<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 08:01:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072025-CHN-13" position.sequence="13" ex-ref="07072025-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup469622_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup469427_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup469621_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="kalaingar3_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">‘ந</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ம் நாடு’ இத­ழில் சில கடி­தங்­களை எழு­தி­யி­ருக்­கி­றார். பிறகு தொடர்ச்­சி­யாக ‘முர­சொ­லி’­யில் எழு­தி­யி­ருக்­கி­றார். 22.10.1968 முதல் 28.1.1969 வரை­யி­லான கடி­தங்­க­ளில் ‘அன்­புள்ள மற­வன்’ என்­றும், 1.1.1971 முதல் 10.7.1972 வரை­யி­லான கடி­தங்­க­ளில், ‘மு. கரு­ணா­நிதி’ என்­றும், பிறகு 17.7.1972 முதல் 2016 வரை­யி­லான கடி­தங்­க­ளில் ‘அன்­புள்ள மு.க.’ என்­றும் எழு­தி­யி­ருக்­கி­றார். கடி­தத்­தின் இறு­தி­யில் ‘மற­வன்’, ‘மு.க. கரு­ணா­நிதி’, ‘அன்­புள்ள மு.க.’ என்று எழு­தி­ய­து­போல, கடி­தத்­தின் தொடக்­கத்­தில், ‘அன்பு நண்பா’, ‘ஆரு­யிர்த் தோழா’, ‘இந்­நாட்டு மன்­னர்­க­ளுக்கு’, ‘அன்­பின் ஊற்றே’ என்­றெல்­லாம் எழு­தி­யி­ருக்­கி­றார். 1971க்குப் பிற­கு­தான் ‘உடன்­பி­றப்பே’ என்று எழுத ஆரம்­பித்­தி­ருக்­கி­றார். அவ­ரு­டைய ஆரம்­ப­கா­லக் கடி­தங்­கள் ‘மற­வன் மடல்’ என்ற பெய­ரில் வெளி­வந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இலக்­கிய வகை­மை­க­ளில் ஒன்று ‘கடித இலக்­கி­யம்’. உல­கம் முழு­வ­தும் எழுத்­தா­ளர்­கள், கலை­ஞர்­கள், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், முக்­கிய பிர­மு­கர்­கள் என்று பலர் கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். அவை படிக்­கப்­பட்டு கொண்­டா­டப்­பட்­டி­ருக்­கின்­றன. தமிழ்­நாட்­டில் பல பேர் கடி­தங்­கள் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். அதில் அறிஞர் அண்ணா,  ‘திரா­விட நாடு’, ‘காஞ்சி’ இத­ழில் 1952இல் ‘தம்­பி’க்கு எழு­திய கடி­தங்­க­ளும், கலை­ஞர் ‘உடன்­பி­றப்பே’ என்ற பெய­ரில் முர­சொ­லி­யில் எழு­திய கடி­தங்­க­ளும் பெற்ற வர­வேற்பை, மதிப்­பைப் பிற கடித இலக்­கிய நூல்­கள் பெற­வில்லை. அண்­ணா­வை­யும் கலை­ஞ­ரை­யும் தவிர்த்து மற்­ற­வர்­கள் எழு­திய கடி­தங்­கள் எல்­லாம் தனி­ம­னி­தர்­க­ளுக்­கி­டை­யில் நிகழ்ந்த அன்பு, உறவு, காதல், அறி­வுரை குறித்து எழு­தப்­பட்­டவை. ஆனால், அறிஞர் அண்­ணா­வும், கலை­ஞ­ரும் எழு­திய கடி­தங்­கள் முற்­றி­லும் வேறு­பட்­டவை. தன்­னு­டைய கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு அர­சி­யல் அறிவை, சமூக அறிவை, மொழி, இனப் பற்றை இலக்­கிய அறிவை உண்­டாக்­கு­வ­தற்­காக எழு­தப்­பட்­டவை. தனி­ம­னித அன்பை, துய­ரைச் சொல்­வ­தற்­காக எழு­தப்­பட்­ட­வை­யல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“உடன்­பி­றப்­பு­க­ளான கழ­கத்­தி­ன­ருக்­குக் கூற­வேண்­டி­ய­வற்­றை­யும் அவர்­களை முன்­வைத்து நாட்­டுக்கு, சமு­தா­யத்­துக்­குச் சொல்­ல­வேண்­டி­ய­வற்­றை­யும் ஒரு பாச உணர்­வு­டன் வெளி­யிட இந்­தக் கடி­தம் எழு­தும்­முறை எனக்கு மெத்­த­வும் பயன்­பட்­டி­ருக்­கி­றது” என்று கலை­ஞர் முன்­னு­ரை­யில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கட்­சி­யை­யும், கட்­சிக்­கா­ரர்­க­ளை­யும், தன்­னை­யும் இணைத்­துக்­கொள்­வ­தற்­கான