<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,37,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 05 2025 03:41:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05052025-TRY-13" position.sequence="13" ex-ref="05052025-TRY-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.05.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">நிலைகுலையாத நெஞ்சுரம் – எதனையும் எதிர்கொள்ளும் போர்க்குணம் – வேதனைகளையும் சாதனைகளாக்கும் வித்தகம் – இத்தகு </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">அளப்பரிய ஆற்றல் பெற்ற அதிசயத் தலைவர், நமது முதல்வர்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="38">சட்டப்பேரவையில் </lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Maragadam" fontStyle="Regular"  size="38">–</lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular"  size="38">பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர்நலத்துறை மானியக் கோரிக்கையில் </lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Maragadam" fontStyle="Regular"  size="38">–</lang>
	<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular"  size="38">அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலுரை!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="26">வன்னியர்குல சத்திரியர் பொது அறநிலையப் பொறுப்பாட்சி  மற்றும் நிலக்கொடைகள்   வாரியத்திற்கென்று தனியாக புதுக் கட்டடம் இந்த ஆண்டே கட்டப்படும்!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="26">ரூ.3 கோடியில் 5 புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள்! அனைத்து விடுதிகளிலும்  – ரூ.30 கோடியில் சிறப்பு பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள்!</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="17">தொடர்ச்சி 14 ஆம் பக்கம்</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup337277_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup337276_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup320035_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup337273_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="Meinathan_13_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, மே 4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்டப்பேரவையில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ‘‘நிலைகுலையாத நெஞ்சுரம்–  எதனையும் எதிர்கொள்ளும் போர்க்குணம்– வேதனைகளையும் சாதனைகளாக்கும் வித்தகம் – இத்தகு அளப்பரிய ஆற்றல் பெற்ற அதிசயத் தலைவர் நமது முதல்வர் அவர்கள்!’’ என்று புகழாரம் சூட்டினார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சுய­ம­ரி­யா­தை­யும், தன்­மா­ன­மும் உயி­ரை­விட மேலா­னது என முழக்­க­மிட்ட தந்தை பெரி­யார், அறி­வா­லும், ஆற்­ற­லா­லும் ஆகாத காரி­யம் ஏது­மில்லை என்­று­ரைத்த பேர­றி­ஞர் அண்ணா, ஆதிக்க மொழித் திணிப்­பைத் தடுத்­த­வர், அன்­னைத் தமி­ழைச் செம்­மொ­ழி­யாக்­கி­ய­வர், நவீன தமிழ்­நாட்­டின் சிற்பி என போற்­றப்­பட்ட ஐயா முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் ஆகி­யோரை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">வள்­ளு­வன் குற­ளென வழி­வழி நிலை­யும், இளங்கோ சிலம்­பென ஒலிக்­கும் நிலை­யும், ஒள­வை­யின் அறி­வென ஒளி­ரும் நிலை­யும், அதி­ய­மான் அருங்­கனி அருந்­திய நிலை­யும் ஒருங்கே வாய்ந்த ஒரு­பெ­ருந் தமி­ழ­னாய் இங்கே அமர்ந்­தி­ருக்­கி­றார் என்­பதா! (மேசை­யைத் தட்­டும் ஒலி) இல்லை வால்­டேர் செய்த வார்த்­தைப் புரட்­சி­கள்; டார்­வின் வீசிய தத்­துவ வெடி­கள்; காரல் மார்க்­சின் கனத்த கருத்­து­கள்; நெல்­சன் மண்­டே­லா­வின் உறுதி கொண்ட மொத்த உரு­வம் என்று சொல்­வதா! இல்லை தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் மூவ­ரின் மொத்த உரு­வம் என்­பதா! இத்­த­னை­யும் ஒருங்­கி­ணைந்­த­தால், உங்­க­ளுக்கு நிலை­கு­லை­யாத நெஞ்­சு­ரம்; எத­னை­யும் எதிர்­கொள்­ளும் போர்க்­கு­ணம்; வேத­னை­க­ளை­யும் சாத­னை­க­ளாக்­கும் வித்­த­கம்; இத்­தகு அளப்­ப­ரிய ஆற்­றல்­பெற்ற அதி­ச­ யத் தலை­வர் தாங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­களே, உங்­கள்­மீது அடித்த புயல் திசை­மாறி அடித்­தி­ருந்­தால் இம­ய­மலை கொஞ்­சம் இடம் மாறிப் போயி­ருக்­கும்; உங்­கள் மீது அடித்த வெய்­யில் கடல்­மீது அடித்­தி­ருந்­தால் பாதி சமுத்­தி­ரம் பாலை­யாய்ப் போயி­ருக்­கும்; நீங்­கள் புய­லில் சவாரி செய்­தீர்; வெயி­லில் தேராக உலா வந்­தீர்; தன்­மா­னம் ஒன்றே உங்­கள் தனிக் கவ­சம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எல்லா மாநி­லங்­க­ளை­யும் ஒன்­றி­யம் அசைத்து பார்க்­கி­றது; முதல்­வரே! நீங்­கள் ஒன்­றி­யத்­தையே உங்­கள் கொள்­கை­யால் அசைத்­துப் பார்க்­கி­றீர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்த வாய்ப்பை எனக்கு நல்­கிய  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">எதிர்­கா­லத்­தில் சமூ­க­நீதி காப்­பாற்­றப்­பட, எத்­தனை எத்­தனை எதி­ரி­கள் முளைத்­தா­லும், எத்­தனை எத்­தனை இன்­னல்­கள் விளைந்­தா­லும், அத்­தனை எதிர்ப்­பு­க­ளை­யும் தூள் தூளாக்கி, அடுத்­த­டுத்த தலை­மு­றை­க­ளும் அதி­கா­ரத்தை நோக்கி வரு­வ­தற்­கும், நீதிக் கட்­சி­யின் நீட்­சி­யாக மீதிப் பணியை தொடர்­வ­தற்­கும், எப்­போ­தும் சிப்­பா­யாக களத்­தில் நின்று எதிர்­கா­லத்தை வழி­ந­டத்த இருக்­கும்,  தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும்,  பேர­வைத் தலை­வ­ரா­கிய தங்­க­ளுக்­கும்,  அமைச்­சர் பெரு­மக்­கள்,  சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் என அனை­வ­ருக்­கும் எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். தங்­கள் குடும்­பத்­தில் ஒரு­வ­னாக என்னை ஆத­ரித்து, அதி­க­மான வாக்­கு­களை எனக்­க­ளித்து, இரண்­டா­வது முறை­யாக ஆலங்­குடி தொகு­தி­யில் வெற்­றி­பெ­றச் செய்த வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் எனது நன்­றியை நான் அன்­போடு தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை உருவாக்கியவர் கலைஞர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இட ஒதுக்­கீடு என்­பது ஒரு நீண்ட நெடிய வர­லாற்­றுக்­குச் சொந்­த­மா­னது. இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக சென்னை மாகா­ணத்­தில்­தான் நீதிக் கட்சி ஆட்­சிக் காலத்­தில், 1921 ஆம் ஆண்டு வகுப்­பு­வாரி இட ஒதுக்­கீடு ஆணை communal G.O பிறப்­பிக்­க ப்­பட்­டது. ஆனால், அப்­போ­தி­ருந்த ஆதிக்க சக்­தி­யி­னர் அதை வர­வி­டா­மல் தடுத்து விட்­டார்­கள்.  