<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,304,609,1132" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 17:01:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04042025-VLR-15" position.sequence="15" ex-ref="04042025-VLR-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">முதல் கட்டமாக 2038 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் 3 கட்டங்களாக நிறைவேற்றப்படும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">சட்டப்பேரவையில் – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Duraimurugan_15_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப். 4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் நீர்­ வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­கள், “காவிரி –வைகை– குண்­டாறு இணைப்­புத் திட்­டம்3 கட்­டங்­க­ளாக நிறை­வேற்­றப்­ப­டும்” என்று குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவிரி – வைகை – குண்­டாறு இணைப்­புத் திட்­டப் பணி­களை விரை­வு­ப­டுத்­து­வது குறித்து, சட்­டப்­பே­ர­வை­யில் 
அ.தி.மு.க. உறுப்­பி­னர் டாக்­டர் சி.விஜ­ய­பாஸ்­கர், கவ­ன­ஈர்ப்­புத் தீர்­மா­னம் கொண்டு வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அத­னை­யொட்டி, நீர்­வ­ளத்­ துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன் அவர்­கள், பேர­வை­யில் அறிக்கை ஒன்றை வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவே­ரி-–­­வை­கை-–­­குண்­டாறு வெள்­ள­நீர் இணைப்பு கால்­வாய் திட்­ட­மா­னது மூன்று கட்­டங்­க­ளாக செயல்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1.  கட்­டம்- 1 காவிரி முதல் தெற்கு வெள்­ளாறு வரை (0.00 கி.மீ. முதல் 118.45 கி.மீ. வரை) = 118.450 கி.மீ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2. கட்­டம்- 2 தெற்கு வெள்­ளாறு முதல் வைகை வரை (118.45 கி.மீ. முதல் 228.145 கி.மீ. வரை)	= 109.695 கி.மீ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">3. கட்­டம்- 3 வைகை முதல் குண்­டாறு வரை (228.145 கி.மீ. முதல் 262.190 கி.மீ. வரை) = 34.045 கி.மீ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மொத்­தம் = 262.190 கி.மீ.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­பு­திய இணைப்பு கால்­வாய்­மூ­லம் முதல் கட்­டத்­தில் 18,566 ஹெக்­டர் (45,876 ஏக்­கர்) பாசன நிலங்­க­ளும், இரண்­டாம் கட்­டத்­தில் 26,853.90 ஹெக்­டர் (66,356 ஏக்­கர்) பாசன நிலங்­க­ளும் மற்­றும் மூன்­றாம் கட்­டத்­தில் 6,579.52 ஹெக்­டர் (16,258 ஏக்­கர் பாசன நிலங்­க­ளும் மேம்­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் முதற்­கட்­ட­மாக மாய­னூர் (கட்­டளை) முதல் தெற்கு வெள்­ளாறு (கவி­நாடு மேற்கு) வரை 118.45 கி.மீ. நீளத்­திற்கு 8 பாகங்­க­ளுக்­காக பிரித்து திட்ட செய­லாக்­கத்­திற்கு அர­சாணை நிலை எண் 280 பொதுப் பணித் (I.Spl.2) துறை/நாள்  10-.11.-2020 மூலம் ரூ.6,941.00 கோடிக்கு கொள்கை ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முதல் கட்­ட­மாக கரூர், திருச்சி, புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் நில­மெ­டுப்பு பணி­கள் மேற்­கொள்­ளும்­பொ­ருட்டு கரூர் மாவட்­டத்­தில் 427.81 ஹெக்­டர் பட்டா நிலங்­களை கைய­கப்­ப­டுத்­த­வும் மற்­றும் 36.21 ஹெக்­டர் புறம்­போக்கு நிலங்­களை நில­மாற்­றம் செய்ய இரண்டு வட்­டாட்­சி­யர் அல­கு­க­ளு­டன்­கூ­டிய சிறப்பு மாவட்ட வரு­வாய் அலு­வ­ல­க­மும், திருச்சி மாவட்­டத்­தில் 200.41 ஹெக்­டர் பட்டா நிலங்­களை கைய­கப்­ப­டுத்­த­வும் மற்­றும் 18.62 ஹெக்­டர் புறம்­போக்கு நிலங்­களை நில­மாற்­றம் செய்ய ஒரு வட்­டாட்­சி­யர் அல­கும், புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் 608.03 ஹெக்­டர் பட்டா நிலங்­களை கைய­கப்­ப­டுத்­த­வும் மற்­றும் 103.51 ஹெக்­டர் புறம்­போக்கு நிலங்­களை நில­மாற்­றம் செய்ய மூன்று வட்­டாட்­சி­யர் அல­கு­க­ளு­டன்­கூ­டிய சிறப்பு மாவட்ட