<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,377,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 06 2025 03:35:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06062025-CHN-03" position.sequence="03" ex-ref="06062025-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">கிண்­டி­யில் ரூ.44 கோடியில் மாசு கட்­டுப்­பாடு வாரி­யத்­தின் ஆராய்ச்சி  மையத்­திற்கு அடிக்­கல் நாட்டி – </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">14 கட­லோர மாவட்­டங்­க­ளில் பயன்­பா­டற்ற மீன்­பிடி வலை சேக­ரிப்பு மையங்­களைத் திறந்து வைத்து</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="35"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">சுற்­றுச்­சூ­ழல் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகள்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">உலக சுற்­றுச்­சூ­ழல் தினவிழாவில் – முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்­கி­னார்!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஜூன் 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உலக சுற்­றுச்­சூ­ழல் தின விழா­வில்கிண்­டி­யில் ரூ.44 கோடி மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­ட­வுள்ள தமிழ்­நாடு மாசு 
கட்­டுப்­பாடு வாரி­யத்­தின் ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி மையத்­திற்கு அடிக்­கல் நாட்டி, 14 கட­லோர மாவட்­டங்­க­ளில் பயன்­பா­டற்ற மீன்­பிடி வலை சேக­ரிப்பு மையங்­களை திறந்து வைத்து, தனுஷ்­கோ­டி­யில்  பெரும் பூநாரை பற­வை­கள்             சர­ணா­ல­யத்­திற்கு அறி­விக்கை வெளி­யிட்டு,  சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் சிறப்­பா­கச் செயல்­பட்­ட­வர்­க­ளுக்கு விரு­து­கள்  முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் வழங்­கி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (5.6.2025) சென்னை, நந்­தம்­பாக்­கம், சென்னை வர்த்­தக மையத்­தில் சுற்­றுச்­சூ­ழல் கால­நிலை மாற்­றம் மற்­றும் வனத்­து­றை­யின் சார்­பில் நடை­பெற்ற உலக சுற்­றுச்­சூ­ழல் தின விழா­வில், சென்னை, கிண்­டி­யில் 44 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­ட­வுள்ள தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாடு வாரி­யத்­தின் சுற்­றுச்­சூ­ழல் ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி மையத்­திற்கு அடிக்­கல் நாட்டி, தமிழ்­நாடு கடல்­சார் மேம்­பாட்டு திட்­டத்­தின் மூல­மாக 1.75 கோடி ரூபாய் செல­வில் 14கட­லோர மாவட்­டங்­க­ளில் அமைக்­கப்­பட்­டுள்ள கைவி­டப்­பட்ட மீன்­பிடி வலை­கள்  சேக­ரிப்பு மையங்­களை திறந்து வைத்து, தனுஷ்­கோ­டி­யில் பெரும் பூநாரை பற­வை­கள் சர­ணா­ல­யம் அறி­விக்கை பற்­றிய குறும்­ப­டத்­தை­யும் பார்­வை­யிட்­டார். மேலும், 1400 வனக் காவ­லர் பணி­யி­டங்­க­ளுக்கு தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு பணி நிய­மன ஆணை­கள் வழங்கி, சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் சிறப்­பா­கச் செயல்­பட்ட மாவட்ட ஆட்­சித் தலை­வர்­கள், வனக் காவ­லர்­கள், நீர் நிலைப்­பா­து­காப்­பில் சிறப்­பாக செயல்­பட்ட தன்­னார்­வ­லர்­கள் ஆகி­யோ­ருக்கு