<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,69,386,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 21:40:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-02" position.sequence="02" ex-ref="10102025-MDU-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#550100" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">25 ஆண்டுகள் கழித்து  இரண்டுதான் நினைவுக்கு வரும்!   </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup569577_02_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஜ­ராத் மாநி­லத்­தின் முதல் அமைச்­சர், இந்­திய நாட்­டின் பிர­த­மர் ஆகிய இரண்டு பத­வி­க­ளுக்­கும் சேர்த்து அர­சின் தலை­மைப் பொறுப்­பில் 
மாண்­பு­மிகு நரேந்­திர மோடி அவர்­கள் இரு­பத்­தைந்து ஆண்­டு­கள் இருந்து விட்­ட­தாக விழா கொண்­டா­டப்­ப­டு­கி­றது. ‘அர­சின் தலை­மைப் பொறுப்­பில் 
25 ஆண்­டு­கள்’ என்று மகிழ்ச்சி அடை­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இத­னை­யொட்டி பிர­த­மர் நரேந்­திர மோடி வெளி­யிட்­டுள்ள அறிக்கை, 
தன்­னைத் தானே மெச்­சிக் கொள்­வ­தாக அமைந்­துள்­ளது. ‘உல­கின் நம்­பர் ஒன் நாடு இந்­தியா’ என்­ப­தைத் தவிர அனைத்­தும் இருக்­கி­றது அந்த அறிக்­கை­யில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இரு­பத்­தைந்து ஆண்­டு­கள் கழித்து மோடி என்­ன­வாக அடை­யா­ளம் காணப்­ப­டு­வார் என்­றால், குஜ­ராத் மாநி­லத்­தில் நடை­பெற்ற வன்­மு­றை­களுக்­கா­க­வும், ஒன்­றிய அர­சின் பெரும்­பா­லான வச­தி­களை அதானி குழு­மத்­துக்கு தாரை வார்த்­த­தற்­கா­க­வும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2002 - குஜ­ராத் கல­வ­ரம்  எத்­த­கைய கோர­மா­னது என்­பதை நாம் சொல்­லத் தேவை­யில்லை, அவ­ரது குரு­நா­தர் அத்­வா­னியே சொல்லி இருக்­கி­றார். மோடி மீது கோபம் ஆன காலத்­தில் அல்ல, மோடி மீது நல்ல இணக்­க­மாக இருந்த காலத்­தில் அத்­வானி அவர்­கள் ஒரு புத்­த­கம் 
எழு­தி­னார்­கள். ‘என் தேசம் என் வாழ்க்கை’ என்­பது அதன் தலைப்பு. 
அந்­தப் புத்­த­கம் தமி­ழி­லும் வெளி­யாகி இருக்­கி­றது.  இதில்  குஜ­ராத்  கல­வ­ரம் குறித்து 831, 842 ஆகிய பக்­கங்­க­ளில் எழுதி இருக்­கி­றார் 
அத்­வானி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“அது­வ­ரை­யில் நாட்­டில்  மதக்­க­ல­வ­ரங்­கள்  வெகு­வா­கக் குறைத்­தி­ருக் கிறது  என்று வாஜ்­பாய் ஆட்­சிக்­குக் கிடைத்­தி­ருந்த பாராட்டை குஜ­ராத்  சம்­ப­வங்­கள் சீர்­கு­லைக்­கின்­றன என்­ப­தால் நான்  மிக­வும்  சோர்­வுற்­றேன்.  குஜ­ராத்­தில் நடந்­தது துர­திர்ஷ்­ட­வ­ச­மான சம்­ப­வம் ஆகும்” என்று சொல்லி விட்டு, அதில் இறந்­த­வர்­கள் எத்­தனை பேர் என்­பதை நாடா­ளு­மன்­றத்­தில் பட்­டி­யல் போட்­டதை அத்­வானி அவர்­கள் சொல்­கி­றார்­கள். “குஜ­ராத் வன்­மு­றை­யில் 790 முஸ்­லிம்­கள் கொல்­லப்­பட்­ட­னர். 254  
இந்­துக்­கள்  கொல்­லப்­பட்­ட­னர். 223 பேர் காண­வில்லை.  சாவு எண்­ணிக்கை பற்­றிய தக­வல் அதி­கா­ர­பூர்­வ­மற்ற  வகை­யில் அதி­க­மாக  இருக்­கக் கூடும்  என்­பதை நான்  ஒப்­புக் கொள்­கி­றேன்” என்­கி­றார். 