1926-ல் பன­கல் அர­சர் ஆட்­சிக் காலத்­தில், முத்­தையா முத­லி­யார் அவர்­க­ளின் முனைப்­பான நட­வ­டிக்­கை­க­ளால்1929 ஆம் ஆண்­டில்­தான் தடை­க­ளைத் தாண்டி, இந்த வகுப்­பு­வாரி ஆணை நடை­மு­றைக்கு வந்­தது. அந்த அடிப்­ப­டை­யில், முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், 8-8-1969 அன்று பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத் துறையை உரு­வாக்­கி­ய­வர்  முன்­னாள் முத­ல­மைச்­சர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) தலை­மைச் செய­ல­கத்­தில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­ பி­னர் செய­ல­கம் என அனைத்­தை­யும் உரு­வாக்­கி­ய­வர்  முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் என்­பதை இந்த அவைக்கு தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, இன்­றைக்கு விடு­தி­க­ளில் தங்­கிப் படிக்­கின்ற சுமார் 78,716 கல்­லூரி, பள்ளி மாண­வச் செல்­வங்­க­ளின் நல­னைக் கருத்­திற்­கொண்டு, பள்ளி விடுதி மாணாக்­கர்­க­ளுக்கு அரசு வழங்­கும் உண­வுச் செல­வி­னம் மாதம் ரூபாய் 1,000 என்­பதை, ரூபாய் 1,400 ஆக­வும், கல்­லூரி விடுதி மாணாக்­கர்­க­ளுக்­கான உண­வுச் செல­வி­னம் ரூபாய் 1,100 என்­பதை ரூபாய் 1,500 ஆக­வும் உயர்த்­தித் தந்த தாயுள்­ளம் கொண்­ட­வர்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த 4 ஆண்­டுக் காலத்­தில் நமது  முத­ல­மைச்­சர் அவர்­கள் 12 விடு­தி­ க­ளுக்கு 52 கோடி ரூபாய் மதிப்­பி­லான புதிய கட்­ட­டங்­கள், 645 பழு­த­டைந்த கட்­ட­டங்­களை மரா­மத்து செய்­வ­தற்­காக கிட்­டத்­தட்ட 63 கோடி ரூபாய், 36 பள்ளி விடு­தி­க­ளைக் கல்­லூரி விடு­தி­க­ளா­கத் தரம் உயர்த்­தித் தந்து மேலும் இந்த ஆண்டு 10 விடு­தி­களை தர­மு­யர்த்­தி­யி­ருக்­கி­றோம் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அந்­தக் கல்­லூ­ரி­யில் படிக்­கின்றமாண­வச் செல்­வங்­கள் அந்த விடு­திக்­குள்வரு­கின்­ற­போது வீட்­டில் இருப்­ப­தைப்­போன்று அனைத்து விடு­தி­க­ளும் பரா­ம­ரிக்­கப்­பட்டு, அவர்­களுக்­குத் தேவை­யான அனைத்து வச­தி­க­ளும், அவர்­க­ளுக்­குத் தேவை­யான விளை­யாட்டுஉப­க­ர­ணங்­கள், விளை­யாட்­டுக் கரு­வி­கள், உடற்­ப­யிற்­சிக் கரு­வி­கள், தொலைக்­காட்­சிப் பெட்­டி­கள் உள்­ளிட்டஅனைத்து வச­தி­க­ளும் அங்கே வழங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதோ­டு­மட்­டு­மல்ல, இந்த 275 
கல்­லூரி விடு­தி­க­ளில்,  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் செம்­மொழி நூல­கத்தை உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றார் என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். இந்த ஆண்டு 10 கோடியே 60 இலட்­சம் ரூபா­யில் தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற அனைத்து விடு­தி­க­ளை­யும் கண்­கா­ணிக்­கின்ற வகை­யில் CCTV கேம­ராக்­கள் அமைக்­கின்ற பணி­யும் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கள்­ளர் சீர­மைப்­புப் பள்­ளி­கள்.  