<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 08 2025 04:10:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="08082025-VLR-13" position.sequence="13" ex-ref="08082025-VLR-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">08.08.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">பிரதமரே! நாடாளுமன்றத்தை மதித்து   </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="40"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">அவைக்கு வந்து எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="41">மாநிலங்களவையில் – திருச்சி  சிவா பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup395503_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup395504_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup368276_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="thiruchisiva_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">புது­டெல்லி, ஆக.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநி­லங்­க­ள­வை­யில் கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி சிவா பேசு­கை­யில், ‘‘பிர­த­மர் அவர்­களே? நாடா­ளு­மன்­றத்தை மதித்து அவைக்கு வந்து எங்­கள் கேள்­வி­க­ளுக்கு எல்­லாம் உரிய பதி­லைச் சொல்­லுங்­கள்’’ என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவர் ஆற்றிய உரை வருமாறு :–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆப­ரே­ஷன் சிந்­தூ­ரில், நம்­மு­டைய எல்­லை­யை­யும் மக்­க­ளை­யும் காக்க  அபா­ர­மான வீரத்­து­ட­னும் தீரத்­து­ட­னும் போரா­டிய நம் படை­வீ­ரர்­க­ளுக்கு, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக வாழ்த்­துக்­க­ளை­யும் நன்­றி­யை­யும் முதற்­கண் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  மேலும், பஹல்­காம் தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரின் துய­ரத்­தி­லும் நாங்­கள் பங்­கெ­டுத்­துக்­கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பல்­வேறு கேள்­வி­கள் விடை­ய­ளிக் கப்­ப­டா­ம­லேயே இருக்­கின்­றன.  மிக, மிக முக்­கி­ய­மான சில­வற்­றைப் பற்றி நான் குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.  இத்­த­ரு­ணத்­தில் இங்கே எதிர்க்­கட்­சி­க­ளாக உள்ள அர­சி­யல் கட்­சி­களை நாம் பாராட்ட வேண்­டும். பஹல்­காம் தாக்­கு­த­லின் போதும் அதற்­குப் பின் நடந்த ஆப­ரே­ஷன் சிந்­தூ­ரின்­போ­தும், எங்­க­ளு­டைய தார்­மீ­க­மான கேள்­வி­க­ளுக்கே விடை கிடைக்­க­வில்லை. அதற்­காக சிறப்பு நாடா­ளு­மன்ற அமர்வு தேவை என்ற எங்­க­ளின் கோரிக்­கைக்­கும் செவி­சாய்க்­கப்­ப­ட­வில்லை.  எங்­க­ளு­டைய கோரிக்­கை­கள் கேட்­கப்­ப­டா­ம­லேயே காற்­றில் பறக்­க­வி­டப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தயக்கமின்றி பங்கேற்றோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இருப்­பி­னும், வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல அனைத்து கட்சி உறுப்­பி­னர்­கள் அடங்­கிய பிர­தி­நி­தி­கள் குழு அமைக்­கப்­பட்­ட­போது, எந்­த­வி­த­மான தயக்­க­மும் இல்­லா­மல் எதிர்க்­கட்­சி­கள் அந்­தக் குழு­வில் இணைந்­தன. அப்­படி இணைந்­த­தன் மூலம் நாங்­கள் தேசத்­து­டன் ஒத்­து­ழைக்­கி­றோம் என்று உணர்த்த விரும்­பி­னோம். இதில் எந்த குழப்­பத்­திற்­கும் இடம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எப்­பொ­ழு­தெல்­லாம் நாடு தீவி­ர­ 
