<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,491,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:34:36 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10102025-CBE-06" position.sequence="06" ex-ref="10102025-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2.83464566929134">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup514149_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup513767_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup514150_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="12.5">க</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ல்­வியை இல்­லம் தேடிச் சென்று வழங்­கிய திரா­விட மாடல் ஆட்­சி­யின் முதல்­வ­ருக்கு, பய­ன­டைந்த மாண­வச்­செல்­வங்­கள் நன்­றி­யு­டன் நடத்­திக் காட்­டிய கண்­க­ளைக் குள­மாக்­கும் உணர்ச்­சி­மிகு நிகழ்ச்­சி­கள் அண்­மை­யில் நடந்­தே­றின.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கத்­தில் 25.9.2025 ஆம் நாள்  தெலுங்­கானா மாநில  முதல்­வர் ரேவந்த்­ரெட்டி அவர்­கள் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்ட “கல்­வி­யில் சிறந்த தமிழ்­நாடு” நிகழ்ச்­சி­யில் தமிழ்­நாடு . முதல்­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும், . துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளும் மற்­றும்  அமைச்­சர்­க­ளும்,  பல்­துறை அறி­ஞர்­க­ளும், கலைத்­துறை இயக்­கு­னர்­க­ளும், நடி­கர்­க­ளும், தமிழ்­நாடு அர­சின் உயர் அதி­கா­ரி­க­ளும், சமூக ஆர்­வ­லர்­க­ளும் கலந்து கொண்­ட­னர். இந்த நிகழ்ச்­சி­யின் முக்­கிய நோக்­கம், சமூ­க-­பொ­ரு­ளா­தார ஏற்­றத்­தாழ்­வற்ற அனைத்­துக் குடும்­பங்­க­ளைச் சார்ந்த அர­சுப் பள்­ளி­க­ளில் பயி­லும் இரு­பால் மாண­வர்­க­ளுக்­கும், விரும்­பிய கல்வி கற்­ப­தற்­கும் வெளி­நாடு சென்று கல்வி கற்­ப­தற்­கும், விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் கலந்து கொள்­வ­தற்­கான பயிற்­சி­க­ளில் பயிற்சி பெற­வும், குடும்­பங்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சூழ்­நி­லை­கள் தடை­யாக இருக்­கு­மா­யின் அத்­த­கைய தடை­க­ளைத் தகர்த்­து­விட்டு விரும்­பிய கல்­வியை விளை­யாட்­டுப் பயிற்­சியை, விளை­யாட்­டில் கலந்து கொள்­ளும் வாய்ப்பை, விரும்­பும் இடத்­தில் பெறு­வ­தற்­கான வாய்ப்­பினை உள்­நாட்­டி­லும், வெளி­நாட்­டி­லும் திரா­விட மாடல் அரசு உரு­வாக்­கும் என பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய ­தோடு மட்­டு­மல்­லா­மல், அதற்­கான செயல்­திட்­டங்­க­ளை­யும் திரா­விட மாடல் ஆட்­சி­யின் தலை­வர் . தமிழ்­நாடு