முத­ல­மைச்­சர் அவர்­கள் ‘உறங்­காப்­புலி’ என்று போற்­றப்­பட்ட ஐயா பி.கே. மூக்­கையா தேவர் அவர்­க­ளுக்கு மணி­மண்­ட­பம் அமைக்­கப்­ப­டும் என்று அறி­விப்பு தந்­த­வு­டன் தென்­மா­வட்ட மக்­கள் அனை­வ­ரும் மகிழ்ச்­சி­யோடு இருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த அடிப்­ப­டை­யில் ஆங்­கி­லே­யர் ஆட்­சிக் காலத்­தில் தொடங்­கப்­பட்ட 299 கள்­ளர் சீர­மைப்பு பள்­ளி­க­ளுக்­காக  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 91 பள்­ளி­க­ளுக்கு, 47 கோடி ரூபாய் செல­வில், கூடு­தல் வகுப்­ப­றை­கள், அறி­வி­யல் ஆய்­வ­கங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மேல்நிலைப் பள்ளியாக தரமுயர்த்தியிருக்கிறார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த 299 கள்­ளர் சீர­மைப்­புப் 
பள்­ளி­க­ளி­லும்--­க­ழிப்­ப­றை­க­ளி­லும் பல்­வேறு பணி­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் ­கொண்டு, இன்­றைக்கு மதுரை மற்­றும் திண்­டுக்­கல் உள்­ளிட்ட மாவட்­டங்­க­ளில் உள்ள இரண்டு உயர்­நி­லைப் பள்­ளி­களை, மேல்­நி­லைப் பள்­ளி­க­ளா­கத் தரம் உயர்த்­தித் தந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­போன்று, கள்­ளர் சீர­மைப்­புப் பள்­ளி­க­ளில் 100 சத­வி­கி­தம் தேர்ச்சி தந்­தி­ருக்­கின்ற 60 கள்­ளர் உயர்­நி­லைப் பள்ளி மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளில், 10 மற்­றும் 12 ஆம் வகுப்பு அர­சுப் பொதுத்­தேர்­வில் 100 சத­வி­கி­தம் தேர்ச்சி தந்த 34 பள்­ளி­க­ளின் தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்­கும், அதே­போன்று ஒவ்­வொரு பாடப் பிரி­வி­லும் மாணவ, மாண­வி­யர்­களை 100 விழுக்­காடு தேர்ச்சி பெறச் செய்த 567 பட்­ட­தாரி மற்­றும் முது­க­லைப் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்­க­ளுக்கு, பாராட்டு விழா தேனி மாவட்­டத்­தில் நடத்­தப்­பட்­டது. ரூபாய் 10,000 மற்­றும் 5000 வீதம் பரி­சுத்­தொ­கை­யு­டன் கேட­ய­மும் வழங்­கப்­பட்­டது. 22-.1.-2022 அன்று  ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர் அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­கள் அந்த விழா­வில் கலந்­து­கொண்டு ஆசி­ரி­யப் பெரு­மக்­களை வாழ்த்­தி­யது தென் மாவட்ட மக்­க­ளி­டையே மிகப்­பெ­ரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் 4 உண்டு உறை­வி­டப் பள்­ளி­களை எற்­ப­டுத்­தித் தந்­தி­ருக்­கி­றார். செக்­கா­ணூ­ரணி, வெள்­ளை­யம்­மாள்­பு­ரம், கொண்­ட­ம­நா­யக்­கன் பட்டி ஆகிய இடங்­க­ளி­லும் இந்­தப் பள்­ளி­களை ஏற்­ப­டுத்­தித் தந்து அதன்­மூ­ல­மாக அவர்­க­ளுக்­குத் தேவை­யான அனைத்­துக் கட்­ட­மைப்­பு­க­ளை­யும் உரு­வாக்­கித் தந்­தி­ருக்­கி­றார் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சீர்­ம­ர­பி­னர் நல வாரி­யம். முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் 2008 ஆம் ஆண்­டில் 68 சமு­தா­யங்­க­ளைச் சார்ந்த விளிம்பு நிலை மக்­கள் பயன்­பெற வேண்­டும் என்­ப­தற்­காக சீர்­ம­ர­பி­னர் நல வாரி­யத்தை