வா­தத்­திற்கு எதி­ரா­கப் போரா­டு­கி­றதோ, அப்­பொ­ழுது நாங்­கள் ஒன்­றாக  இணை­கி­றோம். எங்­கள் கட்­சி­யின் நிறுவனர் – தலை­வர் அண்ணா ஒரு முறை அமெ­ரிக்கா சென்­றி­ருந்­தார். ‘யேல்’ பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­டையே அவர் உரை­யாற்­று­கை­யில் ‘உங்­கள் நாட்­டின் வெளி­யு­ற­வுக் கொள்­கையை நீங்­கள் விமர்­சிப்­பீர்­களா?’ என்று அவ­ரி­டம் ஒரு கேள்வி கேட்­கப்­பட்­டது. அதற்கு அவர், எங்­க­ளி­டம் பல்­வேறு விவ­கா­ரங்­கள் உள்­ளன. ஆனால் அவற்றை நாங்­கள் எங்­கள் மண்­ணி­லேயே தீர்த்­துக் கொள்­வோமே தவிர, வெளி­நாட்டு மண்­ணில் தீர்க்க மாட்­டோம், என்று பதில் அளித்­தார். அதைப்­போ­லவே, உங்­கள் பிர­தி­நி­தி­கள் குழு­வில் நாங்­கள் இணைந்­தோம், வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு  உணர்த்­தி­னோம், திரும்­பி­ னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தற்­போது நம்­மு­டைய கேள்வி என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எத்­தனை நாடு­க­ளுக்கு சென்­றோம்? நமக்கு எத்­தனை நாடு­கள் ஆத­ரவு அளித்­தன? நம்­மு­டைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடங்­கிய குழுவை சந்­தித்­தது யார்? அவர்­க­ளும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களா? நம் செயல்­பாட்­டிற்கு ஆத­ர­வ­ளிக்­கக்­கூ­டிய வன்மை பெற்ற அந்­நாட்டு பிர­தி­நி­தி­களா அல்­லது அந்­நாட்டு குழுவா? இந்­தக் கேள்­விக்கு இன்­னும் பதில் அளிக்­கப்­ப­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மற்­றொரு விஷ­யம். பிர­த­மர் அவர்­கள் தன்னை ‘கட­வு­ளின் குழந்தை’  என்று குறிப்­பிட்­டுக்­கொண்­டார். பலர் இதனை விமர்­சித்­த­னர். ஆனால் நான் அந்த வாச­கத்தை ஏற்­றுக்­கொள்­கி­றேன், ஏனென்­றால் அவ­ரும் கண்­ணுக்கு தென்­ப­டு­வ­தில்லை.  அவ­ரைக் காணவே முடி­ய­வில்லை. ஆப­ரே­ஷன் சிந்­தூ­ரைப் பற்­றி­யும்  நாட்­டைப் பற்­றி­யும் உரக்க நாடு முழு­வ­தும் பெரு­மைப் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உலக அள­வில் அவர் உச்­ச­பட்ச தலை­வர் என்று உரத்த குர­லில் பெரு­மி­த­மாக அவ­ரைப் பற்றி இந்த அவைத் தலை­வர் களிப்­பு­டன் கூறு­கி­றார். உலக அள­வில் அப்­படி ஓர் இடம் பெற்ற அந்த தலை­வரை, நாங்­கள் சற்றே காண விரும்­பு­கி­றோம். அவர் இங்கு வருகை புரிந்­த­தும் இல்லை. நாடா­ளு­மன்­றத்தை மதித்­த­தும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம்­மு­டைய நாடு நாடா­ளு­மன்ற ஜன­நா­யக கருத்­தி­ய­லின் அடிப்­ப­டை­யில் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றது. மணிப்­பூர் கல­வ­ரங்­க­ளின்­போது, தயவு செய்து வாருங்­கள் பிர­த­மரே என்று நாங்­கள் கோரி­னோம். ஏனென்­றால் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். ஆயி­ரக்­க­ணக்­கான வீடு­கள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் இடம் பெயர்ந்­துள்­ள­னர்.  இந்தப் பிரச்­சினை இன்­னும் ஓய­வில்லை. அங்கு என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது?  அவர்­கள் கட்சி தலை­மை­யி­லான அரசு அங்கு உள்­ளது.  தய­வு­ செய்து நாடா­ளு­மன்­றத்­திற்கு வாருங்­கள் என்று அழைக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­க­ளுக்கு என்ன பெயர் கிடைத்­தது தெரி­யுமா? நாடா­ளு­மன்­றம் செயல்­பட விடா­மல் எதிர்க்­கட்­சி­கள் முடக்­கு ­கின்­றன என்று குற்­றம்­சாட்­டப்­பட்­டது. இது முடக்­க­மில்லை, நாங்­கள் கோரிக்கை விடுக்­கி­றோம். நாடா­ளு­மன்­றம் எதற்­காக உள்­ளது? விவா­திப் பதற்­காக, தர்க்க ரீதி­யான விளக்­கங்­க ­ளுக்­காக  மற்­றும் முக்­கிய முடி­வு­களை எடுப்­ப­தற்­காக.  அர­சுக்கு நாடா­ளு­மன்­றத்­திற்கு பதில் அளிக்­கும் முக்­கி­ய­மான பொறுப்­புள்­ளது. நாடா­ளு­மன்­றத்­திற்கு மக்­க­ளுக்கு பதில் அளிக்க வேண்­டிய பொறுப்­புள்­ளது. பிரச்­ச­ணைக்கு தீர்வு காண வேறெங்கு நீங்­கள் செல்­வீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாடாளுமன்றத்திற்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஏன் வருவதில்லை?