<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,33,957,968" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:32:58 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="09092025-CBE-09" position.sequence="09" ex-ref="09092025-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை   </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">09.09.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">இதுவே தமிழ்நாட்டின் பெருமை, திராவிட இயக்கத்தின் சாதனை:</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">இன்றைய திருமண பத்திரிகைகளில் ஜாதிப் பெயரைவிட, படித்து வாங்கிய பட்டத்தின் பெயர்கள்தான் அதிகம்! </lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="67"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="27">மாங்காடு எஸ்.ஜபருல்லா இல்ல மண விழாவில்,</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="39">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்! </lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup572525_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup376073_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="mdmarriage2_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="mdmarriage3_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சென்னை,செப். 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">சென்னை திரு­வேற்­காட்­டில், மாங்­காடு நக­ரக் கழ­கச் செய­லா­ள­ரும், நகர்­மன்ற துணைத் தலை­வ­ரு­மான பட்­டூர் எஸ்.ஜப­ருல்லா மகள் சனோ­பர் பசீலா – அப்­துல் மாலிக் சல்­மான்  திரு­மண விழா­வில், துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு மண­மக்­களை வாழ்த்­திப்­பே­சி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அப்­போது 6 பெண்­க­ளின் திரு­ம­ணத்­துக்கு உத­வி­டும் வகை­யில், அவ­ரது ஏற்­பாட்­டில் தலா ரூ.1 இலட்­சம் என மொத்­தம் ரூ.6 இலட்­சத்­துக்­கான காசோ­லை­களை பய­னா­ளி­க­ளி­டம் வழங்கி வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இதைத் தொடர்ந்து உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் மண­மக்­களை வாழ்த்தி ஆற்­றிய வாழ்த்­து­ரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">மாங்­காடு நகர்­மன்­றச் செய­லா­ளர், நகர் மன்­றத் துணைத் தலை­வர் ஜப­ருல்லா அவர்­க­ளின் அன்பு மகள் சனோ­பர் பசீலா – அப்­துல் மாலிக் சல்­மான் ஆகி­யோ­ரின் திரு­மண விழா­வில் பங்­கேற்று, உங்­கள் அனை­வ­ரின் சார்­பாக, மண­மக்­களை வாழ்த்­து­வ­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன்.  இந்த வாய்ப்பை அளித்த மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் அண்­ணன் தா.மோ.அன்­ப­ர­சன் அவர்­க­ளுக்கு, இந்த நேரத்­தில் எனது அன்­பை­யும், நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">சுற்­றுப்­ப­ய­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இந்­தத் திரு­மண விழா கழ­கத்­தின் விழா­வாக, இன்­னும் உரி­மை­யோடு சொல்ல வேண்­டு­மென்­றால், நம் குடும்ப விழா­வாக அனை­வ­ரின் வாழ்த்­து­க­ளு­டன் சிறப்­பாக நடை­பெற்­றுக்­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">நம் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் சென்­னை­யில் இருந்­தி­ருந்­தால், நிச்­ச­ய­மாக