<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1221" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:37:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09092025-CHN-04" position.sequence="04" ex-ref="09092025-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="70">உலக அரங்கில் பெரியார்; ஆக்ஸ்ஃபோர்டு கருத்தரங்கமும், முதல்வர்  ஸ்டாலின்  திறந்துவைத்த  பெரியாரின்  திருவுருவப் படமும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame573263_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup573324_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1col_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M2_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">தொ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ன்­மை­யான தமிழ் பண்­பாடு உலக சிந்­த­னைக்கு அளித்த எத்­த­னையோ கொடை­க­ளில் இரண்­டினை முத ன்­மைப்­ப­டுத்­திச் சொல்ல வேண்­டும் என்­றால் அது ஐயன் திரு­வள்­ளு­வ­ரின் திருக்­கு­ற­ளும், பெரி­யா­ரின் சிந்­த­னை­க­ளும் என­லாம். திரு­வள்­ளு­வர் தொடர்ந்து மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கி­றார். லண்­ட­னில் முதல்­வர் மு.க.ஸ்டாலின், திருக்­கு­றளை 1886-ஆம் ஆண்டே மொழி­யாக்­கம் செய்த ஜி.யு.போப் அவர்­க­ளின் கல்­ல­றைக்கு சென்று மரி­யாதை செலுத்­தி­யுள்­ளார். 
அத­னால் திருக்­கு­றள் உல­கில் பர­வ­லாக அறி­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யா­ரைப் பொறுத்­த­வரை அவர் தன் சிந்­தனை களைத் தொகுத்து நூலாக எழு­த­வில்லை. ஒரு சில பிர­சு­ரங்­கள் அவர் பெய­ரில் வந்­துள்­ள­னவே தவிர, ஒரு விரி­வான அர­சி­யல் தத்­துவ நூலா­கவோ, சித்­தாந்த நூலா­கவோ எழு­த­வில்லை. மாறாக அவர் தொடர்ந்து மக்­க­ளி­டையே பிரச்­சா­ரம் செய்து பெரும் சிந்­த­னைப் புரட்­சியை பொது­மன்­றத்­தில் உரு­வாக்­கி­ய­வர். செயல்­முறை தத்­து­வம் (philosophical praxis) என்­பதை மேற்­கொண்­ட­வர். கற்­றோ­ருக்­கான நூல்­களை எழு­து­வ­தை­விட, அனைத்து மக்­க­ளை­யும் சிந்­திக்க வைத்து சுய­ம­ரி­யா­தையை சுடர் விடச் செய்­வ­தையே அவர் முக்­கி­யப் பணி­யா­கக் கரு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் வாழ்­நா­ளி­லேயே அவர் உரை­க­ளின் எழுத்து வடி­வங்­க­ளும், எழுத்­துக்­க­ளும் தொகுக்­கப்­பட்டு வெளி­வந்­தா­லும் அவை மொழி­யாக்­கம் செய்­யக் கடி­ன­மா­னவை என்­ப­தால் பெரு­ம­ளவு அவ்­வி­தம் நடந்து வெளி­யு­ல­கில் பர­வ­வில்லை. மேலும் கல்­விப்­பு­லத்­தில் நிறைந்­தி­ருந்த