<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,69,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 23:25:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102025-CHN-11" position.sequence="11" ex-ref="10102025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="1">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="152">தந்தை பெரி­யார் நமக்குக் கற்­றுத் தந்த சுய­ம­ரி­யா­தை­யு­டன் வாழ வேண்­டும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">திண்­டுக்­கல் – வேட­சந்­தூர்  வீரா.சாமி­நா­தன் இல்ல மண விழா­வில்</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Udhaysirmarri_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Udhaysirmarri1_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல்,அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் மேற்கு மாவட்­டம் – வேட­சந்­தூர் தெற்கு ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர்  வீரா.சாமி­நா­தன் அவர்­க­ளின் மகன் ஸ்ரீகாந்த் – மருத்­து­வர் வீர­வர்­ஷினி இணை­ய­ரின் திரு­ம­ணத்தை வேட­சந்­தூ­ரில்  கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் முன்­னின்று நடத்தி வைத்து  மண­மக்­களை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர், ``பெரி­யார் நமக்கு கற்­றுத் தந்த சுய­ம­ரி­தை­யு­டன் வாழ வேண்­டும். எதற்கு விட்­டுக் கொடுக்க வேண்­டுமோ அதற்கு விட்­டுக்­கொ­டுத்து, எதற்கு விட்­டுக்­கொ­டுக்­கக் கூடாதோ, அதை விட்­டுக் கொடுக்­கா­மல் இரு­வ­ரும் நல்ல நண்­பர்­க­ளாக வாழ வேண்­டும்’’ என்று அவர் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை­வரு­மாறு:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திண்­டுக்­கல் மேற்கு மாவட்­டம், வேட­சந்­தூர் தெற்கு ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர் வீரா.சாமி­நா­தன் அவர்­க­ளின் மகன் ஸ்ரீகாந்த், மண­ம­கள் வீர­வர்ஷ்னி ஆகி­யோ­ரின் திரு­ம­ணத்தை உங்­கள் முன்­னி­லை­யில், உங்­க­ளின் வாழ்த்­து­க­ளு­டன் நடத்தி வைப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­யும், பெரு­மை­யும் அடை­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">வாய்ப்­புக்கு நன்றி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருச்சி மற்­றும் திண்­டுக்­கல் இரண்டு மாவட்­டங்­க­ளும் அண்­ணன் வீரா.சாமி­நா­தன் அவர்­க­ளுக்கு நன்றி சொல்ல வேண்­டும்.  நேற்று முழு­வ­தும் திருச்சி, நேற்று மாலை­யி­லி­ருந்து திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டேன்.  இன்று காலை இந்­தத் திரு­மண நிகழ்ச்­சியை முடித்­து­விட்டு, மீண்­டும் மாலை திருச்சி மாவட்ட நிகழ்ச்சி செல்­கி­றேன்.  இரண்டு நாட்­க­ளாக திருச்­சி­யி­லும், திண்­டுக்­கல்­லி­லும் மக்­க­ளை­யும், உடன்­பி­றப்­பு­க­ளை­யும் சந்­திப்­ப­தற்கு அண்­ணன் வீரா.