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் கூடிய கூட்­டத்­தில் நீங்­கள் உரை­யாற்­றி­னால், அங்­கி­ருக்­கும் மக்­களை மட்­டும்­தான் அந்த உரை சென்­ற­டை­யும். ஆனால் நாடா­ளு­மன்­றத்­தில் கூறப்­ப­டும் எதற்­கும் சாட்­சி­யம் உள்­ளது, அதி­கா­ரம் உள்­ளது. அது ஒட்­டு­மொத்த உல­கையே சென்­ற­டை­யும். கடந்த காலத்­தில் நீங்­கள் ஏன் ஒரு முறை  கூட வர­வில்லை? பஹல்­கா­மி­லும், ஆப­ரே­ஷன் சிந்­தூ­ரி­லும் கூட இதே நிலை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் நிறைய பேசு­கி­றீர்­கள். மன­தின் குரல் நிகழ்ச்­சி­யில் நீங்­கள் என்ன பேசு­கி­றீர்­கள் என்று எங்­க­ளால் புரிந்து கொள்ள இய­ல­வில்லை. நீங்­கள் கைய­சைத்­துக்­கொண்டே வானூர்­தி­யில் ஏறி செல்­கி­றீர்­கள். கைய­சைக்­கி­றீர்­கள், போகி­றீர்­கள், வரு­கி­றீர்­கள்.  ஆனால் நாடா­ளு­மன்­றத்­தில் மட்­டும் வரு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாடா­ளு­மன்­றம்­தான் உச்­ச­பட்ச முக்­கி­யத்­து­வம் கொண்­டது. அப்­ப­டித்­தான் நாங்­கள் கரு­து­கி­றோம். என­வே­தான், நாங்­கள்  கோரிக்கை எழுப்­பும்­போது, அதற்கு ஆளும்­கட்சி செவி­சாய்க்­க­வில்லை என்­றா­லும், எங்­கள் கோரிக்­கையை நாங்­கள் தொடர்­கி­றோம், உரத்த குர­லில் தொடர்­கி­றோம். கோரிக்கை குறித்து குரல் எழுப்­பவே   நாடா­ளு­மன்­றம்  உள்­ளது. அவை ஒத்­தி­வைக்­கப்­பட்­டாலோ அல்­லது முடக்­கம் ஏற்­பட்­டாலோ, எதிர்க்­கட்­சி­கள்­தான் நாடா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­களை முடக்­கு­கின்­ற­னர் என்று எதிர்க்­கட்­சி­கள் மீது குற்­றம் சாட்­டப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் ஒன்றை தெளி­வு­ப­டுத்த விரும்­பு­கி­றேன். நாடா­ளு­மன்­றத்­தில் ஆற்­றும் உரை மக்­களை சென்­ற­டை­கி­றது என்­ப­தால் நான் இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்ள விரும்­பு­கி­றேன். அவையை நடக்க விடா­மல் முடக்­கு­வது ஆளும்­கட்­சி­தானே தவிர, எதிர்க்­கட்சி கிடை­யாது என்­பதை மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.  அவை அமை­தி ­யாக நடப்­ப­தற்­கான சம அளவு பொறுப்பு அவர்­க­ளுக்­கும் உள்­ளது. அவர்­கள் ஒத்­து­ழைப்­ப­தில்லை. நாங்­கள் ஏதே­னும் கோரிக்கை விடுத்­தால், நாங்­கள் உரை­யாற்­றி­னால், அப்­பக்­கத்­தி­லி­ருந்து நமட்­டுச்­சி­ரிப்­பினை காண்­கி­றோம். இது ஏற்­பு­டை­ய­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நமட்டுச் சிரிப்பு சிரிப்பதா?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாங்­கள் மதிக்­கத்­தக்க மனி­தர்­கள்­தான். மதிக்­கத்­தக்க கட்­சி­க­ளைச் சார்ந்­த­வர்­கள்­தான். மக்­க­ளி­டம் எங்­க­ளுக்கு நிறைய மரி­யாதை உள்­ளது. அப்­ப­டி­யி­ருக்க, நாங்­கள்  உரை­யாற்­றும்­போது இத்­த­கைய நமட்­டுச்­சி­ரிப்­பினை ஏன் பார்க்க வேண்­டும். எதிர்க்­கட்சி தலை­வர்  பேசி­னால் கூட நமட்­டுச் சிரிப்பு சிரிக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பொது­வாக, ஒரு பாரம்­பர்­யம் உண்டு, ஒரு உறுப்­பி­னர் உரை­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கும்­போது ஆளும் கட்­சி­யி­லி­ருந்து யாரா­வது குறுக்­கிட விரும்­பி­னால், உரை­யாற்­று­ப­வ­ரின் சம்­ம­தம் கிடைத்­தால் மட்­டுமே குறுக்­கி­டும் உறுப்­பி­னர் பேச வாய்ப்பு கிடைக்­கும்.  முன்­னர் ஒரு முறை, நட்டா அவர்­கள் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது, நான் எழுந்து நின்­றேன். என் குறுக்­கீட்­டிற்கு அவர் சம்­ம­தித்­தார், எனக்கு மைக் வழங்­கப்­பட்­டது. ஆனால் தற்­போ­தைய நடை­முறை முற்­றி­லும் மாறி­விட்­டது.  எதிர்க்­கட்சி தலை­வர் சம்­ம­திக்­க­வில்லை என்­றா­லும் கூட, ஆளும் கட்­சி­யி­லி­ருந்து யார் எழுந்து நின்­றா­லும் அவர்­க­ளுக்கு மைக் கொடுக்­கப்­ப­டு­கி­றது, எதிர்க்­கட்சி தலை­வ­ரின் மைக் அணைக்­கப்­ப­டு­கி­றது.  எங்கே ஜன­நா­ய­கம்?  ஓர் உறுப்­பி­னர் பேச அனு­ம­திக்­கப்­ப­டும்­போது அவ­ருக்கு ஒதுக்­கப்­பட்ட நேரத்­தில் பேசு­வ­தற்கு அவ­ருக்கு உரிமை எண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நான் தற்­போது ஆப­ரே­ஷன் சிந்­தூர் குறித்து மட்­டு­மல்ல, பஹல்­காம் தாக்­கு­தல் குறித்­தும் உரை­யாற்ற விரும்­பு­கி ­றேன்.  