உரு­வாக்­கி­னார். ஆனால், கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்­சி­யில் அதைக் கிடப்­பில் போட்­டார்­கள். மீண்­டும் நம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­தற்­குப் பிறகு இதற்கு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்துறை அமைச்­ச­ரைத் தலை­வ­ரா­க­வும்,   ராசா அருண்­மொழி அவர்­க­ளைத் துணைத் தலை­வ­ரா­க­வும், 13 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஒரு வாரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தன் அடிப்­ப­டை­யில் இன்­றைக்­குக் கூடு­த­லாக இந்த ஓர் ஆண்­டுக் காலத்­தில் 52,000 புதிய உறுப்­பி­னர்­க­ளைச் சேர்த்­தி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். அந்த அடிப்­ப­டை­யில் 4,750 உறுப்­பி­னர்­களுக்கு கிட்­டத்­தட்ட ரூ.2 கோடியே 15 இலட்­சம் செல­வில், கல்வி உத­வித்­தொகை, திரு­மண உத­வித்­தொகை, மூக்­குக் கண்­ணாடி உத­வித்­தொகை மற்­றும் முதி­யோர் உத­வித்­தொகை போன்ற பல்­வேறு திட்­டங்­கள் அதன்­மூ­ல­மாக செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­போன்று சீர்­ம­ர­பி­னர் என்று சொல்­லக்­கூ­டிய DNC, அவர்­க­ளுக்கு கடந்த காலத்­தில் DNC என்­றும் DNT என்­றும் ஒரே ஒரு­வ­ருக்கு இரண்டு சான்­று­கள் வழங்­கப்­பட்­டது.  அதனை ஒற்­றைச் சான்­றாக வழங்க வேண்­டும்--­கு­றிப்­பாக, DNC என்று சொல்­லக்­கூ­டிய சீர்­ம­ர­பின வகுப்­பி­ன­ருக்கு மாநில அர­சி­னு­டைய 20 சத­வி­கித இட ஒதுக்­கீடு உட்­பட்ட நலத் திட்­டங்­க­ளைப் பெறு­வ­தற்­கும் அதே­போன்று DNT சீர்­ம­ர­பின பழங்­கு­டி­யி­னர் என்று சொல்­லக்­கூ­டிய அந்த அடிப்­ப­டை­யில் ஒன்­றிய அர­சி­னு­டைய நலத் திட்­டங்­க­ளைப் பெறு­கின்ற வகை­யில்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டத்­திலே ஒற்­றைச் சான்­றி­தழ் பெற வேண்­டும் என்ற கோரிக்கை வைக்­கப்­பட்டு,    முத­ல­மைச்­சர் அவர்­கள் அத­னைக் கனி­வோடு பரி­சீ­லித்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">16-.3-.2024 அன்று DNC/DNT என்ற ஒற்றை சான்­றி­தழ் வழங்­க­லாம் என்று ஆணை­யிட்­டார்­கள். அந்த ஆணை­யின்­படி இது­வரை 6 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பதை நான் இந்த அவைக்கு மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பிரதமருக்கு முதல்வர் கடிதம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, வன்­னி­யர்­க­ளுக்­கான 10.5 சத­வி­கித இட­ஒ­துக்­கீடு. கடந்த அ.தி.மு.க. ஆட்­சி­யில் கொண்­டு­வந்து அளிக்­கப்­பட்ட அந்த இட­ஒ­துக்­கீடு குறித்து உச்ச நீதி­மன்­றம் என்ன சொல்­லி­யி­ருக்­கி­றது என்­றால், தற்­கா­லத் தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் இட­ஒ­துக்­கீடு வழங்க வேண்­டு­மென்று உச்ச நீதி­மன்­றம் குறிப்­பிட்டு அதனை ரத்து செய்­தது. அதனை ரத்து செய்­த­வு­டன் நமது  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 21.-10.