<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,793,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 03 2025 04:46:47 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032025-CHN-13" position.sequence="13" ex-ref="03032025-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="18">கழகத் தலைவர் – முதல்வர் பிறந்தநாளை – தமிழர் எழுச்சி நாளாக </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="24">கழக மீனவர் அணி சார்பில் நல உதவிகள் வழங்கிக் கொண்டாடுவோம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">அணிச் செயலாளர் அ.ஜோசப் ஸ்டாலின் அறிவிப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Anand1c_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை, மார்ச் 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முத­ல­மைச்­சர் கழ­கத்­த­லை­வர் அவர்­க­ளின் பிறந்­நாள் தமி­ழர் எழுச்சி நாளாக கழக மீன­வர் அணி­யி­னர் நல உத­வி­கள் வழங்கி மாநி­லம் முழு­வ­தும் கொண்­டா­டு­வோம் என  தி.மு.க. மீன­வர் அணி மாநில நிர்­வா­கி­கள் கூட்­டத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தி.மு.க. மாநில நிர்­வா­கி­கள் அவ­சர ஆலோ­ச­னைக் கூட்­டம் 27.-02.-2025 அன்று காலை 10 மணி­ய­ள­வில் திரு­வெற்­றி­யூர் கே.பி.சங்­கர் எம்.எல்.ஏ. இல்­லத்­தில் மாநில துணைத் தலை­வர்­கள் கே.பி.சங்­கர் எம்.எல்.ஏ., இரா.மதி­வா­ணன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் மீன­வர் அணிச் செய­லா­ளர் அ.ஜோசப் ஸ்டாலின் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கூட்­டத்­தில் மாநி­லத் துணைசெய­லா­ளர்­கள் வீ.பி.பொன்­ன­ரசு, மு.தம்­பித்­துரை, ஜி. மனோ­க­ரன், க.எரிக் ஜீடு, வக.ஜெய­பி­ர­காஷ், சி. புளோ­ரன்ஸ், ஆர். பத்­ம­நா­பன் ஆகி­யோர் கலந்து கொண்டு ஆலோ­ச­னை­கள் வழங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கூட்­டத்­தில் நிறை­வேற்­றப் பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மார்ச் 1-ல் 72-வது பிறந்­த­நாள் விழா காணும் முத­ல­மைச்­சர் கழ­கத்­த­லை­வர் தேசம் வியக்­கும் திரா­விட நாய­கர் முக. ஸ்டாலின் அவர்­க­ளின் பிறந்த நாளை கழக மீன­வர் அணி­யி­னர் மாவட்­டம், மாந­க­ரம், ஒன்­றி­யம், நகர பகு­தி­க­ளி­லும், மீனவ கிரா­மங்­கள் தோறும் கழ­கக் கொடி ஏற்றி, பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­கள் வழங்கி, நலத்­திட்ட உத­வி­கள் செய்துகொண்­டா­ட­வும், மார்ச் மாதம்முழு­வ­தும் மீன­வர்­களுக்கு படகு போட்­டி­கள், விளை­யாட்டு போட்­டி­கள், பள்ளி குழந்­தை­க­ளுக்கு நோட்­டுப் புத்­த­கங்­கள், விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் நலிந்த மீன­வர்­க­ளுக்கு உத­வி­கள் வழங்கி கொண்­டாட வேண்­டும் என தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">முத­ல­மைச்­சர் கழ­கத்­த­லை­வர் மீன­வர் நலன்­காக்­கும் திரா­விட நாய­கர் அவர்­கள் மீன­வர் நலன் சார்ந்து வழங்­கிய பல்­வேறு நல திட்­டங்­க­ளுக்­கா­க­வும் குறிப்­பாக கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் நீரோடி முதல் பழ­வேற்­காடு வரை உள்ள மீனவ கிரா­மங்­களை இயற்கை சீற்­றங்­க­ளில் இருந்­தும் கடல் அரிப்பு, போன்ற