<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,34,958,788" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 04 2025 21:56:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05052025-CBE-05" position.sequence="05" ex-ref="05052025-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.05.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">சேந்தமங்கலம் தொகுதியில் ‘சிப்காட்’  தொழிற்பேட்டை அமைத்ததற்கு நன்றி! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">சிறுதானிய  பல்பொருள்  அங்காடி  –  பழங்குடியின  மகளிர்  தொழிற்  பூங்கா! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">சட்டப்பேரவையில்  – சேந்தமங்கலம்  கே. பொன்னுசாமி பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup300545_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup262125_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="PonnusamyKMLA_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, மே. 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் நிதி, சுற்­றுச் சுழல், ஆதி­தி­ரா­வி­டர் நலத் துறை மானி­யக் கோரிக்­கை­யில், சேந்தமங்­க­லம் தொகுதி உறுப்­பி­னர் கே. பொன்­னு­சாமி பேசு­கை­யில் சேந்த மங்­க­லம் தொகு­தி­யில் சிப்­காட் தொழிற்­பூங்கா அமைத்­த­தற்கு நன்றி தெரி­வித்து பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப் பேர­வை­யில் சேந்­த­மங்­க­லம் தொகுதி கே.பொன்­னு­சாமி பேசிய தாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2025–-2026 ஆம் ஆண்­டிற்­கான ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத் துறை குறித்த மானி­யக் கோரிக்­கை­மீ­தான விவா­தத்­தில் இம்­மா­மன்­றத்­தில் பேசு­வ­தற்கு வாய்ப்­ப­ளித்த  பேரவை தலை­வர் அவர்­க­ளுக்கு வணக்­கம். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா ஆகி­யோ­ரின் திசை நோக்கி நான் வணங்­கு­கி­றேன். தமி­ழ­கத்­திலே பிறந்து, தமி­ழ­கத்­திலே வளர்ந்து, தமிழ் மொழிக்­காக, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக வாழ்ந்து, எங்­கும் தமிழ், எதி­லும் தமிழ் என்று தமிழ்­மொ­ழிக்கு செம்­மொழி அந்­தஸ்து பெற்­றுத் தந்த, மக­ளி­ருக்­காக பல்­வேறு திட்­டங்­க­ளான, மக­ளிர் சுய உத­விக் குழு ஆரம்­பித்த, பெண்­க­ளுக்கு திரு­மண நிதி­யு­தவி வழங்­கிய, பெண்­க­ளுக்கு சொத்­தில் சம உரி­மையை பெற்று தந்த, பெண்­க­ளுக்கு உள்­ளாட்­சி­யில் 33 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை வழங்­கிய, கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கிய  முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் திசை நோக்கி நான் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஓரி மன்­ன­னுக்கு கொல்லி­ மலை­யில் சிலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யாவே திரும்பி பார்க்­கின்ற அள­விற்கு வழி­காட்­டி­யா­கத் திகழ்ந்து கொண்­டி­ருக்­கிற, எந்த மாநி­லத்­தி­லும் இல்­லாத அள­விற்கு சிறப்­பான திரா­விட மாடல் ஆட்சி நடத்தி கொண்­டி­ருக்­கின்ற, குறிப்­பாக, பெண் இனத்­திற்­காக மகத்­தான சாத­னை­க­ளான, விடி­யல் பய­ணம், மக­ளிர் உரி­மைத் தொகை, புதுமை பெண் திட்­டம் போன்­ற­வற்றை ஏழை மக்­க­ளுக்கு வழங்­கிய முத­ல­மைச்­சர் அவர்­களை நான் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொல்­லி­ம­லையை ஆட்சி செய்­த­வன் வல்­வில் ஓரி மன்­னன். அவன் அம்பு எய்­து­வ­தில் மிகச் சிறந்த வில்­லாளி. ஒரே அம்­பில் ஏழு மிரு­கங்­க­ளை­ யெல்­லாம் அடித்­துக் கொன்­றி­ருக்­கி­றார் வல்­வில் ஓரி மன்­னன்.    