ஒரு இணைப்பு பால­மா­கத்­தான் அவர் கடி­தங்­களை எழு­தி­யி­ருக்­கி­றார். சமூக நடப்­பு­களை, அர­சி­யல் நிகழ்­வு­களை, தன்­னு­டைய கட்­சி­யின் கடை­சித் தொண்­ட­னும் அறிய வேண்­டும், அர­சி­யல் அறி­வைப் பெற வேண்­டும் என்­ப­தற்­காக எழு­தி­யி­ருக்­கி­றார். ஒரு விதத்­தில், சமூ­கப் பாடத்தை, அர­சி­யல், இலக்­கி­யப் பாடத்தை நடத்­தி­யி­ருக்­கி­றார். பொது­வாக கலை­ஞ­ரு­டைய கடி­தங்­கள், சிறை நிரப்­பும் போராட்­டம், உண்ணா விரத போராட்­டம், சட்ட நகல் எரிப்­புப் போராட்­டம், சாலை மறி­யல், ரயில் மறி­யல் போன்ற போராட்­டத்­திற்­கான அறி­விப்­பா­க­வும், கொள்கை விளக்க பொதுக்­கூட்­டங்­களை நடத்­துங்­கள் என்ற அறி­விப்­பா­க­வும், மாநாட்­டிற்­கான அழைப்­பா­க­வும் இருக்­கும். இல்­லை­யென்­றால் எதிர்க் கட்­சி­கள் செய்­கிற, மாநில ஒன்­றிய அர­சு­கள் செய்­கிற மக்­கள் விரோத, சட்ட, சமூக விரோத செயல்­களை விளக்­கு­கின்ற வகை­யில், கண்­டிக்­கின்ற வகை­யில், “ஏ தாழ்ந்த தமி­ழ­கமே” என்று விளித்து எழு­தி­யி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சமூக நடப்­பு­க­ளை­யும் அர­சி­யல் நிகழ்­வு­க­ளை­யும் அப்­ப­டியே தக­வல்­க­ளா­கச் சொன்­னால், தன்­னு­டைய கடி­தத்­தைப் படிக்­கா­மல் போய்­வி­ட­லாம் என்று, தான் சொல்­ல­வ­ரும் விஷ­யங்­களை வெறும் புள்­ளி­வி­வ­ரங்­க­ளா­கத் தரா­மல், தான் தரு­கின்ற செய்­தி­க­ளுக்­குப் பொருத்­த­மான கதை­க­ளை­யும் கவி­தை­க­ளை­யும் சேர்த்து ஒப்­பிட்டு எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தன்­னு­டைய கடி­தங்­க­ளில் புற­நா­னூற்­றி­லி­ருந்து 15 பாடல்­க­ளை­யும், குறுந்­தொ­கை­யி­லி­ருந்து 7, கலித்­தொ­கை­யி­லி­ருந்து 4, நற்­றிணை 2, அக­நா­னூறு 1, ஐங்­கு­று­நூறு 1,  பட்­டி­னப்­பா­லை­யி­லி­ருந்து 1 பாடல் என்று பயன்­ப­டுத்தி எழு­தி­யி­ருக்­கி­றார். சங்க இலக்­கி­யத்­தில் மட்­டும் அர­சி­யல் நோக்­கில் 18 பாடல்­க­ளை­யும் இலக்­கிய நோக்­கில் 12 பாடல்­க­ளை­யும் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். அவர் தன்­னு­டைய கடி­தங்­க­ளில் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கிற கதை, கவிதை, மேற்­கோள்­களை மட்­டும் தனி­யா­கத் தொகுத்­தால் ஆயி­ரம் பக்­கங்­க­ளைக் கொண்ட ஒரு நூலாக வரும். அந்த அள­வுக்கு அவர் இலக்­கிய மேற்­கோள்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். தன்­னு­டைய கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு அவர் அர­சி­யல் அறிவை மட்­டும் சொல்­லித் தர­வில்லை, இலக்­கி­யத்­தை­யும் சொல்­லித் தந்­தி­ருக்­கி­றார். இத­னால்­தான் கலை­ஞ­ரின் 
கடி­தங்­கள் மதிப்பு வாய்ந்­த­வை­யா­க­வும், பிற எழுத்­தா­ளர்­க­ளின் கடித இலக்­கிய
நூல்­க­ளைக் காட்­டி­லும் மேம்­பட்­ட­வை­யா­க­வும் இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் தன்­னு­டைய கடி­தங்­களை எளிய தமி­ழில் கேள்வி கேட்டு பதில் சொல்­கிற முறை­யில் எழு­தி­யி­ருக்­கி­றார். கவிதை வடி­வி­லும் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1968இல் மாந­க­ராட்சித் தேர்­த­லில் 96 இடங்­க­ளில் போட்­டி­யிட்டு 54 இடங்­க­ளில் மட்­டுமே தி.மு.க. வெற்­றி பெற்­றது. 