முதல்­வர் அவர்­கள் அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அப்­படி அறி­விக்­கப்­பட்­டத் திட்­டங்­கள்­தான் “தமிழ்ப் புதல்­வன்”, “புது­மைப்­பெண்”, “நான் முதல்­வன்” ஆகிய திட்­டங்­க­ளா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­தத் திட்­டங்­க­ளுக்கு இரு­பால் மாண­வர்­களை ஊக்­கு­விக்­கும் உயர்ந்த நோக்­கத்­து­டன், அறி­விக்­கப்­பட்ட “காலை உண­வுத் திட்­டம்” தொடக்­க­நி­லை­யி­லேயே வெற்­றி­க­ர­மா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. இந்­தத் திட்­டம் பல மாநி­லங்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல், வெளி­நா­டு­க­ளுக்­கும் திசை வழி­காட்­டும், ஓர் கலங்­கரை விளக்­க­மா­கக் கரு­தப்­ப­டு­கி­றது. ஆம்! பின்­பற்­ற­வும்­ப­டு­கி­றது. இந்­தத் திட்­டங்­க­ளால் பன்­முக ஆற்­ற­லைப் பெற்று பய­ன­டைந்த இரு­பால் மாண­வர்­க­ளும் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு தங்­க­ளின் அபி­லா­சை­க­ளை­யும், ஏக்­கங்­க­ளை­யும், குடும்­பச் சூழ்­நி­லை­கள் மற்­றும் ஏழ்­மைக் கார­ண­மாக கானல் நீரா­கி­வி­டுமோ என்ற துய­ரத்­தி­லும், துன்­பத்­தி­லும் கண்­க­ளைக் குள­மாக்­கிக் கொண்­டி­ருந்த சூழ்­நி­லை­யில், . தமிழ்­நாடு முதல்­வ­ரின் கல்வி வளர்ச்­சிக்­கான திட்­டங்­க­ளாக கரு­தப்­ப­டும் “நான் முதல்­வன்”, “புது­மைப்­பெண்”, “தமிழ்ப் புதல்­வன்” ஆகிய திட்­டங்­க­ளின் மூலம் அர­சுப் பள்­ளி­க­ளில் படித்த இரு­பால் மாண­வர்­க­ளுக்­கும் உத­வித்­தொகை வழங்­கப்­பட்­ட­தன் மூலம் ஏக்­கப்­பெ­ரு­மூச்­சு­க­ளோ­டும், தங்­க­ளின் அபி­லா­சை­கள் நிறை­வே­றுமா? என்ற கேள்­விக்­கு­றி­யோ­டும் தவித்­துக்­கொண்­டி­ருந்த இரு­பால் மாண­வர்­க­ளும், உத­வித்­தொ­கை­க­ளைப் பெற்று, தங்­க­ளு­டைய குறிக்­கோள்­களை வெற்­றி­க­ர­மாக நிறைவு செய்­தப்­பின்­னர் நேரு உள்­வி­ளை­யாட்டு அரங்­கத்­தில் நன்றி தெரி­விக்­கும் முறை­யில் குழு­மி­யி­ருந்த இரு­பால் மாண­வர்­கள் தெரி­வித்த உணர்­வுப்­பூர்­வ­மான வாழ்க்­கைப் போராட்­டத்­தில், . தமி­ழக முதல்­வ­ரின் திட்­டங்­கள் எப்­ப­டி­யெல்­லாம் தங்­க­ளுக்கு உத­விக்­க­ரம் கொடுத்து தங்­க­ளது வெற்­றியை உறுதி செய்­தது என்­பன போன்­றச் செய்­தி­களை கண்­ணீர்­மல்க விளக்­கிச் சொல்­லிய இரு­பால் மாண­வர்­க­ளின் சோக வர­லாறு பார்­வை­யா­ளர்­க­ளின் கண்­க­ளைக் குள­மாக்­கி­யது என்­பதை என்­னால் நேர­டி­யா­கவே காண முடிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அரங்­கத்­திலே அமர்ந்­தி­ருந்த அனை­வ­ரும் இரு­பால் மாண­வர்­க­ளின் இலக்கு நோக்­கிய வெற்­றிக்கு எப்­படி திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டங்­கள் பாதை­க­ளா­க­வும், படிக்­கட்­டு­க­ளா­க­வும் அமைந்­தன என்­பதை விளக்­கிச் சொல்­லும் பொழுது