முன்­னாள் முதல்­வர்   கலை­ஞர் அவர்­கள்­தான், கொல்­லி­ம­லை­யில் அந்த மன்­ன­னு­டைய சிலையை 1975 ஆம் ஆண்டு திறந்து வைத்­தார். கடை­யேழு வள்­ளல்­க­ளில் ஒரு­வ­ரா­கத் திகழ்ந்து கொண்­டி­ருந்­த­வர்­தான் வல்­வில் ஓரி மன்­னன். ஆனால், தற்­போது எட்­டா­வது வள்­ள­லாக திகழ்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்   முதல்­வர் அவர்­கள் என்­பதை இந்த மாமன்­றத்­தில் நான் பதிவு செய்ய விரும்­பு­கின்­றேன்.    முதல்­வர் அவர்­கள், இன்று இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கின்ற அள­விற்கு சிறப்­பான திட்­டங்­களை­ யெல்­லாம் செயல்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள் என்­பதை பணி­வன்­போடு இந்த அவை­யில் பதிவு செய்ய விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எதிர்­கா­லத்­தில் இந்த இயக்­கத்தை வழி­ந­டத்­த­வி­ருப்­ப­வர், இளை­ஞர்­க­ளின் வழி­காட்டி, ஓய்­வ­றியா உழைப்­பாளி, உடன்­பி­றப்பே என்ற ஒற்றை மந்­தி­ரச் சொல்­லால் மக்­களை கட்­டிப்­போட்ட முத்­த­ மி­ழ­றி­ஞர் ­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவை முன்­ன­வர் அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.  பேர­வைத் துணை தலை­வர் அவர்­க­ளை­யும்,  அர­சுக் கொறடா அவர்­க­ளை­யும்,  அமைச்­சர் பெரு­மக்­க­ளை­யும்,  மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் எங்­கள் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் ராஜேஷ்­கு­மார் அவர்­க­ளை­யும்,  ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும் நான் வணங்­கு­கி­றேன்.  இரண்டாவது  முறை­யாக எனது வெற்­றிக்­காக உழைத்த ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர்­கள், பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள், கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­ கி­கள், கழ­கத்­தி­னு­டைய மூத்த முன்­னோ­டி­கள் மற்­றும் சேந்­த­மங்­க­லம் சட்­ட­மன்­றத் தொகுதி வாக்­கா­ளர்­கள் ஆகி­யோ­ருக்கு எனது நன்றி கலந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முதல்­வர் அவர்­கள், கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் எனது தொகு­தி­யில் செய்­தி­ருக்­கிற திட்­டங்­கள் பற்றி நான் பட்­டி­ய­லிட விரும்­பு­கி­றேன். எனது சேந்­த­மங்­க­லம் தொகு­தி­யில் முதன்­மு­த­லில் சிப்­காட் தொழிற்­பேட்டை அமைத்­தது, விளை­யாட்­டுத் திடல் அமைத்­தது, எரு­மப்­பட்டி மற்­றும் சேந்­த­மங்­க­லம் ஆகிய இரண்டு ஒன்­றி­யங்­க­ளி­லுள்ள அனைத்து ஊராட்­சி­க­ளுக்­கும் ரூ.358 கோடி மதிப்­பீட்­டில் கூட்­டுக் குடி­நீர் திட்­டம் வழங்­கி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாமக்­கல் முதல் தொட்­டி­யம் வரை இரு­வ­ழிச் சாலை­யாக அமைத்­தது, நாமக்­கல் முதல் தாத்­தை­யங்­கார்­பேட்டை வரை இரு­வ­ழிச் சாலை­யாக அமைத்­தது, கொல்­லி­ம­லைக்கு செல்­லும் 70 கொண்டை ஊசி வளை­வு­களை அக­லப்­ப­டுத்­தி­யது, கொல்­லி­ம­லை­யி­லுள்ள 14 ஊராட்­சி­க­ளி­லும் cell phone tower அமைத்­தது, கொல்­லி­ம­லை­யி­லுள்ள 14 ஊராட்­சி­க­ளி­லுள்ள பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு எப்­பொ­ழு­தும் இல்­லாத அள­விற்கு 600 கலை­ஞர் கனவு