<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,714,958,1272" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:40:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09092025-CHN-14" position.sequence="14" ex-ref="09092025-CHN-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">திருச்­செந்­தூர் – திருத்­தணி – மரு­த­மலை மற்­றும்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">வட­லூர்  வள்­ள­லார் தெய்வ நிலை­யத்­தில் நடை­பெற்று வரும் திருப்­ப­ணி­கள்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு தலை­மை­யில் ஆய்­வுக் கூட்­டம் நடை­பெற்­றது!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">---------சென்னை, செப்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு தலை­மை­யில் நேற்று (08.09.2025) ஆணை­யர் அலு­வ­ல­கத்­தில் திருச்­செந்­தூர், திருத்­தணி, மரு­த­மலை திருக்­கோ­யில்­கள் மற்­றும் வட­லூர் திரு­அ­ருட்­பி­ர­காச வள்­ள­லார் தெய்வ நிலை­யம் ஆகி­ய­வற்­றில்  ஒருங்­கி­ணைந்த பெருந்­திட்ட வரை­வின்­கீழ் (Master Plan) நடை­பெற்று வரும் திருப்­ப­ணி­கள் குறித்த சீராய்­வுக் கூட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்     திருச்­செந்­தூர்,  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ.306.35 கோடி மதிப்­பீட்­டி­லும், திருத்­தணி,  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ.184.07 கோடி மதிப்­பீட்­டி­லும்,  மரு­த­மலை,  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ.57.05 கோடி மதிப்­பீட்­டி­லும் நடை­பெற்று  வரும் திருப்­ப­ணி­க­ளில் நிறை­வுற்ற பணி­கள் தவிர்த்து இதர பணி­க­ளின் முன்­னேற்­றம் குறித்­தும், வட­லூர், திரு­அ­ருட்­பி­ர­காச வள்­ள­லார் தெய்வ நிலை­யத்­தில் கட்­டப்­பட்டு வரும் வள்­ள­லார் சர்­வ­தேச மையப் பணி­கள் குறித்­தும் விரி­வான ஆய்வு மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒருங்­கி­ணைந்த பெருந்­திட்ட வரை­வின்­கீழ், திருச்­செந்­தூர்,  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ.306.35 கோடி மதிப்­பீட்­டி­லான பணி­க­ளில்  நிர்­வாக அலு­வ­லக கட்­ட­டங்­கள், அன்­ன­தா­னக் கூடம், பக்­தர்­கள் தங்கு விடு­தி­கள், பக்­தர்­கள் வரி­சை­முறை மண்­ட­பம், முடி­கா­ணிக்கை மண்­ட­பம், கலை­ய­ரங்­கம், துணை மின்­நி­லை­யம், கழி­வு­நீர் சுத்­த­க­ரிப்பு நிலை­யம், சுகா­தார வளா­கம், சல­வைக் கூடம், சஷ்டி மண்­ட­பம், திரு­நீறு மற்­றும் பஞ்­சா­மிர்­தம் தயா­ரிக்­கும் கூடம் உள்­ளிட்ட பணி­கள் நிறை­வு­பெற்­றுள்­ளன. சூர­சம்­ஹார கண்­காட்சி கூடம், நாழி­கி­ணறை மேம்­ப­டுத்­தும் பணி­கள், வெளிப்­புற கழி­வு­நீர் குழாய்­கள், பணி­யா­ளர் குடி­யி­ருப்பு மற்­றும் வெளிப்­புற மேம்­பாட்டு பணி­கள் முழு­வீச்­சில் நடை­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருத்­தணி, சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யில் சார்­பில்  ரூ.184.07 கோடி மதிப்­பீட்­டில் அன்­ன­தா­னக் கூடம், மூன்­றாம் பிர­கார ரத­வீதி