<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,36,492,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 07 2025 21:16:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08082025-MDU-14" position.sequence="14" ex-ref="08082025-MDU-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="18">13 ஆம்  பக்கத்  தொடர்ச்சி</lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">மாநிலங்களவையில்  திருச்சி  சிவா  பேச்சு...</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மத்­திய கிழக்கு மற்­றும் ஆப்­பி­ரிக்க நாடு­க­ளில் தண்­ணீரை ஆயு­த­ம­ய­மாக்­க­லா­லும் தண்­ணீர் பற்­றாக்­குறை      அதி­க­ரிப்­ப­தா­லும் ஆயு­தம் தாங்­கிய அமைப்­பு­க­ளில் ஆள்­சேர்ப்பு அதி­க­ரிப்­ப­தாக ஓர் ஆய்வு கூறு­கி­றது. இருக்­கும் சிறி­த­ளவு நீரை ஆயு­தம் தாங்­கிய குழுக்­கள் தங்­க­ளுக்­குள் பங்­கு­போட்­டுக் கொள்­கின்­றன.  இத­னா­லேயே  பொது­மக்­க­ளில் பலர் அந்த குழுக்­க­ளில் இணைந்து கொள்­கின்­ற­னர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தீவிரவாதிகள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">உருவாவார்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் சிந்­து­நதி நீரை நிறுத்­தி­னால் என்ன நடக்­கும்? நிறைய தீவி­ர­வா­தி­கள் உரு­வா­வார்­கள், உட­ன­டி­யாக இந்­தி­யாவை தாக்­கு­வார்­கள். தண்­ணீரை திறக்­க­வில்லை என்­றால் அதற்­கான மாற்று சேமிப்பு வழி உங்­க­ளி­டம் என்ன உள்­ளது? உங்­க­ளி­டம் அணை­கள் உள்­ள­னவா, நீர்த்­தேக்­கங்­கள் உள்­ள­னவா? கால்­வாய்­கள் உள்­ள­னவா?   நீங்­கள் அப்­படி ஒன்றை கட்­டி­னால் கூட, எல்லை பகு­தி­க­ளில் உள்ள தீவி­ர­வா­தி­க­ளின் தாக்­கு­த­லுக்கு அவை இரை­யா­கக் கூடும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­விற்­கும் சீனா­விற்­கும் இடையே ஏதா­வது விரும்­பத்­த­காத சூழ்­நிலை ஏற்­பட்­டால், அவர்­கள் நம் எல்லை பகு­தி­யில் இதே போன்று செயல்­பட்­டால், அங்கு வசிக்­கும் வட­ கி­ழக்கு  மக்­க­ளின் நிலை என்ன?  தற்­போது அரு­ணாச்­சல பிர­தேச மாநி­லத்­தில் ஓர் அணை கட்ட திட்­ட­மி­டப்­பட்­டு ள்­ளது. உல­கிலே பெரிய  அணை­யாக இருக்­கக்­கூ­டிய இந்த அணை கட்­டு­மா­னம் ஓராண்­டுக்­குள் முடிக்­கப்­பட்­டு­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இத­னால் யாருக்கு பாதிப்பு? வட­கி­ழக்­கில் வாழும் மக்­க­ளுக்கு பாதிப்பு.  நாம் எடுக்­கும் ஒவ்­வொரு செய­லுக்­கும் அதற்கு இணை சக்­தி­கொண்ட எதிர்­செ­யல் ஒன்று  உண்டு  என்­பதை  நீங்­கள் முன்­னரே எண்­ண­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் வெறும் தீவி­ர­வாத தளங்­களை மட்­டும்­தான் இலக்­காக வைத்­தி­ருந்­தீர்­கள் என்று கூறி­னீர்­கள். பின்­னர் இரா­ணுவ தளங்­களை இலக்­காக வைத்­தி­ருந்­தீர்­கள் என்று கூறி­னீர்­கள்.  