42 இடங்­க­ளில் தோற்­ற­தற்­கா­கக் கட்­சிக்­கா­ரர்­கள் மீது கோபப்­ப­டா­மல் 31.10.1968இல் எழு­திய கடி­தம் இது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“நாம் முய­லைப் போல கொஞ்­சம் தூங்­கி­விட்­டோம். நல்ல வேளை, ஆமை நம்­மைத் தாண்­டிப்­போ­வ­தற்­குள் விழித்­து­விட்­டோம். முயலே! முன்­பு­போல சுறு­சு­றுப்­பாக இரு. துடிப்­போடு செய­லாற்று.” கட்­சிக்­கா­ரர்­களை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்கு இதை­வி­டச் சிறந்த வாக்­கி­யங்­கள் இருக்க முடி­யாது. நய­மாக எடுத்­துச் சொல்­வது அதை உரை­நடை கவிதை வடி­வில் சொல்­வது என்­பது அவ­ரு­டைய எழுத்­தின் பெரு­மை­க­ளில் ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கலை­ஞ­ரு­டைய கடி­தங்­க­ளைப் படிப்­ப­தற்­கா­கக் காத்­தி­ருந்­தோம், அதைப் படித்­துத்­தான் தமிழ்   பயின்­றோம்’ என்று பலர் சொல்­வ­தைக் கேட்­கும்­போது இன்­றைக்கு இருப்­ப­வர்­க­ளுக்கு அது மிகைக் கூற்­றாக இருக்­க­லாம். ‘மிகை’ என்று சொல்­கி­ற­வர்­கள் அவ­ரு­டைய கடி­தங்­க­ளைப் படித்­துப் பார்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘ஜமீன்­தார், ஜாகிந்­தார் நம்­மி­ட­மில்லை. மிட்­டா­மி­ரா­சு­கள் நம்­மி­ட­மில்லை. ஆலை அர­சர்­கள், பண­மு­த­லை­கள் நம்­மி­ட­மில்லை‘ என்று காங்­கி­ரஸ்­கா­ரர்­கள் அறிக்கை விட்­ட­தற்கு கலை­ஞர் 31.10.1968இல் தன்­னு­டைய கடி­தத்­தில் இப்­ப­டித்­தான் பதில் சொல்­லி­யி­ருந்­தார்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">‘தவ­ளை­கள் எல்­லாம் ஒரு மாநாடு போட்டு எங்­க­ளி­டத்­திலே மழைக்­கா­லத்­தில் கத்­து­வோர் யாரு­மில்லை என்று பேசி­னால் எப்­படி இருக்­கும்? பெருச்­சா­ளிகள் எல்­லாம் ஒன்­று­கூடி,  நாங்­கள் பிறர் பொருள்­க­ளைச் சுரண்டி வாழ்ந்­ததே கிடை­யாது என்று பெருமை பேசி­னால் எப்­படி இருக்­கும். வேங்கை வேதாந்­தம் பேசிக் கேட்­டி­ருக்­கி­றாயா? கேட்­டி­ருக்க மாட்­டாய். ஆனால் இதோ அர­சி­ய­லில் அந்த அற்­பு­தம் நிகழ்ந்­தி­ ருக்­கி­றது. கனிவு என்ற தலைப்­பில் கர­டி­யார் பேசு­கி­றார். காட்­டில் காண முடி­யாத விளம்­ப­ரத்தை நாட்­டில் காண்கி­றோம்.’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை­விட மேம்­பட்ட பதிலோ, விளக்­கமோ, பக­டியோ இருக்க முடி­யுமா? இதை­வி­டக் கேவ­ல­மாக காங்­கி­ரஸ்­கா­ரர்­களை மட்­டம்­தட்டி எழு­த­வும் முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் எழு­திய கடி­தங்­கள், ஏன் மற்­ற­வர்­கள் எழு­திய கடி­தங்­க­ளி­லி­ருந்து வேறு­பட்­டி­ருக்­கின்­றன, இலக்­கி­யத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றன, இன்­றும் படிக்­கப்­ப­டு­கின்­றன என்­ப­தற்கு  இந்­தக் கடி­தம் ஒன்றே போதும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தாய் காவி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இலக்­கிய வடி­வங்­க­ளில் என்­னென்ன வித­மான முயற்­சி­களை மேற்­கொள்ள முடி­யுமோ அத்­தனை வித­மான முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்­ட­வர்.  சங்­கத் த­மிழ், தொல்­காப்­பி­யப் பூங்கா, தாய் காவி­யம் எழு­தி­யது அவர் தன்­னு­டைய எழுத்து வாழ்க்­கை­யில் மேற்­கொண்ட புதிய முயற்­சி­க­ளா­கும். ஒரு புத்­த­கத்தை மொழி­யாக்­கம் செய்­வ­தும், தழு­வ­லாக எழு­து­வ­தும் ஓர­ள­வுக்­குச் சுல­ப­மான காரி­யம்­தான். ஆனால், ஒரு புத்­த­கத்தை அப்­ப­டியே உரை­நடைக் கவிதை வடி­வில் மாற்றி எழு­து­வது என்­பது சவா­லா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மார்க்­சிய இலக்­கி­யத்­திற்கு எடுத்­துக்­காட்­டாக உல­கெங்­கும் பேசப்­ப­டு­கின்ற, கொண்­டா­டப்­ப­டு­கின்ற