<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,34,958,895" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 07:59:44 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072025-CHN-07" position.sequence="07" ex-ref="07072025-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">07.07.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="45">மனித உரிமை செயற்பாட்டாளர்களைப் பாதுகாக்க</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="81">நாடாளுமன்றத்தில்  தனி  நபர்  மசோதா  கொண்டுவருவேன்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="52">ஸ்டேன்ஸ் சாமி சிலை திறப்பு விழாவில் – கனிமொழி கருணாநிதி எம்.பி. சூளுரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup453516_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup447850_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="kani_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">திருச்சி, ஜூலை 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­களை பாது­காக்க நாடா­ளு­மன்­றத்­தில தனி நபர் மசோ­தாவை கொண்டு வரு­வேன் என்று கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திருச்சி மாவட்­டம், விர­கா­லூ­ரில் 
05–07–2025 சனிக்­கி­ழ­மை­யன்று ஸ்டேன்ஸ் சாமி மக்­கள் கூட்­ட­மைப்பு மற்­றும் விர­கா­லூர் கிராம பொது­மக்­கள் இணைந்து ஏற்­பாடு செய்­யப்­பட்ட பழங்­குடி மக்­க­ளின் தோழ­னாக விளங்­கிய ஸ்டேன்ஸ்­சாமி அவர்­க­ளின் சிலை திறப்பு விழா மற்­றும் சன­நாயக எழுச்சி மாநாட்­டில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்றி, ஸ்டேன்ஸ்­சாமி அவர்­களின் திரு­வு­ரு­வச் சிலையை தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரும், தி.மு.க. நாடா­ளு­மன்­றக் குழுத் தலை­வ­ரு­மான கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. திறந்து வைத்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வி­ழா­வில் அவர் ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“இப்­ப­குதி மக்­கள் கனத்த இத­யத்­தோடு அதே நேரம் பெரு­மை­யோடு ஸ்டேன்ஸ் சாமி சிலையை திறந்து வைத்­தி­ருக்­கி­றார்­கள்.  போராளி என்­றால் உல­கில் அத்­தனை பேருக்­கும் நினை­வில் வரு­வது சேகு­வேரா. அவர் தன்­னு­டைய மண்­ணுக்­காக மட்­டும் போரா­ட­வில்லை.  தன்­னு­டைய மண் விடு­தலை பெற்ற பிறகு வெவ்­வேறு நாடு­க­ளுக்கு சென்று அங்கே அடி­மைப்­பட்­டுக் கிடக்­கக் கூடிய மக்­கள், உரி­மைக்­காக போரா­டக் கூடிய மக்­க­ளுக்­காக போரா­டி­ய­வர்­தான் சேகு­வேரா.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போன்ற ஒரு போரா­ளியை பெற்­றெ­டுத்­தி­ருக்­கக் கூடிய மண் இந்த மண் என்ற பெரு­மை­யோடு இருக்­கும் மக்­கள் நீங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பெருமை மிகு போராளி ஸ்டேன்ஸ் சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய ஸ்டேன்ஸ்­சாமி  அவர்­கள் தமி­ழ­கத்­தைத் தாண்டி, வேறு எங்­கெல்­லாம் தங்­கள் உரி­மை­களை பறி­கொ­டுத்­து­விட்டு வாழ்­வ­தற்கே திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­களோ, தங்­க­ளு­டைய மண்­ணை–­உ­ரி­மையை மீட்­டெ­டுக்க வேண்­டும் என்­றும் போரா­டு­கி­றார்­களோ  அங்­கெல்­லாம் சென்று அந்த மக்­க­ளோடு நின்று போரா­டி­ய­வர்­தான் ஸ்டேன்ஸ் சாமி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட போரா­ளியை பெற்­றெ­டுத்த பெருமை மிகு மண்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜார்க்­கண்­டிலே தன்­னு­டைய மண்ணை பாது­காக்க போரா­டிய  100க்கும் மேற்­பட்ட இளை­ஞர்­கள் ஆண்­டுக் கணக்­கில் சிறை­யில் அடைக்­கப்­பட்டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த இளை­ஞர்­க­ளுக்­காக இளம் பெண்­க­ளுக்­காக நியா­யம் கிடைக்க வேண்­டும் என்று வழக்­குத் தொடுத்­த­வர்­தான் நம்­மு­டைய ஸ்டேன்ஸ் சாமி. அந்த மண்­ணின் மக்­க­ளுக்­காக அவர்­க­ளோடு சேர்ந்து குரல் கொடுத்­த­வர். ஆனால்,  ஒன்­றி­யத்­தில் இருக்­கும் பாசிச பா.