<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Sep 08 2025 16:37:50 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09092025-TRY-11" position.sequence="11" ex-ref="09092025-TRY-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில், 200க்கும் அதி­க­மான தொகு­தி­களை வெல்ல</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="96">இளை­ஞர் அணி­யி­னர்  முன்­க­ளப் படை வீரர்­க­ளாக செயல்­பட வேண்­டும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="42">சென்னை வடக்கு மாவட்ட புதிய நிர்­வா­கி­கள் அறி­மு­கக் கூட்­டத்­தில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="55">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிகு உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhayasirspe_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Udhayasirspe1_11_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, செப். 9 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, அண்ணா அறி­வா­ல­யத்­தில் சென்னை வடக்கு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட பெரம்­பூர், ஆர்.கே.நகர் மற்­றும் இரா­ய­பு­ரம்  சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள வார்டு– பாகங்­க­ளுக்­குப் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளுக்­கான அறி­மு­கக் கூட்­டத்­தில் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்­து­கொண்டு எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது அவர், ``2026–சட்­ட­மன்­றத் தேர்­தல் முடி­வு­க­ளைத் தீர்­மா­னிக்­கும் முனைப்­பு­டன், கழக இளை­ஞர் அணி­யி­னர் முன்­க­ள­ப் ப­டை­
வீ­ரர்­க­ளாக செயல்­ப­ட­வேண்­டும் எனக் 
குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை 
முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் 
ஆற்­றிய உரை­ வரு­மாறு: –
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை வடக்கு மாவட்­டத்­துக்கு உட்­பட்ட பெரம்­பூர், ஆர்.கே.நகர், இரா­ய­பு­ரம் இந்த மூன்று சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள புதி­தாக தேர்வு செய்­யப்­பட்­டுள்ள வட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் மற்­றும் பாக அமைப்­பா­ளர்­க­ளுக்­கான இந்த அறி­மு­கக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு உங்­களை எல்­லாம் சந்­திப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். இந்த நிகழ்ச்­சியை இவ்­வ­ளவு சிறப்­பாக ஏற்­பாடு செய்த உங்­க­ளு­டைய மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர் என் ஆரு­யிர் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­களுக்கு இந்த நேரத்­தில் நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு காலை­யில்­தான் உங்­க­ளின் அறி­விப்பு வந்­தது.  உங்­க­ளின் மாவட்­டத்­திற்­கான அறி­விப்பு முர­சொ­லி­யில வந்­தது.  சூட்­டோடு, சூடாக இன்று காலை­யில் அறி­விப்பு, மாலை­யில் அறி­மு­கக் கூட்­டம் நடத்­து­கி­றோம் என்­றால், அது­தான் இளை­ஞர் அணி­யின் சிறப்பு. இளை­ஞர் அணி எவ்­வ­ளவு வேக­மாக செயல்­­படு­கி­றது என்­ப­தற்கு இதை­விட மிகச்­சி­றந்த 
