<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,377,957,1064" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:40:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-03" position.sequence="03" ex-ref="04042025-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="68">அர­சி­யல் சட்­டத்­தின் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தல்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="45">முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை...! முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உடனே நிகழ, மாற்­றம் என்­பது ‘Magic’ அல்ல;அது ஒரு ‘Process’! இந்­தப் பய­ணத்­தில், 2019–ஆம் ஆண்டு முதல் நாம் இணை பிரி­யா­மல் இருக்­கி­றோம். ஏன் என்­றால், நம்­மு­டைய இலக்கு என்ன – நாம் யாரை எதிர்க்க வேண்­டும் – எதற்­காக எதிர்க்க வேண்­டும் என்ற தீர்க்­க­மான முடி­வோடு இயங்­கிக்­கொண்டு இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள இந்­தக் கூட்­ட­ணி­யில் விரி­சல் ஏற்­ப­டாதா? என்று நப்­பா­சை­யோடு சில வெளி­ந­பர்­கள் தொடர்ந்து செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் எண்­ணம் நிச்­ச­யம் ஈடே­றாது! இங்கு இருக்­கும் யாரும், அதற்கு இடம் தர­வும் மாட்­டோம்! இந்­தக் கருத்­த­ரங்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மைதா­னத்­துக்கு – மழை­யின் கார­ண­மாக இந்த அரங்­கத்­தில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தோழர் சீத்­தா­ராம் யெச்­சூ­ரி­யின் பெய­ரைச் சூட்­டி­யி­ருப்­ப­தைப் பார்த்­த­போது, என் நெஞ்­சம் கனத்­தது. இந்­தி­யா­வின் தலை­சி­றந்த போரா­ளி­க­ளில் ஒரு­வர் நாமெல்­லாம் பெரு­ம­திப்பு வைத்­தி­ருந்த தோழர் யெச்­சூரி அவர்­கள்! அவ­ரின் இழப்பு, நமக்கு மட்­டு­மல்ல; இந்­தி­யா­வுக்கே மிகப்­பெ­ரிய இழப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">யெச்­சூ­ரி­யின் சிந்­த­னை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நம்மை வழி­ந­டத்­தும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தோழர் சீத்­தா­ராம் யெச்­சூரி அவர்­கள், பொது­வு­டைமை கொள்­கை­க­ளுக்­கா­கப் போரா­டி­ய­வர்!  எதேச்­சா­தி­கா­ரத்­தைக் கடு­மை­யாக எதிர்த்­த­வர்! சமத்­து­வச் சிந்­த­னை­யோடு சமூ­க­நீ­திச் சிந்­த­னையை இணைத்­த­வர்! மத­வா­தக் கருத்­து­க­ளை­யும் மூட­நம்­பிக்­கை­ க­ளை­யும் கடு­மை­யாக எதிர்த்­த­வர்!அவர் மறைந்­தா­லும், அவ­ரது சிந்­த­னை­கள் என்­றைக்­கும் நம்மை வழி­ந­டத்­தும் என்­ப­தற்கு அடை­யா­ள­மா­கத்­தான் இந்த மாநாட்டு எழுச்­சியை பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“கூட்­டாட்­சிக் கோட்­பாடே இந்­தி­யா­வின் வலிமை” என்று இன்­றைக்கு நாட்­டுக்­குத் தேவை­யான நாடு முழு­வ­தும் பேசப்­பட வேண்­டிய கருத்தை இந்­தக் கருத்­த­ரங்­குக்­குத் தலைப்­பாக வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டாட்சி என்ற சொல்லே இன்­றைக்கு ஒன்­றிய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு ‘அலர்ஜி’ ஆகி­விட்­டது. மாநில உரி­மை­க­ளுக்­கா­கப் பேசு­வது அவர்­க­ளுக்­குப் பிடிக்­க­வில்லை. ஒன்­றி­யத்தை ஆளும் பா.ஜ.