எங்­க­ளு­டைய எந்­தக் கேள்­விக்­கும் பதில் அளிக்­கப்­ப­ட­வில்லை. சிறப்பு அமர்வு கூட்­டப்­ப­ட­வில்லை. எனக்கு பேசு­வ­தற்­கான உரிமை உள்­ளது. என்­னு­டைய கட்சி என்னை அனுப்­பி­யுள்­ளது, நான் என்ன செய்ய வேண்­டுமோ அதனை செய்­து­கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாடா­ளு­மன்­றத்­திற்கு பொருந்­தா­த­வற்­றையோ, அல்­லது  அறம் தவறி நான் பேசி­னோலோ அல்­லது விவா­தத்­து­டன் தொடர்­பில்­லா­த­வற்றை நான் பேசி­னாலோ நீங்­கள் என்னை கேள்வி கேட்­க­லாம்.  நான் சரி­யாக உரை­யாற்­ற­வில்லை என்­றால் அதன் விளைவை நானும் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்.  தற்­போது நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கம் இல்லை. இந்த விவா­தத்­தின் போது கூட பிர­த­மர் அவர்­கள் அவைக்கு வரு­வ­தில்லை. ஒவ்­வோர் அமர்வு துவங்­கும் முன்­பும்,  அனைத்­துக் கட்சி கூட்­டம் கூட்­டப்­ப­டு­கி­றது.  ஆனால் ஒரு முறை கூட நாங்­கள் பிர­த­மரை கண்­ட­தில்லை. எங்­க­ளுக்கு அவ்­வ­ளவு மரி­யா­தையே கொடுக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பஹல்­காம் தாக்­கு­த­லுக்­குப் பிற­கும் கூட ஓர் அனைத்­துக்­கட்சி கூட்­டம் நடை­பெற்­றது. அதற்கு உள்­துறை அமைச்­சர் மட்­டுமே வந்­தி­ருந்­தார். பிர­த­மர் எங்கே என்று நாங்­கள் அனை­வ­ரும் கேட்­டோம்.  மிக­வும் மோச­மான நிலைமை இருந்­தது. பைச­ரன் பள்­ளத்­தாக்­கில் 26 அப்­பாவி பொது­மக்­கள் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்­கள். அது குறித்து விவா­திக்­கவே நாங்­கள் அமர்ந்­தி­ருந்­தோம். பிர­த­மர் எங்கே? அவர் வெளி­நாட்­டுப் பய­ணத்­தில் இருந்­தால் கூட நாங்­கள் ஏற்­றுக்­கொண்­டி­ருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முக்கியத்துவம் எங்கே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் அவர் பிகார் மாநி­லத்­தில்­தான் இருந்­தார், அது­வும் தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் இருந்­தார்.  அர­சி­யல் கட்­சி­க­ளுக்கு என்ன முக்­கி­யத்­து­வம் கொடுக் கப்­பட்­டது? நாடா­ளு­மன்­றத்­திற்கு என்ன முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­பட்­டது? இந்த கேள்­வி­க­ளுக்கு பதில் தேவை.  இது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தது. ஒரு­வரை ஒரு­வர் குற்­றம் சாட்­டிக்­கொள்­ளும் நேரம் அல்ல.  எதிர்க்­கட்­சி­கள் குறித்த உங்­கள் அணு­கு­மு­றை ­யை­யும்  நாடா­ளு­மன்­றத்­திற்கு கிடைக்­கும் முக்­கி­யத்­து­வத்­தை­யும் நீங்­கள் சற்றே மாற்­றிக்­கொள்­ளுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘பஹால்­கா­மில் என்ன நடந்­தது? ஏன் நடந்­தது? நீங்­கள் ஆப­ரே­ஷன் சிந்­தூர் குறித்து உரை­யாற்­று­வ­தற்கு முன், பஹல்­காம் குறித்து பேச வேண்­டும்.  அந்த சம்­ப­வம் ஏன் நடந்­தது? இது ஏப்­ரல் 22ஆம் தேதி நடை­பெற்­றது, ஏப்­ரல் 19ஆம் தேதி, பிர­த­மர்  ஜம்மு காஷ்­மீ­ருக்கு பய­ணம் செய்­வ­தாக இருந்­தது.  உள­வுத்­து­றை­யி­னர் கொடுத்த தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அந்­தப் பய­ணம் ரத்­து­செய்­யப்­பட்­டது. காணொளி மூலம் கூட்­டம் நடத்­தப்­பட்­டது.  இந்த துயர சம்­ப­வம் நடப்­ப­தற்கு மூன்றே மூன்று நாட்­க­ளுக்கு முன்பு, பிர­த­மர் அங்கு  செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.  அத்­த­கைய உயர் பதற்­றம் உள்ள இடத்­திற்கு பொது மக்­கள் செல்­வ­தற்கு எவ்­வாறு அனு­ம­திக்­கப்­பட்­டது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அவர்­கள் கொல்­லப்­பட்ட பகுதி மிக­வும் பாது­காப்பு நிறைந்த பகு­தி­யா­கும். அவர்­கள் கருத்­தின்­படி, பாகிஸ்­தா­னி­லி­ருந்து வந்­த­த­தாக  எண்­ணப்­ப­டும், அந்த மூன்று தீவி­ர­வா­தி­க­ளும் மிக­வும் சுல­ப­மாக இந்­தி­யா­விற்­குள் நுழைந்­து­முள்­ள­னர். அவர்­கள் நிதா­ன­மாக ஓர் இடத்­திற்கு வந்து, நன்கு நேரம் எடுத்­துக்­கொண்டு, எல்லா மக்­க­ளை­யும் ஒரே இடத்­தில் கூட வைத்து, அவர்­க­ளில் பலரை தேர்ந்­தெ­டுத்து, துப்­பாக்­கி ­யால் சுட்டு கொன்­று­விட்டு ஆசு­வா­ச­மாக  திரும்பி சென்று, மறைந்­து­விட்­ட­னர். அதற்கு நீங்­கள் என்ன பெயர் வேண்­டு­மா­னா­லும் வைத்­துக்­கொள்­ள­லாம், அவர்­கள் காட்­டிற்­குள் சென்று மறைந்­துள்­ளார்­கள்.  