<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,444,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 08 2025 03:31:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08082025-CBE-05" position.sequence="05" ex-ref="08082025-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">நகராட்சி நிர்வாகம் – குடிநீர் வழங்கல் துறை சார்பில் 2538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமித உரை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup484569_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CM16.8.2025_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">14 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு கழக ஆட்­சி­யில் 11.19 விழுக்­கா­டாக அதி­க­ரித்து பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் இரட்டை இலக்கை எட்­டியுள்ளது தமிழ்­நாடு என்று நக­ராட்சி நிர்­வா­கம் – குடி­நீர் வழங்­கல் துறை சார்­பில் 2538 இளை­ஞர்­­களுக்கு பணி நிய­மன ஆணை­களை வழங்கி உரையாற்றுகையில் முதல்­வர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் பெரு­மிதத்துடன் குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று முன்தினம் (6.8.2025) நந்­தம்­பாக்­கம், சென்னை வர்த்­தக மையத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் நக­ராட்சி நிரு­வா­கம் 
மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பில் 2538 இளை­ஞர்­க­ளுக்கு பணி­நி­ய­மன ஆணை­களை வழங்கி ஆற்­றிய உரை 
வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­னு­டைய உரையை தொடங்­கு­வ­தற்கு முன்­னால், தமிழ்­நாட்­டிற்­கும், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் மகிழ்ச்­சி­யான ஒரு செய்­தியை உங்­க­ளுக்­குச் சொல்ல விரும்­பு­கி­றேன். நேற்று இர­வில் இருந்து இது­தான் Talk of the Town, ஏன் Talk of the Nation என்­பதே இது­தான்! நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி, 11.19 விழுக்­கா­டாக அதி­க­ரித்து இருக்­கி­றது என்­ப­து­தான் அந்த மகிழ்ச்­சி­யான செய்தி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி பெரும் உச்­சத்தை தொட்­டி­ருக்­கி­றது. 14 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, அதா­வது, மீண்­டும் திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சி­யில் தான், இரட்டை இலக்க அந்த வளர்ச்­சியை இன்­றைக்கு தமிழ்­நாடு எட்டி இருக்­கி­றது. இதை நாம் சொல்­ல­வில்லை. ஒன்­றிய அர­சின் புள்­ளி­யி­யல் மற்­றும் திட்ட அம­லாக்க அமைச்­ச­கத்­தின் திருத்­தப்­பட்ட மதிப்­பீ­டு­க­ளின்­படி, 2024-–25-ஆம் ஆண்­டில், தமிழ்­நாடு 11.19 விழுக்­காடு வளர்ச்­சியை பெற்­றி­ருக்­கி­றது என்று பதிவு செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆண்டு தொடக்­கத்­தில், தமிழ்­நாடு நிதி­நிலை அறிக்­கையை தாக்­கல் செய்­த­போது, நாம் கணித்­ததை விட, இது கிட்­டத்­தட்ட 2.2 விழுக்­காடு அதி­கம். முன்பு 9.69 விழுக்­காடு என்று மதிப்­பி­டப்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2024-–25-ஆம் ஆண்­டிற்­கான தமிழ்­நாட்­டின் மாநில பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம் - இப்­போது 11.19 விழுக்­கா­டாக உயர்ந்து இருக்­கி­றது. இதற்கு முன்பு, 2010-–11-ஆம் நிதி­ யாண்­டில் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யில்­தான், தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி 13.12 விழுக்­கா­டாக இருந்­தது.  