<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,144,958,1230" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Feb 01 2025 17:54:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="02022025-MDU-04" position.sequence="04" ex-ref="02022025-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">திரா­விட மாடல் அரசு திட்­டங்­களைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றது! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">திண்­டுக்­கல் – தேனி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 436 ஊராட்­சி­க­ளுக்கு 720 எண்­ணிக்­கை­யி­லான    `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்­கும் விழா­வில் – துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் வாழ்த்­துரை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup219967_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை,பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்­னை­யில்,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, திண்­டுக்­கல் – தேனி மாவட்­டங்­க­ளில் உள்ள 436 கிராம ஊராட்­சி­க­ளுக்கு – 720 எண்­ணிக்­கை­யி­லான `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்­கும் நிகழ்ச்­சியை, நேற்று முன்தினம் காணொ­லிக் காட்சி வாயி­லாக, துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அப்­போது அவர், `திரா­விட மாடல் அரசு’, விளை­யாட்­டுத்­துறை சார்ந்த வச­தி­கள் கிரா­மங்­கள் வரை சென்­ற­டைய வேண்­டும் என்று, ‘கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள்’ வழங்­கும் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றது. `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட் திட்­டம்’, ஆயி­ரக்­க­ணக்­கான விளை­யாட்டு வீரர்­களை உரு­வாக்­கட்­டும்’ என்று விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு வாழ்த்­துரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் ஆற்­றிய உரை­  வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">திண்­டுக்­கல் மற்­றும் தேனி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த சுமார் 435 கிராம பஞ்­சா­யத்­துக்­க­ளுக்கு `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’டை வழங்­கு­வ­தில் மகிழ்ச்சி அடை­கி­றோம். ` முத­ல­மைச்­ச­ரின் வழி­காட்­டு­த­லின்­படி, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் நூற்­றாண்டை முன்­னிட்டு, தமிழ்­நாட்­டில் உள்ள 12 ஆயி­ரத்து 525  கிராம ஊராட்­சி­க­ளுக்­கும், `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’டை வழங்­கு­வோம்’ என்று சட்­டப்­பே­ர­வை­யில் அறி­வித்து இருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதன்­படி, மது­ரை­யில் சென்ற வரு­டம் பிப்­ர­வரி மாதம் முதன்­மு­த­லாக 420 ஊராட்­சி­க­ளுக்கு `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்­கும் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தோம்.  அதைத் தொடர்ந்து, தமிழ்­நாட்­டில் உள்ள பல்­வேறு மாவட்­டங்­க­ளுக்கு நேரில் சென்று கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்­டைக் கொடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­றைக்கு இறு­தி­யாக திண்­டுக்­கல், தேனி மாவட்­டங்­க­ளில் உள்ள 436 கிராம ஊராட்­சி­க­ளுக்கு சுமார் 720 `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’டை வழங்கி இருக்­கி­றோம்.  தமிழ்­நாட்­டில் உள்ள பிற மாவட்­டங்­க­ளுக்கு நாங்­கள் அனை­வ­ரும் நேரில் சென்று ஸ்போர்ட்ஸ் கிட்­டைக் கொடுத்­தோம்.  அதே­போல உங்­கள் மாவட்­டங்­க­ளுக்­கும் நாங்­கள் வர வேண்­டும் என்று ஆசைத்­தான். ஆனால், தவிர்க்க முடி­யாத பணிச் சூழ­லால் எங்­க­ளால் நேரில் வந்து இந்த விளை­யாட்டு உப­க­ர­ணங்­க­ளைக் கொடுக்க முடி­ய­வில்லை. ஆனா­லும், உங்­களை எல்­லாம் இந்த காணொ­லிக் காட்சி வாயி­லா­கப் பார்த்து பேசு­வ­தில் மகிழ்ச்சி அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">திரா­விட மாடல் அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நம் திரா­விட மாடல் அரசு, சொல்­வ­தைச் செய்­கின்ற அரசு. ஒரே வரு­டத்­தில் தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற 12 ஆயி­ரத்து 525 பஞ்­சா­யத்­துக்­க­ளுக்­கும் 16 ஆயி­ரத்து 800 எண்­ணிக்­கை­யி­லான கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்டை கொடுத்து இருக்­கி­றோம் என்­பதே அதற்கு உதா­ர­ணம். கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட் கொடுக்­கின்ற