இவை­யெல்­லாம் நடந்து முடிப்­ப­தற்கு 40 நிமி­டங்­கள் ஆகி­யுள்­ளது. இந்த 40 நிமி­டத்­தில் ஒரு பாது­காப்பு அதி­காரி கூட வர­வில்லை. இதற்­கான கார­ணம் என்ன என்­பதைபொறுப்­பு­ணர்­வோடு பதில் அளி­யுங்­கள். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­ச­மைப்­புச் சட்ட பிரிவு 370 நீக்­கப்­பட்ட பிறகு, அப்­ப­கு­தி­யின் சட்­டம் ஒழுங்கு ஸ்ரீந­க­ரி­லி­ருந்து நார்த் ப்ளாக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ளது.  எனவே இதற்கு பதில் அளிக்­க­வேண்­டி­யது உள்­துறை அமைச்­ச­கத்­தின் கடமை. இந்த நிகழ்­வுக்கு யார் பொறுப்­பேற்­றுக்­கொள்­வது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சஸ்பென்சுக்கு பெயர் போனவர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கடந்த மூன்று மாத­மாக நாங்­கள்  இது குறித்து ஒரு விவா­தம் தேவை என்று கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றோம். நாங்­கள் காத்­தி­ருந்­தோம், காத்­தி­ருந்­தோம், நேற்று வரை காத்­தி­ருந்­தோம்.  நமது உள்­துறை அமைச்­சர் சஸ்­பென்­சுக்கு பெயர் போன­வர். 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், வர­லாற்று சிறப்­பு­மிக்க  பழைய நாடா­ளு­மன்ற கட்­டி­டத்­தில் நாம் அனை­வ­ரும் இருந்­த­போது, எந்­த­வி­த­மான அலு­வ­லு­மில்­லா­மல் அவர் வந்­தார். அலு­வல் பட்­டி­ய­லில் எந்த விவ­கா­ர­மும் பட்­டி­ய­லி­டப்­ப­டா­மல் இருந்­த­போது, அர­ச­மைப்­புச் சட்ட திருத்த மசோதா தாக்­கல் செய்­யப்­பட்­டது.  அர­ச­மைப்­புச் சட்­டப்­பி­ரிவு 370 குறித்த மசோதா. இது எவ்­வாறு நிகழ முடி­யும் என்று பெரும் கூச்­சல் ஏற்­பட்­டது. நாங்­கள் அந்த மசோ­தா­விற்கு எதிர்­நி­லையை எடுத்­தோம். அது வேறு விவ­கா­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இங்கு நான் பாய்ண்ட் ஆஃப் ஆர்­டரை(விதி­மு­றை­கள் குறித்த விளக்­கம்) எழுப்­பும்­போது, அந்த வினா அலு­வல் பட்­டி­ய­லில் இல்­லா­த­போது, அதனை அனு­ம­திக்­க­வில்லை.  சபா­நா­ய­க­ரின் பரிந்­து­ரை­யின்­படி துணை அலு­வல்­பட்­டி­ய­லில் அது இணைக்­கப்­பட்­டது.  அதன்­பின் அது கொண்­டு­வ­ரப்­பட்டு, அவர்­க­ளுக்கு பெரும்­பான்மை இருந்­த­தால் அவர்­கள் நினைத்­தது நடந்­தது. இன்று கூட,  அந்த தாக்­கு­தல் நடந்து மூன்று மாதங்­க­ளுக்­குப் பிறகு அந்த மூன்று தீவி­ர­வா­தி­க­ளும் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என்று  அவர் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்­கி­டை­யில் மே மோதம், இந்த தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்­த­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு இரு­வர் கைது­செய்­யப்­பட்­ட­னர்.  இரண்டு மாதங்­க­ளுக்­கும் மேலாக அவர்­களை விசா­ரித்­துக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.  தேசிய புல­னாய்வு முகமை விசா­ர­ணைக்­கான நேரத்தை நீட்­டிக்க சொல்லி கேட்­டுக்­கொண்­டுள்­ளது. என்ன தக­வல் பெறப்­பட்­டது ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதற்­கான தக­வலை நாடா­ளு­மன்­றத்­தில் கூற­வில்லை என்­றால், வேறெங்கு கூறு­வீர்­கள்? நாடா­ளு­மன்ற அமர்­வில் உள்­ள­போது, இது குறித்து கேட்­ப­தற்கு எங்­க­ளுக்கு எல்­லா­வி­த­மான உரி­மை­யும் உள்­ளது. எதிர்க்­கட்­சி­க­ளின் கேள்­விக்கு அரசு பதில் அளித்தே ஆக­வேண்­டும்.  எங்­க­ளுக்கு மட்­டு­மல்ல இந்த நாட்­டிற்­கும் நாட்டு மக்­க­ளுக்­கும் பதில் அளித்தே ஆக­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாநில அந்தஸ்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எவ்வாறு நீக்கினீர்கள்?