ஜ.க. அரசு கார்ப்­ப­ரேட்­டு­க­ளுக்­காக ஆட்சி நடத்­தக் கூடி­ய­வர்­கள்.  மக்­க­ளுக்­கா­ன­வர்­கள் அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால் கார்ப்­ப­ரேட்­டு­க­ளுக்கு எதி­ராக எந்த குரல் எழுப்­பப்­பட்­டா­லும் அந்­தக் குரலை  நசுக்கி எறிய வேண்­டும் என்று நினைக்­கக் கூடி­ய­வர்­கள்.  அதே எண்­ணத்­தோடு காத்து நின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஸ்டேன்ஸ் சாமி ஒரு வீடி­யோ­வில் சொல்­கி­றார், ‘எந்த  பிமா கொரே­கான் வழக்­கில்  அவர் இணைக்­கப்­பட்­டாரோ, அங்கே நடந்த சதிக்கு அவர் பின்­பு­ல­மாக சொல்­லப்­பட்­டாரோ அந்த ஊருக்கு தான் போனதே கிடை­யாது’ என்­கி­றார்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இன்று இந்­தி­யா­வில் பெருமை மிகு வார்த்­தை­யாக  ஆன்ட்டி நேஷ­னல், அர்­பன் நக்­சல் என ஆகி­விட்­டது.  இந்த மேடை­யில் இருக்­கக் கூடிய அனை­வ­ரும்  ஆன்ட்டி நேஷ­னல்­கள், அர்­பன் நக்­சல்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யார் கேள்வி கேட்­டா­லும்,  கேட்­கும் கேள்­வி­கள் அவர்­க­ளுக்­கா­ன­தல்ல, தேசத்­துக்கு எதி­ரா­னது, தேசத்­தின் பாது­காப்­புக்கு எதி­ரா­னது என்ற கட்­ட­மைப்பை அவர்­கள் தொடர்ந்து உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.  அந்த கட்­ட­மைப்­பில் உரு­வாக்­கப்­பட்ட ஒன்­று­தான் பிமே கொரே­கான் வழக்­கில்  சமூக செயற்­பாட்­டா­ளர்­களை கைது செய்து சிறை­யில் அடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பார்க்­கின்­சன் நோயால் பாதிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">84 வயது ஸ்டேன்ஸ் சாமிக்கு.  நாட்­டி­லேயே மிக மூத்த நக்­ச­லைட்  என்­றால் அது ஸ்டேன்ஸ் சாமி­தான். அந்தபெரு­மை­யும் அவ­ருக்­குத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எப்­ப­டிப்­பட்ட மனி­தர் தெரி­யுமா?  பார்க்­கின்­சன் நோயால் தனது கை ஆடிக் கொண்­டி­ருக்­கி­றது.  ஒரு டம்­ள­ரைக் கூட பிடித்து தண்­ணீர் குடிக்க முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட ஒரு மனி­தர் நக்­ச­லைட் என்று  சிறை­யில் அடைக்­கப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மகா­ராஷ்­டி­ரா­வில் இருக்­கும் சிறை­யில் அவர் அடைக்­கப்­ப­டு­கி­றார்.அவ­ரால் தண்­ணீர் கூட குடிக்க முடி­ய­வில்லை. ஹென்றி டிபேன் அவர்­கள் அங்கே சிறை­யில் ஸ்டேன்ஸ் சாமி தண்­ணீர் குடிக்க ஒரு ஸ்ட்ரா கொடுக்க முடி­யுமா என்று எல்­லா­த­ரப்­பி­லும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சிறை அதி­கா­ரி­கள்  தரப்­பில், ஸ்ட்ரா கொடுக்க முடி­யாது என்­றார்­கள். அதற்கு அவர்­கள் சொன்ன கார­ணம் மேலே இருந்து பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள், அத­னால் ஸ்ட்ரா கொடுப்­ப­தற்கு எங்­க­ளுக்கு பய­மாக இருக்­கி­றது  என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு மனி­தன், 84 வய­தைத் தாண்­டிய ஒரு மனி­தன், பார்க்­கின்­சன்  நோயால் பாதிக்­கப்­பட்டு கைகள் நடுங்­கிக் கொண்டு, தண்­ணீர் குடிக்க முடியாத  அவ­ருக்கு… ஸ்ட்ரா கொடுக்க கூடாது, தவித்த வாய்க்கு தண்­ணீர் கொடுக்­கக் கூடாது என்று மேலி­டம் கவ­னித்­துக் கொண்­டி­ருக்­கி­றது என்­றால்,  எப்­ப­டிப்­பட்ட கொடு­மை­யான நிலை­யில் நாம் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றோம் என்­பதை புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்­கும் பிமா கொரே­கான்  வழக்­கில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் 8 பேர்­தான் வெளியே வந்­தி­ருக்­கி­றார்­கள்.  