வரு­வாய் அலு­வ­ல­க­மும் இயங்கி வந்த நிலை­யில் நில கைய­கப்­ப­டுத்­தும் பணியை துரி­தப்­ப­டுத்­தும் வகை­யில், கரூர் மற்­றும் புதுக்­கோட்டை மாவட்­டத்­திற்கு கூடு­த­லாக தலா ஒரு வட்­டாட்­சி­யர் அலகு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நிலமெடுப்புப் பணிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­ல­மெ­டுப்பு பணி­கள் நீர்­வ­ளத் துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் மற்­றும் நில நிர்­வாக ஆணை­யர் ஆகி­யோர்­க­ளால் தொடர்ந்து மாதாந்­திர ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு, நில­மெ­டுப்பு பணி­கள் விரை­வாக நடை­பெ­று­வது உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும் நில­மெ­டுப்பு பணி­க­ளுக்கு 2020–2021–ஆம் நிதி­யாண்­டில் ரூ.34.14 கோடி செல­வி­டப்­பட்டு 28.99 ஹெக்­டர் பரப்பு கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 2021-–2022,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">2022–-2023 மற்­றும் 2023-–2024 நிதி­யாண்­டு­க­ளில் ரூ.389.89 கோடி செல­வி­டப்­பட்டு, 721.85 ஹெக்­டர் பரப்பு கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய 2024-–2025 நிதி­யாண்­டிற்கு வைப்பு தொகை­யாக (K-Deposit) ரூ.375.79 கோடி­யில் ரூ.35.66 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு 133.01 ஹெக்­டர் பரப்பு கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு, மொத்­தம் 85 சத­வி­கித பணி­கள் நிறை­வு­பெற்று மீத­முள்ள பணி­கள் துரி­த­மாக நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கால்வாய் வெட்டும் பணிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இத்­திட்­டத்­திற்­கான கால்­வாய் அமைக்­கும் பணி­யா­னது முதல் கட்­ட­மாக கரூர் மாவட்­டத்­தில் நெடுகை 0.00 கி.மீ. முதல் நெடுகை 4.100 கி.மீ. வரை­யி­லும், திருச்சி மற்­றும் புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் நெடுகை 54.695 கி.மீ. முதல் நெடுகை 60.050 கி.மீ. வரை­யி­லான பகு­தி­கள் செய­லாக்­கத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­ப­ணிக்கு 2021-–2022 இல் 146.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, அதில் 116.22 கோடி ரூபாய் செலவு செய்­யப்­பட்டு, 47% கால்­வாய் வெட்­டும் பணி­கள் முடிக்­கப்­பட்­டது. 2022-–2023 மற்­றும் 2023-–2024 நிதி­யாண்­டு­க­ளில் ரூ.176.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, அதில் ரூ.128.51 கோடி செலவு செய்­யப்­பட்டு, 86% கால்­வாய் வெட்­டும் பணி­கள் முடிக்­கப்­பட்­டது. மேலும் நடப்பு நிதி­யாண்­டில் 2024-–2025 நிதி­யாண்­டிற்கு ரூ.50.50 கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, தற்­போது வரை ரூ.33.48 கோடி செலவு செய்­யப்­பட்டு, 89% கால்­வாய் வெட்­டும் பணி­கள் முடிக்­கப்­பட்­டது மீத­முள்ள பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தற்­போது பணி­கள் நடை­பெற்று வரும் பகு­தி­கள் தவிர நில­மெ­டுப்­புப் பணி­கள் 96% முடி­வுற்ற கரூர் மற்­றும் திருச்சி மாவட்­டங்­க­ளில் நெடுகை 4.100 கி.மீ. முதல் 54.695 கி.மீ. வரை எட்டு சிப்­பங்­க­ளா­கப் பிரித்து ரூ.3,076.32 கோடிக்கு மதிப்­பீடு தயா­ரித்து அர­சி­டம் ஒப்­பு­தல் பெறும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும் கட்­டம் -2 மற்­றும் கட்­டம்- 3 ஆகிய திட்­டப்­ப­ணி­களை செயல்­ப­டுத்த விரி­வான திட்ட அறிக்கை தயா­ரிக்­கும் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதைத் தொடர்ந்து அமைச்­சர் குறிப்­பிட்­ட­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவி­ரி-–­­வை­கை-–­­குண்­டாறு என்­பது எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள் இந்த அவை­யிலே அறி­வித்த திட்­டம். அன்­றைக்கு அவர் அறி­வித்த அவர்­க­ளு­டைய வார்த்­தை­யிலே சொல்­கி­றேன். வெள்ள காலங்­க­ளில் காவிரி ஆற்­றில் பெரு­கும் உபரி நீரை, வறண்ட மாவட்­டங்­க­ளுக்கு கொண்டு செல்­வ­தற்­கான காவி­ரி–­­வை­கை–-­­குண்­டாறு இணைப்­புத் திட்­டத்­தின் முதற்­கட்­ட­மாக