<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,325,958,1242" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 06 2025 03:31:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="06062025-CBE-04" position.sequence="04" ex-ref="06062025-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="30">‘நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்’ விரைவில் தொடக்கம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">அமைச்சர்  மா.சுப்பிரமணியன் பேட்டி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">மொடக்குறிச்சி </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சரஸ்வதி எம்.எல்.ஏ.  மகள் திருமதி கருணாம்பிகை மறைவு! </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="masu_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் மிக விரை­வில் “நலம் காக்­கும் ஸ்டாலின்’’ எனும் திட்­டத்தை தொடங்கி வைக்­கி­றார் என்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­ யன் சென்னை, தேனாம்­பேட்­டை­யில் உள்ள டிஎம்­எஸ் வளா­கத்­தில், 2025–26 ஆம் ஆண்டு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை மானி­யக்­கோ­ரிக்கை அறி­விப்பு, நீடித்த நுரை­யீ­ரல் அடைப்பு நோய் மற்­றும் கொழுப்­பு­மிகு கல்­லீ­ரல் நோய் விழிப்­பு­ணர்வு பயிற்சி முகா­மினை தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர் அவர் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் 3வது பொது­வான இறப்­பிற்கு கார­ண­மாக விளங்­கு­கின்ற ஒரு பெரிய நோய், நீடித்த நுரை­யீ­ரல் அடைப்பு நோய் என்­ப­தா­கும். COPD என்று சொல்­லக்­கூ­டிய Chronic obstructive pulmonary disease எனும் நோயி­னால் உயி­ரி­ழப்­பு­கள் அதி­கம் ஏற்­பட்டு வரு­கி­றது. கோவிட் பாதிப்­பிற்கு பிறகு இத­யம் பாதிப்­பு­கள் நுரை­யீ­ரல் பாதிப்­பு­கள் என்­பது கூடு­த­லாகி வரு­கி­றது. 3வது நோய் என்று சொல்­லும்­போது முத­லில் இதய பாதிப்­பு­க­ளுக்­கான மர­ணங்­கள், பக்­க­வாத பாதிப்­பு­க­ளுக்­கான மர­ணங்­கள், தொடர்ந்து 3வது நோய் பாதிப்பு என்­றால் நுரை­யீ­ரல் அடைப்­புக்­கான மர­ணங்­கள் என்று அதிக அள­வில் மர­ணங்­களை சந்­திக்­கின்ற நோயாக இருப்­பது COPD ஆகும். இந்த நோய்க்கு முற்­றுப்­ புள்ளி வைக்­கின்ற வகை­யில் மக்­க­ளி­டையே போது­மான அள­விற்கு விழிப்பு­ ணர்வு ஏற்­ப­டுத்­து­வ­தும், முதி­ய­வர்­கள் நெடுங்­கா­லம் புகை பிடிப்­ப­வர்­கள், நுரை­யீ­ரல் தாக்­கம் அதி­கம் ஏற்­ப­டு­ப­வர்­கள் என்று கண்­ட­றிந்து நுரை­யீ­ரல் தாக்­கு­ வ­தற்­கு­ரிய கார­ணங்­களை கண்­ட­றிந்து சரி செய்­வ­தற்­கு­ரிய விழிப்பு­ ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும், பொது­மக்­க­ளுக்கு நீடித்த நாள் ­பட்ட நுரை­யீ­ரல் தொற்­றிற்கு முக்­கிய கார­ணி­க­ளாக விளங்­கு­கின்ற நெடுங்­கா­லம் புகைப் பிடிக்­கும் பழக்­கம், காற்று மாசு, தொழில் சார் நோய் பாதிப்­பு­கள் போன்­றவை குறித்த விழிப்­பு­ணர்­வும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது. எனவே இந்த திட்­டத்தை இன்­றைக்கு தொடங்கி வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கொழுப்பு கல்­லீ­ரல் நோய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் நிதி­நிலை அறிக்­கை­யில் அறி­வித்த இன்­னொரு சிறப்­பான திட்­டம் கொழுப்பு மிகு கல்­லீ­ரல் நோய். இது­வும் கூட அதி­கம் உயி­ரி­ழப்­பு­களை