-2023 அன்று  இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளுக்கு ஒரு கடி­தம் எழு­தி­னார். இந்­தியா முழு­வ­தும் சமூக நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும், எனவே, ஒன்­றிய அர­சாங்­கம் 2021 ஆம் ஆண்­டில் எடுக்க வேண்­டிய தேசிய மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்பை இது­வரை எடுக்­க­வில்லை. அது உட­ன­டி­யாக மேற்­கொள்­ளப்­பட வேண்­டும், தேசிய மக்­கள்­தொகை கணக்­கெ­டுப்­பு­டன் சேர்த்து, சாதி­வாரி கணக்­கெ­டுப்­பும் நடத்­தப்­பட வேண்­டு­மென்று  இந்­தி­யப் பிர­த­மர்அவர்­க­ளுக்கு நமது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கடி­தம் எழு­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அத­னைத் தொடர்ந்து நமது முத­ல­மைச்­சர் அவர்­கள், கடந்த 26.-6-.2024 அன்று இதே சட்­ட­மன்­றத்­தில், தேசிய மக்­கள்­தொகைகணக்­கெ­டுப்­போடு சேர்த்து, சாதி­வாரி கணக்­கெ­டுப்­பும் எடுக்­கப்­பட வேண்­டு­மென்று தீர்­மா­ன­மா­க­வும் நிறை­வேற்றி  இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளுக்கு அதனை அனுப்பி வைத்­தி­ருக்­கி­றார். ஆனால், இன்­று­வரை ஒன்­றிய அர­சாங்­கம் அதற்­குச் செவி சாய்க்­க­வில்லை. இருந்­தா­லும், இன்­றைக்­கும் வன்­னிய சமு­தாய மக்­க­ளுக்கு எது உத­வி­யாக இருக்­கி­றது என்­றால், 1989 ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் உரு­வாக்­கித் தந்த, வன்­னி­யர் உள்­ளிட்ட 108 சமு­தா­யங்­கள் கொண்ட மிகப் பிற்­ப­டுத்­தப் 
பட்­டோர் பிரிவின்­மூ­ல­மாக, அதற்­கான இட­ஒ­துக்­கீட்­டின்­மூ­ல­மாக இன்­றைக்கு வன்­னிய சமு­தாய மக்­கள் சுமார் 15, 16 சத­வி­கி­தம் பயன்­பெற்று வரு­கி­றார்­கள். இன்­றைக்­கும் அது நடை­மு­றை­யில் உள்­ளது என்­பதை நான் மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­போல, 7.5 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டைப் பற்­றிச் சொன்­னார். புரட்­சிக் கவி­ஞன் பார­தி­தா­சன் அவர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">“எளி­மை­யி­னால் ஒரு தமி­ழன் படிப்­பில்­லை­யென்­றால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இங்­குள்ள எல்­லோ­ரும் நாணி­ட­வும் வேண்­டும்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்று சொன்­னார். அந்த அடிப்­ப­டை­யில் அரசு மற்­றும் தனி­யார் மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளில் மருத்­து­வப் படிப்­பு­க­ளுக்­கான 7.5 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டில், இது­வரை 2,170 மாண­வர்­கள் மருத்­து­வப் படிப்­பில் சேர்ந்து பயன்­பெற்று வரு­கி­றார்­கள். அவர்­களுக்கு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் ஆதி­தி­ரா­வி­டர் நலத் துறை மூல­மாக சுமார் 178 கோடி ரூபாய் கல்­விக் கட்­ட­ண­மாக செலுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் 2021 ஆம் ஆண்­டில் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன், உயர் படிப்­புக்­கான அந்த வாய்ப்­பினை மருத்­து­வப் படிப்­பு­கள் அல்­லாத பொறி­யி­யல், வேளாண்மை, கால்­நடை, மீன்­வ­ளம், சட்­டம் ஆகிய துறை­க­ளைச் சார்ந்த உயர் படிப்­பு­க­ளுக்­கும்7.5 சத­வி­கித இட­ஒ­துக்­கீட்­டினை விரிவுபடுத்­தி­னார்­கள். அந்த அடிப்­ப­டை­யில் இன்­றைக்­குப் பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில், வேளாண்­மைக் கல்­லூ­ரி­க­ளில், கால்­ந­டைக் கல்­லூ­ரி­க­ளில், மீன்­வ­ளக் கல்­லூ­ரி­க­ளில், சட்­டக் கல்­லூ­ரி­க­ளில் என்று அனைத்­தி­லும் சேர்ந்து