<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,40,958,1026" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 12:45:13 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042025-TRY-06" position.sequence="06" ex-ref="04042025-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி   </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">மதுரவாயல் – சென்னை துறைமுகம் மேம்பாலப் பணிகள் :</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">குறிப்பிட்ட காலத்திற்குள் பாலம் அமைத்திட அரசு அத்தனை முயற்சிகளையும் எடுக்கும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">சட்டப்பேரவையில் – அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="velu_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று முன்தினம் – மது­ர­வா­யல் – சென்னை துறை­மு­கம் மேம்
­பா­லப் பணி­கள் குறித்த விவா­தத்­திற்­குப் பதி­ல­ளித்த பொதுப்
­ப­ணித்­துறை அமைச்­சர் எ.வ.வேலு, ‘‘மது­ர­வா­யல் – சென்னை துறை­மு­கம் மேம்­பா­லப் பணி­களை குறிப்­பிட்ட காலத்­திற்­குள் முடித்­திட அரசு அத்­தனை முயற்­சி­யை­யும் எடுக்­கும்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதன் விவ­ரம்வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ர­வா­யல் – சென்னை துறை­மு­கம் மேம்­பா­லப் பணி­களை விரைந்து முடிக்க வேண்­டி­யது குறித்து, சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று, உறுப்­பி­னர் ஈ.ஆர்.ஈஸ்­வ­ரன் கவன ஈர்ப்­புத் தீர்­மா­னம் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதற்கு பதி­ல­ளித்து பேர­வை­யில் எ.வ.வேலு, அறிக்கை ஒன்­றினை வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதில் கூறப்­பட்­டி­ருப்­ப­ தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மது­ர­வா­யல் துறை­முக மேம்­பா­லம் இந்­திய தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யத்­தைச் சார்ந்­த­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாரத்­மாலா பரி­யோ­ஜனா திட்­டத்­தின்­கீழ் தமிழ்­நாட்­டில் சென்னை துறை­மு­கம் முதல் மது­ர­வா­யல் வரை­யி­லான புதிய இரண்டு அடுக்கு 4 வழி உயர்­மட்ட சாலை அமைக்­கும் பணி தே.நெ.4–ல் கி.மீ.0/342 முதல் கி.மீ. 20/593 வரை பகுதி | முதல் IV வரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">(கி.மீ. 0/342 முதல் கி.மீ. 20/593 வரை) EPC செயல்­மு­றை­யில் ஒப்­பந்த மதிப்பு ரூ.5,510 கோடிக்கு ஒப்­பந்த உடன்­ப­டிக்கை 11–9–2023 அன்று மேற்­கொள்­ளப்­பட்டு, பணி நிய­ம­னம் 23–11–2023 அன்று வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒப்­பந்த உடன்­ப­டிக்­கை­யின்­படி இப்­ப­ணி­கள் பிப்­ர­வரி 2027 இல் முடிக்­கப்­பட வேண்­டும் இந்­நேர்­வில் நீர்­வ­ளத் துறை­யால் எழுப்­பப்­பட்ட பல்­வேறு பிரச்­சி­னை­கள் கார­ண­மாக 30–5–2024 அன்­று­தான் பணிக்­கான சாலைப்­ப­குதி ஒப்­ப­டைப்பு செய்­யப்­பட்­டது. மேலும், 15–9–2024 முதல் 31–12–2024 வரை­யி­லான பரு­வ­ம­ழைக் காலத்­தில் தேசிய பசு­மைத் தீர்ப்­பா­யத்­தின் உத்­த­ர­வின்­படி பணி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மாக, திட்­ட­மிட்­ட­படி பணி­கள் நடை­பெ­ற­வில்லை.