<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,70,959,850" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 12:33:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042025-TRY-03" position.sequence="03" ex-ref="04042025-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="64">கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதை அன்றைக்கு கடுமையாக எதிர்த்தது தி.மு.க.!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம்...   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கட­லுக்­குச் சென்­றால் பத்­தி­ர­மாக வீடு திரும்­பு­வார்­களா நம் சொந்­தங்­கள் என்று குடும்­பத்­தி­னர் மீளாக் கவ­லை­யில் மூழ்­கி­யி­ருக்க வேண்­டிய துயர நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. எவ்­வ­ளவு காலத்­துக்கு இத­னைச் சகித்­துக் கொண்டு இருக்க முடி­யும்?  இது­போன்ற சிக்­க­லுக்கு நிரந்­த­ரத் தீர்வு காண கச்­சத்­தீவு மீட்பே மிகச் சரி­யான வழி என்­பதை இம்­மா­மன்­றத்­தின் வாயி­லாக மீண்­டும் வலி­யு­றுத்­திட விரும்­பு­ 
கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வர் அவர்­களே, கச்­சத்­தீவு விவ­கா­ரத்­தைப்  பொறுத்­த­வ­ரைக்­கும், கச்­சத்­தீவை மாநில அர­சு­தான் இலங்­கைக்கு அளித்­தது போன்று ஒரு தவ­றான தக­வ­லைப் பரப்பி அர­சி­யல் செய்­வது அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு வழக்­க­மாகி விட்­டது.  ஆனால், அர­சி­யல் ஆதா­யத்­திற்­காக கட்­சி­கள் செய்­யும் அதே தவறை ஒன்­றிய அரசு செய்­வது வருந்­தத்­தக்­கது; ஏற்­க­மு­டி­யா­தது.  கச்­சத்­தீ­வைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அந்­தத் தீவைக் கொடுத்து, ஒப்­பந்­தம் போட்ட போதே முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞர் அவர்­கள் கடு­மை­யாக எதிர்த்­தார்­கள்.  தமிழ்­நாட்டு மக்­கள் அதை விரும்ப மாட்­டார்­கள் என்று எடுத்­துச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">கச்சத்தீவை இலங்கைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">வழங்கியதை ஏற்க மறுத்த கலைஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கச்­சத்­தீவு இலங்­கைக்கு அளிக்­கப்­ப­டக்கூடாது என்று அழுத்­தந்­தி­ருத்­த­மாக வாதிட்டுஇருக்­கி­றார். அன்­றைக்­கி­ருந்த தி.மு.க. எம்.பி.-க்கள் இரா செழி­யன், எஸ்.எஸ்.மாரிச்­சாமி ஆகி­யோர் நாடா­ளு­மன்­றத்­திலேகடு­மை­யாக எதிர்த்து இருக்­கி­றார்­கள். அதை­யும் மீறி கச்­சத்­தீவு ஒப்­பந்­தம் 28.6.1974 அன்று கையெ­ழுத்து ஆன­வு­டன், மறு­நாளே அதா­வது, 29.6.1974 அன்றே அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தைதலை­மைச் செய­ல­கத்­தில் கூட்டி இதைக் கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்றி, அன்­றை­ய­தி­னமே பிர­த­ம­ருக்­கும் கடி­தம் எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அந்­தக் கடி­தத்­தில், “I am constrained to express our deep disappointment over the recent Indo-Sri Lanka Agreement” என்று குறிப்­பிட்டு- தமிழ்­நாடு அர­சின், தமிழ்­நாட்டு மக்­க­ளின் எதிர்ப்பை பிர­த­ம­ருக்­குத் தெரி­வித்­துள்­ளதை இங்கே நான் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன். அப்­போதே 21.8.1974 அன்று “இந்­தி­யா­வுக்கு சொந்­த­மா­ன­தும், தமிழ்­நாட்­டுக்கு நெருங்­கிய உரி­மை­கள் கொண்­ட­து­மான கச்­சத்­தீவு பிரச்­சி­னை­யில் மத்­திய அரசு எடுத்­துள்ள முடிவு பற்றி இந்­தப் பேரவை தனது ஆழ்ந்த வருத்­தத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றது. மத்­திய அரசு இதனை மறு­ப­ரி­சீ­லனை செய்து கச்­சத்­தீ­வின் மீது இந்­தி­யா­விற்கு அர­சு­ரிமை இருக்­கும் வகை­யில் இலங்கை அர­சு­டன் செய்து கொண்­டுள்ள ஒப்­பந்­தத்­தைத் திருத்­தி­ய­மைக்க முயற்சி எடுத்து, தமிழ்­நாட்டு மக்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்க வேண்­டு­மென்று வலி­யு­றுத்­து­கி­றது” என அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றி­ய­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­ச­ராக இருந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கச்­ச­த்தீவை மீட்­க­வும், கச்­சத்­தீ­வில் இருக்­கிற இந்­திய மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை நிலை­நாட்­ட­வும் தொடர்ந்து பல்­வேறு முயற்­சி­களை திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு எடுத்து வந்­தி­ருக்­கி­றது. கழக அரசு ஆட்­சி­யில் இருக்­கும்­போ­தெல்­லாம் ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­ச­ருக்­கும், பிர­த­ம­ருக்­கும் கடி­தங்­கள் எழுதி தமிழ்­நாட்டு மீன­வர்­­     களின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையைமீட்க வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கி­றது என்­ப­தைத்தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">கச்சத் தீவை மீட்கக் கோரி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஏற்­க­னவே முன்­னாள் முத­ல­மைச்­சர் அம்­மை­யார் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது 3.10.1991 மற்­றும் 3.5.2013 ஆகிய தேதி­க­ளி­லும், அதே­போன்று, இங்கே அமர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய  ஓ. பன்­னீர்­செல்­வம் அவர்­கள் முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது 5.12.2014 அன்­றும் கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெற இந்த அவை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்டு, ஒன்­றிய அரசு வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. நான் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பிறகு, இந்­தி­யப் பிர­த­மர் அவர்­கள் முதன்­மு­த­லில்  தமிழ்­நாட்­டிற்கு வந்­த­பொ­ழுது  கச்­சத்­தீ­வைத்  திரும்­பப் பெற அவ­ரி­டம் வலி­யு­றுத்­திக் குறிப்­பிட்­டுக் 
