<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,468,958,1201" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 07:55:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072025-CHN-02" position.sequence="02" ex-ref="07072025-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="25">‘‘இன்னுயிர் காப்போம்; நம்மைக் காக்கும் 48’’</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">உயிர் காக்கும் மகத்தான திட்டத்தின் 4 லட்சமாவது பயனாளி!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஜூலை.7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று (06.07.2025) ஏ.சி.எஸ் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில், “இன்­னு­யிர் காப்­போம் நம்­மைக்­காக்­கும் 48” திட்­டத்­தில், 4 இலட்­ச­மா­வது பய­னா­ளியை நேரில் சந்­தித்து, நலம் விசா­ரித்து, அவ­ருக்கு வழங்­கப்­ப­டும் சிகிச்சை முறை­கள் குறித்து கேட்­ட­றிந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதில் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">இன்­னு­யிர் காப்­போம் நம்­மைக்­காக்­கும் 48 திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் முத­ல­மைச்­சர் அவர்­கள் 2021 டிசம்­பர் திங்­கள் 18ஆம் தேதி மக்­கள் நல்­வாழ்­வுத்­து­றை­யில் ஒரு புதிய திட்­டத்­தினை தொடங்கி வைத்­தார்­கள். உலக அள­வில் ஒரு புகழ் பெற்ற திட்­ட­மாக இது பயன்­பெற்று வரு­கி­றது. சாலை விபத்­து­க­ளில் சிக்­கு­ப­வர்­களை உட­ன­டி­யாக மீட்டு தமிழ்­நாட்­டில் உள்ள 250 அரசு மருத்­து­வ­ம­னை­கள், 473 தனி­யார் மருத்­து­வ­ம­னை­கள் என்று 723 மருத்­து­வ­ம­னை­க­ளில் உட­ன­டி­யாக சேர்த்து, சேர்க்­கப்­பட்ட முதல் 48 மணி நேரத்­தில் ரூ.1 இலட்­சம் அர­சின் சார்­பில் தந்து அவர்­க­ளு­டைய உயிரை காப்­பாற்­று­வது என்­கின்ற வகை­யி­லான ஒரு மிகச் சிறந்த திட்­டம், இன்­னு­யிர் காப்­போம் நம்­மைக்­காக்­கும் 48 ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் தொடங்­கப்­பட்ட இந்த திட்­டம் என்­பது தமிழ்­நாட்­டில் ஏறத்­தாழ 500க்கும் மேற்­பட்ட அடிக்­கடி விபத்­து­கள் நேர்­கின்ற மருத்­து­வ­ம­னை­க­ளாக தேர்ந்­தெ­டுத்து இந்த திட்­டம் தொடங்­கப்­பட்­டது. இந்த திட்­டத்­தின் படி, விபத்து நேர்ந்­த­வு­டன், 8 நிமி­டங்­க­ளுக்­குள் ஆம்­பு­லன்ஸ் இந்த இடத்­திற்கு சென்­ற­டைந்து, அவ­சர மருத்­துவ தொழில்­நுட்­ப­வி­யர்­க­ளின் உத­வி­யு­டன் காய­முற்­ற­வர்­க­ளின் உயிர்­களை காப்­ப ­தற்­கு­ரிய முத­லு­த­வி­களை செய்து மருத்­துவ உத­வி­களை ஆம்­பு­லன்ஸ் வழங்கி உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னை­க­ளில் சேர்க்­கின்ற இந்த மகத்­தான திட்­டம் தொடங்­கப்­பட்ட நாள் முதல் மக்­க­ளுக்கு மிகப் பெரிய அள­வில் பயன்­பெற்று வரு­கி­றது. இந்த திட்­டத்­தின் இன்­னொரு சிறப்பு, தமிழ்­நாட்டை சேர்ந்­த­வர்­கள் மட்­டு­மின்றி அண்டை மாநி­லங்­களை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும், வெளி­நா­டு­களை சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும், ஏதா­வது ஒரு சாலை­யில் விபத்­து­கள் நேர்ந்­தால், விபத்து நேர்ந்­த­வரை உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து வந்து, முதல் 48 மணி நேரத்­தில் அவர்­க­ளுக்­கு­ரிய முத­லு­த­வி­களை செய்து அர­சின் சார்­பில் ரூ.1 இலட்­சம் உத­வி­யு­டன் அவர்­க­ளது உயிரை காப்­பது. அந்­த­வ­கை­யில் இந்த திட்­டம் ரூ.1 இலட்­சம் நிதி­யு­த­வி­யோடு, இந்த திட்­டம் 3 ஆண்டு காலம் சிறப்­பாக வழங்­கப்­பட்டு வந்­தது, 24.12.2024 முதல் மாண்­பு­மிகு தமிழ்­நாடு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் ரூ.1 இலட்­சம்  என்­பதை ரூ.2 இலட்­ச­மாக உயர்த்தி வழங்க உத்­த­ர­விட்­டார்­கள். அந்த வகை­யில் தற்­போது ரூ.2 இலட்­ச­மாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">4 இலட்­ச­மா­வது பய­னாளி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த அரசு பொறுப்­பேற்­ற­பி­றகு இது­வரை 3,99,999 என்­கின்ற வகை­யில் ஏறத்­தாழ 4 இலட்­ச­மா­வது பய­னாளி ஏசி­எஸ் மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் சேர்க்­கப்­பட்­டி­ருக்­கி ­றார்­கள். அவர் பாரி­வாக்­கத்­தைச் சேர்ந்த 33 வயது மணி­கண்­டன் என்­கின்ற இளை­ஞர். தனி­யர் இரு­சக்­கர வாகன விபத்­தில் சிக்கி கால்­கள் முறிந்த நிலை­யில் இந்த மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றார். அவரை நேரில் சந்­தித்து நலம் விசா­ரித்து, அவ­ருக்­கான மருத்­துவ செலவை இந்த அரசு ஏற்­றுக் கொள்­கி­றது என்­கின்ற செய்­தி­யினை சொல்­லி­யி­ருக்­கி­றோம். மேலும் 4,00,001,    4,00,002,  4,00,003 என்­கின்ற பய­னா­ளி­கள் இந்த மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.  