequence="02" ex-ref="02022025-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#550100" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இன்­றைய செய்தி நாளைய வர­லாறு</lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup291080_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup285933_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Thalaivar1_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="murasoliword_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="LogofinalN_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பிர­த­ம­ராகமோடி வந்­தது முதல் சட்­ட­பூர்­வ­மான – ஜன­நா­யக அமைப்­பு­களை கைப்­பற்­று­வது தொடர்ந்து நடந்து வரு­கி­றது. அம­லாக்­கத்­துறை, சி.பி.ஐ. போன்ற புல­னாய்வு அமைப்­பு­களை தனது எதி­ரி­கள் மீது பாய்ச்­சும் பா.ஜ.க. அரசு, தேர்­தல் ஆணை­யம் போன்ற அமைப்­பு­க­ளைத் தன் வசப்­படுத்தும் காரி­யங்­க­ளைச் செய்து வரு­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யர்­க­ளின் நிய­ம­னங்­க­ளில் இருந்தே இத­னைத் தொடங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மிகச் சந்­தே­கத்­துக்கு உரிய வகை­யில் தேர்­தல் ஆணை­யர் அருண் கோயல் என்­ப­வ­ரது நிய­ம­னம் நடந்­தது. இவர் பஞ்­சாப் மாநில அதி­காரி ஆவார். இவர் 2022 ஆம் ஆண்டு நவம்­பர் 18 ஆம் நாள் திடீ­ரென அவ­ராக பதவி வில­கி­னார். மறு­நாளே இவர் தேர்­தல் ஆணை­ய­ராக நிய­மிக்­கப்
பட்டார். அதா­வது தேர்­தல் ஆணை­ய­ராக இவரை நிய­மிப்­ப­தற்­கா­கவே பதவி விலக வைத்­துள்­ளார்­கள் என்­பது வெளிப்­ப­டை­யான செய்தி ஆகும். அருண் கோயல் நிய­ம­னத்­துக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் பல்­வேறு தரப்பி­ன­ரும் வழக்கு தாக்­கல் செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யர் நிய­ம­னம் செய்­வது தொடர்­பான வழக்கு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வந்­தது. நீதி­ய­ர­சர் கே.எம்.ஜோசப் தலை­மை­யி­லான ஐந்து நீதி­ப­தி­கள் அடங்­கிய அர­சி­யல் சாசன அமர்வு அதனை விசா­ரித்­தது.  அருண் கோய­லின் நிய­ம­னத்­தில் சந்தேகங்கள் இருப்­ப­தாக நீதி­ப­தி­கள் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“பிர­த­மர், மக்­க­ளவை எதிர்க்­கட்சி தலை­வர் மற்­றும் உச்ச நீதி­மன்ற தலைமை நீதி­பதி ஆகி­யோர் அடங்­கிய குழு­வின் அறி­வு­றுத்­த­லின்­படி, தேர்­தல் ஆணை­யர்­கள், தலைமை தேர்­தல் ஆணை­யர் ஆகி­யோரை குடி­ய­ர­சுத் தலை­வர் நிய­ம­னம் செய்ய வேண்­டும். மக்­க­ளவை எதிர்க்­கட்சி தலை­வர் இல்லை என்றால், தனிப் பெரும்­பான்­மை­யுள்ள எதிர்க்­கட்­சி­யின் தலை­வர், இந்த குழு­வில் இடம்­பெற வேண்­டும். தேர்­தல் ஆணை­யர்­கள் நிய­ம­னம் தொடர்­பாக நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டம் இயற்­றும் வரை இந்த நடை­முறை தொட­ரும். 