காட்­டி­யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பிறகு 19.7.2023 அன்று  இந்­தி­யப்பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்­தில், “வர­லாற்றுரீதி­யாக கச்­சத்­தீவு இந்­தி­யா­வின் ஓர்        அங்­க­மாக இருந்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாடு மீன­வர்­கள் பாரம்­ப­ரி­ய­மாக கச்­சத்­தீ­வைச் சுற்றி மீன்­பி­டித்­துள்­ளார்­கள். மாநில 
அர­சின்  ஒப்­பு­த­லின்றி  கச்­சத்­தீவு இலங்­கைக்கு மாற்­றப்­பட்­ட­தால், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் உரி­மை­க­ளும், வாழ்­வா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.” என்­பதை மேற்­கோள்­காட்டி  “கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெற வேண்­டும். அதுவே தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு நிரந்­த­ரத் தீர்­வாக அமை­யும்” என்று வலி­யு­றுத்தி, “அது­வரை தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை மீட்­டுக் கொடுங்­கள்” என்று கேட்­டுக் கொண்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்­றிய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது 2.7.2024 தேதி­யிட்ட கடி­தம் மூலம் கச்­சத்­தீவு பிரச்­சி­னை­யை­யும், தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் மீன்­பிடி உரி­மை­யை­யும் வலி­யு­றுத்­தி­       யி­ருக்­கி­றேன். ஆனால், இன்­று­வரை மூன்­றா­வது முறை­யாக ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய பா.ஜ.க. அரசு கச்­சத்­தீவை மீட்­பது குறித்து ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை என்­பதை நான் வேத­னை­யு­டன் இங்கே குறிப்­பி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">இலங்கை அரசிடம் ஒன்றிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.5">பிரதமர் பேசி தீர்வு காண வேண்டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆகவே, இந்­தச் சூழ­லில், தமிழ்­நாட்டு மீன­வர்­கள் மீன்­பி­டிக்­கச் செல்­லும் போது இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால் கடும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­வது, பட­கு­கள் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­வது, கடும் அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­வது போன்­ற­வற்­றி­லி­ருந்து தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளைப் பாது­காக்­க­வும், விரை­வில் இலங்கை செல்­லும் பிர­த­மர் அவர்­கள் தமிழ்­நாட்டு மீன­வர்­கள் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு காண­வும், கச்­சத்­தீவை மீட்­கும் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கைக்கு பேச்­சு­வார்த்தை நடத்­திட வேண்­டும் என்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றம் விரும்­பு­கி­றது. இதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட தீர்­மா­னத்தை இப்­போது நான் முன்­மொ­ழி­கி­றேன்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">தீர்­மா­னம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“தமிழ்­நாட்டுமீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிலை­நாட்­டி­ட­வும், இலங்­கைக் கடற்­ப­டை­யால் தமிழ்­நாட்டு மீன­வர்­க ­ளுக்கு ஏற்­ப­டும் அனைத்து இன்­னல்­க­ளைப் போக்­கி­ட­வும், கச்­சத்­தீவை மீண்­டும் பெறு­வதே நிரந்­த­ரத் தீர்­வாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இத­னைக் கருத்­தில் கொண்டு, இந்­தி­ய-­இ­லங்கை ஒப்­பந்­தத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்து, கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டு­மென்­றும், அர­சு­மு­றைப் பய­ண­மாக இலங்கை செல்­லும் மாண்­பு­மிகு இந்­திய பிர­த­மர் அவர்­கள் அந்­நாட்டு அர­சு­டன் பேசி, இலங்கை சிறை­யில் வாடும் நம் நாட்டு மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்து மீட்­டுக் கொண்டு வர­வேண்­டு­மென்று இப்­பே­ரவை வலி­யு­றுத்­து­கி­றது.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்ற தீர்­மா­னத்தை நான் முன்­மொ­ழி­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டைச் சார்ந்த  இந்­திய மீன­வர்­க­ளின் நலன் கருதி, அனைத்­துக் கட்­சி­க­ளும் இந்­தத் தீர்­மா­னத்தை ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றித் தர வேண்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு தீர்­மா­னத்தை முன்­மொ­ழிந்துமுதல்­வர்  மு.க.ஸ்டாலின்  அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தத் தீர்­மா­னம் சட்­டப்­பே­ர­வை­யில் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>