மாக்­சிம் கார்க்கி எழு­திய (1904–-1907) தாய் நாவலை 2004இல் உரை­நடைக் கவிதை வடி­வில் மாற்றி, ‘தாய் காவி­யம்’ என்ற பெய­ரில் எழு­தி­யி­ருக்­கி­றார். இந்த நூல் வெளி­யீட்டு விழா­வில் “என்ன அழ­கான தமிழ், சர­ள­மான நடைக்­கா­கவே கலை­ஞ­ரைப் பாராட்­டு­கி­றேன்” என்று ஜெய­காந்­தன் பேசி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் தன்­னு­டைய வாழ்­நா­ளில் எத்­த­னையோ புத்­த­கங்­க­ளைப் படித்­தி­ருப்­பார். அவற்­றில் அவ­ருக்கு ‘தாய் நாவல்’ முக்­கி­ய­மா­னது என்று தோன்­று­வ­தற்­கும், அதை உரை­நடைக் கவிதை வடி­வில் மாற்றி எழுத வேண்­டும் என்று தோன்­று­வ­தற்­கும் எது கார­ண­மாக இருந்­தி­ருக்­கும் என்ற கேள்­விக்கு “நான் சிறை செல்ல நேரிட்­ட­போ­தெல்­லாம் மற­வா­மல் ‘தாய் நாவலை’ எடுத்­துச் செல்­வேன்” என்று அவரே குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார். சங்­கப் பாடல்­க­ளைப் போல, திருக்­கு­ற­ளைப் போல, சிலப்­ப­தி­கா­ரத்­தைப் போல கலை­ஞ­ருக்கு மிக­வும் பிடித்­த­மான புத்­த­கங்­க­ளில் ஒன்­றாக ‘தாய் நாவ’­லும் இருந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“என் நெஞ்­சில் எப்­போ­தும் மணம் வீசும் பூ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாக்­சிம் கார்க்­கி­யாய் மனி­த­நேய மாண்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மன்­ப­தைக்­குத் தந்­திட்ட சிகப்பூ -  செம்பூ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்னை என்­றும் ‘தாய்’ என்­றும்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அழைக்­கப்­ப­டும் அற்­பு­தப் பூ” 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று தொடக்­கத்­தி­லேயே பாவெ­லின் தாய் நிலோவ்­னாவை அறி­மு­கம் செய்­கி­றார். ‘சிகப்பூ’ என்று கலை­ஞர் குறிப்­பி­டு­வது. மார்க்­சி­ய­வா­தி­கள் முன்­னி­றுத்­து­கிற செங்­கொ­டி­யைத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாய் நாவல் ரஷ்ய, கலாச்­சா­ரப் பண்­பாட்­டுப் பின்­ன­ணி­யில் எழு­தப்­பட்­டது. அதை மொழி­பெ­யர்த்­தால் எளி­தாக எழு­தி­வி­ட­லாம். ஆனால் மறு­உ­ரு­வாக்­க­மாக உரை­நடை கவி­தை­யில் எழு­தும்­போது ரஷ்யா தேசத்­தின் வாழ்க்­கையை, கலாச்­சார பண்­பாட்­டுக் கூறு­களை எழு­தும்­போது அதை தமிழ் வாச­கர்­கள் புரிந்­து­ கொள்­ளும்­படி அணுக்­க­மாக எழுத வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தமிழ் சார்ந்த பல மேற்­கோள்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­
யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஈன்ற பொழு­தி­னும் பெரி­து­வக்­கும்­தன் மகனை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சான்­றோன் எனக் கேட்ட தாய்”என்ற திருக்­கு­ற­ளை­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“காண்­ப­தெல்­லாம் தொழி­லாளி செய்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவன் காணத் தகுந்­தது வறு­மை­யும் பூணத்­த­குந்­தது பொறு­மை­யுமா”என்ற பார­தி­யின் கவிதை வரி­க­ளை­யும், பார­தி­தா­ச­னின் புகழ்­பெற்ற கவி­தை­யான,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“சித்­தி­ரச் சோலை­களே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உமை­நன்கு திருத்த இந்­தப் பாரி­னிலே – முன்னர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எத்­தனை தோழர்­கள் ரத்­தம் சொரிந்­த­னரோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­கள் வேரி­னிலே”என்ற