<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,609,1252" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 02 2025 03:31:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-05" position.sequence="05" ex-ref="02022025-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">02.02.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="51">பெண் கல்வியே ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடிப்படை ! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="28">தூத்துக்குடி   ஏ.பி.சி.   மகாலெட்சுமி   பெண்கள்   கல்லூரிபொன்விழாவில்   </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="28">–</lang>
	<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular"  size="28"> கனிமொழி   கருணாநிதி   எம்.பி.   உரை!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="28"> </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Kanimozhiadph_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி, பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெண் கல்­வியே ‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யின் அடிப்­படை என்று கல்­லூரி பொன் விழா­வில் பேசிய கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தூத்­துக்­குடி - எட்­ட­ய­பு­ரம் சாலை­யில் உள்ள ஏ.பி.சி மகா­லெட்­சுமி பெண்­கள் கல்­லூ­ரி­யின் பொன்­விழா நிகழ்ச்சி கல்­லூரி வளா­கத்­தில் நடை­பெற்­றது.இதில், தூத்­துக்­குடி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழு தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி அவர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்றி, புதி­தாக கட்­டப்­பட இருக்­கும் ஆடிட்­டோ­ரி­யம் 
கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­னார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தலை­வர் கலை­ஞர் துவக்கி வைத்த கல்­லூரி இந்த கல்­லூரி.  அப்­போது அவ­ரது பேச்­சிலே, ‘10 ஆசி­ரி­யர்­கள்,... 126 மாண­வர்­கள், எந்த வித­மான உள்­கட்­ட­மைப்­பும் இல்­லாத  இந்த கல்­லூ­ரியை நிறு­விய மரி­யா­தைக்­கு­ரிய   வீர­பா­கு­வின் செய­லாற்­றல் மீது நம்­பிக்கை வைத்து இந்த கல்­லூ­ரியை நான் திறந்து வைத்­தி­ருக்­கி­றேன்’ என்று இதே வளா­கத்­திலே நின்று உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கல்­லூ­ரி­யின் 25 ஆவது ஆண்டு விழா­வின் போது இந்த கல்­லூ­ரிக்கு வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­தார்.  “இன்று கல்­லூ­ரிக்கு அனுமதி வழங்­கி­விட்டு, தொடக்க விழா­வி­லும் கலந்­து­கொண்­டேன். இந்த கல்­லூரி இப்­போது மிக சிறப்­பாக செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது’ என்றும் வாழ்த்து தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மன­துக்கு மகிழ்ச்­சி­யைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தரக்­கூ­டிய விழா!