மீதி இருப்­ப­வர்­கள் இன்­னும் சிறை­யில்­தான் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி யார் எதிர்த்­துக் கேள்வி கேட்­டா­லும், அவர்­க­ளுக்கு எதி­ரான   வழக்­கு­கள் போட்டு தேச விரோ­தி­கள் என்று  முத்­திரை குத்­து­வது அல்­லது அவர்­களை கொலை செய்­யக் கூடிய முயற்­சிக்­கும் நிலை நாட்­டில் நில­விக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட நிலை­யில்­தான் மக்­களை  மத ரீதி­யாக பிரிக்­கும் அர­சி­யல், மக்­களை அச்­சு­றுத்­தும் அர­சி­யல், மக்­களை எப்­ப­டி­யெல்­லாம் பிள­வு­ப­டுத்த முடி­யும் என்­பதை நிகழ்த்­திக் காட்­டி­வி­டும் சட்­டங்­க­ளாக இருக்­கட்­டும், மக்­க­ளுக்கு எதி­ரான  திட்­டங்­க­ளாக இருக்­கட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இந்­தி­யி­லும் சமஸ்­கி­ரு­தத்­தி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெயர் வைக்­கப்­ப­டும் நிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­கள் கொண்­டு­வ­ரும் திட்­டங்­கள் எவற்­றுக்­கும் மாநில மொழி­யில் பெயர் வைக்க மாட்­டார்­கள். எந்­தத் திட்­டத்­துக்­கும் ஆங்­கி­லத்­தில் பெயர் வைக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நானே ஒரு   கமிட்­டி­யின் தலை­வ­ராக இருக்­கி­றேன்.  அது என்ன திட்­டம் என்று கேட்டு புரிந்து மீட்­டிங் நடத்­து­வ­தற்­குள் நமக்கே தலை சுற்­றி­வி­டும்.  கார­ணம் அந்த பெய­ரின் அர்த்­தம் நமக்கு தெரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டத்­துக்­கெல்­லாம் இந்­தி­யி­லும் சமஸ்­கி­ரு­தத்­தி­லும் பெயர் மாற்­றி­னார்­கள். நான் வழக்­க­றி­ஞர்­க­ளி­டம் கேட்­டேன், அந்த பில்­லில் என்ன மாற்­றம் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள் என்று கேட்­டேன்.  முத­லில் அது என்ன பில் என்று புரி­யட்­டும் என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி மொழி ஆதிக்­கத்­தால்  தொடர்ந்து நம்­மு­டைய உரி­மை­களை பறிப்­பது, ஒவ்­வொரு மசோ­தா­வி­லும் மாநில உரி­மை­களை பறிக்­கக் கூடிய ஒரு ஆட்­சி­தான் ஒன்­றிய பா.ஜ.க. ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில உரி­மை­களை பறிக்­கக் கூடிய அதே­நே­ரம் சாமா­னிய மக்­க­ளின் உரி­மை­களை, சாமா­னிய மக்­க­ளுக்­காக போரா­டக் கூடி­ய­வர்­க­ளின் உரி­மை­களை பறிக்­கும் ஆட்­சி­தான் அங்கே நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னு­டைய உணவு என்று முடிவு செய்­யக் கூடிய உரிமை எனக்கு கிடை­யாது… என்­னு­டைய உடை எது  என முடிவு செய்­யக் கூடிய உரிமை எனக்­குக் கிடை­யாது. என் மதம் எது என முடிவு செய்­யக் கூடிய உரிமை எனக்­குக் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்­னு­டைய வாழ்­வி­டம் எது என்று ஒரு கார்ப்­ப­ரேட் கம்­பெ­னி­தான் முடிவு செய்­யக் கூடிய ஒரு நிலையை இந்த நாட்­டில் அவர்­கள் உரு­வாக்கி வைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை எதிர்த்­து­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அந்த போராட்­டத்தை நாம் வலுப்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இன்­னொரு விடு­த­லைப் போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்று இங்கே சிலை­யாக இருக்­கக் கூடிய ஸ்டேன்ஸ் சாமி­யாகஇருக்­கட்­டும்…. நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தொடர்ந்து கையி­லெ­டுக்­கக் கூடிய போராட்­டங்­க­ளாக இருக்­கட்­டும். இங்கே இருக்­கும்  சமூக ஆர்­வ­லர்­கள், எதிர்க்­கட்­சித் தலை­வர்­கள் அத்­தனை பேரும் இந்த நாட்­டின் இன்­னொரு விடு­த­லைப் போராட்­ட­மா­கத்­தான், இந்த போராட்­டத்தைகையிலே எடுத்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை  நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­த­லுக்­கான மாற்­றத்தை நான் முன் வைக்­க­வில்லை, தேர்­த­லைத் தாண்டி  தலை­மு­றைக்­கான விடு­த­லைப் போராட்­டத்தை நாம் முன்­னெ­டுக்க வேண்­டும். இதைத்­தான் நாம் புரிந்­து­ கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய பிள்­ளை­க­ளுக்கு  நாம் 
