<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,408,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 02 2025 03:46:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="02022025-TRY-04" position.sequence="04" ex-ref="02022025-TRY-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="80">நபி­கள் வாக்­கி­னைத்­தான் தி.மு.கழ­க­ம் நிறை­வேற்றி வரு­கி­றது!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">தமிழ்­நாடு இஸ்­லா­மி­யக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான கூட்­ட­மைப்பு பொன்­வி­ழா­வில்  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் சிறப்­புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="udyasir1_04_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை,பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை ராயப்­பேட்டை புதுக்­கல்­லூ­ரி­ யில், `தமிழ்­நாடு இஸ்­லா­மி­யக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான கூட்­ட­மைப்பு’ – Organization Of Muslim Educational Institutions &amp; Associations Of Tamil Nadu (OMEIAT)–களின்  பொன் விழா ஆண்டு நிகழ்ச்­சி­களை துணை 
முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விழா­வில், இக்­கூட்­ட­மைப்­பின் சார்­பில், 12 இஸ்­லா­மிய கல்வி அறி­ஞர்­கள் உட்­பட 13 ஆளு­மை­க­ளுக்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து­களை வழங்­கிச் சிறப்­பு­ரை ­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்­போது அவர் இஸ்­லா­மிய மக்­க­ளுக்­கும் அவர்­க­ளின் கல்­விக்­கும், ஓமி­யத் கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கழக அரசு என்­றும் துணை நிற்­கும் என்­றும் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிகழ்ச்சியில் துணை முதல்வர் அவர்கள் ஆற்றிய உரை வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பு­க­ளின் பொன் விழா ஆண்டு நிகழ்ச்­சி­களை இன்று தொடங்கி வைப்­ப­தில் மிகுந்த பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் அடை­கி­றேன். வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க பொன் விழா ஆண்டு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்க, எனக்கு வாய்ப்பு அளித்த, மாண்­பு­மிகு சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் மனி­த­நேய மக்­கள் கட்­சி­யின் தலை­வ­ரு­மான ஜவா­ஹி­ருல்லா அவர்­க­ளுக்­கும், இந்­தக் கூட்­ட­மைப்­பின் அனைத்து நிர்­வா­கி­க­ளுக்­கும் முதற்­கண் என் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">புதுக்­கல்­லூரி எனக்­குப் புதி­தல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கு அனை­வ­ரை­யும் அறி­மு­கப்­ப­டுத்தி வர­வேற்ற அரு­மைச் சகோ­தரி அவர்­கள் பேசும்­போது, “முன்­னாள் பிர­த­மர்­கள் இந்­தி­ரா­காந்தி அம்­மை­யார், ராஜீவ் காந்தி ஆகி­யோர் புதுக்­கல்­லூ­ரிக்கு வந்­தி­ருக்­கின்­ற­னர். முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளும் வந்­தி­ருக்­கின்­றார், நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் வந்­தி­ருக்­கி­றார்.அவர்­க­ளின் வழி­யில், இன்று துணை முதல்­வர் உத­ய­நிதி வந்­துள்­ளார்” எனக் குறிப்­பிட்­டார். ஏதோ நான் முதல்­முறை இந்­தக் கல்­லூரி வளா­கத்­திற்கு வரு­வ­து­போல அவர் என்னை வர­வேற்று இருக்­கி­றார். அதில் ஒரு சின்­னத் திருத்­தம். நான் வரு­டத்­திற்கு குறைந்­தது இரண்டு முறை, மூன்று முறை­யா­வது இதே புதுக் கல்­லூ­ரி­யில் பல நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முக்­கி­ய­மாக, ரம்­ஜான் விழா­வில் இதே புதுக் கல்­லூ­ரி­யில் ஒவ்­வொரு ஆண்­டும் கலந்து கொண்­டுள்­ளேன்.  