உதா­ர­ணம் எது­வுமே இருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">அன்பு– எழுச்சி– ஆர­வா­ரம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­லில் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய அத்­த­னைப் பேருக்­கும் என்­னு­டைய அன்­பார்ந்த பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  பல­முறை இளை­ஞர் நிகழ்ச்­சி­யில் பேசும்­போது, ஒவ்­வொரு முறை­யும் சொல்­வ­து­தான். எத்­த­னையோ நிகழ்ச்­சி­க­ளில் கலந்து கொள்­கி­றேன். அரசு நிகழ்ச்சி, கழக நிகழ்ச்சி கழ­கத்­தின் நிகழ்ச்சி, திரு­மண நிகழ்ச்சி, இப்­படி எத்­த­னையோ நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொள்­கி­றேன். ஆனால், இந்த இளை­ஞர் அணி நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் உங்­க­ளை­யெல்­லாம் பார்க்­கும்­போது என்­னு­டைய குடும்ப நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு என்­னு­டைய சொந்த அண்­ண­னை­யும், தம்­பி­யை­யும் பார்ப்­பது போன்ற உணர்வு ஒவ்­வொரு முறை­யும் எனக்கு ஏற்­ப­டும். அந்த அள­வுக்கு உங்­க­ளு­டைய அன்பு, உங்­க­ளு­டைய எழுச்சி, உங்­க­ளு­டைய ஆர­வா­ரம் இருக்­கும்.  அந்த உணர்­வோடு, மகிழ்ச்­சி­யோடு, நிகழ்ச்­சி­யோடு இங்கே நின்று கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை வடக்கு மாவட்­டத்­திற்கு இன்­னொரு தனிச்­சி­றப்பு உண்டு.  கழ­கத்­தின் தாய் வீடு என்­றால், அது சென்னை வடக்கு மாவட்­டம்­தான்.  அங்­கு­தான் கழ­கம் பிறந்­தது.  1948–ஆம் ஆண்டு இதே செப்­டம்­பர் மாதம் 17 ஆம் தேதி நம் இரா­ய­பு­ரத்­தில் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">அன்­ப­கம்– அறி­வா­ல­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நாம் இப்­போது அறி­வா­ல­யத்­தில் நின்று பேசு­கி­றோம்.  இளை­ஞர் அணிக்கு `அன்­ப­கம்’ இருக்­கி­றது.  ஆனால், கழ­கத்­திற்­காக முத­லில் தொடங்­கப்­பட்ட அலு­வ­ல­கம், கழ­கத்­தின் அறி­வ­கம்­தான்.  அது உங்­க­ளின் வடக்கு மாவட்­டத்­தில் இருக்­கின்ற, கழ­கத்­தின் தலை­மை­ய­கம். அதன்­பி­றகு, அறி­வ­கத்­தி­லி­ருந்து இன்­றைய இளை­ஞர் அணி அலு­வ­ல­க­மான அன்­ப­கத்­திற்கு வந்து, அன்­ப­கத்­தி­லி­ருந்து இன்று அறி­வா­ல­யத்­திற்கு வந்­தி­ருக்­கி­றோம்.  நாமும் இன்­றைக்கு அன்­ப­கத்­தி­லி­ருந்து, இந்த நிகழ்ச்­சிக்­காக அறி­வா­ல­யத்­திற்கு வந்­தி­ருக்­கி­றோம் என்­பதை, நீங்­கள் மன­தில் வைத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்று, நேற்­றல்ல.  பல வரு­ட­மாக வட­சென்னை கழ­கத்­தின் கோட்­டை­யாக இருக்­கி­றது.  இளை­ஞர் அணி­யில் புதி­தாக பொறுப்­புக்கு வந்­துள்ள நீங்­கள் இளை­ஞர் அணி­யின் வர­லாற்­றைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">மிகப்­பெ­ரிய பெருமை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">1980– ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்­கா­வில் கலை­ஞர் அவர்­க­ளும், பேரா­சி­ரி­யர் அவர்­க­ளும் தொடங்கி வைத்­த­து­தான் நம் இளை­ஞர் அணி.  அதன் பிறகு கிட்­டத்­தட்ட 45 ஆண்டு காலம் வெற்­றி­ந­டைப் போட்­டுக்­கொண்டு தமிழ்­நாடு முழுக்க படிப்­ப­டி­யாக வளர்ந்து, இளை­ஞர் அணி ஒரு ஆல­ம­ர­மாக வளர்ந்து நிற்­கி­றது. 