<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="503,71,956,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:46:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-04" position.sequence="04" ex-ref="10102025-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">கொள்கைக் கீதமிசைத்த கோபாலபுரக் கோகிலம்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup515234_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup516362_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="18">கொ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ட்டு மேள முழக்­க­மும், குழ­லூ­தும் நாதஸ்­வர ஓசை­யும், கோயில் திரு­வி­ளக்­க­மும், திரண்­டெழு திரு­வி­ழாக்­க ­ளும், நாள்­தோ­றும் நடை­தேர் நறு­ம­ணம் பேசும் ஊர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரு­வா­ரூர் ஆன்­மீ­கத்­தின் அற­நெறி பரப்­பிய ஊர்­க­ளில் ஒன்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தியா­க­ரா­ஜர் தின­வெ­டுத்து நிற்­கும் தீர்த்த கரை­யான திரு­வா­ரூர் எனும் ஆன்­மீக ஆல நிழல் பரப்­பிய அற­நெறி பூத்­துக் குலுங்­கும் சிவத்­த­லங்­க­ளில் ஒன்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அப்­ப­ரும், சுந்­த­ர­ரும், ஞான­சம்­பந்­த­ரு­மான மும்­மூர்த்­தி­கள் புழங்­கிய புண்­ணிய தலம் என்­பர்! “ஆழித்­தேர்” ஓடிய அந்­தத் திருக்­கோ­யில் ஆரூர் மண்­ணில் தான்; பெரி­யா­ரும் அண்­ணா­வும், கலை­ஞ­ரும் பகுத்­த­றி­வுப் பாதைக்­குப் பவள மல்­லி­கை­கள் தூவிப் பதி­யம் போட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நெஞ்சை ஈர்க்­கும் தேவா­ரப் பதி­கப் பாடல் பெற்ற தலங்­க­ளில் ஒன்று. பூபா­ளம் பாடி வரும் பொன்னி ஆற்­றுக் கரை ஆல­யங்­க­ளில் 123 ஆவது புகழ்த்­த­லம் எனச் சிறப்­புப் பேறும் உண்டு.  நெற்­க­ளஞ்­சி­யம் என அழைக்­கப்­ப­டும் பசு­மைப் பூத்த பகு­தி­யான காவி­ரித் தென்­கரை தெம்­மாங்கு பாடும் திருத்­த­லம் என்­பா­ரும் உண்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கட­வு­ளைத் தேடித் தேடி அலை­யும் பக்­தி­மார்­க­ளுக்­குப் பிரம்­ம­பு­ரீஸ்­வ­ரர் சுயம்பு மூர்த்­தி­யாக அருள் தரும் ஞான­பூ­மி­யாம் திரு­வா­ரூர் என்­ப­தும் உண்டு!இப்­ப­டி­யான பல்­வேறு அடை­யா­ளங்­களை ஆன்­மீ­க­வா­தி­க­ளால் முத்­திரை பதிப்­ப­தும் ஆரூ­ருக்கு உண்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அங்­கே­தான் நாத்­தி­கப் பகுத்­த­றி­வுச் செடி வேரை நட்டு வைத்­தார் பெரி­யார்! பூந்­தோட்­டத்­தில் புகுந்த பூந்­தென்­ற­லாய் பேர­றி­ஞர் அண்ணா மறு­ம­லர்ச்­சிப் பாதை­யைப் பதி­யம் போட்­டார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அடிக்­கடி அங்கு ஆக­மப் பூகம்­பங்­கள்  