<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,127,958,1438" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 05 2025 03:30:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05052025-CBE-02" position.sequence="02" ex-ref="05052025-CBE-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">மதுரையில் ஜூன் 1–ல் தி.மு.க. பொதுக் குழு கூடுகிறது!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="35">மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMPhoto1_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="2_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Francis_02_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, மே 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழ­கத் தலை­வர் – முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில், நேற்று அண்ணா அறி­வா­ல­யம், கலை­ஞர் அரங்­கில் நடை­பெற்ற மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் “மது­ரை­யில்ஜூன் 1–ல்  கழ­கப்  பொதுக்­குழுவைக்  கூட்ட முடிவுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக” தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="13">தீர்­மா­னம்  : 1</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரா­விட  மாடல் அர­சின் ஐந்­தா­வது ஆண்­டில் அடி எடுத்து வைக்­கும் – மக்­க­ளின்  மகத்­தான  பேரன்­பைப்  பெற்ற – இந்­தி­யா­விற்கே  ரோல்  மாட­லா­கச்  செயல்­ப­டும்  கழ­கத்  தலை­வர்  மற்­றும் முத­ல­மைச்­சர்  அவர்­க­ளுக்­குப் பாராட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தி­யத் துணைக் கண்­டத்­தில் – மக்­கள்நலன்  போற்­றும்  வகை­யில்,  மாநில  உரி­மை­க­ளுக்­குக்  குரல்  கொடுக்­கும்  தீரத்­து­டன்,  சமூ­க­நீ­தி­யைப்  பாது­காத்து,  சட்­ட­மன்ற  மாண்­பினை  நிலை­நாட்டி,  ஜன­நா­ய­கக்  கோட்­பா­டு­களை  உயர்த்­திப்  பிடிக்­கும்  அர­சா­க­வும்,  ஒன்­றிய  பா.ஜ.க. அர­சின்  எதேச்­சா­தி­கா­ரப்  போக்­கி­லி­ருந்து – அர­சி­யல் சட்­டம்  தந்­துள்ள  கூட்­டாட்­சிக்  கருத்­தி­ய­லைப்  பாது­காக்­கும்  முதன்­மை­யான  மாநில  அர­சா­க­வும்  நான்கு      ஆண்­டுகளை   நிறைவு  செய்து  –  ஐந்­தா­வது  ஆண்­டில்  அடி­யெ­டுத்து  வைக்­கும்  திரா­விட  மாடல்  அர­சின் – மக்­க­ளின்  மகத்­தான  பேரன்­பைப்  பெற்ற  முத­ல­மைச்­ச­ ரா­க­வும் –  இந்­தி­யா­விற்கே  ரோல்  மாட­லாக – தமிழ்­நாட்­டின்  தனிப்  பெருந்­த­லை­வ­ரா­க­வும்  திக­ழும்  கழ­கத்  தலை­வர், முத­ல­மைச்­சர்  அவர்­க­ளுக்கு இந்த  மாவட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­கள்  கூட்­டம்  தனது  மன­மு­வந்து  வாழ்த்­து­க­ளைத்  தெரி­வித்­துக்  கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு  சட்­ட­மன்­றத்­தில்  தீர்­மா­னம் நிறை­வேற்றி – ஒன்­றிய  பா.ஜ.