<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,426,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 05 2025 08:14:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="05052025-CHN-19" position.sequence="19" ex-ref="05052025-CHN-19.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="nethaji_19_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="194a_19_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, மே 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கோடை வெயி­லின் தாக்­கத்­தி­லி­ருந்து பக்­தர்­க­ளைக் காக்க திருக்­கோ­யில்­க­ளில் தற்­கா­லிக பந்­தல்­கள், தேங்­காய் நார் விரிப்­பு­கள், பாது­காக்­கப்­பட்ட குடி­நீர், நீர்­மோர் உள்­ளிட்ட முன்­னேற்­பாடு பணி­கள் செய்­யப்­ப­டு­கி­றது என  இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்  பி.கே.சேகர்­பாபு  தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு நேற்று (04.05. 2025) சென்னை, பழைய  வண்­ணா­ரப்­பேட்டை,  கோதண்ட ராமர் திருக்­கோ­யி­லில் நடை­பெற்ற திருக்­கு­ட­மு­ழுக்கு நன்­னீ­ராட்டு பெரு­வி­ழா­வில்  கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பின்­னர், அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் ஆட்சி பொறுப்­பேற்ற திலி­ருந்து இன்­று­வரை 2,911 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­முக்கு நடை­பெற்­றுள்­ளது. இன்­றைய தினம் மட்­டும் திரு­நெல்­வேலி மாவட்­டம், பாப­நா­சம் திருக்­கோ­யில், திருச்சி மாவட்­டம் அன்­பில், சுந்­த­ர­ராஜ பெரு­மாள் திருக்­கோ­யில் உள்­ளிட்ட 31 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு நடை­பெற்­றுள்­ளது. வரும் ஜூலை மாதத்­திற்­குள் 3,000 குட­மு­ழுக்­கு­களை நிச்­ச­யம் எட்­டு­வோம். இந்த ஆட்­சி­யா­னது குட­மு­ழுக்­கில் ஒரு பொற்­கா­லம் படைத்த ஆட்சி என்­பதை நிரூ­பிக்­கின்ற வகை­யில் ஏரா­ள­மான குட­மு­ழுக்கு பணி­கள் விரைந்து நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">குட­மு­ழக்­கில் பொற்­கா­லம் படைத்த ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த அரசு பொறுப்­பேற்­ற­பின் இது­வரை திருக்­கோ­யில்­க­ளுக்கு சொந்­த­மான ரூ.7,665.61 கோடி மதிப்­பி­லான 7,546.33 ஏக்­கர் நிலங்­கள் ஆக்­கி­ர­மிப்­பி­லி­ருந்து மீட்­கப்­பட்­டுள்­ளன. மாநில வல்­லு­நர் குழு­வால் 11,808 திருக்­கோ­யில்­க­ளுக்கு திருப்­பணி அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒட்­டு­மொத்­த­மாக கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் ரூ. 5,917.11 கோடி மதிப்­பி­லான 25,150 திருப்­ப­ணி­க­ளுக்கு நிர்­வாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. வர­லாற்­றிலே இல்­லாத அள­விற்கு இந்து சமய அற­நி­லைத்­து­றை­யின் திருக்­கோ­யில்­க­ளுக்கு உப­ய­தா­ரர்­கள் ரூ.1,323.77 கோடி மதிப்­பி­லான 10,414 திருப்­ப­ணி­களை செய்து தந்­துள்­ள­னர். பழைய வண்­ணா­ரப் பேட்டை,   கோதண்­ட­ரா­மர் திருக்­கோ­யி­லுக்கு திருப்­ப­ணி­களை செய்து தந்த உப­ய­தா­ரர் பாபு­வுக்கு மன­மார்ந்த நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த ஆட்சி ஏற்­பட்ட பிறகு 459 பெரு­மாள் திருக்­கோ­யில்­கள்,                              42 ஆஞ்­ச­நே­யர் திருக்­கோ­யில்­கள், 41 கிருஷ்­ணர் திருக்­கோ­யில்­கள், 28 ராமர் திருக்­கோ­யில்­கள் என 570 வைணவ திருக்­கோ­யில்­க­ளுக்கு இது­வ­ரை­யில் குட­மு­ழுக்கு நடந்­தி­ருக்­கின்­றது.  