<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:52:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07072025-TRY-10" position.sequence="10" ex-ref="07072025-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup470106_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup468817_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup470105_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="kalaingar2_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">தி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ருக்­கு­ற­ளுக்கு உரை எழு­து­வ­தும் ஒன்­று­தான்’ என்று எழு­து­கி­றார். அதோடு திருக்­கு­ற­ளுக்கு உரை எழு­து­வோர் மேற்­கொள்ள வேண்­டிய நெறி­மு­றை­கள் என்ன என்­ப­தை­யும் எழு­தி­யி­ருக்­கி­றார். ஐந்து நெறி­மு­றை­களை அவர் வகுத்­தும் தந்­தி­ருக்­கி­றார். அதோடு தான் திருக்­கு­ற­ளுக்கு எந்த நெறி­மு­றை­யில் உரை எழு­தி­யி­ருக்­கி­றேன் என்­ப­தை­யும் தெளி­வாக்கி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘கட­வுள் வாழ்த்து’ எனும் அதி­கா­ரத் தலைப்பை ‘வழி­பாடு’ எனக் குறித்­துள்­ளேன். ’வள்­ளு­வ­ரைக் கட­வுள் மறுப்­பா­ளர் அல்­லது கட­வுள் நம்­பிக்­கை­யா­ளர் எனும் வாதத்­திற்­குள் சிக்க வைக்க நான் விரும்­ப­வில்லை. வழி­பாடு எனும் அதி­கா­ரத்­தில் அமைந்­துள்ள குறட்­பாக்­க­ளுக்கு நான் எழு­தி­யுள்ள உரை­க­ளைக் கொண்டு இதனை உண­ர­லாம்’ என்று முன்­னு­ரை­யில் குறிப்­பி­டு­கி­றார். அதா­வது திருக்­கு­ற­ளுக்கு இந்த அள­வீ­டு­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான் நான் உரை எழு­தி­யி­ருக்­கி­றேன் என்­ப­தைத் தெளி­வுப்­ப­டுத்­து­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உல­கம் தோன்றி, மனித இனம் தோன்றி, எழுத்து வடி­வம் தோன்றி, புத்­த­கங்­களை அச்­சிட்ட பிறகு, எத்­த­னையோ கோடிக்­க­ணக்­கில் புத்­த­கங்­கள் அச்­சி­டப்­பட்டு இருந்­தா­லும் அதில் கலை­ஞ­ருக்­குப் பிடித்­தது திருக்­கு­றள்­தான். அப்­ப­டிப்­பட்ட புத்­த­கத்­திற்கு உரை எழு­தும்­போ­து­கூட நான் பகுத்­த­றி­வு­வா­தி­யா­கவே இருப்­பேன், என்­னு­டைய கொள்­கை­யி­லி­ருந்து மாற மாட்­டேன், குறள் குறிப்­பி­டு­கிற ஒரு­சில சொற்­க­ளோடு நான் உடன்­ப­ட­வில்லை, அத­னால் நான் மாற்­றுச் சொல்லை, மாற்­றுப் பொரு­ளைத் தரு­கி­றேன் என்று துணி­வு­டன் எழு­திக் காட்­டி­யி­ருக்­கி­றார். இப்­படி ஒரு வெறி­கொண்ட கொள்கை பற்­றா­ள­ரைப் பார்ப்­பது அரி­தி­னும் அரிது. இத்­த­கைய துணிச்­ச­லும், தன் கொள்­கை­யில் சம­ர­சம் செய்­து­கொள்­ளாத, கொள்கை பற்­றும்­தான் அவரை லட்­சி­ய­வா­தி­யாக மாற்­றி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறள் 72இல் இடம்­பெற்­றி­ருக்­கிற ‘எழு பிறப்பு’ என்ற சொல்­லுக்கு கலை­ஞர் தன்­னு­டைய உரை­யில்  ‘ஏழேழு தலை­முறை’ என்று எழு­தி­யி­ருக்­கி­றார். அதே மாதிரி 84ஆவது குற­ளில் வரும்  ‘செய்­யாள்’ என்ற சொல்­லுக்கு ‘செல்­வம் எனும் திரு­ம­கன்’ என்­றும், குறள் 86இல் இடம்­பெற்­றி­ருக்­கிற, ‘வானத்­த­வர்’ என்­ப­தற்கு  ‘புகழ் வானில் இருப்­போர்’ என்­றும், குரல் 371இல் இடம்­பெற்­றி­ருக்­கிற, ‘ஊழ்’ என்ற சொல்­லுக்கு ‘இயற்கை நிலை’ என்­றும், குறள் 