விரி­வாக்­கம், ஐந்து அடுக்கு இரா­ஜ­கோ­பு­ரம், பக்­தர்­கள் வரி­சை­முறை மண்­ட­பம், பிரம்ம தீர்த்­தம் மேம்­பாட்டு பணி­கள், பணி­யா­ளர் பயிற்சி மையம் மற்­றும் பக்­தர்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­களை மேம்­ப­டுத்­தும் பணி­க­ளும், கோவை மாவட்­டம், மரு­த­மலை,  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லில் உப­ய­தா­ரர் நிதி ரூ.1.86 கோடி மற்­றும் திருக்­கோ­யில் நிதி ரூ.55.19 கோடி என மொத்­தம் ரூ.57.05 கோடி மதிப்­பீட்­டில் வசந்த மண்­ட­பம், யாக­சாலை, மடப்­பள்ளி, பக்­தர்­கள் ஓய்­வுக் கூடம்,  சுகா­தார வளா­கம், கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம், கட்­ட­ண­சீட்டு விற்­பனை மையம், சாலை மேம்­பாட்டு பணி­க­ளும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், கட­லூர் மாவட்­டம், வட­லூர், திரு­அ­ருட்­பி­ர­காச தெய்வ நிலை­யத்­தில் வள்­ள­லார் சர்­வ­தேச மையம் அமைக்­கும் பணி­க­ளில் பிரிவு B-ல் ரூ.16.98 கோடி மதிப்­பீட்­டில் பக்­தர்­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­கள், வைத்­திய சாலை, முதி­யோர் இல்­லம், சுகா­தார வளா­கம் மற்­றும் சாலை மேம்­பாட்­டுப் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தின் நிறை­வாக, இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்  பேசு­கை­யில், ஒருங்­கி­ணைந்த பெருந்­திட்ட வரை­வின்­கீழ் திருச்­செந்­தூர், திருத்­தணி, மரு­த­மலை திருக்­கோ­யில்­கள் மற்­றும் வட­லூர் திரு­அ­ருட்­பி­ர­காச வள்­ள­லார் தெய்வ நிலை­யத்­தில் சர்­வ­தேச மையத்­தில் அமைக்­கும் பணி­க­ளில் நிறை­வுற்ற பணி­களை தவிர்த்து, இதர பணி­களை வரை­ய­றுக்­கப்­பட்ட நாட்­க­ளுக்­குள் விரைந்து முடித்து பக்­தர்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வர­வேண்­டும். இப்­ப­ணி­க­ளில் சம்­பந்­தப்­பட்ட திருக்­கோ­யில்­க­ளின் அலு­வ­லர்­கள் மற்­றும் பொறி­யா­ளர்­கள் தனி­க­வ­னம் செலுத்தி அர்ப்­ப­ணிப்பு உணர்­வு­டன் பணி­யாற்­றிட வேண்­டும் என கேட்­டுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் சுற்­றுலா, பண்­பாடு மற்­றும் அற­நி­லை­யங்­கள் துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் மருத்­து­வர் க.மணி­வா­சன், இந்து சமய அற­நி­லை­யத்­துறை ஆணை­யர் பி.என்.ஸ்ரீதர், கூடு­தல் ஆணை­யர்­கள் டாக்­டர் சி.பழனி, திரு­மதி சி.ஹரிப்­ரியா, பொ.ஜெய­ரா­மன், திரு­மதி கோ.செ.மங்­கை­யர்க்­க­ரசி, தலை­மைப் பொறி­யா­ளர் பொ.பெரி­ய­சாமி,  சிறப்­புப் பணி அலு­வ­லர் சி.லட்­சு­ம­ணன், திருச்­செந்­தூர் திருக்­கோ­யில் தக்­கார் ஆர்.அருள்­மு­ரு­கன், திருத்­தணி திருக்­கோ­யில் அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர்  ஸ்ரீதர், மரு­த­மலை திருக்­கோ­யில் தக்­கார் ஜெய­கு­மார், கண்­கா­ணிப்பு பொறி­யா­ளர்­கள் எஸ்.செல்­வ­ராஜ், எம்.பழனி, கே.சச்­சி­தா­னந்­தம், இணை ஆணை­யர்­கள் எஸ். ஞான­சே­க­ரன், திரு­மதி கே.ரமணி, திரு­மதி சி. ஜோதி,  பி.ரமேஷ், அலு­வ­லர்­கள் மற்­றும் பொறி­யா­ளர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>