<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,306,966,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:34:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10102025-CBE-08" position.sequence="08" ex-ref="10102025-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">தமிழ்நாடு வனத்துறை சார்பில் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">வன உயிரின வார விழா – 2025 நிறைவு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – போட்டிகள்! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="forest_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal.2_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு வனத்­துறை,  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் படி, “மனி­த-­­வன உயி­ரின சக வாழ்வு” எனும் தலைப்­பில் 02.10.2025 முதல் 08.10.2025 வரை வன உயி­ரின வார விழா 2025-ஐ வெற்­றி­க­ர­மா­கக் கொண்­டா­டி­யது. இவ்­வி­ழா­வின் முக்­கிய நோக்­கம் வன­உ­யி­ரி­னங்­க­ளின் பாது­காப்பு குறித்த விழிப்­பு­ணர்வை வளர்த்­தல், சமூக பங்­கேற்பை ஊக்­கு­வித்­தல் மற்­றும் உயிர்ப் பன்மை பாது­காப்­பில் மாநி­லத்­தின் மூலம் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொடர்ச்­சி­யான முயற்­சி­களை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழாக்­க­ளின் ஒரு பகு­தி­யாக, வன­உ­யி­ரி­னங்­கள் பாது­காப்பு மற்­றும் பொது மக்­க­ளின் நல­னிற்­காக தமிழ்­நாடு அர­சால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­களை முன்­னி­லைப் ­படுத்­தும் வகை­யில் பல்­வேறு நிகழ்­வு­கள் நடை­பெற்­றன.  முத­ல­மைச்­சர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள், ஆனை­மலை புலி­கள் காப்­ப­கத்­தில் உள்ள கோழி­க­முத்தி யானை முகா­மில், இந்­தி­யா­வின் இரண்­டா­வது தனித்­து­வ­மான மாவுத்­க­ளுக்­கான (Mahouts) கிரா­மத்தை திறந்து வைத்து விழா­வைத் தொடக்­கி­வைத்­தார். இது யானை­கள் மற்­றும் அவற்­றைப் பரா­ம­ரிக்­கும் பாது­கா­வ­லர்­க­ளின் நல­னில் ஒரு முக்­கிய மைல்­கல்­லாக அமைந்­தது குறிப்­பி­டத்­தக்­
­கது. அதே முகா­மில் தொடங்­கப்­பட்ட புதிய கட்­ட­மைப்பு வச­தி­க­ளின் தொடக்க விழா மாநி­லத்­தின் வன­உ­யி­ரின மேலாண்மை முயற்­சி­களை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்­றன. மேலும், காவ­டி­களை (Cavadis) நேரடி நிய­ம­னம் செய்­வ­தற்­காக நடை­மு­றை­யில் உள்ள பணி விதி­களை மாநில</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரசு த்தம் செய்­துள்­ளது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க முன்­னெ­டுப்பு நட­வ­டிக்­கை­யா­கும். இது பாரம்­ப­ரிய நடை­மு­றை­களை பாது­காத்து, அதனை யானை­க­ளுக்­கான நவீன மேலாண்மை நடை­மு­றை­க­ளு­டன் ஒருங்­கி­ணைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வனம் மற்­றும் கதர்த் துறை அமைச்­சர்  ஆர்.எஸ். ராஜ­கண்­ணப்­பன், மூன்­றா­வது ஒருங்­கி­ணைந்த யானை­கள் கணக்­கெ­டுப்பு அறிக்­கை­யினை (2025) வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அறிக்கை, தமிழ்­நாடு அரசு மேற்­கொண்டு வரும் அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான, நீண்ட கால யானை பாது­காப்பு மற்­றும் மேலாண்­மைக் கொள்­கை­களை பிர­தி­ப­லிக்­கி­றது. தமி­ழ­கத்­தில் தற்­போது 3,170 காட்டு யானை­கள் உள்­ள­தா­க­வும், இது கடந்த மதிப்­பீட்­டில் இருந்த 3,063 யானை­க­ளை­விட 107 அதி­கம் என­வும் அவர் அறி­வித்­தார். இது மாநில அர­சால் மேற்­கொண்ட வன­உ­யி­ரி­னங்­க­ளின் வாழ்­விட பாது­காப்பு, மனி­த-­­வன உயி­ரின மோதல்­களை தடுத்­தல் மற்­றும் வன உயி­ரி­னங்­களை கண்­கா­ணித்­தல் போன்ற முயற்­சி­க­ளின் விளை­ 
வாகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீல­கிரி வரை­யாடு தினத்­தை­யொட்டி, மேற்கு தொடர்ச்சி மலை­க­ளில் மட்­டுமே வாழும் நீல­கிரி வரை­யா­டு­க­ளின் பாது­காப்பு மற்­றும் அதன் இயற்கை வாழி­டங்­க­ளைப் புன­ர­மைக்­கும் முயற்­சியை பிர­தி­ப­லிக்­கும் வகை­யில், தமிழ்­நாடு அர­சின் சுற்­றுச்­சூ­ழல், கால­நிலை மாற்­றம் மற்­றும் வனத்­துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் மதி. சுப்­ரியா சாகு,   நீல­கிரி வரை­யாடு அஞ்­சல் அட்டை­ யினை வெளி­யிட்­டார். மேலும், உயர்­நிலை வன உயி­ரி­னப் பாது­காப்பு நிறு­வ­னம், வண்­ட­லூ­ரில் நடை­பெற்ற மனித- வன­உ­யி­ரின மோதல் மேலாண்மை குறித்த வனச்­ச­ரக அலு­வ­லர்­க­ளின் மாநாடு, வனச்­ச­ரக அலு­வ­லர்­கள் களப்­ப­ணி­க­ளி­லுள்ள தங்­கள் அனு­ப­வங்­க­ளை­யும் செயல்­தி­றன் கொண்ட உத்­தி­க­ளை­யும் பகி­ரும் ஒரு மேடை­யாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விழா­வின் போது,  ராகேஷ் குமார் டோக்ரா,   முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் மற்­றும் வன உயி­ரி­னக் காப்­பா­ளர், பல்­வேறு பொது விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­கள் நடை­பெற்­ற­தா­க­வும், அவற்­றில் குறிப்­பி­டத் ­தக்க வகை­யில் ஐந்து புலி­கள் காப்­ப­கங்­க­ளி­லும் நெகிழி இல்லா புலி­கள் காப்­ப­கங்­க­ளுக்­கான விழிப்
­பு­ணர்வு பிரச்­சா­ரம் நடத்­தப்­பட்­ட­தா­க­வும், இதில், கழி­வு­கள் அகற்­றப்­பட்­ட­து­டன், மஞ்­சப்பை பயன்­பாட்டை ஊக்­கு­விக்க முயற்சி செய்­யப்­பட்­ட­தா­க­வும், மேலும் பல்­வேறு பேர­ணி­கள், ஓவி­யப் போட்­டி­கள் மற்­றும் பேச்­சுப் போட்­டி­கள் நடை­பெற்­ற­தா­க­வும், கோயம்­புத்­தூர் மாவட்­டத்­தில் உள்ள பர­ளி­யார் மற்­றும் செம்­பு­க­ரை–­­பெ­ரு­மாள்­முடி பாதை வழி­யாக நடை­பெற்ற வன­ உ­யி­ரின விழிப்­பு­ணர்வு நடை­ப­ய­ணங்­கள் பொது­மக்­களை ஈடு­ப­டுத்தி சுற்­றுச்­சூ­ழ­லின்­மீது அவர்­க­ளின் பொறுப்பு உணர்வை ஊக்­கு­விக்­கும் வகை­யில் அமைந்­த­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாண்டு விழா­வின் முக்­கிய சிறப்­பம்­ச­மாக, தமிழ்­நாடு வனத்­துறை மூலம் மாநில அள­வி­லான வன­உ­யி­ரி­னங்­கள் தொடர்­பான வினாடி வினா போட்டி இருந்­தது. தமிழ் மற்­றும் ஆங்­கி­லம் ஆகிய இரு மொழி­க­ளி­லும் நடத்­தப்­பட்ட இப்­போட்­டி­யின் ஆரம்ப சுற்று, இணை­யத்­தின் வழி­யாக 30.09.2025 அன்று நடை­பெற்­றது. இதில், மாநி­லத்­தின் 38 மாவட்­டங்­க­ளில் உள்ள 72,298 பள்ளி மாண­வர்­கள் பங்­கேற்­றது, நாட்­டின் மிகப்­பெ­ரிய வன­உ­யி­ரி­னங்­கள் சார்ந்து மாண­வர்­களை ஒருங்­கி­ணைத்த நிகழ்­வு ­க­ளில் ஒன்­றாக அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­போட்­டி­யின் இறு­திச்­சுற்று, 08.10.2025 அன்று, சென்னை கிண்டி சிறு­வர் இயற்கை பூங்கா அரங்­கத்­தில் வன­உ­யி­ரின வார விழா­வின் நிறைவு விழா­வின் ஒரு பகு­தி­யாக நடை­பெற்­றது. மாநி­லத்­தின் ஆறு மண்­ட­லங்­களை பிர­தி­ நி­தித்­து­வப்­
ப­டுத்­தும் இறு­திச்­சுற்­றில், போட்­டி­யா­ளர்­கள் பங்­கேற்று, வன­உ­யி­ரி­னங்­கள் மற்­றும் இயற்கை குறித்து தங்­க­ளு­டைய மிகுந்த ஆர்­வத்­தை­யும் அறி­வை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிறைவு விழா மாநில அள­வி­லான வினாடி வினா இறு­திப்­போட்­டி­யு­டன் தொடங்­கி­யது. அதன் பின்­னர், வன­உ­யி­ரின புகைப்­பட போட்டி மற்­றும் வினாடி வினா போட்டி வெற்­றி­யா­ளர்­க­ளுக்­கான பரி­ச­ளிப்பு விழா நடை­
பெற்­றது. இவ்­வி­ழா­வில் முக்­கிய வனத்­துறை அதி­கா­ரி­க­ளான. ஸ்ரீனி­வாஸ் ஆர். ரெட்டி, முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் (வனத்­து­றைத் தலை­வர்), ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் மற்­றும் வன உயி­ரி­னக் காப்­பா­ளர்,    வேணு­பி­ர­சாத், கூடு­தல் முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் (வன உயி­ரி­னம்), தின்­கர் குமார், கூடு­தல் முதன்மை தலைமை வனப்­பா­து­கா­வ­லர் (வனப்­பா­து­காப்பு சட்­டம்), ரிட்டோ சிரி­யாக், தலைமை வனப்­பா­து­கா­வ­லர் மற்­றும் இயக்­கு­நர், அறி­ஞர் அண்ணா உயி­ரி­யல் பூங்கா, மனீஷ் மீனா, வன உயி­ரி­னக் காப்­பா­ளர், சென்னை மற்­றும் அனைத்து வனத்­துறை அதி­கா­ரி­க­ளும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>