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­ச­மைப்­புச் சட்­டப்­பி­ரிவு 370 நீக்­கப்­பட்­ட­பி­றகு, சட்­டம் மற்­றும் ஒழுங்கை நிர்­வ­கிக்­க­வேண்­டிய பொறுப்பு  தேர்ந்­த­தெ­டுக்­கப்­பட்ட மாநில அர­சி­ட­மி­ருந்து  தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டாத அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இத­னால் ஏற்­பட்ட சேதம் என்ன?  மக்­க­ளின் நம்­பிக்கை, மற்­றும் பாது­காப்பு ஆகி­ய­வையே சேதம். அதி­கா­ரி­கள் யாருக்­கும் பதில் அளிக்­க­வேண்­டிய தேவை­யில்லை. நிறைய விஷ­யங்­கள் நடந்­து­விட்­டன. யாரும் கேள்வி கூட கேட்­க­வில்லை. எந்­த­வி­த­மான கார­ண­மும் இல்­லா­மல் ஒரு மாநி­லத்­தின் மாநில அந்­தஸ்தை நீங்­கள் எவ்­வாறு நீக்­கி­னீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு 1 என்ன சொல்­கி­றது? இந்­தியா, அதா­வது பார­தம்,  மாநி­லங்­க­ளின் ஒன்­றி­யம். அர­ச­மைப்­புச் சட்­டப் பிரிவு 3  மாநி­லங்­களை உரு­வாக்­கு­வது, அதன் பகு­தி­களை மாற்­று­வது, தற்­போ­துள்ள மாநி­லங்­க­ளின் எல்­லை­க­ளையோ அல்­லது பெயர்­க­ளையோ மாற்­று­வது குறித்து வெகு தெளி­வாக சொல்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எந்த ஒரு மாநி­லத்­தி­லி­ருந்­தும் ஒரு பிர­தே­சத்தை பிரித்து ஒரு புதிய மாநி­லத்தை உரு­வாக்­க­லாம் அல்­லது இரண்டு அல்­லது மூன்று மாநி­லங்­களை இணைத்தோ, அல்­லது அவற்­றில் பகு­தி­களை இணைத்தோ ஒரு மாநி­லத்தை உரு­வாக்­க­லாம். அல்­லது ஒரு பிர­தே­சத்தை ஒரு மாநி­லத்­து­டன் இணைக்­க­லாம், ஒரு மாநி­லத்­தின் பரப்­ப­ளவை அதி­க­ரிக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவை­தான் சொல்­லப்­பட்­டுள்­ளன. ஆனால் ஒரு மாநி­லத்தை யூனி­யன் பிர­தே­ச­மாக தரம் குறைக்­க­லாம் என்று எங்­குமே சொல்­லப்­ப­ட­வில்லை.  எனவே அதனை ஒன்­றிய அர­சின் கட்­டுப்­பாட்­டின் கீழ் கொண்­டு­வர விரும்­பு­கி­றீர்­கள்.  இதற்­கான பொறுப்பை நீங்­கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா? இந்த ஆண்­டின் முதல் 5 மாதங்­க­ளி­லேயே, பொது மக்­க­ளுக்கு எதி­ராக நான்கு தீவி­ர­வாத தாக்­கு­தல்­கள் நடை­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள­வுத்­துறை அறிக்­கை­க­ளின்­படி, 2025ஆம் ஆண்­டின் துவக்­கத்­தில் மட்­டும், எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோட்­டின் அரு­கில் 310 ஊடு­ரு­வல் முயற்­சி­கள் ஏற்­பட்­டுள்­ளன.  இதற்கு முத­லில் பதில் அளி­யுங்­கள். நான் உங்­களை குற்­றம் சொல்­ல­வில்லை. உங்­களை நோக்கி விரல் சுட்­ட­வில்லை. எங்­க­ளு­டைய தார்­மீக கேள்­விக்கு பதில் அளிக்­க­வேண்­டிய பொறுப்பு உங்­க­ளுக்கு உள்­ளது என்­பதை சுட்­டிக் காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எல்லைப் பகுதியில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">310 ஊடுருவல்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாட்­டிற்­குள் பகை சக்­தி­கள் 310 ஊடு­ரு­வல்­கள் நடத்­தி­யி­ருப்­பது  கடந்த சில ஆண்­டு­க­ளில் எல்லை பகு­தி­யில் நடை­பெற்ற ஊடு­வல்­க­ளில் மிக அதிக எண்­ணிக்கை. இது உங்­க­ளின் நிர்­வா­கத் தின் கீழ் உள்­ளது.  ஒன்­றிய உள்­துறை அமைச்­ச­கம் ஜம்மு காஷ்­மீர் மாநி­லத்தை தன் கட்­டுப்­பாட்­டில் எடுத்த நான்­கைந்து மாதங்­க­ளில் இந்த ஊடு­ரு­வல்­கள் ஏற்­பட்­டுள்­ளன.  இது குறித்து கேள்வி  எழுப்ப எங்­க­ளுக்கு உரிமை இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள­வுத்­துறை ஆதா­ரங்­க­ளின்­படி,  பாது­காப்­புத் துறை­யி­ன­ருக்­கும் நிர்­வா­கத்­திற்­கும் இடையே ஒத்­து­ழைப்பு சரி­யாக இல்லை.  அந்­தப் பகுதி மிக­வும் பதற்­றம் மிக்க கூரு­ணர்வு மிகுந்த பகுதி. உள்­தறை அமைச்­சர் பதில் அளிக்­கை­யில்,  அவர்­கள் எங்­கி­ருந்து வந்­தார்­கள்? இந்­தி­யா­வி­லி­ருந்தா அல்­லது பாகிஸ்­தா­னி­லி­ருந்தா? என்று  அவை­யின் மூத்த உறுப்­பி­னர் ப.