கவிதை வரி­க­ளை­யும் மிக­வும் பொருத்­த­மான இடத்­தில் சேர்த்­தி­ருக்­கி­றார். இப்­ப­டி­யான மேற்­கொள்­கள் தமிழ் வாச­கர்­கள் பிர­தி­யி­னின்று வில­கிப் போய்­வி­டக் கூடாது என்ற எண்­ணத்­தில்­தான் பயன்­ப­டுத்தி இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிலோவ்­னா­வைப் பற்றி எழு­தும்­போது ஔவை­யோடு ஒப்­பீடு செய்­தி­ருப்­பது முக்­கி­ய­மா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“முது­கிலே ஒரு சிறிய மூட்­டை­யும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கையிலே ஒரு தடிக்­கம்­பு­டன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே சங்­க­கால ஔவை­யைப் போல”
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாய் காவி­யத்­தில் கலை­ஞர் ஔவையை மட்­டும் நிலோவ்­னா­வு­டன் ஒப்­பிட்டு எழு­த­வில்லை, கண்­ண­கி­யோ­டும் ஒப்­பிட்­டி­ருக்­கி­றார். “ஆவி குடி­போன வடி­வு­கொண்டு, அரண்­மனை வாயி­லுக்கு வந்­தாள்” என கண்­ண­கி­யைப் பற்றி தமிழ்க் காவி­யம் கூறுமே அது­போ­லத்­தான் உயி­ரற்ற உடல் ஒன்று நடப்­ப­து­போல அன்னை நிலோவ்னா” என்று எழு­தி­யி­ருக்­கி­றார். நீதி கேட்டு அரண்­ம­னைக்­குச் சென்ற கண்­ண­கி­யும் ஜார் மன்­ன­னுக்கு எதி­ரா­கப் போரா­டிய நிலோவ்­னா­வும் பெண். இரு­வ­ரும் நீதிக்­கா­கப் போரா­டு­கின்­ற­னர் என்­பதை ஒரு வரி­யில் இணைத்­து­வி­டு­கி­றார். மக­னுக்­காக ஏங்­கும் ஒரு தாயின் மனம் எப்­படி இருக்­கும் என்­பதை “பாவெல் நினைப்பே - அவள் பசிக்கு உணவு” என்று எழு­தி­யி­ருக்­கி­றார். நினைவு எப்­படி உண­வா­கும்? ஆகும் என்­று­தான் கலை­ஞர் சொல்­கி­றார். ஒரு­வ­ரைப் பற்­றிய நினைவே உண­வா­வ­தும், வாழ்­வதும், சாவா­வ­தும் சாத்­தி­யம்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வீட்­டுக்­குச் செல்­கின்ற தொழி­லா­ளர்­கள், வீட்­டி­லி­ருந்து தொழிற்­சா­லைக்­குச் செல்­கிற தொழி­லா­ளர்­கள் இரு தரப்­பி­ன­ரின் மன­நி­லை­யை­யும் மிக­வும் அழ­காக‘கரையை விரும்­பும் அலை போலும், கட­லுக்­குத் திரும்­பும் அலை போலும்’என்று எழு­தி­யி­ருக்­கி­றார். உவ­மை­யைக் கையாள்­வ­தில் கைதேர்ந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“குருதி வெள்­ளத்­தில் எங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிதக்க விட்­டா­லும், எங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொள்­கையை குலைக்க முடி­யாது” 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்று நிலோவ்னா ஓர் இடத்­தில் சொல்­வ­தாக எழு­தி­யி­ருக்­கி­றார். அதே மாதிரி பாவெல் ஓர் இடத்­தில் தன் தாயி­டம் கூறு­வ­து­போல எழு­தி­யி­ருக்­கி­றார்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஆம் அம்மா…</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த வேள்­வித் தீயில் நான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெந்து கரு­கிப் போக­லாம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீ பர­வா­மல் தடுப்­ப­தும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீயோரை ஒழிப்­ப­தும்­தான் என் குறிக்­கோள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீரச் செயல் புரி­வ­தல்ல என் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீமை­கள் தெய்­வத்­தின் பெய­ரால் வந்­தா­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தீர்த்­துக்­கட்­டு­வதே என் கொள்கை.”