பார்ப்­ப­னர்­க­ளுக்­கும், பிற மேல் தட்­டி­ன­ருக்­கும் அவ­ரைக் குறித்த சரி­யான புரி­தல் இல்லை. இடது சாரி சிந்­த­னை­யா­ளர்­கள் பல­ருக்­கும் கூட அவ­ரைக் குறித்த சரி­யான புரி­தல் இருக்­க­வில்லை. அத­னால் அவ­ரு­டைய அளப்­ப­ரிய அரும்­பணி, மானு­ட­வ­ர­லாற்­றில் அவர் உரு­வாக்­கிய  தனித்­து­வ­மிக்க  சிந்­த­னைப் புரட்­சி­யின் சிறப்­பம்­சங்­கள் உலக அரங்­கில் விவா­திக்­கப்­பட கணி­ச­மான கால­தா­ம­தம் ஆகி­யுள்­ள­தைப் புரிந்­து­கொள்ள முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி அறி­யப்­ப­ட­வேண்­டிய சிறப்­பம்­சங்­கள் என்ன என்­ப­தை­யும் சுருக்­க­மா­கக் கூறி­வி­டு­வோம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெரும்­பா­லான உல­கத் தலை­வர்­கள் மக்­களை திரட்டி ஆட்சி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­று­வார்­கள் அல்­லது தேசிய விடு­த­லையை சாதித்து புதிய அர­சு­ரு­வாக்­கத்­திற்கு வகை செய்­வார்­கள். இதற்கு மாறாக பெரி­யார் மக்­க­ளின் சிந்­த­னை­யிலே புரட்­சி­கர மாற்­றத்தை உரு­வாக்கி, புதிய விழு­மி­யங்­க­ளின் அடிப்­ப­டை­யிலே குடி­ய­ரசை உரு­வாக்க முயற்­சித்­தார். இதனை சமூக சீர்­தி­ருத்­தம் என்று சொல்­லி­விட முடி­யாது. புதிய குடி­ய­ர­சின் அடித்­த­ளத்தை உரு­வாக்­கு­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இன்­னும் தெளி­வா­கச்சொன்­னால் இந்­திய சமூ­கத்­தில் பர­வ­லாக வேரூன்­றிய வர்ண தர்ம சிந்­த­னையை, பிறப்­பி­லேயே ஏற்­றத்­தாழ்வு கற்­பிக்­கும், பிறப்­பையே தண்­ட­னை­யாக்­கும் வர்ண தர்ம சமூக ஒழுங்கை முற்­றி­லும் அகற்றி, பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்ற வள்­ளு­வர் வாக்­கிற்கு ஏற்ப சமத்­துவ விழு­மி­யத்தை நிலை­நி­றுத்­து­வதே அவர் மேற்­கொண்ட சிந்­த­னைப் புரட்­சி­யின் அடிப்­படை.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரு­டைய பணி­யின் விளை­வாக “திரா­வி­ட-­த­மி­ழர்” என்ற ஒரு மக்­கள் தொகுதி தன்­னு­ணர்வு பெற்று பிரா­ம­ணீய கருத்­தி­யல் மேலா­திக்­கத்­தினை (Brahmin Hegemony) மறு­த­லிக்­கும் ஆற்­ற­லு­டன் செயல்­ப­டு­வது சாத்­தி­ய­மா­னது. இருப்­பி­னும் இந்­திய ஒன்­றிய அர­சி­டம் குவிந்­துள்ள அதி­கா­ரங்­கள் உரு­வாக்­கும் தளை­களை மீறி இந்த மக்­கள் தொகுதி தொடர்ந்து தன் இலட்­சி­யத்தை அடைய போராடி வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த உண்மை, பெரி­யார் மக்­க­ளின் சிந்­த­னைப் புரட்­சியை நாடி­ய­வர், தேசிய அரசை உரு­வாக்க முனை­யா­மல், குடி­ய­ரசு