565இல் இடம்­பெற்­றி­ருக்­கும் ‘ பே யெ’ எனும் சொல்­லுக்கு ‘பேய்த் தோற்­றம்’ அல்­லது  ‘அச்­சம் தரும் தோற்­றம்’ என்­றும், குறள் 102இல் இடம்­பெ­றும் ‘தெய்­வம்’ என்று சொல்­லுக்கு ‘இயற்கை நிலை’ என்­றும் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘பேய்த் தோற்­றம்’, ‘தெய்­வம்’ என்று எழு­தி­விட்­டால் தன்­னு­டைய கொள்­கை­யின் நிலை மாறி­வி­டுமே என்று  ‘அச்­சம் தரும் தோற்­றம்’,   ‘இயற்கை நிலை’ என்­றும் எழு­தி­யி­ருப்­ப­தைப் படித்­த­போது, ‘இப்­ப­டி­யும் ஒரு­வ­ரால் சிந்­திக்க முடி­யுமா?’ என்ற வியப்­பு­தான் ஏற்­பட்­டது. திருக்­கு­ற­ளில்  தனக்கு, தன் கொள்­கைக்கு உடன்­ப­டா­மல் வரும் சொற்­க­ளுக்கு கலை­ஞர் எழு­தி­யி­ருக்­கிற சொற்­க­ளைக் குறித்து ஒரு ஆய்­வு­செய்­யும் அள­வுக்கு இருக்­கின்­றன. திருக்­கு­றள் உரை­யைப் படிக்­கப்­ப­டிக்க,  புதி­ய­பு­திய சொற்­க­ளு­டன், புதி­ய­பு­திய வாக்­கி­யங்­க­ளும் கிடைக்­கப்­பெ­றும்.  கவ­ன­மா­க­வும், எச்­ச­ரிக்­கை­யு­ட­னும் தன்­னு­டைய உரையை எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அன்­பி­லார் எல்­லாம் தமக்­கு­ரி­யர் – அன்­பு­டை­யார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­பும் உரி­யர் பிறர்க்கு (குறள் 2) என்ற குற­ளுக்கு கலை­ஞர் எழு­திய உரை இது: ‘அன்பு இல்­லா­த­வர் எல்­லாம் தமக்கே என உரிமை கொண்­டா­டு­வர். அன்பு உடை­ய­வரோ தம் உடல், பொருள், ஆவி அனைத்­தும் பிறர்க்­கென எண்­ணி­டு­வர்.”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரு­டைய திருக்­கு­றள் உரை என்­பது மிக­வும் தெளி­வா­னது. ஒரு விதத்­தில் எளி­மை­யா­னது. பிற உரை­யா­சி­ரி­யர்­க­ளின் சாயல் இல்­லா­தது. திருக்­கு­ற­ளைப் படித்து அதன் பொருளை மிக எளி­மை­யா­கப் புரிந்­து­கொள்ள கலை­ஞ­ரின் விளக்க உரை நிச்­ச­யம் உத­வும். திருக்­கு­ற­ளோடு நெருக்­க­மாக முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சங்­கத்­த­மிழ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் சங்­க­கால இலக்­கி­யங்­களை எவ்­வ­ளவு ஆழ­மா­கப் படித்­தி­ருக்­கி­றார், புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார், அவற்­றின் பெரு­மை­களை உணர்ந்­தி­ருக்­கி­றார் என்­ப­தற்­குச் சான்­றாக இருக்­கி­றது சங்­கத்­த­மிழ் நூல். சங்­க­கால இலக்­கி­யங்­களை இன்­றைக்கு இருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு விரி­வாக அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டும், அவற்­றின் மீது ஆர்­வத்­தைத் தூண்ட வேண்­டும், அவற்­றின் மதிப்பை உணர வைக்க வேண்­டும் என்ற பெரும் விருப்­பத்­தின் கார­ண­மா­கத்­தான் சங்­கத்­த­மிழ் எழு­தி­யி­ருக்­கி­றார். எழு­து­வது மட்­டும் இலக்­கி­யப் பணி அல்ல, படிக்க வைப்­ப­தும் இலக்­கி­யப் பணி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சங்­கப் பாடல்­க­ளில் தனக்­குப் பிடித்­த­மான 100 பாடல்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்து, அப்­பா­டல்­க­ளுக்கு விளக்­க­வு­ரை­போல் எழு­தா­மல் பாடல்­களை மூல­மா­கக் கொண்டு தன்­னு­டைய நடை­யில் மறு­உ­ரு­வாக்­கம் செய்­தி­ருக்­கி­றார், அது­வும் கவிதை வடி­வில். மூலப்­பா­டல்­கள் எந்த அள­விற்­குப் பெருமை வாய்ந்­த­தாக இருக்­கி­றதோ, அதே அள­விற்கு