இந்­தத் திரு­மண விழா­வுக்கு வருகை தந்து, திரு­ம­ணத்தை நடத்தி வைத்து, மண­மக்­களை வாழ்த்தி இருப்­பார்­கள். தமிழ்­நாட்­டிற்கு பல்­வேறு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக, வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெறு­வ­தற்­காக ஒரு­வார கால அர­சு­முறை சுற்­றுப்­ப­ய­ண­மாக இங்­கி­லாந்து மற்­றும் ஜெர்­மனி ஆகிய நாடு­க­ளுக்கு நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சென்­றி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">தவிர்க்க முடி­யாத செயல்­வீ­ரர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இன்­றைக்கு, முத­ல­மைச்­ச­ரின் கட்­ட­ளைக்கு இணங்க, அவ­ரின் அறி­வு­றுத்­த­லின் பேரில், இந்­தத் திரு­மண விழாவை நடத்தி வைக்­கின்ற வாய்ப்பை நான் பெற்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அண்­ணன் ஜப­ருல்­லா­வைப் பொறுத்­த­வ­ரைக்­கும், காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கத்­தில் அவர் தவிர்க்க முடி­யாக செயல்­வீ­ரர்.  அண்­ணன் அன்­ப­ர­சன் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு, மாங்­காடு பகு­தியை கழ­கத்­தின் அசைக்க முடி­யாத கோட்­டை­யாக அவர் மாற்றி வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அண்­ணன் ஜப­ருல்லா அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரைக்­கும், கலை­ஞர் அவர்­க­ளின் மிக­மிக தூய்­மை­யான ஒரு உடன்­பி­றப்பு. கழ­கத் தலை­வர்,   முத­ல­மைச்­சர்அவர்­க­ளின் அன்­புத்­தம்பி. கிட்­டத்­தட்ட 45 ஆண்டு காலம் கழ­கத்­திற்­காக கடு­மை­யான உழைப்­பைக் கொடுத்­தி­ருக்­கி­றார். 1989–ஆம் ஆண்டு நம் கழ­கச் தலை­வர் அவர்­கள் ஆயி­ரம்­வி­ளக்கு சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் போட்­டி­யிட்­ட­போது, அண்­ணன் ஜப­ருல்லா அவர்­கள் ஒரு கல்­லூரி மாண­வ­னாக இருந்து, தலை­வ­ருக்­காக தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">கூடு­தல் பெருமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இந்­தத் திரு­ம­ணத்­தில் எங்­க­ளுக்­கெல்­லாம் இன்­னொரு கூடு­தல் பெருமை என்­ன­வென்­றால், எப்­படி உங்­கள் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் அண்­ணன் அன்­ப­ர­சன் அவர்­கள் இளை­ஞர் அணி­யில் இருந்து உழைத்து படிப்­ப­டி­யாக முன்­னுக்கு வந்­தாரோ, அதே­போல அண்­ணன் ஜப­ருல்லா அவர்­க­ளும் இளை­ஞர் அணி­யில், நம் தலை­வர்அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்டு, இன்­றைக்கு இந்­தப் பொறுப்­பில் இருக்­கி­றார். 1992 – ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் குன்­றத்­தூர் ஒன்­றிய இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­தான் அண்­ணன் ஜப­ருல்லா அவர்­கள்.  1996– ஆம் ஆண்டு முதல் 4 முறை மாங்­காடு நகர்­மன்ற துணைத் தலை­வ­ராக சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">இது­தான் திரா­வி­டம் செய்த சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">கழ­கம் சார்­பாக தலை­வர் அவர்­கள் எந்­தப் போராட்­டம், ஆர்ப்­பாட்­டம் அறி­வித்­தா­லும், அதில் பங்­கேற்று முதல் ஆளாக சிறை செல்­ப­வர் அண்­ணன் ஜப­ருல்லா அவர்­கள்.  அண்­ண­னின் திரு­ம­ணத்தை 1999–ஆம் ஆண்டு நம் தலை­வர் அவர்­கள் தலை­மை­யேற்று நடத்தி வைத்­தார்­கள்.  