காவிரி ஆற்­றின் குறுக்கே கட்­டளை பகுதி கத­வணை அமைக்­கும் திட்­டம் ரூபாய் 165 கோடி மதிப்­பீட்­டில் செயல்­ப­டுத்­தப்­ப­டும் என்று 2008–ஆம் ஆண்­டில் இந்த மன்­றத்­திலே எங்­கள் தலை­வர் அவர்­கள் தெரி­வித்­தார்­கள். அந்த மாய­னூர் கத­வ­ணையை வைத்து காவிரி-– வைகை-– குண்­டாறு இணைப்­புக்கு அடித்­த­ள­மிட்­ட­வர் எங்­க­ளு­டைய தலை­வர் அவர்­கள்­தான். இந்­தத் திட்­ட­மா­னது மூன்று கட்­டங்­க­ளாக நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென திட்­ட­மி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பாசன வசதி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முதற்­கட்­டம் காவிரி முதல் தெற்கு வெள்­ளாறு வரை­யில் 118.45 கி.மீ.; இரண்­டா­வது கட்­டம் தெற்கு வெள்­ளாறு முதல் வைகை வரை 109.69 கி.மீ.; மூன்­றா­வது கட்­டம் வைகை முதல் குண்­டாறு வரை 34.04 கி.மீ. ஆகும். இந்­தத் திட்­ட­மா­னது உறுப்­பி­னர் அவர்­கள் சொன்­ன­தைப்­போல கரூர், திருச்சி, புதுக்­கோட்டை, சிவ­கங்கை, விரு­து­ந­கர், இரா­ம­நா­த­பு­ரம் ஆகிய மாவட்­டங்­க­ளின் குடி­நீ­ருக்­கும், 52,000 ஏக்­கர் நிலங்­க­ளுக்கு பாசன வசதி செய்­வ­தற்­கும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­தத் திட்­டத்­தின் முதற்­கட்­ட­மாக மாய­னூர் முதல் தெற்கு வெள்­ளாறு வரை­யில் 118.45 கி.மீ. தூரத்­திற்கு ரூபாய் 6,941 கோடி­யில் பணி­களை மேற்­கொள்ள நவம்­பர் 2020-ல் கொள்கை அள­வில் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது. Allocation-ல் கொள்கை அள­விலே உங்­கள் ஆட்­சி­யில் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது. முதற்­கட்ட பணி 0.0 கி.மீ. முதல் 4.1 கி.மீ. வரை கரூர் மாவட்­டத்­தில்,  அதற்கு 171 கோடி ரூபாய். இரண்­டா­வது கட்­டம் 54.69 கி.மீ. முதல் 60 கி.மீ. வரை அதற்கு 160 கோடி ரூபாய் என்று பணம் சேர்த்­தி­ருக்­கி­றோம். இவை­யெல்­லாம்-- 39 கோடி, இதற்கு கடை­சி­யாக நீங்­கள் ஒதுக்கி விட்­டு­சென்ற பணம்331 கோடி ரூபாய்க்கு 2020–ஆம் ஆண்­டின் நவம்­பர் மாதத்­தில் நிர்­வாக ஒப்­பு­தல் அளித்­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதற்குப் பிறகு தேர்­தல் வந்­த­தது, அளிப்­ப­தற்கு முன்­னால். இந்த முதல் திருத்­தத்­தில் இருக்­கின்ற 375 கோடி ரூபாய்க்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது. இது­வரை 288 கோடி ரூபாய் செலவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. மீதி இருக்­கின்ற கால்­வாய்­கள் வெட்­டும் பணி நடந்து கொண்­டி­ருக்­கி­றது. 83 சத­வி­கி­தம் முடி­வ­டைந்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">Package-2-க்கு 36 கோடி ரூபாய் தேவைப்­ப­டு­கி­றது. இவை­க­ளுக்­காக நில எடுப்பு சட்­டம்--2,550 ஏக்­கர் பட்டா நிலங்­க­ளில் இது­வ­ரை­யில் 2,038 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தி ­யி­ருக்­கி­றோம். முதற்­கட்­ட­மாக நீங்­கள் எங்­கெங்­கெல்­லாம் tender விட்டு எடுக்­கி­றீர்­களோ, அந்த இடத்­தைக்­கூட நீங்­கள் ஆர்­ஜி­தம் செய்­ய­வில்லை. அதை­யும் நாங்­கள் செய்­தி­ருக்­கி­றோம். எனவே, இப்­பொ­ழுது இந்­தக் கால்­வாய் அமைக்க 3,076 கோடி ரூபாய் செல­வா­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. இந்­தத் திட்­ட­மா­னது நிதி­நி­லை­மைக்­கேற்ப முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தங்­க­ளுக்­கெல்­லாம் இப்­ப­டிப்­பட்ட எண்­ணம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னா­லேயே, அந்த மாவட்ட மக்­க­ளுக்கு நன்மை செய்ய வேண்­டும் என்­ப­தற்­கா­க­தான்  2008-லேயே எங்­கள் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் இந்­தத் திட்­டத்தை முன்­மொ­ழிந்­தார்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி). எனவே, அந்­தத் திட்­டம் என்­பது நாங்­கள் பெற்ற பிள்ளை.  இதை விட்டு விட­மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு பேர­வை­யில் அமைச்­சர் துரை­மு­ரு­கன் விளக்­க­ம­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>