மேற்­கண்ட கார­ணங்­க­ளால் இப்­ப­ணி­யா­னது மேலும் கால­தா­ம­ தத்­து­டன் நிறைவு பெற வாய்ப்பு உள்­ள­தாக இந்­திய தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யத்­தால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தற்­போ­தைய முன்­னேற்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­திட்­டப் பணி­கள் 4 தொகுப்­பு­க­ளைக் கொண்­டது. இப்­ப­ணி­க­ளில் மொத்­த­முள்ள 5,296 எண்­ணிக்­கை­யி­லான Piles அமைக்­கும் பணி­க­ளில், 812 எண்­ணிக்கை முடி­வ­டைந்­துள்­ளது. மேலும் மொத்­த­முள்ள 882 எண்­ணிக்­கை­யி­லான Pilecap அமைக்­கும் பணி­க­ளில் 41 எண்­ணிக்கை முடி­வ­டைந்­ துள்­ளது. மேலும் மேல் தளத்­திற்­குண்­டான (Super structure) பாகங்­கள் தனி­யாக இரண்டு இடங்­க­ளில் (Casting yard) தயா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. இதில் மொத்­தம் 9,415 எண்­ணிக்­கை­யில், 14 எண்­ணிக்கை முடி­வ­டைந்து தொடர்ந்து பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது என இந்­திய தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யத்­தால் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவ்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அத­னைத் தொடர்ந்து அமைச்­சர் எ.வ.வேலு குறிப்­பிட்­ட­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ ராக கலை­ஞர் அவர்­கள் இருந்­த­போது காங்­கி­ரஸ் பேரி­யக்­கம் டெல்­லி­யிலே இருக்­கி­ற­பொ­ழு­து­தான் மன்­மோ­கன் சிங் அவர்­களை அழைத்து அந்­தப்  பாலம் துவக்­கப்­பட்­டது. அத­னால் 16 ஆண்டு காலம் கிடப்­பிலே இருந்­தது என்றகருத்தை இங்கே எடுத்­துச் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த ஆட்சி பொறுப்­பேற்ற பிறகு முதல்­வர் அவர்­கள் டெல்­லிக்கு சென்ற பொழுது, இந்­தப் பாலத்தை மீண்­டும் கட்­ட­வேண்­டும் என்று  பிர­த­ம­ரி­டத்­தி­லும்,  நிதின் கட்­கரி அவர்­க­ளி­டத்­தி­லும் நேர­டி­யாக கடி­தம் தந்­தார்­கள். ஒரு முறைக்கு இரண்டு முறை நானே நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்ட  அமைச்­ச­ரி­டத்­திலே கடி­தம் கொடுத்­தது மட்­டு­மல்­லா­மல் வலி­யு­றுத்­தி­யும் இருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அந்த அடிப்­ப­டை­யி­லே­தான் இந்­தப் பாலம் மீண்­டும் கட்­டு­கிற அந்த வாய்ப்பு கிடைத்­தது. அதற்கு திட்ட மதிப்­பீடு என்­றால் 3,570 கோடி ரூபாய் திட்ட மதிப்­பீட்­டில் ஒப்­பந்­தங்­க­ளெல்­லாம் கோரப்­பட்டு, Mumbai–ஐ சேர்ந்த J Kumar Infraprojects Ltd. என்­கிற ஒரு நிறு­வ­னம் அதை எடுத்­தி­ருக்­கி­றது. இப்­போது அந்­தப் பணி­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. உயர்­மட்ட சாலை என்­பது மொத்­தம் 21 கிலோ மீட்­டர்.  அந்­தப் பாலம் இரண்டு பகு­தி­யாக அமை­கி­றது. ஒன்று கீழ்­ப­குதி, இன்­னொன்று மேல் பகுதி என்று இரண்டு அடுக்­குள்ள மேம்­பா­லம். மேல் பகுதி என்­பது மது­ர­வா­யி­லில் இருந்து புறப்­பட்டு நேர­டி­யாக துறை­மு­கத்­திற்கு வந்­து­வி­டும். அதில் எந்த இடை­யூ­றும் இருக்­காது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கீழ்ப் பாலங்­கள் என்­பது ஆறு இடங்­க­ளில் இறங்கு பாலங்­க­ளா­க­வும், ஏழு இடங்­க­ளில் ஏறு பாலங்­க­ளா­க­வும் அந்த design அமைந்­தி­ருக்­கி­றது. அந்­தப் பணி­கள் தற்­போது துவங்­கப்­பட்­டுள்­ளன. அதோ­டு­மட்­டு­மல்ல, இந்­தப் பணி­களை விரை­வாக முடிக்க வேண்­டு­மென்று  முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் ஒன்­றிய அரா­சங்­கத்­தி­ட­மி­ருந்து ஒரு ஒப்­பந்­தம் போடப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாநில அர­சாங்­க­மும், ஒன்­றிய அர­சாங்­க­மும் ஒரு ஒப்­பந்­தம் போடுக்­கொண்­டது. ஒன்­றிய அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் அந்­தப் பாலம் அமைக்­கப்­
