<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,751,491,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 21:40:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-03" position.sequence="03" ex-ref="10102025-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தொழில் வளர்ச்சியில் சமூக நீதி! முதல்வர் உரை!..   முதல் பக்கத் தொடர்ச்சி</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•2020–2025 நிதி­யாண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டில் இருந்து D.P.I.I.T. தளத்­தில்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட, ஸ்டார்ட்-­அப் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை ஆண்­டுக்கு 36 விழுக்­காடு கூட்டு வளர்ச்­சியை பதிவு செய்­தி­ருக்­கி­றது. இது, தேசிய சரா­ச­ரி­யான 11 விழுக்­காட்டை விட மூன்று மடங்கு அதி­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•உயர் தொழில்­நுட்­பத் துறை­யின் ’பவர் ஹவுஸ்’-­ஆக சென்னை வளர்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">2021–2024-ஆம் ஆண்டு காலத்­தில், சென்­னையை மைய­மாக கொண்ட உயர் தொழில்­நுட்ப ஸ்டார்ட்-­அப் நிறு­வ­னங்­க­ளில் செய்­யப்­பட்ட முத­லீ­டு­க­ளின் மதிப்பு - 66 விழுக்­காடு ஆண்டு கூட்டு வளர்ச்­சியை அடைந்­தி­ருக்­கி­றது.  தேசிய அள­வில் இது இரண்­டா­வது இடம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த சாத­னைப் பட்­டி­ய­லின் பின்­ன­ணி­யில் நாம் வடி­வ­மைத்து செயல்­ப­டுத்தி வரு­கின்ற பல திட்­டங்­கள் இருக்­கி­றது. புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின் வளர்ச்சி மெட்ரோ சிட்­டியை தாண்டி, மாநி­லத்­தின் அனைத்­துப் பகு­தி­க­ளை­யும் சென்­ற­டைய வேண்­டும் என்று கோல் செட் செய்து நாம் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம். அதன்­படி, 11 வட்­டார மையங்­களை அமைத்­தி­ருக்­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டின் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும்இருக்­கின்ற இளை­ஞர்­க­ளுக்கு புது­யுக தொழில் முனைவு வளர்ச்­சி­யில் பங்­கெ­டுக்­க­வும், அதன் மூலம் மாநி­லத்­தின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யில் அவர்­க­ளு­டைய பங்­க­ளிப்பை வழங்­க­வும், தேவை­யான செயல்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­ கி­றது. தொடக்க நிலை­யில் உள்ள ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­கள் நிதி உதவி கிடைக்­கா­மல் தங்­க­ளு­டைய முயற்­சியை கைவி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக, TAN-SEED என்ற ஆதார நிதி வழங்­கும் திட்­டத்தை தொடர்ந்து செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதி­லும், பெண் தொழில் முனை­வோர்­க­ளுக்கு50 விழுக்­காடு கூடு­தல் நிதி வழங்­கு­கி­றோம். தமிழ்­நாட்­டில், அதி­க­ரித்து வரு­கின்ற ஸ்டார்ட்-­அப் நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்­கையை       கருத்­தில்­கொண்டு,  இந்த நிதி­யாண்­டில், இந்­தத் திட்­டத்­திற்கு மட்­டுமே 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எந்­தத் துறை­யாக இருந்­தா­லும், எங்­க­ளுக்கு சமூ­க­நீதி முக்­கி­யம் என்று ஏற்­க­னவே சொல்­லி­யி­ருந்­தேன். அப்­ப­டித்­தான், பட்­டி­ய­லி­னத்­த­வர் மற்­றும் பழங்­கு­டி­யின தொழில் முனை­வோர்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­ப­டும் ஸ்டார்ட்-­அப் நிறு­வ­னங்­க­ளுக்கு பங்குமுத­லீடு வழங்­கப்­பட்டு