<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,280,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:40:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102025-CHN-08" position.sequence="08" ex-ref="10102025-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">தாய் சேய் நல மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் – மருத்துவ வசதிகள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup516830_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் நேற்று (09.10.2025) சென்னை எழும்­பூர் அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­மனை மற்­றும் தாய் சேய் நல மருத்­து­வ­ம­னை­யில் கட்­டப்­பட்டு வரும் புதிய மருத்­து­வக் கட்­டி­டங்­கள், மருத்­துவ வச­தி­களை ஆய்வு மேற்­கொண்டு, நிர்­வாக சீர்­தி­ருத்­தத்­திற்கு புதிய உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை எழும்­பூர் அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­மனை மற்­றும் அரசு தாய் சேய் நல மருத்­து­வ­மனை ஆகிய இரண்டு மருத்­து­வ­ம­னை­க­ளில் புதி­தாக கட்­டப்­பட்டு வரும் மருத்­து­வக் கட்­டி­டங்­க­ளை­யும், ஏற்­கெ­னவே இருக்­கின்ற சிறிய குறை­பா­டு­க­ளை­யும் கண்­ட­றி­வ­தற்கு ஆய்­வு­கள் மேற்­கொண்­டோம். அந்­த­வ­கை­யில் இந்த மருத்­து­வ­மனை என்­பது கட்டி முடிக்­கப்­பட்டு ஏறத்­தாழ 60 ஆண்­டு­கள் நிறைவு செய்­தி­ருக்­கி­றது. 60 ஆண்­டு­க­ளுக்கு முன்­னாள் இம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் பயன்­பாடு என்­பது இந்த அள­விற்கு இல்லை. இம்­ம­ருத்­து­வ­ம­னைக்கு தினந்­தோ­றும் புற­நோ­யா­ளி­கள் 1,500 பேர் குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னைக்­கும், தாய் சேய் நல மருத்­து­வ­ம­னைக்கு 1,200 பேரும், சுமார் 3000 பேர் வரை ஒவ்­வொரு நாளும் இம்­ம­ருத்­து­வ­ம­னைக்கு புற­நோ­யா­ளி­க­ளாக வருகை புரி­கின்­ற­னர். இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் உள்­நோ­யா­ளி­க­ளைப் பொறுத்­த­வரை ஒட்­டு­மொத்­த­மாக 2000 படுக்­கை­கள் கொண்ட மருத்­து­வ­ம­னை­யாக இது இருக்­கின்­றது. ஒவ்­வொரு நாளும் 5000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மருத்­துவ பயன் பெற்று வரு­கி­றார்­கள். 60 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்ட கட்­டி­டம் என்­ப­தால் குடி­நீர் வசதி, பாதாள சாக்­கடை வசதி போன்­றவை கேள்­விக்­கு­றி­யாக இருந்­தது. இதற்கு முன்பு இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் குடி­நீர் தேவை என்­பது லாரி­கள் மூல­மாக பெறப்­பட்டு வந்­தது. மருத்­து­வத்­து­றை­யின் செய­லா­ளர் மெட்ரோ நிர்­வா­கத்­து­டன் கூட்­டம் நடத்தி சென்­னை­யில் இருக்­கின்ற அனைத்து மருத்­து­வ­ம­னை ­க­ளுக்கு குடி­நீர் வசதி