க. அர­சி­டம்  தொடர்ந்து  குரல்  எழுப்பி – சாதி­வா­ரிக்  கணக்­கெ­டுப்பு  நடத்த  வேண்­டிய  பொறுப்பு   ஒன்­றிய   அர­சுக்­குத்­தான்    உள்­ளது  என்­பதை  நாட்டு  மக்­க­ளுக்­கும் –  ஒன்­றிய   அர­சுக்­கும்   உணர்த்தி  –          தற்­போது  சாதி­வா­ரிக்  கணக்­கெ­டுப்பு           அறி­விப்­பைப்  பெற்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது­மட்­டு­மல்ல,  அர­சி­யல்  சட்ட வர­லாற்­றில்  ஒரு  புதிய  அத்­தி­யா­ய­மாக  ஆளு­ந­ரின்  கையெ­ழுத்­தின்றி  உச்­ச­நீ­தி­மன்­றமே   ஒப்­பு­தல்   அளித்­துச்   சட்­ட­          மி­யற்­றும்  அதி­கா­ரத்­தைத்  தனது சட்­டப்  போராட்­டம்  மூலம்  பெற்று,  ஆளு­நர்  அடா­வ­டி­யாக  நிறை­வேற்ற  மறுத்த  பத்து  மசோ­தாக்­க­ளைச்  சட்­ட­மாக்கி  சகாப்­தம்  படைத்து, “சட்­ட­மி­யற்­றும்  அதி­கா­ரம்  சட்­ட ­மன்­றத்­திற்கே” – “மக்­க­ளால்  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட  அர­சுக்கே – நிச்­ச­ய­மாக  ஆளு­ந­ருக்கு  இல்லை”  என்ற  வர­லாற்­றுச்           சிறப்­பு­மிக்க  உச்­ச­நீ­தி­மன்­றத்  தீர்ப்­பைப்  பெற்று,  தமிழ்­நாட்­டின்  உரி­மையை  நிலை­நாட்­டி­யது  மட்­டு­மின்றி,  இந்­தத்  தீர்ப்­பின்  மூலம்,  இந்­தி­யக்  கூட்­டாட்சி   வர­லாற்­றில்   அனைத்து   மாநி­லங்­­            களுக்­கு­மான  உரி­மை­க­ளைப்   பெற்­றுத்  தந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதோடு,  வர­லாற்­றில்  மீண்­டும்  மாநில  சுயாட்­சிக்­காக  மாண்­பமை           உச்­ச ­நீ­தி­மன்ற  நீதி­ய­ர­சர்  குரி­யன்   ஜோசப்  அவர்­கள்  தலை­மை­யில்  ஒரு  உயர்­மட்­டக்  குழு­வினை  நிய­மித்­துள்ள  கழ­கத்  தலை­வ­ரும் –  முத­ல­மைச்­ச­ரு­மான  முத்­து­வேல்  கரு­ணா­நிதி  ஸ்டாலின்  அவர்­க­ளுக்கு,  மாவட்­டச்  செய­லா­ளர்­­களின்  இந்­தக்  கூட்­டம்  உவ­கை­யு­ட­னும் – பெருமை  பொங்­க­வும்   பாராட்­டு­த­லைப்  பதிவு  செய்து  கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேலும்,  ஐந்­தா­வது  ஆண்­டில்  அடி­யெ­டுத்து  வைக்­கும்  திரா­விட  மாடல்   நாய­கர்   முத­ல­மைச்­சர்  அவர்­க­ளுக்­குத்  துணை­யா­கச்  செய­லாற்றி  வரும் துணைமுத­ல­மைச்­சர்   உத­ய­நிதி  ஸ்டாலின்  அவர்­க­ளுக்­கும்;  அனைத்து  அமைச்­சர்  பெரு­மக்­க­ளுக்­கும்  இம்­மா­வட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­கள்  கூட்­டம்  வாழ்த்­தும்  – பாராட்­டும்– நன்­றி­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="13">தீர்­மா­னம் : 2</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“நாடு போற்­றும் நான்­காண்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தொட­ரட்­டும் பல்­லாண்டு!”