சாமி­நா­தன் அவர்­கள் இந்த வாய்ப்பை எனக்கு அளித்­த­மைக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கத்­தின் துணைப் பொதுச் செய­லா­ளர் அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­கள் பேசும்­போது,  இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பு இந்­தத் தேதி என்­னி­டத்­தில் வாங்­கப்­பட்­டது என்று குறிப்­பிட்டு சொன்­னார். .  அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­கள் பேசும்­போது அண்­ணன் சாமி­நா­தன் அவர்­கள் தலை­வரை வைத்து, இந்­தத் திரு­ம­ணத்தை நடத்த வேண்­டும் என்று ஆசைப்­பட்­டார் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">உற்­சா­க­மும் எழுச்­சி­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­வ­ரி­டத்­தில்­தான் முத­லில் தேதி கேட்க வேண்­டும் என்று விருப்­பப்­பட்­டார்.  தலை­வ­ருக்கு அர­சுப் பணி­கள், தேர்­தல் பணி­கள் இருப்­ப­தால் அவரை அழைக்க முடி­யாது.  நாம் இளை­ஞர் அணிச் செய­லா­ளரை அழைப்­போம் என்று என்னை இன்று அழைத்­துள்­ளார்.  நீங்­கள் தலை­வரை அழைத்­தி­ருந்­தீர்­கள் என்­றால், நிச்­ச­யம் தலை­வர் வந்து மண­மக்­களை வாழ்த்தி இருப்­பார்­கள் என்று நான் சொல்­கி­றேன்.  தலை­வர் வந்­தி­ருந்­தா­லும், நானும் தலை­வ­ரு­டன் வந்து மண­மக்­களை வாழ்த்­து­வ­தற்கு வந்­தி­ருப்­பேன். நேற்று திருச்சி, திண்­டுக்­கல்­லில் பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளில் கலந்­து­கொண்­டேன்.  எங்கு சென்­றா­லும், கழ­கத்­தி­ன­ரின் உற்­சாக வர­வேற்­பும், எழுச்­சி­யும் இருந்­தது.  இந்த அரங்­கிற்கு எனது வாக­னத்­தில் இருந்து வரும்­போ­து­கூட உங்­க­ளின் எழுச்­சி­யை­யும், அன்­பை­யும் பார்த்­து­விட்­டுத்­தான் வந்­தி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த இரண்டு நாட்­க­ளில் அனைத்து நிகழ்ச்­சி­க­ளை­யும் சிறப்­பாக ஏற்­பாடு செய்த மாண்­பு­மிகு கழ­கத்­தின் துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும், அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், என் அருமை சகோ­த­ரர் ஐ.பி.செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்­கும், இந்த திரு­மண விழாவை நம் கழக மண்­டல மாநாடு போல ஏற்­பாடு செய்­துள்ள ஒன்­றி­யச் செய­லா­ளர் அண்­ணன் வீரா.சாமி­நா­தன் உள்­ளிட்ட அனைத்து கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் இந்த நேரத்­தில் எனது பாராட்­டு­க­ளை­யும், நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">நமது  குடும்­பத் திரு­ம­ணம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இங்கு வந்­தி­ருக்­கிற ஒவ்­வொ­ரு­வர் முகத்­தி­லும் தெரி­கிற மகிழ்ச்­சி­யும், எழுச்­சி­யும் எனக்கு ஒரு தனி உற்­சா­கத்தை அளிக்­கி­றது.  அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­கள், அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­க­ளி­டம் சொன்­னார்.  இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு தேதி வாங்­கி­னா­லும், 20 நாட்­க­ளுக்கு முன்­பு­தான் வந்து எனக்கு பத்­தி­ரிகை வைத்­தார்­கள்.  