அது­மட்­டு­மல்ல, நான் பள்­ளிப்­ப­டிப்பை முடித்­து­விட்டு, கல்­லூ­ரி­யில் சேரு­வ­தற்கு முத­லில் விண்­ணப்­பித்­தது புதுக் கல்­லூ­ரி­யில்­தான். அது இங்கு பல­ருக்­குத் தெரி­யாது. விண்­ணப்­பித்­த­தற்­காக, இங்கு நான் நேர்­கா­ண­லி­லும் கலந்­து­கொண்­டேன். ஆனால், லயோலா கல்­லூ­ரி­யில் இடம் கிடைத்­த­வு­டன் அங்கு சென்­று­விட்­டேன். எனவே, இந்­தக் கல்­லூ­ரிக்கு அதிக முறை வந்­த­வன் என்ற பெரு­மை­யோடு, இன்­றைக்கு இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு, உங்­க­ளை­யெல்­லாம் சந்­திக்­கும் வாய்ப்பை பெற்­றுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த சிறப்­புக்­கு­ரிய விழா­வில், இஸ்­லா­மி­யக் கல்வி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் நிறு­வ­னர், 93 வய­தா­கின்ற பெரி­ய­வர் சமீர் அக­மது அவர்­க­ளுக்கு `வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது’ வழங்­கு­வ­தில் நாங்­கள் அனை­வ­ரும் மிகுந்த பெருமை அடை­கி­றோம். அவ­ருக்கு எனது வாழ்த்­து­கள். அவ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் எங்­க­ளது நன்­றி­யை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கல்­விச்­சேவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பாராட்­டத்­தக்­கது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">91 வய­தி­லும் இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ராக, சிறப்­பா­கச் செயல்­ப­டு­கின்ற புதுக் கல்­லூ­ரி­யின் முன்­னாள் தலை­வர் பெரி­ய­வர் ஆடிட்­டர் முக­மத் கலீல் அவர்­க­ளுக்­கும் இங்கு விருது வழங்­கப்­பட்டு இருக்­கி­றது. அவ­ருக்­கும், அவ­ரின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் எங்­க­ளின் வாழ்த்­து­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை பல்­க­லைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் துணை­வேந்­தர் பெரி­ய­வர் எஸ்.சாதிக் அவர்­க­ளும் இங்கு விருது பெற்­றுள்­ளார். அவ­ருக்­கும் எங்­க­ளது வாழ்த்­து­கள், பாராட்­டு­கள். அது­மட்­டு­மல்­லா­மல், 12 இஸ்­லா­மிய கல்வி அறி­ஞர்­கள் உட்­பட 13 ஆளு­மை­க­ளுக்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருதை வழங்­கு­வ­தில் நாங்­கள் மிகுந்த பெருமை அடை­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு கல்வி நிறு­வ­னத்தை நடத்­து­வது என்­பது அவ்­வ­ளவு சாதா­ர­ண­மான விஷ­யம் இல்லை. ஆனால், நீங்­களோ கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான கூட்­ட­மைப்­பையே 50 ஆண்­டு­க­ளாக நடத்­திக்­காட்டி இருக்­கி­றீர்­கள் என்­றால் அது உங்­க­ளின் உழைப்­பிற்கு கிடைத்த வெற்றி. உண்­மை­யி­லேயே இது ஒரு சவா­லான விஷ­யம். அதை மிகச் சரி­யாக, சிறப்­பாக நீங்­கள் செய்து இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1974–இல் தொடங்­கப்­பட்ட இந்த கூட்­ட­மைப்­பில் இன்­றைக்கு கிட்­டத்­தட்ட 520 கல்வி நிறு­வ­னங்­கள் இருப்­பது மிக­வும் பாராட்­டத்­தக்­கது. இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான குர­லாக நீங்­கள் அனை­வ­ரும் இருக்­கி­றீர்­கள். அர­சுக்­கும், இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கு­மான ஒரு