<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,67,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 03 2025 04:47:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032025-CHN-11" position.sequence="11" ex-ref="03032025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="86">உரிமைக்குக் குரல் எழுப்பும் பெருமைக்குரிய முதல்வர்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் – அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னின்று நடத்திய    கழகத் தலைவர் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் – ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் புகழாரம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="photo1.3.202_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சென்னை, மார்ச் 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் மாவட்­டச் செய­லா­ளர் – அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு, திரு.வி.க. நகர் தொகு­தி­யில் முன்­னின்று நடத்­திய 
கழ­கத் தலை­வர் – முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் பிறந்த நாள் விழா மாபெ­ரும் பொதுக்­கூட்­டத்­தில் ‘தின­மணி’ ஆசி­ரி­யர் வைத்­திய நாதன் அவர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­கை­யில், “உரி­மைக்­குக் குரல் எழுப்­பும் பெரு­மைக்­கு­ரிய முதல்­வர், நமது முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்!” என்று புக­ழா­ரம் சூட்­டி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">விழாவில் தின­மணி ஆசிரியர் வைத்­தி­ய­நா­தன் அவர்­கள் ஆற்­றிய உரை 
வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எனக்­கும், பிறந்­த­நாள் காணும் முதல்­வ­ருக்­கும் வர­லாற்­றுத் தொடர்பு உண்டு. அவ­ரது வர­லாற்­றில் நான் இடம்­பெ­றா­விட்­டா­லும், எனது வர­லாற்­றில் அவர் நிச்­ச­ய­மாக இடம் பெறு­வார். ஏனென்­றால், அவ­ரு­டைய முத­லா­வது அர­சி­யல் பேட்­டியை எடுத்­த­வன் என்ற பெரு­மை­யும், பெரு­மி­த­மும் எனக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அவர் இளை­ஞ­ர­ணித் தலை­வ­ரா­ன­போது, அவரை நான் பேட்டி எடுத்­த­தும், “அதை நீங்­கள் ஒரு­முறை பார்க்­கி­றீர்­களா?’ என்று நான் கேட்­ட­போது, அவ­ரது தந்­தை­யார், “நான் படித்­துப் பார்க்க வேண்­டாம்’ என்று சொன்­ன­தும், இப்­போ­தும் என் நினை­வில் நிழ­லா­டு 
­கின்­றன. அதற்கு இரண்டு கார­ணங்­கள் இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">அசைக்க முடியாத நம்பிக்கை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஒன்று, எனக்கு தரப்­பட்ட பாராட்டு!  “பேட்டி எடுத்­த­வர் நீங்­கள். அது எப்­படி வந்­தி­ருக்­கி­றது என்று நான் பார்க்க வேண்­டி­ய­தில்லை. நீங்­கள் நன்­றாக எடுத்­தி­ருப்­பீர்­கள் என்று எனக்­குத் தெரி­யும்’ என்று கலை­ஞர் அவர்­கள் என்­மீது வைத்­தி­ருந்த நம்­பிக்­கை­யின் வெளிப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அதற்கு இன்­னொரு கார­ண­மும் உண்டு. “பேட்டி தந்­தி­ருப்­பது எனது மகன். எனக்­குப் பிறகு இந்­தக் கட்­சி­யை­யும், அந்­தக் கட்சி நடத்­தும் ஆட்­சி­யை­யும் தலைமை தாங்கி வழி­ந­டத்த இருப்­ப­வர். அவர் என்ன சொல்லி இருப்­பார், எப்­படி உங்­க­ளது பேட்­டி­யில் கேள்­வி­களை எதிர்­கொண்­டி­ருப்­பார் என்று எனக்­குத் தெரி­யும். அதை நான் படித்­துப் பார்க்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அச்­சில் பார்த்­துக் கொள்­கி­றேன்’ என்­கிற தனது மக­னும் அர­சி­யல் வாரி­சு­மான மு.க. ஸ்டாலின் மீது அவர் வைத்­தி­ருந்த அசைக்­க­மு­டி­யாத நம்­பிக்கை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஏறத்­தாழ அரை நூற்­றாண்டு காலம் அவ­ரு­ட­னான தொடர்­பும்; அவர் மீது நான் வைத்­தி­ருக்­கும் அளப்­ப­ரிய மரி­யா­தை­யும், அன்­பும்; அவர் என் மீது 