ஒரு ராமர் திருக்­கோ­யி­லுக்கே கொண்­டாட்­டம் போடு­கின்ற காலங்­க­ளில் 28 ராமர் திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்­கினை நடத்­தி­யுள்­ளோம். இது­போன்ற திருப்­ப­ணி­கள் முழு வீச்­சில் மேற்­கொள்­வ­தால் தான் இந்து சமய அற­நி­லை­யத்­துறை வர­லாற்­றுச் சாத­னை­களை பதிக்­கின்ற ஒரு நல்ல சூழல் நிறை­வேறி இருக்­கின்­றது, இந்­தப் பணி­கள் தொட­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கோடை வெயி­லின் தாக்­தத்­தி­லி­ருந்து பக்­தர்­களை காத்­தி­டும் வகை­யில் இந்து சமய அற­நி­லை­யத்­துறை திருக்­கோ­யில்­க­ளில் எந்த வகை­யி­லும் தீப்­பி­டிக்­காத வகை­யில் பாது­காப்­பான தற்­கா­லிக கீற்­றுப் பந்­தல்­கள் அமைத்­தல், திருக்­கோ­யில் பிர­கா­ரங்­க­ளின் நடை­பா­தை­க­ளில் தேங்­காய் நார் விரிப்­பு­கள், வெப்­பத்தை தடுக்­கின்ற வெள்ளை நிற பெயிண்ட் அடித்­தல், நடை­பா­தை­க­ளில் வெப்­பத்தை குறைத்­தி­டும் வகை­யில் அவ்­வ­போது தண்­ணீர் பீச்சி அடிப்­ப­தற்­கும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. மேலும், பக்­தர்­க­ளுக்கு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர், ஒரு சில இடங்­க­ளில் நீர்­மோர், எலு­மிச்சை பான­கம் போன்­றவை வழங்­கிட ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை சித்­திரை திரு­வி­ழா­விற்­கான முன்­னேற்­பாடு பணி­களை மாவட்ட நிர்­வா­கம், மாந­க­ராட்சி, வரு­வாய்­துறை, காவல்­துறை, சுகா­தா­ரத்­துறை, இந்து சமய அற­நி­லை­யத்­துறை உள்­ளிட்ட துறை­கள் ஒருங்­கி­ணைந்து சிறந்த முறை­யில் மேற்­கொண்டு வரு­கின்­றன. எந்த வித­மான சிறு அசம்­பா­வி­த­மும் இல்­லா­மல் மீனாட்சி திருக்­கல்­யா­ணம், திருத்­தேர் பவனி, அழ­கர் புறப்­பாடு, அழ­கர் வைகை ஆற்­றில் இறங்­கு­வது போன்­றவை சிறப்­பாக நடை­பெற வேண்­டு­மென முத­ல­மைச்­சர் அவர்­கள் வழி­காட்டி இருக்­கின்­றார். அதன்­படி அனைத்­தும் சிறப்­பாக நடை­பெற மாவட்ட அமைச்­சர்­க­ளோடு இணைந்து பணி­யாற்றி வரு­கி­றோம். மீனாட்சி திருக்­கல்­யாண நிகழ்­வில் துறை­யின் அமைச்­சர் என்ற முறை­யில் பங்­கேற்­க­வுள்­ளேன். அனைத்­திற்­கும் எல்­லாம் வல்ல இறை­வ­னும் துணை நிற்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்­ட­மன்­றத்­தில் நிகழ்­வு­களை பார்த்­தி­ருப்­பீர்­கள். அதில் கோபப்­பட்டு அதி­க­மாக கத்­தி­ய­வர் எதிர்க்­கட்சி தலை­வர் தான். ஆனால் எங்­கள் முத­ல­மைச்­சர் அனைத்­தை­யும் உணர்ந்து ஐம்­பு­லன்­களை அடக்கி சர்­வ­சா­தா­ர­ண­மாக இந்த சட்­ட­மன்ற கூட்­டத் தொடரை வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்து காட்­டி­னார். ஜன­நா­ய­கத்­தின் பாது­கா­வ­லர் எங்­கள் முதல்­வர். சாதா­ர­ண­மாக சட்­ட­மன்ற இறுதி நாளில் முத­ல­மைச்­சர் அவர்­கள் கை கூப்பி வணங்கி விட்டு