1980 – ஆம் ஆண்டு இந்­தி­யா­வி­லேயே முதன் முறை­யாக ஒரு இயக்­கத்­திற்கு இளை­ஞர் அணி­யைத் தொடங்­கி­யது நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.  அதைத் தொடங்­கி­ய­வர் நம் கழ­கத் தலை­வர் அவர்­கள்­தான்.  அது­தான் நம் தி.மு.க இளை­ஞர் அணிக்கு இருக்­கின்ற மிகப்­பெ­ரிய பெருமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் மட்­டு­மல்ல, மாவட்ட, ஒன்­றிய, பகுதி, வட்­டக்­க­ழக நிர்­வா­கி­கள் வந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­களுக்கு எனது நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  இளை­ஞர் அணி இன்­றைக்கு இந்த அள­வுக்கு வளர்ந்­தி­ருக்­கி­றது என்­றால், அதற்கு மாவட்ட, பகுதி, வட்­டக்­க­ழக நிர்­வா­கி­கள் உங்­க­ளின் ஒத்­து­ழைப்­பும் மிக­மிக முக்­கிய கார­ணம்.  அவர்­கள் இல்­லா­மல் இந்த வளர்ச்சி கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு இந்­தி­யா­வில் பல இயக்­கங்­கள் பூத் கமிட்டி அமைக்­கவே திண்­டா­டிட்­டுக் கொண்டு இருக்­கிற நேரத்த்­தில் பூத்­துக்கு ஒரு இளை­ஞர் அணி அமைப்­பா­ளரை நாம் நிய­மித்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.  அது­தான் இளை­ஞர் அணி­யின் வலு­வான கட்­ட­மைப்பு. புதி­தாக வந்­தி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள் அத்­த­னை­பே­ரும் உங்­க­ளின் காலரை தூக்­கி­விட்­டுக்­கொண்டு, தி.மு.க. இளை­ஞர் அணி­யில் நான் ஒரு நிர்­வா­கி­யாக இருக்­கி­றேன் என்று பெரு­மை­யாக சொல்­லிக் கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">கொள்­கைப் பற்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">யாரோ ஒரு­வ­ரின் பரிந்­து­ரை­யின் பேரில் மட்­டும் நீங்­கள் தேந்­தெ­டுக்­கப்­ப­ட­வில்லை. முழுக்க, முழுக்க உங்­கள் உழைப்­புக்­குக் கிடைத்த அங்­கீ­கா­ரம் என்­பதை நீங்­கள் உணர வேண்­டும்.  அன்­ப­கத்­தில் இதற்­கா­கவே தனி­யாக ஒரு குழு அமைத்து, உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு, உங்­க­ளு­டைய குடும்ப பின்­னணி, நீங்­கள் ஏற்­க­னவே பொறுப்­பில் இருக்­கி­றீர்­களா, என்­னென்ன நிகழ்ச்­சி­கள் நடத்தி இருக்­கி­றீர்­கள், உங்­க­ளு­டைய சமூக வலை­த­ளச் செயல்­பாடு எப்­படி இருக்­கி­றது, உங்­க­ளு­டைய கழக உணர்வு எப்­படி இருக்­கி­றது, கொள்­கைப் பற்று எப்­படி இருக்­கி­றது, இவைஅனைத்­தை­யும் கேட்­ட­றிந்து, இளை­ஞர்அணி­யில் பொறுப்­புக்கு வரு­வ­தற்கு உங்­க­ளுக்கு ஆர்­வம் இருக்­கி­றது என்­பதை தெரிந்து இன்­றைக்கு அத்­தனை பேருக்­கும் வரு­கைப் பதி­வேடு எடுக்­கப்­பட்டு, ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனித்­த­னி­யாக போட்டோ ஐடி கார்டு கொடுக்­கப்­பட்டு, இன்­றைக்கு இந்த நாற்­கா­லி­யில் நீங்­கள் வந்து உட்­கார்ந்து இருக்­கி­றீர்­கள் என்­றால், எவ்­வ­ளவு கட்­டங்­க­ளைத் தாண்டி இந்த பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பதை நீங்­கள் உணர்ந்து கொள்ள வேண்­டும். பல்­வேறு கட்­டங்­களை தாண்டி இந்தபொறுப்­புக்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தலை­வர் அவர்­கள் அடிக்­கடி சொல்­வார். எனக்கு