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று அவ­ரது மக­ளாக,  இந்த தொகு­தி­யின் மக்­க­ளவை உறுப்­பி­ன­ராக இந்த கல்­லூ­ரி­யின் பொன் விழா­வில் கலந்­து­கொள்­வது என்­பது  என்­னால் என்­றுமே மறக்க முடி­யாத, மன­துக்கு மகிழ்ச்­சியை தரக் கூடிய மன நிறைவை தரக் கூடிய  பெரு­மி­தத்­தைத் தரக் கூடிய நிகழ்வு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த கல்­லூ­ரி­யிலே படித்த ஒரு அமைச்­சர் இந்த மேடை­யிலே இருக்­கி­றார். எத்­த­னையோ அதி­கா­ரி­கள் இருக்­கி­றார்­கள்.  நாம் பெரு­மி­தப்­படக் கூடிய அதே நேரத்­தில்... ஒரு பெண் கல்வி பெறு­வ­தற்கு பள்­ளிக் கூடம் செல்­வ­தற்கு,  கல்­லூ­ரிக்குசெல்­வ­தற்கு எத்­தனை போராட்­டங்­களை கடந்து வர­வேண்­டி­யி­ருந்­தி­ருக்­கி­றது என்பதை இன்று நாம் அனை­வ­ரும் உணர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று பள்ளி முடித்த மாண­வி­யி­டம் அடுத்து என்­னம்மாபண்ண போறே என்று கேட்­டால்., சர்­வ­சா­தா­ர­ண­மாக காலேஜ் என்று பதில் வரு­கி­றது.  அதற்­குப் பிறகு என்ன பண்­ணப் போகி­றாய்என்­றால் வேலைக்­குப் போகப் போகி­றேன். இல்­லேன்னா அடுத்த டிகிரி படிக்­கப் போகி­றேன் என்­று­தான் பதில் வரும். இதெல்­லாம் இன்று ரொம்ப சாதா­ர­ண­மாக  பேசக்கூடிய விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இன்று நாம் இந்த நிலையை அடை­வ­தற்கு நமது முந்­தைய தலை­மு­றை­யி­னர் எவ்­வ­ளவு போராட்­டங்­களை, எவ்­வ­ளவுதியா­கங்­களை செய்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை நாம் உணர்ந்­தி­ருக்க வேண்­டும். அதை நாம் உணர்ந்­தால்­தான், இந்த இடம் கிடைத்­தி­ருக் கி­றதே அதன் மரி­யா­தையை நாம் செலுத்த 
முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">எத்­தனை அறி­வி­யல் வளர்ச்சி 
வந்­தா­லும் முன்­னே­றாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெண்­கள் அதி­க­மாக படிக்க அனுப்­பப்­ப­டாத   கால­கட்­டத்­தி­லேயேபெண்­கள் படிப்­ப­தற்­காக தொடங்­கப்­பட்ட கல்­லூரி இது,  இன்று பெண்­கள் தங்­கள் சொந்­தக் காலில் நிற்­கும்­போது சமூ­கத்­தின் சிந்­தனை செயல்­பாடு ஓட்­டம் எல்­லாமே மாறும். தனக்­காக ஒரு சது­ரத்தை உரு­வாக்­கிக் கொண்டு அதற்­குள் இருக்­கும் சமூ­கம்... பெண்­கள் வெளியே வரக் கூடாது படிக்­கக் கூடாது என்றுநினைக்­கும் சமூ­கம்... அது எத்­தனை அறி­வி­யல் வளர்ச்சி வந்­தா­லும் அது முன்­னே­றாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாம் எந்த வளர்ந்த நாட்­டின் சமூ­கத்தை எடுத்­துக் கொண்­டா­லும், அதன் அடிப்­ப­டை­யாக  பெண் கல்விஇருக்­கும்.  திரா­விட மாடல் என்று நம் முதல்­வர் பெரு­மை­யாகசொல்­கி­றாரே, நம் ஆட்­சி­யின்  அடிப்­ப­டையே பெண்­கல்­வி­தான்.இந்த சமூ­கத்­துக்கு வெளியே கல்­விக்கு வெளியேயார் யாரெல்­லாம் விடு­பட்­ட­வர்­க­ளாக இருந்­தார்­களோ அவர்­களை எல்­லாம் இன்று உள்ளே கூட்டி வந்து அவர்­க­ளுக்­கும் கல்வி தந்து பெண்­களை ’எம்­ப­வர்’ செய்­வ­து­தான் பெண் கல்­வி­யின் அடிப்­படை. அதை நாம் ஒவ்­வொரு நாளும் மன­திலே நிறுத்­திக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஜோதி­ராவ் பூலே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏனென்­றால் நீங்­கள் இப்­போது உட்­காந்­தி­ருக்­கிற இடத்­துக்கு அவ்­வ­ளவு வர­லாறு இருக்­கி­றது. ஜோதி­ராவ் பூலே பற்றி நீங்­கள் படித்­தி­ருப்­பீர்­கள். மகா­ராஷ்­டி­ரா­வில் பெண் கல்­விக்­காகதங்­கள் வாழ்­நா­ளையே அர்ப்­ப­ணித்­துக் கொண்டதம்­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரு­டைய மனைவி முதல் முறை­யாக பள்­ளிக் கூடத்­துக்கு போகி­ற­போது- திரு­ம­ணத்­துக்­குப் பிற­கு­தான் பள்­ளிக்­குச் செல்­கி­றார். அப்­படி செல்­கி­ற­போது  இரண்டு சேலை­களை எடுத்­துக் கொண்டு போவார்.  