பின் விமா­னப் படை­யைப் பற்றி கூறி­னீர்­கள். தற்­போது நீங்­கள் தண்­ணீரை நிறுத்­தி­வைத்­து­விட்டு, தீவி­ர­ வா­தத்­து­டன் போரா­டு­வ­தற்­கான ஒரு முறை என்று கூறு­கி­றீர்­கள்.  இதனை நாங்­கள் நம்ப வேண்­டுமா? இதற்கு பெயர்­தார் ஆப­ரே­ஷன் சிந்­துரா? ஆப­ரே­ஷன்      சிந்­தூ­ரில் என்­ன­வெல்­லாம் நடந்­தது? எவ்­வ­ளவு  பேர்  உயி­ரி­ழந்­த­னர்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளது விமா­னங்­கள் சுடப்­பட்­ட­ னவா, என்று எதிர்க்­கட்சி தலை­வர் கேட்­டார். அப்­படி  ஒரு கேள்­வியை நீங்­கள் எப்­படி கேட்­க­லாம் என்று நீங்­கள் சொல்­கி­றீர்­கள்?  மக்­க­ள­வை­யில் பதில் அளித்த  பாது­காப்­புத்­துறை அமைச்­சர் சொல்­கி­றார், ஒரு  தேர்வு நடத்­தப்­பட்­டால்,  அதன் முடிவு என்ன என்­று­தான் பார்க்­க­வேண்­டும், எத்­தனை பென்­சில்­கள் உடைந்­தன என்று பார்க்­கக்­கூ­டாது என்று. எவ்­வ­ளவு அரு­மை­யான             எடுத்­துக்­காட்டு.  ஒரு போரின்­போது, இரண்டு பக்­க­மும் இழப்­பு­கள் ஏற்­ப­டு­வது இயல்­பா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாம் குறை­வாக இழந்­தி­ருக்­க­லாம், அவர்­கள் அதி­க­மாக இழந்­தி­ருக்­க­லாம்.  ஆனால் என்ன நடந்­தது என்று சொல்­வ­தில் என்ன தவறு இருக்­கி­றது.  அரசு செய்தி தொடர்­பா­ளர் குறிப்­பிட்­ட­படி, காஷ்­மீ­ரில் பொது­மக்­கள் 50 பேர்     உயி­ரி­ழந்­துள்­ள­னர்.  எவ்­வ­ளவு விமா­னங்­கள் சுட்டு வீழ்த்­தப்­பட்­டன என்று  இந்­நாட்டு மக்­க­ளுக்கு கூறுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அமைச்சரே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இவ்வாறு கூறலாமா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதனை ஆப­ரே­ஷன் சிந்­தூர்,      ஆப­ரே­ஷன் மகா­தேவ் என்று எப்­படிவேண்­டு­மா­னா­லும் கூறிக்­கொள்­ளுங்­கள்.கலோ­னல் சோஃபியா குரேஷி என்ற அற்­பு­த­மான பெண்­மணி எவ்­வாறு குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்?  பாகிஸ்­தா­னில் உள்ள தீவி­ர­வா­தி­க­ளின் சகோ­தரி என்று அவரை தொடர்­பு­ப­டுத்­து­கி­றீர்­கள். இதனை நீதி­மன்­றம் கூட கண்­டித்­தது. உங்­கள் கட்சி கண்­டித்­ததா? இந்த நாட்டை வழி­ந­டத்­தும் உங்­கள் பிர­த­மர் கண்­டித்­தாரா? இப்­படி செய்­ய­லாமா? இப்­படி ஒரு கருத்தை கூறி­ய­வர்  இன்­னும் அமைச்­ச­ராக உள்­ளார்.  நீங்­கள் எதை நினைக்­கி­றீர்­களோ அதை செய்­ய­மு­டி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய பெண் மல்­யுத்த வீராங்­க­ணை­க­ளுக்கு என்ன நடந்­தது? அவர்­கள் நாட்­டின் பெரு­மி­தம்.  