பூத்­துக் குலுங்­கும் போதும்; திரு­வி­ழாக் காலங்­க­ளில் பரப்­பு­ரைப் புயல் தாக்­கு­தல் நடத்­திய போதும்; நக­ரா­மல் நாத்­திக நாணல்­கள் நட­ன­மாடி நட்­டு­வாங்­கம் செய்­தி­ருக்­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அங்­கே­தான் திருக்­கு­வளை மண்­ணும் திரு­வா­ரூ­ருக்கு இடம்­பெ­யர்ந்­தது. கலை­ஞர் என்ற காவிய நாய­கன் அவ­தா­ரம் எடுத்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பெரி­யா­ரின் வரு­கை­யால் ஆன்­மீக இருட்டு மண்­ட­பம் இடிந்து விழுந்­தது. எட்­டுத் திசை­யும் பகுத்­த­றி­வொளி பரப்பி வென்­றது! கருத்­துக் கடல் அலை­யாய்ப் பசி எடுக்க, மின்­சா­ரப் பாய்ச்­ச­லாய் மனித மின்­னல்­கள் இறங்கி மேய்ந்­தன! அண்­ணா­வின் அறி­மு­கத்­தால் அறி­வுக் கடல் நீச்­சல் பழக்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நாவுக்­க­ர­ச­ரின் நா முழக்­கங்­கள் கேட்ட ஊரில்­தான்... சுந்­த­ர­ரின் சுந்­த­ரத் தமிழ் சுட­ரொளி பரப்­பிய ஊரில் தான்.... ஞான­சம்­பந்­த­ரின் ஞான உப­தே­சங்­கள் பரப்­புரை செய்த ஊரில் தான்..... திரா­விட இயக்­கத் தலை­வர்­கள் ஆன பெரி­யா­ரும், அண்­ணா­வும் பிர­வே­சம் செய்­த­னர். அவர்­க­ளால் கலை­ஞரோ நாத்­திக அவ­தா­ரம் எடுத்­தார். நாதி­யற்ற தமிழ் இனத்­திற்­கும்,நற்­ற­மி­ழுக்­கும் சிறகு முளைக்க சித்­திர வலம் வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரு­வா­ரூர் தீர்க்­க­த­ரி­சி­யான கலை­ஞ­ரின் குடும்ப உற­வில் பூத்த உற­வு­க­ளில் இரு சகோ­த­ரி­கள். அவர்­க­ளில் ஒரு­வர் சண்­முக சுந்­த­ரத்­தம்­மாள். அவ­ரின் புதல்­வர்­கள் முர­சொலி மாறன், முர­சொலி செல்­வம். மற்­றொரு சகோ­த­ரி­யின் மகன் அமிர்­தம். அவர்­க­ளைத் தோளி­லும், மடி­யி­லும் கிடத்தி, தன் மூச்­சினை ஊட்டி; திரா­விட இயக்­கக் கொள்­கைப் பால் புகட்­டிக் தொண்­டர்­க­ளாக உலவ விட்டு, உற்­சா­கக் கனல் மூட்­டி­ய­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­டம் பயின்­ற­வர் என்­றா­லும் கழக அர­சி­யலை சட்­ட­மாக்­கிக் கொண்­ட­வர். அண்­ணா­வால் “செல்வா....! செல்வா..!” என்று செல்­ல­மாக அழைக்­கப்­பட்ட ஆரூர் செல்­லக்­கிளி செல்­வம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வெள்­ளைச் சட்டை, கருப்­புப் பேண்ட், டை கட்டி கோட்­டும், சூட்­டும் மாட்டி நீதி­மன்­றம் போக வேண்­டிய அவர்; தமிழ்ச் சாதி­யைக் காப்­ப­தற்கு மக்­கள் மன்­றத்­திற்­கா­கக் கலை­ஞ­ரின்  அடிச்­சு­வட்­டில் பய­ணம் செய்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“இனி­ய­வன் என் செல்­வம்” என்ற  கலை­ஞ­ருக்­குத் தன் அண்­ணன் முர­சொலி மாற­னைப் போல், சிறு வயது முதல் முர­சொ­லி­யைத் தோளில் போட்­டுத் தூக்­கிச் சுமந்து உத­வி­யாக இருந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவரை வளர்த்து ஆளாக்­கிய ஆசா­னாக இருந்­த­வர் கலை­ஞர். எனி­னும் அவ­ரி­டத்­தில், நித்­தம் நித்­தம் கண்­டிப்­புக்­குள் கல்­ல­டிப்­பட்ட கனி­ம­ர­மா­கப் பழுத்­த­வர். பத்­தி­ரிக்கை உல­கில் வசிட்­ட­ரான கலை­ஞ­ரி­டத்­தில் அர்­ஜு­னா­கப் பயிற்சி எடுத்­த­வர். மாறன், அமிர்­தம், அழ­கிரி, ஸ்டாலின், தமி­ழ­ரசு என பின்­னிப் பிணைந்து தேக்கு மர­மாக வளர்ந்து கிளை பரப்­பி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின்  மடி தவழ்ந்த அன்பு மக­ளார் செல்­வியை  மண­மு­டித்த  முத்­த­மிழ்த் தலை­வர் மனக்­கு­டி­லில் வசித்து வந்த மரு­ம­கன் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முர­சொலி அலு­வ­ல­கத்­தில் ஒரு லுங்­கி­யைக் கட்­டிக்­கொண்டு, பனி­யனை மாட்­டிக் கொண்டு, அச்­சுக்­க­ளிம்பு (கிரீஷ்) ஏறிய உடைத்­து­ணி­க­ளோடு ஓடும் அச்­சு­யி­டும் எந்­தி­ரத்­தில், எழுத்­துக்­களை அச்சு கோத்­துச் சரி பார்த்­தல், பெட்­டிச் செய்தி எழு­து­தல், செய்­தி­க­ளுக்­குத் தலைப்­பி­டு­தல், மீண்­டும், மீண்­டும் பிழை திருத்­து­தல், சந்­தா­தா­ரர் முக­வரி பட்­டி­யல் தயா­ரிப்­பைச் சரி பார்த்­தல், முழு­தும் முடிந்த செய்தி தாங்கி  வெளி­வந்த முர­சொ­லியை அனுப்பி வைத்­தல் என்­பனபோன்ற பணி­க­ளில் அவர் கடை­நிலை ஊழி­ய­னா­கவே இருந்து செயல்­பட்டு வந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு சின்ன ஆளு உல­கத்­தில் அவர் செய்த பணியோ பெரிது! பிழை­கள் பொறுக்­காத கலை­ஞ­ரி­டம் நெருப்­பில் வெந்த தங்­க­மா­கவே வாழ்ந்து மின்னி மறைந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தேர்­தல் காலங்­கள் முதல் திரைப்­ப­டம் துறை வரை கால் பதித்த சுய­ம­ரி­யா­தைச்  சுடர் அவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கழக வளர்ச்­சிக்­கா­கத் தள­ப­திக்­குத் தோளோடு தோள் நின்ற நாயக்­கர் மஹால் தூணும் அவரே! புய­லி­லும், மழை­யி­லும் தாக்­கு­தல் கண்டு வரும் தள­ப­திக்கு ஆறு­தல் தந்த புன்னை மர நிழல் அல்­லவா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பத்­தி­ரிக்­கைப் பணி­யில் பல்­க­லைக்­க­ழ­க­மாக விளங்­கிய கலை­ஞர் கைப­டும் பாடப்­புத்­த­கங்­க­ளில் ஓர் அத்­தி­யா­ய­மாக இருந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வடி­வ­மைப்பு செய்து இரவு பக­லாக ஊர்க் குருவி போல் பறந்து, பறந்து வேலை செய்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வி.பி. சிங்­கின் ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் முர­சொலி மாறன் பதவி ஏற்ற பின்­னர், முர­சொ­லி­யின் நிரு­வாக ஆசி­ரி­யர் பொறுப்பை ஏற்­றார் செல்­வம். அவ­ரது வைரம் ஏறிய எழுத்­துக்­கள், மற்­ற­வர்­க­ளுக்கு வாசிக்­கும் உந்து  சக்­தி­யா­கவே 
அமைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நெருக்­க­டிக் கால நெருப்­பாற்­றின் கலை­ஞ­ரு­டன் பய­ணப்
­பட்­ட­வர். முர­சொலி மாற­னும் தள­ப­தி­யும் காராக்­கி­ர­கத்­தில் தழும்­பு­கள் ஏற்­ற­போ­தும், தணிக்­கைக்குழுத் தண்­ட­னை­யில் தப்ப முர­சொ­லிக்கு முத்­திரை பதித்­த­வர்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அண்ணா சாலை மேம்­பா­லத்­தில் இருந்து, அண்ணா சிலை வரை அவ­ரும், மு.க.அழ­கிரி, மு.க.தமி­ழ­ரசு, செல்வி எனச் சர்­வா­தி­கா­ரத்தை எதிர்த்து ஜன­நா­ய­கம் காக்­கும் சுதந்­தி­ரப் போரில் நின்­ற­வர்­கள். துண்­டுப் பிர­சு­ரங்­களை ஏந்தி, ஒவ்­வொரு கடை, கடை­யாக, பேருந்­தில் ஊர்­தி­க­ளில் வந்­த­வர்­க­ளி­டம் கருத்­து­ரிமை வேலையை செய்­த­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“சர்­கா­ரியா கமி­ஷன்”, “முர­சொலி - சில நினை­வ­லை­கள்” ஆகிய  நூல்­கள் எழு­தி­யும் மண்­டூ­கங்­க­ளுக்கு மடை விளக்­கம் தந்­த­வர். அவ­ரது சிலந்தி வலை அர­சி­யல் பின்­ன­லில் சிக்­கா­த­வர்­கள் யாரும் இல்லை! தப்­பி­ய­வர்­க­ளும் தர­ணி­யில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நெருக்­க­டிக் கால கட்­டத்­தில் வன்­மு­றை­யா­ளர்­க­ளால் முர­சொலி தீக்­கு­ளித்­தது. தீய சக்­தி­க­ளின் சவால்­களை ஏற்­றுக் கொண்டு ஒரு தாயின் பங்­க­ளிப்­பைச் செய்து காப்­பாற்­றிய செவி­லித்­தாய் அவர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஆட்­சி­யா­ளர்­கள் அத்­து­மீ­ற­லைக் கண்டு அஞ்­சா­மல், சட்­ட­மன்­றக் கூண்­டி­லேறி சண்­ட­மா­ரு­த­மாக முழங்­கி­ய­வர். “கூண்டு கண்­டேன்! குதூ­க­லம் கொண்­டேன்!” என்று கலை­ஞ­ரால் வர்­ணிக்­கப்­பட்­ட­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பாலை­வன ரோஜாக்கள் படத்­தில் பட நாய­கன் சபா­ரத்­தி­னம் உயிரை விடும்­போது, இறு­திக் காட்­சி­யில், தனது பேனாவை இளைய தலை­மு­றைக்­குப் பத்­தி­ரிக்­கைப் பணி­யாற்ற ஒப்­ப­டைப்­பார். அது போல இன்­றைக்கு பல எழுத்­தா­ளர்­க­ளுக்­குத் தனது எழு­து­கோலை ஒப்­ப­டைத்து விட்டு சென்­றி­ருக்­கி­றார் என்று தள­பதி தன் இரங்­கற்­ப­தி­வில் முத்­தி­ரை­யா­கப் பதிவு செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">“மூத்த பிள்ளை முர­சொலி என் வளர்ச்­சிக்கு உறு துணை­யாக இருந்­தது மட்­டு­மல்ல; சிறு வயது முதல் அண்­ண­னாக - என் சகோ­தரி செல்­வி­யின் கண­வர் எனும் மைத்­து­ன­ராக -பத்­தி­ரிக்­கைப் பயிற்சி தந்­த­வ­ராக - கலை­ஞ­ரின்­மா­றாப் பற்­று­டைய மரு­ம­க­னாக  இருந்த கொள்­கைத் துணை இழந்து நான் நிற்­கி­றேன்; தலை­வர் கலை­ஞ­ருக்­குப் பிறகு, நான் சாய்­வ­தற்­குக் கிடைத்த கடை­சித் தோளை இழந்து வாடு­கி­றேன்” என்று நமது நெஞ்­சை­யெல்­லாம் உருக்­கு­கின்ற இரங்­கல் திரு­வா­ச­கத்­தைத் தந்­த­வர் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பழ­கு­வ­தற்கு எளிமை; புத்­த­கங்­கள் படிக்­கும் வேட்கை; தர­வு­கள் சேக­ரிப்பு; நண்­பர்­களை வர­வேற்­கும் உப­ச­ரிப்பு; வீட்­டில் குடும்ப உற­வி­னர்­களை அன்­பொ­ழு­கப் பழ­கு­தல் என இயக்­கத்­துக்கு தூண்!