<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,762,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 12:46:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042025-TRY-08" position.sequence="08" ex-ref="04042025-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="107">அ.தி.மு.க. ஆட்­சி­யில் – கச்­சத் தீவை மீட்க எடுத்த நட­வ­டிக்கை என்ன ?</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="31">சட்­ட­ப் ­பே­ர­வை­யில் - எதிர்க்­கட்­சித் தலை­வ­ருக்கு -    </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="31">முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஏப். 4  –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அ.தி.மு.க. ஆட்­சி­யில் கச்­சத் தீவை மீட்க எடுத்த நட­வ­டிக்கை என்ன என்று  எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கேள்வி 
எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கச்­சத் தீவை திரும்­பப் பெற நட­வ­டிக்கை எடுக்க ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி  சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல்  செய்­யப்­பட்ட தீர்­மா­னத்­தின் மீது பேசிய எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சா­மிக்­குப் பதி­ல­ளித்து பேசிய முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள், மீன­வர்­கள்  பிரச்­சினை தொடர்­பாக ஒன்­றிய அர­சுக்கு 74 கடி­தங்­கள் எழு­தி­யுள்­ள­தைத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கச்­சத் தீவு விவ­கா­ரத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி தேவை­யில்­லாத கருத்­துக்­க­ளைத் தெரி­வித்து வரு­வ­தா­கக் குற்­றஞ்­சாட்­டிய முதல்­வர் அவர்­கள், ‘அ.தி.மு.க., ஆட்­சி­யில் இருந்த போது கச்­சத் தீவு விவ­கா­ரத்­தில் என்ன செய்­தீர்­கள்?’’ என்று கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புது­டெல்­லி­யில் உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வைச் சந்­தித்­துப் பேசிய போது கச்­சத் தீவு விவ­கா­ரம் குறித்­துப் பேசி­னார்­களா? என்­றும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வின­வி­னார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது குறித்து சட்­டப்­பே­ர­வை­யில் நடை­பெற்ற விவா­தம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­வொரு முக்­கி­ய­மான தீர்­மா­னம். மீன­வர்­க­ளு­டைய பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வு­காண வேண்­டு­மென்­ப­தற்­காக, விரை­விலே,  பார­தப் பிர­த­மர் அவர்­கள் வரக்­கூ­டிய இந்­தச் சூழ்­நி­லை­யிலே, இலங்­கைக்­குச் சென்று தமிழ்­நாட்­டுக்கு வரப் போகி­றார்­கள். ஆக, இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில், இந்த அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை முக்­கி­ய­மாக நாம் நிறை­வேற்­றி­யி­ருக்­கி­றோம். இந்த அர­சி­னர் தனித் தீர்­மா­னத்தை ஏக­ம­ன­தாக, பார­திய ஜனதா கட்­சி­கூட ஆத­ரித்­தி­ருக்­கி­றது. எனவே, இத­னு­டைய முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்­து­தான் அவர்­க­ளும் ஆத­ரித்­தி­ருக்­கி­றார்­கள். எனவே, இதிலே எந்த சர்ச்­சை­யும் வர வேண்­டாம் என்று நான் உங்­க­ளை­யெல்­லாம் 
கேட்­டுக்­கொள்­கி­றேன்.  (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், ஆளுங்­கட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைக் குறை சொல்லி, இங்கே சில செய்­தி­களை வேக­மாக பதிவு செய்து கொண்­டி­ருக்­கி­றார். ஏற்­கெ­னவே பெய­ரைக் குறிப்­பிட்­டுச் சொன்­ன­தற்கே, எதிர்க்­கட்­சி­யிலே அதற்கு objection சொல்லி அதை நீக்க வேண்­டு­மென்று சொன்­னார்­கள். இந்­தத் தீர்­மா­னம் முறை­யாக, கட்­டுப்­பாட்­டோடு, ஒற்­று­மை­யாக இருந்து நிறை­வேற்­றப்­பட வேண்­டும்; அந்த நிலையை நாம் அனை­வ­ரும் ஏற்­ப­டுத்­த­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் நான் அதை நீக்­கச் சொன்­னேனே தவிர, அது தவறா, தவ­றில்­லையா? அது அவைக்­கு­றிப்­பில் இடம் பெற­லாமா, வேண்­டாமா என்­று­கூட நாம் சிந்­திக்­க­வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்று சொன்­னேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இப்­போது எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள் தேவை­யில்­லா­மல் பல பிரச்­சி­னை­க­ளைச் சொல்­கி­றார். நானும் சொல்­வ­தற்­குத் தயா­ராக இருக்­கி­றேன். எங்­க­ளைப் பார்த்­துக் கேட்­கி­றீர்­கள். நீங்­க­ளும் ஆட்­சிப்­பொ­றுப்­பில் இருந்­தி­ருக்­கி­றீர்­கள், 10 வரு­டம் நீங்­க­ளும் இருந்­தி­ருக்­கி­றீர்­கள். (குறுக்­கீடு) இல்லை, இல்லை. 