<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,400,493,1125" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 10:24:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-12" position.sequence="12" ex-ref="02022025-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="20">காவிரி உபரி நீர் திட்டத்தில் -– மீதமுள்ள 25 ஏரிகளுக்கு </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">ரூ.105.35 கோடியில் திட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Rajendran_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலம், ஜன 2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவிரி உப­ரி­நீர் திட்­டத் தில் மீத­முள்ள 25 ஏரி­க­ளுக்­கும் நீர் நிரப்­பும் வகை­யில்  ரூ.105.35 கோடிக்கு திட்ட மதிப்­பீடு அர­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் காவிரி உப­ரி­நீர் திட்­டத்­தில் சுமார் 70 முதல் 80 சத­வி­கித ஏரி­க­ளுக்கு நீர்­நி­ரப்­பப்­பட் டுள்­ளது என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லுக்­கி­ணங்க, திப்­பம்­பட்டி நீரேற்று நிலை­யத்­தி­லி­ருந்து மின் மோட்­டார்­கள் மூலம் நீரேற்று செய்­யப்­பட்டு ஏரி­க­ளுக்கு வழங்­கும் செயல்­பாட்­டினை சுற்­று­லாத்­துறை அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் தொடங்கி வைத்து தெரிவித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலம் மாவட்­டம், மேட்­டூர் அணை தனது முழு கொள்­ள­ள­வினை எட்­டி­யுள்ள நிலை­யில், காவிரி உப­ரி­நீரை ஏரி­க­ளுக்கு நீரேற்று மூலம் நிரப்­பும் திட்­டத்­தின் கீழ் சேலம் மாவட்­டம், மேட்­டூர் வட்­டம், திப்­பம்­பட்டி நீரேற்று நிலை­யத்­தி­லி­ருந்து மின் மோட்­டார்­கள் மூலம் நீரேற்று செய்­யப்­பட்டு ஏரி­க­ளுக்கு வழங்­கும் செயல்­பாட்­டினை சுற்­று­லாத்­துறை அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் நேற்று (01.01.2025) தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர், சுற்­று­லாத்­துறை அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் ஆட்சி பொருப்­பேற்று இந்­தாண்டு மட்­டும் மேட்­டூர் அணை 3 முறை நிரம்­பி­ யுள்­ளது. சேலம் மாவட்­டம், மேட்­டூர் அணை தனது முழு கொள்­ள­ள­வான 120 அடி­யினை எட்­டி­யுள்ள நிலை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க, இன்­றை­ய­தி­னம் மேட்­டூர் அணை­யி­லி­ருந்து காவிரி உப­ரி­நீரை நீரேற்று மூலம் ஏரி­க­ளுக்கு வழங்­கும் திட்­டத்­தின் கீழ் மேட்­டூர் வட்­டம், திப்­பம்­பட்டி நீரேற்று நிலை­யத்­தி­ லி­ருந்து மின் மோட்­டார்­கள் மூலம் நீரேற்று செய்­யப்­பட்டு ஏரி­க­ளுக்கு வழங்­கு­வது தொடங்கி வைக்­கப்­பட் டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேட்­டூர் அணை­யின் வெள்ள நீரை சேலம் மாவட்­டம், சர­பங்கா வடி­நி­லத்­தில் உள்ள வறண்ட ஏரி­க­ளுக்கு நீரேற்­றம் மூலம் நீர் வழங்­கும் திட்­டம் ரூ.673.88 கோடி மதிப்­பீட்­டில் தமிழ்­நாடு அர­சால் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­தில் மேட்­டூர் அணை­யா­னது அதன் முழு கொள்­ள­ள­வான 120 அடி­யினை எட்­டும் பொழுது அணை­யின் இடது கரை­யின் நீர் பரப்பு பகு­தி­யி­லி­ருந்து வெள்ள நீரை திப்­பம்­பட்டி பிர­தான நீரேற்று நிலை­யம், வெள்­ளா­ள­பு­ரம் துணை நீரேற்று நிலை­யம், கன்­னந்­தேரி துணை நீரேற்று நிலை­யம் மூல­மாக 82 ஏரி­கள், குளங்­க­ளுக்கு நீர் சென்­ற­டை­யும் வகை­யில் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத்­திட்­டத்­தில் சுமார் 70 முதல் 80 சத­வி­கித ஏரி­க­ளுக்கு நீர்­நி­ரப்­பப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் 4,061.16 ஏக்­கர் நிலங்­கள் பாச­னம் மற்­றும் குடி­நீர் வச­தி­பெற வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தென்­மேற்கு பரு­வ­ம­ழை­யின் கார­ண­மாக மேட்­டூர் அணை முழு­கொள்­ள­ளவை எட்­டி­ய­தால் கடந்த 31.07.2024 முதல் மூன்று நீரேற்று நிலை­யங்­க­ளி­லும் உள்ள 27 மின் மோட்­டார்­கள் மற்­றும் பம்­பு­க­ளுக்­கான சோதனை ஓட்­டத்­தின் மூலம் 40 ஏரி­க­ளுக்கு 267 மில்­லி­யன் கன அடி நீர் நீரேற்­றம் செய்­யப்­பட்டு 2,300 ஏக்­கர் நிலம் பாசன வசதி பெற்­றுள்­ளது. இதன்­மூ­லம் விவ­சா­யப் பயன்­பாடு