விழு­மி­யங்­களை நிறுவ முயன்­ற­வர், அதன் மூலம் மக்­க­ளின் மனங்­க­ளிலே சுய­ம­ரி­யா­தைக் கனலை உரு­வாக்­கி­ய­வர் என்ற உண்மை இன்­னும் முழு­மை­யாக உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. தேசிய அரசை உரு­வாக்­கு­ப­வர்­களே வர­லாற்­றில் கவ­னம் பெறு­வார்­கள் என்­ப­தால் பெரி­யா­ரின் சிந்­த­னைப் புரட்சி போதிய கவ­னம் பெற­வில்லை என்­றும் கூற­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனா­லும் ஆயி­ரம் கைகள் மறைத்து நின்­றா­லும் ஆத­வன்மறை­வ­தில்லை என்­பது போல பெரி­யா­ரின் சுய­ம­ரி­யாதை இயக்­கத்­தின் பேரொளி எல்லை கடந்­தும் வீசத் துவங்­கி­யுள்­ளதை வியப்­ப­தற்­கில்லை. இந்த கருத்­த­ரங்­கத்தை ஒருங்­க­மைத்த அமைப்பு எது, பங்­கேற்ற அறி­ஞர்­கள் யார், யார் என்­பதை நாம் சுருக்­க­மாக அறிய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இரு நாள் கருத்­த­ரங்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான, உல­கப் புகழ்­பெற்ற ஆக்ஸ்­போர்டு பல்­க­லை­க­ழ­கத்­தில் பல்­வேறு துறை­க­ளும், 36 கல்­லூ­ரி­க­ளும் அடங்­கி­யுள்­ளன. அவற்­றில் ஒரு கல்­லூ­ரி­தான் செயிண்ட் ஆண்­டனி கல்­லூரி. அதில் உள்ள ஆசிய ஆய்வு மையம் “சுய­ம­ரி­யாதை இயக்­க­மும், அதன் தாக்­கங்­க­ளும்” (Self Respect Movement and its Legacies) என்ற தலைப்­பில் ஒருங்­க­மைத்த கருத்­த­ரங்­கம் செப்­டம்­பர் 4,5 தேதி­க­ளில் நடந்­தே­றி­யது. அந்­தக் கல்­லூ­ரி­யின் பேரா­சி­ரி­யர்­கள் ஜிம் மாலின்­ச­னும், ஃபைசல் தேவ்­ஜி­யும் இந்­தக் கருத்­த­ரங்­கின் அமைப்­பா­ளர்­கள் ஆவார்­கள். இந்­தக் கருத்­த­ரங்­கம் குறித்த செய்­தி­கள் பல்­வேறு நாளே­டு­க­ளி­லும் இடம்­பெற்­றுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உல­கின் பல்­வேறு முன்­னணி கல்வி நிறு­வ­னங்­க­ளில் பணி­பு­ரி­யும் ஆய்­வா­ளர்­கள் பலர் இதில் பங்­கேற்று கட்­டு­ரை­கள் வாசித்­துள்­ள­னர். அபி­மன்யு ஆர்ணி, ஆக்ஸ்ஃ­போர்டு பல்­க­லை­க­ழ­கம்; கணேஷ்­வர், ஹைத­ரா­பாத் பல்­க­லை­க­ழ­கம்; சுந்­தர் சருக்­காய், பேர்ஃ­புட் பிலா­சஃ­பர்; எஸ்.ஆனந்தி, எம்.ஐ.டி.எஸ்; கிருபா முனு­சாமி, மிடில்­சக்ஸ் பல்­க­லை­க­ழ­கம்; விக்­னேஷ் ராஜா­மணி, கிங்க்ஸ் காலேஜ், லண்­டன்; கார்த்­திக் ராம் மனோ­ஹர், நேஷ­னல் லா ஸ்கூல்; ஜெ.ஜெய­ரஞ்­சன், தமிழ்­நாடு மாநில திட்­டக்­குழு; ஆ.இரா.வெங்­க­டா­ச­ல­பதி, எம்.ஐ.டி.