10 வரு­டம் இருந்­தி­ருக்­கி­றீர்­கள். அப்­போது என்ன செய்­தீர்­கள்? (குறுக்­கீடு) அப்­போது என்ன செய்­தீர்­கள்? கிட்­டத்­தட்ட 54 கடி­தங்­களை நாங்­கள் இது­வ­ரை­யில் அனுப்பி வைத்­தி­ருக்­கி­றோம்.  பிர­த­மரை நேர­டி­யாக சந்­திக்­கும் போதெல்­லாம் இது­கு­றித்­துப் பேசி­யி­ருக்­கி­றோம்.  சமீ­பத்­தில் நீங்­கள் டெல்­லிக்­குச் சென்று வந்­தீர்­களே, அப்­போது இதைப்­பற்­றிப் பேசி­விட்டு வந்­தீர்­களா? சொல்­லி­யி­ருக்­கி­றீர்­களா? சொல்­லுங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நான் கேட்­கும் இந்­தக் கேள்­விக்கு பதில் சொல்­லுங்­கள்.  (குறுக்­கீடு) இதற்கு பதில் சொல்­லுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பேர­வைத் தலை­வர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள். நாம் முடித்­து­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எடப்­பாடி பழ­னி­சாமி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, இப்­போது மத்­திய அரசை நீங்­கள் கேட்­கி­றீர்­கள். நீங்­கள்  வாஜ்­பாய் Government-ல் இருந்­தீர்­கள், ஏன் கேட்­க­வில்லை என்று நான் கேட்­கி­றேன். (குறுக்­கீடு)  பேர­வைத் தலை­வர் அவர்­களே வாய்ப்பு கிடைக்­கும்­போ­தெல்­லாம் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்­டும். மத்­தி­யில் ஆட்சி, அதி­கா­ரத்­தில் இருக்­கும்­போது  நீங்­கள், நழுவ விட்­டு­விட்­டீர்­கள். அப்­போது நழுவ விட்­டு­விட்டு, இப்­போது வந்து, மற்­ற­வர்­களை குறைச் சொல்லி, நீங்­கள் தப்­பிக்­கப் பார்க்­கக்­கூ­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அவை முன்­ன­வர் துரை­மு­ரு­கன் :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தப் பிரச்­சினை நியா­ய­மாக பார்த்­தால்,  முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடுத்த, அந்­தத் தீர்­மா­னத்­தின்­மீது மட்­டும் ஓர் ஆத­ரவு தெரி­வித்து பேசி­யி­ருக்­க­வேண்­டும். ஆனால், எல்­லோ­ரும் ஆதி­யோடு, அந்­த­மாக பேசிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். நான் இதற்கு முன்­னாலே இந்­தப் பிரச்­சி­னை­யில் நாங்­க­ளும், காங்­கி­ர­சும் பல­மாக வேறு­பட்­டி­ருக்­கி­றோம். இந்­தப் பிரச்­சி­னை­யில் நீங்­க­ளும், நாங்­க­ளும் வேறு­பட்­டி­ருக்­கி­றோம். அந்த வேறு­பா­டு­களை பேசி­னால் இந்­தப் பிரச்­சி­னைக்கு தீர்வு வராது. அதைத்­தான்  முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னார், இதை எல்­லோ­ரும் பெருந்­தன்­மை­யாக ஆத­ரித்­துக் கொடுங்­கள் என்று சொன்­னார். இதிலே நம்­மு­டைய  உறுப்­பி­னர் திரு­மதி வானதி சீனி­வா­சன் அவர்­கள் கூட, ஆத­ரித்­தி­ருக்­கி­றார், அவ­ருக்கு நன்றி. எனவே, பழை­யதை எடுத்து பேசி­னால் இரு­பக்­க­மும் சரி­யாக இருக்­காது. எனவே,  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளி­டம் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன், விடுங்­கள், முடி­யுங்­கள் பேச்சை. (எடப்­பாடி பழ­னி­சாமி குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்­கள் ஆட்­சி­யில் இருந்­த­போது ஒன்­றிய அர­சு­டன் பேச­வில்­லை­யென்று யாரும் சொல்­ல­வில்லை. நானும் பல­முறை டெல்­லிக்­குச் சென்­ற­போது,  பிர­த­ம­ரி­டத்­தில் இது­கு­றித்து வலி­யு­றுத்­தி­விட்டு வந்­தி­ருக்­கி­றேன்; மனு­வா­க­வும் கொடுத்து இருக்­கி­றேன். Petition கொடுத்­தி­ருக்­கி­றேன்; கோரிக்கை மனுக்­களை உரிய ஆதா­ரங்­க­ளு­டன் கொடுத்து விட்டு வந்­தி­ருக்­கி­றேன். இதை­விட வேறு என்ன செய்­ய­மு­டி­யும்? 