ஜன­நா­ய­கத்­தில் தேர்­தல் எந்­த­வித சந்­தே­க­மும் இன்றி நியா­ய­மாக நடை­பெற வேண்­டும். புனி­தத்­தன்மை காக்­கப்­ப­டு­வதை தேர்­தல் ஆணை­யம் உறுதி செய்ய வேண்டும். இல்­லை­யென்­றால் மோச­மான விளை­வு­கள் ஏற்­ப­டும்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று 
கூறி­யது உச்­ச­நீதி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உடனே ஒரு சட்­டத்­தைக் கொண்டு வந்­தார்­கள். உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­திக்­குப் பதி­லாக பிர­த­மர் விரும்­பும் அமைச்­சரை நிய­மிக்­க­லாம் என்று சட்­டம் கொண்டு வந்­தார்­கள். உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தியை நீக்­கி­விட்டு ஒன்­றிய அமைச்­சரை நிய­மிப்­ப­தன் மூல­மாக தேர்­தல் ஆணை­யத்தை தனது கைப்­பா­வை­யாக ஆக்­கிக் கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தேர்­தல் ஆணை­யர்­க­ளைத் தேர்வு செய்­யும் குழு­வில் பிர­த­மர், மக்­க­ளவை எதிர்க்­கட்­சித் தலை­வர், பிர­த­ம­ரால் பரிந்­து­ரைக்­கப்­ப­டும் ஒன்­றிய அமைச்­சர் ஒரு­வர் இடம் பெற்­றி­ருப்­பார்­கள் என்­பதே இதன் நம்­பிக்­கைத் தன்­மையை சிதைத்து விட்­டது. அமைச்­ச­ரவை செய­லர் மற்­றும் அர­சுச் செய­லர் பத­விக்­குக் குறை­யாத இரண்டு அதி­கா­ரி­கள் கொண்ட தேடல் குழு­வா­னது 5 பேரைத் தேர்­வுக்­கு­ழு­வுக்கு பரிந்­து­ரைக்க வேண்­டும். அந்த ஐந்து பேரில் உள்­ள­வர்­களையோ  அல்­லது அவர்­க­ளைத் தாண்­டிய வேறு யாரை­யுமோ பிர­த­மர் தலை­மை­யி­லான தேர்­வுக் குழு­வா­னது தேர்வு செய்­ய­லாம் என்­பது இப்­போ­தைய நடை­மு­றை­யாக இருக்­கி­றது. இத்­த­கைய குழு­வால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­வர்­கள் தான் இப்­போது தேர்­தல் ஆணை­யர்­க­ளாக இருக்­கி­றார்­கள். இவர்­கள் ஒன்­றிய அர­சின் அனைத்து உத்­த­ர­வு­க­ளுக்­கும் தலை­யாட்­டிக் கொண்­டி­ருக்­கிறார்­கள் என்­று­தான் சொல்ல வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இத்­த­கைய சூழ­லில் தேர்­தல் நடத்தை விதி­க­ளில் ஒரு திருத்­தம் செய்­யப்­பட்­டுள்­ளது. வாக்­குச் சாவ­டி­யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதி­வு­கள் உள்ளிட்ட மின்­னணு ஆவ­ணங்­களை மக்­கள் பார்­வைக்­குத் தரக் கூடாது என்று தடை விதித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அரி­யானா மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­கள் குறித்து பல்­வேறு சந்தே­கங்­கள் எழுந்­துள்­ளன. பதி­வான வாக்­கு­க­ளுக்­கும், அறி­விக்­கப்­பட்ட வாக்­கு­க­ளுக்­குமே அதிக வித்­தி­யா­சம் சில தொகு­தி­க­ளில் இருக்­கி­றது. எனவே சி.சி.டி.வி. காட்­சி­க­ளைத் தரு­மாறு பஞ்­சாப் – அரி­யானா உயர்­நீ­தி­மன்­றத்­தில் வழக்­க­றி­ஞர் மஹ­மூத் பிரச்சா என்­ப­வர் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளார். அவர் கேட்­கும் ஆவ­ணங்­க­ளைக் கொடுக்­க­லாம் என்று 