கொடுக்­கப்­பட்­டி­ருப்­பது பதவி கிடை­யாது. அது பொறுப்பு. அந்த பொறுப்பை உணர்ந்து நீங்­கள் அத்­தனை பேரும் பொறுப்­பாக செயல்­ப­டு­வீர்­கள் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது. இங்கே அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் பேசும்­போது குறிப்­பிட்­டார். இளை­ஞர் அணி­யில் நீங்­கள் சரி­யாக உழைத்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் உங்­க­ளுக்­கான அங்­கீ­கா­ரம் கிடைக்­கும் என்­ப­தற்கு இந்த மேடை ஒரு மிகச்­சி­றந்த உதா­ர­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இங்கே அண்­ணன் தாய­கம் கவி அவர்­கள் இருக்­கி­றார். நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் இளை­ஞர் அணி செய­லா­ள­ராக இருந்­த­போது மாநில துணைச் செய­லா­ள­ராக இருந்­த­வர்­தான் அண்­ணன் தாய­கம் கவி அவர்­கள். அதன் பிறகு நான் இளை­ஞர் அணி செய­லா­ள­ரா­கப் பொறுப்­பேற்ற பொழுது இளை­ஞர் அணி துணைச் செய­லா­ள­ராக இருந்து என்னை வழி­ந­டத்­தி­ய­வர்­தான் அண்­ணன் தாய­கம் கவி அவர்­கள். அதன் பிறகு அவ­ரு­டைய செயல்­பாட்டை பார்த்து தலை­வர் அவர்­கள் இன்­றைக்கு கழ­கத்­தின் துணை அமைப்­புச் செய­லா­ள­ராக இன்­றைக்கு அவர் உயர்த்­தப்­பட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">தாய் வீடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போல, அண்­ணன் ஆர்.டி.சேகர் அண்­ணன் அவர்­கள் சொன்­னார்­கள். இளை­ஞர் அணி­தான் என்­னு­டைய தாய் வீடு என்று சொன்­னார். நிச்­ச­ய­மாக இளை­ஞர் அணி­தான் அவ­ரு­டைய தாய் வீடு. தாய் வீட்டை என்­றைக்­கும் மறக்க மாட்­டார் என்று  நம்­பு­கி­றோம். இளை­ஞர் அணிக்கு தேவை­யா­ன­தைத் தொடர்ந்து செய்து கொண்­டி­ருக்­கி­றார். அவ­ரும் தலை­வ­ரின் குழு­வில் மாநில இளை­ஞர் அணி துணைச் செய­லா­ள­ராக சிறப்­பாக பணி­யாற்­று­கி­ற­வர்­தான். இன்­றைக்கு மாவட்ட பொறுப்­பா­ள­ராக மட்­டு­மல்ல, ஒரு சிறந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் செயல்­பட்டு கொண்­டி­ருக்­கி­றார் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள். அந்த பெருமை மட்­டும் இல்லை. உங்­க­ளின் வடக்கு மாவட்­டத்­திற்கு. இன்­னும் சொல்­லப்­போ­னால் 2026 வர இருக்­கின்ற சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு தமிழ்­நாட்­டி­லேயே முதன்­மு­றை­யாக ஒரு கோடி ரூபாய் நிதியை கொடுத்து, அதை ஆரம்­பித்து வைத்­த­வர் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">எனக்­கும் பக்­க­ப­லம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த மண்­ட­லத்­தின் பொறுப்­பா­ளர், இளை­ஞர் அணி மாநி­லத் துணைச் செய­லா­ளர் சகோ­த­ரர் ஜோயல் அவர்­கள்.  தலை­வர் செய­லா­ள­ராக இருக்­கும் பொழுது அவர் மாவட்ட அமைப்­பா­ள­ராக இருந்து, அதன் பிறகு மாநில துணைச் செய­லா­ள­ராகி, இன்­றைக்கு எனக்­கும் பக்­க­ப­ல­மாக, சென்­னை­யில் எந்த இளை­ஞர் அணி நிகழ்ச்சி என்­றா­லும் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்­கள். சென்­னை­யில் நான் சிறப்­பாக ஒருங்­கி­ணைக்­கி­றேன் என்று அதை ஒவ்­வொரு முறை­யும் வெற்­றி­க­ர­மாக செய்­யக்­கூ­டி­ய­வர்­தான் ஜோயல் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆர்.