54 கடி­தங்­களை அனுப்­பி­யி­ருக்­கி­றேன்,  ஒன்­றிய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர்  ஜெய­சங்­கர் அவர்­க­ளைச் சந்­திக்­கும்­போது, இந்­தப் பிரச்­சி­னை­யைப் பற்­றிச் சொல்­லி­விட்டு வந்­தி­ருக்­கி­றேன். அது­போல், நீங்­கள் பேச­வில்லை என்று நான் சொல்­ல­வில்லை. அந்த முயற்­சி­யில் நீங்­கள் ஈடு­ப­ட­வில்­லை­யென்று சொல்­ல­வில்லை. இந்­தப் பிரச்­சி­னை­யில் அம்­மை­யார் அவர்­கள் நீதி­மன்­றத்­திற்­குச் சென்­றது குறித்து நானே பேசி­னேன்.  நான் பேசும்­போ­தும் அது­கு­றித்­துச் சொன்­னேன். அதில் என்ன தவறு இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் தீர்­மா­னத்தை ஒட்­டித்­தான் பேச வேண்­டும். நான் கொண்டு வந்­தி­ருக்­கும் தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் நீங்­கள் பேச அனு­ம­தித்­தி­ருக்­கி­றீர்­கள். அதை ஒட்­டித்­தான் பேச வேண்­டும். இதில் இருக்­கும் அர­சி­யல் விவ­ரங்­க­ளை­யெல்­லாம் பேசி, இதை அர­சி­ய­லாக்கி, பிரச்­சி­னை­யாக்க வேண்­டு­மென்­றால், அதற்கு நீங்­கள் அனு­ம­திக்­கி­றீர்­களா என்­ப­து­தான் என்­னு­டைய கேள்வி?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அமைச்­சர் எ.வ. வேலு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தத் தீர்­மா­னம் ஒட்­டு­மொத்­த­மாக தமி­ழர்­க­ளு­டைய உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தன் அடிப்­ப­டை­யில்­தான்,  முத­ல­மைச்­சர் அவர்­கள் இதில் எந்­த­வித பிரச்­சி­னை­யும் இல்­லா­மல் ஒரு­சேர இந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்­டும் என்று திரும்­பத் திரும்ப சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார். பதி­னாறு ஆண்டு காலம் நீங்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருந்து என்ன செய்­தீர்­கள் என்று திரும்­பத் திரும்­பக் கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்.  தம்­பி­துரை ஏற்­கெ­னவே நாடாளு மன்­றத்­திலே, சட்­டத்தை இயற்­று­கின்ற இடத்­திலே, துணை சபா­நா­ய­க­ராக இருந்­தி­ருக்­கி­றார். ஏற்­கெ­னவே அவர் ஒன்­றிய அர­சில் அமைச்­ச­ராக இருந்­தி­ருக்கி றார்.  கடம்­பூர் ஜனார்த்­த­னன் அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கி­றார். இவ்­வாறு அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சார்ந்­த­வர்­கள் பலர் அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­கள் மட்­டும் உட­ன­டி­யாக சட்­டத்தை நிறை­வேற்றி நம்­மி­டத்­தில் ஒப்­ப­டைத்­து­விட்­டார்­களா? அது­தான் வேண்­டாம் என்று  முத­ல­மைச்­சர் அவர்­கள் சொல்­லு­கி­றார். இதைப்­பற்றி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் லாலி பாட வேண்­டாம். ஒரே உணர்­வாக இந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்­டு­மென்று கேட்­கி­றார். அத­னால்,  எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள்,அதை consider செய்­யுங்­கள். மீண்­டும், மீண்­டும் நீங்­கள் இருந்­தீர்­கள், நாங்­கள் இருந்­தோம் என்று லாலி பாடிக் கொண்­டி­ருந்­தால் பிரச்­சினை வேறு வித­மா­கப் போகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அமைச்­சர் எஸ்.ரகு­பதி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">:  எதிர்க்­கட்சி தலை­வர் அவர்­க­ளும் நீதி­மன்­றத்­திற்கு சென்­றதை சொன்­னார். தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது நீதி­மன்­ற த்­திற்கு சென்று Interrogatory Application போட்டு அதிலே சேர்ந்­தி­ருந்­தார் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முதல்­வர் மு.க.ஸ்டாலின்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, மீண்­டும், மீண்­டும் தவ­றான தக­வலை அவர் பதிவு செய்­கி­றார். அத­னால், நான் உங்­களை அன்­போடு, பணி­வோடு கேட்­டுக்­கொள்­கி­றேன். தீர்­மா­னத்தை நிறை­வேற்­றித் தரு­வ­தற்­கான வழி­வ­கையை நீங்­கள் காண வேண்­டும். இல்­லை­யென்­றால் எதிர்ப்பு தெரி­வித்­து­விட்­டுப் போகட்­டும்; வேண்­டாம் என்று சொல்­ல­வில்லை. அது அவர்­க­ளு­டைய உரிமை. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>