க. அர­சின் எதேச்­சா­தி­கா­ரத் தன்­மை­யால் அதி­க­மாக பாதிப்­ப­டை­கின்­ற­வர்­க­ளில் முதன்­மை­யாக இருப்­பது, நானும் நம்­மு­டைய ‘சகாவு’ பின­ராயி விஜ­ய­னும்­தான்! அத­னால், இந்­தக் கருத்­த­ரங்­கில் நாங்­கள் பேசு­வதை நீங்­கள் வாக்­கு­மூ­ல­மா­கவே எடுத்­துக்­கொள்­ள­லாம்! அதைத்­தான் முன்பே பேசி­விட்­டுச் சென்­றி­ருக்­கி­றார். அதைத் தொடர்ந்து நானும் பேச வந்­தி­ருக்­கி­றேன். ‘பிர­தர்’ என்­றார், உண்­மை­தான். எனக்கு அவர் மூத்த சகோ­த­ரர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசு என்­பது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டத்­தில் இருப்­ப­து­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் முதல் வரியே, “பல்­வேறு மாநி­லங்­க­ளால் ஆன ஒன்­றி­யம்­தான் இந்­தியா” என்று தெளி­வாக குறிப்­பிட்­டி­ருக்­கி­றது. அத­னால்­தான், ‘ஒன்­றிய அரசு’ என்று சொல்­கி­றேன். சட்­டத்­தில் இல்­லா­ததை நான் சொல்­ல­வில்லை. ஆனால், அதையே அவர்­க­ளால் தாங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. அதி­கா­ரம் பர­வ­லாக்­கப்­பட வேண்­டும் என்­பதை அவர்­கள் விரும்­ப­வில்லை என்­ப­தன் வெளிப்­பா­டு­தான் அவர்­க­ளின் கோபம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைப் பொறுத்­த­வ­ரைக்­கும், “மாநில சுயாட்சி” என்­பது எங்­க­ளு­டைய உயிர்க் கொள்கை! பேர­றி­ஞர் அண்­ணா­வும், தலை­வர் கலை­ஞ­ரும் வலி­யு­றுத்­திய கொள்கை அது! பேர­றி­ஞர் அண்­ணா­வின் உயில் என்று சொல்­லப்­ப­டு­கின்ற இறுதி கடி­தத்­தி­லேயே, கூட்­டாட்­சித் தத்­து­வத்தை மக்­க­ளுக்­குக் கற்­றுத்­தர வேண்­டும் என்று எழுதி வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1970––இல் “மாநி­லத்­தில் சுயாட்சி, மத்­தி­யில் கூட்­டாட்சி” என்று தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முப்­பெ­ரும் விழா­வில் ஐம்­பெ­ரும் முழக்­கங்­க­ளில் ஒன்­றாக உரு­வாக்­கிக் கொடுத்­தார். அது­மட்­டு­மல்ல, “தமிழ்ச் சமு­தா­யத்­தைக் காக்க, இந்­தி­யா­வி­லுள்ள தேசிய இனங்­க­ளைக்­காக்க, இந்­தி­யா­வி­லுள்ள மாநி­லங்­க­ளின் உரி­மை­க­ளைக் காக்க, இந்­தி­யா­விலே இருக்­கும்­மா­நி­லங்­கள் சுய­ம­ரி­யா­தை­யோடு வாழ அந்­தத் தீர்­மா­னம் ஒரு முன்­னோடி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கூட்­டாட்­சிக்­காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொடர்ந்து போரா­டு­கி­றோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, உற­வுக்­குக்கை கொடுப்­போம், உரி­மைக்­குக் குரல் கொடுப்­போம்” என்று 1974––இல் சட்­ட­மன்­றத்­தில் மாநில சுயாட்­சித் தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­தார். மாநில சுயாட்­சிக்­காக இந்­திய அள­வில் கூட்­டாட்­சிக்­காக நாம் தொடர்ந்து போராடி வரு­கி­றோம். ஆனால், இதற்கு எதி­ரான பாசிச அர­சாக, ஒன்­றிய பா.ஜ.க. அரசு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“மாநில அர­சு­கள் டெல்­லிக்கு காவடி தூக்­கும் நிலை­மையை மாற்றி, அதி­கா­ரப் பகிர்­வுக்கு வழி­காட்­டு­வ­து­தான் தன்­னு­டைய அணு­கு­மு­றை­யாக இருக்­கும்” என்று சொல்லி பிர­த­ம­ரான நரேந்­திர மோடி அவர்­க­ளின் ஆட்­சி­தான், மாநி­லங்­களை அழிக்­கும் ஆட்­சி­யாக, மாநில மொழி­க­ளைச் சிதைக்­கும் ஆட்­சி­யாக, பல்­வேறு தேசிய இன மக்­களை ஒழிக்­கும் ஆட்­சி­யா­கப் பல்­வேறு பண்­பா­டு­கள் கொண்ட மக்­க­ளின் நம்­பிக்­கை­க­ளைச் சிதைக்­கும் ஆட்­சி­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­சி­யல் சட்­டத்­தால் உரு­வாக்­கப்­பட்ட அமைப்­பு­களை டம்­மி­யாக மாற்றி, ஒற்­றை­யாட்­சித் தன்மை கொண்ட பாசிச ஆட்­சியை இன்­றைய பா.