<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,35,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 23:21:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102025-CHN-07" position.sequence="07" ex-ref="10102025-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">10.10.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="33">தி.மு.கழகம் இளமையோடும் வலிமையோடும் இருக்கக் காரணம்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">கலைஞரின் உடன்பிறப்புகளாகிய நீங்கள்தான்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்   -   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup515296_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup448906_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="UdhayasirSpee_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திண்­டுக்­கல், அக். 10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திண்­டுக்­கல்­லில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின், திண்­டுக்­கல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யைச் சேர்ந்த கழக நிர்­வா­கி­கள் கலந்­து­ரை­யா­டல் மற்­றும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அப்­போது, ``2026-இல் கழ­கம் பெற­வி­ருக்­கும் வெற்றி எட்­டுத்­திக்­கும் எதி­ரொ­லிக்­கும் வகை­யில், களப்­ப­ணி­யாற்ற வேண்­டும்’’ எனக்  குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் ஆற்­றிய உரை­யின் விவ­ரம் வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திண்­டுக்­கல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யைச் சேர்ந்த கழக நிர்­வா­கி­கள், பூத் கமிட்டி நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி­கள் உங்­கள் அத்­தனை பேரை­யும் பல­முறை தனித்­த­னி­யாக நேர­டி­யாக சந்­தித்­தி­ருந்­தா­லும்,  இன்று அனை­வ­ரை­யும் ஒரே இடத்­தில்  சந்­திப்­ப­தில் மிகுந்த பெரு­மை­யும், மகிழ்­ச்சி­யும் அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பரி­ச­ளிப்பு விழா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்­னை­யி­லி­ருந்து விமா­னத்­தின் மூலம் திருச்சி வந்து, அங்­குள்ள கழக நிர்­வா­கி­க­ளைச் சந்­தித்­து­விட்டு, திண்­டுக்­கல் வந்து திண்­டுக்­  கல்­லில் அரசு ஆய்­வுக்­கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு, நானும் நம் அமைச்­சர்­கள் ஐ.பெரி­ய­சாமி, சக்­க­ர­பாணி அவர்­க­ளும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஆய்­வுக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்டு, அதன்­பி­றகு முத­ல­மைச்­சர் கோப்­பைப் பரி­ச­ளிப்பு விழா­வில் கலந்­து­கொண்டு இப்­போது இங்கு வந்­துள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த நிகழ்ச்­சி­யில் என்ன சிறப்பு என்­றால், `இந்­தி­யா­வின் ஒலிம்­பிக்ஸ் கேம்ஸ்’ என்று சொல்­லும் அள­வுக்கு 100 கோடி ரூபாய் பட்­ஜெட்­டில் நடத்­தப்­ப­டு­கி­றது.  அதன் பரி­சுத்­தொகை மட்­டும் 38 கோடி ரூபாய்.    மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்பு முத­ல­மைச்­சர் கோப்­பைப் போட்­டி­யில் 3 லட்­சம் பேர் கலந்­து­கொண்­டார்­கள், இந்த வரு­டத்­தில் தமிழ்­நாடு முழு­வ­தும் 16 லட்­சம் விளை­யாட்டு வீரர்­கள் இந்த விளை­யாட்­டுப் போட்­டி­க­ளில் பங்கு பெற உள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் கூடு­தல் சிறப்பு என்­ன­வென்­றால், நானும், அண்­ணன் பெரி­ய­சாமி, அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­க­ளும் பி.