14 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, மீண்­டும் கழக ஆட்­சி­யில், இரட்டை இலக்க பொரு­ளா­தார வளர்ச்­சியை தமிழ்­நாடு எட்­டி­யி­ருக்­கி­றது. இந்­தி­யா­வி­லேயே மிக விரை­வாக வள­ரும் பொரு­ளா­தா­ர­மாக தமிழ்­நாடு திகழ்­கி­றது. இது வேறு எந்த பெரிய மாநி­ல­மும் பெறாத மாபெ­ரும் வளர்ச்சி.  இது சாதா­ர­ண­மாக நடந்­து­வி­ட­வில்லை. பல்­வேறு நெருக்­க­டி­கள், அவ­தூ­று­க­ளுக்கு இடை­யில்­தான், இந்த வெற்­றியை நாம் அடைந்­தி­ருக்­கி­றோம். அந்த வகை­யில், இது மிக­வும் சிறப்­பான வெற்றி! இது தனிப்­பட்ட ஸ்டாலி­னின் வெற்றி இல்லை. அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும் ஒவ்­வொரு அமைச்­சர் - அனைத்­துத் துறை அதி­கா­ரி­கள் – கடை­நிலை அரசு ஊழி­யர்­கள் என்று ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் முறை­யாக செயல்­ப­டுத்­திய நம்­மு­டைய எல்­லா­ரு­டைய உழைப்­புக்­கும் கிடைத்­தி­ருக்­கக்­கூ­டிய கூட்டு வெற்றி இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">காணிக்­கை­யாக்­கு­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்னை நம்பி ஆட்­சிப்­பொ­றுப்பை ஒப்­ப­டைத்­தி­ருக்­கக்­கூ­டிய தமிழ்­நாட்­டின் கோடிக்­­கணக்­கான மக்­க­ளுக்கு இந்த நேரத்­தில், இந்த வெற்­றிச் செய்­தியை நான் காணிக்­கை­யாக்­கு­கி­றேன். “எல்­லார்க்­கும் எல்­லாம்” என்ற இலக்­கோடு பய­ணிக்­கும் திரா­விட மாடல் ஆட்­சி­யின் மகத்­தான வெற்­றிப் பய­ணத்­திற்கு கிடைத்த நற்­சாட்­சிப் பத்­தி­ரம்­தான் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது அடைந்­தி­ருக்­கும் இலக்­கோடு நான் திருப்­தி­ய­டைய மாட்­டேன். இன்­னும் அதி­க­மான உய­ரத்தை நாம் அடைய வேண்­டும். அதை நோக்­கிய பய­ணத்தை திரா­விட மாடல் 2.0-வில் தொடர்­வோம்! அந்­தப் பய­ணத்­திற்கு நீங்­கள் எல்­லோ­ரும்­தான் துணை­யாக இருக்­கப் போகி­றீர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த மகிழ்ச்­சி­யான செய்­தி­யு­டன், இன்று நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பில், 2 ஆயி­ரத்து 538 பேருக்கு பணி நிய­மன ஆணை­கள் வழங்­கும் வாய்ப்பை பெற்­ற­தற்கு நான் உள்­ள­ப­டியே மகிழ்ச்­சி­ய­டை­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">2.538 குடும்­பங்­க­ளுக்கு இன்­றைக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஒளி­யேற்­றி­யுள்ள திரா­விட மாடல் அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உத­விப் பொறி­யா­ளர் - நகர அமைப்பு அலு­வ­லர்­கள் - இள­நி­லைப் பொறி­யா­ளர்­கள் - துப்­பு­ரவு ஆய்­வா­ளர்­கள் உள்­ளிட்ட இந்­தப் பணி­யி­டங்­க­ளால் 2 ஆயி­ரத்து 538 குடும்­பங்­க­ளின் வாழ்க்­கை­யில் ஒளி­யேற்­றி­யி­ருக்­கி­றது நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­கள்­தான் இந்த நாட்­டின் தமிழ்ச்­ச­மு­தா­யத்­தின் அடித்­த­ளம்! இளை­ஞர்­களை முன்­னேற்­று­வ­தும் - முன்­னேற வாய்ப்­பு­களை