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது பாவெ­லின் கொள்கை மட்­டு­மல்ல கலை­ஞ­ரின் கொள்­கை­யும்­தான். கலை­ஞர் தாய் காவி­யத்­தில் 
சின்­னச் சின்ன விஷ­யங்­க­ளைக்­கூட விட்­டுப்­போ­கா­மல் கவ­னத்­து­டன் எழு­தி­யி­ருக்­கி­றார் என்­பதை தேர்ந்த வாச­கர்­கள் அறி­வார்­கள்.  ‘தாய் காவி­யம்’ கலை­ஞ­ரின் பெரும் முயற்­சி­க­ளில் ஒன்று. காலம் கடந்­தும் பேசப்­ப­டும் படைப்பு. தன்­னு­டைய பாணி­யில் தாய் காவி­யத்­தைத் தமிழ் வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்து படிக்க  வைத்­தி­ருக்­கி­றார். இது­வும் முக்­கி­ய­மான சமூ­கப் பணி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">மொழி வளம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் இன்று இல்லை. ஆனால் பேசப்­ப­டு­கி­றார். அதற்­குக் கார­ணம் அவர் எழு­திய அடுக்கு மொழி வச­னங்­க­ளும் வாக்­கி­யங்­க­ளும்­தான். அண்­ணா­வுக்­குப் பிறகு அடுக்கு மொழி­யில் வச­னங்­கள், வாக்­கி­யங்­கள் எழுதி புகழ்­பெற்ற ஒரே மனி­தர் கலை­ஞர் மட்­டும்­தான்.  அவ­ரு­டைய வள­மான அடுக்கு மொழி வச­னங்­க­ளை­யும் வாக்­கி­யங்­க­ளை­யும் கொண்­டா­டி­ய­வர்­கள் உண்டு.   ‘மொழி விளை­யாட்டு’ என்று கேலி செய்­த­வர்­க­ளும் உண்டு.  ஏற்­றா­லும் நிரா­க­ரித்­தா­லும் அவ­ரு­டைய அடுக்கு மொழி வச­னங்­க­ளும் வாக்­கி­யங்­க­ளும் இன்­றும் பேசு­பொ­ரு­ளாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரு­டைய சிறு­க­தை­க­ளில், நாவல்­க­ளில் எழு­தப்­பட்­டி­ருக்­கும் ‘தாம­ரை­யெ­னும் முக­மு­டைய மங்­கை­யர்­கள்’, ‘அவ­னது தோள்­கள் குன்றை வெல்­லும் தோற்­ற­மு­டை­யவை’ என்­பன போன்ற வாக்­கி­யங்­க­ளைக் குறை­கூ­று­ப­வர்­க­ளும் உண்டு.  மிகை­யென்று சொல்­ப­வர்­க­ளும் உண்டு. குறிப்­பாக நவீன எழுத்­தா­ளர்­கள், இலக்­கி­ய­வா­தி­கள் கலை­ஞ­ரு­டைய எழுத்­து­கள்  ‘இப்­படி’, ‘அப்­படி’ என்று சொல்­வார்­கள். கலை­ஞர் சிறு­க­தை­கள், நாவல்­கள் எழு­திய காலத்­தைக் கருத்­தில் கொண்­டால் விவ­ரம் புரி­யும். கலை­ஞர் தன்­னு­டைய எழுத்­து­க­ளில் சமஸ்­கி­ரு­தத்­தைக் கலந்து எழு­து­வதை முற்­றி­லு­மா­கத் தவிர்த்­த­வர்.  தன்­னு­டைய உரை­ந­டை­யால் மொழி­யில் பெரிய மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வர். அடுக்கு மொழி வச­னம், அடுக்கு மொழி வாக்­கி­யங்­கள் என்­ப­தைக் கடந்து அவ­ரு­டைய உரை­நடைத் தமிழ் குறித்து இன்­றைய தலை­மு­றை­யி­னர் பேச வேண்­டும், சிந்­திக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரும் பிற திரா­விட இயக்க எழுத்­தா­ளர்­க­ளும் எழு­து­வ­தற்கு முன் தமிழ் உரை­நடை இலக்­கி­யம் எப்­படி இருந்­தது, மொழி எப்­படி