எஸ்.என்.ஏ கல்­லூ­ரிக்­குச் சென்று பரி­ச­ளிப்பு விழா­வில் கலந்­து­கொண்­டோம்.   இன்று பால் மேட்­மிண்­டன் போட்­டி­யில் தமிழ்­நாட்­டி­லேயே, மாநில அள­வில் முத­லி­டத்தை, திண்­டுக்­கல் மாவட்­டம் முதன்­மு­றை­யாக வென்று இருக்­கி­றது. எப்­படி முத­ல­மைச்­சர் கோப்­பை­யில் வர­லாற்­றி­லேயே முதன்­மு­றை­யாக கோப்­பையை வென்று இருக்­கி­றதோ, அதே­போல் 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் முத­ல­மைச்­ச­ரைத் தேர்ந்­தெ­டுக்­கின்ற போட்­டி­யி­லும் திண்­டுக்­கல் மாவட்­டம் நிச்­ச­யம் வெற்றி பெறும். அந்த நிகழ்ச்­சியை முடித்­து­விட்டு, இன்­றைக்­குக் கடை­சி­நி­கழ்ச்­சி­யாகஉங்­களை எல்­லாம் சந்­திக்க வருகை தந்­துள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">உடன் பிறப்பே வா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு­பக்­கம் தலை­வர் அவர்­கள் `உடன் பிறப்பே வா’ என்று சென்­னை­யில், தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லும் உள்ள முக்­கிய நிர்­வா­கி­களை அழைத்­துத் தனி­யாக ஒவ்­வொரு தொகு­திக்­கும் 2 மணி நேரம் செல­வி­டு­கி­றார்.  அந்­தத் தொகுதி நிர்­வா­கி­களை வர­வ­ழைத்து என்ன பிரச்­சினை, நிர்­வா­கி­கள் எப்­ப­டிச் செயல்­ப­டு­கி­றார்­கள், அணி­கள் எப்­ப­டிச் செயல்­ப­டு­கின்­றன என்று நிகழ்ச்சி நடத்­திக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் அவர்­கள் எனக்கு கட்­ட­ளை­யிட்­டுள்­ளார்­கள்.  ``நான் சென்­னை­யில் சந்­திக்­கி­றேன். நீ தமிழ்­நாடு முழு­வ­தும் சென்று, ஒவ்­வொரு தொகு­திக்­கும் நேரம் ஒதுக்கி, அங்கு உள்ள அத்­தனை நிர்­வா­கி­க­ளை­யும் சந்­தித்து வா’’ என்று என்னை அனுப்பி வைத்­துள்­ளார்­கள்.  இன்று காலை திருச்­சி­யில் ஒரு தொகுதி நிர்­வா­கி­க­ளை­யும், மாலை­யில் உங்­க­ளை­யும் சந்­திக்க வந்­துள்­ளேன்.  இது எனக்கு 8-வது தொகுதி.  இது­வரை 7 தொகு­தி­க­ளில் மக்­க­ளைச் சந்­தித்து பார்த்­த­வ­ரைக்­கும், நாம் வெற்­றிப்­பெற போவது உறுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் அனை­வ­ரும் ஆசை­யாக என்­னைப் பார்க்க வந்­துள்­ளீர்­கள்.  நீங்­கள் எப்­படி என்­னைப் பார்க்க ஆசை­யாக வந்­துள்­ளீர்­களோ, அதை­விட ஆசை­யு­டன், அன்­பு­டன் உங்­க­ளைப் பார்க்க வந்­துள்­ளேன்.  நீங்­கள் என்­னைப் பார்க்க மட்­டும் வர­வில்லை.  இவர் என்ன பேசு­கி­றார் என்­ப­தைக் கேட்­க­வும் வந்­தி­ருக்­கி­றீர்­கள்.  இது பார்க்க வந்­து­விட்டு கலை­கிற கூட்­டம் கிடை­யாது.  என்ன கொள்­கை­யைப் பேசு­கி­றோம், என்ன அர­சி­யல் பேசு­ கி­றோம் என்­ப­தைக் கூர்ந்து கவ­னிக்­கும் கூட்­டம் தி.மு.க உடன்­பி­றப்­பு­க­ளின் கூட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வ­ளவு சிறப்­பான நிகழ்ச்­சியை குறு­கிய காலத்­தில் ஏற்­பாடு செய்த மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்   என் அன்பு சகோ­த­ரர் ஐ.பி.செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்கு எனது பாராட்­டு­கள், வாழ்த்­து­கள்.  இந்த வாய்ப்பை எனக்­குக் கொடுத்­த­மைக்கு நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.  பேசி­விட்டு மட்­டும் செல்­ல­வில்லை.  