கலை­ஞர் மறு­உ­ரு­வாக்­கம் செய்­தி­ருக்­கிற கவி­தை­க­ளும் மதிப்பு வாய்ந்­த­வை­யா­கவே இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சங்­கப் பாடல்­க­ளில் 100 பாடல்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தா­லும் ஔவை­யார் எழு­தி­யி­ருக்­கிற (புறம் – 286) பாடல், பொன்­மு­டி­யா­ரின் (புறம் – 310) பாடல், காக்­கைப்­பா­டி­னி­யா­ரின் (புறம் – 278) பாடல், வெள்­ளை­மா­ற­னா­ரின் (புறம் – 296) பாடல், பூங்­க­ணுத்­தி­ரை­யா­ரின் (புறம் – 277) பாடல், ஓக்­கூர் மாசாத்­தி­யா­ரின் (புறம் – 279) பாடல் போன்­றவை கலை­ஞ­ரின் கவ­னத்தை அதி­கம் ஈர்த்­தி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக அகப்­பா­டல்­க­ளுக்­கும் புறப்­பா­டல்­க­ளு க்­கும் தலைப்­பு­கள் இருக்­காது. ஆனால் கலை­ஞர் எழு­திய சங்­கத்­த­மி­ழில், ஒவ்­வொரு பாட­லுக்­கும் ஒரு தலைப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார். அந்­தத் தலைப்பு மூலப்­பா­ட­லின் மையக் கருத்­தை­யும், தன் கவி­தை­யின் மையக் கருத்­தை­யும் வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டும் என்ற வகை­யில் அமைத்­தி­ருக்­கி­றார். ஔவை­யார் எழு­திய பாட­லுக்கு (புறம் 286) ‘சுமந்­த­வள் சுமந்த சோகம்’ என்­றும், பொன்­மு­டி­யார் எழு­திய பாட­லுக்கு (புறம் 310) ‘ஒரு தாயின் தாலாட்டு’ என்­றும், காக்­கைப்­பா­டி­னி­யார் எழு­திய பாட­லுக்கு (புறம் 278) ‘வாளிங்கே அவன் நாக்­கெங்கே’ என்­றும், ஓக்­கூர் மாசாத்­தி­யார் எழு­திய பாட­லுக்கு (புறம் 279) ‘சென்று வா மகனே செரு­முனை’ என்­றும், வெள்ளை மாற­னார் எழு­திய பாட­லுக்கு (புறம் 296) ‘இரு­விழி மழை­யும், இதய மகிழ்­வும்’ என்று தலைப்­பிட்­டி­ருக்­கி­றார். தலைப்­பு­கள் மிக­வும் பொருத்­த­மாக இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் தான் தேர்ந்­தெ­டுத்த 100 சங்­கப் பாடல்­க­ளில் மூதின் மக­ளிர்(வீர மக­ளிர்) சார்ந்த பாடல்­க­ளுக்­குக் கூடு­தல் முன்­னு­ரிமை தந்­தி­ருக்­கி­றார். மூதின் மக­ளிர் அற ஒழுக்­கம் மிக்­க­வர்­க­ளாக, மறப்­பண்பு, தன்­மா­னம், சுய­ம­ரி­யாதை, நாட்­டுப் பற்று, அர­சப் பற்று, மொழிப் பற்று, இனப் பற்­றுக் கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். அக­வாழ்­வி­லும் புற­வாழ்­வி­லும் வீரத்­தையே கொண்­டா­டு­கி­ற­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். தந்­தையை, கண­வனை, மகனை, சிறு­வன் என்று கூடப் பார்க்­கா­மல் போருக்கு விருப்­பத்­தோடு அனுப்­பு­கிற பெண்­க­ளாக இருக்­கின்­ற­னர். கண­வன், மகன் போரில் வெற்­றிப் பெறா­விட்­டா­லும், முது­கில் ஈட்­டி­யால் குத்­துப்­பட்டு இறக்­கக் கூடாது, மார்­பிலே குத்­துப்­பட்டு இறக்க வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர். அப்­படி மர­ணிப்­ப­தையே குலப் பெரு­மை­யா­கக் கரு­து­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“இறந்து கிடந்­தான் ஈட்­டிக்கு மார்பு காட்டி – இதைக் கண்­டாள், இத­யங் குளிர்ந்­தாள் –  ‘எதைக் கண்­டா­லும் இனிக் கவலை இல்லை. என் மகன் வீர­னாய் இறந்­தான்’” என்று கலை­ஞர் எழு­தி­யி­ருக்­கி­றார். கோழை­யா­கச் சாக விரும்­பாத மூதின் மக­ளிர். கலை­ஞ­ரின் நெஞ்­சத்­தில் நீங்­காத இடத்­தைப் பிடித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1996இல்­தான் கலை­ஞர் சங்­கத்­த­மிழ் எழு­து­கி­றார். ஆனால் அதற்கு முன்­பாக 1945இல் புற­நா­னூற்­றுத் தாய் ஒன்று என்ற கவி­தையை காக்­கை­பா­டி­னி­யா­ரின் பாடலை (278) அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எழு­தி­யி­ருக்­கி­றார். அதே மாதிரி புற­நா­னூற்­றுத் தாய் இரண்டு என்ற கவி­தையை 1955இல் ஓக்­கூர் மாசாத்­தி­யார் எழு­திய பாடலை (279) அடிப்­ப­டை­யா­கக் கொண்டு எழு­தி­யி­ருக்­கி­றார். 