உங்­கள் கட்சி எம்.பி. பிரிஜ் பூஷ­னால் அவர்­கள் மல்­யுத்­தம் செய்­வ­தையே விட்­டு­விட்­ட­னர்.  நீங்­கள் எப்­போ­தா­வது இதனை எதிர்த்­துள்­ளீர்­களா? நான் ஒன்றை நினை­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். நீங்­கள் அவைத்­த­லை­வ­ராக வீற்­றி­ருக்­க­லாம். நீங்­களே எல்­லா­மாகவும் இருக்­க­லாம். இதே பிரச்­சினை முன்­ன­ரும் நாடா­ளு­மன்­றத்­தில் எழுந்­துள்­ளது. ஒவ்­வொரு  அமர்­வி­லும் அவை துணைத்­த­லை­வர்கூறு­கி­றார், 2022ஆம் ஆண்டு அவைத்­த­லை­வர் ஒரு விதியை அளித்­துள்­ளார் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதே போன்று ராகுல் காந்தி பற்றி பேச்சு எழுந்­த­போ­தும் நடந்­தது. அவர் மற்­றொரு அவை­யின் உறுப்­பி­னர் அவ­ரைப் பற்றி ஏன் பேசு­கி­றீர்­கள் என்று நான் கேட்­டேன், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் கேட்­டார். அப்­போது அவைத்­த­லை­வர் வேறொரு விதியை அளித்­தார்.  விண்­ணுக்கு கீழ் இருப்­பது அனைத்­தும் அவை­யின் எல்­லைக்­குள் வரும், அனைத்­தை­யும் அவை­யில் விவா­திக்­க­லாம் என்று கூறி­னார்.  அதுவே உங்­கள் எண்­ண­மாக இருந்­தால் விதி எண் 238 (1), (2), (3), (4), (5) ஆகி­ய­வற்­றின் பலன் என்ன?  என்று நான் கேட்ட போது எந்த பதி­லும் இல்லை. விதி 238ஐ பொறுத்­த­வரை நான் அளிக்­க­வேண்­டிய விதி­முறை காத்­தி­ருக்­கி­றது என்று அவர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இழிவுபடுத்தியவர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பதவியில் தொடர்கிறார்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எனவே அவைத்­த­லை­வர் அவர்­களே, பெண் மல்­யுத்த வீரர்­க­ளுக்கு அவ­மா­னம் விளை­வித்த ஒரு நப­ரைக் குறிப்­பி­டு­வது தவறு  அல்ல. பலர் அந்த விளை­யாட்­டி­லி­ருந்து வில­கி­விட்­ட­னர். இத­னால் நஷ்­டம் ஏற்­பட்­டது நம் நாட்­டிற்­குத்­தான்.  இதற்­காக நீங்­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கூட நாங்­கள் கேட்­க­வில்லை. ஒரு அறம் சார்ந்த அணு­கு­மு­றை­யு­டன் அவரை கண்­டித்­தீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மல்­யுத்த வீராங்­க­னை­க­ளை­யும் அவர்­க­ளது  கோரிக்­கை­க­ளை­யும் புறக்­க­ணித்­தீர்­கள்.  மற்­றொரு பெரு­மைக்­கு­ரிய பெண்­ம­ணி­யான கலோ­னல் குரே­ஷியை  அவர் இஸ்­லாம் மதத்­தைச் சேர்ந்­த­வர் என்ற ஒரே கார­ணத்­திற்­காக தீவி­ர­வா­தி­க­ளின் தங்கை என்று அழைக்­கப்­பட்­டார். இதனை எதிர்த்து  ஒரு வார்த்தை கூட,  நீங்­கள் கூற­வில்லை.  அந்­தப் பெண்ணை இழி­வு­ப­டுத்­திய அம்­ம­னி­தர் இன்­னும் பத­வி­யில் தொடர்­கி­றார் என்­றால் அவ­ரது நட­வ­டிக்­கையை நீங்­கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளீர்­கள் என்­று­தானே 
