<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,290,493,1189" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 06 2025 03:47:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06062025-TRY-03" position.sequence="03" ex-ref="06062025-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="18">ஈரோடு மாவட்டம் – பெருந்துறை – விஜயமங்கலத்தில்  – ஜூன் 11 அன்று</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">வேளாண் கண்காட்சி – கருத்தரங்கம் 2025 விழா   ; முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!      </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="M.R.K.Pannee_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூன் 6 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஈரோடு மாவட்­டம், பெருந்­துறை அரு­கில் விஜ­ய­மங்­க­லத்­தில்  11.06.2025 மற்­றும் 12.06.2025 ஆகிய இரு தினங்­கள் நடை­பெ­ற­வுள்ள ‘‘வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கம்- 2025” விழா­வினை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்  ஜூன் 11, 2025 அன்று தொடங்­கி­வைக்­கும்  விழா­வில் உழ­வர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ரும் பங்­கேற்­றுப் பயன்­பெற வேளாண்மை– - உழ­வர் நலத்­துறை அமைச்­சர் எம்.ஆர்.கே.       பன்­னீர்­செல்­வம் அழைப்பு விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இதுகுறித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வின்­படி, தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் முதன்­மு­த­லாக வேளாண்­மைக்­கென தனி நிதி நிலை அறிக்கை தயா­ரித்து, கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் உழ­வர்­கள் நலன் காக்க பல்­வேறு திட்­டங்­கள் வகுக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்­டன. 2025–-26ஆம் ஆண்­டி­லும் புதிய திட்­டங்­கள் அறி­விக்­கப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வேளாண்மை மற்­றும் சார்­புத் தொழில்­க­ளில்நவீன தொழில்­நுட்­பங்­கள்,கண்­டு­பி­டிப்­பு­கள், வேளாண் இயந்­தி­ரங்­கள் மற்­றும் கரு­வி­கள், உயர்­விளைச்­சல் தர­வல்ல புதியபயிர் இர­கங்­கள், அறு­வடைபின்­சார் மேலாண்மை நுட்­பங்­கள், மதிப்­புக்­கூட்­டும் நுட்­பங்­கள், வேளாண்­மை­யில் மின்­னணு தொழில்நுட்­பங்­கள்,சந்­தைப்­ப­டுத்­தும் நுட்­பங்­கள், உயிர்மமற்­றும் இயற்கை வேளாண்மை, பாரம்­ப­ரிய இர­கங்­க­ளைப் பர­வ­லாக்­கு­தல், உணவு பதப்­ப­டுத்­து­தல், கால்­நடை மற்­றும் மீன் வளர்ப்பு நுட்­பங்­கள், பயிர்க்­க­டன், பயிர்க்­காப்­பீடு உள்­ளிட்ட சேவை­கள், ஏற்­று­மதி தொடர்­பானவிழிப்­பு­ணர்வு  போன்ற பல்­வேறு வேளாண்மை மற்­றும் வேளாண் சார்ந்த தற்­போதையஅனைத்து விவ­ரங்­க­ளை­யும் வாய்ப்­பு­க­ளை­யும் உழ­வர்­கள், மாண­வர்­கள், பொது­மக்­கள், உணவு பதப்­ப­டுத்­தும் அமைப்­பு­கள், ஏற்­று­ம­தி­யா­ள ர்­கள் இயற்கை நல ஆர்­வ­லர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தி­டும் வகை­யில்  இந்த ஆண்டு “வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கங்­கள்- 2025” நடத்­தப்­பட  உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சிறப்பம்சங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்த ஆண்­டின் முதல் “வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கம்” ஈரோட்­டில் நடை­பெ­று­தல், வளர்ந்­து­வ­ரும் வேளாண்மை மற்­றும் தோட்­டக்­க­லைத் தொழில்­நுட்­பங்­கள், புதிய இரக வேளாண்மை மற்­றும் தோட்­டக்­க­லைப் பயிர்விதை­கள், ஒட்டு இரக பழ­ம­ரக்­கன்­று­கள், தென்­னங்­கன்­று­கள் மற்­றும் பிற­வகை மரக்­கன்­று­கள்,  வேளாண் இயந்­தி­ரங்­கள் மற்­றும் கரு­வி­கள் விற்­பனை,  உயர் இரக கால்­நடை­கள் மற்­றும் வளர்ப்பு முறை­கள், மீன் வளர்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவை­கள் மற்­றும்  