1964இல் ஔவை­யார் எழு­திய (286) பாடலை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு புற­நா­னூற்­றுத் தாய் மூன்று என்ற கவி­தையை எழு­தி­யி­ருக்­கி­றார். இந்த மூன்று நீள் கவி­தை­க­ளும் அவ­ரு­டைய கவி­தைத் தொகுப்­பி­லும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இந்­தக் கவி­தை­கள்­தான் பின்­னா­ளில் சங்­கத்­த­மிழ் எழு­து­வ­தற்கு அவ­ருக்­குத் தூண்­டு­த­லாக இருந்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புற­நா­னூற்­றுத் தாய் ஒன்று என்ற கவி­தையை கலை­ஞர் கவி­ய­ரங்க மேடை­யில் பாடி­யி­ருக்­கி­றார். பெரும் புக­ழைப் பெற்­றுத் தந்த கவிதை. 1945இல் எழு­தி­யி­ருந்­தா­லும் இன்று படிக்­கும்­போ­து­கூட உணர்ச்­சி­க­ளைத் தூண்­டக்­கூ­டிய கவி­தை­யாக இருக்­கி­றது. 1945, 1955, 1964இல் எழு­திய கவி­தை­கள் இன்­றும் உயி­ரோ­டி­ருக்­கி­றது. கலை­ஞ­ரு­டைய தமிழ் என்­றும் வாழும் என்­ப­தற்கு இந்­தக் கவி­தை­களே சாட்­சி­யாக இருக்­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு ஒன்று:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“பகை­வர் வேலுக்கு வழி­சொல்ல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வகை­யற்ற கோழையே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என் வீரப்­பா­லுக்கு வழி சொல்­வாய்.”
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புற­நா­னூற்­றுத் தாய் 1, 2, 3 ஆகிய கவி­தை­க­ளில், தமிழ் மொழி­யின் அழ­கைப் பல­வி­த­மா­கச் சொல்­கி­றார். புற­நா­னூற்­றுத் தாய் 1 கவி­தை­யில் ‘கிழட்­டுத் தமி­ழச்சி’. ‘பழந்­த­மிழ் குடி­யி­னிலே’, ’ ‘செந்­த­மிழ் காளை­கள்’ என்­றும் புற­நா­னூற்­றுத் தாய் கவிதை 2இல்  ‘காவிரி தந்த தமி­ழ­கத்து புது மண­லில், தமி­ழ­கத்து கிளி­யொ­ருத்தி’,  ‘அச்­ச­டித்த தமிழ்ப் பதுமை’, ‘நந்­த­மிழ் நாடு’, ‘பண்­பட்ட தமிழ் மருந்­தாய்’ என்று எழு­தி­யி­ருக்­கி­றார். புற­நா­னூற்­றுத் தாய் 3இல் ‘வீரம் காட்­டு­தலே தமி­ழர் மரபு’, ‘தனித்­த­மிழ்ச் சொல் உதிர்க்­கும் புலமை மிக்­காள்’, ‘காவ­லர்­கள் வாழ்ந்­தி­ருந்த தமிழ்­நாடு’,  ‘நிலம் வகுத்து வாழ்­கின்ற தமி­ழ­ரி­டையே! சோலை பூவி­னம்­போல் தமிழ்க் கவிதை மலர வைத்­தாள்’, ‘ நாம­ணக்­கும் தமிழ் மணம்’, ‘தமிழ்த் தாயே’ என்று கவி­தை­யில் பல இடங்­க­ளில் எழு­தி­யி­ருக்­கி­றார். இந்த வார்த்­தை­க­ளும், வாக்­கி­யங்­க­ளும் கலை­ஞ­ரின் தமிழ்ப் பற்றை, தமிழ்­நாட்­டின் பற்­றைக்  காட்­டு­கின்­றது. ‘எங்­கும் தமிழ் எதி­லும் தமிழ்’ என்ற அவ­ரு­டைய முழக்­கம் சங்­கத் 