ஒவ்­வொரு நிகழ்ச்­சி­யும், மேடை­யும் எங்­க­ளுக்கு மிக­வும் நெகிழ்ச்­சி­யான, நெருக்­க­மான நிகழ்ச்­சி­யாக அமைந்­தது. இந்த நிகழ்ச்சி நடை­பெற்ற ஒவ்­வொரு மேடைக்­கும் ஒரு சிறப்பு இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­றைக்­குக் கூட, இந்த மேடை­யில் திண்­டுக்­கல் மாவட்­டத்­தைச் சேர்ந்த சர்­வ­தேச வாள் வீச்சு வீராங்­கனை, தமிழ்­நாடு விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணைய விளை­யாட்டு விடுதி மாண­வர் தங்கை தமிழ்ச்­செல்வி இருக்­கி­றார். தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­கள், சீனி­யர் தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் தங்­கம் மற்­றும் வெள்­ளிப் பதக்­கங்­களை வென்று, ஜூனி­யர் மற்­றும்  ஏசியா சாம்­பி­யன்­ஷிப் பட்­டத்­தை­யும் அவர் பெற்­றுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">மூத்த ஆய்­வா­ளர் பணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அவ­ரின் சாத­னை­களை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக, 3 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டின் அடிப்­ப­டை­யில் அவ­ருக்­குக் கூட்­டு­ற­வுத் துறை­யில் மூத்த ஆய்­வா­ளர் பணியை நம் திரா­விட மாடல் அரசு, நம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்கி இருக்­கி­றார்­கள். தங்கை தமிழ்ச்­செல்வி விளை­யாட்­டுத் துறை­யில் சாதிக்­கத் துடிக்­கும் பல­ருக்­கும் முன்­மா­தி­ரி­யா­க­வும், ஊக்­கம் அளிக்­கின்ற வகை­யி­லும் தொடர்ந்து செயல்­பட்டு வரு­கி­றார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தேனி மாவட்­டத்­தைச் சேர்ந்த கூடைப்­பந்து வீரர் சுஜித் அவர்­க­ளும் இங்கு வருகை தந்­துள்­ளார். சுஜித், எஸ்.ஜி.எஃப்.ஐ நேஷ­னல் கேம்ஸ், யூத் நேஷ­னல் கேம்ஸ் போன்­ற­வற்­றில் வெள்ளி மற்­றும் வெண்­க­லப் பதக்­கங்­களை வென்று சாத­னைப் படைத்­துள்­ளார்.  அவர் நம் தமிழ்­நாடு விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணைய விடுதி மாண­வர் என்­ப­தில், நமக்­கெல்­லாம் ஒரு கூடு­தல் பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சுஜித் அவர்­க­ளும், தமிழ்ச்­செல்வி அவர்­க­ளும் விளை­யாட்­டுத்­து­றை­யில் இன்­னும் பல சாத­னை­களை, பல உய­ரங்­க­ளைத் தொட வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம். இவர்­க­ளைப்­போல, இன்­னும் 100 வீரர்­களை உரு­வாக்க வேண்­டும் என்று நம் திரா­விட மாடல் அரசு திட்­ட­மிட்டு உறு­தி­யோடு செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">சாம்­பி­யன்ஸ் அறக்­கட்­டளை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் சாதனை படைக்­கின்ற வீரர்­க­ளின் குடும்­பங்­கள் வறு­மை­யில் வாடு­கின்­றன என்று ஒரு செய்­தி­கூட வரக்­கூ­டாது என்­கிற வகை­யில், நாம் செயல்­பட வேண்­டும் என்று நம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் எங்­க­ளின் துறைக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விளை­யாட்டு வீரர்­க­ளுக்­குப் பொரு­ளா­தா­ரம் ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­று­தான் தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் பவுண்­டே­சன் திட்­டத்­தைப் போன்று பலத் திட்­டங்­களை, நம் அரசு செயல்­ப­டுத்தி வரு­கி­றது.   தேசிய அள­வி­லான போட்­டி­க­ளில் 614 வீரர்­க­ளுக்கு, தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் பவுண்­டே­சன் மூல­மாக சுமார் 12 கோடி ரூபாய் அள­வில் நிதி உதவி வழங்கி இருக்­கி­றோம். அவர்­க­ளில் 113 பேர் பதக்­கங்­களை வென்று, நம் அர­சுக்கு, நம் மாநி­லத்­திற்­குப் பெருமை சேர்த்­துள்­ளார்­கள். தமிழ்­நாடு சாம்­பி­யன்ஸ் அறக்­கட்­ட­ளை­யில் இருந்து நிதி உதவி தேவைப்­ப­டு­வோர் https://tnchampions.sdat.in  என்ற இணை­ய­த­ளத்­தில் விண்­ணப்­பிக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பணி நிய­மன ஆணை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சமீ­பத்­தில், விளை­யாட்­டுத் துறை­யில் சிறந்து விளங்­கும் நம் விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு தமிழ்­நாடு அரசு மற்­றும் பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளில் 3 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டின் கீழ், பணி வாய்ப்­பினை வழங்­கும் வித­மாக, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­திய வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யாக ஒரே நேரத்­தில் 87 வீரர்­க­ளுக்­குப் பணி நிய­மன ஆணை­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த