பத்­தி­ரிகை வைக்­கும்­போது, பத்­தி­ரி­கை­யு­டன் சேர்த்து புது புடவை, வேட்டி சட்டை எல்­லாம் வைத்­தார்­கள்.  நானும் பெரு­மை­யாக நினைத்­தேன்.  திரு­ம­ணத்­திற்கு சென்று தலைமை தாங்­கு­கி­றோம்.  நம் குடும்­பத் திரு­ம­ணத்தை எப்­படி நடத்­து­வோமோ அந்த உரி­மை­யோடு எனக்கு வழங்கி இருக்­கி­றார் என்று நினைத்­தேன்.  அதன்­பி­ற­கு­தான் அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­கள் சொன்­னார் உங்­க­ளுக்கு மட்­டு­மல்ல, தொகு­தி­யில் உள்ள அனை­வ­ருக்­கும் கிட்­டத்­தட்ட ஒரு லட்­சம் பேருக்கு புது வேட்­டி–­சட்டை, புது புடவை வைத்து அழைப்­பி­தழை சிறப்­பாக வழங்கி இருக்­கி­றார் என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் வீரா.சாமி­நா­தன் அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரைக்­கும் ஒரே வார்த்­தை­யில் சொல்ல வேண்­டும் என்­றால், கலை­ஞ­ரின் மிகத் தூய்­மை­யான உடன்­பி­றப்­பு­க­ளில் ஒரு­வர்.  30 ஆண்­டு­க­ளாக இந்த இயக்­கத்­திற்­காக உழைத்து வரு­கி­றார்.  அண்­ணன் ஐ.பெரி­யா­சாமி அவர்­க­ளுக்­கும், அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், ஐ.பி.செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்­கும் ஒரு பக்­கப்­ப­ல­மாக இருந்து இந்த வேட­சந்­தூர் பகு­தி­யில், நம் கழ­கத்தை மிகுந்த கட்­டு­பாட்­டு­டன் கோட்­டை­யா­கப் பாது­காத்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்­ணன் அவர்­கள் கொரோனா காலத்­தில் களத்­தில் இறங்கி ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு தேவை­யான அரிசி, மளி­கைப் பொருட்­களை இல­வச சேவை­யாக கொடுத்­துள்­ளார்.  கொரோனா இரண்­டாம் அலை வேக­மெ­டுத்த நேரத்­தில் 20 லட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் ஆக்­ஸி­ஜன் சிலிண்­டர்­களை கொடுத்து மக்­க­ளுக்கு உத­வி­யி­ருக்­கி­றார்.  தனது சொந்த செல­வில் பள்­ளி­க­ளுக்கு ஸ்மார்ட் வகுப்­ப­றை­கள், மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குத் தேவை­யான கட்­ட­மைப்­பு­கள் போன்ற அனைத்து வச­தி­க­ளை­யும் செய்து கொடுத்­த­வர்­தான் நம் ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர் அண்­ணன் வீரா.சாமி­நா­தன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இளை­ஞர்­கள் இயக்­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 11 ஆண்­டு­க­ளாக கிரிக்­கெட், கபடி போன்ற விளை­யாட்­டுப் போட்­டி­க­ளைத் தொடர்ந்து நடத்தி, இளை­ஞர்­களை நம் இயக்­கத்­தின் பக்­கம் ஈர்த்து வரு­கி­றார். இந்­தப் பகு­தி­யில் மட்­டும் 10 ஆயி­ரம் மரக்­கன்­று­களை நட்டு, மிகப்­பெ­ரிய பொது சேவையை அவர் செய்­துள்­ளார்.  மக்­கள் பணி, கழ­கப் பணி மட்­டு­மல்ல கல்­விப் பணி­யி­லும் அண்­ணன் வீரா.சாமி­நா­தன் அவர்­கள் சிறப்­பா­கச் செயல்­பட்டு வரு­கி­றார்.  விழா­வுக்கு ஏரா­ள­மான தாய்­மார்­கள், சகோ­த­ரி­கள் வந்து இருக்­கி­றீர்­கள்.  