ஒன்றை கட்­டிக் கொண்டு செல்­வார். இன்­னொன்று மாற்­றுக்கு எடுத்­துச் செல்­வார்.  ஏனென்­றால்...  அவர் வீட்­டில் இருந்து பள்­ளிக் கூடம் செல்லும் அவரை அவர் மீது சேறு, சகதி, அழுக்கு என்று கண்­ட­தை­யும் வீசி எறி­யும்  அந்த கால சமூ­கம். ஏனென்­றால் ஒரு பெண் பள்­ளிக் கூடம் சென்று படிக்­கக் கூடாது என்­ப­தற்­காக. அத­னால் அவர் மாற்று சேலை­யை­யும் எடுத்­துச் செல்­வார். வீடு திரும்­பும்­போ­தும் இதேபோல சேறு வீசு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று இந்த சமூ­கம் கல்­வியை மிக சாதா­ர­ண­மாக ஏற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது என்­றால், அந்த போராட்­டம்அதன் வர­லாறு என்ன என்­பதை நாம் புரிந்­து­கொண்­டால்­தான் இந்த இடத்தை நீங்­கள் தக்க வைத்­துக் கொள்ள முடியும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று கல்வி நமக்­கா­னது, நம்மை வளர்த்­துக் கொள்­ளக் கூடி­யது. வேலைக்கு போவ­தற்­காக மட்­டுமே நாம் படிக்­க­வில்லை. நம் உல­கத்தை விரி­வாக்­கு­வ­தற்­காக நாம் நம்மை புரிந்­து­கொள்­வ­து­தான் கல்வி நமக்கு தரக் கூடிய மிகப்­பெ­ரிய கொடை. இந்த பய­ணத்­தில் உங்­கள் கன­வு­களை எந்த கார­ணத்­துக்­கா­க­வும் யாருக்­கா­க­வும் விட்­டுக் கொடுத்­து­வி­டா­தீர்­கள். சில நேரம்  நமக்கு கவ­னச் சித­றல்­கள் இருக்­கும். அது­வும் வாழ்­வின் ஒரு பகு­தி­தான். அதை நான் மறுக்­க­வில்லை. ஆனால் அதை­யும் தாண்டி  நீங்­கள் எந்த இலக்கை அடைய நினைக்­கி­றீர்­கள்,உங்­கள் கன­வு­கள் என்ன என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டும். ஏனென்­றால் இன்று உங்­கள் கையி­லேயே கவ­னச் சித­றல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சோஷி­யல்மீடியா பிர­ஷர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­கள் கையில் இருக்­கும் சோஷி­யல் மீடியா, இணை­யம் என்­பவை உல­கத்­தின் 
கத­வு­களை உங்­க­ளுக்கு திறக்­கின்­றன.  எந்த ஒரு விஷ­ய­மாக இருந்­தா­லும் எங்­கே­யும் போய் தேட­வேண்­டி­ய­தில்லை. அதை செல்­போ­னில் எடுத்­து­விட முடி­யும். அதே­போல கம்­யூ­னி­கே­ஷன்  தக­வல் தொடர்­பும் நமக்கு கிடைக்­கி­றது. அதே­நே­ரம் அதில் சில சிக்­கல்­க­ளும் இருக்­கின்றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்ஸ்­டா­கி­ரா­மிலோ வேறு சோஷி­யல் மீடி­யா­விலோ ஒரு போஸ்ட் போடு­வீர்­கள்.  அங்கே நாம் நமக்­கென ஒரு பிர­ஷர் க்ரூப்­பை­யும் நாம் உரு­வாக்­கிக் கொள்­கி­றோம். நம்­மு­டைய ஃபாலோ­யர்­க­ளின் கருத்­து­கள், கமெண்ட்­டு­கள் நம் மீது ஒரு ப்ரஷ­ராக மாறக் கூடிய சூழல்­கள், வாய்ப்­பு­கள் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு விஷ­யத்தை நாம் சொல்­லும்­போது லைக் போத­வில்லை என்ற உணர்வு நம்மை பாதிக்­கும்.  