மற்­றும் பொதுப்­ப­ணித்­து­றை­யி­ன­ரி­டம் ஒரு கூட்­டம் நடத்தி பாதாள சாக்­கடை குழா­யினை மாற்றி அமைத்­திட அவ­சி­யம் குறித்­தும் விவா­தித்­தி­ருக்­கி ­றார்­கள். அந்­த­வ­கை­யில் இன்று குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யைப் பொறுத்­த­வரை 65 ஆண்­டு­க­ளுக்கு முன்­னாள் போடப்­பட்ட பிர­தான கழிவு நீர் குழா­யினை பொறுத்­த­வரை அதன் அளவை மாற்றி புதிய குழாய்­கள் அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. உட­ன­டி­யாக நாளையே பொதுப்­ப­ணித்­து­றை­யின் சார்­பில் இக்­கு­ழாய்­கள் மாற்றி அமைக்­கும் பணி தொடங்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. 4 வாரங்­க­ளுக்­குள் ஒட்­டு­மொத்­த­மாக பிர­தான கழி­வு­நீர் குழாய்­கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">புதிய மருத்­து­வக் கட்­டி­டங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் கட்­ட­மைப்­பு­களை மாற்றி அமைத்­தி­டும் வகை­யில் ரூ.53 கோடி மதிப்­பீட்­டில் 6 தளங்­க­ளு­டன் கொண்ட 92,000 சதுர அடி பரப்­பில் கட்­டி­டம் கட்­டு­வ­தற்கு நிதி ஒதுக்­கீடு செய்து தந்­தார்­கள். இக்­கட்­டி­டம் கட்­டும் பணி தற்­போது முடி­வ­டை­யும் நிலை­யில் இருக்­கின்­றது. வரும் டிசம்­பர் இறு­த­யில் இக்­கட்­டி­டப் பணி­கள் முழு­மை­யுற்று ஏற்­கெ­னவே இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் புற்­று­நோ­யி­னால் பாதிக்­கப்­ப­டு­கின்ற குழந்­தை­கள் குறிப்­பாக எலும்பு மஜ்சை மாற்று அறுவை சிகிச்சை போன்ற பல்­வேறு சிகிச்சை பிரி­வு­கள் புதிய கட்­டி­டத்­திற்கு மாற்­றப்­ப­ட­வி­ருக்­கி­றது. இந்த புதிய கட்­டி­டத்­தில் பிரத்­யே­க­மாக புற்­று­நோய் பாதிப்­பு­க­ளுக்­குள்­ளான பாதிப்­பு­க­ளுக்கு இந்த இடம் ஒதுக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது மற்­றும் பல்­வேறு சேவை­க­ளுக்கு இக்­கட்­டி­டம் பயன்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது. எனவே இந்த மருத்­து­வக் கட்­டி­டத்­தி­லி­ருந்து வரு­கின்ற கழி­வு­நீரை பாந்­தி­யன் சாலைக்கு ஒரு புதிய கழிவு நீர் இணைப்பு ஏற்­ப­டுத்­து­வது என்­பது முடி­வெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அந்­தப் பணி­யும் விரைந்து வேக­மாக செயல்­ப­டுத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது. எனவே இந்த மருத்­து­வ­ம­னை­க­ளி­லி­ருந்து ஏற்­கெ­னவே இருக்­கின்ற பழைய கழி­வு­நீர் குழாய்­களை தமிழ்­சா­லைக்­கும், புதிய கட்­டி­டத்­தி­லி­ருந்து ஒரு இணைப்பு பாந்­தி­யன் சாலைக்­கும் கழிவு நீர் இணைப்பு புதி­தாக அமைக்­கும் பணி நடை­பெற்று வரு­கி­றது. இந்த இரண்டு பணி­க­ளும் நான்கு வாரத்­திற்­குள் முடி­வ­டை­யும். புதிய கட்­டி­டம் வரு­கின்ற டிசம்­பர் இறு­தி­யில் திறந்து வைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மாரத்­தான் நிதி