இல்­லம் வீடு­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மிள­குக்கு புவி­சார் குறி­யீடு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொல்­லி­ம­லை­யில் உள்ள மிளகு வாழ்­வா­தா­ர­மாக விளங்கி கொண்­டி­ருக்­கி­றது. அதற்கு புவி­சார் குறி­யீடு வழங்­கப்­பட்­டது. அதன் பய­னா­கத்­தான் இன்­றைக்­குக்­கூட கொல்­லி­ம­லை­யில் தற்­போ­தைய மார்க்­கெட் நில­வ­ரப்­படி ஒரு கிலோ மிளகு 700 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 10 ஆண்டு கால ஆட்­சி­யில் ஒரு கிலோ மிளகு சுமார் 300 ரூபாய், 350 ரூபாய் என்­று­தான் விற்­பனை செய்­யப்­பட்­டது. அந்த மிள­குக்கு புவி­சார் குறி­யீடு வழங்­கப்­பட்ட பிறகு, நம்­மு­டைய ஆட்­சி­யில் நிரந்­த­ர­மாக ஒரு கிலோ மிள­கின் விலை 700 ரூபா­யாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போன்று, தலை­ம­லைப் பெரு­மாள் கோயி­லுக்கு கிரி­வ­லப் பாதை அமைக்­கப்­பட்­டது. கார­வள்ளி முதல் கொல்­லி­மலை வரை செல்­லும் மின்­சா­ரக் கம்­பி­களை கேபிள் வய­ராக மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது ஆகி­ய­வை­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழங்­கு­டி­யின மக்­க­ளின் கோரிக்கை. சேந்­த­மங்­க­லம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் பழங்­கு­டி­யின மலை­வாழ் மக்­கள் அதி­க­ள­வில் வசித்து வரு­கி­றார்­கள். இவர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­தும்­வி­த­மாக மற்­றும் கலாச்­சா­ரத்தை பாது­காக்க பழங்­கு­டி­யி­னர் துணை ஆராய்ச்சி மையம் அமைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் உள்ள ஒருங்­கி­ணைந்த பழங்­கு­டி­யி­னர் மேம்­பாட்டு பகு­தி­யி­லுள்ள பழங்­கு­டி­யின மாண­வ-­­­மா­ண­வி­க­ளின் உயர் கல்வி வாய்ப்­பு­களை அதி­க­ரிக்­க­வும், பழங்­கு­டி­யி­னர் வசிக்­கும் பகு­தி­க­ளின் நீடித்த மற்­றும் நிலை­யான வளர்ச்­சியை ஏற்­ப­டுத்த புதி­ய­தாக அரசு பழங்­கு­டி­யி­னர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி தொடங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழங்­கு­டி­யின மக்­க­ளின் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­த­வும், பழங்­கு­டி­யி­னர் வசிக்­கும் பகு­தி­யில் விளை­யும் சிறு­வன மக­சூல் மற்­றும் சிறு­தா­னிய பொருட்­களை விற்­பனை செய்­யும் வகை­யில் பழங்­கு­டி­யி­னர் அதி­கம் வசிக்­கும் சுற்­றுலா இடங்­க­ளில் சிறு வன மக­சூல் சிறு­தா­னிய பல்­பொ­ருள் அங்­காடி மற்­றும் புதி­ய­தாக பழங்­கு­டி­யின மக­ளிர் தொழிற்­பூங்கா தொடங்­கப்­பட வேண்­டும். பழங்­கு­டி­யின பட்­டி­ய­லில் பிற இனத்­த­வரை சேர்ப்­பது தவிர்க்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தாட்கோ மூலம் கட­னு­தவி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழங்­கு­டி­யின மக்­க­ளின் நிலங்­களை, பழங்­குடி அல்­லா­த­வர்­க­ளின் பெய­ரில் பட்டா மாற்­றம், பத்­தி­ரப் பதிவு செய்து வரு­வதை தடை செய்ய வேண்­டும். அரசு ஏற்­கெ­னவே அமல்­ப­டுத்­தி­யுள்ள வரு­வாய்த் துறை நிலை ஆணை எண் 15/40 அர­சா­ணையை அனைத்து சார் பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தி­லும் அறி­விப்பு பல­கை­யாக வைத்து அமல்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பழங்­கு­டி­யின மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்­காக அண்டை மாநி­லங்­க­ளுக்கு