எப்­படி வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் ஆண்­க­ளை­விட இன்­றைக்கு பெண்­கள் அதி­க­மாக இருக்­கி­றீர்­களோ, அதே­போல் இந்த அரங்­கி­லும் ஆண்­க­ளை­விட மக­ளிர்­தான் அதி­க­மாக அமர்ந்து இருக்­கி­றீர்­கள்.  அதற்கு கார­ணம் நம் அரசு பெண்­க­ளுக்­கான அர­சாக சிறப்­பாக நடை­பெற்று கொண்டு இருக்­கி­றது.  ஒரு சில திட்­டங்­களை மட்­டும் உங்­க­ளுக்கு நினை­வுப்­ப­டுத்த விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">மக­ளி­ருக்­கான கையெ­ழுத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம் ஆட்சி அமைந்­த­வு­டன் நம் முத­ல­மைச்­சர் போட்ட முதல் கையெ­ழுத்து மக­ளி­ருக்­கான கையெ­ழுத்து.  மக­ளி­ருக்­கான கட்­ட­ண­மில்லா பேருந்து திட்­டத்தை நம் தலை­வர் அவர்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். அந்­தத் திட்­டத்­தில் இந்த நான்­கரை வரு­டத்­தில், 800 கோடி  பய­ணங்­களை மக­ளிர் மேற்­கொண்­டுள்­ளார்­கள்.  ஒவ்­வொரு மக­ளி­ரும் மாதந்­தோ­றும் 900 ரூபா­யி­லி­ருந்து 1,000 ரூபாய் வரை இந்­தத் திட்­டத்­தால் மட்­டும் சேமிக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரசு பள்­ளி­யில் படித்த மாணவ, மாண­வி­கள் உயர்­கல்வி படிக்க வைக்க வேண்­டும் என்று, நம் தலை­வர் அவர்­கள் கொண்­டு­வந்த திட்­டம்­தான் புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டம்.  இந்­தத் திட்­டத்­தின் மூலம் 8 லட்­சம் மாணவ, மாண­வி­க­ளுக்கு ஊக்­கத்­தொ­கை­யாக மாதம் ஆயி­ரம் ரூபாயை நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்கி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டம். ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்­பு­வரை படிக்­கின்ற குழந்­தை­கள் பள்­ளிக்­கூ­டத்­துக்கு வந்­தால், முத­லில் தர­மான காலை உணவு, அதன்­பி­றகு தர­மான கல்­வியை நம் அரசு கொடுக்­கி­றது. ஒவ்­வொரு நாளும் 22 லட்­சம் குழந்­தை­கள் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தின் மூலம் பயன்­பெ­று­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் திட்­டம்.  ஒவ்­வொரு மாத­மும் ஒரு கோடியே 20 லட்­சம் மக­ளி­ருக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் நம் தலை­வர் அவர்­கள் கொடுத்­துள்­ளார்­கள்.  சில இடங்­க­ளில் இந்த கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை வர­வில்லை என்று சில குறை­கள் இருக்­கின்­றன.  இந்­தத் திட்­டத்தை விரி­வுப்­ப­டுத்த தலை­வர் அவர்­கள் ஆணை­யிட்­டுள்­ளார்­கள். இன்­னும் இரண்டு மாதங்­க­ளில் இன்­னும் கூடு­த­லான மக­ளி­ருக்கு கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொகை நிச்­ச­ய­மாக  வந்­த­டை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு தமிழ்­நாடு இந்­தி­யா­வி­லேயே எடுத்­துக்­காட்­டான மாநி­ல­மாக, எடுத்­துக்­காட்­டான முத­ல­மைச்­ச­ராக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் திகழ்ந்­து­கொண்டு இருக்­கி­றார்.  பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் 11.19 சத­வி­கித வளர்ச்­சி­ய­டைந்து இந்­தி­யா­வி­லேயே முதன்மை மாநி­ல­மாக நம் தமிழ்­நாடு திகழ்ந்­து­கொண்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவை­யெல்­லாம் பொறுக்­கா­மல் தான் அடி­மை­க­ளுக்­கும், பாசிஸ்ட்­டு­க­ளுக்­கும் வயிற்­றெ­ரிச்­சல்.  எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டைக் கைப்­பற்ற வேண்­டும் என்று வெவ்­வேறு திட்­டங்­க­ளைத் தீட்டி வரு­கி­றாக்ள்.  ஒன்­றிய பாசிச பா.ஜ.க–விற்கு ஏற்­க­னவே எடப்­பாடி பழ­னிச்­சாமி என்ற அடிமை சிக்­கி­யி­ருக்­கி­றார்.  .  பழைய அடிமை பழ­னி­சாமி பத்­த­வில்லை என்று, இன்­றைக்கு புது அடி­மை­க­ளை­யும் பா.ஜ.க வலை­வீசி தேடிக்­கொண்டு இருக்­கி­றது.  புது அடி­மை­கள் உங்­க­ளுக்­குக் கிடைப்­பார்­கள்.  ஆனால் எத்­தனை அடி­மை­கள் வந்­தா­லும் கருப்பு – சிவப்பு கரை வேட்டி கட்­டி­யி­ருக்­கின்ற தி.மு.க–வின் கடைசி தொண்­டர் இருக்­கி­ற­வ­ரைக்­கும் நீங்­கள் தமிழ்­நாட்­டுக்­குள் கால் வைக்க முடி­யாது.  ஒவ்­வொரு தி.மு.க. தொண்­ட­ரும் அந்­தப் பணி­களை செய்­வார்­கள்.  உங்­களை ஓட, ஓட விரட்­டு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">புதிய கல்­விக் கொள்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை, மாநில உரி­மை­யைப் பறிக்­கி­றார்­கள்.  தொகுதி மறு­வ­ரை­ய­றை­யைக் கொண்டு வந்து 39 நாடா­ளு­மன்ற தொகு­தி­களை குறைத்து, 32 தொகு­தி­யாக குறைக்க முயற்சி செய்­கி­றார்­கள். ஒன்­றிய அரசு புதிய கல்­விக் கொள்­கை­யைக் கொண்­டு­வ­ரு­கி­றது.  இந்த புதிய கல்­விக்­கொள்­கை­யைக் கொண்டு வந்­தால் மீண்­டும் தமிழ்­நாட்­டுக்­குள் இந்­தித் திணிப்பு வரும். சமஸ்­கி­ரு­தத்தை எப்­ப­டி­யா­வது தமிழ்­நாட்­டுக்­குள் திணிக்க வேண்­டும் என்ற எண்­ணத்­தோடு புதிய கல்­விக்­கொள்­கை­யைக் கொண்டு வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் புதிய கல்­விக்­கொள்­கையை ஏற்­றுக்­கொண்­டால்­தான் தமி­ழ­நாட்டு பள்­ளிக் கல்­வித்­து­றைக்கு வர­வேண்­டிய 2,500 கோடி ரூபா­யைத் தரு­வேன் என்று ஒன்­றிய அமைச்­சர் நேர­டி­யா­கச் சொன்­னார்.  ஆனால், நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் நீங்­கள் 2,500 கோடி இல்லை, 10,000 ஆயி­ரம் கோடி கொடுத்­தா­லும் என்­றைக்­கும் தமிழ்­நாட்­டுக்­குள், உங்­கள் புதிய கல்­விக் கொள்­கையை அனு­ம­திக்க மாட்­டேன் என்று தைரி­ய­மாக சொன்­னார். இப்­ப­டிச் சொன்ன ஒரே முத­ல­மைச்­சர் நம் தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்ற மாதம் பஞ்­சாப் முத­ல­மைச்­சர் பக­வான் சிங் அவர்­கள் தமிழ்­நாட்­டுக்கு வந்து நம் முத­ல­மைச்­சர் காலை உண­வுத் திட்­டத்­தைப் பார்த்­துப் பாராட்­டி­னார்­கள்.  