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சாதனை விளக்­கப் பொதுக்­கூட்­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர்  அவர்­கள்,  நடை­பெற்று  முடிந்த  சட்­ட­மன்­றக்  கூட்­டத்­தொ­ட­ரில்,  அவ­ரது  உள்­துறை  மானி­யக்  கோரிக்கை  மீதான  பதி­லு­ரை­யில்  தெரி­வித்­த­படி,  வளர்ச்சி  சார்ந்த  எந்த  ஓர்  இலக்­காக  இருந்­தா­லும்  அதில்  இந்­திய  ஒன்­றி­யத்­தின்  சரா­ச­ரி­யை­விட  தமிழ்­நாடு  கூடு­த­லான  அள­வில்  முன்­னே­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தி­யா­வின்  பொரு­ளா­தார  வளர்ச்சி  6.5  விழுக்­காடு  என்­றால்,  தமிழ்­நாட்­டின்பொரு­ளா­தார  வளர்ச்சி  9.69  விழுக்­காடு;  தேசிய  சரா­ச­ரி­யான  2.06  லட்­சம்  என்­ப­தை­ விட  தமிழ்­நாட்­டின்  தனி­ந­பர்  வரு­மா­னம்  3.58  லட்­சம்  என  1.74  மடங்கு                  அதி­க­ரிப்பு;  தமிழ்­நாட்­டின்  உயர்­கல்­விச்  சேர்க்கை  விகி­தம்  47  விழுக்­காடு;  நிலை­யான  வளர்ச்­சி­யில்  தமிழ்­நாடு  இந்­தி­யா­வில்இரண்­டா­வது  இடம்;  சமூக  முன்­னேற்­றக்  குறி­யீட்­டில்  தேசிய  அள­வில்  தமிழ்­நாடு முத­லி­டம்;  வறு­மைக்  கோட்­டிற்­குக்  கீழே  உள்­ள­வர்­கள்  வெறும்  1.43 விழுக்­கா­டா­கக்  குறைவு;  ‘மக்­க­ளைத்  தேடி  மருத்­து­வம்’  திட்­டம்  மூலம்  2.25  கோடி  மக்­கள்  பயன்;  இந்­தி­யா­வில்  வேறு  எந்த  மாநி­லத்­தி­லும்  இல்­லாத  வகை­யில்  அரசு  மருத்­து­ம­னை­க­ளில்  அதி­க­மான   படுக்­கை­கள்;  இந்­தி­யா­வி­லேயே  அதி­கத்  தொழிற்­சா­லை­கள்  கொண்ட  மாநி­லம்; 5.35  லட்­சம்  கோடி  ரூபாய்  முத­லீ­டு­ க­ளைப்  பெற்­ற­தில்  நாட்­டி­லேயே  இரண்­டா­வது  இடம்;  ஊராட்சி  அமைப்­பு­க­ளுக்கு  அதி­கா­ரம்  அளிப்­ப­தில்  நாட்­டி­லேயே   மூன்­றா­வது  இடம்;  சூரிய  சக்­தி­யில்      நான்­கா­வது  இடம்,  ஸ்டார்ட்–­­அப்  தர­வ­ரி­சைப்  பட்­டி­ய­லில்  அ.தி.மு.க.  ஆட்­சி­யில்  கடைசி  இடத்­தில் இருந்த தமிழ்­நாடு, 2022–இல்  முத­லி­டம்,  ஏற்­று­ம­தித்  தயார்  நிலைக்  குறி­யீட்­டில்  முத­லி­டம்;  மின்­ன­ணுப்  பொருட்­கள்  ஏற்­று­ம­தி­யில்  முதன்மை  மாநி­லம்;  தோல்  பொருட்­கள்  மற்­றும்  ஜவுளி  ஏற்­று­ம­தி­யில்  முதன்மை  மாநி­லம்;  நாட்­டி­லேயே  காவல்­து­றை­யில்  அதிக  பெண்  அதி­கா­ரி­கள்  பணி­பு­ரி­யும்  மாநி­லம்;  அது­மட்­டு­மல்ல – சட்­டம்  ஒழுங்கு  சிறப்­பாக  இருப்­ப­தில்  நாட்­டி­லேயே  முதல்  இடத்­தில்  உள்ள  மாநி­லம்  தமிழ்­நாடு  என்று  திரா­விட  மாடல்    அர­சின்  மணி­ம­கு டத்தை  அலங்­க­ரிக்­கும்  அடுக்­க­டுக்­கான  சாத­னை­க­ளால்  தமிழ்­நாடு  இன்­றைக்கு  முன்­னி­லை­யில்  இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அது­மட்­டு­மல்ல,  மக்­களை  முன்­னேற்­றும்  முத்­தி­ரைத்  திட்­டங்­க­ளான  ‘கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம்’, ‘மக­ளிர்  விடி­யல்  பய­ணத்  திட்­டம்’, ‘முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம்’, ‘புது­மைப்­பெண்  திட்­டம்’, ‘தமிழ்ப் புதல்­வன் திட்­டம்’, ‘நான்  முதல்­வன்  திட்­டம்’, ‘அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டம்’, ‘இல்­லம்  தேடிக் கல்வி’, ‘மக்­க­ளைத்  தேடி  மருத்­து­வம்’  என  அனைத்­துத்  திட்­டங்­க­ளும்  – தமிழ்­நாட்­டின்  முன்­னேற்­றத்­திற்­கும் – தமிழ்­நாட்டு  மக்­க­ளின்  நல­னுக்­கும்  முன்­னோ­டி­யா­கத்  திகழ்­வதை  