தரு­கின்ற ஒரு நோயா­கும். எனவே கொழுப்பு மிகு கல்­லீ­ரல் நோய் குறித்த விழிப்பு­ ணர்வை மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தி, ஆரம்ப நிலை பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது போன்ற பல்­வேறு திட்­டங்­கள் இன்­றைக்கு தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த கால வாழ்க்கை முறை­யில் ஏற்­பட்­டி­ருக்­கும் மாற்­றங்­க­ளி­னால் உல­கெங்­கும் சுமார் 30% மக்­கள் கொழுப்பு மிகு ஈரல் நோய் பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­றார்­கள். இதை கருத்­தில் கொண்டு களப்­ப­ணி­யா­ளர்­கள் மூலம் நோய் குறித்­தான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, அறி­கு­றி­கள் உள்­ள­வர்­களை அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யங்­க­ளுக்கு உரிய மருத்­துவ பரி­சோ­த­னை­க­ளுக்­காக கல்­லீ­ரல் பாதிப்­புக்­கான இரத்த பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள வழி­வகை செய்­வது போன்ற பல்­வேறு விஷ­யங்­களை மேற்­கொள்­வது போன்ற திட்­டங்­கள் குறித்து பயிற்சி முகாம் இன்று தொடங்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த பயிற்­சி­யில் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் எனும் மகத்­தான திட்­டத்தை மக்­க­ளி­டையே சென்று சேர்த்த மாவட்ட திட்ட அலு­வ­லர்­கள் அனை­வ­ருமே இங்கே பங்­கேற்­றி­ருக்­கி­றார்­கள். மாவட்ட பயிற்சி மருத்­துவ அலு­வ­லர்­கள் அனை­வ­ரும் பங்­கேற்­றி­ருக்­கி­றார்­கள். தமிழ்­நாடு முழு­வ­தி­லும் இருக்­கின்ற சுகா­தார மாவட்­டங்­கள் 45 இலி­ருந்து மாவட்ட சுகா­தார அலு­வ­லர்­கள் காணொளி வாயி­லா­க­வும் பங்­கேற்று இருக்­கி­றார்­கள். ஆக மிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பயிற்சி பயி­ல­ரங்­கத்தை இன்று தொடங்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நலம் காக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஸ்டாலின்  – திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது மட்­டு­மல்­லா­மல் இந்த துறை­யில் இன்­னொரு மகத்­தான சாத­னை­யாக முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­ன­மும்  நோயற்ற தமிழ்­நாடு, நோய் பாதிப்­பு­கள் அற்ற தமிழ்­நாட்டு மக்­கள் என்­கின்ற வகை­யில் பல்­வேறு புதிய திட்­டங்­களை கொண்டு வர அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றார்­கள். அந்­த­வ­கை­யில் இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் மன­திற்கு மிக­வும் நெருக்­க­மான ஒரு சிறப்­பான திட்­டம் ஒன்று மிக விரை­வில் சென்­னை­யில் தொடங்கி வைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. இந்த திட்­டத்­தின் பெயர் “நலம் காக்­கும் ஸ்டாலின்“.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது மருத்­து­வம், பொது அறுவை சிகிச்சை, எலும்­பி­யல் மருத்­து­வம்,மகப்­பே­றி­யி­யல் மருத்­து­வம் மற்­றும் மக­ளிர் மருத்­து­வம், குழந்தை மருத்­து­வம், இரு­த­ய­வி­யல் மருத்­து­வம், நரம்­பி­யல் மருத்­து­வம், தோல் மருத்­து­வம், பல் மருத்­து­வம், கண் மருத்­து­வம், மன­நல மருத்­து­வம், இயன்­முறை மருத்­து­வம், நுரை­யீ­ரல் மருத்­து­வம், இந்­திய முறை மருத்­து­வம் என்று பல்­வேறு மருத்­துவ முறை­கள் இதில் ஒருங்­கி­ணைய இருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">Master Health Check up என்று சொல்­லக்­கூ­டிய முழு