<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,375,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:55:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07072025-VLR-02" position.sequence="02" ex-ref="07072025-VLR-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#0000ff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">இலங்கை அர­சி­டம் இந்­திய அரசு பேச வேண்­டும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup435595_02_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ச்­சத்­தீவை ஒரு­போ­தும் விட்­டுத் தர மாட்­டோம் என்று இலங்கை வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் விஜிதா ஹெராத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்து இருக்­கி­றார். இந்­திய மீன­வர்­கள் மீது அவ­தூ­றான கருத்­து­களை ஆண­வ­மா­கத் தெரி­வித்து இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“கச்­சத்­தீவு கடல் பகு­தி­யில் மீன் பிடிப்­ப­தற்­காக இந்­திய மீன­வர்­கள் இலங்கை கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி நுழை­கின்­ற­னர். அவர்­கள் மீன் வளங்­க­ளைக்  கொள்­ளை­ய­டிப்­ப­தோடு கடல் தாவ­ரங்­க­ளை­யும் கடு­மை­யாக சேதப்­ப­டுத்­து­கின்­ற­னர். இலங்கை கடல் எல்­லைக்­குள் இந்­திய 
மீன­வர்­கள் தொடர்ந்து சட்­ட­வி­ரோ­த­மாக மீன் பிடிப்­ப­தற்கு இந்­திய அர­சும் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை என்­ப­தை­யும் நாங்­கள் அறி­வோம். இந்­தப் 
பிரச்­சி­னைக்கு தூத­கர ரீதி­யில் தீர்வு காண இலங்கை தயா­ராக உள்­ளது. சர்­வ­தேச சட்­டங்­க­ளின் படி நிறு­வப்­பட்ட கச்­சத்­தீவை ஒரு­போ­தும் விட்­டுத் தர மாட்­டோம். இந்­தி­யா­வில் காங்­கி­ரஸ், பா.ஜ.க. உள்­ளிட்ட கட்­சி­கள் 
அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­கா­கவே கச்­சத்­தீவு விவ­கா­ரத்தை எழுப்­பு­கின்­றன” என்று வாய்க்கு வந்­ததை எல்­லாம் பேசி இருக்­கி­றார் இலங்கை வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் விஜிதா ஹெராத்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கச்­சத்­தீவு மீட்­கப்­பட வேண்­டும் என்­பதை அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக எழுப்­ப­வில்லை. இந்­திய மீன­வர்­க­ளின் வாழ்­வு­ரி­மை­யின் அடிப்­ப­டை­யில்­தான் எழுப்­பு­கி­றோம். கடல் தாண்டி வந்­த­தா­கச் சொல்லி இந்­திய மீன­வர்­க­ளைக் கைது செய்து சிறை­யில் அடைப்­ப­தை­யும், பட­கு­களை பறி­மு­தல்செய்­வ­தை­யும், பறி­மு­தல் செய்­யப்­பட்ட பட­கு­க­ளுக்கு லட்­சக்­க­ணக்­கில்  அப­ரா­தம் போடு­வ­தை­யும் இலங்கை அரசு தொடர்ச்­சி­யா­கச் செய்து வரு­கி­றது. கைது செய்­வ­தும், அவர்­களை விடு­தலை செய்ய வேண்­டும் என்று தமிழ்­நாடு அர­சா­னது இந்­திய அர­சுக்கு அழுத்­தம் கொடுப்­ப­தும், இந்­திய அரசு உட­ன­டி­யாக இலங்கை அர­சுக்கு கோரிக்கை விடுப்­ப­தும் தொடர்ந்து நடக்­கி­றது. ஆனா­லும் கைது நட­வ­டிக்­கையை இலங்கை நிறுத்­த­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இலங்­கைக் கடல் எல்­லைக்­குள் இந்­திய மீன­வர்­கள் அத்­து­மீறி நுழை­ய­வில்லை. இலங்­கை­யின் மீன் வளங்­களை கொள்­ளை­ய­டிப்­பது இல்லை. 
இந்­திய மீன­வர்­கள் வைத்­தி­ருக்­கும் மீன்­கள்­தான் சிங்­கள கடற்­ப­டை­யால் பறிக்­கப்­ப­டு­கி­றது. மீன­வர்­க­ளின் வலை­கள் அறுக்­கப்­ப­டு­கி­றது. நமது 
மீன­வர்­கள் தாக்­கப்­ப­டு­கி­றார்­கள். இதன் உச்­ச­மா­கச் சிலர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். பலர் கைதாகி கொண்டு செல்­லப்­ப­டு­கி­றார்­கள். இவை அனைத்­தும் ரக­சி­ய­மாக நடப்­பவை அல்ல. வெளிப்­ப­டை­யா­கத்­தான் நடக்­­கிறது. இதனை தமிழ்­நாடு அரசு கண்­டிப்­ப­தைப் போல, இந்­திய அரசு முத­லில்கடு­மை­யா­கக் கண்­டிக்க வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“இலங்கை கடல் எல்­லைக்­குள் இந்­திய மீன­வர்­கள் தொடர்ந்து சட்­ட­  வி­ரோ­த­மாக மீன் பிடிப்­ப­தற்கு இந்­திய அர­சும் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை 
என்­ப­தை­யும் நாங்­கள் அறி­வோம்” என்­கி­றார் இலங்கை அமைச்­சர். 