கே.நகர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், அருமை சகோ­த­ரர் எபி­னே­சர் இருக்­கி­றார். இரண்டு முறை மாவட்ட துணை அமைப்­பா­ள­ராக இருந்து, அதன் பிறகு தலை­வர் அவர்­க­ளால் கண்­ட­றி­யப்­பட்டு, மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ராக பொறுப்­பேற்று, இளை­ஞர் அணி­யில் அவ­ரின் சிறப்­பான பணி­க­ளைப் பார்த்து, சென்ற முறை தலை­வர் அவர்­க­ளால் 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் ஆர்.கே.நக­ரில் போட்­டி­யி­டு­கின்ற வாய்ப்பை பெற்­ற­வர் எபி­னே­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளுக்­கெல்­லாம் ஞாப­கம் இருக்­கும். 2021 தேர்­த­லில் அந்த எக்­ஸிட் போல், சர்வே எல்­லா­வற்­றி­லும் நம்­மு­டைய கழ­கம்­தான் ஆட்சி அமைக்க போகி­றது என்று எல்­லா­ரும் சொல்லி விட்­டார்­கள்.  சென்­னை­யில் அனைத்து தொகு­தி­யி­லும் வெற்றி உறுதி என்று சொன்­னார்­கள்.  ஆனால், இரண்டு தொகுதி மட்­டும் சந்­தே­கம் என்று சொன்­னார்­கள். அந்த இரண்டு தொகுதி எது தெரி­யுமா? இரா­ய­பு­ரம்,  இன்­னொன்று ஆர்.கே.நகர். ஆனால் நான் தலை­வ­ரி­டம் சொன்­னேன். ஆர்.கே.நக­ரில் இளை­ஞர் அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்­கள். நாங்­கள் வெற்­றி­பெற வைத்­துக் காட்­டு­கி­றோம் என்­றுச் சொன்­னேன்.  தலை­வர் என்­னைப் பார்த்து ஆர்.கே.நகர் மிக­வும் விவ­ர­மான தொகுதி. அந்­தத் தொகு­தி­யில் எப்­படி எல்­லாம் தேர்­தல் நடந்­தி­ருக்கு என்­பது உங்­க­ளுக்கு தெரி­யும். அத­னால் யார் வேட்­பா­ளர் என்று கேட்­டார்.  நீங்­கள் இளை­ஞர் அணிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்­கள். எபி­னே­சர் அவர்­களை அங்கு நிற்க வைத்து, வெற்­றிப்­பெற வைத்­துக் காட்­டு­கி­றோம்.  இது இளை­ஞர் அணி தம்­பி­மார்­க­ளின் கடமை என்று தலை­வ­ரி­டம் வாக்­கு­றுதி கொடுத்­தேன். அவ­ருக்­காக பிரச்­சா­ரம் செய்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ராய­பு­ரம் அது­வும் தலை­வ­ரி­டம்  சொன்­னேன். கண்­டிப்­பாக ராய­பு­ரம் வெற்­றிப் பெற்று காட்­டு­றோம் என்­றுச் சொன்­னேன். பல­முறை பிரச்­சா­ரத்­துக்கு வந்­தேன். பெரம்­பூர் அது நிச்­ச­யம் அண்­ணன் ஆர்.டி.சேகர் அவர்­கள் வெற்றி பெறப்­போ­கி­றார்­கள் அது இளை­ஞர் அணி­யின் பயிற்சி.  இந்த இளை­ஞர் அணி சொன்­னது மாதி­ரியே வெற்­றி­பெற்­றும் காட்­டி­னோம் அது­தான் இளை­ஞர் அணி­யின் பெருமை.‘</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த இளை­ஞர் அணி பணியை நீங்­கள் எப்­படி கருத வேண்­டும் என்­றால், ஒரு முக்­கி­ய­மான பணிக்­கான பயிற்­சிக் களம்­தான் நம் இளை­ஞர் அணி பணி என்­பதை நீங்­கள் மன­தில் வைத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இப்­படி மிக­வும் சிர­ம­மான தொகுதி என்­றுச் சொல்­லப்­பட்ட ஆர்.கே.நக­ரில் வெற்றி பெற்ற எபி­னே­சர் இளை­ஞர் அணி­யின் தயா­ரிப்பு. மிகப்­பெ­ரிய வெற்­றியை பெற்று தலை­வ­ரி­டம் ஒப்­ப­டைத்­தோம்.  