தமி­ழி­லும் எதி­ரொ­லிக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சங்­கத்­த­மிழ் நூலில் இடம்­பெற்­றுள்ள 484 கவி­தை­க­ளி­லும் சங்­க­கால வாழ்க்கை கண்­முன் காட்­சி­க­ளாக உருப்­பெற்று நிற்­கின்­றன. சங்­கத்­த­மிழ் நூலைப் படிக்­கும்­போது, கலை­ஞ­ரின் மீது மட்­டு­மல்ல சங்­கப் பாடல்­கள் மீதும் மதிப்­புக் கூடு­வதை, அவற்­றைப் படிக்க வேண்­டும் என்ற ஆர்­வம் கூடு­வ­தைத் தவிர்க்க முடி­யாது. இந்த இரண்டு உணர்­வு­க­ளை­யும் தூண்­டி­விட்ட விதத்­தில் கலை­ஞ­ரின் சங்­கத்­த­மிழ் வெற்­றிப் பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின் கவித்­துவ எழுத்­து­ந­டைக்கு, மொழி, அழ­குக்கு ஒரு எடுத்­துக்­காட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“குழவி இறப்­பி­னும் ஊன்­தடி பிறப்­பி­னும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆள்­அன்று என்று வாளின் தப்­பார்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொடர்ப்­படு ஞம­லி­யின் இடர்ப்­ப­டுத்து இரீ­இய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கேளல் கேளிர் வேளாண் சிறு­ப­தம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மதுகை இன்றி, வயிற்­றுத் தீத்­த­ணி­யத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தாம்­இ­ரந்து உண்­ணும் அளவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஈன்­மரோ இவ்­வு­ல­கத் தானே!”– இது சங்­கத்­த­மிழ்ப் பாடல் (74).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தப் பாட­லுக்கு கலை­ஞர் எழு­தி­யி­ருக்­கிற கவிதை இது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“பிள்­ளை­யொன்று இறந்து பிறப்­பி­னும் - சதைப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிண்­ட­மொன்று பிறந்து தொலைக்­கி­னும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மூப்­புக் கொண்டு மடிந்­தி­டி­னும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முடி­வி­லொரு நோய்­கண்டு முடிந்­தி­டி­னும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">போரில் கலந்து விழுப்­புண்­பெற்று –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மான­மிகு வீர­ரென மாண்­டி­டாத பழி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துடைப்­ப­தற்­காக,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாள் கொண்டு உட­லில் கீறி -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வான்­பு­கழ் வாழ்­வில் சேர்த்த பின்பே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உட­ல­டக்­கம் செய்­தி­டும் மான­ம­ரபே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அட­லே­று­கள் மலிந்­தி­டும் தமி­ழர்­ம­ரபு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்­தப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பண்­பாட்டு மர­பு­வழி வந்­து­தித்த நானோ – மனப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புண்­பட்டு, பகை­ய­ர­சின் சிறைப்­பட்டு நாய்­போல</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தண்­ணீர்க்­கும் காத்­தி­ருக்­க­லா­னேன் - இனி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உண்­ணீர் என்று பன்­னீர் தந்து உப­ச­ரித்­த­போ­தும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தகு­தி­யன்று இனி உயிர் வாழ்­தல் - அத­னாலே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்த்­தாயே! என் மானங் காக்க</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உன்­ம­டி­த­னிலே விழு­கின்­றேன், தாங்­கிக்­கொள்க!”