விட்­டுச் செல்­லக் கூடி­ய­தும் நம்­மு­டைய வீடோ, நிலமோ இல்லை.  அவர்­க­ளுக்­கான உரி­மை­க­ளை­யும் விடு­த­லை­யை­யும் நாம் விட்­டுச் செல்ல வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விடு­த­லையை விட , உரி­மையை விட, சுய­மரி­யா­தையை விட வேறு எது­வும் உயர்ந்­தது இல்லை என்­பதைநாம் புரிந்­து­கொள்ள வேண்டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வீட்டை விட்­டுட்­டுப் போக­லாம்…  அடி­மை­யாக இருந்­தால் எந்த பிள்­ளை­யும் அந்த வீட்­டில் நிம்­மதி­யாக வாழ முடி­யாது.  உரி­மை­கள் இல்­லா­மல் யாரும் நிம்­ம­தி­யாக சுய­ம­ரி­யா­தை­யோடு வாழ முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அடி­தட்டு மக்­க­ளின் குரலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கேட்கும் சட்­டங்­கள் தேவை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய உரி­மை­க­ளுக்­காக,  நம் எதிர்­கா­லத் தலை­மு­றை­யி­ன­ரின் சுய­ம­ரி­யா­தைக்­காக நாம் பாடு­ப­ட­வேண்­டும். இந்த சமூ­கத்­திலே சமூக நீதியை  அடித்­தட்­டிலே இருக்­கும் மக்­க­ளின் குரலை  கேட்­கக் கூடிய சட்­டங்­களை  கொண்­டு­வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே சமூக செயற்­பாட்­டா­ளர்­களை பாது­காக்­கும், மனித உரிமை செயல்­பாட்­டா­ளர்­களை பாது­காக்­கும்   சட்­டங்­கள் இயற்­றப்­பட வேண்­டும் என்று ஒரு தீர்­மா­னம் முன் வைக்­கப்­பட்­டது. இந்த கோரிக்­கை­களை முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் பார்த்­தி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­நே­ரம் அண்­ணன் திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளும் இதை ஏற்­றுக் கொள்­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பிரை­வேட் மெம்­பர் பில் எனப்­ப­டும் தனி நபர் மசோ­தா­வாக இதை நாடா­ளு­மன்­றத்­திலே கொண்­டு ­வ­ரு­வ­தற்கு நான் தயா­ராக இருக்­கி­றேன் என்ற உறு­தியை நான் உங்­க­ளுக்­குத் தரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏனென்­றால் மக்­க­ளுக்­காக குரல் கொடுக்­கக் கூடி­ய­வர்­கள்பாது­காக்­கப்­பட வேண்­டும்.  அது­தான் திரா­விட இயக்க, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் அடி­நா­த­மாக இருக்­கி­றது.  நமது முத­ல­மைச்­ச­ரின் திரா­விட மாடல் ஆட்சி  எல்­லா­ருக்­கு­மான ஆட்சி, எல்­லா­ருக்­கு­மான உரி­மை­கள் இருக்­கக் கூடிய ஆட்சி, எல்­லா­ரு­டைய எதிர்­கா­லத்­தை­யும் உரு­வாக்­கும் ஆட்சி என்­ப­தைத்­தான்  மறு­ப­டி­யும்  மறு­ப­டி­யும் முத­ல­மைச்­சர்  சொல்லி வரு­கி­றார். இப்­ப­டிப்­பட்ட  எல்­லா­ருக்­கு­மான திட்­டம், சட்­டம் கனவு., இதை நிறை­வேற்­றிக் காட்­டு­வோம்”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. 
பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உடன், பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­ச­ரும், மாவட்­டச் செய­லா­ள­ரு­மான அன்­பில் மகேஷ் பொய்­யா­மொழி, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி செய­லா­ளர் சண்­மு­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் செய­லா­ளர் முத்­த­ர­சன், விடு­தலைச் சிறுத்­தை­கள் 
கட்­சித் தலை­வ­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தொல்.திரு­மா­வ­ள­வன், திருச்சி மத்­திய மாவட்ட தி.மு.க. செய­லா­ளர் வைர­மணி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்றஉறுப்­பி­னர்­கள் சௌந்­தி­ர­பாண்­டி­யன், இனிகோ இரு­த­ய­ராஜ், காங்­கி­ரஸ் கமிட்டி பேச்­சா­ளர் வேலுச்­சாமி, திரா­விட விடு­த­லைக் கழ­கத் தலை­வர் கொளத்­தூர் மணி மற்­றும் பலர் கலந்­து­ கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>