அதே­மா­திரி மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் சகோ­த­ரர் லயோலா மத­னாக இருக்­கட்­டும், கௌத­ம­னாக இருக்­கட்­டும், பகுதி அமைப்­பா­ள­ராக சிறப்­பாக செயல்­பட்டு, இன்­றைக்கு மாவட்ட துணை அமைப்­பா­ள­ராக தலை­வர் அவர்­க­ளால் உயர்த்­தப்­பட்­டுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இங்க இருக்­கக்­கூ­டிய சகோ­த­ரர் ரவிக்­கு­மார். பகுதி துணை அமைப்­பா­ள­ராக சிறப்­பாக செயல்­பட்டு, இன்­றைக்கு தலை­வர் அவர்­க­ளால் மாவட்ட துணை அமைப்­பா­ள­ராக உயர்த்­தப்­பட்டு பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார். இப்­படி வட­சென்னை மட்­டு­மல்ல தமிழ்­நாடு முழு­வ­தும் கழ­கத்­தில் உள்ள மாவட்ட, ஒன்­றிய, நகர, பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒரே­யொரு வாக்­கு­றுதி மட்­டும் இளை­ஞர் அணி நிர்­வா­கி­க­ளுக்­குச் சொல்ல விரும்­பு­கி­றேன். நீங்­கள் உழைக்க தயா­ராக இருந்­தீர்­கள் என்­றால்  உங்­களை உயர்த்த நம்­மு­டைய தலை­வர் என்­றைக்­கும் தயங்க மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நாளை­யி­லி­ருந்து அடுத்த ஆறு மாதத்­திற்கு ஒரு நாள் அல்ல, ஒரு மணி நேரத்தை கூட நாம் வீண­டிக்­கா­மல் களத்­தில் இறங்கி மக்­க­ளோடு மக்­க­ளாக இருந்து, மக்­கள் பணி­யாற்றி தலை­வர் என்ன நினைக்­கி­றாரோ அதை செய்­து­காட்­டி­னால்­தான் தலை­வர் சொன்ன 200 அல்ல, 200–க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில் வெற்­றிப்­பெற்­றோம் என்­றால், அதற்கு இளை­ஞர் அணி நிர்­வா­கி­கள் உங்­க­ளின் பணி மிக மிக முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">முக்­கி­ய­மான வேண்­டு­கோள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­னொரு முக்­கி­ய­மான வேண்­டு­கோள். தின­மும் காலை­யில் எழுந்­த­வு­டன் தயவு செய்து நம்­மு­டைய முர­சொலி நாளி­த­ழைப் படி­யுங்­கள். அதி­லும் குறிப்­பாக கடை­சிப் பக்­கம் தலை­வர் அவர்­கள் இளை­ஞர் அணிக்­கென தனி­யாக ஒரு பக்­கம் கொடுத்­தி­ருக்­கி­றார். அது­தான் பாச­றைப் பக்­கம். படிப்­ப­தற்கு மிக­மிக சுல­ப­மாக இருக்­கும்.  சின்ன சின்ன துணுக்­கு­கள், கார்ட்­டூன்­கள் இப்­ப­டித்­தான் இருக்­கும். அதை படித்­தீர்­கள் என்­றால் உங்­க­ளின் அர­சி­யல் அறிவு வள­ரும். நம் கழ­கத்­தின் வர­லாறு, என்­னென்ன சாத­னை­கள் செய்­தி­ருக்­கி­றோம்.  தலை­வர் அவர்­கள் எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு, இந்­தப் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கி­றார். கலை­ஞர் என்­னென்ன தமிழ்­நாட்­டுக்­குச் செய்­தி­ருக்­கி­றார்.  பெரி­யா­ரின் கொள்­கை­கள் என்ன இவற்­றை­யெல்­லாம் நீங்­கள் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">200 தொகு­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இளை­ஞர் அணி சார்­பாக களத்­தில் மட்­டும் இல்லை, கருத்­தி­யல் ரீதி­யா­க­வும் பல பணி­களை நாம் செய்­து­கொண்டு இருக்­கி­றோம்.  இந்த கருத்­தி­யல் பணி­களை எல்­லாம் கொண்­டு­போய் சேருங்­கள்.  வருங்­கால பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள் உரு­வாக்க வேண்­டும் என்று கலை­ஞர் மாண­வர் பத்­தி­ரிக்­கை­யா­ளர் திட்­டத்­தைத் துவக்கி இருக்­கி­றோம். இதை­யெல்­லாம் இப்­போது  இருக்­கக்­கூ­டிய இளை­ஞர்­க­ளுக்கு எடுத்து சொல்­லுங்­கள். திரா­விட அர­சி­ய­லின் கொள்­கைக் கூட்­ட­மாக நீங்­கள் இருக்க வேண்­டும். இன்­றைக்கு நம்­மு­டைய அரசு பல்­வேறு நலத்­திட்­டங்­க­ளைச் செய்து வரு­கி­றது. அந்த திட்­டங்­க­ளைப் பற்றி தெரிந்து கொள்­ளுங்­கள்.  