மூலம் மருத்­து­வ­ம­னை­யில் கட்­டி­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">குடி­நீ­ரைப் பொறுத்­த­வரை இந்த அரசு எடுத்த நட­வ­டிக்­கை­க­ளி­னால் தற்­போது 30% அள­விற்கு குடி­நீர் லாரி­கள் மூல­மாக குறைக்­கப்­பட்டு பிர­தான குடி­நீர் குழாய்­கள் மூல­மாக வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இன்­ன­மும் கொஞ்­சம் கூடு­தல் அழுத்­தம் தந்து ஒட்­டு­மொத்­த­மாக அனைத்து வார்­டு­க­ளுக்­கும் பிர­தான குழாய்­கள் மூல­மா­கவே குடி­நீர் தரும் பணி என்­பது திட்­ட­மிட்டு பணி­கள் நடை­பெற தொடங்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு, கலை­ஞர் நினைவு பன்­னாட்டு மாரத்­தான் போட்டி நடத்­தப்­பட்டு அதில் கிடைத்த பதி­வுத்­தொகை ரூ.1.22 கோடி நிதி அர­சாங்­கத்­திற்கு தந்து அர­சாங்­கத்­தின் சார்­பில் நமக்கு நாமே திட்­டத்­தின்­கீழ் பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி சார்­பில் ரூ.2.28 கோடி நிதி, National Urban Livelihood Mission (NULM) திட்­டத்­தின்­மூ­லம் ரூ.2.39 கோடி ஆக மொத்­தம் ரூ.5.89 கோடி மதிப்­பீட்­டில் 14,262 சதுர அடி பரப்­பில் 4 தளங்­க­ளு­டன் கட்­டி­டம் கட்­டப்­பட்டு வரு­கி­றது. அந்­தக் கட்­டி­டத்தை பொறுத்­த­வரை இந்த மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு வரு­கின்ற பய­னா­ளி­கள் குழந்­தை­களை இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­து­விட்டு தங்­கு­வ­தற்கு இட­மில்­லா­மல் சாலை­க­ளில் ஓரங்­க­ளில் படுத்து உறங்­கும் நிலை இருந்து வரு­கி­றது. அந்­த­வ­கை­யில் அவர்­க­ளுக்­கென்று 100 படுக்­கை­கள் கொண்ட ஓய்­வறை கட்­டி­டம் கட்­டப்­பட்டு வரு­கி­றது. மேலும் தங்­கும் குழந்­தை­க­ளின் பெற்­றோர்­க­ளுக்கு 3 வேளை இல­வ­ச­மாக உணவு கலை­ஞர் நினைவு பன்­னாட்டு மாரத்­தான் அமைப்பு சிஎஸ்­ஆர் நிதி பங்­க­ளிப்­பு­டன் தரு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கி­றது. அந்­த­வ­கை­யில் அந்­தக் கட்­டி­ட­மும் நவம்­பர் இறு­திக்­குள் திறந்து வைக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யின் வச­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்த அரசு பொறுப்­பேற்­ற­தற்கு பிறகு ரூ.1.77 கோடி மதிப்­பீட்­டில் இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் கோபால்ட் கருவி அமைக்­கும் பணி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. ரூ.2.24 கோடி மதிப்­பீட்­டில் டிஜிட்­டல் எக்ஸ்ரே அமைக்­கும் பணி தற்­போது நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்­ற­தற்கு பிறகு இந்த மருத்­து­வ­ம­னை­க­ளில் குறிப்­பாக அரசு குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யில் அல்ட்­ரா­ச­வுண்ட் லேப்­ரேஸ்­கோபி, அதே­போல் ரூ.2.97 கோடி மதிப்­பீட்­டில் மர­பி­யல் சார்ந்த நோய்­கள் மற்­றும் மர­பணு