உங்­கள் அத்­தனை பேரு­ட­னும் தனித்­த­னி­யா­கப் புகைப்­ப­ட­மும் எடுத்­துக்­கொள்ள போகி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">நெருக்­க­டி­கள், துரோ­கங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்று நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் வயது 76.  பவ­ள­விழா கண்­டுள்ள இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.  இந்த 76 வரு­டங்­க­ளில் எத்­த­னையோ பெரிய இயக்­கங்­களை எதிர்த்து வென்­றுள்­ளோம்.  பெரிய தலை­வர்­களை எல்­லாம் எதிர்த்து, அர­சி­யல் செய்து நாம் வெற்­றிப் பெற்­றுள்­ளோம்.  எத்­த­னையோ நெருக்­க­டி­கள், துரோ­கங்­க­ளைப் பார்த்து இருக்­கி­றோம்.  நெருப்­பாற்றை கடந்து இருக்­கி­றோம்.  இத்­தனை துரோ­கங்­கள், சவால்­க­ளைச் சந்­தித்த பிற­கும் இன்­றைக் ­கும் நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், அதே இள­மை­யோ­டும், துடிப் ­போ­டும் வலி­மை­யோ­டும் இருக்­கி­றது என்­றால் அதற்கு இங்கு வந்­துள்ள கலை­ஞ­ரின் உடன்­பி­றப்­பு­கள் நீங்­கள்­தான் கார­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழ­கத்­தைத் தாங்கி பிடிக்­கின்ற அடித்­த­ளம் நீங்­கள்­தான்.  இன்று நாம் பெரு­மை­யா­கச் சொல்­கி­றோம் கழ­கம் ஆறு முறை ஆட்சி அமைத்­துள்­ளது என்று.  அந்த பெரு­மைக்­குக் கார­ணம் இங்கு வந்­துள்ள கழ­கத்­தின் உடன்­பி­றப்­பு­கள்­தான்.  கலை­ஞர் அவர்­கள் 5 முறை முத­ல­மைச்­ச­ராக இருந்­தார் என்று பெரு­மை­யா­கச் சொல்­கி­றோம், நம் தலை­வர் இன்­றைக்கு முத­ல­மைச்­ச­ராக அமர்ந்­தி­ருக்­கி­றார் என்று பெரு­மை­யா­கச் சொல்­கி­றோம் என்­றால், அதற்­குக் கார­ணம் இங்கு வந்­துள்ள நீங்­கள்­தான்.  இதில் ஒரு சின்ன குறை.  சென்ற முறை திண்­டுக்­கல் தொகு­தி­யில் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம்.  இந்த முறை நிச்­ச­யம் அந்த தவறை நீங்­கள் செய்­ய­மாட்­டீர்­கள்.  திண்­டுக்­கல் தொகு­தி­யை­யும் வெற்­றி­பெற்று காட்­டு­வோம் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உங்­க­ளின் உணர்­வு­களை, எழுச்­சி­யைப்பார்க்­கும்­போது இந்த முறை நிச்­ச­யம் 7 தொகு­தி­யி­லும் வெற்­றிப்­பெ­றப் போவது உறு­தி­யா­கிவிட்­டது என்­பதை நான் நம்­பு­கி­றேன்.  சென்ற முறை நம் தலை­வர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக அமர்ந்­த­பி­றகு, இன்­றைக்கு இந்­தி­யாவே திரும்­பிப் பார்க்­கிற அள­வுக்கு சிறப்­பான ஆட்­சியை நம் தலை­வர் அவர்­கள் வழங்­கி­க்கொண்டு இருக்­கி­றார்­கள். ஆட்­சிக்கு வந்­த­வு­டன் பல திட்­டங்­களை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">ஐந்து கையெ­ழுத்­து­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆட்­சிக்கு வந்­த­வு­டன் நம் தலை­வர் அவர்­கள் முதல் நாள் ஐந்து கையெ­ழுத்­து­களை போட்­டார் நம் தலை­வர் அவர்­கள்.  அதில் முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­குக் கட்­ட­ண­மில்லா விடி­யல் பய­ணத்­திற்­கான கையெ­ழுத்­து­தான்.  அந்­தத் திட்­டத்­தில் இந்த நான்­கரை வரு­டத்­தில் 800 கோடி  பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.  அது­தான் அந்­தத் திட்­டத்­தின் வெற்றி.  இந்த திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் மட்­டும் 22 கோடிக்­கும் அதி­க­மான பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.  ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை சேமிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கல்­லூரி படிக்­கும் மாணவ, மாண­வி­க­ளுக்கு தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டத்தை அறி­வித்­தார்­கள். இந்­தத் திட்­டத்­தின் மூலம் அந்த மாண­வர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் கல்வி ஊக்­கத்­தொ­கையை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்கி வரு­கி­றார்­கள்.  இந்­தத் திட்­டத்­தின் மூல­மாக தமிழ்­நாடு முழு­வ­தும் 8 லட்­சம் மாணவ, மாண­வி­கள் பயன்­பெற்று இருக்­கி­றார்­கள்.  இந்த திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் மட்­டும் 20 ஆயி­ரம் மாண­வர்­க­ளுக்கு கல்வி உத­வித்­தொகை வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">காலை உண­வுத் திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாண­வர்­கள் பள்­ளிக்­கூ­டத்­திற்கு வர­வேண்­டும்.  வந்து பசி­யோடு படிக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் கொண்டு வந்த திட்­டம்­தான் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம்.  ஒவ்­வொரு நாளும் 22 லட்­சம் குழந்­தை­கள் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கைத் திட்­டம்.  நாம் ஆட்சி அமைத்து, கிட்­டத்­தட்ட 6 மாதம் காலம் நாம் கொரோனா பெருந்­தொற்­று­டன் போரா­டிக்­கொண்டு இருந்­தோம்.  நாம் ஆட்­சிக்கு வரும்­போது கடும் நிதி நெருக்­கடி இருந்­தது.  எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம் இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்­தவே முடி­யாது என்று சொன்­னார்­கள்.  ஆனால், நம் தலை­வர் அவர்­கள் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்பு செப்­டம்­பர் மாதம் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் பிறந்த நாளில் அந்த திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.  கிட்­டத்­தட்ட ஒரு கோடியே இரு­பது லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­துள்­ளார்­கள்.  25 மாதங்­கள் இந்த ஆயி­ரம் ரூபாயை நம் தலை­வர் அவர்­கள் வழங்­கி­யுள்­ளார்.  இந்த திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் மட்­டும் கிட்­டத்­தட்ட 4 லட்­சம் மக­ளிர் இந்த திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">திண்­டுக்­கல் தொகுதி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த திண்­டுக்­கல் தொகு­திக்கு மட்­டும் பல்­வேறு திட்­டங்­களை நம் அரசு செய்­தி­ருக்­கி­றது. திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் மட்­டும்  121 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சாலை வச­தி­கள், பள்­ளிக்­கூட கட்­டட உட்­கட்­ட­மைப்­பு­கள், பால­கி­ருஷ்­ணா­பு­ரத்­தில் புதிய மேம்­பா­லம் என்று பல கட்­ட­மைப்­புப் பணி­களை நம் அரசு செய்து கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திண்­டுக்­கல் மாந­க­ராட்சி பகு­தி­க­ளில் 262 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் சாலை பணி­கள், குடி­நீர் வச­தி­கள், புதி­தாக தெரு­வி­ளக்­கு­கள், மழை­நீர் வடி­கால் வசதி, பாதாள சாக்­க­டைத் திட்­டம் என்று பல திட்­டங்­கள் முடுக்கி விடப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">69 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் காவி­ரிக் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம், 250 கோடி ரூபாய் செல­வில் சுற்­று­வட்ட சாலை அமைக்­கும் பணி­கள் நடந்­து­கொண்­டுள்­ளன.  