<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,289,957,988" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 00:02:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="07072025-VLR-15" position.sequence="15" ex-ref="07072025-VLR-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">கழிப்­ப­றைக் கருத்­த­ரங்க கருத்­து­க­ளுக்கு அரசு நிச்­ச­ய­மாக செயல்­வ­டி­வம் கொடுக்­கும்:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">தூய்­மைப் பணி­யா­ளர்­கள் செய்­வது, தூய்­மைப் பணி மட்­டு­மல்ல மனி­த­கு­லத்­திற்கே செய்­கின்ற ஒரு மாபெ­ரும் தொண்டு!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="42"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="28">சென்­னை­யில் கழிப்­ப­றைத் திரு­விழா நிறைவு நாளில் </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="44">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="mdspeech_15_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஜூலை 7 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, கலை­வா­ணர் அரங்­கில் நடை­பெற்ற சர்­வ­தே­சக் கழிப்­ப­றைத் திரு­விழா (இன்­டர்­நே­ஷ­னல் டாய்­லெட் ஃபெஸ்ட்­டி­வல்)  நிறைவு விழா­வில்  துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு  நிறைவு உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">விழா­வில்,  தூய்­மைப்  பணி­யா­ளர்­கள் நல­வா­ரி­யத்­தின் புதிய இணை­ய­த­ளத்­தைத் தொடங்கி வைத்து, தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மற்­றும் அவர்­க­ளு­டைய குடும்­பத்­தி­ன­ரு க்­குப் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­க­ளை­யும் அப்­போது அவர் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இத­னைத் தொடர்ந்து  மாண­வர்­க­ளுக்­கான சுகா­தார கையேட்­டினை வெளி­யிட்டு, குறும்­ப­டங்­கள், புகைப்­ப­டக் கண்­காட்­சி­கள் மற்­றும் கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் குறித்த `டாய்­லெய் எக்ஸ்போ’ போன்ற விழிப்பு உணர்வு நிகழ்ச்­சி­க­ளைப் பார்­வை­யிட்டு, அவற்றை ஏற்­பாடு செய்­தி­ருந்த ஏற்­பாட்­டா­ளர்­களை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">விழா­வில் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய நிறைவு உரை­ வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை மாந­க­ராட்சி மற்­றும் `வாஸ் லேப்’ இணைந்து நடத்­து­கிற சர்­வ­தே­சக் கழிப்­ப­றைத் திரு­விழா நிறைவு நாள் நிகழ்ச்­சி­யில் உங்­களை எல்­லாம் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் தொடர்­பாக சென்­னை­யில், பல்­வேறு இடங்­க­ளில் கடந்த ஒரு மாத கால­மாக ஏரா­ள­மான நிகழ்ச்­சி­களை, நீங்­கள் நடத்­திக்­கொண்டு இருக்­கி­றீர்­கள். அதற்­கான நிறைவு விழா­வை­யொட்டி, கலை­வா­ணர் அரங்­கில் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளைக் கடந்த இரண்டு நாட்­க­ளாக நடத்­தி­ய­து­டன், அதில் பங்­கேற்­கின்ற வாய்ப்­பை­யும் எனக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுத்­த­தற்­குப் பாராட்­டை­யும், இந்த நிகழ்ச்­சி­யின் வெற்­றிக்கு உறு­து­ணை­யாக இருந்த அத்­த­னைப்­பே­ருக்­கும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">கழிப்­ப­றைச் சுகா­தா­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">பொது­வாக, கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் போன்ற விஷ­யங்­களை யாரும் பெரி­தாக எடுத்­துக்­கொள்­வது இல்லை.  