மற்ற  மாநி­லங்­கள் கூட   இன்று   திரும்­பிப்         பார்க்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட  முன்­னேற்­றக்  கழக  அர­சின்  இந்­தச்  சாத­னை­க­ளைப்  பகுதி,  ஒன்­றிய,  நகர  அள­வில்,  இளை­ஞர்  அணி­யின்  மூலம்  வரப்­பெற்ற  186  இளம்  பேச்­சா­ளர்­கள்  உள்­ளிட்ட  443 பேச்­சா­ளர்­க­ளின்  பங்­கேற்­பு­டன், 868 ஒன்­றி­யங்­கள்  – 224  பகு­தி­கள் – 152  நக­ரங்­கள்  என  மொத்­தம்  1,244  இடங்­க­ளில்  “நாடு  போற்­றும்  நான்­காண்டு  தொட­ரட்­டும்  பல்­லாண்டு!”  சாதனை  விளக்­கப்  பொதுக் கூட்­டங்­களை  நடத்­தி­டு­வ­தென  மாவட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­க­ளின்  இந்­தக் கூட்­டம் முடிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="13">தீர்­மா­னம்  : 3
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பவள  விழாக் கண்ட திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பொதுக்­குழு – கழ­கத்தலை­வ­ரின் அறி­வு­றுத்­த­லின்­பே­ரில் கூடல்மாந­க­ரில் ஜூன் 1–ஆம் நாள் கூடு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நூறாண்டு  கடந்த  திரா­விட  இயக்­கத்­தில், 75  ஆண்­டு­க­ளைக்  கடந்து  தமிழ்  மக்­க­ளுக்­கான  சமு­தாய – அர­சி­யல்  பணி­க­ளைச்  சளைக்­கா­மல்  மேற்­கொண்டு,   நாட்­டின்  அர­சி­ய­லில்  தவிர்க்க  முடி­யாத  தேசிய  சக்­தி­யா­கத்  திரா­விட  முன்­னேற்­றக்  கழ­கம்  திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தந்தை பெரி­யார்,  பேர­றி­ஞர் அண்ணா,  முத்­த­மி­ழ­றி­ஞர்  கலை­ஞர்  ஆகி­யோர்  வழி­யில்  நின்று  தமிழ்­நாட்­டின்  நலன்  காத்து  வரு­வ­து­டன் – இன்று  அகில  இந்­திய  அர­சி­ய­லில்  நம்  கழ­கத்  தலை­வ­ரின்  கருத்து  என்ன  என்ற  எதிர்­பார்ப்பு  ஓங்கி  நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பல்­வேறு  வர­லாற்­றுச்  சிறப்­பு­மிக்க        தீர்­மா­னங்­களை  நிறை­வேற்றி  – தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றத்­திற்­கா­க­வும், நம் நாட்­டின்  ஜன­நா­ய­கத்­தைக்  காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும்,  சமத்­து­வம்,  சமூ­க­நீதி,  சிறு­பான்­மை­யி­னர்  நலன்  உள்­ளிட்ட  அனைத்­துத்  தரப்­பி­ன­ரின்  நலன்  காக்­கும்  மாபெ­ரும்  இயக்­க­மாக  முன்­வ­ரி­சை­ யில்  நிற்­கும்  திரா­விடமுன்­னேற்­றக்  கழ­கத்­தின்  வர­லாற்­றுச்  சிறப்­பு­மிக்கபொதுக்­கு­ழுக்  கூட்­டம்  நம்  ஒப்­பற்ற  கழ­கத்  தலை­வர்  அறி­வு­றுத்­த­லின்­படி,  வரு­கின்ற ஜூன் 1–ஆம்  நாள்  கூடல்  மாந­க­ராம்  மது­ரை­யில்  நடை­ பெ­றும் என்று  இம்­மா­வட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­க­ளின்  இந்­தக்  கூட்­டம்  தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="15.5">தீர்­மா­னம்  : 4
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அம­லாக்­கத்­துறை  போன்ற  அமைப்­பு­களை  அர­சி­யல்  பழி­வாங்­க­லுக்­குப்  பயன்­ப­டுத்­தும்  ஒன்­றிய  பா.ஜ.க.  அர­சின்  