மீன­வர்­கள் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளுக்கு உறு­து­ணை­யாக, தூண்­டில் வளை­வு­கள் மீன்­பிடி இறங்­கு­த­ளங்­கள் துறை­மு­கங்­கள் என தமிழ்­நாடு அர­சின் சொந்த நிதி­யி­லி­ருந்து ரூபாய் ஆயி­ரம்­கோடி அள­விற்கு திட்­டங்­கள் நிறை­வேற்றி தந்­த­மைக்­கா­க­வும் கழக மீன­வர் அணி சார்­பாக நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">தமிழ்­நாட்­டி­லி­ருந்து வெளி­நாட்­டிற்கு மீன்­பிடி தொழி­லுக்கு செல்­லும் மீன­வர்­கள் கட­லில் எதிர்­நாட்டு கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு சிறை­யில் வாடிய மீன­வர்­களை மீட்­ப­தற்­கும் அவர்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­க­வும் கழ­கத்­தின் சார்­பில் அய­லக அணியை உரு­வாக்கி மீன­வர்­களை பாது­காப்­பாக தமிழ் நாட்­டிற்கு மீட்டு அழைத்து வந்­தற்­காக நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">மீன­வர் நலன் சார்ந்த முத்­தான திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இரா­மேஸ்­வ­ரத்­தில் நடை­பெற்ற மீன­வர் நல மாநாட்­டில் கலந்­து­கொண்ட முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இது­வரை எந்த முதல்­வ­ரும் செய்­தி­ராத வகை­யில் அந்த மாநாட்­டில் 1000 கோடி ரூபாய் அள­வில்மீன­வர் நலன் சார்ந்த முத்­தான  10 நலத்­திட்­டங்­களை அறி­வித்து அதை நிறை­வேற்றி தந்­த­மைக்­கா­வும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">கடந்த 18-.02.-2025 அன்று சென்னை தலை­மைச் செய­ல­கத்­தில் நடை­பெற்ற மீன­வர்­கள் நன்றி தெரி­விக்­கும் நிகழ்­வில் இரா­மேஸ்­வ­ரம் மீன­வர்­கள் வைத்த கோரிக்­கை­களை உட­ன­டி­யாக பரி­சீ­லனை செய்து ரூபாய் 360 கோடி நிதியை ஒது­கீடு செய்து நிறை­வேற்றி தந்த மீன­வர்­க­ளின் காவ­லர் முத­ல­மைச்­சர் – தலை­வர் மு.க. ஸ்டா லின் அவர்­க­ளுக்கு நன்­றி­யினை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளால் சிந்­தனை சிற்பி சிங்­கா­ர­வே­லர் அவர்­கள் மறைக்­கப்­பட்ட மாமேதை என­வும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் சென்­னை­யில் சிந்­தனை சிற்பி சிங்­கார வேலர் மாளிகை திறக்­கப்­பட்­ட­தும் சிங்­கார வேலர் பெய­ரில் மீன­வர் தொகுப்பு வீடு­கள் திட்­டம் தந்­தது என என்­றும் தி.மு.கழ­கத்­தால் போற்­றப்­ப­டும் சிந்­தனை சிற்பி சிங்­கார வேல­ருக்கு மேலும் மகு­ட­மாக சென்­னை­யில் சிங்­கார வேலர் நினை­வி­டம் உள்ள லேடி லெவிங்­டன் பள்­ளி­யின் பெயரை சிந்­தனை சிற்பி சிங்­கார வேலர் பள்ளி என பெயர் மாற்­றம் செய்­திட வேண்­டும் என்று தமிழ்­நாட்­டில் உள்ள மீன­வர் நலச்­சங்­க­ளின் கோரிக்­கையை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கனி­வு­டன் ஆய்வு செய்­திட வேண்­டும் என கழக மீன­வர் அணி சார்­பாக கோரிக்கை தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">சென்னை உள்­ளிட்ட தமிழ்­நாடு முழு­வ­தும் வர­லாறு காணாத கன­ம­ழை­யால் தத்­த­ளித்­த­போ­தும், புய­லால் சேத­ம­டைந்த பகு­தி­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று மக்­க­ளோடு மக்­க­ளாக நின்று அவர்­க­ளின் தேவை­களை போர்­கால அடிப்­ப­டை­யில் நிறை­வேற்றி தந்து நிவா­ர­ணம் அறி­வித்து அவர்­கள் துய­ரத்­தில் துணை நின்ற தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், அல்­லும் பக­லும் கொட்­டும் மழை­யி­லும் மக்­கள் குறை தீர்க்க களத்­தில் நின்ற தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் கழக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டா லின் அவர்­க­ளுக்­கும் கழக மீன­வர் அணி சார்­பாக நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">ஒன்­றிய அர­சின் தீய எண்­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்தி திணிப்பை என்­றும் எதிர்ப்­போம். தமிழ்­நாடு அர­சுப் பள்­ளி­க­ளில் இரு­மொ­ழிக் கொள்­கை­யில் பயின்று, உல­கத்­த­ரத்­திற்கு உயர்ந்த பல்­லா­யி­ரம் சாத­னை­யா­ளர்­களை பட்­டி­ய­லி­ட­லாம். தற்­போ­தைய கால­கட்­டத்­தில் பள்­ளிக்­குச் செல்­லும் பிள்­ளை­க­ளுக்கு பெரும் சவா­லாக உள்ள புத்­த­கச் சுமை­களை குறைப்­பது எப்­படிஎன்று பெற்­றோர்­கள் சிந்­திக்­கும் வேளை­யில் கணக்கு, அறி­வி­யல் போன்ற பாடங்­க­ளில் உள்ள கடி­னத் தன்­மையை, பெரும் சவா­லாக எடுத்து தின­மும் நமது மாண­வச் செல்­வங்­கள் கல்வி பயின்று வரும் நிலை­யில், கல்­வி­யி­லும் வேலை­ வாய்ப்­பி­லும் மிக மிக தாழ்ந்த நிலை­யில் உள்ள மீன­வர் சமு­தாய இளம் தலை­மு­றை­யி­னர் பாரம்­ப­ரி­ய­மான மீன்­பிடி தொழிலை விட்டு, உயர்­ப­டிப்­பு­கள் படித்து முன்­னேறி வேலை வாய்ப்­பு­களை பெற வேண்­டும் என முயன்று முன்­னே­றும், வேளை­யில், இந்தி என்ற மூன்­றா­வது மொழியை திணித்து வட நாட்­ட­வர் வாழ, தமிழ்­நாட்­ட­வர் வேலை வாய்ப்பை பெற முடி­யா­மல் தடுக்­கும் ஒன்­றிய அர­சின் தீய எண்­ணத்­தால், அதி­கார ஆண­வத் திமி­ரோடு கொண்­டு­வ­ரத் துடிக்­கும் மும்­மொழி கொள்­கையை, கட்­டாய இந்தி திணிப்பை தமிழ்­நாட்டு மீனவ மக்­க­ளும் ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை மேலும் இன்­னொரு மொழிப்­போரை தமி­ழர்­கள் மீது திணிக்க வேண்­டாம் என­வும் ஒன்­றிய கல்வி அமைச்­ச­ருக்­கும், ஒன்­றிய அர­சுக்­கும் கழக மீன­வர் அணி சார்­பாக கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கொள்­கி­றோம் என ஏக­ம­ன­தாக தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">மாவட்ட மீன­வ­ரணி நிர்­வா­கி­கள்: கே.தேசிங்கு து.அல்­லி­முத்து இரா.பிர­காஷ் எம்.எல்.வேலன், எஸ்.செல்­வம், டி.மகேந்­தி­ரன், ஆர்.கும­ரன்,  வி.ரமேஷ் எஸ்.கே.இளங்கோ, ஏ.சுரேஷ், நல்­ல­தம்பி, மதி­வா­ணன்,  கிரு­பா­னந்­தம், என்.சண்­மு­கம், கும­ரன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திராவிட இனத்தின் பேரரசர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடக்கு மாவட்டம் சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் 34 ஆவட்டம் சகாயம் நகரில் மாவட்ட துணைத் தலைவர் டி அசோக்ராஜ் தலைமையில் மாமன்ற உறுப்பினர் திருமதி ஷர்மிளா காந்தி கருணாநிதி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் பகுதி பொருளாளர் அ.செந்தூர் பாண்டியன் பகுதி துணைச் செயலாளர் எம் லதா மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆர் பி எஸ் சத்தீஸ்வரி தொழிலாளர் அணி தலைவர் சிந்தாமணி பாஸ்கரன் சிறுபான்மை நிலை உரிமை பிரிவு துணை அமைப்பாளர் மகிமைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு  இனிப்பு வழங்கினர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>