சில ஆண்­டு­க­ளுக்கு முன் நம்­மைச் சுற்றி பிசி­கல் ப்ரஷ­ராக இருந்­தது, இன்று நம்­மைச் சுற்றி கண்­ணுக்­குத் தெரி­யாத  சோஷி­யல் மீடியா ப்ரஷ­ராக இருக்­கும். அதை நாம் உடைக்க வேண்­டும், கடக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு பெண் வாழ்­வில் சாதிக்க வேண்­டு­மென்­றால் அது மனத் தடை­யாக இருக்­கட்­டும்,  பாரம்­ப­ரி­யம் என்ற தடை­யாக இருக்­கட்­டும்,   சமூ­கம்  என்ற தடை­யாக இருக்­கட்­டும், சாதி மதம் என்ற விஷ­யங்­களை எல்­லாம் உடைத்து எறிந்­தால்­தான் அந்த சாத­னையை நாம் செய்ய முடி­யும்என்று தந்தை பெரி­யார் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பெரி­யா­ரின் புத்­த­கத்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அவ­சி­யம் படி­யுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யா­ரைத் தாண்டி ஒரு ஃபெமி­னிஸ்டை நான் இது­வரை படித்­த­தில்லை.  என்ன தடை­யாக இருந்­தா­லும் அதை உடை என்று சொன்­னார் பெரி­யார். எல்­லா­ருமே பெண்­கள் என்­றால் ஒரு லிமிட்­டே­ஷன் வைத்­தி­ருப்­பார்­கள். ஆனால் அது­போன்ற எந்த ஒரு சம­ர­ச­மும் இல்­லா­மல் சிந்­தித்­த­வர் பெரி­யார்.  அவர் எழு­திய, ‘பெண் ஏன் அடி­மை­யா­னாள்?’ என்ற புத்­த­கத்தை தயவு செய்து எல்லா 
பெண்க­ளும் படி­யுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே அமைச்­சர் பேசும்­போது தமிழ் துறையை பற்றி பேசி­னார்­கள். பெரிய ஆரவா­ரத்­தோடு அதற்கு மாண­வி­கள் ரெஸ்­பாண்ட் செய்­தார்­கள். பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருந்­தது. ஏனென்­றால் பொது­வா­கவே எல்லா கல்­லூ­ரி­க­ளி­லும் தமிழ் துறை என்­பது பாவ­மாக ஒரு ஓர­மாக இருக்­கும். ஆனால் இந்த கல்­லூ­ரி­யிலே தமிழ் துறை பவர் ஃபுல் துறை­யாக இருப்­பது பெரிய மகிழ்ச்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆங்­கி­லத்­தில் டிபேட் செய்­தால், ஆங்­கி­லத்­தில் கவிதை எழு­தி­னால் அது பெரு­மை­யாக கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் இன்­றைக்கு நமது முத­ல­மைச்­சர் தமி­ழின் தொன்­மையை மிகப் பெரு­மை­யாக அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது தூத்­துக்­குடி மாவட்­டம் சிவ­க­ளை­ 
யில்­தான் 5 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பே இந்­தி­யா­வில் முதல் முறை­யாக இரும்பு பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த பெருமை இருக்கக் கூடிய மாவட்­டம், இந்தபெருமை இருக்­கக் கூடிய தமி­ழி­னம் நாம். அந்த தமி­ழி­னத்­தின் வழி­வந்­த­வர்­கள் நீங்­கள்.  தமிழ் துறை மட்­டு­மல்ல...நாம் எல்­லா­ரும் தமி­ழர்­கள்­தான்., நாம் எல்­லா­ரும் பெரு­மைப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால், நம்மை யாரும் அடக்­கி­விட முடி­யாது. அது ஆண்­க­ளாக இருக்­கட்­டும், பெண்­களாக இருக்­கட்­டும்.  பெண்­களை எது­வும் அடக்­கி­வி­டவோ,  நிறுத்­தி­வி­டவோ, பின்­னால் இருந்து இழுக்­கவோ அனு­ம­திக்­கா­தீர்­கள். முன்­னே ­றுங்­கள், உலகை வெற்றி கொள்­ளுங்­கள். வாழ்த்­து­கள்”  இவ்வாறு கனிமொழி கருணாநிதி எம்.பி. உரையாற்றினார். இதில் அமைச்சர் பெருமக்கள்  கீதா ஜீவன்,  அனிதா இராதா கிருஷ்ணன், மாநகராட்சி மேயர்  ஜெகன் பெரிய சாமி, கல்லூரி தலைவர்  ஏ.பி.சி.வி.சொக்க லிங்கம், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், கல்லூரி முதல்வர்  கே.சுப்புலெட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>