<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,690,609,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 05 2025 15:32:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06062025-TRY-09" position.sequence="09" ex-ref="06062025-TRY-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="23">பெரம்பலூர் மாவட்டத்தில்  ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்களில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">1,897 பயனாளிகளுக்கு ரூ.16.41 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்! மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,     எம்.பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="DharmapuriMerk_09_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெரம்­ப­லூர், ஜூன்  6 –-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில் ஊரக பகு­தி­க­ளுக்­கான மூன்­றாம் கட்ட மக்­க­ளு­டன் முதல்­வர் திட்ட சிறப்பு முகாம்­களை தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் சி.வெ.கணே­சன் தொடங்கி வைத்து, பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கோரிக்கை மனுக்­க­ளைப் பெற்­றுக் கொண்டு, 1,897 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.16.41 கோடி மதிப்­பி­லான பல்­வேறு அரசு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார்.  பெரம்­ப­லூர் ஊராட்சி ஒன்­றி­யத்­து க்­குட்­பட்ட எளம்­ப­லூர், செஞ்­சேரி, எசனை, லாட­பு­ரம் மற்­றும் ஆலத்­தூர் ஊராட்சி ஒன்­றி­யத்­துக்­குட்­பட்ட டி.களத்­தூர் ஆகிய கிரா­மங்­க­ளில் பல்­வேறு அரசு நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­க­ளில் ஆட்­சி­யர் கிரேஸ் பச்­சாவ்,பெரம்­ப­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ம.பிர­பா­க­ரன், மாவட்ட கழக பொறுப்­பா­ளர்- அட்மா தலை­வர் வீ.ஜெக­தீ­சன் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதில் தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் மக்­க­ளு­டன் முதல்­வர் முகாம்­க­ளில் கலந்து கொண்டு பொது­மக்­க­ளின் குறை­களை கேட்­ட­றிந்து அவற்றை நிவர்த்தி செய்ய அறி­வு­றுத்­தி­யுள்­ளார்­கள். அதற்­காக எந்­தெந்த ஊராட்­சி­க­ளில் கலந்­து­கொள்ள வேண்­டும் என்ற விப­ரத்­தி­னை­யும் தெரி­வித்­துள்­ளார்­கள். அந்த வகை­யில் எளம்­ப­ லூர், செஞ்­சேரி, எசனை, லாட­பு­ரம், டி.களத்­தூர் ஆகிய ஊராட்­சி­க­ளில் நடை­பெ­றும் மக்­க­ளு­டன் முதல்­வர் முகா­மில் இன்று கலந்து கொண்டு 1,897 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.16.41 கோடி மதிப்­பி­லான பல்­வேறு அரசு நலத்­திட்ட உத­வி­களை இன்று  வழங்­கி­யுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள்  விவ­சா­யி­கள், கூலித் தொழி­லா­ளர்­கள், கடைக்­கோடி ஏழை எளி­ய­மக்­கள்,  வறுமை நிலை­யில்  விளிம்பு நிலை­யில் உள்ள மக்­கள் என அனைத்து நிலை மக்­க­ளின் கோரிக்­கை­க­ளை­யும் கேட்­ட­றிந்து அவற்­றிற்கு 30 நாட்­க­ ளுக்­குள் தீர்வு காணேம் வகை­யில் மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டத்தை