காட்­டு­கின்ற பரி­வும், நெருக்­க­மும் 
அதற்­கா­கத்தான் இந்த விழா­விற்கு நான் வந்­தி­ருக்­கி­றேன். முதல்­வ­ரின் பிறந்­த­நா­ளில் அவரை வாழ்த்­திப் பேச விழைந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">என்னை அழைத்­தி­ருப்­பது, இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­ச­ராக இருக்­கும் மாண்­பு­மிகு பி.கே.சேகர்­பாபு அவர்­கள். அவர் அமைச்­சர் என்­கின்றமுறை­யில் என்னை அழைக்­க­வில்லை.நான் “தின­மணி’ ஆசி­ரி­யர் என்­ப­தற்­கா­க­வும் என்னை அவர் அழைக்­க­வில்லை. அவர் அமைச்­ச­ராக இல்­லா­விட்­டா­லும்  நான் தின­மணி ஆசி­ரி­ய­ராக இல்­லா­விட்­டா­லும்நான் அழைத்­தால் அவர் வரு­வார்; அவர் அழைத்­தால் நான் வரு­வேன். எனக்­கும் அவ­ருக்­கு­மான தொடர்­பும், நட்­பும் அத்­த­கை­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இன்­னொன்­றை­யும் நான் இந்த இடத்­தில் பதிவு செய்ய விரும்­பு­கி­றேன். ஒரு கட்­சி­யி­லி­ருந்து அவர் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டு வெளி­யே­றி­ய­போது, “அடடா, இப்­படி வெளி­யேற்­று­கி­றார்­களே... அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்டுஅனுப்­பு­கி­றார்­களே... இவர் என்ன செய்­யப் போகி­றார்?’’ என்று ஒரு நிமி­டம் நான் திடுக்­கிட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">அப்­போது நான் நினைத்­துக் கொண்­டேன். “எந்த ஒரு காரி­யத்­திற்­கும் ஒரு கார­ணம் இருக்­கும்’ என்று. இப்­போது எனக்­குத் தெரி­கி­றது, இவர் சேர வேண்­டிய இடத்­திற்கு இவ­ரைக் கொண்டு போய் சேர்க்க வேண்­டும் என்­ப­தற்­கா­கக் காலம் அவரை திசை திருப்­பி­விட்­டது என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">தனது பேச்­சி­லும் மூச்­சி­லும் அனு­மன் ராமனை நினைப்­பது போல, தனது தலை­வனை இணைத்­துக்­கொண்ட தொண்­ட­னைப் பாராட்­டு­வதா இல்லை, தொண்டைப் பாராட்­டு­வதா? இல்லை, “இவ­ரி­டம் இத்­தனை திற­மை­கள் இருக்­கின்­றன. இவர் என்­னு­டன் நிழ­லா­கத் தொட­ரும் தகுதி படைத்­த­வர்’ என்று இணைத்­துக்­கொண்ட தலை­வ­ரைப் பாராட்­டு­வதா?  அவை இரண்­டு­மே­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">பம்பரமாகச் சுழன்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">செயல்படுகிறார்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">விமான நிலை­யத்­தி­லி­ருந்து வரும்­போது சுவ­ரொட்டி ஒன்று பார்த்­தேன். அந்த சுவ­ரொட்­டி­யில் “ஏ.எம்., பி.எம். என்று பாரா­மல் ஒவ்­வொரு நொடி­யும் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் சி.எம்.’ என்று முதல்­வர் மு.க. ஸ்டாலினை குறிப்­பிட்­டி­ருந்­தார்­கள். தலை­வர் எவ்­வழி, தொண்­டர் அவ்­வழி. அத­னால்­தானோ என்­னவோ, அமைச்­சர் சேகர்­பாபு உள்­ளிட்ட இன்­றைய தி.மு.க. அமைச்­ச­ர­வை­யின் எல்லா அமைச்­சர்­க­ளும் முதல்­வ­ருக்கு ஈடு­கொ­டுக்­கப் பம்­ப­ர­மா­கச் சுற்­றிச் சுழன்று செயல்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எண்­ப­து­க­ளில், அதா­வது நாற்­பது ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் அன்­றைய திமுக தலை­வர் கலை­ஞரு­டன் தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளில் ஒரு­வ­னா­கப் பய­ணித்த அனு­ப­வம் எனக்கு உண்டு. பத்­தி­ரி­கை­யா­ளர்­களை விடுங்­கள்; அவ­ரது உத­வி­யா­ளர்­கள், கட்­சித் தலை­வர்­கள் எல்­லோ­ருமே அவ­ரது வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் திண­று­வ­தைப் பார்த்து நான் மலைத்­துப் போயி­ருக்­கி­றேன். முத்­து­வே­லர் கரு­ணா­நி­தி­யின் மகன் வேறு எப்­படி இருந்­து­விட முடி­யும்? ஏ.