அப்­போது அத்­வானி, இந்­திய நாட்­டின் உள்­துறை அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">2002 ஏப்­ரல் 4 ஆம் தேதி  பிர­த­மர்  வாஜ்­பாய்  குஜ­ராத்­திற்­குச் 
சென்­றார். “குஜ­ராத் வன்­முறை உலக நாடு­க­ளின் பார்­வை­யில் இந்­தி­யா­வின் அந்­தஸ்தை மோச­மா­கப் பாதித்­து­விட்­டது. இங்கு இவை எல்­லாம் நடந்த பிறகு, எந்த முகத்­தோடு நான் வெளி­நா­டு­க­ளுக்­குப் போவேன் என்று எனக்­குத் தெரி­ய­வில்லை. இந்த வெறி­பி­டித்த போக்கை நிறுத்­தி­ யாக வேண்­டும்” என்று பிர­த­மர்  வாஜ்­பாய் பேசி­ய­தாக  எழுதி இருக்­கிறார் அத்­வானி.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர் மோடி பதவி விலக வேண்­டும் என்று அப்­போது கோரிக்கை எழுந்­தது. பதவி வில­கத் தேவை­யில்லை என்று உறு­தி­யாக வாதிட்­டுத் 
தடுத்­த­வர் அத்­வானி. ‘மோடி­யா­வது ராஜி­னாமா செய்­தி­ருக்க முன்­வந்­தி­ருக்க வேண்­டும்’ என்று பிர­த­மர் வாஜ்­பாய் தன்­னி­டம் சொன்­ன­தாக ( பக்­கம் 934) அத்­வானி எழு­து­கி­றார். மோடியை அழைத்து, “ராஜி­னாமா செய்­யுங்­கள்” என்று தான் சொன்­ன­தாக அத்­வானி சொல்­கி­றார். கோவா தேசிய நிர்­வா­கக் குழு­வில் இதனை மோடி­யும் ஒப்­புக் கொண்­டி­ருக்­கி­றார். ‘எது எப்­படி இருந்­தா­லும் ஆட்­சிக்­குத் தலைமை ஏற்­றி­ருப்­ப­வன் என்ற முறை­யில் என் மாநி­லத்­தில் நடந்த சம்­ப­வங்­க­ளுக்­குப் பொறுப்­பேற்­றுக் கொள்­கி­றேன். பத­வியை ராஜி­னாமா செய்­யத் தயா­ராக இருக்­கி­றேன்’ என்று மோடி அக்­கூட்­டத்­தில் சொல்லி இருக்­கி­றார். வர­லாற்­றில் இது­தான் பேசப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பிர­த­மர் பத­விக்கு வந்த பிறகு தனிப்­பட ஒரு குழு­மத்­துக்­காக தனது 
பத­வி­யைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றார் என்ற குற்­றச்­சாட்­டுக்கு இது­வரை மோடி பதில் அளிக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">07.02.2023 அன்று  அதா­னி­யும்  மோடி­யும்  இருக்­கும்  புகைப்­ப­டத்­தைக்  காட்டி நாடா­ளு­மன்­றத்­தில் ராகுல் கடு­மை­யாக விமர்­சித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">“2014 ஆம் ஆண்டு 8 பில்­லி­யன் டால­ராக இருந்த அதா­னி­யின் சொத்து மதிப்பு இப்­போது 140 பில்­லி­யன் ஆனது எப்­படி?  2014ஆம் ஆண்டு உல­கப்  பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் 609 ஆவது  இடத்­தில் இருந்­த­வர், 2022ஆம் ஆண்டு இரண்­டா­வது இடத்­தைப்பிடித்­தது எப்­படி? விமான நிலை­யம் என்­றா­லும் அதா­னி­தான். துறை­மு­கம்  என்­றா­லும்  அதா­னி­தான். முன் அனு­ப­வம் 