செல்­வார்­கள். ஆனால் எங்­கள் முதல்­வர் அவர்­களோ இன்­னார், இனி­ய­வர் என்று பாரா­மல் அனைத்து எதிர்­கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளு­டைய இருக்­கைக்­குச் சென்று கை குலுக்கி நான் எந்த சூழ­லை­யும் சமா­ளிப்­பேன் என்­பதை வெளிக்­காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வாழ்க்­கை­யில் பயம் என்­பது என்­ன­வென்று தெரி­யாது. அவர் உறு­தி­யாக நிற்­பார், உற­வுக்கு கை கொடுப்­பார், உரி­மைக்கு ஓங்கி குரல் கொடுப்­பார், ஒன்­றி­யத்­திற்கு எந்த வகை­யி­லும் அடி­ப­ணிந்து செல்­லாத ஆற்­றல் வாய்ந்த இரும்பு மனி­தர் எங்­கள் முதல்­வர். ஆனால் ஒரே நாளில் அமித்ஷா வந்து இங்கே உட்­கார்ந்து அவ­ரு­டைய ஆளு­மையை எடப்­பாடி அவர்­க­ளுக்கு எவை எல்­லாம் காட்டி பணிய வைக்க முடி­யுமோ அதை­யெல்­லாம் காட்டி பணிய வைத்து ஒரே நாளில் கூட்­ட­ணியை உறுதி செய்து விட்டு சென்­றார். ஆகவே எடப்­பா­டிக்­கு­தான் பயம் வயிற்­றி­லும் தெரி­கி­றது கண்­ணி­லும் தெரி­கி­றது. எங்­கள் முத­ல­மைச்­சர் கண்ணை பார்த்­தால் 1,000 வாட்ஸ் மின்­சா­ரம் அவர் கண்­ணில் இருந்து புறப்­ப­டு­கின்­றது. இதில் எதி­ரி­கள் 2026-ல் பொசுங்­கு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­மதி தமி­ழி­சை­யைப் பொறுத்­த­வரை பிர­த­மர் மோடி­யின் வழி­யிலே  செயல்­பட்டு தன்­னைத்­தானே புகழ்ந்து கொள்­கின்­ற­வர். நேற்­றைய தினம் முதல்­வ­ருக்கு எடுக்­கப்­பட்ட பாராட்டு விழா என்­பது அரசோ அல்­லது தி.மு.க.வோ எடுத்த பாராட்டு விழா அல்ல, அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளா­லும் எடுக்­கப்­பட்­ட­தா­கும். முதல்­வர் அவர்­கள் பாராட்டை விரும்­பா­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒன்­றி­யத்­திற்கே  வழி­காட்­டிய முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நேற்­றைய தினம் அவர் பேசு­கின்ற போது பாராட்டை நான் எங்­கும் புறக்­க­ணிப்­ப­வன், பல்­க­லைக்­க­ழக துணை­வேந்த ர்கள்  கேட்­டுக் கொண்­ட­தால் இசைந்­தேன் என்று குறிப்­பிட்­டார். ஒன்­றி­யத்­திற்­குத் தேவைப்­ப­டு­கின்ற ஒரு வழி­காட்­டு­தலை தன்­னு­டைய சட்­டப் போராட்­டத்­தால் உறு­தி­யான நட­வ­டிக்­கை­க­ளால் ஆளு­கின்ற அர­சைத் தவிர்த்து எதிர்க்­கட்சி ஆட்சி செய்­கின்ற மாநி­லங்­க­ளில் இன்­னல்­களை விளை­விக்­கும் ஆளு­நர்­க­ளுக்கு ஒரு குட்டை வாங்­கிக் கொடுத்­த­வர். ஒன்­றி­யத்­திற்கே வழி­காட்­டி­ய­வர் எங்­கள் முதல்­வர் என்­ப­தால்­தான் நேற்­றைய தினம் பாராட்டு விழா நடத்­தப்ப ட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">காலம் முழு­வ­தும் தூக்கி வைத்து முதல்­வ­ரைக் கொண்­டா­டு­கின்ற, போற்­று­கின்ற  வகை­யில் பாராட்­டு­கள் அமைய வேண்­டும். இது ஒரு நாளோடு நின்று விடக்­கூ­டாது. திரு­மதி தமி­ழிசை சௌந்­தர்­ரா­ஜன் அவர்­க­ளுக்கு வயிற்று எரிச்­சல். அக்னி வெயில் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. இன்­னும் அதிக வெப்­பத்­தோடு வார்த்­தை­க­ளைக் கக்­கு­வார். நாங்­கள் குளிர்ந்த காற்­றைத் தேடி நடந்து கொண்­டி­ருக்­கின்­றோம். மக்­களை குளிர்ச்­சி­யாக அழைத்­துச் செல்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>