பால­மாக உங்­க­ளின் அமைப்பு செயல்­ப­டு­கி­றது என்­றால் அது மிகை­யல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கற்­பிப்­பதே சிறந்த தானம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல சம­யங்­க­ளில் இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிற கல்வி நிறு­வ­னங்­க­ளின் உரி­மைக்கு குரல் கொடுப்­ப­தும் நீங்­கள்­தான் என்­றுச் சொன்­னால் அது­வும் மிகை­யா­காது. நபி­கள் நாய­கம் கூறிய வாழ்க்கை நெறி­மு­றை­க­ளில், முக்­கி­ய­மான ஒன்றை இங்கு குறிப்­பிட விரும்­பு­கி­றேன். கற்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்­ப­வ­னாக இரு. இந்த மூன்­றை­யும் தவிர நான்­கா­வது நப­ராக கண்­டிப்­பாக இருந்து விடாதே என்­ப­து­தான் நபி­கள் நாய­கம் அவர்­கள் சொன்ன வார்த்தை.  ஒரு முஸ்­லிம் தானும் கல்வி கற்று, பிற­ருக்­கும் கல்வி கற்­றுக் கொடுப்­பதே தான தர்­மங்­க­ளில் சிறந்­த­தா­கும் என்று நபி­கள் நாய­கம் கூறி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எல்­லோ­ருக்­கும் கல்வி கொடுக்­கப்­பட வேண்­டும் என்று நபி­கள் சொன்­னார்­கள். அதைத்­தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் தொடர்ந்து இந்த மண்­ணிலே சொல்லி வரு­கி­றது, செய்து வரு­கி­றது. இப்­போ­து­கூட, பிற்­ப­டுத்­தப்­பட்ட, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளின் கல்வி உரி­மை­யைப் பாது­காக்­கத்­தான் நம் திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு தொடர்ந்து பாடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றது. தமிழ்­நாட்­டின் கல்வி வளர்ச்­சி­யில், இஸ்­லா­மிய, கிறிஸ்­துவ கல்வி நிறு­வ­னங்­க­ளின் பங்கு மிகப்­பெ­ரி­யது. அந்த வரி­சை­யில் இன்­றைக்கு இந்த புதுக் கல்­லூரி, காயிதே மில்­லத் கல்­லூரி, ஜமால் முக­மது கல்­லூரி இப்­படி நிறைய கல்­லூ­ரி­க­ளின் பெயரை நாம் சொல்­லிக்­கொண்டே போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பாசி­சத்தை எதிர்த்து சேவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் கல்­விக்கு கிடைத்த மாபெ­ரும் கொடை­யா­கத் திக­ழும் சிறு­பான்மை கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு களங்­கம் ஏற்­ப­டுத்த பாசிச கூட்­டம் அவ­தூ­று­க­ளை­யும், வதந்­தி­க­ளை­யும் தொடர்ந்து பரப்பி வரு­கி­றது. இது­போன்ற சவால்­களை எல்­லாம் எதிர்­கொண்­டு­தான் இப்­போ­தும் இந்த சிறு­பான்மை கல்வி நிறு­வ­னங்­கள் தொடர்ந்து சிறப்­பாக கல்வி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இதற்­காக உங்­க­ளுக்கு எவ்­வ­ளவு நன்றி சொன்­னா­லும், எவ்­வ­ளவு பாராட்­டி­னா­லும் அது போதாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் வர­லாறு அப்­ப­டி­யா­னது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த கல்வி நிறு­வ­னங்­க­ளில் படித்து, வாழ்க்­கை­யில் உயர்ந்த நிலை­யில் இருக்­கின்ற இலட்­சக்­க­ணக்­கான மாண­வர்­க­ளுக்கு, நம் கல்வி நிறு­வ­னங்­க­ளின் முக்­கி­யத்­து­வம் நிச்­ச­யம் தெரி­யும்.  இப்­படி சிறு­பான்மை கல்வி நிறு­வ­னங்­கள் ஆற்றி வரும் கல்­விச் சேவையை அங்­கீ­க­ரிக்­கின்ற வகை­யில்­தான் திரா­விட மாடல் அர­சின், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கடந்த ஆண்டு, ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டார். பொது­வாக, நம் ஆட்சி வரு­வ­தற்கு முன்­பாக மாநில அர­சால் சிறு­பான்­மை­யி­னர் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற ‘ரிலீ­ஜி­யஸ் மைனா­ரிட்டி’ சான்­றி­தழை ஒவ்­வொரு ஐந்­தாண்­டுக்­கும் புதுப்­பிக்க வேண்­டும்.  