அடுத்த ஆண்­டி­லி­ருந்து எங்­கள் மாநி­லத்­தி­லும் செயல்­ப­டுத்­தப் போகி­றேன் என்று நம் மாநி­லத்­தைப் பார்த்து சொல்­லி­விட்­டுச் சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">15 நாட்­க­ளுக்கு முன்பு தெலங்­கான முத­ல­மைச்­சர் ரேவந்த் ரெட்டி அவர்­கள் தமிழ்­நாட்­டுக்கு வந்து தமிழ்ப்­பு­தல்­வன், புது­மைப்­பெண் திட்­டத்­தைப் பார்த்­து­விட்டு, கல்­வி­யில் மாண­வர்­களை ஊக்­கு­விக்­கி­றீர்­கள்.  இது மிகச்­சி­றந்த திட்­டம் என்று பாராட்டி பேசி­னார்­கள்.   அடுத்த கல்­வி­யாண்­டி­லி­ருந்து தெலங்­கானா மாநி­லத்­தி­லும் இந்த இரண்டு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தப் போகி­றேன் என்று பாராட்­டி­விட்­டுச் சென்­றார்.மற்ற மாநி­லங்­க­ளுக்­கும், மற்ற மாநில முத­ல­மைச்­சர்­க­ளுக்கு எல்­லாம் எடுத்­துக்­காட்­டாக நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செயல்­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">ஓர­ணி­யில் தமிழ்­நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் அவர்­கள் ஓர­ணி­யில் தமிழ்­நாடு என்ற முன்­னெ­டுப்பை எடுக்­கும்­போது தமிழ்­நாட்டு மக்­கள் விரும்பி நம் இயக்­கத்­தில் சேர்ந்­துள்­ளார்­கள்.  தமிழ்­நாட்­டில் 2 கோடி பேர் நம் இயக்­கத்­தில் உறுப்­பி­ன­ராக சேர்ந்து இருக்­கி­றார்­கள். கழ­கத்தை எப்­ப­டி­யா­வது வீழ்த்தி, தமிழ்­நாட்டை கைப்­பற்ற வேண்­டும் என்று சங்­கி­க­ளும், பாசிஸ்ட்­டு­க­ளும் முயற்சி செய்­து­கொண்டு உள்­ளார்­கள்.  எனவே, அதை­யெல்­லாம் தகர்த்­தெ­றிய வேண்­டிய பொறுப்பு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தொண்­டர்­கள் உங்­கள் கைக­ளில் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எடப்­பாடி பழ­னிச்­சாமி அவர்­கள் மூன்று மாதங்­க­ளுக்கு முன்பு பேருந்தை எடுத்­துக் கொண்டு மக்­களை சந்­திக்க கிளம்­பி­னார்.  பாதி பிரச்­சா­ரத்தை முடித்­து­விட்­டார். எடப்­பாடி அவர்­க­ளுக்கு எம்.ஜி.ஆரின் முகமே மறந்து விட்­டது.  ஜெய­ல­லி­தா­வைத் தான் மறந்­தார்­கள் என்­றால், இன்­றைக்கு எம்.ஜி.ஆரை­யும் மறந்­து­விட்­டார்­கள்.  சமீ­பத்­தில், நீல­கி­ரி­யில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணி­விக்­கும் நிகழ்ச்சி.  மாலையை அணி­வித்து விட்டு அவர் பேசும்­போது அண்­ணா­வின் சிலைக்கு மாலை அணி­வித்து உள்­ளேன் என்று பேசு­கி­றார்.  எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு இப்­போது யாரைப் பார்த்­தா­லும் அவர்­க­ளின் முகம் அமித்­ஷா­வின் முக­மா­கத்­தான் தெரி­கி­றது.  அந்த அள­வுக்கு முத­லா­ளி­க­ளி­டம் விசு­வா­சத்­தைக் காட்­டிக்­கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம் தலை­வர் அவர்­கள் நமக்கு ஒரு இலக்கு கொடுத்­துள்­ளார்.  வெல்­வோம் இரு­நூறு – படைப்­போம் வர­லாறு என்று குறைந்­தது 200 தொகு­தி­க­ளில் திரா­விட முன்­னேற்­றக் கழக அணி வெற்றி பெறும் என்று சொல்லி இருக்­கி­றார்.  அந்த 200 என்ற கணக்­கில் முதல் தொகு­தி­யாக இந்த வேட­சந்­தூர் நிச்­ச­ய­மாக இருக்­கும்.  அந்த வெற்றி, இந்த திண்­டுக்­கல் மாவட்­டத்­தில் இருந்து தொடங்க வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அழ­கான தமிழ் பெயர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மண­மக்­கள் இரு­வ­ரும் நன்கு படித்­த­வர்­கள்.   