இருந்­தது? கலை­ஞ­ரும் பிற திரா­விட இயக்க எழுத்­தா­ளர்­க­ளும் எழு­திய பிறகு, தமிழ் உரை­நடை இலக்­கி­யம் எப்­படி இருந்­தது? இலக்­கிய மொழி எப்­படி இருந்­தது என்­பதை ஆராய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பழைய காலத்­தில் தமிழ் சினி­மா­வின் கதை, வச­னம், பாடல் எப்­படி இருந்­தது என்­ப­தை­யும், கலை­ஞர் கதை வச­னம் எழு­திய பிறகு தமிழ் சினி­மா­வின் வச­னங்­கள் எப்­படி மாறி­யது என்­ப­தை­யும் ஒப்­பிட்­டுப் பார்க்­கும்­போ­து­தான் அவ­ரால், அவ­ரின் எழுத்­தால் மொழி­யில் ஏற்­பட்ட மாற்­றம் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1940இல் வெளி­வந்த  ‘சகுந்­தலை’ என்ற திரைப்­ப­டத்­தில் வரும் ஒரு வச­னம் இது: ‘ஒரு பக்­கம் ரிஷி­க­ளின் ஆக்ஞை, இன்­னொரு பக்­கம் தாயா­ரின் ஆக்ஞை’. இது­போன்ற வச­னங்­கள்­தான் தமிழ் சினி­மா­வில் அதி­கம் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தன. உயர் வழக்­கா­க­வும் கொண்­டா­டப்­பட்­டது. 1950இல் வெளி­வந்த ‘மருத நாட்டு இள­வ­ரசி’ என்ற படத்­தில் ‘நீதி­யின் நிலைக்­க­ள­மாய், நேர்­மை­யின் உளைக்­க­ள­மாய் வாழ்ந்த வண்­ட­மிழ் வள­நாடே! நீ சூதர்­க­ளின் உறை­வி­ட­மாய், சூழ்ச்­சி­க­ளின் இருப்­பி­ட­மாய் ஆனது ஏன்?’ என்று கலை­ஞர் எழு­தி­யி­ருப்­பார்.  ‘சகுந்­தலை’ படத்­தில் வரும் வச­னம் சிறந்­ததா?  ‘மருத நாட்டு இள­வ­ரசி’ படத்­தில் இடம்­பெற்ற வச­னம் சிறந்­ததா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1952இல் ‘பரா­சக்­தி’­யில்‘சிங்­கத் திரு­நாடே, நீ சிலந்திக் கூடாக மாறி­யது எப்­போது? வந்­தாரை வாழ வைக்­கும் தமி­ழ­கமே! நீ சொந்த நாட்­டா­னையே சுரண்­டு­வது எத்­தனை நாளாக?’ என்று வரும் வச­ன­மும் 1963இல் வெளி­வந்த  ‘காஞ்­சித் தலை­வன்’ படத்­தில் வரும் ‘மகிமை கொண்ட மண்­ணின் மீது எதி­ரி­க­ளின் கால்­கள், மலர்­கள் பறிப்­ப­தில்லை வீரர்­க­ளின் கைகள்’என்று வரும் வச­ன­மும், 1950இல் வெளி­வந்த ‘மந்­திரி குமாரி’ படத்­தில்,‘சித்­தி­ரத்தை அழ­குப்­ப­டுத்­தும் நிழல் கோடு­கள் போல், உன் கண்­ணின் கடைக்­கூட்­டில், கனி இத­ழின் ஓரத்­தில், கன்­னக்­குழி சரி­வு­க­ளில் ஒளிந்­து­கொண்­டி­ருக்­கும் இருளை நான் விரும்­பு­கி­றேன்’என்று வரும் வச­னத்­தை­யும் ஒப்­பிட்­டுப் பார்த்­தால்­தான் தெரி­யும் - தமிழ் சினி­மா­வின் மொழி­யையே மாற்றி அமைத்­த­வர் கலை­ஞர் என்­பது. புராண இதி­கா­சக் கதை­க­ளும் சமஸ்­கி­ருத வார்த்­தை­க­ளும் இன்­றைய தமிழ் சினி­மா­வில் இல்லை. அதற்­குத் தன் கதை­யால், தன் வச­னத்­தால் இதற்கு அடித்­த­ள­மிட்­ட­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘மகான் பெற்ற மகன்’ நாட­கத்­தில் முத்­தா­யி­யும் அவ­ளு­டைய