வரு­கி­றது. முத­லீடு வழங்­கு­வ­தோடு, அந்த நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவை­யான தொழில் பயிற்­சி­க­ளும் துறை வல்­லு­நர்­க­ளால் தொடர்ந்து வழங்­கப்­ப­டு­கி­றது. இதற்­காக, 2022-–23-ஆம் ஆண்­டில், 30 கோடி ரூபாய் ஒதுக்­கீடு என்­பதை, 2023-–24-ஆம் ஆண்டு 50 கோடி ரூபா­யாக உயர்த்தி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முத­லீ­டு­கள் தேவைப்­ப­டும் புத்­தொ­ழில்        நிறு­வ­னங்­க­ளை­யும், முத­லீட்­டா­ளர்­க­ளை­யும் இணைக்­கும் நோக்­கத்­தில், TAN-FUND என்ற முத­லீட்­டா­ளர் இணைப்பு தளத்தை சென்ற ஆண்டு தொடங்கி வைத்­தேன். இதன் வழி­யாக, புத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் 129 கோடியே 24 இலட்­சம் ரூபாய் நிதி திரட்­டி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•பெரி­யார் சமூ­க­நீதி தொழில் வளர் மையம்,
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•பெண் தொழில் முனை­வோர்­க­ளுக்­காக‘தொழிலி’ பயிற்­சிப் பட்­ட­றை­கள் நடத்­து­கின்­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•கிரா­மந்­தோ­றும் புத்­தொ­ழில் திட்­டம் என்று ஊர­கப்­ப­கு­தி­க­ளி­லும் புத்­தொ­ழில் முயற்­சி­களை ஊக்­கு­வித்து வரு­கி­றோம். அதே நேரத்­தில், உல­க­ளா­விய தொடர்­பு­க­ளை­யும் தமிழ்­நாட்டுநிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­ப­டுத்தி வழங்கி வரு­கி­றோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">துபாய், அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர் உள்­ளிட்டபல்­வேறு  உலக  நாடு­க­ளில்,  தமிழ்­நாட்டு  
நிறு­வ­னங்­க­ளுக்கு இணைப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரும் வகை­யில், பல்­வேறு முன்­னெ­டுப்­பு­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. பன்­னாட்டு புத்­தாக்க நிகழ்­வு­க­ளில், தமிழ்­நாட்டு நிறு­வ­னங்­கள் பங்­கேற்க உத­வி­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">முக்கியப் பங்கு வகிக்கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">‘ஸ்டார்ட் அப்’ தமிழ்நாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நான் முதல்­வன் திட்­டத்­தின்­கீழ் நடத்­து­கின்ற நிரல் திரு­விழா என்­கிற ஹேக்­கத்­தான்­ஸில் ‘ஸ்டார்ட்-­ அப்’ தமிழ்­நா­டும்  முக்­கி­யப்  பங்கு வகிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">‘நில் – பிராண்ட் - செல்’ என்ற பெய­ரில், 250 நிமிட வீடியோ பாடம் மூல­மாக பிராண்­டு­களை எப்­படி உரு­வாக்­கு­வது என்று பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.  இதற்­கெல்­லாம் முத்­தாய்ப்­பா­க­தான், உல­க­ளா­விய நாடு­க­ளின் பங்­க­ளிப்­பு­டன், புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு என்று ஒரு சிறப்பு மாநாட்டை  நம்­மு­டைய  மாநி­லத்­தி­லேயே  நடத்­த­வேண்­டும் என்று முடிவு செய்து இந்த மாநாடு ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">40-க்கும் மேற்­பட்ட நாடு­க­ளில் இருந்து 250-க்கும் மேற்­பட்ட பங்­கேற்­பா­ளர்­கள் பங்­கேற்று,  இவர்­க­ளில் பலர் இந்த மாநாட்­டில் நடை­பெ­றும் கருத்­த­ரங்­கத்­தில் உரை­யாற்ற இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இங்கே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற கண்­காட்சி அரங்­கத்­தில், 21 நாடு­கள் அரங்கு அமை த்­தி­ருக்­கி­றார்­கள். நாட்­டி­லேயே, புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்­காக, 40 உலக நாடு­க­ளின் பங்­க­ளிப்­போடு  ஒரு  நிகழ்வு  முன்­னெ­டுக்­கப்­    பட்டு  இருப்­பது  இது­தான்  First  Time!