எஸ்; கிறிஸ்­டொஃபே ஜெஃபர்லோ, சையின்ஸ் போ, பாரிஸ்; சூரஜ் யாங்டே, ஹார்­வார்டு பல்­க­லை­க­ழ­கம்; பிரான்­சிஸ் கோடி, டொராண்டோ பல்­க­லை­க­ழ­கம்; மார்த்தா ஆன் செல்பி, ஹார்­வார்டு பல்­க­லை­க­ழம்; சாரா ஹோட்­ஜஸ், கிங்க்ஸ் காலேஜ், லண்­டன்; சுமதி ராம­சாமி, டியூக் பல்­க­லை­க­ழ­கம்; தாரிணி அழ­கர்­சாமி, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லை­க­ழ­கம்; கமலா விஸ்­வேஸ்­வ­ரன், ரைஸ் பல்­க­லை­க­ழ­கம்; சரோஜ் கிரி, டெல்லி பல்­க­லை­க­ழ­கம் என முன்­னணி ஆய்­வா­ளர்­கள் பங்­கேற்று பங்­க­ளித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சிறப்­பு­மிக்க கருத்­த­ரங்­கின் பகு­தி­யா­கத்­தான்  செப்­டம்­பர் 4ஆம் தேதி மாலை முதல்­வர் ஸ்டாலின் சிறப்­புரை ஆற்­றி­யுள்­ளார். பகுத்­த­றி­வுப் பக­ல­வன் பெரி­யார் திரு­வு­ரு­வப் படத்­தைத் திறந்து வைத்­துள்­ளார். செப்­டம்­பர் 5-ஆம் தேதி மாலை இறு­திச் சிறப்­பு­ரையை புகழ்­பெற்ற மூத்த மானு­ட­வி­யல் ஆய்­வா­ளர், தமிழ்­நாட்டை பூர்­வீ­க­மா­கக் கொண்ட அர்­ஜுன் அப்­பா­துரை அவர்­கள் நிகழ்த்­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்­வு­க­ளின் பகு­தி­யாக கார்த்­திக் ராம் மனோ­ஹ­ர­னும், ஆ.இரா.வெங்­க­டா­ச­ல­ப­தி­யும் தொகுத்­துள்ள கேம்­பி­ரிட்ஜ் கம்­பே­னி­யன் டு பெரி­யார் என்ற ஆய்­வுக் கட்­டு­ரை­கள் அடங்­கிய நூல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. பெரி­யார் குறித்த ஆய்­வுப்­பு­லத்­திற்கு முக்­கிய பங்­க­ளிப்­பாக அமை­யக்­கூ­டிய நூல் இது என­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இத்­த­கைய சிறப்பு வாய்ந்த நிகழ்­வில் முதல்­வர் பங்­கேற்­றது, பெரி­யார் படத்தை திறந்­து­ வைத்­த­தும் திரா­விட மாடல் அர­சின் சித்­தாந்த வேர்­களை எடுத்­து­ரைக்­கும் சிறப்பு வாய்ந்­தது. சுய­ம­ரி­யாதை என்ற சொல்­லின் சிறப்­பினை முதல்­வர் எடுத்­து­ரைத்து உரை நிகழ்த்­தி­யுள்­ளதை காணொ­லி­க­ளில் காண முடி­கி­றது. திரா­வி­ட­விய அர­சி­ய­லின் 
வர­லாற்­றுத் தொடர்ச்­சி­யில் மற்­றொ­மொரு மைல்­கல்­லாக இந்த நிகழ்வு அமை­கி­றது என்­றால் மிகை­யா­காது.முதல்­வ­ரு­டன்மனுராஜ் சண்முகசுந்தரம் உள்­ளிட்ட 
திரா­விட இயக்க ஆர்­வ­லர்­க­ளும் பங்­கேற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பா.ஜ.க. ஏன் பெரி­யாரை எதிர்க்­கி­றது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்ச்சி தரும் எழுச்­சியை சகிக்க முடி­யா­மல் பா.ஜ.க. தலை­வர் தமி­ழிசை பேசி­யுள்ள ஒரு காணொலி ஓன்று இணை­யத்­தில் பர­வ­லா­கக் கிடைக்­கி­றது. அவர் இந்த நிகழ்ச்­சியை ஆக்ஸ்­போர்டு பல்­க­லை­க­ழ­கமே நடத்­த­வில்லை, அந்த வளா­கத்­தில் ஒரு அரங்­கத்தை வாட­கைக்கு எடுத்து தி.மு.