செயல்­ப­டுத்­தி­யுள்­ளார். பல்­வேறு கார­ணங்­க­ளி­னால் நீண்ட நாட்­க­ளாக பட்டா மாறு­தல் செய்ய முடி­யா­மல் இருப்­பது, தனி பட்­டா­வாக மாறா­மல் இருப்­பது, முதி­யோர் உத­வித்­தொகை பெற முடி­யா­மல் இருப்­பது, புதிய தொழில் தொடங்க கட­னு­தவி, மின் இணைப்பு கோரு­தல் உள்­ளிட்ட பல்­வேறு கோரிக்­கை­கள் தொடர்­பாக வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் உள்­ளிட்ட அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு மக்­கள் நேரில் சென்று அலைந்து சிர­மப்­ப­டு ­வதை தவிர்க்­கும் வகை­யில் மாவட்ட நிர்­வா­கமே மக்­க­ளைத் தேடி வந்து குறை­களை கேட்­ட­றிந்து அவற்றை நிவர்த்தி செய்­தி­டும் வகை­யில்  மக்­க­ளு­டன் முதல்­வர் முகாம் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்­காக மாவட்ட ஆட்­சித்­த­லை­வர்  மாவட்ட வரு­வாய் அலு­வ­லர் உள்­ளிட்ட அனைத்து முதல் நிலை அலு­வ­லர்­க­ளும்  முகாம் நடை­பெ­றும் ஊராட்­சி­க­ளில் பொது­மக்­களை தேடி பொது­மக்­க­ளின் குறை­களை கேட்­ட­றிந்து, தீர்வு காண்­ப­தற்­காக வருகை தந்­துள்­ளார்­கள். பொது­மக்­கள் தங்­க­ளது கோரிக்­கை­க­ளுக்­காக அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு சென்று அலைந்து திரிந்த காலம் மாறி தற்­போது அரசு அலு­வ­லர்­களே அனைத்து பகுதி கிரா­மங்­க­ளுக்­கும் சென்று பொது­மக்­க­ளின் கோரிக்­கை­களை தீர்க்க வழி­வகை செய்­யப்­பட்­டுள்­ளது.  கலை­ஞர் மக­ளிர் உரிமை தொகை திட்­டத்­தின் கீழ் பயன்­பெ­றா­த­வர்­க­ளில் தகு­தி­யு­டை­யோரை கண்­ட­றி­யும் வகை­யில்  சிறப்பு முகாம்­கள் விரை­வில் நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொது­மக்­கள் மற்­றும் விவ­சா­யி­கள் அதி­கம் பயன்­பெ­றும் வகை­யில் வேளாண்­மைத்­துறை, ஆதி­தி­ரா­வி­டர் நலத்­துறை, தாட்கோ, தொழி­லா­ளர் நலத்­துறை, சுகா­தா­ரத்­துறை, கூட்­டு­ற­வுத்­துறை உள்­ளிட்ட பல்­வேறு அரசு துறை­க­ளில் சார்­பில் பொது­மக்­க­ளுக்கு பல்­வேறு வகை­யான அரசு நலத்­திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­
கி­றது. இந்­தத் திட்­டங்­க­ளின் கீழ் பயன்­பெற முடி­யா­மல் இருக்­கும் பய­னா­ளி­கள் தங்­க­ளது கோரிக்­கையை மனு­வாக வழங்­கி­னால் முறை­யாக விசா­ரித்து அர­சின் விதி­மு­றை­க­ளுக்கு உட் ­பட்டு நலத்­திட்­டங்­கள் கிடைத்­திட வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள், குடும்­பத்­த­லை­வி­க­ளுக்கு மாதம் ரூ.1000 வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்  திட்­டம்,   புது­மைப் பெண் மற்­றும் தமிழ் புதல்­வன் திட்­டத்­தின் கீழ் அரசு பள்­ளி­யில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்­கல்வி பயி­லும் மாணவ மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.1,000 உள்­ளிட்ட பல்­வேறு சிறப்பு வாய்ந்த திட்­டங் ­களை அறி­வித்து செயல்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். இத்­திட்­டங்­களை மாணவ,மாண­வி­யர் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். பொது­மக்­கள் அனை­வ­ரும் தங்­கள் பகு­திக்கு உட்­பட்ட இடங்­க­ளில் நடை­பெ­றும் மக்­க­ளு­டன் முதல்­வர் திட்ட முகா­மில் கலந்­து­கொண்டு