<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,658,958,1111" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 04 2025 21:51:06 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="05052025-VLR-14" position.sequence="14" ex-ref="05052025-VLR-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="30">‘திராவிட மாடல்’ ஆட்சியில் தேவனாம்பட்டினம் கடற்கரையில் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="27">சட்டப்பேரவையில் – கடலூர் கோ.ஐயப்பன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ayyappanko_14_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, மே 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்­டப்­பே­ர­வை­யில் பள்ளி, உயர்­கல்­வித்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் கட­லூர் தொகுதி உறுப்­பி­னர் கோ.ஐயப்­பன் பேசு­கை­யில், கட­லூர் கடற்­க­ரை­யில் இயற்கை சீற்­றங்­களை தடுக்க நட­வ­டிக்கை எடுத்த முதல்­வ­ருக்கு நன்றி தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்­டப்­பே­ர­வை­யில் பள்ளி, உயர்­கல்­வித்­துறை மானி­யத்­தில் கட­லூர் தொகுதி உறுப்­பி­னர் கோ. ஐயப்­பன் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முதல்­வர் அவர்­க­ளை­யும், இளை­ஞர்­க­ளின் எழுச்சி நாய­கன், இன்று விளை­யாட்­டுத் துறை­யிலே தமி­ழ­கத்­திற்கு பெரு­மை­களை சேர்த்­துக் கொண்­டி­ருக்­கிற எங்­க­ளு­டைய துணை முதல்­வர் அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன். அமைச்­சர் பெரு­மக்­க­ளை­யும், சக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் வணங்கி, எங்­க­ளு­டைய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர், வேளா ண்மை- உழ­வர் நலத் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">இரு மொழிக்­கொள்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">முதல்­வர் உறுதி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இரண்­டா­யி­ரம் கோடி ரூபாய் அல்ல, நான்­கா­யி­ரம் கோடி ரூபாய் கொடுத்­தா­லும், எடுத்­துக்­கொண்ட கொள்­கை­யிலே முன்­வைத்த காலை பின்­வைக்க மாட்­டோம் என்று ஒன்­றிய அர­சுக்கு இன்று சவால் விட்டு செய­லாற்­றிக் கொண்­டி­ருக்­கும் நம்­மு­டைய முதல்­வர் அவர்­கள், மும்­மொ­ழிக் கொள்­கையை ஏற்­றால்­தான் பணம் தரு­வோம் என்ற அந்த நிர்­பந்­தத்தை ஏற்­கா­மல் இரு­மொ­ழிக்கொள்­கை­தான் எங்­க­ளு­டைய தமிழ்­நாட்­டின் உயிர்­நாடி என்ற அள­விலே இன்று புரட்சி செய்­து­கொண்டு, தமி­ழ­கத்தை காத்­துக்­கொண்டு ஆசி­ரி­யப் பெரு­மக்­க­ளுக்குஎவ்­வ­ளவு ஊதி­யம் வேண்­டுமோ, எண்­ணற்ற சலு­கை­கள் என்­னென்ன வேண்­டுமோ அத்­த­னை­யும் வழங்கி நாங்­கள் இருக்­கின்­றோம், தமிழ்­நாடு அரசு இருக்­கி­றது என்ற நிலை­யிலே இன்று அனைத்­தை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். முதல்­வர் அவர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">“அச்­ச­மில்லை அச்­ச­மில்லை அச்­ச­மென்ப தில்­லையே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உச்­சி­மீது வானி­டிந்து வீழு கின்ற போதி­னும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அச்­ச­மில்லை அச்­ச­மில்லை அச்­ச­மென்ப தில்­லையே”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">என்று ஒன்­றிய அர­சுக்கு அடி­ப­ணி­யா­மல் எடுத்­துக்­கொண்ட காரி­யத்தை சிறப்­பாக செயல்­ப­டுத்தி தமிழ் மக்­களை, தமி­ழக மாண­வர்­களை வாழ வைத்­துக்­கொண்­டி­ருக்­கின்ற எங்­க­ளு­டைய முதல்­வர் அவர்­க­ளுக்கு என்­னு­டைய