உங்­க­ளின் கோரிக்­கையை ஏற்று, அந்த நிலையை மாற்றி அதை நிரந்­த­ரச் சான்­றி­த­ழாக வழங்­கிய பெருமை நம் திரா­விட மாடல் அர­சிற்­கும், நம் மாண்­பு­மிகு முத­ல­மைச்­ச­ருக்­கும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மிய மக்­கள் கல்வி கற்று, வேலை­வாய்ப்­பும் பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில்­தான் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு 3.5% உள் இட ஒதுக்­கீட்­டினை வழங்­கி­னார்­கள். ‘எல்­லோ­ருக்­கும் எல்­லாம்’ என்­கின்ற அந்த உயர்ந்த தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் நடக்­கும் அர­சு­தான் நம் திரா­விட மாடல் அரசு. ஆனால், எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைக்­கக்­கூ ­டாது என்று நினைப்­ப­வர்­கள் நம் திரா­விட மாடல் அர­சிற்கு பல நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, இப்­போது மாநில அர­சின் அனு­மதி இல்­லா­மல் ஒன்­றிய அரசே பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு துணை வேந்­தர்­களை நிய­மிக்­க­லாம் என்ற ஒரு வரைவை யு.ஜி.சி. மூலம் கொண்­டு­வர திட்­ட­மிட்­டுள்­ளார்­கள்.  இந்த யு.ஜி.சி. விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கத் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் தீர்­மா­னமே நிறை­வேற்றி இருக்­கி­றார். அது­மட்­டு­மல்ல, வக்பு வாரிய திருத்த மசோ­தா­வை­யும் ஒன்­றிய அரசு கொண்டு வர முயற்­சிக்­கி­றார்­கள்.  பாரா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­வில் நம் கழ­கக் கூட்­டணி எம்.பி.க்கள் இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றார்­கள். அத­னால் கிட்­டத்­தட்ட 10 எம்.பி.க்களை என்ன, ஏது என்று கேட்­கா­மலே பா.ஜ.க ஒன்­றிய அரசு தற்­கா­லிக இடை நீக்­க­மும் செய்து இருக்­கி­றது.  ஆனா­லும், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இஸ்­லா­மிய மக்­களை பாதிக்­கின்ற, அந்த முடிவை உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும் என்று உறு­தி­யோடு செயல்­பட்டு வரு­கி­றார். ஏனென்­றால், கழ­கத்­தின் வர­லாறு அப்­படி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கலை­ஞர் செய்த அரும்­ப­ணி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெரி­ய­வர் காயிதே மில்­லத் காலத்­தி­லி­ருந்தே கழ­க­மும், இஸ்­லா­மிய மக்­க­ளும் ஒன்­றோடு ஒன்று பின்­னிப் பிணைந்து ஓர் உறவை நாம் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறை கொடி இருக்­கின்ற ஒவ்­வொரு வீட்­டி­லும், கருப்­பு–­­சி­வப்­புக் கொடி­யும் பறக்­கும் என்­பது உங்­கள் அத்­த­னைப்­பே­ருக்­கும் தெரி­யும்.  கழக ஆட்­சி­யின் போதெல்­லாம் இஸ்­லா­மிய மக்­க­ளுக்­கான திட்­டங்­க­ளைப் பார்த்து, பார்த்து நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரும் செய்து இருக்­கி­றார்­கள். 1973–ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் உருது பேசும் முஸ்­லிம்­களை பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில் சேர்க்க வேண்­டும் என்ற கோரிக்­கையை ஏற்று உடனே அர­சா­ணையை பிறப்­பித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2007–ஆம் ஆணடு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போ­து­தான் சிறு­பான்­மை­யி­னர் நல இயக்­கு­ந­ர­கம் உரு­வாக்க்­கப்­பட்­டது. 