அரங்­கத்­தில் அமர்ந்­தி­ருந்த அனை­வ­ரின் கண்­க­ளி­லும் கண்­ணீர் வழிந்­தோ­டி­ய­தைப் பார்க்க முடிந்­தது. இந்த அள­விற்கு உணர்­வுப்­பூர்­வ­மான திட்­டங்­களை நிறை­வேற்றி, விரும்­பிய கல்வி என்­பது எட்­டாக்­கனி என்ற ஏங்­கித்­த­வித்த ஏழை மாண­வர்­க­ளுக்கு எவ்­வ­ளவு உய­ரத்­தில் கல்வி எட்­டாக்­க­னி­யாக இருந்­தா­லும், அதை ஏழை மாண­வர்­க­ளின் கரங்­க­ளில் சேர்ப்­பிக்­கும் மனி­தா­பி­மான செயல்­க­ளைச் செய்­துக்­காட்­டிய . தமி­ழக முதல்­வ­ரை­யும், துணை முதல்­வ­ரை­யும் நோக்கி மன்­றத்­தில் அமர்ந்­தி­ருந்த அனை­வ­ரின் பார்­வை­யும் நன்­றி­யைத் தெரி­வித்­தது. அந்­தப் பார்வை நிச்­ச­யம் அந்த மகத்­தான மனி­த­நேய தலை­வர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்­கும் பார்­வை­யா­கத்­தான் அறிய முடி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கல்வி என்­பது குறிப்­பிட்ட சமு­தா­யத்­திற்கோ, வாய்ப்பு வச­தி­யுள்­ள­வர்­க­ளுக்கோ மட்­டும் உரித்­தா­ன­தல்ல. மாறாக, எங்கோ மலைப்­ப­கு­தி­க­ளில், காட்­டுப் பகு­தி­க­ளில், போக்­கு­வ­ரத்து தொடர்­பில்­லாத குக்­கி­ரா­மங்­க­ளில் வாழக்­கூ­டிய, அன்­றா­டம் உழைத்து வாழக்­கூ­டிய, அது­மட்­டு­மல்ல சமு­தா­யத்­தின் அடித்­த­ளத்­தில் வாழ்க்­கைப் போராட்­டத்தை ஒவ்­வொரு நொடிப்­பொ­ழு­தும் நடத்­திக்­கொண்­டி­ருக்­கக் கூடிய சாதா­ரண, சாமா­னிய உழைப்­பா­ளி­க­ளின் வாரி­சு­க­ளுக்­கும் கல்வி என்­பது அவர்­க­ளது உரிமை. அந்த உரி­மையை உறுதி செய்ய வேண்­டிய கடமை மக்­க­ளாட்­சிக்கு உண்டு என்­பதை உணர்ந்து, அதனை தலை­யா­யக் கட­மை­யா­கக் கருதி  நிறை­வேற்­றிச் சாத­னைப் படைத்த முதல் மாநி­லம் தமிழ்­நாடு என்­ப­தை­யும் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­ப­தை­யும், வர­லாறு பொன்­னெ­ழுத்­துக்­க­ளால் பதிவு செய்­தி­ருக்­கி­றது!! இந்த நிகழ்­வில் ஆய்­வுக்­கு­ரிய முக்­கி­ய­மான செய்தி எது­வெ­னில், மண்­ணுக்­குள் மட்­டும் இயற்கை வளங்­கள் பொதிந்து கிடக்­க­வில்லை. மாறாக, மனித மூளை­யின் அடுக்­கு­க­ளுக்­குள்ளே அறி­வும், ஆற்­ற­லும் புதைந்து கிடைக்­கி­றது! இந்த ஆற்­ற­லும், அறி­வும் ஜாதி, மதம், இனம் பார்த்து படி­வ­தில்லை. மாறாக, எல்லா மனி­த­னி­ட­மும் ஆற்­ற­லும், அறி­வும் வேறு­பா­டின்றி புதைந்து கிடக்­கின்­றது என்­ப­து­தான் எதார்த்­தம்!! எங்கோ வாழு­கின்ற மனி­தர்­க­ளாக இருந்­தா­லும், எப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில் வாழு­கின்ற மனி­தர்­க­ளாக இருந்­தா­லும் அவர்­க­ளது ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தும் வாய்ப்­பும், வச­தி­யும் கிடைக்­கு­மா­னால், நிச்­ச­யம் ஆற்­ற­லும், அறி­வும் தங்­கு­த­டை­யின்றி