சார்ந்த நோய்­கள் பிற அரிய வகை நோய்­க­ளுக்­கான ஒப்­பு­யர்வு மையம், சிறப்பு பச்­சி­ளங்­கு­ழந்தை பரா­ம­ரிப்பு பிரி­வுக்கு (High frequency Oscillatory Ventilator, ரூ.2.56 கோடி மதிப்­பீட்­டில் பிரத்­யேக இரத்­தம் மற்­றும் எலும்பு மஜ்சை மாற்று சிகிச்சை மையம் என்று பல வச­தி­கள் இங்கே ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தாய் சேய் நல மருத்­து­வ­ம­னை­யின் வச­தி­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அரசு தாய் சேய் நல மருத்­து­வ­ம­னை­யில் ரூ.1 கோடி செல­வில் தாய் சேய் இணை சிகிச்சை பிரிவு, கர்ப்­பிணி பெண்­க­ளுக்­கான சிகிச்சை பிரிவு மற்­றும் கலை­ய­ரங்­கம் தொடங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போல் மேம்­ப­டுத்­தப்­பட்ட அவ­ச­ர­கால ஊர்தி வச­தி­க­ளும், சுத்­தி­க­ரிக்­கப்­பட்ட குடி­நீர் அமைப்­பு­க­ளும் இங்கு தொடங்கி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. ரூ.1.03 கோடி மதிப்­பீட்­டில் புதிய செயற்கை கருத்­த­ரித்­தல் மையம் இங்கு தொடங்­கப்­பட்­டது. செயற்கை கருத்­த­ரித்­தல் மையங்­க­ளைப் பொறுத்­த­வரை தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளில் ரூ.12 இலட்­சம் வரை செலவு ஆகும். ஆனால் இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இல­வ­ச­மாக செயற்கை கருத்­த­ரித்­தல் செய்­திட வேண்­டும் என்­கின்ற வகை­யில் இந்­தி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் இம்­மை­யம் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பத்­தி­ரிக்கை செய்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கடந்த ஓரிரு மாதங்­க­ளில் இம்­ம­ருத்­து­வ­மனை குறித்து பத்­தி­ரிக்­கை­க­ளில் வந்த செய்­தி­கள், இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் லிப்ட் பழு­தாகி இருக்­கின்­றது, அத­னால் பய­னா­ளி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்­கள் என்­கின்ற ஒரு செய்தி மற்­றொன்று உட­ன­டி­யாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு, தாய் சேய் நல மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கின்ற 4 லிப்ட்­க­ளும் பழுது பார்க்­கும் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றது. ஒவ்­வொன்­றாக பழுது பார்க்­கும் பணி­கள் முடி­வுற்று நவம்­பர் இறு­திக்­குள் 4 லிப்ட்­க­ளும் முழு­மை­யாக பயன்­பாட்­டிற்கு வர­வி­ருக்­கி­றது. இப்­படி பல்­வேறு வச­தி­கள் செய்து வரும் சூழ­லில் நேற்று ஒரு தின­சரி நாளி­த­ழில் அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் இலஞ்­சம் தலை­வி­ரித்­தா­டு­கி­றது என்­கின்ற ஒரு செய்தி, அனைத்து இடங்­க­ளி­லும் அது­போல் இல்லை, ஒரு­சில இடங்­க­ளில் சிறிய அள­வி­லான தவ­று­கள் நடந்­தி­ருக்­கும். அத­னைப் பெரி­துப்­ப­டுத்தி ஒட்­டு­மொத்­த­மா­கவே