மொத்­தம் 40,631 மாணவ மாண­வி­கள் பயன்­பெ­று­கி­றார்­கள். அவர்­க­ளின் கல்­விக் கட்­ட­ணம் உள்­ளிட்ட அனைத்­துக் கட்­ட­ணங்­க­ளுக்­கா­க­வும்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் வழங்­கப்­பட்ட தொகை ரூ.911 கோடி என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இதன்­மூ­லம் மருத்­து­வர்­க­ளை­யும், பொறி­யா­ளர்­க­ளை­யும், வேளாண் அறி­வி­யல் விஞ்­ஞா­னி­க­ளை­ யும், கால்­நடை மருத்­து­வர்­க­ளை­யும் மட்­டும் உரு­வாக்­க­வில்லை; அண்­மை­யில் UPSC தேர்வு எழு­திய மாண­வர்­களில், தமிழ்­நாட்­டில் நான் முதல்­வன் திட்­டத்­தின் ­மூ­ல­மாக சுமார் 50 மாண­வர்­கள் அதில் தேர்ச்சி பெற்­றி­ருக்­கின்­றார்­கள் என்ற மகிழ்ச்­சி­யான செய்­தியைநமது  துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் தந்­தார் அல்­லவா! இந்த 40,000 மாண­வர்­க­ளை­யும் நாம் பிற்­கா­லத்­தில் track செய்து பார்த்­தால், இவர்­க­ளி­லும்I.A.S., I.P.S. அதி­கா­ரி­கள் உரு­வா­வார்­கள்என்­பதை நான் தெரி­ வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அடுத்து, கல்வி உத­வித்­தொகை 
திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">“ஈன்று புறந்­த­ரு­தல் என்­த­லைக் கடனே;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சான்­றோ­னாக்­கு­தல் தந்­தைக்­குக் கடனே;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">வேல்­வ­டித்­துக் கொடுத்­தல் கொல்­லற்­குக் கடனே;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நன்­னடை நல்­கல் வேந்­தர்க்­குக் கடனே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒளி­று­வாள் அருஞ்­ச­மம் முருக்கி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">களிறு எறிந்து பெயர்­தல் காளைக்­குக் கடனே”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்­பது ஒரு புற­நா­னூற்­றுப் பாடல். இதன்பொருள் என்­ன­வென்­றால், அறி­வார்ந்த சமு­தா­யத்தை, கல்­வி­யில் சிறந்த சமு­தா­ய­மாக உரு­வாக்க வேண்­டு­மென்று புற­நா­னூற்­றுப் பாடல் வரி­கள் சொல்­கின்­றன. அதற்­காக நமது  முத­ல­மைச்­சர் அவர்­கள், +1 முதல் Ph.D. வரை படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு உயர் கல்வி உத­வித் தொகை வழங்­கும் திட்­டத்­தைத் தந்­தி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­போன்று, 2022–-2023 ஆம் ஆண்­டில் 9 மற்­றும் 10 ஆம் வகுப்பு படிக்­கின்ற மாண­வி­க­ளுக்கு மட்­டும் ஆண்­டுக்கு 4,000 ரூபாய் உத­வித்­தொகை வழங்­கு­கின்ற திட்­டம், அதே­போல, I.I.T., I.I.M., N.I.T., Indian Institute of Information Technology மற்­றும் மத்­தி­யப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் படிக்­கின்ற தமிழ்­நாட்­டைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு ஆண்­டுக்கு 2 இலட்­சம் ரூபாயை அவர்­க­ளுக்­கான கல்வி உத­வித்­தொ­கை­யாக வழங்­கும் திட்­டம் ஆகி­ய­வற்றை நமது  முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். அதன்­மூ­ல­மாக, இந்த 4 ஆண்­டு­க­ளில் மட்­டும் 39,86,622 மாண­வச் செல்­வங்­க­ளுக்கு 1,242 கோடி ரூபாயை கல்வி உத­வித்­தொ­கை­யாக வாரி வழங்­கிய வள்­ளல்­தான்   முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சமூக நீதிக்­கான தந்தை பெரி­யார் விருது, கடந்த 4 ஆண்­டு­க­ளாக நமது  முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­ய­வர்­கள், ரூ.1 இலட்­சத்தை ரூ.5 இலட்­ச­மாக உயர்த்­தித் தந்­தி­ருக்­கி­றார். 