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெஞ்­சுக்கு நீதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் எழு­திய தன்­வ­ர­லாற்­றுக் கதை­யான ‘நெஞ்­சுக்கு நீதி’ 1929 முதல் 1969 ஆண்டு வரை­யி­லான அவ­ரு­டைய வாழ்க்கை நிகழ்­வு­கள் முதல் பாக­மா­க­வும், 1969 முதல் 1976 வரை­யி­லான வாழ்க்கை நிகழ்­வு­கள் இரண்­டாம் பாக­மா­க­வும், 1976 முதல் 1988 வரை­யி­லான வாழ்க்கை நிகழ்­வு­கள் மூன்­றாம் பாக­மா­க­வும், 1989 முதல் 1996 வரை­யி­லான வாழ்க்கை நிகழ்­வு­கள் நான்­காம் பாக­மா­க­வும், 1996 முதல் 1999 வரை­யி­லான வாழ்க்கை நிகழ்­வு­கள் ஐந்­தாம் பாக­மா­க­வும், 1999 முதல் 2006 வரை­யி­லான வாழ்க்கை நிகழ்­வு­கள் ஆறாம் பாக­மா­க­வும் வெளி­யி­டப்­பட்­டிருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞ­ரின், ‘நெஞ்­சுக்கு நீதி’ அள­விற்­குத் தன்­வ­ர­லாற்­றுக் கதையை வேறு யாரும் எழு­தி­யி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. எழு­தி­யி­ருந்­தா­லும் அது ஒரு தனி­ம­னி­த­னு­டைய வாழ்க்­கைக் கதை­யாக, ஒரு குடும்­பத்­தின் கதை­யா­கவே இருந்­தி­ருக்­கும். உல­கெங்­கும் எழு­தப்­பட்­டி­ருக்­கும் பல தன்­வ­ர­லாற்­றுக் கதை­கள் தனி­ம­னித கதை­யா­க­வும், குடும்­பத்­தின் கதை­யா­க­வும் மட்­டுமே எழு­தப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு காலத்­தின் கதை­யாக, சமூ­கத்­தின் கதை­யாக, ஒரு கட்­சி­யின் கதை­யாக, கட்சி மேற்­கொண்ட அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளின் கதை­யாக இருந்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கலை­ஞர் எழு­திய தன்­வ­ர­லாற்­றுக் கதைக்கு ‘நெஞ்­சுக்கு நீதி’ என்று பெய­ருக்­குப் பதி­லாக, ‘என்­னு­டைய அர­சி­யல் வழ்க்கை’ அல்­லது ‘தி.மு.க.வின் வர­லாறு’ என்று பெயர் வைத்­தி­ருந்­தால் இன்­னும் பொருத்­த­மாக இருந்­தி­ருக்­கும். கார­ணம், அதில் அவ­ரு­டைய அர­சி­யல் செயல் சார்ந்த தக­வல்­கள்­தான் பெரு­ம­ள­வில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றன. கலை­ஞ­ரு­டைய வாழ்வு என்­பது அர­சி­யல் செயல்­பா­டு­கள், போராட்­டங்­கள்­தானே! இந்­தி­யா­வின், தமிழ்­நாட்­டின் கடந்த ஒரு நூற்­றாண்­டு­கால சமூக, அர­சி­யல் சூழ்­நி­லை­களை அறிந்­து­கொள்ள நெஞ்­சுக்கு நீதி நிச்­ச­யம் ஒரு சிறந்த ஆவ­ண­மாக இருக்­கும். ‘நெஞ்­சுக்கு நீதி என் வாழ்க்கை கதை என்று கூறப்­பட்­டா­லும் எனக்­கென்று ஒரு தனி வாழ்க்கை கிடை­யாது. ஒரு லட்­சி­யத்தை மைய­மா­கக் கொண்டு சுழ­லும் இயக்­கத்­தின் வர­லாற்­றில் நான் ஒரு பகுதி’ என்று முன்­னு­ரை­யில் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த நூற்­றாண்­டில் தமிழ்­நாட்­டில், இந்­தி­யா­வில் இருந்த அர­சி­யல் கட்­சி­கள், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள், அவர்­க­ளு­டைய நட­வ­டிக்­கை­கள், குறிப்­பா­கத் தமிழ்­நாட்­டில் நடந்த முக்­கிய அர­சி­யல் மாற்­றங்­கள், நிகழ்­வு­கள் பற்றி அறிந்­து­கொள்­வ­தற்கு இந்த நூல் 