வெளிப்­ப­டும் என்­ப­தில் ஐய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த அறி­வி­யல் பூர்­வ­மான உண்­மை­களை ஆய்ந்­த­றிந்த  தமிழ்­நாட்­டின் முதல்­வ­ரும், துணை முதல்­வ­ரும் அறி­வி­யல் பூர்­வ­மான திட்­டங்­கள் மூலம் மேற்­கொண்ட அக­ழாய்­வின் வெளிப்­பா­டு­தான் இந்­தத் திற­மை­கள் என்­ப­தை­யும், மாண­வர்­க­ளி­ட­மி­ருந்து இந்த ஆற்­ற­லை­யும், திற­மை­யை­யும் வெளிப்­ப­டுத்­திய சமூக விஞ்­ஞா­னி­கள்­தான் இவர்­கள்  என்­ப­தை­யும் எதிர்­கால சமு­தா­யம் மதிப்­பீடு செய்­துப் போற்­றிப்­பா­ராட்­டும் என்­ப­தில் கிஞ்­சிற்­றும் ஐய­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">துணை முதல்­வர் விளை­யாட்­டுத்­து­றை­யில் மேற்­கொண்ட தனி­க­வ­ன­மும், அக்­க­றை­யும் தமிழ்­நாட்டு இளை­ஞர்­கள் விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் அகி­ல­இந்­திய அள­வி­லும், உலக நாடு­கள் அள­வி­லும் நடை­பெ­று­கி­றப் போட்­டி­க­ளில் குறிப்­பி­டத்­தக்க விளை­யாட்­டு­க­ளில் முத­லி­டத்­தில் வெற்றி பெறு­கி­றார்­கள் என்­றால், அதற்­கான ஊக்­கத்­தை­யும், உத்­வே­கத்­தை­யும், அதற்­கான மற்ற வாய்ப்­பு­க­ளை­யும், சூழ்­நி­லை­க­ளை­யும் உரு­வாக்­கித்­தந்த பெருமை  முத­ல­மைச்­ச­ரையே சாரும் என்­றால், அது எந்த வகை­யி­லும் மிகை­யான கூற்­றல்ல. இது மட்­டு­மல்ல, மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­கள் இவர்­க­ளுக்­கெல்­லாம் சமூ­கத் தகு­தியை வழங்கி கல்வி கற்­றுக்­கொள்­வ­தற்கு வாய்ப்­பினை உரு­வாக்கி அவர்­க­ளது திற­மை­களை வெளிக்­கொண்டு வந்து அவர்­க­ளுக்­கான ஆற்­ற­லை­யும், பெரு­மை­யை­யும் உரு­வாக்­கித்­தந்த தனிப்­பெ­ரும் கரு­ணை­யுள்­ளம் . தமி­ழக முதல்­வ­ருக்­கும், துணை முதல்­வ­ருக்­கும் நிரம்ப உண்டு என்­பதை நம்­மாலே அறிய முடி­கி­றது. மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளும், திரு­நங்­கை­க­ளும் ஒரு காலத்­தில் சமூ­கத்­தால் புறக்­க­ணிக்­கப்­பட்­ட­வர்­கள் என்­பதை நாம்அறி­வோம். ஆனால், திரா­விட மாடல் ஆட்சி அப்­படி புறக்­க­ணிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கெல்­லாம், பாது­காக்­கின்ற சட்­டங்­க­ளை­யும் அவர்­க­ளுக்கு சமூக அந்­தஸ்தை வழங்­கக்­கூ­டிய கல்வி, வேலை­வாய்ப்பு, விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் முன்­னு­ரிமை ஆகி­ய­வை­களை வழங்கி, அவர்­க­ளு­டைய திற­மை­களை வெளிக்­கொண்­டு­வந்த வர­லாற்று நிகழ்­வு­க­ளும் இந்த திரா­விட மாடல் ஆட்­சி­யிலே தான் அரங்­கே­றி­யி­ருக்­கி­றது. இந்த நிகழ்ச்சி நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற ஒரு கால­கட்­டத்­தில், ஈடு­பாட்­டு­டன் உன்­னிப்­பாக கவ­னித்­துக் கொண்­டி­ருந்த  முதல்­வர் அவர்­கள் ஒரு மாணவி தன்­னு­டைய பெற்­றோரை