முன்­னெ­டுப்­பு­க­ளில் முக்­கி­ய­மான ஒன்­று­தான் `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ வழங்­கு­கின்ற திட்­டம். விளை­யாட்டு என்­பது நக­ரங்­க­ளில் மட்­டு­மல்ல குக்­கி­ரா­மங்­க­ளில் உள்ள பிள்­ளை­க­ளுக்­கும் போய்ச்­சேர வேண்­டும் என்­று­தான் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்­தத் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த எங்­க­ளுக்கு உத்­த­ர­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் பெயர் ஏன்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கலை­ஞர் பெய­ரில் எத்­த­னையோ திட்­டங்­கள் இருக்­கின்­றன. இருந்­தா­லும், நம் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­து­றை­யின் சார்­பாக, கலை­ஞர் பேரில், முதன்­மு­றை­யாக தொடங்­கப்­பட்ட திட்­டம்­தான் இந்த `கலை­ஞர் ஸ்போர்ட்ஸ் கிட்’ திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஏன், இந்­தத் திட்­டத்­திற்கு கலை­ஞர் பெயரை வைத்­தீர்­கள் என்று பல­பேர் கேட்­கி­றார்­கள்.  அதற்­கும் ஒரு கார­ணம் இருக்­கி­றது.  கலை­ஞர் அவர்­க­ளி­டம் இருந்த அந்த உழைப்பு, பயிற்சி, விடா­மு­யற்சி, போரா­டும் குணம், குழுச் செயல்­பாடு இவை அனைத்­தும் விளை­யாட்­டில் வெற்றி பெறு­கின்ற ஒவ்­வொரு விளை­யாட்டு வீர­ருக்­கும் தேவை.  அதை உணர்ந்­து­தான் நம் கலை­ஞர் அவர்­க­ளின் பெயரை, இந்­தத் திட்­டத்­திற்கு வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">வாழ்த்­து­க­ளும் பாராட்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த விளை­யாட்டு உப­க­ர­ணங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, நீங்­கள் வெற்­றி­க­ர­மான வீரர்­க­ளாக, வீராங்­க­னை­க­ளாக வலம் வர வேண்­டும். இன்­றைக்கு நாங்­கள் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்­கு­கி­றோம் என்­றால், நாளைக்கு நீங்­கள் பதக்­கம் வெல்ல வேண்­டும். அதற்கு நம் திரா­விட மாடல் அரசு, நம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் எல்லா வகை­யி­லும் உங்­க­ளுக்கு துணை நிற்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நன்­றாக விளை­யா­டுங்­கள், உங்­க­ளைப் பாது­காக்க நம் அரசு இருக்­கி­றது.  விளை­யாட்டு உப­க­ர­ணங்­க­ளைப் பெற்­றுள்ள திண்­டுக்­கல், தேனி மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த ஊராட்சி மன்­றங்­க­ளுக்­கும், அதன் முகங்­க­ளாக வருகை தந்­துள்ள இளை­ஞர்­கள், மாண­வர்­கள், விளை­யாட்டு வீரர்­கள், வீராங்­க­னை­கள் அத்­த­னைப் பேருக்­கும் மீண்­டும் எனது வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12.5">பங்­கேற்­ற­வர்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அமைச்­சர்­கள் ஐ.பெரி­ய­சாமி, சக்­க­ர­பாணி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஐ.பி.செந்­தில்­கு­மார், காந்­தி­ரா­ஜன், சர­வ­ண
­கு­மார், திண்­டுக்­கல் மாந­கர மேயர் இள­மதி ஜோதி­பி­ர­காஷ், துணை மேயர் ராசப்பா, இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத்­துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் அதுல்யா மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., தமிழ்­நாடு விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணைய உறுப்­பி­னர் செய­லர் மேக­நாத் ரெட்டி, மாவட்ட ஆட்­சித் தலை­வர்­கள் ஆர்.வி.ஷஜீ­வனா ஐ.ஏ.எஸ்., பூங்­கொடி, சர்­வ­தேச வாள் வீச்சு வீராங்­கனை தமிழ்ச்­செல்வி, தேசிய கூடைப்­பந்து வீரர் சுஜித், அரசு அலு­வ­லர்­கள், உள்­ளாட்­சிப் பிர­தி­நி­தி­கள் விளை­யாட்டு வீரர்­கள் உள்­பட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (31.1,2025) திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நடைபெற்ற கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கும் விழாவில் காணொலி காட்சி வாயிலாக சிறப்புரையாற்றினார். இவ்விழாவில்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்  இ. பெரியசாமி.  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்  
அர. சக்கரபாணி (காணொலி வாயிலாக), சட்டமன்ற உறுப்பினர்கள்  இ.பெ.செந்தில்குமார் (காணொலி வாயிலாக), ச.காந்திராஜன், கே.எஸ்.சரவணக்குமார், ஆ.மகாராஜன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மொ.நா.பூங்கொடி. திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதி பிரகாஷ், தேனி- அல்லிநகரம் நகராட்சித் தலைவர் திருமதி ரேணுபிரியா பாலமுருகன் உள்பட அரசு உயர் அலுவலர்கள். விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>