உரு­வாக்­கிக் கொடுப்­ப­தும்­தான் நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சின் முதன்­மை­யான பணி! திரா­விட மாடல்அரசு என்­பது இளை­ஞர்­க­ளுக்­கானஅரசு! அத­னால்­தான், நான் முதல்­வன் - தமிழ்ப்­பு­தல்­வன் - புது­மைப்­பெண் உள்­ளிட்ட திட்­டங்­கள் மூல­மாக, மாண­வர்­க­ளை­யும், இளை­ஞர்­க­ளை­யும் கல்­வி­ய­றிவு பெற்­ற­வர்­­களாக - திறன்­மிக்­க­வர்­க­ளாக உயர்த்­திக் ­கொண்­டி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">இளை­ஞர்­க­ளுக்கு பயிற்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கல்­வி­யும் - திறன்மேம்­பாட்டு பயிற்­சி­யும் கொடுத்­தால் மட்­டும் போதாது. இளை­ஞர்­க­ளுக்­குத் தேவை­யான தகு­தி­யான வேலை­வாய்ப்­பு­க­ளை­யும் உரு­வாக்க வேண்­டும் என்று திட்­ட­மிட்டு உழைத்­துக் கொண்­டி­ருக்­கி­றோம்! இத­னால் உரு­வான வேலை­வாய்ப்­பு­கள் பற்றி புள்­ளி­வி­வ­ர­மாக சொல்ல வேண்­டும் என்­றால்......</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் T.N.P.S.C - T.R.B - M.R.B - T.N.U.S.R.B உள்­ளிட்ட 
தேர்­வா­ணை­யங்­கள் மூல­மா­க­வும், நக­ராட்சி நிர்­வா­கம், கூட்­டு­ற­வுத் துறை, வரு­வாய்த் துறை மற்­றும் பல்­வேறு பொதுத் துறை நிறு­வ­னங்­கள் மூல­மா­க­வும், 1 இலட்­சத்து எட்­டா­யி­ரத்து 111 பேருக்கு பணி நிய­ம­னம் வழங்­கி­யி­ருக்­கி­றோம்! திறன் மேம்­பாட்­டுக் கழ­கத்­தின் மூல­மாக, “நான் முதல்­வன்” திட்­டத்­தில் வேலை­வாய்ப்பு முகாம்­கள் நடத்தி, 3 இலட்­சத்து 28 ஆயி­ரத்து 393 இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் வழங்­கி­யி­ருக்­கி­றோம்! தொழி­லா­ளர்  மற்­றும் வேலை­வாய்ப்­புத் துறை மூலம் வேலை­வாய்ப்பு முகாம்­களை நடத்தி, 2 இலட்­சத்து 65 ஆயி­ரத்து 223 பேருக்கு 
தனி­யார் துறை­க­ளில் வேலை­வாய்ப்­பு­கள் வழங்­கி­யி­ருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">ஒதுக்­கீட்­டில் வேலை­வாய்ப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதன்­மு­றை­யாக, விளை­யாட்­டுத் துறை­யில், தேசிய மற்­றும் உல­க­ள­வில் சாதனை படைத்­தி­ருக்­கக்­கூ­டிய தமிழ்­நாட்டு விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கும் ஒதுக்­கீடு வழங்­கப்­பட்டு, அதன்­மூ­லம் 84 நபர்­க­ளுக்கு இந்த ஆண்டு வேலை­வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் முதல்­வன் திட்­டத்­தில், பயிற்­சி­பெற்ற 89 இளை­ஞர்­கள் பல்­வேறு முக்­கிய ஒன்­றிய அர­சுப் பணி­க­ளில் இடம் பிடித்­தி­ருக்­கி­றார்­கள்! அது­மட்­டு­மல்ல, இந்த திட்­டத்­தில் படித்த 18 இளை­ஞர்­க­ளுக்கு பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளில் வேலை­வாய்ப்பு ஏற்­ப­டுத்­தித் தரப்­பட்­டி­ருக்­கி­றது! இப்­படி, மொத்­தம் 6இலட்­சத்து 41 ஆயி­ரத்து 664 பேர், கடந்த நான்­காண்­டு­க­ளில், பணி நிய­ம­னம் பெற்­றி­ருக்­கி­றார்­கள்! இதெல்­லாம், நம்­மு­டைய தொடர் முயற்­சி­க­ளுக்கு மாண­வர்­க­ளுக்கு வழங்­கும் திறன் பயிற்­சி­க­ளுக்­கான பலன் இது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தொழில் வளர்ச்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாடு முன்­னிலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த வெற்­றிப் பய­ணம் தொட­ர­வும், தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளின் எதிர்­கா­லம் சிறக்­க­வும், நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு தொடர்ந்து பாடு­ப­டும்!  