க நட த்தியுள்­ளது என்­றெல்­லாம் பேசி­யுள்­ளார். இதே போன்ற தக­வலை தின­ம­லர் நாளே­டும் காணொ­லி­யாக வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தைக் காண முடி­கி­றது. அதில் முதல்­வர் ஸ்டாலின் பங்­கேற்ற நிகழ்­விற்­கும் ஆக்ஸ்­போர்டு பல்­க­லை­க­ழ­கத்­திற்­கும் எந்த தொடர்­பும் கிடை­யாது என்று வலி­யு­றுத்­திச் சொல்­கி­றார்­கள். கல்­யாண மண்­ட­பத்­தில் ஒரு அரங்­கத்தை வாட­கைக்கு எடுப்­ப­து­போல தி.மு.க-வி­னர் வாட­கைக்கு எடுத்து அதனை ஆக்ஸ்­போர்டு பல்­க­லை­க­ழக நிகழ்ச்சி என்று பொய் பிரச்­சா­ரம் செய்­வ­தா­கக் கூறு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­லில் சுய­ம­ரி­யாதை உள்ள தமி­ழர்­க­ளாக நாம் ஒன்­றைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். பெரி­யா­ரைக் குறித்து கருத்­த­ரங்­கம் நடத்­து­வ­தால் ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குத்­தான் பெரு­மையே தவிர, அத­னால் பெரி­யா­ருக்கோ, தி.மு.க-விற்கோ தனி­யான பெருமை எது­வும் சேரப்­போ­வ­தில்லை. திரா­விட இயக்­கத்­தின் பெரு­மை­யெல்­லாம் தமிழ்ச் சமூ­கத்தை வர்ண தர்­மத்­தின் பிடி­யி­லி­ருந்து விடு­வித்து மான­முள்ள, சுய­ம­ரி­யா­தை­யுள்ள தன்­னு­ணர்வுபெற்ற சமூ­க­மாக மாற்றி வரு­வ­து­தான். உலக வர­லாற்றை படிப்­ப­தற்­குத்­தான் பல்­க­லை­க­ழ­கமே தவிர, பல்­க­லை­க­ழ­கத்­திற்­காக வர­லாறு நிகழ்­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அடுத்­த­தாக நாம் மேலே சொன்­ன­படி கருத்­த­ரங்க நிகழ்­வு­களை தெளி­வாக நாளே­டு­க­ளில் வாசித்து அறி­ய­லாம். நாம் சொன்ன பேரா­சி­ரி­யர்­கள் மேடை­யில் முதல்­வ­ரு­டன் அமர்ந்­தி­ருக்­கும் படங்­க­ளை­யும் அவர் பகிர்ந்­துள்­ளார். அரங்­கத்தை வாட­கைக்கு எடுத்­த­து­போல பேரா­சி­ரி­யர்­க­ளாக யாரே­னும் நடிக்­கி­றார்­கள் என்­றும்­கூட சொல்­வார்­கள். அந்த பேரா­சி­ரி­யர்­கள் நாம் நன்கு அறிந்­த­வர்­கள்­தான். அவர்­கள் பெயர்­களை கூகுள் செய்து அவர்­கள் புகைப்­ப­டங்­க­ளைப் பார்த்­துத் தெளி­ய­லாம்.  இவ்­வ­ளவு மலி­ன­மான பொய் பிரச்­சா­ரத்தை ஏன் அவர்­கள் வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­ப­து­தான் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தக் காழ்ப்­பிற்கு விடை தேடு­வது கடி­ன­மல்ல. அதை­யும் இந்­தக் கட்­டு­ரை­யின் துவக்­கத்­தில் பார்த்­தோம். வர்ண தர்­மத்தை இந்­தி­யக் குடி­ய­ரசு முற்­றாக நிரா­க­ரிக்க வேண்­டும் என்­ற­வர் பெரி­யார். அத­னையே குடி­ய­ர­சின் அடிப்­ப­டை­யாக க் கொள்ள வேண்­டும் என்­ற­வர் ஆர்.எஸ்.