திண்­டுக்­கல்­லுக்கு நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இல்­லா­மலே இவ்­வ­ளவு பணி­கள் நடந்­தி­ருக்­கி­றது என்­றால், நாளை நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இருந்­தால் இன்­னும் அதி­க­மான பணி­கள் நம் திண்­டுக்­கல் தொகு­திக்கு தலை­வர் அவர்­கள் நிச்­ச­யம் கொடுப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இது­போன்ற முற்­போக்கு திட்­டங்­க­ளால்­தான்இன்­றைக்கு இந்­தி­யா­வி­லேயே பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் முதல் மாநி­ல­மாக, 11.19 சத­வி­கித வளர்ச்­சி­யு­டன் நம் தமிழ்­நாடு வளர்ச்­சி­ய­டைந்து வரு­கி­றது.  இந்த வளர்ச்­சி­களை எல்­லாம் பொறுக்க முடி­யா­மல்­தான் சங்­கி­கள் கூட்­டம் நமக்கு எல்லா வகை­யான தடங்­கல்­க­ளை­யும்   செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பாசிச பா.ஜ.க அரசு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, மாநில உரி­மை­யைப் பறிக்­கின்ற வேலை­க­ளில் ஒன்­றிய பாசிச பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்­து­கொண்டு இருக்­கி­றார்­கள். இவை அனைத்­தை­யும் எதிர்த்து, குரல்­கொ­டுக்­கின்ற இந்­தி­யா­வி­லேயே முதல் தலை­வ­ராக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் சிறப்­பாக பணி­யாற்­றிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  ஒன்­றிய அரசு புதி­யக்­கல்­விக் கொள்­கையை கொண்­டு­வந்து இதை ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று சொன்­னது.  புதி­யக் கல்­விக் கொள்­கை­யின் மூல­மாக இந்­தி­யை­யும், சமஸ்­கி­ருத்­த­தை­யும் குறுக்கு வழி­யில், தமிழ்­நாட்­டுக்­குள் நுழைக்­கப் பார்த்­தார்­கள்.  குலக்­கல்­வித் திட்­டத்­தைக் கொண்­டு­வ­ரப் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நீங்­கள் புதிய கல்­விக்­கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் தமி­ழ­நாட்டு பள்­ளிக் கல்­வித்­து­றைக்கு வர­வேண்­டிய 2,500 கோடி ரூபா­யைத் தரு­வேன் என்று ஒன்­றிய அமைச்­சர் நேர­டி­யா­கச் சொன்­னார்.  ஆனால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நீங்­கள் 2,500 கோடி இல்லை, 10,000 ஆயி­ரம் கோடி கொடுத்­தா­லும் தமிழ்­நாட்­டுக்­குள் என்­றைக்­கும் புதி­யக் கல்­விக் கொள்­கையை அனு­ம­திக்க மாட்­டேன் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">கடு­மை­யான போட்­டி­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம் கழ­கத்­தில் 25 அணி­கள் இருக்­கின்­றன.  இளை­ஞர் அணி, மாண­வர் அணி, வழக்­க­றி­ஞர் அணி, மக­ளிர் அணி, தொண்­டர் அணி, தக­வல் தொழில்­நுட்ப அணி  என்று 25 அணி­கள் இருக்­கின்­றன.  ஆனால், அதை­விட அதி­க­மான அணி­கள் அ.தி.மு.க-.வில் இருக்­கின்­றன.  ஈ.பி.எஸ். அணி, ஓ.பி.எஸ். அணி, டி.டி.வி அணி, சசி­கலா அணி, தீபா அணி, தீபா டிரை­வர் அணி, செங்­கோட்­டை­யன் அணி என்று பல அணி­கள் இருக்­கின்­றன.  இங்கு திண்­டுக்­கல்­லில், திண்­டுக்­கல் சீனி­வா­சன் அணி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்கு அ.தி.மு.க.வில் இருக்­கின்ற முன்­னாள் அமைச்­சர்­கள் பல பக்­கம் போட்­டிப்­போட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.  