விரு­து­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மனி­த­கு­லம் சந்­தித்­து­வ­ரும் பெரும் சவா­லாக தற்­போது கால­நிலை மாற்­றம் உள்­ளது. அதனை எதிர்­கொள்ள இவ்­வ­ரசு பசு­மைத் தமிழ்­நாடு இயக்­கம், தமிழ்­நாடு ஈர­நில இயக்­கம், தமிழ்­நாடு கால­நிலை மாற்ற இயக்­கம் மற்­றும்தமிழ்­நாடு நெய்­தல் மீட்சி இயக்­கம்ஆகிய இயக்­கங்­களை தொடங்கி சிறப்­பாக செயல்­ப­டுத்தி வரு­வ­தோடு, இயற்­கைப் பாது­காப்­பி­னை­யும் வளங்­குன்றா வளர்ச்­சி­யை­யும் தொடர்ந்து வலி­யு­றுத்தி, தமிழ்­நாடு அரசு பிற மாநி­லங்­க­ளுக்கு முன்­னோ­டி­யாக விளங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒரு­முறை மட்­டுமே பயன்­ப­டுத்­தக்­கூ­டிய நெகி­ழிப் பயன்­பாட்டை ஒழித்­திட உறு­தி­யான நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­து­டன், தமிழ்­நாட்­டின் பாரம்­ப­ரி­ய­மான, சுற்­றுச்­சூ­ழ­ லுக்கு உகந்த துணிப்பை பயன்­பாட்டை மீட்­டெ­டுக்­கும் வகை­யில் “மீண்­டும் மஞ்­சப்பை” திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்தி வரு ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத்­து­டன் தமிழ்­நாடு மீன் வலை முன்­னெ­டுப்­பின் கீழ், சென்னை காசி­மேட்­டில் நிறு­வப்­பட்­டுள்ள கைவி­டப்­பட்ட மீன்­வலை சேக­ரிப்பு மையம் மூலம் கைவி­டப்­பட்ட மீன் வலை­கள் மறு­சு­ழற்­சிக்கு அனுப்­பப்­ப­டு­வ­தால் கட­லில் நெகிழி மாசு­பாடு குறைந்து, கடல்  பல்­லு­யி­ரி­யம் பாது­காக்­கப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்­டின்  சுற்­றுச்­சூ­ழலை  பேணிக்  காத்­திட இவ்­வ­ரசு பல்­வேறு திட்­டங்­களை சீரிய முறை­யில் செயல்­ப­டுத்தி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சுற்­றுச்­சூ­ழல் ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி மையத்­திற்கு அடிக்­கல் நாட்­டு­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை, கிண்­டி­யில் உள்ள தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாடு வாரிய தலைமை அலு­வ­லக வளா­கத்­தில், 44 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் கட்­டப்­ப­ட­வுள்ள சுற்­றுச்­சூ­ழல் ஆராய்ச்சி மற்­றும் வளர்ச்சி மையத்­திற்கு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் நேற்று அடிக்­கல் நாட்­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இம்­மை­யத்­திற்­கான கட்­ட­டம் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு சாத­க­மான மற்­றும் இயற்கை வளங்­களை திறம்­பட பயன்­ப­டுத்­து­வ­தற்­கான குறிப்­பி­டத்­தக்க முக்­கிய அம்­சங்­களை உள்­ள­டக்­கிய பசுமை கட்­ட­ட­மாகஉரு­வாக்­கப்­ப­டும். இக்­கட்­ட­டத்­தின்மொத்த நிலப்­ப­ரப்பு 16,555 சதுர அடி மற்­றும் மொத்த கட்­டு­மா­னப் பரப்­ப­ளவு 46,823 சதுர அடி ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சுற்­றுப்­புற காற்­றின் தரத்தை நிகழ்­நே­ரத்­தில் கண்­கா­ணித்­தல், தொழிற்­சாலை உமி­ழும் கழிவு வாயு, கழி­வு­நீர் கண்­கா­ணிப்பு, உயிரி மருத்­துவ கழி­வு­கள் மற்­றும் அபா­ய­க­ர­மான கழி­வு­கள் எடுத்­துச் செல்­லப்­ப­டு­வதை கண்­கா­ணித்­தல், ஆகி­ய­வற்­று­டன் ஓர் மேம்­பட்ட சுற்­றுச்­சூ­ழல் ஆய்­வ­கம் மற்­றும் ஒருங்­கி­ணைந்த சுற்­றுச்­   சூ­ழல் கண்­கா­ணிப்பு மையம் ஆகி­யவை இம்­மை­யத்­தில் 
நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திறந்து வைக்­கப்­பட்ட பணி­க­ளின் விவ­ரங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு மீன் வலை முயற்­சி­கள் திட்­டத்­தின் கீழ் கைவி­டப்­பட்ட மீன்­பிடிவலை­கள்  சேக­ரிப்பு மையங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் 14 கட­லோர மாவட்­டங்­க­ளில் அமைக்­கப்­பட்­டுள்ள கைவி­டப்­பட்ட மீன்­பிடி வலை­கள்  சேக­ரிப்பு மையங்­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்று திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் கட­லோ­ரங்­க­ளில், கட­லில் கைவி­டப்­ப­டும் மீன்­வ­லை­கள் மற்­றும் நெகிழி கழி­வு­கள், கடல் உயிர்­வ­ளம் மற்­றும் கடல்­சார் சூழ­லுக்கு மிகுந்த அச்­சு­றுத்­த­லாக மாறி வரு­கி­றது. இந்­நி­லை­யில், கடல்­சார் நெகிழி மாசு­பாட்டை எதிர்­கொள்­ளும் முயற்­சி ­யாக, இந்­தி­யா­வி­லேயே முதன்­­   முறை­யாக, “தமிழ்­நாடு மீன்­வலை முயற்­சி­கள்” என்ற திட்­டத்­தின் கீழ், 2024 ஆகஸ்ட் 14-ஆம் தேதி காசி­மேட்­டில்   “கை வி­டப்­பட்ட மீன்­பிடி வலை சேக­ரிப்பு மையத்­தினை” தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கட­லில் கைவி­டப்­ப­டும் மீன்­­ வலை­களைச்  சேக­ரித்து,  மீன­வர்­ க­ளின் பங்­கேற்­பு­டன் அவற்றை மறு­சு­ழற்சி செய்­வது இந்த திட்­டத்­தின் முக்­கிய நோக்­க­மா­கும். மேலும், மீன­வர்­கள் சேக­ரிக்­கும் ஒவ்­வொரு கிலோ கைவி­டப்­பட்ட மீன்­வ­லைக்­கும், அவர்­க­ளுக்கு ரூ.40 முதல் ரூ.46 வரை வழங்­கப்­ப­டு­கி­றது. இதில், ரூ.4 முதல் ரூ.6 வரை ஊக்­கத்­தொ­கை­யும் அடங்­கும். இதன்­மூ­லம், மீன­வர்­க­ளுக்கு கூடு­தல் வரு­மான வாய்ப்­பும் அளிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது­வரை, 17,044 கிலோ­வுக் ­கும் அதி­க­மான கைவி­டப்­பட்ட மீன்­பிடி வலை­கள் மற்­றும் பிளாஸ்­டிக் கழி­வு­கள், கட­லுக்­குள் செல்­லா­மல் தடுக்­கப்­பட்­டுள்­ளது. 10,700 கிலோ கைவி­டப்­பட்ட மீன்­பிடி வலை­கள் மறு­சு­ழற்சி செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை, காசி­மேட்­டில் தொடங்­கிய இம்­மு­யற்­சி­யின் வெற்­றி­யைத் தொடர்ந்து, தமிழ்­நாட்­டின் 13 கட­லோர மாவட்­டங்­க­ளான – திரு­வள்­ளூர் மாவட்­டம் – பழ­வேற்­காடு கிரா­மம், சென்னை மாவட்­டம் – பட்­டி­னப்­பாக்­கம் கலங்­க­ரை­வி­ளக்­கம் அரு­கில், செங்­கல்­பட்டு மாவட்­டம் – கோவ­ளம், விழுப்­பு­ரம் மாவட்­டம் – கூனி­மேடு கிரா­மம்,  கட­லூர் மாவட்­டம் – முட­சல் ஓடை மீன்­பிடி நிலை­யம், மயி­லா­டு­துறை மாவட்­டம் – பழை­யார் மீன்­பிடி துறை­மு­கம், நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் – நாகப்­பட்­டி­னம் மீன்­பிடி துறை­மு­கம், திரு­வா­ரூர் மாவட்­டம் – முத்­து­பேட்டை,  தஞ்­சா­வூர் மாவட்­டம் – மல்­லிப்­பட்­டி­னம் மீன்­பிடி துறை­முக வளா­கம்,  புதுக்­கோட்டை மாவட்­டம் – கோட்­டைப்­பட்­டி­னம் மீன்­பிடி நிலைய வளா­கம்,  இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம் – ஏர்­வாடி கிரா­மம், தூத்­துக்­குடி மாவட்­டம் – தூத்­துக்­குடி மீன்­பிடி துறை­மு­கம், திரு­நெல்­வேலி மாவட்­டம் – உவரி கடற்­க­ரை­யில் ஏல மண்­ட­பம், கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் – சின்­ன­முட்­டம் மீன்­பிடி