<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,400,958,994" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 07 2025 21:16:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08082025-MDU-12" position.sequence="12" ex-ref="08082025-MDU-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="23">கட­லூர் மாவட்­டத்­தில் பள்ளி தலை­மை­யா­சி­ரி­யர்களுடனான</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">மாநில அள­வி­லான அடை­வுத் திறன் மீளாய்­வுக் கூட்­டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="23">அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி தலை­மை­யில் நடை­பெற்­றது!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கட­லூர், ஆக. 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர்  அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி தலை­மை­யில் மாவட்ட ஆட்­சித்­த­லை­வர்  சிபி ஆதித்யா செந்­தில்­கு­மார்  முன்­னி­லை­யில் கட­லூர் மாவட்­டம், கும­ரா­பு­ரம் கிரு­ஷ்ணசாமி பொறி­யி­யல் கல்­லூரி அரங்­கத்­தில் பள்ளி தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளு­ட­னான மாநில அள­வி­லான அடை­வுத் திறன் மீளாய்­வுக் கூட்­டம் நேற்று முன்­தி­னம் (06.08.2025) நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தொடர்ந்து, கட­லூர் மஞ்­சக்­குப்­பத்­தில் அர­சுப் பள்ளி மாணவ, மாண­வி­யர்­கள் தங்­கி­ப­யி­லும் வண்­ணம் ரூ.19.33 கோடி மதிப்­பீட்­டில் வகுப்­ப­றை­கள் மற்­றும் மாணவ, மாண­வி­யர்­க­ளுக்­கென தனித்­த­னி­யான விடுதி வச­தி­க­ளு­டன் கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்டு வரு­வதை பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர்அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி தெரி­விக்­கை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கல்வி மற்­றும் மருத்­து­வத்­திற்கு மிகுந்த முக்­கி­யத்­து­வம் அளித்து பல்­வேறு சிறப்­புத் திட்­டங்­களை அறி­வித்து அதனை கடை­கோடி மக்­க­ளுக்­கும் கொண்­டு­சேர்க்­கும் வகை­யில் செயல்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். தமி­ழக மாண­வர்­க­ளின் நலனை கருத்­தில்­கொண்டு பொரு­ளா­தார ஏற்­றத்­தாழ்­வின்றி உயர்­த­ர­மான கல்­வி­யினை பயில வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும், மாணாக்­கர்­கள் கல்வி கற்­ப­தற்­கான சிறந்த சூழ்­நி­லை­களை ஏற்­ப­டுத்தி தர­வேண்­டும் என்­ப­தற்­காக இல்­லம் தேடி கல்வி, எண்­ணும் எழுத்­தும் உள்­ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி யுள்ளார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் படி, ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கும் பள்ளி தலை­மை­யா­சி­ரி ­யர்­க­ளுக்­கான மாநில அள­வி­லான அடை­வுத் திறன் தேர்வு குறித்து ஆய்­வுக்­கூட்­டம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கை­யில் 20 மாவட்­டங்­க­ளில் நிறை­வு­ செய்து, இன்று 21ஆவது மாவட்­ட­மாக கட­லூர் மாவட்­டத்­தில் ஆய்வு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. தமிழ்­நாட்­டில் உள்ள 9,80,340 பள்­ளி­கள் ஒவ்­வொன்­றிற்­கும் தனித்­தனி முன்­னேற்ற அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இந்த மாநில அள­வி­லான அடை­வுத் தேர்­வின் அறிக்கை பள்ளி வாரி­யாக தனித்­த­னி­யாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இப்­பட்­டி­ய­லில் கட­லூர் மாவட்­டத்­தினை பொறுத்­த­வரை விருத்­தா­ச­லம், மங்­க­ளூர், அண்­ணா­கி­ரா­மம், கும­ராட்சி, பரங்­கிப்­பேட்டை வட்­டா­ரங்­களை சேர்ந்த பள்­ளி­கள் முன்­னி­லை­யில் உள்­ளது. அடுத்த நிலை­யில் ஸ்ரீமுஷ்­ணம், புவ­ன­கிரி, கீரப்­பா­ளை­யம், கம்­மா­பு­ரம் ஆகிய வட்­டா­ரங்­க­ளும், கூடு­தல் கவ­னம் செலுத்த வேண்­டிய வட்­டா­ரங்­க­ளாக கட­லூர், காட்­டு­மன்­னார்­கோ­யில், பண்­ருட்டி, குறிஞ்­சிப்­பாடி  