தங்­க­ளின் கொடூ­ரத்­துக்கு இந்­திய அர­சை­யும் பங்­கு­தா­ரர் ஆக்­கும் முயற்சி இது. இலங்கை அமைச்­ச­ரின் இந்­தக் கூற்றை பா.ஜ.க. அரசு உட­ன­டி­யாக மறுக்க வேண்­டும். ‘இந்­திய மீன­வர்­கள் சட்­ட­வி­ரோ­த­மாக மீன் பிடிக்­க­வில்லை’ என்­பதை பா.ஜ.க. அரசு உறுதி செய்து இலங்கை                அர­சுக்கு கடி­தம் அனுப்ப வேண்­டும். இன்­னொரு நாட்­டின் அமைச்­சர், இந்­திய மீன­வர்­கள் மீது அவ­தூ­றான, வஞ்­சம் தீர்க்­கும், பழி சொல்­லும் குற்­றச்­சாட்­டு­களை வைக்­கும் போது அதனை மறுக்க வேண்­டிய கடமை இந்­திய அர­சுக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அதே­போல், கச்­சத்­தீ­வில் இந்­தி­யா­வின் உரி­மையை ஒன்­றிய பா.ஜ.க. அரசு நிலை­நாட்­டும் முயற்­சி­க­ளைத் தொடங்க வேண்­டும். ‘கச்­சத்­தீவை தாரை வார்த்து விட்­டார்­கள்’ என்று பொங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது பா.ஜ.க. அரசு. அது உண்­மை­யாக இருந்­தால் இலங்கை அர­சு­டன் கச்­சத்­தீவு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையை பிர­த­மர் மோடி அவர்­கள் தொடங்க வேண்­டும்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“கச்­சத்­தீவை தாரை வார்த்­துக் கொடுத்­தது குறித்த புதிய உண்­மை­கள் வெளிப்­பட்டு உள்­ளன. இது ஒவ்­வொரு இந்­தி­ய­னை­யும் கோபப்­ப­டுத்தி இருக்­கி­றது” என்று பிர­த­மர் மோடி அவர்­கள் 31.3.2024 அன்று சொன்­னார்­கள். அது அவ­ரது உண்­மை­யான கோப­மாக இருந்­தால், இப்­போது இலங்கை அமைச்­சர் சொன்­ன­தும் அவ­ரைக் கோபம் கொள்ள வைத்­தி­ருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“அன்­றைய ஆளும் கட்­சி­யின் அலட்­சி­யத்­தால் கச்­சத்­தீவு தாரை வார்க்­கப்­பட்­டது. இத­னால் ஏழை மீன­வர்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­னர். அந்­தக் கட்­சி­கள் மீன­வர்­களை வஞ்­சிக்­கி­றது. மீன­வர்­க­ளுக்­காக அவர்­கள் எதை­யும் செய்­ய­வில்லை. மீன­வர்­க­ளுக்கு அவர்­கள் துரோ­கம் செய்­  
துள்­ள­னர்” என்று கண்­ணீர் வடித்­தார் பிர­த­மர் மோடி. இதோ, அவ­ருக்கு ஒரு வாய்ப்பு வந்­துள்­ளது. மீன­வர்­க­ளுக்கு நன்மை செய்ய ஒரு வாய்ப்பு வந்­துள்­ளது. இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிலை­நாட்­டி­ட­வும், இலங்கை கடற்­ப­டை­யால் தமிழ்­நாட்டு மீன­வர்­க­ளுக்கு 
ஏற்­ப­டும் அனைத்து இன்­னல்­க­ளுக்­கும் கச்­சத்­தீவை மீண்­டும்  பெறு­வதே  நிரந்­த­ரத் தீர்­வாக அமை­யும். இதனை கருத்­தில் கொண்டு, இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்து,  கச்­சத்­தீ­வைத் திரும்­பப் பெறு­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒன்­றிய அரசு உட­ன­டி­யாக மேற்­கொள்ள வேண்­டும்” என்று இந்த சட்­ட­மன்­றப் பேரவை வலி­யு­றுத்­து­ கி­றது என்ற தீர்­மா­னத்தை முன்­மொ­ழி­கி­றேன்”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று தமிழ்­நாடு சட்­ட­                 மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள் முன்­மொ­ழிந்து நிறை­வேற்­றிய தீர்­மா­னத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இந்த முயற்­சியை ஒன்­றிய பா.ஜ.க. அரசு தொடங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இலங்கை வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் பேச்­சுக்கு இந்­திய அரசு எதிர்­வினை ஆற்ற வேண்­டும். இந்­திய மீன­வர்­கள் மீது குற்­றம் சாட்­டும் இலங்கை அமைச்­சரை இந்­திய அரசு கண்­டிக்க வேண்­டும். கச்­சத்­தீ­வின் இந்­திய உரி­மையை நிலை­நாட்ட பேச்­சு­வார்த்தை தொடங்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">செய்­யுமா ஒன்­றிய பா.ஜ.க. அரசு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>