1 பவுன் தங்­கப் பதக்­கத்­து­டன், நான்கு ஆண்­டு­க­ளாக விரு­து­கள் பெற்­ற­வர்­கள். 2021 ஆம் ஆண்டு க. திரு­நா­வுக்­க­ரசு, 2022 ஆம் ஆண்டு, கவி­ஞர் கலி பூங்­குன்­றன்,  2023 ஆம் ஆண்டு, சுப. வீர­பாண்­டி­யன் மற்­றும் 2024 ஆம் ஆண்டு விடு­தலை இரா­சேந்­தி­ரன் அவர்­க­ளுக்கு இந்த 
விரு­து­கள் வழங்­கப்­பெற்­றி­ருக்­கி­றது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, 2009 ஆம் ஆண்­டில் வன்­னி­யர்­க­ளுக்­கான பல்­வேறு அறக்­கட்­ட­ளைச் சொத்­துக்­க­ளைக் கண்­டு­கொள்­வ­தற்­காக, முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், 2009 ஆம் ஆண்­டில் வன்­னி­யர் பொதுச் சொத்து நல வாரி­யம் உரு­வாக்­கப்­பட்­டது. அது இடை­யிலே பெயர் மாற்­றம் செய்­யப்­பட்டு தமிழ்­நாடு அர­சால் ‘வன்­னி­யர்­குல சத்­தி­ரி­யர் பொது அற­நி­லை­யப் பொறுப்­பாட்­சி­கள் மற்­றும் நிலக் கொடை­கள் சட்­டம் – 2018’ என்ற புதிய சட்­டம் 4-.2-.2019 அன்று நடை­மு­றைக்கு வந்­தது. அந்த அடிப்­ப­டை­யில், இன்­றைக்கு தலை­வர் உட்­பட 12 பேர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">2024-–2025 ஆம் ஆண்­டில் 4 வன்­னி­யர் அறக்­கட்­ட­ளை­கள் கண்­ட­றி­யப்­பட்டு, இது­வ­ரைக்­கும் 126 அறக்­கட்­ட­ளை­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இவற்­றில் 90 அறக்­கட்­ட­ளை­கள் பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளன. 49 அறக்­கட்­ட­ளை­களை தமிழ்­நாடு அர­சில் வெளி­யிட்­டுள்­ளோம் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொண்டு, அந்த மக்­கள் காலை­யி­லே­கூட விக்­கி­ர­வாண்டி 
சட்­ட­மன்ற உறுப்­பி­னர்  அ. அன்­னி­யூர் சிவா (எ) சிவ­சண்­மு­கம் அவர்­கள் வன்­னி­யர்­குல சத்­தி­ரி­யர் பொது அற­நி­லை­யப் பொறுப்­பாட்­சி­கள் மற்­றும் நிலக் கொடை­கள் வாரி­யத்­திற்­கென்று தனி­யாக சொந்­தக் கட்­ட­டம் வேண்­டும் என்று கோரிக்கைவைத்­தி­ருக்­கி­றார்.  முத­ல­மைச்­சர்அவர்­கள் இந்த ஆண்டே அற்­கான புது கட்­ட­டம் கட்­டப்­ப­டும் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். கட்­ட­ண­மில்லா மிதி­வண்­டி­கள், இன்­றைக்கு  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் 4 ஆண்­டு­க­ளில் 22 இலட்­சத்து 10 ஆயி­ரம் மாணவ, மாண­வி­க­ளுக்கு, ரூ.1,082 கோடி­யில் மிதி­வண்­டி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக் கழ­கம் TABCEDO இதன் மூல­மாக பொது நலக் கடன், சுய உத­விக் குழுக்­க­ளுக்­கான கடன், பால் உற்­பத்­தி­யா­ளர் கூட்­டு­றவு சங்­கக் கடன் என இந்­தத் திட்­டத்­தின் மூல­மாக 4 ஆண்­டு­க­ளில் 60,810 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.422 கோடி கடன் வழங்­கி­யி­ருக்­கி­றோம் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொண்டு, இந்த ஆண்டு ரூ.120 கோடி­யாக இலக்கை நிர்­ண­யித்­தி­ருக் கி­றோம் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>