படு­கி­றது கார­ணத்­தால், அதற்கு மாநில அர­சாங்­கம் என்­னென்ன உத­வி­க­ளைச் செய்­ய­லாம், அங்கு வேலை செய்­வ­தற்­கு­ரிய yard–களை கொடுப்­பது, அவர்­க­ளுக்கு வேண்­டிய நில எடுப்பை எடுத்து கொடுப்­பது என்ற அடிப்­ப­டை­யில் பல்­வேறு இனங்­க­ளில் ஒப்­பந்­தங்­கள் போடப்­பட்­டன. அந்­தப் பணி­கள் விரைந்து நடக்க வேண்­டும் என்­ப­தற்­காக துறை­யின் சார்­பாக நானே நேர­டி­யாக அவ்­வப்­போது, மாதத்­திற்கு ஒரு முறை ஆய்­வுக் கூட்­டம் நடத்­து­கி­றேன். தற்­போ­து­கூட, ஒரு மாத காலத்­திற்கு முன்­னாள் அரசு துறை, நெடுஞ்­சா­லைத் துறை, RO, தேசிய நெடுஞ்­சாலை ஆணை­யம், நீர்­வ­ளத் துறை அதி­கா­ரி­கள், மின்­வா­ரி­யத் துறை அதி­கா­ரி­கள், போக்­கு­வ­ரத்து காவல் துறை அதி­கா­ரி­கள், சென்னை பெரு­ந­கர மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள், நகர்ப்­புர வாழ்­விட மேம்­பாட்டு அதி­கா­ரி­கள், இந்­திய கடற்­படை அதி­கா­ரி­கள் மற்­றும் ஒப்­பந்­த­தா ­ரரை அழைத்து ஒரு கூட்­டத்தை நான் தொடர்ந்து போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றேன். ஒரு மாதத்­திற்கு முன்பு கூட்­டம் போடு­கி­ற­போது சில இடர்ப்­பா­டு­களை எல்­லாம் சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, கூவம் ஆற்­றிலே கிட்­டத்­தட்ட 15 கிலோ மீட்­டர் தூரம் வரை அந்­தப் பாலம் செல்­கி­றது. ஆனால், அதற்கு நீர்­வ­ளத் துறை­யி­ட­மி­ருந்து அனு­மதி பெற வேண்­டும். அத­னால், அந்­தத் துறை­யின் செய­லா­ளர் அவர்­களை அழைத்து,  நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளி­டத்­தி­லும் சொல்லி, NOC வாங்கி அந்­தப் பணி­கள் தற்­போது நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூவம் ஆற்­றங்­க­ரை­யில் இருக்­கும் பொது மக்­க­ளுக்கு வேறொரு இடத்­தில் அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்கு குடி­யி­ருப்பு ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டிய பணி­கள் இருக்­கின்­றன. விரி­வாக்­கம் செய்­யும்­போது மின்­கம்­பங்­களை அகற்­றும் பணி, கட்­டு­மா­னப் பணி­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்­கிற போக்­கு­வ­ரத்­து­களை மாற்­றி­ய­மைப்­பது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­திய இரா­ணு­வத்­திற்­குச் சொந்­த­மான, கடற்­ப­கு­திக்­குச் சொந்­த­மான இடத்­திற்­குப் பதி­லாக மாநில இடத்­திற்­குச் சொந்­த­மான வேறொரு இடத்­தைக் கொடுத்­து­விட்டு, அந்த இடத்தை இதற்­கா­கப் பெறு­வது என்று இப்­படி பல்­வேறு வகை­யி­லான பணி­கள், மாநில அரசு தொடர் ஆய்­வுக் கூட்­டம் நடத்­தி­ய­தன் விளை­வாக, 20–5–2026 வரை ஒப்­பந்­தம் இருக்­கி­றது. அவர்­க­ளுக்கு ஒப்­பந்த காலம் என்­பது 2026 வரை இருக்­கி­றது. சுமார் மூன்று ஆண்டு காலம் ஆகும். அந்­தப் பணி­களை முடிப்­ப­தற்கு, தொடர்ந்து மாநில அர­சாங்­கம் ஒத்­து­ழைப்பு செய்து, அந்­தப் பாலத்தை விரை­வா­கக் கட்­டு­வ­தற்கு மாநில நெடுஞ்­சா­லைத் துறை முழு ஒத்­து­ழைப்பு வழங்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டிலே தொழில் வளர்ச்சி பெருக வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில்­தான் வெளி­நாட்டு மூல­த­னங்­களை எல்­லாம் தமிழ்­நாட்­டுக்கு கொண்­டு­வ­ரும் முயற்­சி­யில்  தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் அவர்­கள் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள். அவர் குறிப்­பிட்­ட­தை­ போல, தொழிற்­சா­லை­க­ளில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிற அந்­தப் பொருட்­க­ளெல்­லாம் இங்கே துறை­மு­கத்­திற்கு வர வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில்­தான் அந்­தச் சாலைக்கு முக்­கி­யத்­து­வம் தந்து, அந்­தப் பணி­களை நாங்­கள் மேற்­கொண்டு ஆய்வு செய்து கொண்­டி­ருக்­கி­றோம். குறிப்­பிட்ட காலத்­திற்­குள் அந்­தப் பாலம் அமைப்­ப­தற்கு அரசு அத்­தனை முயற்­சி­யை­யும் எடுக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பேர­வை­யில் அமைச்­சர் எ.வ.வேலு விளக்­க­ம­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>