இன்­றைக்கு அவ­ரின் மகள் திரு­ம­ணத்தை நடத்தி வைக்­கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">திரு­மண பத்­தி­ரி­கை­யைப் பார்க்­கும்­போது மண­மக்­க­ளின் பெயர்­களை முத­லில் பார்த்­தேன்.  மண­மக்­கள் இரு­வ­ரும் நன்கு படித்­த­வர்­கள்.  இரண்டு பேருமே முது­க­லைப் படிப்­பைப் படித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">75 வரு­டங்­க­ளுக்கு முன்பு திரு­மண பத்­தி­ரி­கை­யில் மண­மக்­க­ளின் பெயர்­க­ளுக்­குப் பின்பு பட்­டங்­கள் இருக்­காது. அவர்­க­ளின் ஜாதி ஒட்­டுப்­பெ­யர்­தான் இருக்­கும்.  ஆனால், இன்­றைக்கு தமிழ்­நாட்­டில் நடக்­கின்ற திரு­ம­ணங்­க­ளின் பத்­தி­ரி­கை­களை எடுத்­துப் பார்த்­தீர்­கள் என்­றால், அந்த ஜாதிப் பெய­ரை­விட, படித்து வாங்­கிய பட்­டத்­தின் பெயர்­கள்­தான் அதி­கம் இருக்­கி­றது.  இது நம் தமிழ்­நாட்­டின் பெருமை.  இந்த மாற்­றம்­தான் நம் திரா­விட இயக்­கத்­தின் சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">கழக அர­சின் சாத­னை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">திரா­விட இயக்­கத்­தின் இலட்­சி­யங்­களை நன­வாக்­கு­கின்ற வகை­யில், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் திரா­விட மாடல் அரசை சிறப்­பாக வழி­ந­டத்­திக்­கொண்டு இருக்­கி­றார்.  பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­காக பல்­வேறு திட்­டங்­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­ப­டுத்­திக்­கொண்டு இருக்­கி­றார்.  இந்த மண்­ட­பத்­தில்­கூட ஆண்­க­ளுக்கு நிக­ராக, பெண்­க­ளும் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">2021–ஆம் ஆண்டு தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக அமர்ந்த பிறகு போட்ட முதல் கையெ­ழுத்தே மக­ளிர் விடி­யல் பய­ணம் திட்­டத்­திற்­கான கையெ­ழுத்­து­தான்.  அந்த விடி­யல் பய­ணம் திட்­டத்­தின் மூலம் இந்த நான்­கரை ஆண்­டு­க­ளில் சுமார் 800 கோடி பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதம் ஆயி­ரம் ரூபாய் சேமித்து இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அடுத்து முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத்­திட்­டம்.  கிட்­டத்­தட்ட 20 லட்­சம் குழந்­தை­கள் இந்­தத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள்.  இந்த திட்­டத்தை சமீ­பத்­தில் நகர்ப்­பு­றங்­க­ளில் உள்ள அரசு உத­விப்­பெ­றும் பள்­ளி­க­ளி­லும் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் மாண­வர்­கள், பெற்­றோர்­கள், ஆசி­ரி­யர்­க­ளின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க இந்­தத் திட்­டத்தை விரி­வுப்­ப­டுத்­தி­னார். அந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள பஞ்­சாப் முத­ல­மைச்­சர் பக­வந்த் சிங் அவர்­கள் சிறப்பு விருந்­தி­ன­ராக வந்­தி­ருந்­தார். பக­வந்த் சிங் அவர்­கள் இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்தி, அந்­தக் கூட்­டத்­தில் பேசும்­போது, ``தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களே, இது மிக­மிக சிறப்­பான ஒரு திட்­டம்.  