எம்., பி.எம். பாரா­மல் சி.எம். பணி­யாற்­று­வ­தில் ஆச்­ச­ரி­யப்­பட ஒன்­றும் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முன்­மொ­ழிந்த இரண்டு திட்­டங்­கள் ஒன்று, மக­ளி­ருக்கு இல­வச பேருந்­துப் பய­ணம்; இன்­னொன்று, மக­ளிர்உரி­மைத் தொகைத்திட்டம். இவை இரண்­டை­யும் தேர்­த­லில் வெற்றி பெற்று தமி­ழ­கம் நிறை­வேற்­றிய பிறகு, இன்று இந்­தி­யா­வின் எந்த மாநி­ல­மாக இருந்­தா­லும் தேர்­தல் நடப்­ப­தாக இருந்­தால், இந்த வாக்­கு­று­தி­க­ளைக் கொடுத்­து­தான் வெற்றி அடை­கி­றார்­கள்; ஆட்­சி­யைப் பிடிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இந்த முறை சரியா? என்­பது குறித்து எனக்கு கருத்து வேறு­பாடு உண்டு. நான் இது சரி­யான முறைஎன்­றெல்­லாம் ஏற்­றுக் கொள்­ளத் தயா­ராக இல்லை. இதன் பொரு­ளா­தா­ரப் பின்­ன­ணியை யோசிக்க வேண்­டும் என்று அறி­வு­ஜீ­வித்­த­ன­மா­க­தான் என்­னால் யோசிக்க முடி­கி­றது. ஆனால், களத்­தில் இருந்து அர­சி­யல் விளை­யா­டு 
­ப­வர்­க­ளுக்கு அறி­வு­ஜீ­வித்­த­ன­மாக யோசித்­தால் மட்­டும் போதாது; அடித்­தட்டு மக்­க­ளின் உணர்­வு­க­ளை­யும், தேவை­க­ளை­யும் உணர்ந்து செயல்­பட்­டாக வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">மையப்புள்ளியாக தமிழ்நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஜன­நா­யகத்­தில் மாற்­றுக் கருத்தை முன்­மொ­ழி­யும் மாநி­ல­மாக, கூட்­டாட்­சித் தத்­து­வத்­துக்கு உரக்கக் குரல் எழுப்­பும் மாநி­ல­மாக, தேசிய அள­வில் எதிர்க்­கட்­சி­கள் ஒருங்­கி­ணை­வ­தற்­கான மையப்­புள்ளி மாநி­ல­மாக இன்று இந்­தியா தமி­ழ­கத்­தைப் பார்க்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">மாற்­றுக் கருத்­துக்கு இடம் இருந்­தால் மட்­டும்­தான் அது ஜன­நா­ய­கம். அந்த மாற்­றுக் கருத்தை வலி­மை­யாக, இன்­னும் உரத்த குர­லில் எழுப்­பு­கின்ற ஒரே ஒரு மாநி­ல­மாக தமி­ழ­கம் மட்­டும்­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">ஒரு மனி­தன் விமர்­ச­னமே இல்­லா­மல் இருந்­தால், அந்த மனி­தன் செய்­கின்ற தவ­று­கள் வெளி­யில் வரவே வராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“இடிப்­பாரை இல்­லாத ஏமரா 
			 மன்­னன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கெடுப்பா ரிலா­னுங் கெடும்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">என்­பார் வள்­ளு­வப் பேரா­சான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் எப்­படி இருக்க வேண்­டும் என்று சொன்­னால், ஆட்­சி­யா­ளர்­கள் நிர்­வா­கத்தை நடத்த வேண்­டும். ஆட்­சி­யின் தவ­று­களை எதிர்க்­கட்­சி­யி­னர் எடுத்­து­ரைக்க வேண்­டும், இடித்­து­ரைக்க வேண்­டும். ஆனால், அப்­படி இல்­லாத ஒரு நிலைமை ஏற்­பட்­டு­ வி­டுமோ என்­கிற ஒரு சூழ­லில், துணிந்து எதிர்க் கருத்தை எடுத்து வைக்­கின்ற ஒரு மாநி­ல­மாக மாநி­லத்­தின் முதல்­வ­ராக, தமி­ழ­க­மும்  தமி­ழ­கத்­தின் முதல்­வ­ரும் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">நாடா­ளு­மன்­றம் என்­பது ஆளுங்­கட்­சி­யி­ன­ரு­டை­யது அல்ல; எதிர்­கட்­சி­யி­ன­ரு­டை­யது என்று சொல்­வார்­கள். “ஆப்­போ­சி­ஸன் ஷுட் ஹேவ்  இட்ஸ் úஸ... கவர்ன்­மென்ட்ஹேஸ் இட்ஸ் வே!’ என்று சொல்­வார்­கள். எதிர்க்­கட்சி தன்­னு­டைய கருத்­து­க­ளைப் பதிவு செய்­கின்ற இடம் நாடா­ளு­மன்­றம். அவர்­கள் அர­சின் திட்­டங்­க­ளை­யும் கொள்­கை­க­ளை­யும் விமர்­சித்­துப் பேசு­வ­தற்­கான இடம். சட்­டங்­க­ளை­யும்  மசோ­தாக்­களை­யும் தங்­க­ளு­டைய பெரும்­பான்மை பலத்­தால் நிறை­வேற்­றிக் கொள்­வ­து­தான் ஆளுங்­கட்சி. இது­தான் வழி­முறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">இப்­போது, சமீப கால­மாக அந்த வழி­மு­றை­கள் எல்­லாம் மாறி­விட்­டன. விவா­தமே இல்­லா­மல் நாடா­ளு­மன்­றத்­தில் மசோ­தாக்­கள் சட்­ட­மா­கின்­றன. இது ஆரோக்­கி­ய­மான ஜன­நா­ய­கம் அல்ல என்ற மனக்­கு­றையை மாற்­று­கின்ற விதத்­தில், எங்­கேயோ இருந்து ஒரு குரல் எழும்­பு­கி­றது என்று சொன்­னால், அது சென்னை சென­டாப் சாலை­யி­லி­ருந்­தும்  சென்னை கோட்­டை­யி­லி­ருந்­தும் மட்­டும்­தான். அதற்­காக முதல்­வரை நாம் பாராட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">எதிர்க்­கட்­சி­கள் வேண்­டாம் என்று கரு­து­கின்ற ஒரு சூழ்­நிலை வரு­மா­னால், ஜன­நா­ய­கம் தோற்­று­வி­டும். ஜன­நா­ய­கம் தோற்­று­விட்­டால், இந்­திய தேசம் தோற்­று­வி­டும். எனவே, அதற்கு எதி­ரா­கக் குரல் எழுப்­பிக் கொண்­டி­ருக்­கும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வ­ரின் பிறந்­த­நாள் என்­ப­தால் நான் வர­வேற்­க­வும், பாராட்­ட­வும், வாழ்த்­த­வும் நான் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">வேறெந்த மாநிலமும்
சிந்திக்காத திட்டங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">நான்கு ஆண்­டு­க­ளில் தொடர்ந்து இந்த ஆட்சி செய்­தி­ருக்­கின்ற  அறி­வித்­தி­ருக்­கின்ற பல திட்­டங்­களை நமது நண்­பர்­கள் எடுத்­து­ரைத்­தார்­கள். மக­ளிர் உரி­மைத் தொகை­யா­கட்­டும்; காலை உண­வுத் திட்­ட­மா­கட்­டும்; நான் முதல்­வன் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டம், இல்­லம் தேடிக் கல்­வித் திட்­டம், கனவு இல்­லம் திட்­டம்  இப்­படி எத்­தனை எத்­த­னையோ திட்­டங்­கள். அத்­த­னை­யும் இதற்கு முந்­தைய ஆட்­சி­க­ளில் மட்­டு­மல்ல, ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வில் உள்ள வேறு எந்த மாநி­ல­மும் சிந்­தித்­துப் பார்க்­காத திட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">வட சென்­னைக்­காக வளர்ச்­சித் 
திட்­டமே தீட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. “இந்­தி­யா­வில் வடக்கு வாழ்­கி­றது; தெற்கு தேய்­கி­றது’ என்று அரை நூற்­றாண்­டுக்கு முன்­னால் சொன்­னார்­கள். சென்னைமாந­க­ரத்­தைப் பொருத்­த­வரை, தெற்­கு­தான் வளர்ந்து கொண்டே இருக்­கி­றது. வடக்கு தேய்ந்து கொண்­டே­தான்இருக்­கி­றது. அதை மாற்­று­வ­தற்­கா­கத்­தான் காலம் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலை­மை­யில் இப்­போ­தைய திமுக ஆட்­சி­யைக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">டாக்­டர் கலா­நிதி வீரா­சாமி வட சென்னை மக்­க­ளவை உறுப்­பி­னர்; மாந­கர மேயர் திரு­மதி. பிரியா ராஜன் வட சென்­னை­யைச் சேர்ந்­த­வர்; நம்­மு­டைய இந்து சமய அற­நி­லைத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு வட சென்­னை­யி­லி­ருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 