அதி­கார  அத்­து­மீ­ற­லுக்­குக்  கண்­ட­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மக்­கள் மன்­றத்­தி­லும் – சட்­டத்­தின்   துணை  கொண்­டும்;  தி.மு.க.  எதிர்­கொள்­ளும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீதித்­துறை  உள்­ளிட்ட  அனைத்­துத்  தன்­னாட்சி  அமைப்­பு­க­ளின்  செயல்­பா­டு­க­ளி­லும்  அத்­து­மீ­றிக் குறுக்­கிட்டு – அந்த  அமைப்­பு­க­ளின்  சுதந்­தி­ரத்­தைப்  பறித்து  வரு­வ­தோடு  – தி.மு.க.  உள்­ளிட்ட  எதிர்க்­கட்சி  ஆளும்  மாநி­லங்­கள்  மட்­டுமே  வரு­மான வரித்­துறை,  அம­லாக்­கத்­துறை  ஆகி­ய­வற்­றின்  ரெய்­டுக்­கும்,  சோத­னை­க­ளுக்­கும்  இலக்­கா­கும் வகை­யில் அதி­கார அத்­து­மீ­றல் செய்து – அறி­விக்­கப்­ப­டாத நெருக்­கடி நிலை­மையை உரு­வாக்கி வரும் ஒன்­றிய பா.ஜ.க.  அர­சுக்கு  இந்த  மாவட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­கள்  கூட்­டம்  கடும்  கண்­ட­னத்­தைத்  தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சி.பி.ஐ.,  அம­லாக்­கத்­துறை,  வரு­மா­ன­வ­ரித்­துறைபோன்ற  நடு­நிலை  தவ­றாது  செயல்­பட  வேண்­டிய  அமைப்­பு­களை  எதிர்க்­கட்­சி­க­ளுக்கு  எதி­ரான  அர­சி­யல்  பழி­வாங்­கல்  நட­வ­டிக்­கை­க­ளில்  ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தன்  விளை­வாக  இன்று  உயர்­நீ­தி­மன்­றம்  மற்­றும்  உச்­ச­நீதி மன்­றத்­தின்  கண்­ட­னத்­திற்கு  இந்த  அமைப்­பு­களை  ஆளாக்கி,  அ.தி.மு.க.  போன்ற  கட்­சி­களை  மிரட்டி  கூட்­டணி  அமைக்க  ஒன்­றிய  பா.ஜ.க.  அரசு  இந்த  அமைப்­பு­களை  ஈடு­ப­டுத்தி  வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில்  ஒரு  அம­லாக்­கத்­துறை  அதி­காரி  லஞ்­சம்  பெறும்  போது  கைது  செய்­யப்­பட்ட  நட­வ­டிக்­கையை  “பழி­வாங்­கும்  நட­வ­டிக்கை”  எனக்  கூறிய  அம­லாக்­கத்­து­றை­யைப்  பார்த்து;  இப்­போது  டெல்லி  உயர்­நீ­தி­மன்­ற­மும்,  மாண்­பமை  உச்­ச­நீ­தி­மன்­ற­மும்  அந்த  அமைப்­பு­க­ளில்  நடக்­கும்  ஊழல்­க­ளைக்  கண்­டித்­துக்  கொண்டு  இருப்­ப­தை­யும்  மாவட்­டக்  கழ­கச்  செய­லா­ளர்­க­ளின்  இந்­தக்  கூட்­டம்  பதிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">திரா­விட  முன்­னேற்­றக்  கழ­கத்­தி­னர்  மீது   பழி­வாங்­கும்  நட­வ­டிக்­கைக்­காக  அம­லாக்­கத்­துறை  போன்ற  அமைப்­பு­களை  ஒன்­றிய  பா.ஜ.க.  அரசு  பயன்­ப­டுத்­து­வதை  திரா­விட  முன்­னேற்­றக்  கழ­கம்  சட்­டத்­தின்  துணை  கொண்டு  துணிச்­ச­லு­டன்  எதிர்­கொண்டு,  ஏற்­கெ­னவே கழ­கத் தலை­வர் – முத­ல­மைச்­சர்  அவர்­கள்  சொன்­ன­படி,  அமித்ஷா  அல்ல;எந்த  ஷா வந்­தா­லும் – அவர்­கள்  எத்­தனைபரி­வா­ரங்­க­ளைச்  சேர்த்­துக்  கொண்டு  வந்­தா­லும்  அதனை  எதிர்த்து,  நீதியை  நிலை­நாட்­டி­ட­வும் – மக்­கள்  மன்­றத்­தில்  ஒன்­றிய  பா.ஜ.க.  அர­சின்  அதி­கார  அத்­து­மீ­றலை  எடுத்­து­ரைத்­தி­ட­வும்  இந்­தக் கூட்­டம் தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>