எஸ் சிந்­தாந்­த­வாதி கோல்­வால்­கர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பொது­வா­கவே இந்­திய தேசி­ய­வா­தி­கள், சிந்­த­னை­யா­ளர்­கள் பல­ரும் உறு­தி­பட மனு ஸ்மிருதி முன்­வைக்­கும் வர்ண தர்­மத்தை முற்­றாக நிரா­க­ரிக்க வேண்­டும் என்று கூறி­ய­தில்லை. அவ்­வி­தம் கூறு­வது அந்த தர்­மத்தை சமஸ்­கி­ரு­தத்­தில் எழுதி, இன்று வரை தங்­களை அதன்­படி உயர் பிறப்­பா­ளர்­க­ளா­கக் கரு­திக்­கொள்­ளும் பிரா­ம­ணர்­களை வருந்­தச் செய்­யும் என்­ப­தால் சற்றே நீக்கு போக்­கா­கத்­தான் அதைப்­பற்­றிப் பேசு­வார்­கள். அதனை முற்று முழு­தாக எதிர்த்து பேசி­ய­வர்­கள் பூலே, பெரி­யார், அம்­பேத்­கர் ஆகிய பேரா­ளு­மை­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார் அதனை பெரி­ய­தொரு மக்­கள் இயக்­க­மாக மாற்றி. திரா­வி­டர் கழ­கம் என்­றும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் என்­றும் இரட்­டைக் குழல் துப்­பாக்­கி­யாக விட்­டுச் சென்­றுள்­ளார்.அது இன்­று­வரை வர்ண தர்ம மீட்பு வாத த்துடன் போரா­டு­கி­றது. அது­தான் அவர்­க­ளுக்கு இந்த காழ்ப்பு. இந்த மையப் பிரச்­சி­னையை மறைத்து கட­வுள் நம்­பிக்கை, இந்து மதம் என்று ஏதேதோ பேசு­வார்­கள். ஆனால் திரா­விட- தமிழ் மக்­கள் ஏமா­று­வ­தில்லை. அவர்­கள் விரும்­பும் தெய்­வங்­களை வழி­ப­டு­வார்­கள்; பெரி­யா­ரின் சுய­ம­ரி ­யாதை தத்­து­வத்­தை­யும் புரிந்­து ­கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பிரச்­சினை மனி­தர்­க­ளுக்­குள் பிறப்­பி­லேயே ஏற்­றத்­தாழ்வு கூடாது என்­ப­து­தானே தவிர கட­வுளை வணங்­கு­வது இல்லை. கட­வுள் பெய­ரால் பார்ப்­ப­னர்­கள் ஏற்­றத்­தாழ்வை உரு­வாக்­கு­வ­தால்­தான் பெரி­யார் கட­வு­ளின் இருப்­பை­யும் கேள்­விக்கு உள்­ளாக்­கி­னார். அவர் அதையே தெளி­வாக விளக்­க­வும் செய்­தார். அவர் வாழ்ந்த காலத்­தில் அனைத்து சமூ­கத்­தை­யும் சார்ந்த முற்­போக்கு சிந்­த­னை­யா­ளர்­கள் அவ­ரைக் கொண்­டா­டவே செய்­த­னர். புகழ்­பெற்ற எழுத்­தா­ளர் பார்ப்­பன வகுப்­பைச் சார்ந்த வ.ராம­சாமி, 1944-ஆம் ஆண்டு வெளி­யான தமிழ் பெரி­யோர்­கள் என்ற நூலில் பெரி­யா­ரையே முத­லில் சிறப்­பித்து, கொண்­டாடி எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பார­தீய ஜனதா கட்­சி­யும் வர்ண தர்ம பித்தை அகற்றி­ விட்டு, திரா­விட நெறி­யான பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என்­பதை மனப்­பூர்­வ­மாக ஏற்க வேண்­டும். அதுவே உண்­மை­யான தேச நல­னாக இருக்­கும். அப்­போது பெரி­யா­ ரும்தேசி­யத் தலை­வ­ரா­கத் தெரி­வார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>