2009–ஆம் ஆண்­டில் கழக ஆட்சி காலத்­தில்­தான் உல­மாக்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள் நல வாரி­யம் அமைக்­கப்­பட்டு, பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. சென்னை அண்ணா சாலை­யில் உள்ள அர­சி­னர் மக­ளிர் கல்­லூ­ரிக்கு கயிதே மில்­லத் அரசு மக­ளிர் கல்­லூரி எனப் பெயர் சூட்­டி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். அதே­போல் மிலாடி நபிக்கு அரசு விடு­முறை வழங்­கி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள். சென்னை பல்­க­லைக் கழ­கத்­தில் இஸ்­லா­மிய ஆய்வு மையத்தை நிறு­வி­ய­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள்.  இப்­படி ஏரா­ள­மான திட்­டங்­களை நாம் அடுக்­கிக்­கொண்டே 
போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கழ­கம் துணை நிற்­கும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த நிகழ்ச்­சி­யில் உரி­மை­யோடு பல கோரிக்­கை­களை அர­சுக்கு நீங்­கள் வைத்து இருக்­கி­றீர்­கள்.  நிச்­ச­ய­மாக இந்த கோரிக்­கை­களை முத­ல­மைச்­ச­ரின் கவ­னத்­திற்கு எடுத்­துச் சென்று நீங்­கள் எந்த உரி­மை­யோடு சொன்­னீர்­களோ, அதே உரி­மை­யோடு நாங்­கள் நிறை­வேற்­றித் தரு­வோம், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நிறை­வேற்­றித் தரு­வார்.  நம் திரா­விட மாடல் அரசு நிறை­வேற்றி தரும் என்ற வாக்­கு­று­தியை இங்கு கொடுக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இஸ்­லா­மிய மக்­க­ளின் பாது­காப்­புக்­கும், உங்­க­ளின் கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­புக்­கும் கழ­கம் என்­றைக்­கும் துணை நிற்­கும். அய­ராது பாடு­ப­டும்.  சிறு­பான்மை மக்­கள் நீங்­க­ளும் நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு துணை­யாக இருக்க வேண்­டும் என்று உங்­களை எல்­லாம் கேட்­டுக் கொள்­கி­றேன். இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­க­ளின் கூட்­ட­மைப்பு இன்­றைக்கு பொன்­விழா காண்­கி­றது. அதன் கல்­விச் சேவை இன்­னும் பல நூற்­றாண்­டு­களை காண அன்­போடு வாழ்த்தி, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைச்­சர் கோவி.செழி­யன், வக்பு வாரி­யத் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நவாஸ் கனி, சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் தமிழ்­நாடு ஹஜ் கமிட்­டித் தலை­வ­ரு­மான அப்­துல் சமது, சென்னை மேற்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும் மாந­க­ராட்சி நிலைக்­கு­ழுத் தலை­வ­ரு­மான நே. சிற்­ற­ரசு, பகுதி கழ­கச் செய­லா­ள­ரும் மாந­க­ராட்சி மண்­ட­லக் குழுத் தலை­வ­ரு­மான எஸ். மதன்­மோ­கன்,இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் தலை­வர் ஆசிம், பொதுச் செய­லா­ளர் அக­மத் மீரான், சென்னை பல்­க­லைக்­க­ழக முன்­னாள் துணை­வேந்­தர் முனை­வர் சாதிக், மியாசி அமைப்­பின் தலை­வர் இம்­தி­யாஸ் பாஷா, செய­லா­ளர் இலி­யாஸ் சேக், ஆற்­காடு நவாப் அப்­துல் அலி, ஊட­க­வி­ய­லா­ளர் தமிழ்க்­கேள்வி செந்­தில்­வேல், த.மு.மு.க. பொதுச் செய­லா­ளர் ஹாஜா கனி, மாமன்ற உறுப்­பி­னர் ஈஸ்­வரி வெங்­க­டே­சன், புதுக் கல்­லூரி முதல்­வர் கமர், அய­ல­கத் தமி­ழர் நல­வா­ரிய உறுப்­பி­னர் பைசன், நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்­பா­ளர் பாத்­திமா முசா­பர், பல்­வேறு கல்­லூ­ரி­க­ளின் பேரா­சி­ரி­யர்­கள் மாண­வர்­கள் உள்­பட பல­ரும் கல்ந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>