<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,304,969,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 05 2025 22:43:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="06062025-MDU-10" position.sequence="10" ex-ref="06062025-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">பெரம்பலூர் மாவட்டம்-- – ஆலத்தூர் வட்டம்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">கொளக்காநத்தத்தில் புதிய அரசு கலை – அறிவியல்  கல்லூரி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">கல்லூரி மேம்பாட்டிற்காக ரூ. 1 கோடி நிதியினை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal1_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரம்­ப­லூர், ஜூ-ன் 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல்வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தலை­மைச் செய­ல­கத்­தில் இருந்து காணொ­ளிக்­காட்சி மூலம் பெரம்­ப­லூர் மாவட்­டம் கொளக்­கா ­நத்­தம் உள்­பட 11 மாவட்­டங்­க­ளில் புதிய அரசு கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­களை 26.05.2025 அன்று  தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள்,  உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் முனை­வர்.கோவி.செழி­யன், தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்­னி­லை­யில் தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யினைகொளக்­கா­நத்­தம் மேல்­நி­லைப்பள்­ளி­யில்  போக்­கு­வ­ரத்து மற்­றும் மின்­சா­ரத் ­துறை அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் கிரேஸ் பச்­சாவ், பெரம்­ப­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்ம.பிர­பா­க­ரன், ஆலத்­தூர் முன்­னாள் ஒன்­றி­யக்­கு­ழுத்­­தலை­வர் ந.கிருஷ்­ண­மூர்த்திஆகி­யோர் நேரலை நிகழ்வைபார்த்து, வகுப்­ப­றை­யில் இனிப்­பு­களை வழங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பின்­னர்,  இந்­நிகழ்ச்­சியில்போக்குவரத்து  மற்­றும் மின்­சா­ரத்­துறை அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் கல்­விக்­கண் திறந்­த­வர் காம­ரா­சர் என்­ப­தைப்­போல, உயர் கல்­விக்­கண் திறந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.  கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக் காலத்­தில் உயர்­கல்­விக்குமுக்­கி­யத்­து­ வம் அளிக்­கும் வகை­யில், அதிக கல்­லூ­ரி­ க­ளும், பல்­க­லைக்­க­ழ­கங்­­களும் உரு­வாக்­கப்­பட்­டது. அவ­ரின் வழி­யில் நல்­லாட்சி நடத்­தி­வ­ரும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள், கல்வி ஒன்றே யாரா­லும் அழிக்க இய­லாத சொத்து என்­பதை உணர்ந்து நம் தமிழ்­நாட்­டில் கல்­விக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளித்து பல்­வேறு சிறப்­பான திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் உயர் கல்­வியை மேம்­ப­டுத்­தும் நோக்­கில், அதிக எண்­ணிக்­கை­ யி­லான உயர்­கல்வி நிறு­ வ­னங்­களை தொடங்­கு­தல், அதன் வாயி­லாக ஆராய்ச்சி, புது­மைப்­ப­டைப்­பு­கள், தொழில்­நுட்ப ஆராய்ச்சிஆகி­ய­வற்­றில் மாண­வர்­க­ளின்திறன்­களை வளர்த்து,  வேலை­வாய்ப்­பினை உறுதி செய்­தல் “நான் முதல்­வன்” திட்­டத்­தின் மூலம் தகு­தி­வாய்ந்த திறன்­மிகு இளை­ஞர்­களை உரு­வாக்­கு­தல், அர­சுப் பள்­ளி­க­ளில் ஆறாம் வகுப்பு முதல் பன்­னி­ரெண்­டாம் வகுப்பு வரை படித்த மாண­வி­கள் உயர்­கல்வி பயில “புது­மைப்­பெண்” திட்­டம் மற்­றும் மாண­வர்­கள் உயர்­கல்வி பயில “தமிழ்ப்­பு­தல்­வன்” திட்­டம் ஆகிய திட்­டங்­க­ளின் கீழ் மாதம் ரூ.1000/- உத­வித் தொகை­யாக வழங்­கு­தல், முதல் தலை­முறை  பட்­ட­தா­ரி­க­ளுக்கு சலு­கை­க­கள், கல்­லூ­ரி­கள் மற்­றும் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­தல் போன்ற பல்­வேறுதிட்­டங்­களை தமிழ்­நாடு அரசு செயல்­ப­டுத்தி வரு­வ­தால்  அகில இந்­திய அள­வில் உயர்­கல்வி சேர்க்­கை­யில் தமிழ்­நாடு முத­லி­டம் வகித்து வரு­கின்­றது. இந்த ஆண்டு முதல் கல்­லூரி பயி­லும் மாணவ, மாண­வி­களுக்கு மடிக்­க­ணினி வழங்­கும் திட்­டத்­தை­யும்   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­துள்­ளார்­.