தந்தை திருச்­சங்­கும் உரை­யா­டும் காட்­சிக்­கு­ரிய வச­னத்­தைப் படிக்­கும்­போது அவ­ரு­டைய வாக்­கிய அமைப்­பைக் கண்டு வியக்­கா­மல் இருக்க முடி­யாது. ‘படை­க­ளி­ழந்­த­னர், பாரா­ளும் உரிமை இழந்­த­னர். பாளை­யக்­கா­ரர் குடும்­பத்­தி­னர் பாவை­யோடு பழ­கும் பண்­பை­யும் இழந்­த­னர்’ என்று எழுதி தனது மொழி வல்­லமை காட்­டி­ய­தோடு, ‘அவன் நினைத்­தால் ஊர்­வசி, ரம்பை எல்­லாம் ஓடி வரு­வார்­கள்’ என்று எழுதி, அதற்­குப் பதி­லாக, ‘இதி­லென்ன ஆச்­ச­ரி­யம்? ஆசி­ர­மத்து முனி­வர்­க­ளி­டமே ஓடி­வந்­த­வர்­கள், அரண்­ம­னைக்­கா­ரர் அழைத்­தால் அட்­டியா சொல்­ல­வாப் போகி­றார்­கள்?’ என்று எழு­தி­யி­ருப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">இது போன்ற வச­னங்­கள்­தான் பலரை எரிச்­ச­ல­டைய வைத்­தது. இலக்­கியத் தர­மில்லை என்று சொல்ல வைத்­தது.  ‘அலங்­கார மொழி’ என்று சொல்ல வைத்­தது.  ஏன் அப்­ப­டிச் சொன்­னார்­கள் என்­றால் அவர்­க­ளு­டைய மொழியை நிரா­க­ரித்­தார், அவர்­க­ளு­டைய கருத்தை நிரா­க­ரித்­தார், அது­தான் கார­ணம். கலை­ஞ­ரைப் போல் மொழி ஆளுமை கொண்ட வேறோரு எழுத்­தா­ள­ரைப் பார்ப்­பது கடி­னம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">தொல்­காப்­பி­யப் பூங்கா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமி­ழின் மிக­வும் தொன்­மை­யான இலக்­க­ணத் தொகை நூல் தொல்­காப்­பி­யம். அதன் காலம் கி.மு. ஏழாம் நூற்­றாண்டு. இதற்கு உரை எழு­தி­ய­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர்­கள் ஆறு பேர். எழுத்­த­தி­கா­ரம், சொல்­ல­தி­கா­ரம், பொரு­ள­தி­கா­ரம் மூன்­றுக்­கும் உரை எழு­தி­ய­வர் இளம் பூர­ணர். சேனா­வ­ரை­யா­ரும், தெய்­வச்­சி­லை­யா­ரும், கல்­லா­ட­ரும் சொல்­ல­தி­கா­ரத்­திற்கு மட்­டுமே உரை எழு­தி­ய­வர்­கள். எழுத்து, சொல், பொரு­ள­தி­கா­ரத்­தில் சில இயல்­க­ளுக்கு மட்­டுமே உரை எழு­தி­ய­வர் பேரா­சி­ரி­யர். எல்­லாக் காலத்­தி­லும் தொல்­காப்­பி­யம் குறித்த பேச்­சும், எழுத்­தும், விவா­த­மும் இருந்­து­கொண்­டே­தான் இருக்­கி­றது. அந்த வகை­யில் கடந்த நூற்­றாண்­டில் எளிய உரை எழு­தி­ய­வர்­கள் என்று புலி­யூர் தேசி­கன் (1961), வெள்ளை வார­ண­னார் (1983), 
ச.வே.சுப்­ர­ம­ணி­யன் போன்­ற­வர்­க­ளைக் குறிப்­பி­ட­லாம். அண்­மைக்­கா­லத்­தில் தொல்­காப்­பியத்­திற்கு முக்­கி­ய­மான ஆய்வு நூல்­களை எழு­தி­ய­வர்­கள் என்ற வகை­யில் சோம.சுந்­தர பார­தி­யார், ந.சுப்பு ரெட்­டி­யார், புல­வர் குழந்தை, ச.பால­சுந்­த­ர­னார் ஆகி­யோ­ரைக் குறிப்­பி­ட­லாம். மேலும் இது தொடர்­பான பல நூல்­க­ளும் ஆய்­வே­டு­க­ளும் இருக்­கின்­றன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>