அர்த்­தம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒவ்­வொன்­றிற்­கும் மத­வெறி சாயம் பூசா­தீர்­கள்.  நீங்­கள் நினைத்­த­வற்­றை­ யெல்­லாம் பேசா­தீர்­கள்.  பேசி­விட்டு உங்­க­ளுக்கே உரிய பாணி­யில் நியா­யப்­ப­டுத்­தா­தீர்­கள். மௌனம் சம்­ம­தத்­திற்கு அறி­குறி.  சகிப்­புத்­தன்மை என்­பது திற­னற்று இருப்­ப­தல்ல.  அதன் பெயர் பொறுமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சிந்­து­நதி நீர் ஒப்­பந்­தம் குறித்து அரசு எடுத்த முடிவு  சரி­யான முடிவு அல்ல. இதனை சக உறுப்­பி­னர்­கள் ஏற்­றுக்­கொள்­ள­லாம் அல்­லது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­மல் போக­லாம்.  மற்ற நாடு­க­ளில் நடப்­பது போல், போர்க்­கா­லங்­க­ளில் பொது­மக்­களை பக­டைக் காயாக்­கா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இரண்­டா­வ­தாக, ஒவ்­வொ­ரு­வ­ரும் கேட்­டது போல் , தயவு செய்து பதில் அளி­யுங்­கள். டிரம்ப் ஏன் குறுக்­கிட்­டார்? இதற்கு முன்­ன­ரும் இந்­தி­யா­விற்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடை­யில் போர் நடந்­துள்­ளது.  இரண்டு தலை­வர்­கள், மரி­யா­தைக்­கு­ரிய லால் பக­தூர் சாஸ்­திரி அவர்­க­ளும் அயூப் கான் அவர்­க­ளும் சந்­தித்துசம­ர­சம் பேசி­னர். கார்­கில் போர், பங்­க­ளா­தேஷ் போர்  என்று போர் குறித்து நமக்கு நீண்ட வர­லாறு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">மறைந்தவர்களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">குறை சொல்கிறீர்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­விற்கு, அதன் சூழ­லுக்­கும், இந்­திய மக்­க­ளுக்­கும்,  நீண்ட கால 
அர­சி­யல் வாழ்­விற்­கும் ஏற்ற ஒரு  வெளி­யு­ற­வுக்  கொள்­கையை பண்­டி­தர்நேரு அவர்­கள் அளித்­துள்­ளார்.  ஆனால்நீங்­கள் அவரை குறை­சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.  அவர் இறந்து 60 ஆண்­டு­கள் கடந்­து­விட்­டன. டாக்­டர் மன்­மோ­கன் சிங் பத­விக்­கா­லம் முடிந்து 11 ஆண்­டு­கள் ஆகி­விட்­டன.  நேரு என்ன செய்­தார்? டாக்­டர் மன்­மோ­கன் சிங் என்ன செய்­தார்? என்று நீங்­கள் இன்­னும் குறை­சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு நிகழ்­வைப் பற்றி குறிப்­பிட விரும்­பு­கி­றேன். பராக் ஒபாமா அமெ­ரிக்க அதி­ப­ராக பத­வி­யேற்­ற­போது, அமெ­ரிக்க காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­­களுக்கு  ஆற்­றிய முதல் உரை­யில் கூறி­னார், “நாடு மிக­வும் மோச­மான சூழ்­நி­லை­யில் உள்­ளது, நாட்­டின்பொரு­ளா­தா­ரம் சிதைந்­து­விட்­டது.  இதற்குயார் கார­ணம் என்று குறை­கூற நான் இங்கே வர­வில்லை.  