டிசம்­பர் 9 அன்று உயர்­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உடனே இது தொடர்­பாக ஒரு சட்­ட­ம­சோ­தாவை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வந்து நிறை­வேற்றிவிட்­டார்­கள். காகித ஆவ­ணங்­களை மட்­டும் தான் தர முடி­யும், சி.சி.டி.வி. கேமரா பதி­வு­க­ளையோ காட்­சி­க­ளையோ தர முடி­யாது என்று தேர்­தல் நடத்தை விதி­க­ளில் திருத்­தம் கொண்டு வந்து விட்­டார்­கள். தவறு செய்­ய­வில்லை என்­றால் தரு­வ­தில் என்ன தயக்­கம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“வெளிப்­ப­டைத்­தன்மை கொண்ட தேர்­தல் முறையை ஒழிக்­கும் வகை­யில் தேர்­தல் நடத்தை விதி­கள் 93 (2) (அ)–இல் செய்­யப்­பட்­டுள்ள ஆபத்­தான திருத்­தத்­தால் மக்­க­ளாட்சி தனது மிகப்­பெ­ரும் அச்­சு­றுத்­தலை ஒன்­றிய பா.ஜ.க. அர­சி­டம் இருந்து எதிர்­நோக்­கி­யுள்­ளது. இதன் மூலம், அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யான கூறு­க­ளுள் ஒன்­றினை அழித்­துள்­ளது.  தனது அமைப்­பின் சுதந்­தி­ரத்­துக்­கா­கப் போரா­டு­வ­தற்­குப்பதி­லா­கத் தேர்­தல் ஆணை­ய­மும் பிர­த­மர் மோடி அவர்­கள் தலை­மை­யி­லான அர­சின் அழுத்­தத்­துக்கு மன­மு­வந்து பணிந்­தி­ருப்­ப­தும், நேர்­மை­யான – நியா­ய­மான தேர்­தல் எனும் தனது குழந்­தை­யையே அது உருக்­கு­லைத்­தி­ருப்­ப­தும் அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அரி­யானா, மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லத் தேர்­வு­கள் சந்­தே­கத்­துக்­கு­ரி­ய­தாக உள்­ளது. திடீ­ரென இரண்டு மணி நேரம் அறி­விப்­பு­களை நிறுத்­து­கி­றார்­கள். பின்­னர் திடீ­ரென பா.ஜ.க. முன்­னிலை என்று பரப்­பு­கிறார்­கள். அவ­சர அவ­ச­ர­மாக அறி­விக்­கி­றார்­கள். வாக்­குப் பதி­வும், எண்­ணிய வாக்­கும் நேர் செய்­யப்­ப­டா­மல் முடி­வு­கள் அறி­விக்­கப்­ப­டு­கி­றது. முழு­மை­யாக வாக்­கு­களை எண்­ணா­மல் பாதி­யில் நிறுத்தி வெற்­றியை அறி­வித்­தார்­கள். இவை வெளி­யில் தெரிந்­து­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கத் தான் 
சி.சி.டி.வி. காட்­சி­க­ளைத் தர மறுக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">2022 ஆம் ஆண்டு உச்­ச­நீ­தி­மன்­றம் சொன்ன எச்­ச­ரிக்­கை­யைத் தான் இப்­போது நடை­மு­றை­யில் பார்க்­கி­றோம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“ஜன­நா­ய­கத்­தில் தேர்­தல் எந்­த­வித சந்­தே­க­மும் இன்றி நியா­ய­மாக நடை­பெற வேண்­டும். புனி­தத்­தன்மை காக்­கப்­ப­டு­வதை தேர்­தல் ஆணை­யம் உறுதி செய்ய வேண்­டும். இல்­லை­யென்­றால் மோச­மான விளை­வு­கள் ஏற்­ப­டும்” என்று கூறி­யது உச்­ச­நீ­தி­மன்­றம். அதைத் தான் இப்­போது பார்க்­கி­றோம். மர்­மத் தேர்­தல் முடி­வு­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>