சிதம்­ப­ரம் அவர்­கள் கேட்­டார்.  நீங்­கள் தீவி­ர­வா­தி­களை ஆத­ரிக்­கி­றீர்­களா என்று பதில் கேள்வி கேட்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்­கான  பொருள் அது­வல்ல. அவர்­கள் எங்­கி­ருந்து வந்­தார்­கள் மற்­றும் அவர்­கள் எப்­படி சுட்­டுக்­கொல்­லப் பட்­டார்­கள் என்­ப­தற்கு எங்­க­ளுக்கு  நிரூ­பிக்­கக்­கூ­டிய ஆதா­ரங்­கள் தேவை. என்­ன­வி­த­மான ஆதா­ரம் என்­பதை  நீங்­கள்­தான் கூற­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உள்­துறை அமைச்­சர் அவர்­கள் இரண்டு  வித­மான ஆதா­ரங்­களை அளித்­தார். ஒன்று வாக்­கா­ளர் அடை­யாள அட்டை, இதனை குடி­யு­ரி­மையை நிரூ­பிக்­கும் ஆதா­ர­மாக SIR   ஏற்­றுக்­கொள்­ளாது என்று நினைக்­கி­றேன்.  அவர் பாகிஸ்­தான் குடி­ம­கன் என்று அவ­ரது வாக்­கா­ளர் அட்டை நிரூ­பித்­த­ தா­க­வும்  அவர்­க­ளி­ட­மி­ருந்த சாக்­லெட்­டு­கள் பாகிஸ்­தா­னில் தயா­ரிக்­கப்­பட்­டவை என்­றும் அமைச்­சர் அவர்­கள் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்­னி­ட­முள்ள பேனாக்­கள் சீனா­வி­லி­ருந்து வந்­துள்­ளன. அதில் சீன மொழி­யில் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்தப் பேனா என்­னி­ட­முள்­ள­தால் என்னை சீனக் குடி­ம­கன் என்று கூறு­வீர்­களா? என்­னால் இதனை புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாதிக்கப்பட்டவர்களுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நஷ்டஈடு எங்கே?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளு­டைய எதிர்­தாக்­கு­தல் என்ன?  சில தீவி­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் ஏற்­பட்­டுள்­ளன. நீங்­கள் மக்­களை பாது­காக்­க­வும் இல்லை, காப்­பாற்­ற­வும் இல்லை. பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்­கப்­பட்­டது? தமிழ்­நாடு, மகா­ராஷ்­டிரா மற்­றும் கர்­நா­டக அர­சு­கள் நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்­ளன. கர்­நா­ட­கா­வில் நஷ்ட ஈட்­டுத்­தொகை ஏன் அதி­க­ரிக்­கப்­ப­ட­வில்லை என்று பாஜக குற்­றம் சாட்­டி­யுள்­ளது? நீங்­கள் என்ன செய்­துள்­ளீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்தத் தீவி­ர­வாத தாக்­கு­த­லில் உயி­ரி­ழந்த மக்­க­ளும் அவர்­கள் குடும்­பங்­க­ ளும் தெளி­வா­கக் கூறி­யுள்­ளார்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">‘எங்­க­ளுக்கு பணம் தேவை­யில்லை. எங்­க­ளுக்கு தியாகி அந்­தஸ்து வேண்­டும். எங்­க­ளுக்கு வேலை வேண்­டும் என்று கேட்­க­வில்லை. நீங்­கள் அத­னைக் கொடுத்­தீர்­களா?  அதற்­கான அதி­கா­ரம் உங்­க­ளி­டம்­தான் உள்­ளது, எங்­க­ளி­டம் இல்லை. நீங்­கள் அவர்­களை இப்­ப­டி­தானே மதித்­தீர்­கள்?’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மக்­கள் அவர்­கள் வாழ்க்­கை­யையே இழந்­துள்­ள­னர். அவர்­க­ளது குடும்­பங்­கள் அங்­கீ­கா­ரத்­திற்­காக ஏங்­கிக்-­­கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் அது வழங்­கப்­ப­ட­வி­லிலை. அதைச்­செய்­யா­மல் நீங்­கள் வந்து என்ன சொல்­லிக்­கொண்­டி­ருக்­கி­றீர்­கள். பாகிஸ்­தா­னி­கள். அத­னைச் செய்­த­னர் என்று கூறு­கி­றீர்­கள். இதற்கு உங்­க­ளு­டைய பதி­லடி என்ன என்று கேட்­டால், உட­ன­டி­யாக ஆப­ரே­ஷன் சிந்­தூர் என்று கூறு­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பாகிஸ்­தா­னில் 100 கிலோ­மீட்­டர்­கள் தூரம் சென்று வெறும் இரா­ணுவ தளங்­களை மட்­டும் தாக்­கி­யி­ருக்­கி­றீர்­கள்.  ஆனால் நேற்­றும் இன்­றும் மக்­க­ளை­வை­யில் அரசு என்ன சொன்­னது தெரி­யுமா?  