இதனை யார் செய்­தா­லும் சரி, இப்­போது இதற்­கான பொறுப்பு என்­னு­டை­யது.  எனவே இந்த மாண்­பமை மன்­றத்­தில் நான் கேட்­டுக்­கொள்ள விரும்­பு­வது  என்­ன­வென்­றால்,  இந்த அவை­யின்உறுப்­பி­னர்­கள் அவர்­க­ளது பாக்­கெட்­டி­லி­ருந்துஎடுக்­கும் ஒவ்­வொரு டால­ரின் போதும்  அந்­தப் பணம் சரி­யான செல­விற்­குத்­தானா என்று தய­வு­செய்து எண்­ணிப்­பா­ருங்­கள். அது­தான் இதற்­கான முடிவே தவிர, முந்­தைய அரசை குறை­ சொல்­வ­தல்ல”. பராக் ஒபா­மா­வின் பெருந்­தன்­மை­யான உரை இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் நீங்­கள் இன்­ன­மும் பண்­டி­தர் ஜவ­ஹர்­லால் நேரு­வை­யும் டாக்­டர் மன்­மோ­கன் சிங்­கை­யும் குறை­சொல்­லிக்­கொண்­டுள்­ளீர்­கள். இரு­வ­ருமே இப்­போது உயி­ரு­டன் இல்லை.  ஆனால் அவர்­கள் அர­சின் சாத­னை­கள் இன்­னும் உள்­ளன.  ஐக்­கிய முன்­னணி கூட்­ட­ணி­யின் சாத­னை­கள் என்ன, தேசிய ஜன­நா­ய­கக் கூட்­ட­ணி யின் குறை­பா­டு­கள் என்ன என்று ஒரு விவா­தத்தை நீங்­கள் துவங்­கி­னால், விவா­திக்க நாங்­கள் தயா­ராக உள்­ளோம்.  நீங்­கள் ஆளுங்­கட்­சி­யில் இருப்­ப­தற்­கான சந்­தர்ப்­பம் கிடைத்­தது என்­ப­தற்­கா­கவே நீங்­கள் நினைத்­த­வற்­றை யெல்­லாம் பேச­லாம், யாரை வேண்­டு­மா­னா­லும் குறை­சொல்­ல­ லாம் என்று கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கேள்விகளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பதில் தாருங்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நேற்­றைய தினம் கொல்­லப்­பட்­ட­வர்­கள் தீவி­ர­வா­தி­கள்­தான் என்­ப­தற்கு ஆதா­ரம் அளி­யுங்­கள். நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­ட­வும் இந்த விவா­தத்தை நடத்­த­வும் நீங்­கள் ஏன் மூன்று மாதங்­கள் காத்­தி­ருந்­தீர்­கள்? அவர்­கள் இந்த மூன்று மாதங்­க­ளாக எங்­கி­ருந்­தார்­கள்?  இந்­தி­யா­விற்­குள் இருந்­தார்­களா? உள்­துறை அமைச்­ச­கத்­திற்கு தெளி­வா­கத் தெரி­யும் என்று நினைக்­கி­றேன். அவர்­கள் பாகிஸ்­தா­னிற்­குள் சென்­று­ வி­டக்­கூ­டாது என்­ப­தில் அரசு தெளி­ வாக இருந்­துள்­ளது.  அப்­ப­டி­யென்­றால் அவர்­கள் இங்­கு­தான் இருந்­துள்­ள­னர். ஆனால் அவர்­க­ளுக்கு பாகிஸ்­தான் சாக்­லெட்­டு­கள் கிடைத்­துள்­ளன. பாகிஸ்­தா­னிய துப்­பாக்­கி­கள் கிடைத்­துள்­ளன. இந்த எல்லா கேள்­வி­க­ளுக்­கும் நீங்­கள் விடை­ய­ளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் ஒரே ஒரு விஷ­யத்தை மட்­டும் குறிப்­பிட விரும்­பு­கி­றேன். உங்­க­ளு­டைய அர­சுக்கு முன்­ன­ரைப் போல் அறுதி பெரும்­பான்மை இருக்­கி­றது என்று நினைக்­கா­தீர்­கள்.  