அமை­தி­யான சூழல் - சிறப்­பான சட்­டம் ஒழுங்கு - திற­மை­யான இளை­ஞர்­கள் - தொழில் வளர்ச்­சிக்­குத் தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள்,  நம்­மு­டைய உழைப்பு மற்­றும் தொலை­நோக்­குப் பார்­வை­யோடு நாம் முன்­னெ­டுக்­கும் திட்­டங்­க­ளால், 
தமிழ்­நாடு இன்­றைக்கு தொழில்­வ­ளர்ச்­சி­யில் இந்­தி­யா­வி­லேயே முன்­னணி மாநி­ல­மாக இருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல்­வேறு இந்­திய நிறு­வ­னங்­க­ளுக்­கும், M.N.C-களுக்­கும் தமிழ்­நா­டு­தான் முத­லீ­டு­ க­ளுக்­கான Destination! கடந்த நான்கு ஆண்­டு­க­ளில், உற்­பத்தி துறை, I.T. துறை, கட்­டு­மா­னத் துறை என்று பல்­வேறு வகை­யான தொழில் நிறு­வ­னங்­கள் மேற்­கொண்ட 941 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மூல­மாக 10 இலட்­சத்து 63 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு தமிழ்­நாட்­டில் முத­லீ­டு­கள்செய்­தி­ருக்­கி­றார்­கள்! இத­னால், 2 இலட்­சத்து 30 ஆயி­ரத்து 856 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைத்­தி­ருக்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">திரா­விட மாடல் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">பய­ன­டைந்த மாணவ – மாண­வி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு உங்­க­ளுக்­கெல்­லாம் Appointment order வழங்­கி­யி­ருக்­கி­றேன்! ஏற்­கெ­னவே, நான் சொன்­னது போல, இளை­ஞர்­க­ளுக்கு என்­ன­வெல்­லாம் தேவையோ - அதை­யெல்­லாம் நம்­மு­டைய அரசு வழங்­கி­கொண்டு இருக்­கி­றது! அதில் Highlight-ஆக சில­வற்றை சொல்ல வேண்­டும் என்­றால், 41 இலட்­சம் பேர் நான் முதல்­வன் திட்­டத்­தி­லும் - 4 இலட்­சம் மாண­வர்­கள் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத்­தி­லும் - 6 இலட்­சம் மாண­வி­கள் புது­மைப்­பெண் திட்­டத்­தி­லும் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பல்­வேறு மாவட்­டங்­க­ளில் தோழி விடு­தி­கள் தொடங்­கி­யி­ருக்­கி­றோம்! இப்­படி, கல்­வி­யைச் சுற்­றி­யும் - அறி­வைச் சுற்­றி­யும் - ஆற்­ற­லைச் சுற்­றி­யும் செயல்­ப­டக்­கூ­டிய முன்­னெ­டுப்­பு­க­ளின் வரி­சை­யில், அடுத்து, கல்­லூ­ரி­யில் படிக்­கும் 20 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு Laptop தரப்­போ­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பொது­வாக, நான் மாண­வர்­க­ளி­டம் பேசும்­போது, “கல்­வி­தான் யாரா­லும் திருட முடி­யாத சொத்து” என்று சொல்லி அவர்­களை Motivate செய்­வேன். அப்­ப­டிப்­பட்ட கல்­விச் செல்­வத்தை பெற்று, முன்­னேற்­றத்­திற்­கான முதல் படி­யில் காலடி வைக்­கும் இளை­ஞர்­க­ளான உங்­க­ளுக்கு நான் சொல்­லிக்­கொள்­வது, “நாள்­தோ­றும் உல­கம் Update ஆகிக்­கொண்­டி­ருக்­கி­றது. அதற்கு equal-ஆக நீங்­க­ளும் Upgrade ஆக வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">இளை­ஞர்­க­ளின் முன்­னேற்­றத்­திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">அரசு உத­விட தயா­ராக