மருத்­து­வ­ம­னை­க­ளில் மருத்­துவ சேவையே சரி­யில்லை என்­கின்ற செய்தி வெளி­யி­டும் சூழல் இருந்து வரு­கி­றது. அரசு மருத்­துவ சேவையை எந்த அள­விற்கு மக்­கள் பயன்­ப­டுத்த தொடங்­கி­யி­ருக்­கி­றார்­கள் என்­பதை கடந்த 4.5 ஆண்­டு­க­ளில் ஏற்­பட்­டி­ருக்­கும் வளர்ச்­சி­யி­னைப் பார்த்­தால் தெரிந்து கொள்ள முடி­யும். எனவே ஊட­கங்­களோ, பத்­தி­ரிக்­கை­களோ தவ­றான செய்­தி­யினை பரப்ப வேண்­டாம் என்று கேட்­டுக் கொள்­கி­றேன். குறை­கள் இருந்­தா­லும், விமர்­ச­னம் இருந்­தா­லும் சொல்­லுங்­கள், சரி செய்­கி­றோம். அதே­போல் இன்­னொரு மாறு­த­லும் இம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் செய்ய இருக்­கி­றோம். தாய் சேய் நல மருத்­து­வ­ம­னை­யி­லும், குழந்­தை­கள் நல மருத்­து­வ­ம­னை­யி­லும் ஒவ்­வொரு மருத்­து­வ­ம­னை­யி­லும் தலா 50 என்­கின்ற வகை­யில் விளம்­பர பல­கை­களை அமைக்க இருக்­கி­றோம். இந்த விளம்­பர பல­கை­க­ளில் அந்த மருத்­து­வ­ம­னை­யின் பொறுத்­த­மான 2 நபர்­க­ளு­டைய தொலை­பேசி எண் எழுதி, யாரும் யாருக்­கும் பணம் தர வேண்­டாம், இது முழுக்க முழுக்க இல­வ­ச­மான மருத்­துவ சேவை, இதில் யாரும் இலஞ்­சம் வாங்­கி­னால் சட்­டப்­படி தண்­டிக்­கப்­ப­டு­வீர்­கள் என்­கின்ற வகை­யில் விளம்­ப­ரங்­கள் எழுதி 100 விளம்­பர பல­கை­கள் அமைக்க இருக்­கி­றோம். அதற்­கான மாதி­ரியை சம்­மந்­தப்­பட்ட இரண்டு மருத்­து­வ­ம­னை­க­ளின் இயக்­கு­நர்­கள் சம்­மந்­தப்­பட்ட செய­லா­ள­ரி­டம் காண்­பித்து இந்த வாரத்­திற்­குள் அமைக்க இருக்­கி­றார்­கள். எனவே பொது­மக்­க­ளும் இம்­ம­ருத்­து­வ­னைக்கு வரு­ப­வர்­க­ளும் கையூட்டை சட்­டப்­பூர்­வ­மாக மாற்ற வேண்­டாம் என்­றும் கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இரு­மல் மருந்து தொடர்­பான கேள்­விக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அக்­டோ­பர் 1ந்தேதி இச்­சம்­ப­வம் நடை­பெற்­றது. மத்­தி­யப்­பி­ர­தே­சம் மாநி­லத்­தில் இருந்து தக­வல் வந்­தது, தக­வல் வந்­த­வு­டன் மருத்­து­வத்­து­றை­யின் செய­லா­ளர் சம்­மந்­தப்­பட்ட அலு­வ­லர்­களை அனுப்பி பரி­சோ­தனை செய்து அம்­ம­ருந்­தினை ஆய்வு செய்­தார்­கள். ஆய்வு செய்­த­வு­டன் அதில் கலப்­ப­டம் இருப்­பது என்­பது கண்­ட­றி­யப்­பட்டு, மருந்து பயன்­ப­டுத்­தக் கூடாது என்று தடை­வி­திக்­கப்­பட்­டது. தடை­வி­தித்­தது மட்­டு­மல்ல மத்­தி­யப் பிர­தே­சத்­திற்கு மருந்­தில் கலப்­ப­டம் உள்­ளது என்ற தக­வல் அனுப்பி வைக்­கப்­பட்­டது. ஒன்­றிய அர­சிற்­கும் அனுப்பி வைக்­கப்­பட்­டது. மத்­திய பிர­தேச அர­சும், ஒன்­றிய அர­சும் இந்த மருந்­தினை ஆய்வு செய்து மருந்­தின் மீது தவ­றில்லை என்று இறப்­பு­க­ளுக்கு பிற­கும் அறி­விக்­கி­றார்­கள். நமது மாநி­லத்­தில் மருந்து விற்க கூடாது என்று அறி­விக்­கி­றோம், அதன்­பி­றகு இது சரி என்று