மண­ம­கன் வெளி­நாடு சென்று படித்து வந்­துள்­ளார்.  மண­ம­கள் மருத்­து­வர்.  அவர்­க­ளி­டம் பேசும்­போது, மண­ம­க­னி­டம் மண­ம­கள் என்ன படித்­தி­ருக்­கி­றார் என்று கேட்­டேன்.  அவர் மருத்­து­வம் படித்­தி­ருக்­கி­றார் என்று சொன்­னார்.  அவரை மேலும் மேற்­ப­டிப்பு படிக்­கச் சொல்­லப் போகி­றேன்.  திரு­ம­ணத்­தால் அவ­ரின் மேற்­ப­டிப்பு நின்­று­வி­டக்­கூ­டாது என்று பெரு­மை­யா­கச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது முழு­வ­தும் சுய­ம­ரி­யா­தைத் திரு­ம­ணம் என்று பெரு­மை­யோடு சொன்­னார் மண­ம­கன்.  மண­மக்­க­ளுக்கு அதி­கம் அறி­வுரை வழங்­கத் தேவை­யில்லை.  திரா­விட கொள்­கை­யின் மீது பற்று உள்­ள­வர்­கள் என்று இந்த மேடைக்கு வந்­த­வு­டன் சொன்­னார்­கள்.  மண­மக்­க­ளுக்கு எனது பாராட்­டு­கள், வாழ்த்­து­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெரி­யார் நமக்கு கற்­றுத் தந்த சுய­ம­ரி­யா­தை­யு­டன் வாழ வேண்­டும். எதற்கு விட்­டுக் கொடுக்க வேண்­டுமோ அதற்கு விட்­டுக்­கொ­டுத்து, எதற்கு விட்­டுக்­கொ­டுக்க கூடாதோ, அதை விட்­டுக்­கொ­டுக்­கா­மல் இரு­வ­ரும் நல்ல நண்­பர்­க­ளாக வாழ வேண்­டும். தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் நமக்கு கற்­றுக் கொடுத்த கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு இந்த மூன்­றை­யும் நீங்­கள் கடை­பி­டிக்க வேண்­டும்.  இந்த இயக்­கம் இந்த மாவட்­டத்­தில் இன்­னும் அதி­க­மாக வளர, உங­க­ளின் பணி­களை அதன்­படி அமைத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த திரு­மண விழா­வில் மண­மக்­களை வாழ்த்­து­வ­தற்கு வாய்ப்­ப­ளித்த அண்­ணன் வீரா. சாமி­நா­தன் அவர்­க­ளுக்­கும், அண்­ணன் ஐ.பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும், அண்­ணன் சக்­க­ர­பாணி அவர்­க­ளுக்­கும், அருமை சகோ­த­ரர் ஐ.பி.செந்­தில்­கு­மார் அவர்­க­ளுக்­கும் மீண்­டும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மண­மக்­க­ளுக்கு ஒரு கோரிக்கை.  உங்­க­ளுக்கு பிறக்­கின்ற குழந்­தைக்கு அழ­கான தமிழ் பெயரை சூட்ட வேண்­டும் என்று கூறிக்­கொண்டு, உங்­கள் அனை­வ­ரின் சார்­பாக மண­மக்­கள் இரு­வ­ரும் வாழ்க, வாழ்க என வாழ்த்தி, வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் துணை முத­ல­மைச்­ச­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் மண­மக்­களை வாழ்த்­திப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அமைச்­சர்­கள் ஐ.பெரி­ய­சாமி, அர.சக்­க­ர­பாணி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஐ.பி.செந்­தில்­கு­மார், முன்­னாள் ஒன்­றிய பெருந்­த­லை­வர் சாமுண்­டீஸ்­வரி கோவிந்­தன், பொதுக்­குழு உறுப்­பி­னர் பூபதி உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்டு மண­மக்­களை வாழ்த்­தி­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>