பெரி­தும் உத­வும். ‘நெஞ்­சுக்கு நீதி’, கற்­பனை அல்ல, இரக்­கத்­தைக் கோரும் கண்­ணீ­ரல்ல, புலம்­பல்­கள் அல்ல. அவர் வாழ்ந்த காலத்­தில் தமிழ்­நாட்­டில், இந்­தி­யா­வில் அர­சி­யல் களத்­தில் என்ன நடந்­ததோ அதை நடந்த வித­மா­கவே எழு­தி­யி­ருக்­கி­றார். சிறு­சிறு நிகழ்­வு­க­ளை­யும் ஆவ­ணப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று அவர் நினைத்­த­தும், அவற்றை ஆவ­ணப்­ப­டுத்­தி­ய­தும் 
முக்­கிய­மா­னது. இதன் மூலம் கலை­ஞ­ருக்­குள் ஒரு வர­லாற்று ஆசி­ரி­யன் இருந்­தி­ருக்­கி­றான் என்­பது தெரி­கிறது. ஒரு சமூ­கம் தனக்­கான வர­லாற்றை இப்­ப­டித்­தான் எழு­திக்­கொள்கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெஞ்­சுக்கு நீதி­யில் தன்­னைப் பற்றி, தன்­னு­டைய தனிப்­பட்ட வாழ்க்­கை­யைப் பற்றி, குடும்­பத்­தைப் பற்றி எழு­தா­மல்,  “ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் பெரி­யா­ரின் அறி­வி­யக்­கக் கருத்­து­களை அடித்­த­ள­மா­கக் கொண்டு, அண்­ணா­வின் வழி­மு­றை­க­ளால் அழுத்­த­மான கட்­ட­ட­மாக உரு­வாக்­கி­யுள்ள தி.மு.கழ­கம் எனும் இந்த இலட்­சி­யப் பாசறை சோத­னை­கள், வேத­னை­கள், சூழ்ச்­சி­கள் ஆகி­ய­வற்­றுக்­கி­டையே அசை­யாத இம­ய­மா­கவே எழுந்து நின்று கொள்கை முர­சம் ஒலித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. ஆயி­ரம் காலத்­துப் பயி­ராக இந்­தக் கழ­கத்­தைத் தொடர்ந்து காப்­பாற்ற வேண்­டும் என்­பதே, எனக்கு என்­றுமே தனி­யாத ஆசை” என்று பாகம் இரண்­டில் எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மிசா கைது நட­வ­டிக்­கை­யின் போது தானும் தன்­னு­டைய கட்­சிக்­கா­ரர்­க­ளும் எப்­படி இருந்­தோம் என்­பதை விளக்­கு­வ­தற்­காக எழு­தி­யது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“சாகிற வரை­யில் சிறை” என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“என் சாம்­பல் தமிழ் மணந்து வேகும்” என்­றாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கட்­சி­யைத் துறந்­திடு. கதவு திறந்­தி­டும்” என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“கட்­சி­யைக் கட்­டிடு நடை­யைத் தொடங்­கிடு” என்று நறுக்­கென்று பதில் அளித்­தாய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தலை­மைத் தாங்கி ஓர் அறிக்கை அளித்­திடு”என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தலை­கள் அறு­ப­டும். தப்­பி­ட­லாம்” என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அதற்கு நம்­மு­டன் பல எட்­டப்­பர்­கள் வந்­துள்­ள­னர். அவர்­களை அணு­கிடு” என்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தலையே அறு­ப­டி­னும் துரோ­கம் செய்­யும் ரத்­தம் இந்த ரத்­த­மல்ல என நிமிர்ந்து விடை­ய­ளித்­தாய்” என்று எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நெஞ்­சுக்கு நீதி­யில் சொல்­லப்­பட்­டுள்ள தக­வல்­கள், நிகழ்ச்­சி­கள், சம்­ப­வங்­கள் ஒவ்­வொன்­றும், ஒவ்­வொரு விதத்­தில் முக்­கி­ய­மா­னவை. இந்­தி­யா­வில் இருந்த சமூ­கப் போரா­ளி­கள், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் இறந்­த­போ­தெல்­லாம் கலை­ஞர் தன்­னு­டைய அஞ்­ச­லி­யாக இரங்­கற்பா எழு­தி­யி­ருக்­கி­றார். தமிழ்­நாட்­டி­லி­ருந்த சமூ­கப் போரா­ளி­கள், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் இறந்­த­போ­தும் இரங்­கற்பா எழு­தி­யி­ருக்­கி­றார்.  