அதை நாம் தவிர்த்­து­விட்டு, கடந்து சென்று விடு­கி­றோம். ஆனால், நோயற்ற வாழ்­விற்கு, கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் என்­பது மிக­மிக அவ­சி­ய­மா­னது என்­பதை நீங்­கள் இந்­நே­ரம் உணர்ந்து இருப்­பீர்­கள்.  அதை உணர்ந்­த­தால், இன்­றைக்கு இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி உங்­க­ளின் பங்­கேற்­பு­டன் சிறப்­பாக நடந்­து­கொண்டு இருக்­கி­றது.  அதை நீங்­க­ளும் தொடர்ந்து நடத்தி வரு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">பள்ளி மாண­வர்­க­ளி­டையே கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்­ப­டுத்­து­வது, கழிப்­ப­றைச் சுகா­தா­ரம் சார்ந்த புத்­தாக்­கம் மற்­றும் முத­லீட்­டா­ளர்­கள் கருத்­த­ரங்கை நடத்­து­வது, பொதுக் கழிப்­பி­டங்­களை மக்­கள் பய­னுள்ள வகை­யில் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விப்­பது, பள்­ளிக்கு ஒரு சுகா­தார அமைச்­சரை உரு­வாக்­கு­வது, கழிப்­ப­றை­க­ளில் ஏதா­வது இடர்­கள் ஏற்­பட்­டால், அதை சரி­செய்­வ­தற்­காக கழிப்­பறை சரி­பார்ப்­பு­களை அமைப்­பது போன்ற திட்­டங்­களை, நான் மன­தார பாராட்­டு­கி­றேன், வர­வேற்­கி­றேன், வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இன்­றைய தினம் நம் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் அண்­மை­யில் உரு­வாக்­கிய தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர் நல வாரி­யத்­தைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் சுமார் 900 பேர் இங்கு வருகை தந்­துள்­ளீர்­கள்.  உங்­க­ளால்­தான் இன்­றைக்கு தமிழ்­நாடு மிகுந்த ஆரோக்­கி­ய­மான நிலை­யில் இருக்­கி­றது. அதற்கு முத­லில் எனது பாராட்­டும், நன்­றி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யின் அன்னை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">‘தூய்­மைப் பணி­யா­ளர்­கள்­தான் சென்­னை­யின் அன்னை’ என்று பல நேரங்­க­ளில் பெரு­மை­யா­கக் குறிப்­பிட்­டது உண்டு. அந்த அள­விற்கு, ஒரு தாய் தன் பிள்­ளையை பார்த்­துக்­கொள்­வ­து­போல தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளா­கிய நீங்­கள்­தான் சென்­னை­யைப் பார்த்­துக் கொள்­கி­றீர்­கள். சென்னை என்ற குழந்தை உங்­க­ளின் கைக­ளில் பத்­தி­ர­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை மட்­டு­மல்ல, தமிழ்­நாடு முழு­வ­தும் உங்­க­ளின் பணி என்­பது மகத்­தா­னது, போற்­றத்­தக்­கது. உங்­க­ளின் பணி மட்­டு­மல்ல, உங்­க­ளின் உள்­ள­மும் மிக­வும் தூய்­மை­யா­னது என்­பதை நான் அறி­வேன். இன்­னும் சொல்­லப்­போ­னால், நீங்­கள் செய்­வது வெறும் தூய்­மைப் பணி மட்­டு­மல்ல, அது மனி­த­கு­லத்­திற்கே நீங்­கள் செய்­கின்ற ஒரு மாபெ­ரும் தொண்டு. மனி­தக் கழி­வு­களை, மனி­தர்­களே அகற்­றும் கொடு­மையை முற்­றி­லும் அழிக்க வேண்­டும் என்­ப­து­தான் நம் திரா­விட மாடல் அர­சின், நம் முத­ல­மைச்­ச­ரின் ஒரே லட்­சி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">தொழில் முன்­னோ­டி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அத­னால்­தான், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அண்­ணல் அம்­பேத்­க­ரின் நினைவு நாளான கடந்த டிசம்­பர் 6-ஆம் தேதி தூய்­மைப் பணி­யா­ளர்­களை தொழில்­மு­னை­வோர்­க­ளாக்கி, அவர்­களை உயர்த்த வேண்­டும் என்ற உன்­ன­தத் திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார். அதன்­படி, அண்­ணல் அம்­பேத்­கர் தொழில் முன்­னோ­டி­கள் திட்­டத்­தின் கீழ், தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு 100 கழி­வு­நீர் அகற்­றும் வாக­னங்­களை, மானி­யத்­து­டன் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்ல, நீங்­கள் பாது­காப்­பா­கப் பணி செய்ய வேண்­டும் என்று, அதற்­கான பயிற்­சியை வழங்க, தூய்­மைப் பணி­யா­ளர் மேம்­பாட்­டுத் திட்­டத்தை 50 கோடி ரூபாய் செல­வில் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் 2023-ஆம் ஆண்டு தொடங்­கி­வைத்­தார். தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யம் மூலம் நகர்ப்­புற மேம்­பாட்டு வாரிய குடி­யி­ருப்­பு­க­ளில் 90 சத­வி­கித மானி­யத்­து­டன் 1,000 வீடு­களை நம் முத­ல­மைச்­சர் வழங்­கி­யுள்­ளார்.  