அன்­பும்,பண்­பும் வற்­றாத ஞானக் கங்கை என்று இருந்த அவர்; எரி­காட்­டில் கொள்­கைச் சாம்­ப­லாக மணந்­துக் கொண்­டி­ருக்­கி­றார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">செல்­வம் எழு­திய பனி­ம­லைக் குழம்­பில் எரி­ம­லை­கள் குளித்­தி­ருக்­கின்­றன. அவ­ரின் பேனா மையால் நையாண்­டி­யும், நகைச்­சு­வை­யும் நிரம்பி வழிந்­தன. அவ­ரின் கருத்து மழை­யில் நனைந்த கொள்­கை­வா­தி­கள் ஏடு கண்டு ஆனந்த துண்­டு­க­ளால் துவட்­டி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அன்­றாட அர­சி­ய­லுக்கு அச்­சா­ணி­யாய் விளங்­கி­ய­வர். ஆர்ப்­பாட்­டம் எடுத்து, அநீதி பரப்­பிய அர­சி­யல்­வா­தி­க­ளின் உச்­சந் தலை­யில் தனது எழுத்­தா­ணியை இறக்­கி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் சிலந்தி எனும் பேரில் எழு­திய கட்­டு­ரை­கள் மூலம்­அ­ர­சி­யல் எதி­ரி­கள் எவ­ரும் தப்ப முடி­யாது! கல்­லாக இருந்த பலரை; செல்­வத்­தின் விரல்­கள் பட்டு அவர்­களை சிலை­யாக செதுக்­கி­யது. பலர் வெற்று தாளாக இருந்­தார்­கள்; அவர்­களை வண்ண ஓவி­யம் குழைத்­துச் சித்­தி­ர­மாக தீட்­டி­யது செல்­வத்­தின் பொன் விரல்­கள்! பலர் திசை தெரி­யா­மல் இருந்­த­போது, தடம் பதிக்க அவர் ஊன்று கோலாக இருந்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சிலந்­தி­யின் சீண்­டல் கண்டு சிறு நரி­கள் ஓல­மிட்டு ஓடின. ஆளு­ப­வர்­க­ளுக்கு அறி­வுத் தூண்­ட­லைத் வார்த்­தது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அச்சு ஊட­கங்­க­ளில் தந்த அவ­ரது எழுத்­துக்­க­ளால், நச்சு உண்­ணி­கள் நாண்டு செத்­தன. அவரோ எழுத்து உல­கில் அழியா அருங்­காட்­சி­ய­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தாகம் தீர்க்­காத தண்­ணீர் பந்­தல் அல்ல அவர்; தமி­ழர்­க­ளின் மடி­யில் விழுந்த தங்க புதை­யல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதிர்ந்து பேசாத அர­சி­யல் ஞானம் பெற்­ற­வர். எனி­னும் ஆழ­மான கொள்­கை­யில் நீச்­சல் பழ­கி­ய­வர். அவர் அடக்­க­மு­டை­ய­வர் தான் : ஆனால், ஆட்­சி­யா­ளர்­க­ளின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு அஞ்­சாத அட­லேறு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">மாண­வர்ப் படை எழுச்­சி­யில், மொழி, இனப் போராட்ட அணி வகுப்பு நட்­பு­க­ளில் செல்­வம் கொண்ட அர­சி­யல் அரும்­பு­க­ளாய், நரம்­பு­க­ளாய், பின்னி, பிணைந்து முளைத்­த­வர்­கள் பல­ருண்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">துரை­மு­ரு­கன், இர­கு­மான் கான், வை.