வணக்­கங்­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம். முன்­னாள் முத­ல­மைச்­சர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பெய­ரிலே சர்­வ­தேச தரத்­தி­லான கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம் 218.19 கோடி ரூபாய் செல­விலே மது­ரை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது­வரை 3 இலட்­சத்து 64 ஆயி­ரத்து 521 புத்­த­கங்­க ­ளு­டன் செயல்­பட்டு வரும் அந்த நூல­கத்தை 2024-25 ஆம் ஆண்­டிலே 16 இலட்­சத்து 55 ஆயி­ரத்து 820 வாச­கர்­கள் வருகை தந்து சிறப்பு செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். புத்­தக கண்­காட்­சி­கள் புத்­தக வாசிப்பை ஒரு மக்­கள் இயக்­க­மாக ஊக்­கு­வித்து சென்னை புத்­தக கண்­காட்சி போன்று அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெற 2022-23 ஆம் ஆண்டு கல்­வி­யாண்டு முதல் புத்­தக கண்­காட்­சி­கள் மாநி­லத்­தில் உள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">வேளாண்மை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">பல்­க­லைக்­க­ழ­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">1989–91–ஆம் ஆண்­டிலே கலை­ஞர் ஆட்­சி­யில் பெண்­க­ளுக்கு பட்­டப் படிப்பு வரை இல­வ­சக் கல்வி வழங்கி சாதனை செய்த தலை­வர் நம்­மு­டைய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். 2006–2007–ஆம் கல்­வி­யாண்­டில் கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில் பெண்­க­ளுக்கு முது­கலை படிப்பு வரை இல­வச கல்வி வழங்­கப்­பட்டு, அவர்­க­ளெல்­லாம் பயில்­வ­தற்கு ஒரு வாய்ப்­பாக பெண்­கள் பயி­லு­கின்ற ஒரு நிலை­மையை ஏற்­ப­டுத்­தித் தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். 1989–91– ஆம் ஆண்­டிலே ஆதி திரா­விட மாணவ – மாண­வி­யர்­க­ளுக்கு பட்­டப் படிப்பு வரை இல­வ­சக் கல்­வியை வழங்கி சிறப்பு செய்­தார் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர்அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">1.6.1971–ஆம் ஆண்டு ஆசிய கண்­டத்­திலே முதன்­மு­றை­யாக கோயம்­புத்­தூ­ரில் தமிழ்­நாடு வேளாண்­மைப் அறி­வி­யல் பல்­க­லை க்­க­ழ­கம் முத்­த­மி­ழ­றி­ஞர் ஆட்­சிக்­கா­லத்­தில்­தான் தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில். 20.-9.-1989 அன்று ஆசிய கண்­டத்­தி­லேயே முதன்­மு­றை­யாக சென்­னை­யில், தமிழ்­நாடு கால்­நடை மருத்­துவ அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கப்­பட்­டது, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆட்­சிக் காலத்­தில். இவ்­வாறு கழக அரசு ஆட்சி அமைக்­கும்­போ­தெல்­லாம், என்­றும் மாணவ மாண­வி­ய­ருக்கு படிப்­ப­தற்கு வச­தி­யாக, அதிகஅள­வில் சிறப்பு செய்­கின்ற வகை­யில், கல்வி நிலை­யங்­கள் ஒவ்­வொன்­றாக உரு­வாக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அந்த வகை­யில், 1989–ஆம் ஆண்­டில் டாக்­டர் எம்.ஜி.ஆர் மருத்­து­வப் பல்­க­லைக்­க­ழ­கம் சென்­னை­யில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 7-.9-.1990-ல், திரு­நெல்­வே­லி­யில் மனோ ன்­ம­ணி­யம் சுந்­த­ர­னார் பல்­க­லைக்­க­ழ­கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 17.-9.-1997 அன்று சேலத்­தில் பெரி­யார் பல்­க­லைக்­க­ழ­கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. 20-.9.-1997 அன்று இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக சென்­னை­யில், டாக்­டர் அம்­பேத்­கர் சட்­டப் பல்­க­லைக்­க­ழ­கம் தொடங்­கப்­பட்­டது. 