இவை குறித்த கருத்­த­ரங்­கம் உள்­ளிட்ட பல்­வேறு சிறப்­பம்­சங்­க­ளைக் கொண்டு, 11.06.2025 மற்­றும் 12.06.2025 ஆகிய இரு தினங்­க­ளில் ஈரோடு மாவட்­டம், பெருந்­துறை வட்­டா­ரம் விஜ­ய­மங்­க­லம் சுங்­கச்­சா­வடி அரு­கில் “வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்கு–2025”விழா­வினை மிகச்­சி­றப்­பாகநடத்த தமிழ்­நாடு அரசு பல்­வேறு சிறப்பு ஏற்­பா­டு­க­ளைச் செய்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இக்­கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கினை முத­ல்வர் மு.க.ஸ்டாலின்அவர்­கள் 11.06.2025 அன்றுதொடங்கி வைத்து, உழ­வர்­க­ளுக்கு திட்­டப்­ப­லன்களை வழங்கி சிறப்­புரை ஆற்ற உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பங்­கேற்­கும் துறை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மற்­றும் நிறு­வ­னங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வேளாண்­மைத்­துறை, தோட்­டக்­கலை மற்­றும் மலைப்­ப­யிர்­கள் துறை,  வேளாண்மை விற்­பனை மற்­றும் வேளாண் வணி­கத்­துறை, வேளாண் பொறி­யி­யல் துறை, சர்க்­க­ரைத்­துறை, விதைச்­சான்­ற­ளிப்பு மற்­றும் உயிர்­மச்  சான்­ற­ளிப்­புத் துறை, கால்­நடை பரா­ம­ரிப்­புத்­துறை, மீன்­வ­ளத்­துறை, தமிழ்­நாடு பால் உற்­பத்­தி­யா­ளர்­கள் கூட்­டு­றவு இணை­யம் (ஆவின்), தமிழ்­நாடு உணவு பதப்­படுத்­தல் மற்­றும் வேளாண் ஏற்­று­மதி மேம்­பாட்­டுக் கழ­கம், பட்டு வளர்ச்­சித் துறை, தமிழ்­நாடு கூட்­டு­றவு விற்­பனை இணை­யம், ஒன்­றிய அர­சின் வேளாண் ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள், கூட்­டு­றவு நிறு­வ­னங்­கள்,  தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கம், தமிழ்­நாடு கால்­நடை அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம், தமிழ்­நாடு மீன்­வ­ளப் பல்­க­லைக்­க­ழ­கம் போன்ற பல்­வேறு நிறு­வ­னங்­கள் இக்­கண்­காட்­சி­யில் பங்­கேற்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவை தவிர, நுண்­ணீர்ப்பா­சன நிறு­வ­னங்­கள், உர நிறு­வ­னங்­கள், பூச்­சிக் கொல்லி மருந்து நிறு­வ­னங்­கள், வேளாண் இயந்­தி­ரங்­கள் மற்­றும் கரு­வி­கள் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள், விதை நிறு­வ­னங்­கள், வங்­கி­கள், பயிர்க்­காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், சர்க்­கரை ஆலை­கள் உள்­ளிட்ட பல்­வேறு தனி­யார் நிறு­வ­னங்­க­ளும் கலந்து கொண்டு வேளாண் உற்­பத்­திக்­குத் தேவை­யான புதிய இர­கங்­க­ளின் விதை­கள்,  காய்­கறி விதை­கள், மா, கொய்யா உள்­ளிட்ட பழ வகை­களில் ஒட்டு இர­கக் கன்­று­கள், தென்­னை­யில் வீரிய ஒட்­டுக் கன்­று­கள், நுண்­ணூட்ட உரக்­க­ல­வை­கள், உயிர் உரங்­கள், இயற்கை உரங்­கள் போன்ற இடு­பொ­ருட்­கள் மற்­றும் நவீன உப­க­ர­ணங்­க­ளைக் காட்­சிப்­ப­டுத்­த­வும் விற்­பனை செய்­ய­வும்  உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­கள், பாரம்­ப­ரிய உணவு உற்­பத்தி நிறு­வ­னங்­கள், ஏற்­று­மதி நிறு­வ­னங் கள் உணவு பதப்­ப­டுத்­தும் அமைப்­பு­கள்,   போன்ற நிறு­னங்­க­ளும் தங்­க­ளது தயா­ரிப்­பு­க­ளைக் காட்­சிப்­ப­டுத்­த­வும், விற்­பனை செய்­ய­வும் இசைந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கண்­காட்­சி­கள் மற்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கருத்­த­ரங்­கு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">உழ­வர்­கள் சார்ந்த அர­சின் அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் ஒரே இடத்­தில் தெரிந்து கொள்ள வாய்ப்­பாக இக்­கண்­காட்சி அமை ­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நுண்­ணீர்ப் பாச­னத்­திட்­டம், இயற்கை வேளாண்மை,தமிழ்­நாடு சிறு­தா­னிய இயக்­கம், தென்­னை­யில் பயிர்ப்­பா­து­காப்பு, பாரம்­ப­ரிய நெல் இர­கங்­கள், ஒருங்­கி­ணைந்த