ஆகி­யவை உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">அரசு பள்ளி மாண­வர்­க­ளுக்கு கற்­றல் முறை­யாக ஆசி­ரி­யர் கற்­றுக் கொடுத்­தாரா என்­பதை சோதிக்க ஒவ்­வொரு ஆண்­டும் அனைத்து அரசு மற்­றும் அரசு உத­வி­பெ­றும் தொடக்க, நடு­நிலை, உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளுக்கு மாநில அள­வி­லான அடை­வுத் (SLAS) தேர்­வா­னது மாண­வர்­க­ளுக்கு நடை­பெ­று­கி­றது. இந்த தேர்­வில், மாண­வர் பெறும் மதிப்­பெண்ணை வைத்தே ஆசி­ரி­ய­ரின் தரம் நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கி­றது. மாண­வர்­கள் எடுக்­கும் மதிப்­பெண் அடிப்­ப­டை­யில், சம்­பந்­தப்­பட்ட மாவட்­டத்­தின் கற்­றல் அடைவு திறன் பட்­டி­யல் தயா­ரிக்­கப்­பட்டு வெளி­யி­டப்­ப­டு­வ­து­டன், பள்ளி அள­வி­லும் பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­டு­கி­றது. இத­னால் அப்­பள்­ளி­யில் மாண­வர்­க­ளின் கற்­றல் திறன் குறித்­தும், முன்­னேற்­றம் குறித்­தும் தெரிந்­து­ கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இத்­தேர்­வில் மாண­வர்­கள் நல்ல முறை­யில் மதிப்­பெண் பெறு­வ­தற்­காக ஆசி­ரி­யர்­கள் மேற்­கொள்­ளும் பயிற்சி, சிறப்பு வகுப்­பு­கள் குறித்து தலை­மை­யா­சி­ரி­யர்­கள் எடுத்­து­ரைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்­தேர்­வில் கட­லூர் மாவட்­ட­மா­னது 10ஆவது இடம் பிடித்து முந்­தைய ஆண்­டு­களை காட்­டி­லும் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. அடுத்­த­ வ­ரும் தேர்­வில் முதல் 5 இடங்­க­ளுக்­குள் எடுக்க எனது வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். அது­மட்­டு­மன்றி “கோடை­யில் கற்­றல் கொண்­டாட்­டம்“ என அர­சுப் பள்ளி மாண­வர்­க­ளின் கோடை விடு­மு­றை ­யினை பய­னுள்ள வகை­யில் பல்­வேறு திறன்­களை வளர்த்­தி­டும் வகை­யி­லும், மற்ற மாவட்­டத்­திற்கு முன்­னு­தா­ர­ண­மா­க­வும் மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் அவர்­கள் சிறப்­பாக மேற்­கொண்­டுள்­ளார்.	தலை­மை­யா­சி­ரி­யர்­கள் பள்ளி வளா­கத்­தினை தனது முழுக்­கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்ள வேண்­டும். ஆசி­ரி­யர்­க­ளு­டன் அவ்­வப்­போது மாண­வர்­க­ளின் கற்­றல்­தி­றன்­களை மேம்­ப­டுத்­து­வது குறித்து ஆய்­வுக்­கூட்­டங்­கள் மேற்­கொள்ள வேண்­டும். தலை­மை­யா­சி­ரி­யர்­கள் பள்­ளி­க­ளில் முறை­யாக வகுப்­பு­கள் நடை­பெ­று­வதை கண்­கா­ணித்­திட வேண்­டும். மேலும் தேவைக்­கேற்ப வகுப்­பு­களை ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கட­லூர் மாவட்­டத்­தில் கடந்த கல்­வி­யாண்­டில் 12ஆம் வகுப்­பில் அர­சுப் பள்­ளி­யில் பயின்ற 193 மாண­வர்­கள் முதன்மை கல்வி நிறு­வ­னங் க­ளில் உயர்­கல்­விக்­காக சேர்ந்­துள்­ள­னர். கட­லூர் மாவட்­ட­மா­னது மாநில அள­வி­லான அடை­வுத் திறன் தேர்­வில் இரண்­டா­மி­டம் பெற்­றுள்­ளது. கட­லூர் மாவட்­டத்­திற்கு பெருமை சேர்க்­கும் வித­மாக அமைந்­துள்­ளது. பள்ளி ஆசி­ரி­யர்­கள் முன்­னெ­டுப்பே இந்­நி­லைக்கு சாத்­தி­ய­மா­னது. அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் சிறந்த கல்­வி­யினை வழங்­கிட தமி­ழக அரசு மேற்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு உறு­து­ணை­யாக செய­லாற்­றிட வேண்­டும் என பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் திரு.அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்­கள் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்­நி­கழ்ச்­சி­யில் மாநில பெற்­றோர்– ஆசி­ரி­யர் கழக துணைத் தலை­வர் முத்­துக்­கு­மார், பயிற்சி ஆட்­சி­யர் மாலதி மாவட்ட முதன்மை கல்வி அலு­வ­லர் எல்­லப்­பன், மாவட்ட ஆசி­ரி­யர் கல்வி மற்­றும் பயிற்சி நிறு­வன முதல்­வர் பழனி, மாவட்ட கல்வி அலு­வ­லர்­கள், தலை­மை­யா­சி­ரி­யர்­கள், பள்­ளிக்­கல்­வித்­துறை சார்ந்த அல­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>