தன்­னு­டைய அர­சி­ய­லுக்கு, கொள்­கைக்கு எதி­ரி­க­ளாக இருந்த பெரு­த­லை­வர்­க­ளுக்­கும் புகழ் அஞ்­சலி செலுத்­தும் வித­மாக இரங்­கற்பா எழு­தி­யி­ருக்­கி­றார். இச்­செ­யல் கலை­ஞ­ரின் கண்­ணி­யத்தை, பெருந்­தன்­மையை, அர­சி­யல் நாக­ரி­கத்­தையே காட்­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘நெஞ்­சுக்கு நீதி’­யைப் படிக்­கப்­ப­டிக்க இது கலை­ஞ­ரு­டைய கதை அல்ல. தி.மு. கழ­கத்­தின் வர­லாறு என்­ப­தற்கு 1970இல் திருச்­சி­யில் நடை­பெற்ற இரண்டு நாள் மாநாட்­டில் கலை­ஞர் கொண்­டு­வந்த ஐந்து தீர்­மா­னங்­கள் பற்றி எழு­தி­யி­ருப்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அண்ணா வழி­யில் அய­ராது உழைப்­போம். ஆதிக்­க­மற்ற சமு­தா­யம் அமைத்தே தீரு­வோம். இந்­தித் திணிப்பை என்­றும் எதிர்ப்­போம். வன்­முறை தவிர்த்து வறு­மையை வெல்­வோம். மாநி­லத்­தில் சுயாட்சி, மத்­தி­யில் கூட்­டாட்சி” என்­ப­து­தான். இந்­தக் கொள்கை  முழக்­கம்­தான் ‘நெஞ்­சுக்கு நீதி’ நூலில் நிறைந்து கிடக்­கின்­றன. என்ன ஆச்­ச­ரி­யம், தன்­வ­ர­லாற்று நூலில் கட்­சி­யின் கொள்கை முழக்­கம், கட்­சி­யின் கொள்கை விளக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதன்­மு­த­லாக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். முத­ல­மைச்­ச­ராக இருந்த சம­யத்­தில், எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்த கலை­ஞர் சட்­ட­மன்­றத்­தில் ஒரு விவா­தத்­தின்­போது,  ‘சட்­ட­மன்ற விவா­தங்­க­ளில் வெப்­பம் இருப்­ப­தைக் காட்­டி­லும், ஒளி இருப்­பதே வர­வேற்­கத்­தக்­க­தா­கும். வெப்­பம் வெறுப்­பு­ணர்­வுக்கு வித்­தி­டும். ஒளி விளக்­கத்­திற்கு வழி­வ­குத்­தி­டும்’ என்று பேசி­யது ‘நெஞ்­சுக்கு நீதி’­யில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இப்­படி நூற்­றுக்­க­ணக்­கான செய்­தி­கள், சம்­ப­வங்­கள், வர­லாற்று நிகழ்­வு­கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இந்த நூல், கடந்த நூற்­றாண்­டின் தமிழ்ச் சமூக அர­சி­யலை அறி­வ­தற்­குச் சிறந்த ஆவ­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘நெஞ்­சுக்கு நீதி’ என்­பது தனக்­குத் தானே உண்­மை­யாக, நேர்­மை­யாக இருப்­பது. பெரி­யா­ருக்கு, அண்­ணா­வுக்கு, தி.மு.கழ­கத்­திற்கு, கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு, சமூ­கத்­திற்கு கலை­ஞர் எவ்­வ­ளவு நேர்­மை­யாக, உண்­மை­யாக இருந்­தார் என்­பதை அறி­வ­தற்கு ‘நெஞ்­சுக்கு நீதி’­யைப் படிக்க வேண்­டும். இது ஒரு காலத்­தின் வர­லாறு, சமூ­கத்­தின் வர­லாறு. பொது­வா­கத் தன்­வ­ர­லாற்­றுக் கதை நூலை எழு­தும்­போது, “என் வாழ்க்கை பய­ணம்”, “என் வாழ்க்கை கதை”, “நான் கடந்து வந்த பாதை” என்­று­தான் தலைப்பு வைப்­பார்­கள். ஆனால், தன் வர­லாற்­றுக் கதைக்கு ‘நெஞ்­சுக்கு நீதி” என்­று­தான் தலைப்பு வைத்­தி­ருக்­கி­றார். இது­தான் கலை­ஞ­ரின் தனித்­து­வம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கடி­தம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1968 முதல் 2016 வரை­யி­லான காலத்­தில் 
கலை­ஞர் எழு­திய கடி­தங்­க­ளின் எண்­ணிக்கை 4,041. மொத்த பக்­கங்­க­ளின் எண்­ணிக்கை 21,510. மொத்த கடி­தங்­க­ளை­யும் தொகுத்து 54 தொகு­தி­க­ளாக 
வெளி­யிடப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>