ஜ.க. ஆட்சி நடத்­திக்­கொண்டு இருக்­கி­றது! ஒரே நாடு –ஒரே மதம் –ஒரே மொழி – ஒரே உணவு – ஒரே தேர்­தல் –ஒரே தேர்வு – ஒரே பண்­பாடு என்ற ஒற்­றைத் தன்மை, ஒரு கட்­சி­யின் ஆட்­சி­யாக முத­லில் அமைந்து, ஒரே ஒரு தனி மனி­த­ரின் கையில் அதி­கா­ரத்தை குவிக்­கத்­தான் அது பயன்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க.வின் பாசிச</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கோர முகத்தை வீழ்த்­து­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிறகு, அந்த தனி மனி­தர் வைத்­த­து­தான் சட்­டம்! அவர் சொல்­வ­து­தான் வேதம்! அவ­ரால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட சில­ருக்கு மட்­டும்­தான் அதி­கா­ரம்! அவ­ரால் ஆசீர்­வ­திக்­கப்­பட்­டர்­க­ளுத்­தான் நிதி மூல­த­னம் என்று ஆகி­வி­டும்! பல்­வேறு பரி­மா­ணங்­க­ளில் வரும் பாசி­சத்தை நாம் வீழ்த்­தி­யாக வேண்­டும்! பா.ஜ.க.வின் பாசிச கோர­மு­கத்­தைத் தொடர் பரப்­பு­ரை­யின் மூல­மா­கத்­தான் வீழ்த்த முடி­யும். எல்­லா­வற்­றிற்­கும் மேல் மக்­கள் நலன்­தான் முக்­கி­யம் என்ற புள்­ளி­யில் நாம் ஒன்­றாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பிர­த­மர் அன்று சொன்­னதை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நடை­மு­றைப்­ப­டுத்­து­வாரா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன் என்­றால், ஒன்­றி­யத்­தில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­டால் மட்­டும்­தான், இந்­தி­யா­வில் கூட்­டாட்சி காப்­பாற்­றப்­ப­டும்! பிர­காஷ் காரத் போன்­ற­வர்­கள் அதற்­கா­கப் பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்; தொடர்ந்து பாடு­பட வேண்­டும். உங்­க­ளோடு சேர்ந்து, நாங்­க­ளும் பாடு­ப­டக் காத்­தி­ருக்­கி­றோம்; தயா­ராக இருக்­கி­றோம். ஒன்­றிய அர­சுக்­கும், மாநில அர­சு­க­ளுக்­கு­மான உற­வு­களை வலி­மைப்­ப­டுத்த, சர்க்­கா­ரியா கமி­ஷ­னும், பூஞ்சி கமி­ஷ­னும் அளித்த பரிந்­து­ரை­களை அமல்­ப­டுத்த வேண்­டும் என்று, 2012––இல் குஜ­ராத் முத­ல­மைச்­ச­ராக இருந்த நரேந்­திர மோடி அவர்­கள் கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இந்த மேடை­யில் நின்று பிர­த­மர் மோடி அவர்­களை ஒரு கேள்வி கேட்­கி­றேன். தொடர்ந்து மூன்­றா­வது முறை­யா­கப் பிர­த­மர் ஆகி­யி­ருக்­கும் நீங்­கள், அதை நடை­மு­றைப்­ப­டுத்த எடுத்த நட­வ­டிக்கை என்ன? சொல்ல வேண்­டும். இன்­னும் 2 நாட்­க­ளில் தமிழ்­நாட்­டிற்கு வரப் போகி­றீர்­கள். நேற்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் போட்டு, அவர் வரு­கிற நேரத்­தில் அதற்கு விளக்­கம் சொல்ல வேண்­டும் என்று கேட்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல்­வேறு சட்­டங்­க­ளின் மூல­மாக மாநில உரி­மை­க­ளைப் பறிக்­கி­றீர்­கள். ஜி.எஸ்.டி. மூல­மாக மாநில நிதி உரி­மையை எடுத்­துக்­கொண்­டீர்­கள். எதிர்க்­கட்சி ஆளும் மாநில சட்­ட­மன்­றங்­க­ளில் நிறை­வேற்­றும் சட்­டங்­க­ளுக்கு அனு­மதி தரு­வது இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அரசு சார்­பில் சிறப்­புத் திட்­டம் கொடுப்­ப­தில்லை. எதிர்க்­கட்சி ஆளும் மாநி­லங்­க­ளில், ஆளு­நர்­களை பா.ஜ.