இல்­லா­த­வர்­கள் விமான நிலைய  மேம்­பாட்­டுத்  திட்­டத்தை மேற்­கொள்ள  இய­லாது  என்ற  விதி­யைத் திருத்­தி­னார்­கள். அதா­னிக்கு 6 விமான நிலை­யங்­கள் தரப்­பட்­டன. இஸ்­ரே­லுக்கு பிர­த­மர் செல்­கி­றார். அவ­ருக்­குப்  பின்­னா­லேயே நடந்து அதானி செல்­கி­றார்.  உடனே இஸ்­ரேல் – இந்­தியா இடை­யி­லான  அனைத்து தொழில்­துறை ஒப்­பந்­தங்­க­ளும்  அதா­னிக்கு வந்து விடு­கி­றது. இதே போன்று ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு  பிர­த­மர் செல்­கி­றார். உடனே  மாய­மந்­தி­ர­மாக  எஸ்.பி.ஐ. வங்கி அதா­னிக்கு 1 பில்­லி­யன் டாலர்  கடன் வழங்­கு­கி­றது. வங்­க­தே­சத்­திற்கு  மோடி முதல் முறை­யா­கச் செல்­கி­றார்.  அங்கு  மின் விநி­யோ­கத்­திற்­கான திட்­டம்  முடி­வா­கி­றது. சில நாட்­க­ளுக்­குப் பின்  வங்­க­தே­சத்­தின் மின்­வா­ரி­யம் 25 ஆண்­டு­க­ளுக்கு  மின் விநி­யோக உரி­மையை அதா­னிக்கு வழங்­கு­கி­றது.  1500 மெகா­வாட் மின்­சார ஒப்­பந்­தம்  அதா­னிக்­குக் கிடைக்­கி­றது.  இது­தான் உங்­கள்  வெளி­யு­ற­வுக் கொள்கை” - என்று நாடா­ளு­மன்­றத்­தில்  ராகுல் காந்தி குற்­றம் சாட்­டி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதற்­குப் பதில் அளிக்­காத மோடி, 2024 தேர்­தல் நடக்க இருக்­கும் போது திடீ­ரென அதானி பற்­றிப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“அம்­பானி,அதா­னி­யி­ட­மி­ருந்து காங்­கி­ரஸ்எவ்­வ­ளவு பணம் பெற்­றது?  எத்­தனை வாக­னங்­க­ளில் பணத்­தைப் பெற்­றது? ஏதோ ஒன்று நடந்­தி­ருப்­ப­தாக நான் உணர்­கி­றேன்” என்று பேசி­னார். ‘உங்­க­ளுக்கு இப்­ப­டித்­தான் வந்ததா?’ என்று திருப்­பிக் கேட்­டார் ராகுல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­திய நாடா­ளு­மன்­றம் ஒவ்­வொரு முறை­யும் கூச்­ச­லும் குழப்­ப­மு­மாக ஆவது அதானி விவ­கா­ரத்­தில்­தான். உல­கின் பல­நாட்­டுப் பத்­தி­ரிக்­கை­கள் கிழிப்­பது இந்­தச் செய்­தியை வைத்­துத்­தான். உல­கின் பல­நா­டு­க­ளுக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார் அதானி. ஜூன் 2022ஆம் ஆண்டு இலங்கை  காற்­றாலைமின்­உற்­பத்தி  உரி­மத்தை  அதா­னிக்கு வழங்க வேண்­டும் என  மோடி அழுத்­தம் கொடுத்­த­தாக மகிந்த ராஜ­பட்சே 
சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">25 ஆண்­டு­கள் கழித்து நினை­வு­கூர இருப்­பவை இவை இரண்­டும்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>