இந்­தி­யா­வில் இருக்­கின்ற அனைத்து மாநி­லங்­க­ளி­லும் இந்­தத் திட்­டத்­தைப் பின்­தொ­டர வேண்­டும். நான் என்­னு­டைய பஞ்­சாப் மாநி­லத்­தில் விரை­வில் இந்­தத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தப் போகி­றேன்’’ என்று பெரு­மை­யா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">வழி­காட்­டு­கி­றது, திரா­விட மாடல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இப்­படி மற்ற மாநில முத­ல­மைச்­சர்­க ­ளுக்கு எடுத்­துக்­காட்­டாக இருக்­கக்­கூ­டி­ய­வர்­தான் நம் முத­ல­மைச்­சர் அவர்­கள்.  மற்ற மாநி­லங்­க­ளுக்கு எடுத்­துக்­காட்­டாக இருக்­கின்ற மாநி­லம்­தான் நம் மாநி­லம் தமிழ்­நாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">நம் வீட்டு பிள்­ளை­கள் கல்வி கற்க வேண்­டும், பள்­ளிக்­கூ­டத்­திற்கு சென்­றால் மட்­டும் பத்­தாது.  உயர்­கல்வி படிக்க கல்­லூ­ரிக்கு செல்ல வேண்­டும் என்று அரசு பள்­ளி­யில் படித்து, எந்­தக் கல்­லூ­ரிக்கு உயர்­கல்­விப் படிக்க சென்­றா­லும், புது­மைப்­பெண் திட்­டத்­தின் வாயி­லாக ஆயி­ரம் ரூபாய் அந்­தப் பெண்­ணின் வங்­கிக் கணக்­கில் வைக்­கப்­ப­டு­கி­றது. அதே­போல, தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டத் ­தின் மூல­மாக, மாண­வர்­க­ளின் வங்­கிக் கணக்­கில் ஆயி­ரம் ரூபாய் வரவு வைக்­கப்­ப­டும்.  இந்­தத் திட்­டங்­க­ளின் மூலம் 8 லட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்று இருக்­கி­றார்­கள்.  இத­னால்­தான் இன்­றைக்கு  75 சத­வி­கித மாண­வர்­கள்  பள்­ளிப் படிப்பை முடித்­து­விட்டு, கல்­லூ­ரிப் படிப்­பில் சேர்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இவை எல்­லா­வற்­றை­யும்­விட மிக மிக முக்­கி­ய­மான திட்­டம்.  அது­தான் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை திட்­டம். இந்­தத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு, செப்­டம்­பர் மாதத்­து­டன், இரண்டு வரு­டம் நிறை­வ­டை­கி­றது.  கிட்­டத்­தட்ட 1 கோடியே 20 லட்­சம் மக­ளி­ருக்கு, மாதம் ஆயி­ரம் ரூபாய் என்று 24 ஆயி­ரம் ரூபாய் கொடுத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">உங்­க­ளு­டன் ஸ்டாலின் முகா­மில் நிறைய பேர் இந்­தத் திட்­டத்­திற்கு மனு அளித்­துள்­ளார்­கள்.  நிச்­ச­ய­மாக நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வலி­யு­றுத்­த­லின் பேரில், நல்ல முடிவை எடுத்து, இன்­னும்கூடு­த­லான அள­விற்கு விரை­வில் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை வழங்­கப்­ப­டும் என்ற உறு­தி­மொ­ழியை உங்­கள் முன்பு இங்கு கூறிக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இது­போன்ற ஏரா­ள­மான திட்­டங்­க­ளின் கார­ண­மா­கத்­தான், இன்­றைக்கு 11.19 விழுக்­காடு வளர்ச்­சி­யு­டன்  இந்­தி­யா­வி­லேயே நம்­பர் 1 மாநி­ல­மாக தமிழ்­நாடு வளர்ந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இது­வெல்­லாம் பிடிக்­காத சிலர்­தான், தமிழ்­நாட்­டிற்­கான சதித் திட்­டங்­க­ளைத் தீட்டி வரு­கி­றார்­கள்.  மும்­மொ­ழிக்கொள்­கையை தமிழ்­நாட்­டிற்­குள் திணிக்­கப் பார்க்­கி­றார்­கள்.  தேசிய கல்­விக் கொள்­கையை திணிக்­கப் பார்க்­கி­றார்­கள்.  குலக்­கல்­வித் திட்­டத்தை திணிக்­கப் பார்க்­கி­றார்­கள்.  தொகுதி மறு­வ­ரை­ய­றையை தமிழ்­நாட்­டிற்­குள் புகுத்தி, 39 நாடா­ளு­மன்ற உறுப்­பி­ னர்­க­ளைக் குறைத்து, நம் மாநில உரி­மை­களை எல்­லாம் பறிக்­கப் பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இவ்­வ­ளவு இடை­யூ­று­க­ளுக்கு இடையே நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நல்ல திட்­டங்­களை நம் மக்­க­ளுக்­குக் கொடுத்­துக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  இங்கு நிறைய சிறு­பான்­மை­யின மக்­கள் வந்­தி­ருக்­கி­றீர்­கள். தி.