இடம் பெயர்­கி­றார்­கள். இத­னால் அவர்­க­ளின் குடும்­பத்­தைச் சேர்ந்த பள்ளி மாண­வ–-­­­மா­ண­வி­யர்­க­ளின்கல்வி பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கி­றது. எனவே, அம்­மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கருதி தாட்­கோ­மூ­லம் வழங்­கப்­ப­டும் கடன் உதவி அல்­லா­மல், தனி­ந­பர் கட­னு­தவி வழங்கி, பழங்­கு­டி­யின மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை கண்­கா­ணிக்க குழு ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டு­கி­றேன் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பி­லும், கல்­வி­யி­லும் 1 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை  முத்­த­மி­ழ­றி­ ஞர் கலை­ஞர் அவர்­கள்­தான் வழங்­கி­னார். ஆனால், வேலை­வாய்ப்­பி­லும் 50-க்கும் குறை­வான பணி­யா­ளர்­களை அறி­விக்­கும்­போது, பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு அப்­ப­ணி­க­ளில் வாய்ப்பு கிடைக்­கா­மல் போகி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆத­லால், 50-க்கும் குறை­வான வேலை­வாய்ப்பு வழங்­கும்­போ­தும், 1 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை பின்­பற்ற வேண்­டு­மென்று என்­பதை  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கனி­வான பார்­வைக்­குக் கொண்டு செல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மலைப் பகு­தி­க­ளில் தரிசு நிலங்­க­ளில் பயிர் செய்­யும் பழங்­கு­டி­யின மக்­க­ளுக்கு அர­சாணை எண் 1168-லிருந்து விலக்கு அளித்து பட்டா வழங்க வேண்­டும். பழங்­கு­டி­யின மக்­க­ளுக்­கான இட ஒதுக்­கீட்டை அனைத்து துறை­க­ளி­லும் முறை­யாக பின்­பற்­றப்­பட வேண்­டும். பழங்­கு­டி­யி­னர் நலத் துறை தனி முதன்­மைச் செய­லா­ள­ரு­டன் தனித் துறை­யா­கச் செயல்­ப­டுத்தி, நடை­மு­றைப்­ப­டுத்த ஆவன செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டி­லுள்ள 23 லேம்ப் கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை பழங்­கு­டி­யி­னர் நலத் துறை கட்­டுப்­பாட்­டில் கொண்டு வர வேண்­டும். இத­னால் பழங்­கு­டி­யின மக்­கள் பெற்ற திட்­டங்­க­ளின் மானி­யத் தொகையை அச்­சங்­கங்­க­ளுக்கு வழங்­கு­வ­தில் கால­தா­ம­தம் ஏற்­ப­டு­வது தவிர்க்­கப்­ப­டும்.. பழங்­கு­டி­யி­னர் வாழும் மலைப் பகு­தி­க­ளுக்கு மாவட்ட ஆட்­சித் தலை­வர் அவர்­கள் மாதந்­தோ­றும் ஆய்­வுக்­குச் செல்ல வேண்­டும். அப்­படி ஆய்­வுக்­குச் செல்­கின்­ற­பொ­ழுது, மாவட்ட வன அலு­வ­லர் அவர்­க­ளை­யும் ஆய்­வுக்கு அழைத்து செல்ல வேண்­டும். இத­னால். பழங்­கு­டி­யின மக்­க­ளின் வாழ்­வா­தா­ரம் மேம்­ப­டும்; அவர்­க­ளு­டைய பிரச்­ச­னை­கள் தீர்வு காணப்­ப­டும் மற்­றும் திட்­டங்­கள் வகுக்க வழி­வகை செய்­யப்­ப­டும். பழங்­கு­டி­யின நலப் பள்­ளி­க­ளில் ஆசி­ரி­யர்­க­ளின் வருகை பதி­வேடு உறுதி செய்­யப்­பட வேண்­டும். வன உரிமை சட்­டம், 2006-ன்படி மேய்ச்­சல் நில உரிமை பழங்­குடி மக்­க­ளுக்கு உள்­ளது. எனவே, வனங்­க­ளில் ஆடு, மாடு­களை மேய்க்­கக் கூடாது என்ற சென்னை உயர் நீதி­மன்ற உத்­தி­ர­வில் தமி­ழக அரசு தலை­யீடு செய்து, மேய்ச்­சல் உரி­மையை பழங்­குடி மக்­க­ளுக்கு பெற்­றுத் தர­வேண்­டும். வனங்­களை சார்ந்­துள்ள அனைத்து கிரா­மங்­க­ளு க்­கும் உட­ன­டி­யாக சமூக வன வள உரி­மையை வழங்க வேண்­டும். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) வன உரிமை சட்­டம், 2006-ன்படி பழங்­குடி மக்­கள் வாழும் அனைத்து மலை­க­ளி­லும், மலை சார்ந்த பகு­தி­க­ளி­லும் வன உரிமை குழுக்­களை வெளிப்­ப­டைத் தன்­மை­யோடு அனைத்து கிரா­மங்­க­ளி­லும் ஏற்­ப­டுத்­து­தல் வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பேர­வைத் துணைத் தலை­வர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உறுப்­பி­னர், நன்றி சொல்லி உரையை முடி­யுங்­கள். அடுத்த உறுப்­பி­னர் பேச வேண்­டும். இன்­னும் 5 உறுப்­பி­னர்­கள் பேச­வி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கே. பொன்­னு­சாமி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­களே, தமிழ்­நாட்­டில் பத்து இலட்­சத்­துக்கு மேல் பழங்­குடி மக்­கள், மலை மற்­றும் தரை பகு­தி­க­ளில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். அவர்­கள் மலைப் பகு­தி­க­ளில் வாழ்­வா­தா ­ரத்­திற்­காக வனம் தரிசு மற்­றும் விவ­சாய பட்டா நிலங்­களை சார்ந்து வாழ்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், மலைப் பகு­தி­க­ளில் 50,000-க்கும் மேற்­பட்ட பழங்­குடி மக்­கள் அரசு தரிசு நிலங்­க­ளில் பயிர் செய்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்கு பட்டா பெற முடி­யா­மல் அர­சாணை 1168/வ.து., நாள்              25-7-1989 தடுக்­கி­றது. எனவே, இந்த அர­சா­ணையை தமி­ழக அரசு திரும்­பப் பெற வேண்­டும். தமிழ்­நாட்­டில் பழங்­குடி மக்­கள் 10 இலட்­சத்­திற்கு மேல் உள்­ள­னர். இம்­மக்­கள் சமு­தாய வளர்ச்­சி­ய­டைய மக்­கள்­தொ­கை­யின் அடிப்­ப­டை­யில் சட்­ட­மன்­றப் பேர­லை­யில் நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் ஒதுக்­கீடு வழங்க அரசு ஆவன செய்ய வேண்­டும். பழங்­குடி மக்­கள் வசிக்­கும் அனைத்து பகு­தி­க­ளி­லும் மலைப் பகு­தி­க­ளில் உள்­ள­து­போல் அரசு ஏகலை மாதிரி உண்டி உறை­விட மேல்­நி­லைப் பள்­ளியை உரு­வாக்க வேண்­டும். சேந்­த­மங்­க­லம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­னு­டைய கோரிக்­கை­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொல்­லி­மலை பகு­தி­யில் அரசு கலைக் கல்­லூரி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பேர­வைத் துணைத் 
தலை­வர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உறுப்­பி­னர்   ஜெ. முகம்­மது ஷாந­வாஸ் அவர்­கள். (குறுக்­கீடு) நன்றி. தொகு­திக் கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் பதிவு செய்து கொள்­கி­றோம். ஒரு கோரிக்­கையை மட்­டும் சொல்­லுங்­கள். மற்­ற­வற்றை பதிவு செய்து கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கே.பொன்னுசாமி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேந்­த­மங்­க­லம் கலை கல்­லூ­ரிக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் பெயர் சூட்­டப்­பட வேண்­டு­மென்று  முத­ல­மைச்­சர் அவர்­க­ளை­யும்,  உயர் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும் கேட்­டுக்­கொள்­கி­றேன். நாமக்­கல் மாவட்­டம், சேந்­த­ மங்­க­லம் நாம­கி­ரிப்­பேட்டை ஒன்­றி­யத்­தில் மலை­வாழ் மக்­கள் அதி­க­ள­வில் வசித்து வரு­கின்­ற­னர். அப்­ப­கு­தி­யி­லுள்ள 22 ஊராட்சி மக்­கள் வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் செல்ல வேண்டியிருப்ப தால் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைத்திடு மாறு கேட்டுக்கொள்கி றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு கே.பொன்னு சாமி பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>