க. மாநி­லத் தலை­வர்­க­ளாக மாற்றி, முழு நேர அர­சி­யல்­வா­தி­யாக செயல்­பட வைத்து, மாநி­லங்­க­ளின் வளர்ச்­சி­யைத் தடுக்­கி­றீர்­கள். பா.ஜ.க.வுக்கு எதி­ரான மாநில அர­சு­களை மிரட்­டு­கி­றீர்­கள். ஆட்­சி­கள் கவிழ்க்­கப்­ப­டு­கின்­றன; கட்­சி­கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன; கட்­சி­கள் மாற கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள். இன்­னும் சொல்ல வேண்­டும் என்­றால், மாநி­லங்­களே இருக்க கூடாது என்று நினைக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே மாதி­ரி­தான், வக்ப் திருத்­தச் சட்­டம். தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில், நேற்று அதற்கு எதி­ரா­கத் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­விட்­டு­தான் இந்த நிகழ்ச்­சிக்கு நான் வந்­தி­ருக்­கி­றேன். நாடா­ளு­மன்ற கூட்­டுக் குழு­வில் எங்­க­ளு­டைய எதிர்ப்­பைப் பதிவு செய்­தோம். ஆனால், எதை­யும் கேட்­கா­மல், இஸ்­லா­மி­யர்­களை பாதிக்­கும் இந்த சட்ட மசோ­தாவை நள்­ளி­ரவு 2 மணிக்கு நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தல் இது. இந்­தச் சட்­டத்­துக்கு எதி­ராக உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு தொடுக்­கப்­ப­டும் என்று சட்­ட­மன்­றத்­தில் அறி­வித்­து­விட்­டு­தான் இங்கு வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் அங்­க­மான கூட்­டாட்­சித் தத்­து­வத்­தைத் தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்ற பெய­ரில் சிதைக்க நினைக்­கி­றது பா.ஜ.க. அரசு. தமிழ்­நாடு, கேரளா, கர்­நா­டகா உள்­ளிட்ட பல்­வேறு மாநி­லங்­கள் இதைக் கடு­மை­யாக எதிர்க்­கி­றோம். இதற்கு எதி­ராக, ஒரு கூட்டு நட­வ­டிக்­கைக் குழுவை உரு­வாக்கி, நான்கு முதல்­வர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு பிர­தான கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­கள் சந்­தித்து, ஆலோ­சனை நடத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏற்­க­னவே உள்ள நாடா­ளு­மன்­றத் தொகுதி மறு­வ­ரை­ய­றையை மேலும் 25 ஆண்­டு­க­ளுக்கு நீட்­டிக்க வேண்­டும் என்று தீர்­மா­னத்தை நிறை­ வேற்­றி­னோம். ஆனால், இன்று வரை அதற்­குப் பிர­த­மர் மோடி அவர்­கள் பதில் சொல்­ல­வில்லை. இப்­படி அர­சி­யல் சட்ட உரி­மை­க­ளைப் பறிக்­கும் ஆட்­சியை பா.ஜ.க. நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றது. இது­தான் பாசி­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பா.ஜ.க. ஆட்­சி­யின் முடி­வில் தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தி­யக் கூட்­டாட்சி மல­ரும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில சுயாட்­சி––­கூட்­டாட்­சி––­ச­மூக நீதி – மத­நல்­லி­ணக்­கம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான –சுருக்­க­மாக சொல்­ல­வேண்­டும் என்­றால், மக்­க­ளுக்கு எதி­ரான பா.ஜ.க. ஆட்­சி­யின் முடி­வில்­தான், இந்­தி­யா­வில் கூட்­டாட்சி மல­ரும்! அதை உரு­வாக்க, இந்­தியா முழு­வ­தும் இருக்­கும் ஜன­நா­ய­கச் சக்­தி­க­ளைத் திரட்­டு­வோம். இதற்­கா­கத்­தான் தி.மு.க. குரல் கொடுக்­கி­றது. பொது­வு­ட­மைத் தோழர்­க­ளும் இதற்­காக குரல் கொடுக்க வேண்­டும். இணைந்து போரா­டு­வோம்! பாசி­சத்தை வீழ்த்­து­வோம்! வீழ்த்­து­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>