உடற் பரி­சோ­தனை மக்­க­ளைத் தேடி, மக்­கள் இருக்­கும் இடங்­க­ளுக்கே சென்று பரி­சோ­த­னை­கள் செய்­யும் திட்­டம் மிக விரை­வில் தொடங்­கப்­பட உள்­ளது. இந்த திட்­டத்­தில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு அவர்­க­ளின் மாற்­றுத்­தி­றன் சத­வி­கி­தம் கண்­ட­றிந்து சான்­றி­தழ் தரு­கின்ற திட்­டம் இந்த முகாம்­க­ளில் தர­வி­ருக்­கி­றது. புற்­று­நோய்க் கான பரி­சோ­த­னை ­கள் இந்த திட்­டத்­தில் செயல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது. முத­ல­மைச்ச­ ரின் விரி­வான மருத்­து­வக் காப்­பீட்டு திட்­டத்­தில் இது­வரை தமிழ்­நாட்­டில் 1 கோடியே 44 இலட்­சத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள் என்­றா­லும் இன்­ன­மும் புதி­தாக தனிக் குடும்­பங்­கள் அமைத்­துக் கொண்­ட­வர்­க­ளுக்கு விரி­வான மருத்­து­வக் காப்­பீட்டு திட்­டத்­தில் சேர்ப்­ப­தற்கு ஏது­வாக அவர்­க­ ளுக்கு முகாம்­கள் நடத்­தப்­பட்டு சேர்க்­கப்­பட்டு வரு­கி­றது என்­றா­லும் நலன் காக்­கும் ஸ்டாலின் எனும் திட்­டத்­தில் புதிய பய­னா­ளர்­க­ளுக்கு காப்­பீடு அட்­டை­யும் வழங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே ஒருங்­கி­ணைந்த சுகா­தார முகா­மாக இந்த முகாம் அமை­ய­வி­ருக்­கி­றது. நோய் பாதிப்­பு­கள் கண்­ட­றி­தல், தொடர் சிகிச்சை செய்­தல், வரை­ய­றுக்­கப்­பட்ட பரி­சோ­த­னை­கள் செய்­தல், நோய­றி­தல் மற்­றும் பரிந்­து­ரைக்கு முன்­னு­ரிமை என்­கின்ற வகை­யி­லான இந்த மகத்­தான திட்­டம் மிக விரை­வில் சென்­னை­யில் தொடங்கி வைக்­கப்­பட உள்­ளது. இந்த முகாம் வரு­கின்ற டிசம்­பர் இறு­திக்­குள் 1256 இடங்­க­ளில் நடத்­து­வ­தற்கு முடி­வெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது தமிழ்­நாட்­டில் இருக்கி ன்ற வட்­டா­ரங்­க­ளின் எண்­ணிக்கை 388, ஒவ்­வொரு வட்­டா­ரத்­திற்­கும் 3 வீதம் 1164 முகாம்­க­ளும், சென்­னை­யில் 15 மண்­ட­லங்­க­ளில் மண்­ட­லத்­திற்கு 1 என்­கின்ற வகை­யில் 15 முகாம்­க­ளும், தமிழ்­நாட்­டில் 10 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட மக்­கள் தொகை கொண்ட மாந­க­ராட்­சி­கள் 5, இந்த 5 மாந­க­ராட்­சி­க­ளில் தலா 4 முகாம்­க­ளும், 10 இலட்­சம் மக்­கள் தொகைக்கு குறை­வான 19 மாந­க­ராட்­சி­க­ளில் தலா 3 முகாம்­க­ளும், ஒட்­டு­மொத்­த­மாக 1256 முகாம்­கள் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அரசு முதன்­மைச் செய­லா­ளர் முனை ­வர் ப.செந்­தில்­கு­மார், தேசிய நல வாழ்வு குழும இயக்­கு­நர் மரு.அருண் தம்­பு­ராஜ், பொது சுகா­தா­ரம் மற்­றும் நோய்த்­த­டுப்பு மருந்­துத்­துறை இயக்­கு­நர் மரு.செல்வ விநா­ய­கம், மருத்­து­வம் மற்­றும் ஊர­க­ந­லப்­ப­ணி­கள் இயக்­கு­நர் மரு.ராஜ­மூர்த்தி, இணை இயக்­கு­நர் (தொற்றா நோய்) மரு.கிருஷ்­ண­ராஜ், திட்ட அலு­வ­லர் (தொற்றா நோய்) மரு.பிர­வின் மற்­றும் உய­ர­லு­வ­லர்­கள்  கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 5 –</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  சரஸ்வதியின் மகள் திருமதி கருணாம்பிகை மறைவையொட்டி   முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :–</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  சரஸ்வதி அவர்களின் மகள் கருணாம்பிகை அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெற்ற மகளை இழந்து வாடும், திருமிகு. சரஸ்வதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>