துறை­மு­கம் ஆகிய 14 கட­லோர மாவட்­டங்­க­ளில், உலக வங்­கி­யின் “தமிழ்­நாடு கடல்­சார் மேம்­பாட்டு திட்­டம்” (TN SHORE) மூல­மாக, 1.75 கோடி ரூபாய் செல­வில் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த விரி­வாக்­கம், தமிழ்­நாட்­டின் அனைத்து முக்­கிய கட­லோர மாவட்­டங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தா­கும். இது நம் கடல்­க­ளின் பாது­காப்­பை­யும், மீன­வர்­க­ளின் நல­னை­யும் ஒரு­சேர முன்­னேற்­றும் ஒரு மாபெ­ரும் திட்­ட­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தனுஷ்­கோ­டி­யில் பெரும் பூநாரை பற­வை­கள் சர­ணா­ல­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வி­ழா­வில், இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம், தனுஷ்­கோ­டி­யில்அமைக்­கப்­பட்­டுள்ள பெரும் பூநாரைபற­வை­கள் சர­ணா­ல­யம் (Greater Flamingo Bird Sanctuary) பற்­றிய குறும்­ப­டத்­தினை தமிழ்­நாடு 
முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்று பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தனுஷ்­கோடி பெரும் பூநா­ரை­கள் சர­ணா­ல­யம், பல்­லு­யிர் வளம் மிகக் கொண்ட மன்­னார் வளை­குடா உயிர்க்­கோ­ளக் காப்­ப­கத்­தில் 524.78 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் அமைந்­துள்­ளது. இரா­மேஸ்­வ­ரம் தீவின் கடை­கோ­டி­யில் உள்ள சதுப்பு நிலங்­க­ளில் அமைந்­துள்ள இந்த சர­ணா­ல­யம் பெரும் பூநா­ரை­கள் உள்­ளிட்ட வலசை பற­வை­கள் இடம் பெயர்­வ­தற்­கான மத்­திய ஆசிய பற­வைப் பாதை­யின் முக்­கி­யப் பகு­தி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த சர­ணா­ல­யம் புலம் பெயர்ந்த ஈர நில பற­வை­க­ளுக்­கான வல­சைப் பாதை­யி­லும் அமைந்­துள்­ளது.  இங்கு நிலப்­ப­ரப்­   பினைச் சார்ந்த 55 வகை­யான பறவை இனங்­க­ளும், நிலப்­ப­ரப்­பி ­னைச் சாராத புலம் பெயர்ந்த 73 பறவை இனங்­க­ளும் உள்­ளன. ஒவ்­வொரு ஆண்­டும் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை 700 பூநா­ரை­கள் மற்­றும் 4300 அலைந்து திரி­யும் பறவை இனங்­கள் இங்கு வருகை புரி­கின்­றன. இந்த சர­ணா­ல­யம் அமைக்­கப்­ப­டு­வ­தன் மூலம் இந்த உயிர்க்­கோ­ளக் காப்­ப­கத்­தின் பல்­லு­யிர் சம­நிலை பாது­காக்­கப்­ப­டு­வ­து­டன், இங்கு வரு­கை­பு­ரி­யும் பறவை இனங்­க­ளின் பாது­காப்­பும் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வ­ரசு பொறுப்­பேற்ற பிறகு அறி­விக்கை செய்­யப்­ப­டும் மூன்­றா­வது பற­வை­கள் சர­ணா­ல­யம் இது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இத­னை­யும் சேர்த்து தமிழ்­நாட்­டில் தற்­போது மொத்­தம் 18 பற­வை ­கள் சர­ணா­ல­யங்­கள் உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வனக்­கா­வ­லர் பணி­யி­டத்­திற்­கானபணி­நி­ய­மன ஆணை­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">வனங்­களை காத்து வளர்த்­திட வனத்­து­றைக்கு போது­மான பணி­யா­ளர்­கள் தேவை. அதனை பூர்த்தி செய்­யும் வகை­யில், தமிழ்­நாடு அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யத்­தின் மூலம் வனக்      காவ­லர் பணி­யி­டத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட 1400 இளை­ஞர்­­  களுக்கு பணி நிய­மன ஆணை­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார். இதன்­­மூலம் வனத்­து­றை­யின் செயல்­பா­டு­கள் மேலும் செம்­மை­யு­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பில் 