நீங்­கள் இரண்டு ஊன்­று­கோல்­க­ளு­டன் நடந்­து­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். இதில் ஒரு ஊன்­று­கோல் உடைந்­தாலோ அல்­லது நீக்­கப்­பட்­டாலோ, நீங்­கள் நொண்­டிக் ­கொண்டு நடக்­க­வேண்­டி­யி­ருக்­கும். ஜன­நா­ய­கம் பாடங்­களை புகட்­டும். பெரிய கட்­சி­யாக இருந்­த­வை­யெல்­லாம்  அடுத்த தேர்­தல்­க­ளில்  தோல்­வியை சந்­தித்­துள்­ளன.  எங்­கி­ருக்­கி­றோம் என்று தெரி­யாத கட்சி ஆட்­சிக்கு வந்­துள்­ளது. நீங்­கள் அதி­கா­ரத்­தில் உள்­ளீர்­கள். அர­சி­ய­லில் உள்ள அடிப்­படை கட்­ட­மைப்பு என்­ன­வென்­றால் அதி­கா­ரம் வரும்­போது அத­னு­டன் நிறைய பொறுப்­பும் வரு­கி­றது. உங்­க­ளு­டைய பொறுப்பு ஒவ்­வொரு நாளும் அதி­க­ரித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது. அதே சம­யம், நீங்­கள் எதிர்க்­கட்­சி­க­ளின் கோரிக்­கை­களை நிரா­க­ரித்து வரு­கி­றீர்­கள். நாடா­ளு­மன்­ற­மும் வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. விகி­தாச்­சார அடிப்­ப­டை­யி­லும் வளர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது. உங்­கள் நட­வ­டிக்­கையை சற்று மாற்­றிக்­கொள்ள வேண்­டும் என்று  நான்எதிர்­பார்க்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">நாட்டின் நலனில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அக்கறை உண்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் என்­ன­வெல்­லாம் பேசி­யி­ருக்­கி­றேனோ, எங்­க­ளது எதிர்க்­கட்­சித் தலை­வர் என்­ன­வெல்­லாம் பேசி­யி­ருக்­கி­றாரோ அல்­லது இனி என்­ன­வெல்­லாம் மற்­ற­வர்­கள் பேச­வி­ருக்­கி­றார்­களோ அவை அனைத்­தும் நாட்­டின் நலன் கரு­தியே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாட்­டின் நலன் குறித்து எங்­க­ளுக்­கும் அக்­கறை உண்டு. நாங்­கள் கடந்த காலத்­தில் நல்­லவை செய்­துள்­ளோம், இன்­னும் செய்­ய­வி­ருக்­கி­றோம்.  தற்­போது நீங்­கள் ஆட்­சி­யில் உள்­ளீர்­கள். பதி­லு­டன் வாருங்­கள். பணி­வு­டன் பதில் அளி­யுங்­கள். நாடா­ளு­மன்­றத்தை மதிக்­க­வும். மக்­களை மதிக்­க­வும், என்­பதே எங்­கள் பணி­வான வேண்­டு­கோள். இது­போல் இன்­னொரு நிகழ்வு அப்­பள்­ளத்­தாக்­கில் நடக்க கூடாது.  இந்­தியா மிக­வும் வலி­மை­யா­னது. நம்­மி­டம் 40 இலட்­சம் இரா­ணுவ வீரர்­கள் உள்­ள­னர். வலி­மை­யான விமா­னப்­படை உள்­ளது. இருந்­தும் உங்­க­ளால் மக்­களை காக்க முடி­ய­வில்லை.  பாகிஸ்­தான் ஆக்­கி­ர­மிப்பு காஷ்­மீரை திரும்­பப் பெறுங்­கள். ஆனால் நீங்­கள் குறை­சொல்­லிக் கொண்­டு­தான் உள்­ளீர்­கள். இறந்து போன தலை­வர்­க­ளை­யும்   முந்­தைய அர­சாங்­கங்­க­ளை­யும் குறை­சொல்­வதை நிறுத்­துங்­கள். அதைத்­தான் நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம்.  அது உங்­க­ளின் கடமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>