உள்­ளது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேக்­கம் என்­பதே உங்­க­ளின் Career-இல் இருக்க கூடாது! அதற்கு ஏற்­றது போல Skill Develop செய்­து­கொள்­ளுங்­கள். உங்­க­ளுக்கு Support செய்ய நாங்­கள் இருக்­கி­றோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்வை பார்த்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இளை­ஞர்­க­ளுக்கு நான் சொல்­லிக்­கொள்ள விரும்­பு­வது… அடுத்து அமைய இருக்­கும் நம்­மு­டைய திரா­விட மாடல் 2.0 ஆட்­சி­யி­லும், இன்­னும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­பு­கள் வர போகி­றது. அதற்­கான அனைத்து வேலை­க­ளை­யும் நாங்­கள் இப்­போதே தொடங்­கி­விட்­டோம். அந்த வாய்ப்­பு­களை நீங்­கள் பயன்­ப­டுத்­திக்­கொண்டு முன்­னேற வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">கண்­ணி­யத்­து­டன் கட­மை­யாற்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">மக்­க­ளுக்குச் சேவை­யாற்­றுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­போல், பணி­நி­ய­ம­னம் பெற்று, நம்­மு­டைய அர­சின் ஒரு அங்­க­மாக செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள் உங்­க­ளுக்­குக் கிடைத்­தி­ருக்­கும் இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி, எல்­லோ­ரி­ட­மும் நல்ல பெயரை வாங்­க­வேண்­டும்.  உங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, உங்­கள் பெற்­றோ­ருக்­கும், உங்­கள் ஊருக்­கும், இந்த அர­சாங்­கத்­திற்­கும் நல்ல பெயரை பெற்­றுத் தர­வேண்­டும். இன்­றைக்கு உங்­க­ளு­டைய பெற்­றோர்­கள் மகிழ்ச்­சி­யோடு வந்­தி­ருக்­கி­றார்­கள். இன்­றைக்கு மட்­டு­மல்ல, தின­மும் நீங்­கள் மகிழ்ச்­சி­யாக, பெரு­மை­யாக அவர்­களை வைத்­துக் கொள்ள வேண்­டும். அப்­படி வைத்­துக் கொள்ள வேண்­டும் என்­றால், நீங்­கள் செய்­கின்ற பணி­களை சிறப்­பாக செய்­ய­வேண்­டும். உங்­க­ளி­டம் வரு­கி­ற­வர்­க­ளி­டம், நீங்­கள் சென்று சந்­திக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளி­டம் அன்­பாக பேசுங்­கள்.  அவர்­க­ளின் குறை­களை பொறு­மை­யாக கேட்­ப­து­டன், அதனை விரை­வாக செயல்­ப­டுத்த நீங்­கள் உழைக்க வேண்­டும். மக்­க­ளுக்­குத் துணை­யாக நாம் இருந்­தால், மக்­க­ளும் என்­றைக்­கும் நமக்­குத் துணை­யாக இருப்­பார்­கள்! கண்­ணி­யத்­து­டன்கட­மை­யாற்றி - மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற உங்­களை வர­வேற்று, உங்­க­ளின் செயல்­பா­டு­க­ளால் அர­சுக்கு நற்­பெ­யரை பெற்­றுத் தர வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று முன்தினம் (6.8.2025) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலைப் பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டமிடல்), பணி ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 2538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன்,  சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி.வினய்,  நகராட்சி நிருவாக இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி,  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்,  பேரூராட்சிகளின் இயக்குநர் எம்.பிரதீப் குமார்  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>