நாமும்­தான் இரா­ணுவ தளங்­களை அழித்­தோம். என்று ஆளும்­கட்­சி­யின் சார்­பில் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தேசிய பாது­காப்­புச் செய­லா­ளர் அஜித் தோவல், வெறும் 9 தளங்­கள்­தான் அழிக்­கப்­பட்­டுள்­ளன என்­றார். ஆனால் நாட்­டின் அர­சு­சார் தொலைக்­காட்சி நிறு­வ­ன­மான தூர்­தர்­ஷன், 11 தளங்­கள் தாக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­வித்­துள்­ளது. அவர்­கள் எதைத்­தான் தாக்­கி­னார்­கள்? சண்­டி­கர், பஞ்­சாப், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­க­ளில் முழு மின்­ன­டைப்பு ஏற்­பட்­டது. அவர்­கள் ஒரு­வி­த­மாக தாக்­கு­தல் நடத்­தி­னர். நீங்­கள் உட­ன­டி­யாக எதிர் தாக்­கு­தல் நடத்­தி­னீர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்­திற்­கும் பண்­டி­தர் நேரு­தான் நாட்டை சீர­ழித்­தார் என்று கூறு­கி­றீர்­கள்.  நவீன இந்­தி­யா­வைக் கட்­ட­மைத்­த­வர் அவர். அதனை யாரால் மறுக்க முடி­யும். மும்பை தீவி­ர­வா­தத் தாக்­கு­தல் நடந்­த­போது டாக்­டர் மன்­மோ­கன் சிங் அவர்­க­ளும் இரா­ணுவ தீர்வை நோக்­கிச் செல்­ல­வில்லை. இரா­ஜீய தீர்வு காண முயற்­சித்­தார். அதில் தொடர்­பு­டைய  அமைச்­சர்­க­ளு­ட­னும் அதி­கா­ரி­க­ளு­ட­னும் அவரே பேசி­னார். ஆனால் தற்­போது என்ன நடந்­துள்­ளது?  நீங்­கள் 72 நாடு­க­ளுக்கு 152 முறை அரசு முறை பய­ணம் சென்­று­வந்­துள்­ளீர்­கள். பல்­வேறு நட்­புத்­தொ­டர்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. ஆனால் உங்­களை ஆத­ரிக்க ஒரு­நாடு கூட முன்­வ­ர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒன்றுபட்டு செயல்பட்டோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் அமைத்த பிர­தி­நி­தி­கள் குழு­வில் எல்லா கட்சி எம்­பிக்­க­ளும் இருந்­த­னர்.  எங்­க­ளு­டைய கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை என்­றா­லும், உங்­க­ளு­டைய எந்த நட­வ­டிக்­கை­யும் திருப்தி அளிக்­க­வில்லை என்­றா­லும்,  அந்­தக் குழு­வில் அனைத்­துக் கட்சி உறுப்­பி­னர்­க­ளும் சென்­றோம்.   ஏன்? இந்­தியா ஒன்­று­பட்­டுள்­ளது, நாங்­கள் அனை­வ­ரும் ஒற்­று­மை­யாக இருக்­கி­றோம் என்று உணர்த்­து­வ­தற்­காக பல்­வேறு நாடு­க­ளுக்­கும் அனைத்து கட்சி பிர­தி­நி­தி­கள் சென்­றார்­கள். நமக்­குள் கருத்து வேறு­பா­டு­கள் இருக்­க­லாம், அதற்­காக உலக அரங்­கில் ஒன்­று­பட்­டு­தான் செயல்­ப­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் உட­ன­டி­யாக இரா­ணுவ நட­வ­டிக்­கைக்­காக சென்­றீர்­கள். அடுத்து நீங்­கள் செய்த காரி­யம் எல்­லோ­ரை­யும் ஆச்­சர்­யப்­ப­டுத்­தி­யது. பாகிஸ்­தா­னிய கலை­ஞர்­கள் வரு­வ­தற்கு தடை விதிக்­கப்­பட்­டது. இத்­த­கைய செயலை எங்­கா­வது கேட்­டி­ருக்­கி­றோமா? கலை­ஞர்­கள், திரைப்­ப­டங்­கள், பாடல்­கள் இவற்­றிற்கு தடை விதிப்­பது இரா­ணுவ நட­வ­டிக்­கையா? இது தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கையா? இது    அபத்­த­மா­னது அல்­லவா. இது சிறு­பிள்­ளைத்­த­னம் போல் தெரி­ய­வில்­லையா?  இருப்­பி­னும் நீங்­கள் இவ்­வாறு செயல்­பட்­டீர்­கள். இதற்கு பின் என்ன செய்­தீர்­கள்?  சிந்­து­நதி  நீர் ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக நிறுத்தி வைத்­தீர்­கள். நாங்­கள் இதைச் செய்­கி­றோம், அதைச் செய்­கி­றோம் என்று ஒன்­றன் பின் ஒன்­றாக  அறி­வித்து  நன்­ம­திப்பு பெற முயற்­சித்­தீர்­கள்.  அந்த நதி­நீ­ரின் 75 சத­வீத நீர் பாகிஸ்­தா­னுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டு­கி­றது. அந்­நாட்டு விவ­சா­யத்­தில் 25 சத­வீ­தம் அந்­நீரை நம்பி நடக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இஸ்­ரேல் காசா போரை நாம் தொலைக்­காட்­சி­க­ளில் காணு­கை­யில் உள்­ளம் வெடிக்­கி­றது. ஒரு கோப்பை கஞ்­சிக்­கா­க­வும் உண­வுக்­கா­க­வும் குழந்­தை­கள் கத­றிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இறந்த குழந்­தை­களை கைக­ளில் ஏந்­திக்­கொண்டு பெண்­கள் அழு­கி­றார்­கள்.  அவர்­க­ளுக்கு உணவு கொடுக்க முடி­யா­மல் கொன்­ற­தற்­காக மன்­னிப்பு கேட்­கி­றார்­கள்.  தற்­போது நீங்­கள், ஒரு நாட்­டின் மக்­க­ளுக்கு தண்­ணீர் கிடைக்­கா­மல் செய்­கி­றீர்­கள். இது மனி­தா­பி­
மா­ன­மு­டைய செயலா?</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>