மு.க–வுக்­கும், சிறு­பான்­மை ­யின மக்­க­ளுக்­கு­மான பந்­தம் இன்­றைக்கு, நேற்று வந்­தது கிடை­யாது. வளர்ந்­தது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாட்­டில் பிறை கொடி­யுள்ள ஒவ்­வொரு வீட்­டி­லும், கருப்பு – சிவப்பு கொடி நிச்­ச­யம் பறந்­து­கொண்டு இருக்­கும்.  அத­னால்­தான் கழ­கம் இன்­றைக்­கும் சிறு­பான்மை இன மக்­க­ளின் பாது­கா­வ­ல­ராக தொடர்ந்து இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இதில் எனக்கு என்ன பெருமை என்­றால், நான் பொது­வாழ்க்­கைக்கு வந்து முதன்­மு­றை­ யாக கைதா­னது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஆத­ர­வான போராட்­டத்­தில்­தான். சிறு­பான்­மை­யி ­ன­ருக்கு எதி­ரான குடி­யு­ரி­மைச் சட்ட நகலை கிழித்­தெ­றிந்த கார­ணத்­தால்­தான் நான் முதன்­மு­த­லில் கைது செய்­யப்­பட்­டேன்.  அதை நினைக்­கும்­போது, இப்­போ­தும் எனக்­குப் பெரு­மை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.7">200 தொகு­தி­கள் இலக்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இப்­படி நம் தலை­வர் அவர்­கள் பல்­வேறு சாத­னை­க­ளைச் செய்து வரு­கி­றார்­கள்.  இவற்­றை­யெல்­லாம் அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு மக்­க­ளி­டம் கொண்டு சென்று பிரச்­சா­ரத்தை செய்ய வேண்­டும்.  தலை­வர் அவர்­கள் நமக்கு ஒரு இலக்கை கொடுத்து இருக்­கி­றார்­கள்.  குறைந்­தது 200 தொகு­தி­க­ளில் நம் திரா­விட முன்­னேற்­றக் கழக அணி வெற்­றிப்­பெற வேண்­டும் என்­றுச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">அடுத்த 6 மாதம் களத்­தில் இறங்கி, மக்­க­ளைச் சந்­தித்து, அர­சின் சாத­னை­களை, முத­ல­மைச்­ச­ரின் சாத­னை­க­ளைச் சொன்­னோ­மென்­றால், 200 இல்லை, 200–க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில், நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்­றிப்­பெ­றும்.  நம் கழக அரசு 7–வது முறை­யாக ஆட்சி அமைக்க வேண்­டும் என்­றால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் இரண்­டா­வது முறை­யா­கத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் உட்­கார வேண்­டு­மென்­றால், இந்­தப் பிரச்­சா­ரத்தை நீங்­கள் அடுத்த 6 மாத காலம் செய்ய வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இந்த நேரத்­தில் மண­மக்­க­ளுக்கு ஒரே­யொரு வேண்­டு­கோள்.  நீங்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நன்கு புரிந்­து­கொண்டு, அதே நேரம் சுய­ம­ரி­யா­தை­யோடு வாழ வேண்­டும் என்று உங்­கள் சார்­பாக வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இல்­வாழ்­வில் அடி­யெ­டுத்து வைக்­கின்ற மண­மக்­கள் சகோ­தரி சனோ­பர் பசீலா, சகோ­த­ரர் அப்­துல் மாலிக் சல்­மா­னும் இஸ்­லா­மும், இன்­பத் தமி­ழும்­போல, கலை­ஞ­ரும் – கழ­க­மும் போல, கழ­கத் தலை­வ­ரும் – உழைப்­பும் போல பல்­லாண்டு வாழ்க, நல்ல நண்­பர்­க­ளாக வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.7">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் மண­மக்­களை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>