நாளுக்கு நாள் நம் தலை­வ­ரின் வலி­மை­யும், தி.மு.க–வின் வலி­மை­யும் அதி­க­மா­கிக்­கொண்டே செல்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனவே நம் ஒரே­யொரு இலக்கு வரு­கின்ற சட்­ட­மன்ற தேர்­த­லில் தலை­வர் சொன்­னதை விட, அதி­க­மாக 200 க்கும் அதி­க­மான தொகு­தி­யில் வெற்­றிப்­பெற்று காட்ட வேண்­டும்.  அதன் துவக்­க­மாக இந்த சென்னை வடக்கு மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய மூன்று தொகு­தி­க­ளை­யும் வெற்­றிப்­பெற்று காட்ட வேண்­டும்.  அதில் இளை­ஞர் அணி­யி­யின் பங்கு முதன்­மை­யாக இருக்க வேண்­டும்.  முன்­க­ளப் படை வீரர்­க­ளாக செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் ஏழா­வது முறை­யாக கழக ஆட்சி அமைய வேண்­டு­மென்­றால், இரண்­டா­வது முறை­யாக தொடர்ந்து நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் உட்­கார வேண்­டு­மென்­றால், அந்த வெற்றி இளை­ஞர் அணி தம்­பி­மார்­கள் உங்­க­ளு­டைய கைக­ளில்­தான் இருக்­கி­றது என்­பதை நீங்­கள், உணர்ந்து செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, புதிய வட்­டம் மற்­றும் பாக இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள் உட்­பட, இங்கு வருகை தந்­தி­ருக்­கக்­கூ­டிய உங்க அத்­த­னை­பே­ரின் பணி­கள் சிறப்­பாக அமை­யட்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வெல்­வோம் இரு­நூறு, படைப்­போம் வர­லாறு என்று கூறிக்­கொண்டு வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்­சி­மிகு உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் 
ஆர்.டி.சேகர், ஐட்­ரீம்ஸ் மூர்த்தி, எபி­னே­சர், தாய­கம் கவி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கலா­நிதி வீரா­சாமி, இளை­ஞர் அணி மாநில துணைச் செய­லா­ளர் ஜோயல், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் வெற்­றி­வீ­ரன், கம­லக்­கண்­ணன், கோபி, தயா­ளன், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் இளைய அருணா, மனோ­க­ரன், இரா.கருணா, பகு­திக் கழ­கச்செய­லா­ளர்­கள் ஜெய­ரா­மன், முரு­கன், வா.பெ.சுரேஷ், ஜெப­தாஸ் பாண்­டி­யன், செந்­தில், இரா.லட்­சு­ம­ணன், தொகுதி பார்­வை­யா­ளர்­கள் சுபேர் கான், கண்­டிகை ஸ்டாலின், லோகேஷ், கழக அணி­க­ளின் மாநில நிர்­வா­கி­கள் நரேந்­தி­ரன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் பிர­காஷ்,  மதன்­கு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் ராஜேந்­தி­ரன், சிவக்­கு­மார், மதி­வா­ணன், சேகர், கம­லக்­கண்­ணன், சண்­மு­கம், அமுலு, தமிழ்ச்­செல்­வன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் லயோலா மதன், கௌத­மன், பொன்.இள­வ­ர­சன், கட்­பீஸ் சோம­சுந்­த­ர­மூர்த்தி, ரவிக்­கு­மார், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் சுரேஷ், ராஜ்­கு­மார், ஹரிஸ்­கு­மார், கார்த்­திக், அப்­துல் மாலிக், சாந்­த­கு­மார், சமூக வலை­த­ளப் பயிற்­சி­யா­ளர் விக்­னேஷ் ஆனந்த், அன்­ப­கம் செந்­தில், ஜெயப்­பி­ர­காஷ் உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>