மது­ர­வ­யால் பகு­தி­யைச் சார்ந்த 50 வயது  மதி­ய­ழ­கன், புர­சை­வாக்­கம் பகு­தி­யைச் சார்ந்த 28 வயது சரண்யா, கோலப்­பஞ்­சேரி பகு­தி­யைச் சார்ந்த 33 வயது விஸ்­வ­நா­தன் ஆகி­யோ­ரும் வெவ்­வேறு சாலை விபத்­து­க­ளில் குறிப்­பாக இரு­சக்­கர வாகன விபத்து, ஆட்டோ விபத்து என்று சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். அவர்­கள் 4 பேரை­யும் தனித்­த­னி­யாக சந்­தித்து அவர்­க­ளி­டம் நலம் விசா­ரிக்­க ப்­பட்­டது. இந்த திட்­டத்­தி ன்­படி 101  சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. அந்­த­வ­கை­யில் இந்த திட்­டம் தொடங்கி வைக்­கப்­பட்ட பிறகு 05.07.2025 வரை 3,99,952 பய­ன­டைந்து இருக்­கி­றார்­கள். அதற்­காக இந்த அரசு ஒட்டு மொத்­த­மாக செல­விட்­டி­ருக்­கும் தொகை  ரூ.365.02 கோடி ஆகும். அரசு மருத்­து­வ­ம­னை­க­ளைப் பொறுத்­த­வரை 3,69,785 பய­னா­ளி­கள் ரூ.313.06 கோடி செல­வி­டப்­பட்­டி­ருக்­கி­றது.  தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளைப் பொறுத்­த­வரை 30,167 பய­னா­ளி­கள் ரூ.51.95 கோடி செல­வில் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள். அந்­த­வ­கை­யில் இந்த திட்­டம் மிகச்­சி­றப்­பாக சென்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">காப்­பீட்­டுத் தொகை ரூ.1 இலட்­ச­மாக இருந்­த­போது,  3,26,246 பய­னா­ளி­கள் ரூ.285.13 கோடி செல­வில் பய­ன­டைந்­தார்­கள். தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அதனை ரூ.2 இலட்­ச­மாக உயர்த்­திய பிறகு, 73,706 பய­னா­ளி­கள் ரூ.79.89 கோடி செல­வில் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள். அந்­த­வ­கை­யில் இந்த திட்­டத்­தில் 4 இலட்­ச­மா­வது பய­னா­ளியை இன்று ஏசி­எஸ் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் நேரில் சந்­தித்து நலம் விசா­ரிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தத் திட்­டத்­தின் சிறப்­பு­களை அறிந்த ஒன்­றிய அரசு இதே போன்று ஒரு திட்­ட­மான விபத்து நேர்ந்த 7 நாட்­க­ளுக்­குள் ரூ.1.5 இலட்­சம் உத­வித் தொகை­யாகவழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அதோடு மட்­டு­மல்­லா­மல் இந்த திட்­டத்­தின் சிறப்பு இன்று இந்­தியா முழு­மைக்­கும் ரூ.1.5 இலட்­சம் பெற்று பயன்­பெ­று­வ­தற்கு உறு­து­ணை­யாக இருந்த திட்­டம் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் தொடங்­கப்­பட்ட இன்­னு­யிர் காப்­போம் நம்­மைக்­காக்­கும் 48 எனும் திட்­டம் ஆகும்.  தமிழ்­நாட்­டில் விபத்து நேர்ந்­தி­ருக்­கி­றது என்­பதை உறுதி செய்த பிறகு அவர்­க­ளுக்கு உதவி செய்­கி­றோம்.  ஒன்­றிய அரசு அறி­வித்த திட்­டத்­தி ன்­படி, காவல்­துறை விசா­ரணை முடிந்து பிற­கு­தான் அவர்­க­ளுக்கு உத­வித் தொகை என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது.  தமிழ்­நாட்­டில் எந்­த­வித கட்­டுப்­பா­டும் இல்­லா­மல் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்­வில் மது­ர­வா­யல் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் காரப்­பாக்­கம் கண­பதி, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அரசு முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் ப.செந்­தில்­கு­மார், தமிழ்­நாடு சுகா­தார அமைப்புதிட்ட இயக்­கு­நர் மரு.வினீத், ஏ.சி.எஸ் மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­மனை சிறப்பு அலு­வ­லர் மரு.தன­வேல், முதல்­வர் மரு.சீனி­வா­சா­ராஜ், இணை இயக்­கு­நர் மரு.ரவி­பாபு   மற்­றும் அலு­வ­லர்­கள் உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>