சிறப்­பா­கச் செயல்­பட்­ட­வர்­க­ளுக்கு விரு­து­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மாவட்­டத்­தின் சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பிற்­காக சிறப்­பாக செய­லாற்­றி­ய­தற்­காக கிருஷ்­ண­கிரி மாவட்ட ஆட்­சித் தலை­வர் சி.தினேஷ் குமார்,  தேனி மாவட்ட ஆட்­சித் தலை­வர் ரஞ்­ஜீத் சிங்,   திருச்­சி­ராப்­பள்ளி மாவட்ட ஆட்­சித் தலை­வர்  எம்.பிர­தீப் குமார்  மற்­றும் திரு­வள்­ளூர் மாவட்ட ஆட்­சித் தலை­வர் எம்.பிர­தாப் ஆகி­யோ­ருக்கு பசுமை விரு­து­களை  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேலும், மனித வன­வி­லங்­கு­கள் முரண்­பாடு மேலாண்மை, பசுமை தமிழ்­நாடு இயக்­கம், நீடித்த நிலைத்த வன மேலாண்மை ஆகிய பிரி­வு­க­ளில் சிறப்­பா­கச் செயல்­பட்ட விழுப்­பு­ரம், கரூர், சென்னை, கோயம்­புத்­தூர் மற்­றும் திரு­வா­ரூர் ஆகிய ஐந்து மாவட்ட வன அலு­வ­லர்­க­ளுக்கு சிறந்த மாவட்ட வனப் பாது­கா­வ­லர் விரு­து­கள்; தூத்­துக்­குடி, 
முத்­துப்­பேட்டை, மொரப்­பூர், திருச்­சி­ராப்­பள்ளி மற்­றும் போளு­வாம்­பட்டி ஆகிய சர­கங்­க­ளைச் சார்ந்த ஐந்து வனச் சர­கர்­க­ளுக்கு சிறந்த வனச்­ச­ர­கர்­க­ளுக்­கான விரு­து­கள் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் வழங்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் அனைத்துமாவட்­டங்­க­ளி­லும் நீர் நிலைப்­பா­து­காப்­பில் சிறப்­பாக செயல்­பட்ட 38 நபர்­க­ளுக்கு முத­ல­மைச்­ச­ரின் நீர்­நி­லைப் பாது­கா­வ­லர் விரு­து­கள் மற்­றும் தலா 1 இலட்­சம் ரூபாய்க்­கான பரி­சுத்­தொகை மற்­றும்  ஐந்து தொழிற்­சா­லை­க­ளுக்கு       தன்­னார்வ பசு­மைத் தர­வ­ரி­சைக்­கான விரு­து­கள் ஆகிய விரு­து­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் விரு­தா­ளர்­க­ளுக்கு வழங்கி வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த விழா­வில், நிதி, சுற்­றுச்­சூ­ழல், கால­நிலை மாற்­றத்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு,  குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன்,  மாண்­பு­மிகு வனத்­துறை மற்­றும் காதி அமைச்­சர் திரு.ஆர்.எஸ்.ராஜ­கண்­ணப்­பன்,  சட்­ட­மன்ற  உறுப்­பி­னர் திரு.இ.கரு­ணா­நிதி, சுற்­றுச்­சூ­ழல் கால­நிலை மாற்­றம் மற்­றும் வனத்­துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் திரு­மதி சுப்­ரியா சாஹூ, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் கால­நிலை மாற்­றத்­துறை இயக்­கு­நர்  ஆ.ர.ராகுல் நாத், முதன்­மைத் தலைமை வனப்­பா­து­கா­வ­லர்    மற்­றும் வனத்­துறை தலை­வர்  ஸ்ரீனி­வாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர்      மற்­றும் தலைமை வன உயி­ரின காப்­பா­ளர் ராகேஷ் குமார் டோக்ரா,  தமிழ்­நாடு மாசு கட்­டுப்­பாடு வாரி­யத் தலை­வர் முனை­வர் எம்.ஜெயந்தி, சென்­னை­                    யி­லுள்ள இங்­கி­லாந்து நாட்டு துணைத் தூதர் திரு­மதி அலிமா ஹாலந்த் மற்­றும் பல்­வேறு நாடு­க­ளின் தூத­ரக அதி­கா­ரி­கள், அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்துகொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>