மற்­றும் குடி­நீர் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­திட வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், பெஞ்­சல் புய­லின் கார­ண­மாக சேலம் மாவட்­டம் சேர்­வ­ரா­யன் மலைப்­ப­கு­தி­க­ளில் அதிக மழை பெய்து சர­பங்கா ஆற்­றின் ஏற்­பட்ட வெள்ள பெருக்கு கார­ண­மாக கடந்த 14.12.2024 முதல் 19.12.2024 வரை வெள்­ளா­ள­பு­ரம் துணை நீரேற்று நிலை­யம் மற்­றும் கன்­னந்­தேரி துணை நீரேற்று நிலை­யம் இயக்­கப்­பட்­டது. இதன் மூலம் 15 ஏரி­கள் முழு­கொள்­ள­ளவை எட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தேர்­தல் வாக்­கு­று­தி­யில் தெரி­வித்­த­படி, பார­பட்­சம் இல்­லா­மல் அனைத்­துத்­த­ரப்பு மக்­க­ளும் பயன்­பெ­ரும் வகை­யில் சேலம் மாவட்­டத்­தில் கூட்­டு­றவு நிறு­வ­னங்­க­ளில் நகைக்­க­டன் பெற்ற 1,43,000 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.481 கோடி­யும், 5,200 மக­ளிர் சுய உதவி குழுக்­களை சேர்ந்த 55,000 மக­ளிர் பயன்­பெ­றும் வகை­யில் ரூ.132 கோடி மக­ளிர் சுய­உ­த­விக்­குழு கடன் தள்­ளு­படி செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக, முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டத்­தின் கீழ் தமிழ்­நாடு முழு­வ­தும் சுமார் 20 இலட்­சம் பள்­ளிக் குழந்­தை­க­ளுக்கு காலை உணவு வழங்­கப்­பட்டு பயன்­பெற்று வரு­கின்­ற­னர். மக­ளிர் கட்­ட­ண­மில்லா பேருந்து பய­ணத் திட்­டத்­தின் மூலம் 19 கோடி பய­ணங்­க­ளும், மாதந்­தோ­றும் ரூ.1,000/- வழங்­கும் புது­மைப்­பெண் திட்­டத்­தின் மூலம் 24,000 மாண­வி­க­ளும், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தின் கீழ் 16,000 மாண­வர்­க­ளும், நான் முதல்­வன் திட்­டத்­தின் மூலம் 82,837 மாணவ, மாண­வி­க­ளுக்கு திறன் பயிற்­சி­க­ளும் வழங்­கப்­பட்டு பயன்­பெற்று வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தற்­பொ­ழுது, மேட்­டூர் அணை முழு­கொள்­ள­ளவை எட்­டி­ய­தால் திப்­பம்­பட்டி பிர­தான நீரேற்று நிலை­யத்­தி­லி­ருந்து வாத்­திப்­பட்டி ஏரி, செல­வடை ஏரி ஆகிய 2 ஏரி­க­ளுக்­கும் நீர்­கு­றைந் துள்ள மற்ற ஏரி­க­ளுக்­கும் 100 சத­வி­கி­தம் நீர்­நி­ரப்­பும் பணி தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. மீத­முள்ள, 25 ஏரி­க­ளுக்கு இணைப்­புக் கால்­வாய் அமைத்­திட ரூ.105.35 கோடிக்கு மதிப்­பீடு தயா­ரிக்­கப்­பட்டு அர­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. நங்­க­வள்ளி ஊராட்சி ஒன்­றி­யம், லெனின் நகர் பகுதி பொது­மக்­கள் சாலை வசதி வேண்டி தெரி­வித்­தி­ருந்­த­னர். இச்­சாலை பணி­கள் விரை­வில் அமைத்­துத் தரப்­ப­டும் என்ற தக­வலை தெரி­வித்து கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு சுற்­று­லாத் துறை அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து, காவிரி உப­ரி­நீரை ஏரி­க­ளுக்கு நீரேற்று மூலம் நிரப்­பும் திட்­டத்­தின் கீழ் சேலம் மாவட்­டம், மேட்­டூர் வட்­டம், திப்­பம்­பட்டி நீரேற்று நிலை­யத்­தி­லி­ருந்து மின் மோட்­டார்­கள் மூலம் நீரேற்று செய்­யப்­பட்டு நங்­க­வள்ளி ஊராட்சி ஒன்­றி­யம் சூரப்­பள்ளி கிரா­மம், வாத்­திப்­பட்டி எரிக்கு நீர் வந்­த­டைந்­ததை சுற்­று­லாத் துறை அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் மலர்­தூவி வர­வேற்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வு­க­ளின்­போது, மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் டாக்­டர் இரா. பிருந்­தா­ தேவி, சேலம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டி.எம்.செல்­வ­க­ண­பதி, மேட்­டூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எஸ்.சதா­சி­வம், மேட்­டூர் சார் ஆட்­சி­யர் திரு­மதி நே.பொன்­மணி,  நீர்­வ­ளத் துறை சர­பங்கா வடி­நி­லக் கோட்ட மேற்­பார்வை பொறி­யா­ளர் சிவக்­கு­மார், சர­பங்கா வடி­நி­லக் கோட்ட செயற்­பொ­றி­யா­ளர் அப்­பு­சாமி, மேட்­டூர் செயற்­பொ­றி­யா­ளர் வெங்­க­டா­ச­லம், நங்­க­வள்ளி ஊராட்சி ஒன்­றிய குழு உறுப்­பி­னர் ராஜேஷ் மற்­றும் அர்த்­த­நா­ரீஸ்­வ­ரன் உள்­ளிட்ட தொடர்­பு­டைய அரசு அலு­வ­லர்­கள் மற்­றும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், விவ­சா­யி­கள் உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>