அறி­விக்­கி­றார்­கள். அதன்­பி­றகு ஒடிசா, புதுவை ஆகிய இரண்டு மாநி­லங்­க­ளுக்­கும் தக­வல் அனுப்­பி­கி­றோம். இந்த மருந்து வாங்க வேண்­டாம், இது­மா­தி­ரி­யான பாதிப்­பு­கள் இருப்­பது சொல்­கி­றோம், வாங்­க­வில்லை. தற்­போது யார் மீது குறை சொல்­வது என்­பது இப்­போது விவா­த­மில்லை. எந்த மருந்­தாக இருந்­தா­லும் அந்­தந்த மாநி­லத்­தின் மருந்து கட்­டுப்­பாட்­டுத் துறை ஆய்வு செய்ய வேண்­டும். இங்கு ஆய்வு செய்து அந்த மருந்­தில் கலப்பு இருக்­கி­றது என்று சொல்­கி­றோம். ஒன்­றிய அர­சும், மத்­தி­ய­பி­ர­தேச அர­சும் இல்லை என்று சொல்­கி­றார்­கள். இந்த நிலை­யில் அந்த மருந்து கம்­பெ­னியை மூடி சீல் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தயா­ரிப்பு நிறுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. 03 ந்தேதி அவர்­க­ளுக்கு நோட்­டீஸ் வழங்கி நிரந்­த­ர­மாக உங்­க­ளு­டைய லைசென்ஸ் ஏன் நிறுத்­தக்­கூ­டாது, உங்­க­ளு­டைய கம்­பெனி ஏன் நிறுத்­தக்­கூ­டாது என்று சொல்­லி­யி­ருந்­தோம், மருந்து கம்­பெனி உரி­மை­யா­ளர் நேற்று இரவு கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இதில் இன்­னொரு கூடு­தல் நட­வ­டிக்­கை­யாக சீனி­யர் மருந்­துக்­கட்­டுப்­பாட்டு ஆய்­வா­ளர் நேரி­டை­யாக சென்று முறை­யாக ஆய்வு செய்­ய­வில்லை என்­ப­தற்­காக 2 பேரை சஸ்­பெண்ட் செய்­தி­ருக்­கி­றோம். தமிழ்­நாடு அரசு தவறு என்று தெரிந்­த­பி­றகு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுத்து இருக்­கி­றோம் என்று மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் எழும்­பூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் இ.பரந்­தா­மன், மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அரசு முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் ப.செந்­தில்­கு­மார், மருத்­து­வக்­கல்வி மற்­றும் ஆராய்ச்சி இயக்­கு­நர் மரு.சுகந்தி இரா­ஜ­கு­மாரி, சென்னை மருத்­து­வக்­கல்­லூரி முதல்­வர் மரு.சாந்­தா­ராம், சென்னை குழந்­தை­கள் நல மருத்­து­வ­மனை இயக்­கு­நர் மரு.லட்­சுமி வேல்­மு­ரு­கன், அரசு தாய் சேய் நல மருத்­து­வ­மனை இயக்­கு­நர் மரு.சுமதி, பொதுப்­ப­ணித்­துறை கண்­கா­ணிப்பு பொறி­யா­ளர் கார்த்­தி­கே­யன் மற்­றும் மருத்­து­வப் பேரா­சி­ரி­யர்­கள், செவி­லி­யர்­கள்உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் வடக்கு பகுதி, 8 வது மண்டலம், 101 வது வார்டில் தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், பகுதிச் செயலாளர் ச.பரமசிவம், கார்த்திக் மோகன், மெட்டில்டா கோவிந்தராஜ் எம்.சி., வட்டச் செயலாளர்கள் க.கோவிந்தராஜ், சி.பி.திருமலை மற்றும் டி.சமந்தா, கே.பி.சுரேந்தர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், (101), 101 (அ) வது வட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>