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குன்­னம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட அரசு பள்­ளி­க­ளில் 10,11, மற்­றும் 12 ஆம் வகுப்பு பயி­லும் மாணவ, மாண­வி­கள் எளி­தில் தேர்ச்சி பெறும் வகை­யில் “தேர்வை வெல்­வோம்” என்ற தொகுப்பு எனது சார்­பில் அனை­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டது. கடந்த ஆண்டுமுதல் பெரம்­ப­லூர், குன்­னம்,அரி­ய­லூர், ஜெயங்­கொண்­டம் என 4 தொகு­தி­க­ளுக்­கும் “தேர்வை வெல்­வோம்” என்ற புத்­த­கத் தொகுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. மாணவ மாண­வி­கள் படித்­தால் மட்­டும் போதாது, படித்­த­வு­டன் அவர்­க­ளுக்கு தேவை­யான வேலை வாய்ப்பு கிடைக்க வேண்­டும் என்­ப­தன் அடிப்­ப­டை­யில் குன்­னம் பகு­தி­யில் கலை­ஞர் கணினி மையம் தொடங்­கப்­பட்டு, 60க்கும் மேற்­பட்ட மாணவ மாண­வி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கும் வகை­யில் டேலி (TALLY) பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றை­ய­தி­னம் தமிழ்­நாடு முழு­வ­தும் பல்­வேறு 11 மாவட்­டங்­க­ளில் புதிய  அரசு கலை அறி­வி­யல்கல்­லூ­ரி­களை தொடங்கி வைத்­துள்­ளார்­கள். அதில் நமது மாவட்­டத்­தில் கொளக்­கா­நத்­தம் போன்ற பின்­தங்­கிய பகு­தி­யில் இந்த அரசு கலை அறி­வி­யல் கல்­லூரி தொடங்­கப்­பட்­டி­ருப்­ப­தன் நோக்­கம், கிரா­மப்­புற ஏழை, எளிய மாணவ மாண­வி­க­ளுக்­கும் உயர்­கல்வி எளி­தில் கிடைக்க வேண்­டும்என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வணி­க­வி­யல், கணினி அறி­வி­யல், உயிர்­தொ­ழில்­நுட்­ப­வி­யல், பொரு­ளா­தா­ரம் மற்­றும் அர­சி­யல் அறி­வி­யல் உள்­ளிட்ட 5 பாடப்­பி­ரி­வு­க­ளு­டன் தொடங்­கப்­பட்ட இந்­தக் கல்­லூ­ரி­யில், 280 மாணவ மாண­வி­கள் பயி­லும் வகை­யில் இடங்­கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. கல்­லூ­ரிக்­கான முதல்­வர் மற்­றும் ஆசி­ரி­யர்­கள் என 6 பேரா­சி­ரி­யர்­க­ளும், 5 அலு­வ­ல­கப் பணி­யா­ளர்­க­ளும் என 11 பணி­யி­டங்­கள் முதற்­கட்­ட ­மாக தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இணை­ய­வ­ழி­யாக இது­வரை 1820 விண்­ணப்­பங்­கள் பெறப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொளக்­கா­நத்­தத்­திற்கு புதிய அரசு கலை அறி­வி­யல் கல்­லூ­ரி­யினை வழங்­கிய  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு மன­மார்ந்த நன்­றி­யினை மக்­க­ளின் சார்­பில், மாணவ மாண­வி­க­ளின் சார்­பில் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், இந்­தக் கல்­லூரி அமைய பரிந்­துரை செய்த  உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், இந்­தக்­கல்­லூ­ரியை பெறு­வ­தற்கு தொடர்ந்து முயற்சி செய்த முன்­னாள் ஆலத்­தூர் ஒன்­றி­யக்­கு­ழுத்­த­லை­வர் என்.கிருஷ்­ண­மூர்த்தி அவர்­க­ளுக்­கும் மன­மார்ந்த நன்­றி­யினை தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்­லூ­ரி­யின் மேம்­பாட்­டிற்­காக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரின் தொகுதி மேம்­பாட்டு நிதி­யில் இருந்து ரூ.1 கோடி நிதி­ஒ­துக்­கீடு செய்து வழங்­கி­யுள்­ளேன் என்­பதை மகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அனை­வ­ருக்­கும் சம­மான கல்வி கிடைக்க வேண்­டும் என்ற உய­ரிய நோக்­கத்­தில் நம் திரா­விட மாடல் முதல்­வர் அவர்­கள் முன்­னெ­டுக்­கும் திட்­டங் ­களை மாணவ, மாண­வி­கள் முறை­யா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்டு வாழ்­வில் முன்­னேற வேண்­டும் என மன­தார வாழ்த்­து­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அத­னைத்­தொ­டர்ந்து, கொளக்­கா­நத்­தம் மேல்­நி­லைப் பள்­ளி­யில், தற்­கா­லி­க­மாக கல்­லூ­ரிக்­காக அமைக்­கப்­பட்­டுள்ள வகுப்­ப­றை­ க­ளை­யும், கல்­லூ­ரி­யில் சேரு­வ­தற்கு ஆன்­லை­னில் மூலம் விண்­ணப்­பிக்க மாணவ மாண­வி­க­ளுக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த உதவி மையத்­தை­யும்  போக்­கு­வ­ரத்து மற்­றும் மின்­சா­ரத்­
துறை அமைச்­சர்  பார்­வை­யிட்டு,  பொது­மக்­க­ளுக்கு இனிப்­பு­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில், கல்­லூ­ரிக் கல்வி இயக்­கு­நர் பி.பொன்­முத்­து­ரா­ம­லிங்­கம், கொளக்­கா­நத்­தம் அரசு கலை அறி­வி­யல் கல்­லூரி முதல்­வர் முனை­வர்.கண்­ண­தா­சன், முதன்­மைக் கல்வி அலு­வ­லர் திரு­மதி முரு­கம்­மாள், மாவட்ட கழக பொறுப்­பா­ளர் வீ.ஜெக­தீ­சன்,  முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பா‌.துரை­சாமி, முன்­னாள் அரசு வழக்­க­றி­ஞர் என்.ராஜேந்­தி­ரன்  மற்­றும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், அரசு அலு­வ­லர்­கள் பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>