தங்­க­ளது கோரிக்­கை­கள் தொடர்­பாக மனு கொடுத்து இந்த முகா­மினை முறை­யாக பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற அடிப்­ப­டை­யில் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான அரசு இது­போன்ற முகாம்­களை  நடத்தி சிறப்­பாக செயல்­ப­டுத்தி வரு­கி­றது. எனவே பொது­மக்­கள் அனை­வ­ரும் இந்த முகாம்­களை பயன்­ப­டுத்தி பயன்­பெற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று பெரம்­ப­லூர் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட எளம்­ப­லூர், இந்­திரா நகர் ரோவர் மேல்­நி­லைப்­பள்ளி வளா­கத்­தில் நடை­பெற்ற முகா­மில் 463 நபர்­க­ளுக்கு ரூ.3,29,90,551 மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளை­யும், செஞ்­சேரி ஊராட்சி ஒன்­றிய நடு­நி­லைப்­பள்ளி வளா­கத்­தில் நடை­பெற்ற முகா­மில் 331 நபர்­க­ளுக்கு ரூ.3,23,23,779 மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளை­யும், எசனை அரசு மேல்­நி­லைப் ­பள்ளி வளா­கத்­தில் நடை­பெற்ற முகா­மில் 270  நபர்­க­ளுக்கு ரூ.2,65,77,564 மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளும், லாட­பு­ரம் அரசு உயர்­நி­லைப்­பள்ளி வளா­கத்­தில் நடை­பெற்ற முகா­மில் 394 நபர்­க­ளுக்கு ரூ.3,49,41,502 மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளும், டி.களத்­தூர் அரசு உயர்­நி­லைப்­பள்ளி வளா­கத்­தில் நடை­பெற்ற முகா­மில் 439 நபர்­க­ளுக்கு ரூ.3,72,50,566 மதிப்­பி­லான நலத்­திட்ட உத­வி­க­ளும் என மொத்­தம் 1,897 பய­னா­ளி­க­ளுக்கு இல­வச வீட்­டு­ம­னை ப்­பட்டா, மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு இணைப்பு சக்­க­ரம் பொருத்­தப்­பட்ட பெட்­ரோல் ஸ்கூட்­டர், தாலிக்கு தங்­கம், தையல் இயந்­தி­ரம், வெங்­கா­யக் கொட்­டகை அமைக்க ஆணை­கள், வேளாண் இடு­பொ­ருட்­கள் மற்­றும் வேளாண் இயந்­தி­ரங்­கள் என பல்­வேறு திட்­டங்­க­ளின் கீழ் ரூ.16,40,83,962 மதிப்­பி­லான பல்­வேறு அரசு நலத்­திட்ட உத­வி­களை  தொழி­லா­ளர் நலன் மற்­றும் திறன் மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர்  வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வு­க­ளில் அரசு உயரதிகாரிகள், அலு­வ­லர்­கள் மற்­றும் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">செம்­மொழி நாள் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் பிறந்­த­நா­ளை­யொட்டி பொம்­மிடி ஊராட்சி இந்­திரா நகர் திமுக கிளைக்­க­ழ­கம் சார்­பில் நடை­பெற்ற விழா­வில் பாப்­பி­ரெட்­டிப்­பட்டி மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் பி.எஸ்.சர­வ­ணன் கலந்­து­கொண்டு கலை­ஞ­ரின் திரு­வு­ரு­வப் படத்­திற்க்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்தி, பொது­மக்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள், அன்­ன­தா­னம் வழங்­கி­னார். இந்­நி­கழ்ச்­சி­யில் ஒன்­றிய கழக துணை ஜாகி­தா­செ­ரீப், ஒன்­றிய இளை­ஞ­ரணி செய­லா­ளர் சான­வாஷ்,மயில், நியா­மத்,தினேஷ்,செல்­வ­ராஜ், ஹாபிஸ்,சரண்யா,தாரணி, ரஜினி,தயா­ளன் மற்­றும் கழ­கத்­தி­னர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>