பண்­ணை­யம், பசு­மைக்­கு­டில், செங்­குத்­துத் தோட்­டம், நீரி­யல் தோட்­டம், மாடித் தோட்­டம், வேளாண் இயந்­தி­ர­ம­ய­மாக்­கு­தல், மதிப்­புக்­கூட்­டு­தல், முத­ல­மைச்­ச­ரின் உழ­வர்­நல சேவை மையங்­கள்,   முத­ல­மைச்­ச­ரின் மண்­ணு­யிர் காத்து மன்­னு­யிர் காப்­போம் திட்­டம், கலை­ஞ­ரின் அனைத்து கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டம், மலை­வாழ் உழ­வர் முன்­னேற்­றத்­தி ட்­டம்,ஊட்­டச்­சத்து வேளாண்மைஇயக்­கம்,  உயர் இரக கால்­நடை வளர்ப்பு, கோழி­வ­ளர்ப்பு, மீன்­வ­ளர்ப்பு போன்ற உழ­வர்­க­ளுக்­காக அரசு செயல்­ப­டுத்­தும் பல்­வேறு திட்­டங்­க­ளைத் தெரிந்து கொள்­ளும் வகை­யில் சிறப்­புக் கண்­காட்சி அரங்­கு­கள் அமைக்­கப்­படும். மேலும், உழ­வர் செயலி பதி­வி­றக்­கம், அரசு நல உத­வித்­திட்­டங்­க­ளில் பயன்­பெற பதிவு செய்­தல், தமிழ் மண்­வள இணை­ய­த­ளம் மூலம் மண்­வள அட்டை விநி­யோ­கம் போன்ற இணை­ய­வழி சேவை­க­ ளைப் பற்றி அறிந்து கொள்­ள­வும் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. கொள்­மு­தல் செய்­பவர்-­விற்­ப­னை­யா­ளர் சந்­திப்­பும் (Buyers-Sellers Meet) நடை­பெற உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">உயிர்ம வேளாண்மை தொழில்­நுட்­பம்மற்­றும் இடு­பொ­ருள் உற்­பத்தி, மகத்­துவ மஞ்­சள் சாகு­படி முறை­கள், வளம்­த­ரும்வாழை சாகு­படி,  தென்னைபரா­ம­ரிப்பு மற்­றும் பூச்சிநோய் மேலாண்மை முறை­கள், நவீன கரும்பு சாகு­படி மேலாண்மை, உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­­களின் செயல்­பா­டு­கள் மற்­றும் வழி­காட்­டு­தல், வேளாண்வணி­கம் மற்­றும் ஏற்­று­ம­திக்­கான வாய்ப்­பு­கள், மாற்­றம் தரும் தோட்­டக்­கலை சாகு­படி, பயிர்த் தொழில்­க­ளுக்கு ஏற்ற பக்­கத்­தொ­ழில்­கள் (Secondary Agriculture),  உழ­வர்­க­ளின் வரு­மா­னத்தை உயர்த்­திட மதிப்பு கூட்­டு­தல் மற்­றும் சந்­தைப்­ப­டுத்­து­தல், வேளாண் இயந்­தி­ர­ம­ய­மாக்­க­லில் உள்ள சவால்­களும், தீர்­வு­க­ளும் போன்றதலைப்­பு­க­ளில் கருத்­த­ரங்­கு­கள் நடத்­தப்­ப­டும். இக்­க­ருத்­த­ரங்­கு­க­ளில் தொழில்­நுட்ப வல்­லு­நர்­க­ளும், அனு­ப­வ­மிக்க வேளாண் பெரு­மக்­க­ளும், ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளும், உயர் அலு­வ­லர்­க­ளும் கலந்து கொண்டு பல்­வேறு பய­னுள்ள தக­வல்­க­ளைப் பகிர்ந்து கொள்­ள­வி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஈரோடு மாவட்­டத்­தில் வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கம் சிறப்­பாக நடை­பெ­றத் தேவை­யான முன்­னேற்­பா­டு­கள் குறித்து வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத்­துறை அமைச்­சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்து அலு­வ­லர்­க­ளுக்கு தக்க அறி­வுரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மேலும், வேளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கில் பெரு­வா­ரி­யான வேளாண் பெரு­மக்­கள் கலந்து கொண்டு பயன்­பெற வேண்­டும் என்­ப­தற்­காக, மாநி­லத்­தின் அனைத்துமாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் உழ­வர்­களை அழைத்து வரு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும். இவ்­வி­ழா­வில், அமைச்­சர் பெரு­மக்­கள், சட்­ட­மன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரசு உயர் அலு­வ­லர்­க­ளும் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்ற உள்­ள­னர் என்­றும், இவ்­வாறு தமிழ்­நாடு அர­சால் மிகச்­சிறப்­பாக ஏற்­பாடு செய்­யப்­பட்டு நடை­பெற உள்ள  இவ்­வே­ளாண் கண்­காட்சி மற்­றும் கருத்­த­ரங்­கில் உழ­வர்­கள், மாண­வர்­கள் மற்­றும் பொது­மக்­கள்  பெருந்­தி­ர­ளா­கக் கலந்து கொண்டு பயன்­பெற வேண்­டும் என்­றும் வேளாண்மை மற்­றும் உழ­வர் நலத்­துறை அமைச்­சர் உழ­வர் பெரு­மக்­க­ளை­யும் பொது­மக்­க­ளை­யும்  
கேட்­டுக் கொண்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>