ஆனால் முக்­கி­ய­மான போட்டி என்­ன­வென்­றால், அண்­ணன் திண்­டுக்­கல் சீனி­வா­சன் அவர்­க­ளுக்­கும், அண்­ணன் செல்­லூர் ராஜீ­வுக்­கும்­தான்.  யார் உண்­மை­யான தலை­சி­றந்த விஞ்­ஞானி, யார் உண்­மை­யான சிந்­தனை சிற்பி, நீயா? நானா? யார் மிகப்­பெ­ரிய அறி­வாளி என்ற மிகப்­பெ­ரிய போட்­டி­யில் கடு­மை­யான போட்­டி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திண்­டுக்­கல் சீனி­வா­சன் அவர்­க­ளுக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி மீது ஏன் இவ்­வ­ளவு கோபம் என்று தெரி­ய­வில்லை.  இது­வ­ரைக்­கும் குறைந்­தது மூன்று முறை­யா­வது மீண்­டும் நம் தலை­வரை முத­ல­மைச்­சர் ஆக்­கு­வோம் என்று வெளிப்­ப­டை­யா­கப் பேசிய ஒரே முன்­னாள் அமைச்­சர் அவர்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம் தி.மு.க-வின் தலைமை அலு­வ­ல­கம் சென்னை அறி­வா­ல­யத்­தில் இருக்­கி­றது.  ஏதா­வது ஒரு பிரச்­சினை என்­றால் அறி­வா­லயத்­திற்­குச் சென்று நம் கழக நிர்­வா­கி­க­ளைப் பார்ப்­பீர்­கள். அ.தி.மு.க-வின் தலைமை அலு­வ­ல­ கம், சென்னை இரா­ய­ப்பேட்­டை­யில் இருக்­கி­றது என்று நினைத்­துக்­கொண்டு இருக்­கி­றோம்.  ஆனால், அ.தி.மு.க-வின் தலைமை அலு­வ­ல­கம் டெல்­லி­யில் உள்ள அமித் ஷா வீட்­டில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நம் கழக அணி குறைந்­தது 200 தொகு­தி­க­ளில் வெற்­றிப்­பெ­றும் என்று சொல்லி இருக்­கி­றார்­கள்.  நாம் அத்­த­னை­பே­ரும் அடுத்த ஐந்து மாதம் காலம் ஒன்­றா­கச் செயல்­பட்­டோம் என்­றால், 200 இல்லை 200க்கும் அதி­க­மான தொகு­தி­க­ளில் நிச்­ச­யம் திரா­விட முன்­னேற்­றக் கழக அணி வெற்­றி­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அமைச்­சர்­கள் ஐ.பெரி­ய­சாமி, சக்­க­ர­பாணி, கிழக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஐ.பி.செந்­தில்­கு­மார், மாந­க­ராட்சி மேயர் இள­மதி ஜோதி­பி­ர­காஷ், தொகுதி பார்­வை­யா­ளர் வழக்­க­றி­ஞர் செல்­வக்­கு­மார், மாநில இளை­ஞர் அணித் துணைச் செய­லா­ளர் ஆனந்­த­கு­மார், மாநில வர்த்­த­கர் அணி­யின் இணைச் செய­லா­ளர் ஜெயன், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் காமாட்சி, நாக­ரா­ஜன், பிலால் உசேன், மார்க்­க­ரேட் மேரி, சத்­தி­ய­மூர்த்தி, தலை­மைப் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் கலை­ராஜா, கே.எஸ்.அக்­பர், மாந­க­ரக் கழக நிர்­வா­கி­கள் முக­மது இப்­ரா­ஹிம், வைகை­முத்து, முக­மது சித்­திக், அழ­கர்­சாமி, சர­வ­ணன், ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர்­கள் நெடுஞ்­செ­ழி­யன், வெள்­ளி­மலை, பகு­திக் கழ­கச் செய­லா­ளர்­கள் எஸ்.ஏ.டி.சந்­தோஷ்­முத்து, ஜான­கி­ரா­மன், ராஜேந்­தி­ர­கு­மார், சந்­தி­ர­சே­கர், சூசை இரா­பர்ட், பஜு­லுல் ஹக், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் கணே­சன், ஹரி­ஹ­ர­சு­தன், கழக அணி­க­ளின் மாவட்ட அமைப்­பா­ளர்­கள் பிர­பா­கர், முரு­கா­னந்­தம், வி.சி.ஏ.இரா­ஜேந்­தி­ரன், எஸ்.எம்.அமிர்­த­க­ணேஷ், இல.கண்­ணன், சுரேஷ்­கு­மார், ஆர்.எம்.ராஜ­சே­கர், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் அப்­துல் ரகு­மான், மாவட்ட இளை­ஞர் அணித் துணை அமைப்­பா­ளர்­கள் ராஜேஷ் பெரு­மாள், மணி­கண்­டன், காதர் மொகி­தீன், ராஜ்­கு­மார், ரவி­சங்­கர், மாந­க­ரத் துணை அமைப்­பா­ளர்­கள் செபாஸ்­டின், நாகேந்­தி­ரன், வெங்­க­டேஷ், பாபு மீரான் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>