விழிக்­கும் பொழுது தன்­னு­டைய பெற்­றோர் துப்­பு­ர­வுத்­தொ­ழி­லா­ளர்­கள் என்று குறிப்­பிட்­டார். உட­ன­டி­யாக,  முதல்­வர் அவர்­கள் தலை­யிட்டு, துப்­பு­ர­வுத்­தொ­ழி­ லா­ளர் என்று விழிக்க தேவை­யில்லை. மாறாக, தூய்­மைப்­ப­ணி­யா­ளர்என்று குறிப்­பிட வேண்­டும் என்ற திருத்­தத்­தைத் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதி­லி­ருந்து,  முத­ல­மைச்­ச­ரின் சிந்­தனை எது­வெ­னில், வார்த்­தை­க­ளில்­கூட அவர்­கள் செய்­யும் தொழி­லுக்கு கலங்­கத்தை உரு­வாக்­கி­வி­டக் கூடாது. அதன் மூலம் தாழ்­வு­ம­னப்­பான்­மை­யை­யும் உரு­வாக்­கக் கூடாது என்ற உள­வி­யல் சிந்­த­னை­தான் கார­ணம் என்­பதை உணர முடி­கி­றது. எனவே, தமிழ்­நாட்­டின் முதல்­வர் சிந்­த­னை­யி­லும், செய­லி­லும் “எல்­லோ­ருக்­கும் எல்­லாம்” என்ற அடிப்­ப­டைக் கோட்­பாட்­டில் எள்­ளின் முனை­ய­ள­வுக்­கூட சேதம் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தில், அக்­க­றை­யோ­டும், ஆர்­வத்­தோ­டும் இருக்­கி­றார் என்­ப­து­தான் இந்த நிகழ்வு உணர்த்­தும் பாட­மும், படிப்­பி­னை­யு­மா­கும். இந்­தத் திட்­டத்­தாலே பயன்­பெற்ற இன்­னொரு மாணவி, தான் ஆசி­ரி­ய­ராக வேண்­டும் என்ற விருப்­பத்தை தெரி­வித்­த­வு­டன், அந்த மாண­வியை அழைத்து தன் சட்­டைப்­பை­யி­லே­யி­ருந்த பேனாவை எடுத்து வழங்கி வாழ்த்­துத் தெரி­வித்­தார். இன்­னொரு மாற்­றுத்­தி­ற­னாளி ஒரு­வர் தன்­னு­டைய திரு­ம­ணத்­திற்கு  துணை முதல்­வர் வர­வேண்­டும் என்ற வேண்­டு­கோளை ஏற்­றுத் துணை முதல்­வர் தன்­னு­டைய சொந்த ஊருக்கே வரு­கைத்­தந்து எங்­களை வாழ்த்­தி­னார் என்ற செய்­தியை கண்­ணீர்­மல்க தெரி­வித்த பொழுது, மன்­றத்­தி­லி­ருந்த அனை­வ­ரும்  துணை முதல்­வ­ரைப் பாராட்டி மகிழ்ந்­த­னர். நிகழ்ச்­சி­யின் ஒரு கட்­டத்­தில்  முதல்­வர் அவர்­கள் இரு­பால் மாண­வர்­க­ளு­டைய வாழ்க்­கைச் சூழ்­நி­லை­க­ளை­யும், திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டப்­ப­யன்­கள் எந்த அள­விற்கு அவர்­க­ளது வாழ்க்­கை­யில் மறு­ம­லர்ச்­சியை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதை எண்ணி, மகிழ்ந்து மாண­வச்­செல்­வங்­க­ளை­யெல்­லாம் பாராட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த நிகழ்ச்சி என்­பது, உணர்­வுப்­பூர்­வ­மான ஒரு குடும்ப நிகழ்ச்­சி­யா­க­வும், அந்த குடும்­பத்­தின் வாரி­சு­கள் பெற்ற வெற்­றி­க­ளைப் பாராட்­டு­கின்ற ஓர் வர­லாற்று நிகழ்­வா­க­வும்­தான் அனை­வ­ரா­லும்மதிப்­பீடு செய்­யப்­ப­டு­கி­றது. இந்த நிகழ்ச்­சி­கள் ஒவ்­வொரு மாவட்ட தலை­ந­க­ரி­லும் நடத்­தப்­பட வேண்­டும் என்­பதே கண்­டோர் அனை­வ­ரின் விருப்­ப­மும் எதிர்­பார்ப்­பு­மா­கும்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>