கோபால்­சாமி, கள்­ளக்­கு­றிச்சி வேங்­க­ட­பதி, வேலூர் முக­மது சகி, கரூர் நல்­லி­யண்­ணன், புதுக்­கோட்டை உடை­யப்­பன், அறந்­தாங்கி இரா­ம­நா­தன், நாமக்­கல் வீரப்­பன், ஈரோடு கணே­ச­மூர்த்தி, இப்­ப­டி­யான திரா­விட இயக்­கக் கட்­டு­மா­னங்­க­ளில் சட்­டக் கல்­லூரி மூலங்­க­ளாக விளங்­கி­ய­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞ­ரின் மனச்­சாட்­சி­யான மாற­னின் இள­வல், செல்­வி­யின் கண­வர், கலை­ஞ­ரின் அணுக்­கத் தொண்­டர்­க­ளான  செய­லா­ளர்­கள் கோ.சண்­மு­க­நா­தன், இந்­திய ஆட்­சிப் பணி­யா­ளர் இரா­ஜ­மா­ணிக்­கம், போன்­றோ­ரின் நட்பு பரி­மாற்ற வளை­யத்­தில் அடிக்­கடி வலம் வந்­த­வர். பணி­யா­ளர்­க­ளி­டத்­தில் பாசம் காட்­டிச் செய்­திப் பந்தி பரி­மா­றி­ய­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எனக்­குத் தின­மும் மயி­லி­ற­காக மனம் வரு­டும் கோபா­ல­பு­ரத்­தென்­ற­லா­க­வும், இயக்­கத்­தின் இம­ய­ம­லைத் தேனா­க­வும், சாவின் மடி­யில் துயி­லும் முன்­னி­ரவு வரை, செய்­திப் பரி­மாற்­றத் தக­வல் பதி­வுச் சேமிப்­பு­க­ளில், செல்­போ­னில் தொப்­புள் கொடி உற­வாக இருந்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முர­சொ­லி­யில் பணி­பு­ரிந்த அந்­நாள்­க­ளில் தள­ப­திக்­குச் செய்­தித்­தாள்  பணியை கற்­றுக் கொடுத்த வசிட்­டர் அண்­ணன் செல்­வம். “குட்டி அத்­தான்” என்­றும், “மூத்த அண்­ணன்” என்­றும் அன்­பாக ஆரத்­த­ழு­வித் தள­ப­தி­யால் அழைக்­கப்­பட்ட முர­சொலி செல்­வம் அவர்­க­ளின் சிலை திறப்பு விழா­வும், அவர் எழு­திய சில கட்­டுரை தொகுப்பு நூல்­வெ­ளி­யீட்டு விழா­வும் நடை­பெற்று முடிந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முர­சொலி அறக்­கட்­டளை சார்­பில், ஆண்­டு­தோ­றும் “முர­சொலி செல்­வம்” பேரால் விருது ஒன்றை ஏற்­ப­டுத்தி, இந்­தாண்டு மூத்த ஊட­க­வி­ய­லா­ளர் ஏ.எஸ்.பன்­னீர் செல்­வன் அவர்­க­ளுக்­குக் கரூ­ரில் நடை­பெற்ற கழக முப்­பெ­ரும் விழா­வில் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் மறைந்­தார் ஆனால், இன்­றும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்! என்­றும் அவர் நம் நெஞ்­சங்­க­ளில் இருப்­பார் அவர்  பிடித்த பேனா நம் கையில் இருக்­கி­றது! அவர் நம்­மி­டம் ஒப்­ப­டைத்து விட்­டுச் சென்ற படைக்­க­லன்­கள் மூன்று : ஒன்று கொள்கை முர­சான முர­சொலி! இரண்டு எத்­தனை அச்­சு­றுத்­தல்­கள் வந்­தா­லும், ஆர்த்­தெ­ழும் கொள்­கைக்­கான விடா­மு­யற்சி! மூன்று: எவ­ருக்­கும் தலை­தா­ழா­மல் இழக்­காத எழு­து­கோல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வாழ்க அண்­ணன் முர­சொலி செல்­வம்! ஓங்­குக அவ­ரது புகழ்!
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>