தொழில்­மு­னை­வோர் மேம்­பாட்­டுத் திட்­டம், திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி, தொழிற்­கல்வி மற்­றும் பயிற்­சிக்­கான கடன் திட்­டம் போன்­ற­வற்றை உங்­க­ளுக்­கா­க­வும், உங்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கா­க­வும் வழங்க நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">கருத்­து­க­ளுக்­குச் செயல்­வ­டி­வம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அதன் தொடர்ச்­சி­யா­கத்­தான் இந்த நிகழ்ச்சி இன்­றைக்­குச் சிறப்­பாக நடை­பெற்­றுக் கொண்டு இருக்­கி­றது.  தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு தாட்கோ மூலம் பல்­வேறு முகாம்­கள் நடத்­தப்­பட்­டன. விபத்­துக் காப்­பீடு, கல்வி உதவி, திரு­மண உத­வித் தொகை, ஓய்­வூ­தி­யம், கண் பரி­சோ­தனை மற்­றும் கண்­ணாடி வழங்­கு­வது போன்ற உத­வி­கள் உங்­க­ளுக்­குத் தொடர்ந்து வழங்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">உங்­க­ளுக்கு இந்த நிகழ்ச்­சி­யின் வாயி­லாக, நிதி­யு­த­விக்­கான காசோ­லை­க­ளை­யும் இங்கு வழங்கி இருக்­கி­றோம். கடந்த ஒரு மாத­மாக நடந்த சர்­வ­தே­சக் கழிப்­ப­றைத் திரு­வி­ழா­வைத் தொடர்ந்து, இரண்டு நாட்­க­ளாக இங்கு பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்ட கருத்­து­க­ளுக்­குச் செயல்­வ­டி­வம் கொடுக்க, நம் அரசு நிச்­ச­ய­மாக நட­வ­டிக்கை எடுக்­கும் என்­பதை இங்கு தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எனவே, இந்த நிகழ்ச்­சியை மிகச் சிறப்­பாக நடத்­திய அத்­த­னைப்­பே­ருக்­கும் மீண்­டும் எனது பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  அடுத்­த­டுத்த ஆண்­டு­க­ளி­லும் இந்த நிகழ்ச்­சி­யைச் சிறப்­பாக நடத்த வேண்­டும்.  அதே­போல் இங்கு நலத்­திட்ட உத­வி­க­ளைப் பெற்ற அத்­தனை தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் எனது வாழ்த்­து­களை தெரி­வித்து இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு, சென்னை மாந­கர மேயர் பிரியா, சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை­யின் கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் பிர­தீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., தாட்­கோ­வின் தலை­வர் இளை­ய­ராஜா, தூய்­மைப் பணி­யா­ளர் நல வாரி­யத்­தின் தலை­வர் டாக்­டர் திப்­பம்­பட்டி ஆறுச்­சாமி, நல வாரி­யத்­தின் துணைத் தலை­வர் கனி­மொழி, சென்னை பெரு­ந­கர மாந­க­ராட்சி ஆணை­யர் கும­ர­கு­ரு­ப­ரன் ஐ.ஏ.எஸ்., தாட்­கோ­வின் மேலாண்மை இயக்­கு­நர் கந்­த­சாமி, சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை­யின் கூடு­தல் செய­லர் உமா ஐ.ஏ.எஸ்., தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யத்­தின் தலை­மைச் செய­லர் கோவிந்­த­ராஜ், சென்னை மாந­க­ராட்சி வடக்கு வட்­டார துணை ஆணை­யர் கட்டா ரவி தேஜா ஐ.ஏ.எஸ்., தூய்மை மிஷ­னின் தலைமை நிர்­வாக அலு­வ­லர் கங்கா திலீப், சீனஸ் அமைப்­பின் நிறு­வ­னர் அஸ்­வின்­கு­மார், வாஸ்­லேப் அமைப்­பின் நிறு­வ­னர் செவின் உள்­ளிட்ட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>