2008–ஆம் ஆண்­டில் சென்­னை­யில், தமிழ்­நாடு ஆசி­ரி­யர் கல்­வி­யி­யல் பல்­க­லைக்­க­ழ­கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இப்­படி, படிப்­ப­டி­யாக, கழக ஆட்­சி­யில் எண்­ணற்ற கல்­விச் சாலை­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் திறக்­கப்­ப ட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எப்­போ­தெல்­லாம் இயற்­கைச் சீற்­றங்­கள் ஏற்­ப­டு­கின்­ற­னவோ, அப்­போ­தெல்­லாம் பாதிப்­புக்கு உள்­ளா ­கிற நக­ர­மாக எங்­கள் மாவட்ட தலை­ந­க­ர­மான கட­லூர் திகழ்ந்­து­கொண்­டி­ ருக்­கி­றது. அந்­த­வ­கை­யில், கட­லூ­ரில் கடல் சீற்­றங்­கள் அதிக அள­வில் ஏற்­பட்டு, இன்­றைக்கு மக்­க­ளின் இல்­லங்­க­ளைத் தேடி கட­ல­லை­கள் வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. 300 மீட்­டர் மணற்­ப­ரப்­பில் இன்று 100 மீட்­டர் மணற்­ப­ரப்­பு­கூட இல்­லாத அள­வில், இன்று கடல் நீர் வீடு­க­ளில் உட்­பு­குந்து கட்­ட­டங்­களை சேதப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">2006–-2011–ஆம் ஆண்­டின் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யில், நான் வைத்த கோரி க்­கையை ஏற்று, கோரிக்கை தான். வேறு ஏதும் இல்லை. முழு­வ­தும் படிக்­க­வில்லை. தொகுதி சம்­பந்­த­மாக ஒன்றை மட்­டும் சொல்­லி­வி­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">கடல்­நீர் உட்­பு­கா­மல் தடுத்­தல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நான்வைத்த கோரிக்­கையை ஏற்று, நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­கள், 3.00 கோடி ரூபா­யில் தாழங்­கு­டா­வி­லி­ருந்துதேவ­னாம்­பட்­டி­னம் கடற்­க­ரைப் பகு­தி­யில் கற்­க­ளைக் கொட்டி அந்த மக்­க­ளைப் பாது­காத்­தார்­கள். இன்று தேவ­னாம்­பட்­டி­னம், சோழங்­குப்­பம், சிங்­கா­ரத் தோப்பு வரை மீண்­டும் கடல் அரிப்பு ஏற்­பட்டு, அப்­ப­கு­தி­யி­லுள்ள வீடு­க­ளில் உட்­பு­கும் அள­விற்கு தண்­ணீர் வரத்து அதிக அள­வில் இருக்­கி­றது. அப்­ப­குதி மீனவ மக்­கள் இன்று இரவு நேரங்­க­ளில் எப்­போது வேண்­டு­மா­னா­லும் வீடு­க­ளில் தண்­ணீர் உட்­பு­குந்­து­வி­டும் என்ற நிலை­யில், இரவு முழு­வ­தும் உறங்­கா­மல் கண்­வி­ழித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற நிலை உள்­ளது. Indonesia-வில் பூகம்­பம்என்­றால், இங்கு எப்­போது சுனாமி வருமோ என்ற ஏக்­கத்­து­டன் அவர்­கள் இரவு முழு­வ­தும் தூங்க முடி­யாத நிலை இருந்­து­கொண்­டி­ருப்­ப­தால், அப்­ப­கு­தி­யி­லும் கற்­க­ளைக் கொட்டி, கடல் நீர் ஊருக்­குள் வரா­மல் இருப்­ப­தற்கு எங்­க­ளுக்கு உதவி செய்து பாது­காக்­கு­மாறு, நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும், மீன்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும், பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­க­ளை­யும் வேண்டி, விரும்பி, மன்­றா­டிக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளு­டைய நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­கள்­தான், 3.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்து, 2006 ஆம் ஆண்­டில் எங்­க­ளுக்­குப் பெருமை சேர்த்­தார்­கள், மக்­க­ளைப் பாது­காத்­தார்­கள். அந்த வகை­யில்,  இந்த இக்­கட்­டான நேரத்­தி­லும், 9 உறுப்­பி­னர்­கள் பேசக்­கூ­டிய நிலை­யி­லும், எனக்கு 5 நிமி­டங்­கள் பேச வாய்ப்­ப­ளித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், அரசு தலை­மைக் கொறடா அவர்­க­ளுக்­கும், அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும், கட­லூர் தொகு­தி­யைச் சார்ந்த அனைத்து வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் என் நெஞ்­சார்ந்த நன்­றி­யை­யும், வணக்­கத்­தை­யும் கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு கோ.ஐயப்­பன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>