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இங்கே, வருகை புரிந்­தி­ருக்­கின்ற தொழில் முனை­வோர்­கள் எல்­லோ­ரும் இந்த வாய்ப்பை நல்ல முறை­யில் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். உல­கின் முன்­னணி தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளான என்-­வீ­டியா, மெட்டா, H.C.L, டெக்­கத்­லான் உள்­ளிட்ட, 15-க்கும் மேற்­பட்ட கார்ப்­ப­ரேட் நிறு­வ­னங்­கள் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள். புத்­தாக்­கம் மற்­றும் புத்­தொ­ழில் சார்ந்த அர­சின் திட்­டங்­களை செயல்­ப­டுத்­தும், தமிழ்­நாடு அரசு மற்­றும் ஒன்­றிய அர­சின் துறை­கள் அனைத்­தும் இங்கே இடம்­பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">எல்லோருக்கும் பயனுள்ள மாநாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கேரளா, ஒடிசா, மேகா­லயா, ஆந்­தி­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட 9 மாநில அர­சு­க­ளின் புத்­தொ­ழில் துறை­க­ளும் பங்­கெ­டுத்­தி­ருக்­கி­றார்­கள். முத­லீட்­டா­ளர் சந்­திப்பு நிகழ்­வு­கள், கூகுள், ஃபோன்-பே, மைக்­ரோ-­சாஃப்ட், மெட்டா போன்ற நிறு­வ­னங்­க­ளின் தனித்­து­வ­மான பயிற்சி வகுப்­பு­கள்,மாணாக்­கர்­க­ளின் புத்­தாக்க கண்­டு­பி­டிப்­பு­களைகாட்­சிப்­ப­டுத்­தும் அரங்­கு­கள் என்று வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற இந்த மாநாடு, எல்­லோ­ருக்­கும் பய­னுள்­ள­தாக நிச்­ச­யம் அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•பன்­னாட்டு புத்­தொ­ழில் அமைப்­பு­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•இந்­தி­யா­வில் செயல்­ப­டு­கின்ற பெரு 
நிறு­வ­னங்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">•ஒன்­றிய அர­சின் புத்­தொ­ழில் அமைப்­பு­ க­ளு­டன் இந்த மாநாட்­டில் பல்­வேறு புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட  இருக்­கி­றது. குறிப்­பாக, ஜெர்­ம­னி­யைச் சேர்ந்த ‘ஆசியா பெர்­லின்’ அமைப்பு, அமெ­ரிக்­கா­வின் சான்டா கிளாரா பல்­க­லைக்­க­ழ­கம், பிரான்ஸ் நாட்­டைச் சேர்ந்த ‘லிங்க்இன்­னோ­வே­ஷன்ஸ்’ அமைப்பு மற்­றும் கனடா, தென் கொரியா, பிலிப்­பைன்ஸ்  ஆகிய  நாடு­க­ளைச் சேர்ந்த புத்­தொ­ழில் அமைப்­பு­க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் பரி­மா­றிக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இதன் மூலம், தமிழ்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்குபுதிய சந்தை வாய்ப்­பு­கள் உரு­வா­கும்.  மேலும்,  பல திறன் மேம்­பாட்­டுப் பயிற்­சி­க­ளும் வழங்­கப்­ப­டும்.   அடுத்த 10 ஆண்­டு­க­ளில், ஸ்டார்ட் அப் நிறு­வ­னங்­க­ளுக்கு உகந்த முன்­னணி மாநி­ல­மாக தமிழ்­நாட்­டைக் கட்­ட­மைக்க என்­னென்ன செய்­ய­வேண்­டும் என்­கின்ற கருத்­துக்­களை உள்­ள­டக்­கிய ‘விஷன் 2035’ தொலை­நோக்கு அறிக்­கை­யோடு முதல்­நிலை செயல்­திட்ட வரைவை இன்று வெளி­யிட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">புத்­தொ­ழில் சார்ந்த தர­வு­களை வெளி­யி­டு­வ­தில், புகழ்­பெற்ற அமைப்­பான ‘ஸ்டார்ட் அப் ஜீனோம்’-­தான் இந்த அறிக்­கையை தயா­ரித்­தி­ருக்­கி­றார்­கள். மாநி­லத்­தின் புத்­தொ­ழில் சூழல் மேம்­பாட்­டிற்­கான வழி­காட்டி செயல்­திட்­டங்­கள் உள்­ள­டங்­கிய இரண்­டாம் தொகுப்பு இன்­னும் சில வாரங்­க­ளில் வெளி­யி­டப்­ப­டும் என்று 
தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இன்று, தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில் சூழல் குறித்த ‘இன்க்-42’ நிறு­வ­னத்­தின் ஆய்வு அறிக்­கை­யை­யும் வெளி­யிட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த 4 ஆண்­டு­க­ளில், தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க  சூழல் அடைந்­தி­ருக்­கின்ற வளர்ச்­சியை ஆதா­ரங்­க­ளு­டன் இந்த அறிக்கை  தெரி­விக்­கி­றது.  இந்த மாநாடு - தொழில்­மு­னைவு ஆர்­வ­லர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஸ்டார்ட்-­அப் நிறு­வ­னங்­கள், மாணவ – மாண­வி­யர் என்று எல்­லோ­ருக்­கு­மா­னது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">நிறை­வாக, நம்­மு­டைய மாநி­லத்­தின் 
புத்­தொ­ழில் சூழலை வலுப்­ப­டுத்­தும் வித­மாக ஒரு திட்­டத்­தினை இந்த மாநாட்­டில் அறி­விக்க விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">100 கோடி ரூபாய் ஒதுக்­கீட்­டில், “இணை உரு­வாக்க நிதி­யம்” தொடங்­கப்­ப­டும். தமிழ்­நாட்டு புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளில், முத­லீடு செய்­யும் துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­க­ளில் அரசு முத­லீடு செய்­யும். இந்த நிதி­யம் தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கத்­தால் நிர்­வ­கிக்­கப்­ப­டும். இதன் மூலம், தமிழ்­நாட்­டில் புதிய துணி­கர முத­லீட்டு நிறு­வ­னங்­கள்உரு­வா­கும். மேலும், உலக அள­வில் முன்­ன­ணி­யில்இருக்­கின்ற முத­லீட்டு நிறு­வ­னங்­களை தமிழ்­நாட்டை நோக்கி ஈர்ப்­ப­தற்­கும் வழி­வ­குக்­கும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த நிகழ்ச்­சிக்­குப் பிறகு, கோவை மக்­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான தமிழ்­நாட்­டி­லேயே அதிக நீள­மான 10.10 கிலோ மீட்­டர் நீள­முள்ள அவி­நாசி சாலை உயர்­மட்ட மேம்­பா­லத்­தைத் திறந்து வைக்க இருக்­கி­றேன். அந்­தப் பாலத்­திற்கு தந்தை பெரி­யா­ரு­டைய உற்­றக் கொள்கை தோழர் இந்­தி­யா­வின் எடி­சன் என்று அழைக்­கப்­பட்ட கோவைக்­குப் பெருமைச் சேர்த்த ஜி.டி.நாயுடு அவர்­கள் பெயரை சூட்­டி­ யி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அது­மட்­டு­மல்ல, கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் நான் கோவைக்கு வந்­த­போது,                    பல்­வேறு தங்க நகை உற்­பத்­தி­யா­ளர் சங்­கங்­களைச் சார்ந்­த­வர்­களை வைத்து ஒரு கோரிக்­கையை என்­னி­டத்­தில் எடுத்­துச் சொன்­னார்­கள். அதை ஏற்று, குறிச்சி தொழிற்­பேட்­டை­யில் மிகப் பெரிய தங்க நகைப் பூங்கா கட்­டப்­ப­டும் என்று அறி­வித்­தேன். அதற்­கான அடிக்­கல்­லை­யும் நான் நாட்­ட­வுள்­ளேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அடுத்த மாதம் கோவை­யில்மிகப் பெரிய பூங்­கா­வாக 175 கோடி ரூபாய் செல­வில், செம்­மொ­ழிப் பூங்கா திறக்க இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அடுத்து, கோவை­யில், மிகப் பெரிய நூல­க­மாக “பெரி­யார் உல­கம்” விரை­வில் திறக்க இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதே­போல, கோவை­யில், மிகப் பெரிய கிரிக்­கெட் ஸ்டேடி­ய­மும் வர இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இப்­படி தொழில் நக­ர­மான கோவை­யின் வளர்ச்­சிக்கு துணை நிற்­கக்­கூ­டிய, நமது திரா­விட மாடல் அர­சின் பய­ணம் - திரா­விட மாடல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">2.0-விலும் தொட­ரும்! தொட­ரும்! என்று சொல்லி, விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>