சட்­டப்­பே­ரவை உறுப்­பி­னர் மட்­டு­மல்­லா­மல், தி.மு.­க.­வின் சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ள­ரும்­கூட. அதை­வி­டச் சிறப்பு என்­ன­வென்­றால், நமது தமி­ழக முதல்­வரே வட சென்­னைக்கு உள்­பட்ட கொளத்­தூர் சட்­டப்­பே­ர­வைத் தொகு­தி­யி­லி­ருந்து தொடர்ந்து தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­ப­வர். எனவே இந்த ஆட்­சி­யில் இல்­லா­மல் வேறு எந்த ஆட்­சி­யி­லும் வட சென்னை, தென் சென்­னைக்கு நிக­ராக வளர்ந்­து­வி­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">இந்த ஆட்சி தொடர வேண்டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் வட சென்னை அடைந்­தி­ருக்­கும் வளர்ச்­சி­யும், வட சென்­னை­யில் உரு­வாகி வரும் கட்­ட­மைப்பு வச­தி­க­ளும், நிறை­வேற்­றப்­ப­டும் திட்­டங்­க­ளும் விரை­வி­லேயே தென் சென்­னையை விஞ்­சும் வித­மாக வட சென்­னையை மாற்றி விடும் என்­கிற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­து­கி­றது. அதற்­கா­கவே இந்த ஆட்சி தொடர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">முதல்வரின் வலிமையால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13.5">தமிழகம் உயர வேண்டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">“தின­ம­ணி’­­யை­யும், ஆசி­ரி­யர் உரை­யை­யும் படித்­து­விட்டு பல­ரும் கேட்­பார்­கள், “எப்­படி நீங்­கள் தினந்­தோ­றும் அந்த ஆசி­ரி­யர் உரைக்­குப் பொருத்­த­மாக ஒரு திருக்­கு­றள் தரு­கி­றீர்­கள் என்று’. வள்­ளு­வப் பேரா­சா­னும், நானும் அன்­றா­டம் பய­ணிப்­ப­வர்­கள். எனவே, திருக்­கு­ற­ளைப் பிரித்து வைத்­தேன். முதல்­வ­ருக்­குப் பொருத்­த­மான சில குறள்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­தேன். ஏன் தேர்ந்­தெ­டுத்­தேன், அதன்­மூ­லம் என்ன செய்­தி­யைச் சொல்ல விரும்­பு­கி­றேன் என்­பதை அவ­ர­வர் சிந்­த­னைக்கே விட்­டு­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“பிரித்­த­லும் பேணிக் கொள­லும் 
			பிரிந்­தார்ப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பொருத்­த­லும் வல்ல தமைச்சு’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“இதனை இத­னால் இவன்­மு­டிக்­கும் 				என்­றாய்ந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அதனை அவன்­கண் விடல்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“சொல்­லு­தல் யார்க்­கும் எளிய 
			அரி­ய­வாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சொல்­லிய வண்­ணம் செயல்’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“சூழா­மல் தானே முடி­வெய்­தும் 
			தம்­கு­டி­யைத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தாழாது உஞற்று பவர்க்கு’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">“மகன்­தந்­தைக்கு ஆற்­றும் உதவி 				இவன்­தந்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">என்­நோற்­றான் கொல்­எ­னும் சொல்’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">குற­ளோ­வி­யம் தந்­த­வ­ரு­டைய மகன், குறள்­வழி அரிய சாத­னை­க­ளைப் படைத்­துக் கொண்­டி­ருக்­கும் இந்­தக் காலை­யில் அவ­ரு­டைய பிறந்­த­நாள் விழா இங்கு மிகச் சிறப்­பாக கொண்­டா­டப்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.இது இப்­போது மட்­டு­மல்ல, காலம் கால­மாக;  இன்று, நேற்று என்று இல்­லா­மல் என்­றென்­றும் தொடர்ந்து நடக்க வேண்­டும். முதல்­வர் அனைத்துநல­மு­ட­னும், வள­மு­ட­னும் அதுமட்­டும் போதாது, அர­சி­யல் வலி­மை­யு­ட­னும் திகழ வேண்­டும். அவ­ரு­டைய வலி­மை­யில் தமி­ழ­கம் உயர வேண்­டும். தமி­ழ­கத்­தின் வளர்ச்­சி­யால் இந்­தியா சர்­வ­தேச அள­வில் உயர்ந்து நிற்க வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.5">இவ்­வாறு  ‘தின­மணி’ ஆசி­ரி­யர் வைத்­தி­ய­நா­தன் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>